24 ஏப்ரல், 2010

யாழ். குடாவில் மீண்டும் தலைதூக்கும் ஆட்கடத்தல், கப்பம் கோருதல்




உளவுத்துறையென வருவோரைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம் - ஈ.பி.டி.பி
உளவுத்துறை என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வருபவர்களை கண்டு பொதுமக்கள் ஏமாந்து விடக் கூடாது. உண்மையில் வருபவர் உளவுத்துறையைச் சேர்ந்தவரா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் அக்கம் பக்கத்தினரின் உதவியை பெற வேண்டும் அல்லது தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குடாநாட்டு மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

யாழ். குடாநாட்டில் கடத்தல், கொலை, கற்பழிப்பு என கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்துள்ளமை தொடர்பாக அமைச்சரிடம் கேட்டபோதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். குடாநாட்டில் தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கும் ஆட்கடத்தல், கப்பம் கோருதல், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களை வளரவிடாமல் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோரிக்கையை ஏற்று மக்கள் நடந்து கொண்டதன் மூலம் அண்மையில் நவாலி பகுதியில் நடந்திருந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடிந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். குடாநாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இனிமேல் இவ்வாறான சமூக விரோத சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படியும் அதனையடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் இணைந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ள அமைச்சர், அடுத்த வீட்டில் இவ்வாறானதொரு சம்பவம் நடக்கும் போது பக்கத்து வீட்டார் தங்களுக்கென்ன என்ற நிலைப்பாட்டில் இருந்து விடாமல் உடனடியாக அவ்வீட்டாருக்கு உதவ முன்வர வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் செயற்பாடுகளின் போது புலனாய்வுத் துறையினருக்கு உதவ பொதுமக்கள் முன்வர வேண்டியது அவசியமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலனாய்வுத் துறையினரின் பெயரைப் பயன்படுத்தி சில தீய சக்திகளும் மக்கள் முன்வரும் நிலை தோன்றியுள்ளதாகத் தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.

அதேநேரம் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது தனது தொலைபேசி இலக்கங்களான 0212229824, 0112503467, 0777781891 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு உடன் அறிவித்தால் உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சாவகச்சேரியில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

சிறுவன் கப்பம் கோருவதற்காக கடத்தப்படவில்லை. கடத்தப்பட்டு சில மணி நேரத்துள்ளேயே கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளான். இது அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ள விடயம். சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மேலதிக விபரங்களை வெளியிட முடியாதுள்ளது என்றும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சு.க.வின் வரலாற்றில் முதற் தடவை அதிகூடிய வாக்குப் பலம்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற்தடவையாக அதி கூடிய வாக்குப் பலத்தையும் பாராளுமன்ற ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளரான அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். இந்தத் தேர்தலிலேயே 144 ஆசனங்களைப் பெற்றதுடன் 61% மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

1970 ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் (சமகி பெரமுன) 2/3 பெரும் பான்மையை பெற்ற போதிலும் 48.8% வாக்குகளே கிடைத்தன. 1977ல் 5/6 பெரும்பான்மை பெற்ற போதும் 50.9 வாக்குப் பலமே கிடைத்தது.

கடந்த ஏப்ரல் 8, 20 திகதிகளில் நடந்த தேர்தல் முடிவுகளின் படி 61% மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஆப்கன் தேர்தலில் 40% வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கிறது. எமக்கு 50% வாக்குகள் கூடக் கிடைக்காது என்று ஐ.தே.க. கூறியது பொய்யாக்கப்பட்டுள் ளது” என்றும் அமைச்சர் டலஸ் மேலும் கூறினார்.

இதேவேளை, சுதந்திரக் கட்சி 1951 ல் ஆரம்பிக்கப்பட்டு 1952 ல் நடந்த தேர்தல் 9 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. இந்தத் தேர்தலில் தனித்து 124 ஆசனங்கள் கிடைத்திருப்பதாக கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதியின் தலைமையில் அது நிறைவேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

மூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டில் ஸ்திரமான பாராளுமன்றம்

தமிழ் கூட்டமைப்பின் அணுகுமுறைக்கு சு.க சிரேஷ்ட தலைவர்கள் பாராட்டு
மூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஸ்திரமான ஒரு பாராளுமன்றம் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவித்தனர்.

1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்திரமான அரசாங்கத்தை நடத்தக் கூடிய அரசியல் சூழல் இருக்கவில்லை என்று கூறிய அவர்கள், இப்போது நாட்டின் எதிர்காலத்திற்கென சிறந்ததோர் பாராளுமன்றம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

யுத்தத்திற்குப் பின்னரான இந்த மாற்றத்திற்கு மத்தியில், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றைக் காண விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமை நல்லதோர் அணுகுமுறையாகுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சம்பந்தன் ஆற்றிய உரை அவர்களின் அரசியல் செல்வழியில் புதிய அணுகுமுறையைப் புலப்படுத்துவதாக அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார் த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். சந்திப் புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐ.ம.சு. முன்னணியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார்.

பூட்டானில் நடைபெறவுள்ள 16ஆவது ‘சார்க்’ உச்சிநாட்டில் கலந்துகொண்டுவிட்டு ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் கூறினார். சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச்சந்திப்புக்குப் பின்னர் இலங்கையில் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்தும் சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக இருக்குமென சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ் மாவட்ட தமிழர் ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராகத் தெரிவாகியிருப்பது ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாகுமென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

“1931ஆம் ஆண்டின் முதலாவது சட்ட சபையில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த வைத்தியலிங்கம் துரைசாமி சபாநாயகராக இருந்தார். அதன் பின்னர் 1965 முதல் 1970 ஆண்டு வரை உடுப்பிட்டி தொகுதியைச் சேர்ந்த மு. சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவிருந்தார். அதற்குப் பின் தற்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரகுமார் முருகேசு குழுக்களின் பிரதித் தலைவர் பதிவிக்குத் தெரிவாகியுள்ளார். இது ஒரு நாள் அரசியல் மாற்றம்” என்றும் அமைச்சர் விபரித்தார்.

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தனிப் பெரும்பான்மையுடன் ஓர் அரசியல் கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளமை சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்குமென்றும் முன்னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோரே இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க தலைமை மீது சிறுபான்மையினர் அதிருப்தி மனோ, திகா வெளியேற்றம்: காதர் இராஜஙீனாமா






ஐக்கிய தேசிய முன்னணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகள் சில முன்னணியின் தலைமையுடன் அதிருப்தியடைந்து அதிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன.

தேசியப் பட்டியல் பிரச்சினை காரணமாக ஜனநாயக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய முன்னணியும் தனித்துவமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான மனோ கணேசன் தலைமையிலான, ஜனநாயக மக்கள் முன்னணி பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் தனித்துவமாகச் செயற்படுவதெனத் தீர்மானித்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். இராஜேந்திரன் “வார மஞ்சரி”க்குத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பட்டியலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களுள் வெற்றி பெற்ற பிரபா கணேசன் பாராளுமன்றத்தில் தனித்து இயங்குவார். அதேபோன்று மேல் மாகாண சபையில் உள்ள இரண்டு உறுப்பினர்களும், மத்திய மாகாண சபையில் உள்ள ஓர் உறுப்பினரும் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாக இராஜேந்திரன் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பட்டியலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ள மனோ கணேசனைப் பாராளுமன்றத்திற்கு உள்வாங்க தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படவில்லை. ஐ. தே. க. தலைமைப் பீடம் வாக்குறுதியளித்திருந்தது இறுதி நேரத்தில் ஏமாற்றிவிட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனால், ஐ. தே. மு. உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே தனித்துவமாக இயங்க ஜனநாயக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

மேல் மாகாண சபையில் உறுப்பினராக விருந்த பிரபா கணேசன் பாராளுமன்றம் செல்வதால், அவரின் இடத்திற்கு ஐ. தே. க. உறுப்பினரே தெரிவாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியுடனான பிரச்சினை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனோ கணேசனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டதாக மனோ கணேசன் “வாரமஞ்சரி”க்குத் தெரிவித்தார். அவர் எம். பி. பதவியை இழந்திருந்தாலும் அவருக்கான பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தொழிலாளர் தேசிய முன்னணியும் தேசியப் பட்டியல் பிரச்சினை காரணமாகத் தனித்து இயங்க தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்சியின் தலைவர் பீ. திகாம்பரம் நுவரெலியா மாவட்டத்தில் ஐ. தே. மு. வில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்தக் கட்சிக்கு தேசியப் பட்டியலில் ஓர் ஆசனத்தை வழங்குவதாக உறுதியளித்துவிட்டு இறுதியில் ஏமாற்றிவிட்டதாக ஐ. தே. மு. மீது திகாம்பரம் குற்றஞ் சாட்டியுள்ளார்.

அதேநேரம், ஐ. தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களை ஏமாற்றிவிட்டாரெனவும் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது இவ்விதமிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் அதிருப்தியடைந்துள்ள அக்கட்சியின் நீண்டகால உறுப்பினரான ஏ. ஆர். எம். அப்துல் காதர் முக்கிய பதவிகளை இராஜனாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர் அரசாங்கத்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பமாகக் கொண்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வு... தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனும் பேச டக்ளஸ் முடிவு





அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனு பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று இஸிபத்தான மாவத்தையிலுள்ள சமூக சேவைகள் அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு நடைமுறைச் சாத்தியமான இறுதித்தீர்வை நோக்கிச் செல்லும் ஆரம்பமாகவே இது அமையும்.

தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள். எனினும் உத்தியோகபூர்வமாக சகல கட்சிகளுடனும் பேசி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள் இருக்கலாம். எனினும் ஆரம்பம் ஒன்றாக இருக்க வேண்டும்.

தமிழர் மத்தியில் ஒருமித்த ஒற்றுமை இல்லை. தென்னிலங்கை தட்டிக்கழித்து விடக்கூடாது. அதற்கு ஏற்றாற்போல் நாம் செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டு விட்டோம். இனியும் அவ்வாறு நடைபெறாமல் சந்தர்ப்பங்களை பயன்படுத்த முயற்சிப்போம். நாம் இழந்தவைகள் இனியும் போதும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல்




ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும்.

இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப் பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?

இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.

கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்புவிருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.

விஷயம் ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், இதுகுறித்து பதில் சொல்லக்கூட விரும்பவில்லை என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டாராம்.

கமல்ஹாஸனோ அழைப்பிதழைக் கண்டு கொள்ளவே இல்லையாம். இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள் என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.

விஜய் உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை புறக்கணித்து விட்டனர்.

ஆனால் இலங்கையும் தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.

இன்னொரு முக்கியமான விஷயம்

இந்த விழாவின் தலைவரான அமிதாப் பச்சனின் மகனும் மருமகளும் ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ராவணன் படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில் திரையிடப் போகிறார்க்களாம்.

இதற்காக மணிரத்னத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால், இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன் தவிக்கிறாராம் மணி ரத்னம்.

ராவணன் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளதே என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.

சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!
மேலும் இங்கே தொடர்க...

பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டவருக்கு மூன்றாண்டு சிறை : மல்லாகம் நீதிமன்று



வீதியால் சென்ற பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட இளைஞருக்கு மூன்று மாதகால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏழாலைப் பகுதியில் வீதியால் தனிமையில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மறித்து, தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகக் கூறி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மூன்று மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அந்நபர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

எழுத்துமூல அழைப்பு கிடைத்தால் அரசுடன் பேசத் தயார் : மாவை சேனாதிராஜா



அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூலமான அழைப்பு கிடைக்குமானால் தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கான தீர்வினை எதிர்பார்ப்பதாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற முதல் அமர்வில் கூறிய கருத்தினை அரசாங்கம் வரவேற்றிருந்தது.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கிடைத்த நல்லதொரு சமிக்ஞை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்திருந்ததுடன் சார்க் மாநாட்டின் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"இது ஏற்கனவே பேசப்பட்ட விடயம். எனினும் இதுவரை எமக்கு அழைப்பு கிடைக்கவில்லை. அவ்வாறு எழுத்துமூலமான அழைப்பு கிடைக்கும் பட்சத்தில் எமது அரசியல் குழு அது தொடர்பில் ஆராய்ந்து பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யும்" என அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

மலேசியாவில் கைதான இலங்கையர்களுள் புலி இயக்கத்தினரும் உள்ளடங்குவதாக மலேசிய அரசு தகவல்-





மலேசியாவில் கடந்த சில நாட்களுக்குள் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் அடங்குவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் இடம்பெற்றுவரும் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பாதுகாப்புச் செயலருக்கும் மலேசிய உள்விவகார அமைச்சர் இஸாமுடின் உஸைனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போதே மலேசிய உள்விவகார அமைச்சர் இஸாமுடின் உஸைன் குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்முதல் இவ்வருடம் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் 599 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத குற்றச்சாட்டுக்களை தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மலேசிய உள்விவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

எனக்கு எதிராக நடிகை ரஞ்சிதா புகார் கொடுக்கமாட்டார் நித்யானந்தா பேட்டிசாமியார் நித்யானந்தாவுடன் உல்லாசம்: நடிகை ரஞ்சிதா மீது எடுத்த நடவடிக்கை என்ன?



கற்பழிப்பு, மிரட்டல், மோசடி என பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா சாமியாரை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடுவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

நான் தலைமறைவாக இருந்ததாக சொல்வது தவறு நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்கும் தெரியும். ஒளிந்திருக்கவில்லை. என் மீது என்ன வழக்குகள் போட்டுள்ளனர் என்று எனக்கு தெரியாது. தைரியமாகவும் நம்பிக்கையோடும் இருக்கிறேன்.

நடிகை ரஞ்சிதாவோ ஆசிரமத்தில் இருக்கும் மற்றவர்களோ என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப்பந்தம் செய்தாலும் அவர் எனக்கு எதிராக எதுவும் சொல்லவே மாட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ரஞ்சிதாவுக்கே இது தெரியும். நான் தப்பு செய்திருந்தால் தானே அவர் எனக்கு எதிராக பேசுவார். என்னைப்பற்றிய எல்லா விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு தெரியும். நான் நல்லவன் என்பதற்கு அவர் சாட்சியாக இருக்கிறார். பிறர் வற்புறுத்தலுக்காக எனக்கு எதிராக திரும்பமாட்டார்.
இவ்வாறு நித்யானந்தா கூறினார்.


சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஆர்.சி. மனோகரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் பல்வேறு தனியார் டி.வி.க்களிலும், பத்திரிகைகளிலும் சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாயின. இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆன்மீகத்தில் ஈடுபடும் ஒருவர் தனி நபர் ஒழுக்கத்தை மீறி நடந்து கொண்டது கண்டிக்கத்தக்க தாகும்.

அதே நேரம் நித்யானந்தா சாமியாருக்கு நடிகை ரஞ்சிதா செக்ஸ் உணர்வைத் தூண்டுவது போல் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்க தாகும். எனவே நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்தது போல் ரஞ்சிதா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். இதன் பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஞ்சிதா மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தீர்களா? இல்லை எனில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? என்று நீதிபதி அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா கூறும்போது, ஏற்கனவே நித்யானந்தா மீது பல புகார்கள் வந்துள்ளன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே ரஞ்சிதா மீது தனி வழக்குப்பதிவு செய்ய தேவை இல்லை. ஏற்கனவே நித்யானந்தா மீதுள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதையடுத்து இவ்வழக்கு குறித்து போலீஸ் தரப்பிலும் மனுதாரர் தரப்பிலும் வரும் திங்கட்கிழமைக்குள் உரிய பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

செக்ஸ் ஆராய்ச்சிக்காக அமெரிக்க பெண்ணை மயக்கிய நித்யானந்தா; கணவரை பிரிந்து ஆசிரமத்தில் அடைக்கலம்





பெங்களூரில் ஆசிரமம் நடத்திய சாமியார் நித்யானந்தா நடிகைகளுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், மோசடி, மிரட்டல் புகாரிலும் கைது செய்யப்பட்டார். இமாசலபிரதேசத்தில் இருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடக்கிறது. முன்னதாக நித்யானந்தாவின் ஆசிரமத்தை சோதனையிட்ட போலீசார் ஏராளமான தஸ்தாவேஜுகளை பறிமுதல் செய்தனர். அதில் நித்யானந்தா தனது ஆசிரமத்துக்கு வந்து தீவிர பக்தர்களாக மாறுபவர்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு இருந்தது தெரியவந்தது.

10 பக்கங்கள் கொண்ட அந்த ஒப்பந்தத்தில் கடைசி இரண்டு பக்கங்களில் செக்ஸ் ஆராய்ச்சிக்கு தேவைப்படும்போது உறவு வைத்துக் கொள்ள நேரிடலாம். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. மேலும் அந்த ஒப்பந்தம் குறித்து எந்த சூழ்நிலையிலும் வெளியில் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது.

நித்யானந்தா மீது முன்பு புகார் கூறப்பட்டபோதும் கூட அவர் நான் தவறு செய்யவில்லை. செக்ஸ் ஆராய்ச்சிக்காக உறவில் ஈடுபட்டேன் என்று கூறியிருந்தார். அதன்படி அவர் இந்த ஒப்பந்தம் போட்டு செக்ஸ்சில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆண்-பெண் பரவச நிலை மற்றும் நிர்வாண நிலை, ஆன்மீகம், மகிழ்ச்சி, சுதந்திரத்தை அதிகரிக்கும் வகையில் செக்ஸ் உறவில் ஈடுபடுவது, பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட தந்திர கலை கற்பது என்று செக்ஸ் பற்றி பல்வேறு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறார்.

செக்ஸ் ஆராய்ச்சிக்காக நித்யானந்தா 5 பெண்களுடன் உறவு கொண்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ “கிளிப்பிங்ஸ்” ஆதாரங்கள் பெங்களூர் போலீசாரிடம் சிக்கியுள்ளன.

சாமியாரின் லீலையில் அமெரிக்க பெண் ஒருவரும் சிக்கியுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப்பெண்ணான அவர் சாமியாரின் செக்ஸ் ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். அவரது பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

அவர் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்குள்ள நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் டெல்லியைச் சேர்ந்தவர் இவரும் என்ஜினீயராக அமெரிக்காவில் வேலை பார்த்தார்.

3 வருடத்துக்கு முன்பு நித்யானந்தா அமெரிக்கா சென்றபோது முதல் முறையாக அந்த பெண் வந்து சந்தித்து பக்தை ஆனார். அடிக்கடி அமெரிக்காவில் உள்ள ஆசிரமம் சென்றார். பின்னர் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் ஆசிரமத்தில் தங்கினார். இதற்காக தனது சொத்து, சுகம், உறவினர்கள் என அனைத்தையும் இழந்தார்.

நித்யானந்தா ஆசிரமத்தில் சாமியாருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரானார். இதனால் அவரை கணவர் விவாகரத்து செய்தார். வேலையையும் இழந்து நித்யானந்தாவுடன் தங்கி இருந்தார். நித்யானந்தா அந்த பெண்ணை சமீபகாலம் வரை தனது செக்ஸ் ஆராய்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டார்.

மேற்கண்ட விவரங்களை பெங்களூர் சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

நித்யானந்தாவின் செக்ஸ் ஆராய்ச்சி ஒப்பந்தம் பற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அமெரிக்காவை சேர்ந்த பக்தர் டக்லஸ் மெக்கெல்லர் என்பவர் கலிபோர்னியா கோர்ட்டில் நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நித்யானந்தா இயற்கைக்கு மாறாக உறவு கொண்டது பற்றியும், பல்வேறு மோசடிகள் பற்றியும் புகார் கூறியிருந்தார்.

டக்லஸ் தனது பெயரை நித்யா பிரபா என பெயரை மாற்றிக் கொண்டு அமெரிக்க ஆசிரமத்தில் பணியாற்றினார். அப்போது நித்தயானந்தா தனி அறையில் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்ததாகவும் புகாரில் கூறியிருந்தார். இதுபற்றியும் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்
இதற்கிடையே நித்யானந்தாவிடம் போலீசார் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.

நித்யானந்தாவிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டரில் சில தகவல்கள் “லாக்” செய்யப்பட்டுள்ளதால் அவற்றை போலீசார் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த லேப்டாப் மற்றும் சிடி ஆவணங்கள், டிஸ்குகள் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு நிபுணர்கள் மூலம் அவை திறந்து பார்க்கப்படுகின்றன.

நித்யானந்தா வைக்கப்பட்டுள்ள சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சைபர்கிரைம் பிரிவும் உள்ளது. பாதுகாப்பு கருதி வருகிற 26-ந்தேதி வரை பொதுமக்கள் யாரும் சைபர்கிரைம் பிரிவில் புகார் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வரும் பொது மக்கள் புகார் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

'மஹிந்த சிந்தனை' கீழ் இவ்வருடம் 20,000 குடும்பங்களுக்கு வீடு



மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்துக்கு அமைவாக 2010 ஆம் ஆண்டில் மேலும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

கடந்த நான்கு வருட காலத்தில் 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் இதற்காக 4,127 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வீட்டுக்கு அதிகபட்ச நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் இதற்குப் புறம்பாக 2010 ஆம் ஆண்டு 'நகரத்தைக் கட்டி எழுப்புவோம்' திட்டத்தின் கீழ் 1500 அடுக்குமாடி வீடுகளை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு ரயில் பாதை அமைப்புப் பணிகளில் இந்தியப் பொறியியலாளர்கள்



வவுனியா மற்றும் மதவாச்சி பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள இந்திய பொறியியலாளர்கள் குழு ஒன்று வடபகுதிக்கான ரயில் பாதையை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதையின் நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை அமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரை எஞ்சியுள்ள மூன்று மைல் தூரம் கொண்ட ரயில் பாதையை அமைக்க சுமார் மூன்று மாத காலம் எடுக்கும் என ரயில்வே திணக்களம் எதிர்பார்க்கின்றது.

வவுனியாவுக்கு வருகை தந்துள்ள இந்தியப் பொறியியலாளர்கள், தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையை அமைக்கும் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்






பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ''நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,'' என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

புதிய வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் மற்றுமொரு கணக்கு வாக்கெடுப்பு : நிமால் சிறிபால



இந்த வருடத்துக்கான புதிய வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் ஜூலை மாதமளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் அதுவரை மற்றுமொரு கணக்கு வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உள்ளன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றம் மிகவும் வேலைப் பளு மிக்கதாக காணப்படும். இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஜூலை மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அதுவரையான காலத்துக்கு மற்றுமொரு கணக்கு வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்பின்னர் இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும் இவ்வருட இறுதியில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐதேகவிலிருந்து வெளியோரில் எழுவருக்கே அமைச்சுப் பதவி : ஐவர் பிரதி அமைச்சர்கள்



ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களில் ஏழு பேருக்கு மட்டுமே இம்முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, 39 பிரதியமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐவருக்கே பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் புதிதாக போட்டியிட்டவர்களுக்கு அமைச்சு பதவிகளோ, பிரதியமைச்சு பதவிகளோ வழங்கப்படவில்லை.

அமைச்சர்களாக பி.தயாரத்ன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்த சமரசிங்க, ராஜித சேனாரத்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய ஏழு பேருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதியமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இந்திக்க பண்டாரநாயக்க, சரத் குணரத்ன மற்றும் நந்தமித்திர ஏக்கநாயக்க ஆகியோரே பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த 40க்கு மேற்பட்டோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டதுடன் அதில் பலர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் இங்கே தொடர்க...

நம்பிக்கையூட்டும் ஆரம்பம்




பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபா நாயகரும் பிரதிச் சபாநாயகரும் குழுக்க ளின் பிரதித் தலைவரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது புதிய கலாசாரத்தின் ஆரம்பமாக அமைவதோடு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றது. சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரி வித்து ஆற்றிய உரைகளில் கட்சித் தலைவர்களும் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.

சென்ற தடவை சபாநாயகர் தெரிவின்போது இடம்பெற்ற அமளிதுமளிகள் இன்று வரை அரசியல் நோக்கர்க ளின் மனங்களைவிட்டு அகலவில்லை. இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இப்போது தான் அமைதி யான முறையில் கருத்தொருமைப்பாட்டுடன் சபாநாய கர் தெரிவு நடைபெற்றிருக்கின்றது. நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இக் கருத் தொருமைப்பாடு நிலவ வேண்டும் என்பதே மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இந்தப் பாராளுமன்றம் இனப் பிரச்சினைக்கு நீதியான தும் நியாயமானதுமான தீர்வைக் காணுமென்ற நம்பிக் கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கின் றார். பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரி வித்து உரையாற்றுகையிலேயே இந்த நம்பிக்கையை அவர் தெரிவித்தார். இந்த நம்பிக்கை நிறைவேறும் வகை யில் அவரது கட்சியும் செயற்படுமென நம்புகின்றோம்.

நீண்ட காலமாகத் தீர்வின்றியிருக்கும் பிரச்சினையாக இனப் பிரச்சினை உள்ளது. அதேபோல ஏராளமான உயிரிழப்புகளுக்கும் சொத்தழிவுக்கும் காரணமாகவும் இப் பிரச்சினை உள்ளது. இனப் பிரச்சினையின் தீர்வு எவ்வளவு காலத்துக்குப் பின்தள்ளப்படுகின்றதோ அவ்வளவுக்குப் பிரதான இனங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கும்.

இனப் பிரச்சினை இதுவரை தீராதிருப்பதற்குத் தனியாக எவரையும் பொறுப்பாளியாக்க முடியாது. எல்லோரும் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டிய விடயம் இது. இனப் பிரச்சினையின் வளர்ச்சிக்குச் சிங்களத் தலைவ ர்களின் தவறுகளும் காரணமாக இருந்திருக்கின்றன. தமிழ்த் தலைவர்களின் தவறுகளும் காரணமாக இருந் திருக்கின்றன. இரு தரப்பினரும் தங்கள் தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இப்போது வந் திருக்கின்றது.

மக்கள் மத்தியில் பரஸ்பர சந்தேகம் வளர்ந்திருப்பது இனப் பிரச்சினை இழுபறி நிலையில் இருப்பதற்கான காரணங்களுள் முக்கியமானது. அரசியல் தீர்வு என்ற போர்வையில் தமிழ்த் தலைவர்கள் பிரிவினைக்கு அடிகோலுகின்றார்கள் என்ற சந்தேகம் தோன்றும் வகை யில் தமிழ்த் தலைமை நடந்திருக்கின்றது. இச் சந்தேக த்தைச் சில சிங்களத் தலைவர்கள் ஊதி வளர்த்திருக் கின்றார்கள். எனவேதான் இரு தரப்பினரும் தவறு களை உணர்ந்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றோம்.

மக்களிடம் தோன்றிய சந்தேகம் களையப்படாதிருக்கும் வரை இறுதிக் தீர்வு சாத்தியமில்லை. தீர்வை நோக்கிய விசுவாசமான செயற்பாடுகளுக்கூடாகவே இச் சந் தேக த்தைக் களைய முடியும். நாம் பல தடவைகள் கூறியி ருப்பது போல, உடனடியாகச் சாத்தியமான தீர்வை நடை முறைப்படுத்துவதும் மக்களிடம் தோன்றியுள்ள சந்தே கத்தைப் போக்கும் வகையில் செயற்படுவதும் இறுதித் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கக் கூடி யன. இரு தரப்பு அரசியல் வாதிகளும் இவ்விடயத் தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டாக வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய அரசாங்கத்தின் “மினி பட்ஜட்” ஜுலையில்






புதிய அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கானமினி பட்ஜட்எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக மூன்று மாத காலத்திற்குரிய ஒரு கணக்கறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பிப்பாரென்றும் தெரிவித்த அமைச்சர் சில்வா, ஜுலை மாதத்தில் மினி பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்தே 2011 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படு மென்று கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கணக்கு அறிக்கையின் பின்னர், அரசாங்கம் இதுவரை செய்த செலவுகள், வரவுகள் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுமென்று குறிப்பிட்டார்.

புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அடித்தளம் இடப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் நிமல், எதிர்க்கட்சி குரோத அரசியலையிட்டு நாகரிக அரசியலுக்குப் பிரவேசித்தமைக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டுப் பொறுப்பு, புரிந்துணர்வுடன் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை






மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேநேரம் அமைச்சர்கள் அமைச்சரவையிலும், அமைச்சுக்களிலும் கூட்டுப் பொறுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டு மெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

புதிய அமைச்சர்களுக்கு நேற்று சத்தியப்பிரமாணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி சகல அமைச்சுக்களும் முக்கியமானவையே என்பதை வலியுறுத்தியதுடன் அர்ப்பணிப்புடன் உழைத்து மக்களின் கெளரவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய அமைச்சரவை நேற்றுப் பதவியேற்றுக்கொண்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு

அங்கீகாரமளித்துள்ள மக்கள் அரசின் மீது முழுமையான நம்பிக்கையையும் வைத்துள்ளனர். அந்த வகையில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடனேயே வாக்க ளித்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பினை அமைச்சர்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாட்டு மக்கள் எதிர்க் கட்சிக்குப் பெருமளவு வாக்குகளை வழங்கி வந்துள்ளனர். இத்தகைய பெரும்பான்மை வாக்குகளை அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

ஒன்றிணைந்த அரசில் கூட்டுப் பொறுப்பு டன் இளைய பாராளுமன்ற உறுப்பினர் களுக்கு முன்மாதிரியாகச் செயற்படுவதும் முக்கியமாகும்.

பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒருமித்த குரலில் செயற்பட்டு மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டு மெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

அமைச்சரவை நியமனங்களின் போது பெரும் அசெளகரியங்களைச் சந்திருக்க நேர்ந்தது. அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த சில மாதங்களுக்குள் அரசியலமைப்பில் மாற்றம்






நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியும் விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி அரச சேவையை செயல்திறன் மிக்கதாக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்தவும் ஆணையாளர்கள் விளைதிறனுடன் பணியாற்றுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலும் மாற்றம் செய்யப்படுமென அவர் கூறினார். கிராமத்து மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதியினை ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இப்போது முழுப் பிரதேசத்திற்குமாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அந்த நிலையைத் தோற்றுவித்த விருப்பு வாக்கு முறைமை இல்லாமற் செய்யப்படுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நிறைவுற்றதற்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலாவது செய்தியாளர் மாநாட்டை நேற்று (23) கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடத்தியது. இதில் முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, பொருளாளர் டலஸ் அழகப்பெரும உப தலைவர்கள் நிமல் சிறிபால டி சில்வா டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டு புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கினர்.

“நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்ற வகையில் யாப்பு மறுசீரமைக்கப்படும். எந்த நிறுவனங்களினதும் தடையின்றி அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப் படுமென்றும், 10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்து வரும் மாதங்களில் நடவடிக்கை எடுக் கப்படுமென்றும் அவர்கள் கூறினர்
மேலும் இங்கே தொடர்க...

சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார் இலங்கை பாராளுமன்ற முதல் கூட்டத்தில் பொன்சேகா கலந்து கொண்டார்



இலங்கை பாராளுமன்ற முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள, முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா, ஜெயிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

ராஜபக்சேக்கு மெஜாரிட்டி

இலங்கை பாராளுமன்ற மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. இதில், அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு 60 எம்.பி.க்களும், முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு 7 எம்.பி.க்களும் உள்ளனர்.

இலங்கை பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ராஜபக்சேயின் தம்பி பாசில், ராஜபக்சேயின் மகன் நமால் உள்பட புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

சபாநாயகர் தேர்வு

புதிய பிரதமராக முன்னாள் துறைமுக மந்திரி டி.எம்.ஜெய ரத்னேயும், ராஜபக்சேயின் சகோதரர் சமால் ராஜபக்சே சபாநாயகராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பிரியங்கரா ஜெயரத்னே துணை சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ராஜ துரோக குற்றம் உள்பட பல்வேறு ராணுவ குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஜெயிலில் இருந்த முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா, ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அவர் பாராளுமன்றத்தில் பதவி ஏற்கவும், பேசவும் இலங்கை அரசு அனுமதி அளித்தது. இதன்படி அவர் நேற்றைய கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டார். அவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

எதிர்ப்பேன்

குர்தா-வேட்டி அணிந்திருந்த பொன்சேகா பேசுகையில், "இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. என்னை விதிகளுக்கு மாறாக கைது செய்து ஜெயிலில் அடைத்து இருக்கிறார்கள். ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பேன்'' என்று குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தன் பேசுகையில், ``இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் தமிழர்களின் அவதிகளை போக்கும் எந்த ஒரு அரசின் நடவடிக்கைக்கும் ஆதரவு கொடுப்போம்'' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...