1 மார்ச், 2011

அநுராதபுர முதலாவது தேர்தல் பிரசார மாநாட்டில் ஜனாதிபதி எல்லைக்கிராமம் என்ற நாமம் அழிப்பு

ஜீவனோபாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவி
இயற்கை அனர்த்த பாதிப்பு பகுதிகளை கட்டியெழுப்ப நடவடிக்கை



வதந்திகளையும் பொய்ப் பிரசாரங்களையும் மேற்கொண்டு எதிர்க்கட்சி தமது வங்குரோத்து நிலையை வெளிப்படுத்தி வருகிறது. எதற்கும் சளைக்காது அரசாங்கம் இம்முறையும் அமோக வெற்றிபெறுவது உறுதியென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

மக்கள் வழங்கிய பூரண ஆதரவினால் கடந்த சகல தேர்தல்களிலும் அரசாங்கம் அமோக வெற்றிபெற்றது. இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அரசாங்கம் அமோக வெற்றிபெறும் என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த வெற்றியை அடித்தளமாகக் கொண்டு நாட்டின் சகல கஷ்டப் பிரதேசங்களையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எல்லைக் கிராமம் என்ற பெயருக்கு முடிவு கட்டியது போல் கஷ்டப் பிரதேசம் என்ற பெயருக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட ரீதியான முதலாவது தேர்தல் பிரசார மாநாடு நேற்று அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த, திஸ்ஸ கரலியத்த, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உட்பட பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அநுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாவட்ட மாநாட்டில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

நாம் சகல தேர்தல்களின் போது பிரசாரப் பணிகளை அநுராதபுரம் புனித பூமியிலிருந்தே ஆரம்பித்துள்ளோம். அமோக வெற்றியையும் பெற்றுள்ளோம். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் நாம் அமோக வெற்றிபெறுவது உறுதி.

கொடிய பயங்கரவாதத்தை ஒழித்து அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ளோம். இத்தகைய சூழலில்தான் இயற்கை அனர்த்தங்கள் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இதனை வைத்து எதிர்க்கட்சியினர் எத்தகைய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் இயற்கை அனர்த்தங் களை எம்மால் நிறுத்த முடியாது என்பது சகலரும் அறிந்ததே.

இயற்கை அனர்த்தங்களினால் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளன. வயல் நிலங்கள் 45,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள், கால்நடைகள் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இவற்றின் மூலம் 50,000 மில்லியன் ரூபா நஷ்ட மேற்பட்டுள்ளது. னினும் பாதிப்புகளை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பலியான உயிர்களை விட ஏனைய அனைத்தும் மக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுக்கப்படும்.

இயற்கை அனர்த்தங்கள் எமக்குப் புதிய வையல்ல. சுனாமி பேரழிவின் பாதிப்புகளை இரண்டு வருடத்தில் மீள கட்டியெழுப்பிய எமக்கு இது பாரிய ஒரு விடயமல்ல. மக்களிடமும் எம்மிடமும் உள்ள ஆத்ம பலத்தின் மூலம் இப்பாதிப்புகளை சுலபமாக சரிசெய்ய முடியும். பாதிப்புற் றோருக்கு உதவுவது மட்டுமன்றி அன்றாட ஜீவனோபாய தொழில்களில் ஈடுபட்டு ள்ளோருக்கும் அரசாங்கம் உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

நாம் யுத்தத்தை விற்றுப் பிழைப்பதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் அறிவர். நாட்டைப் பிளவுபடுத்தி சர்வதேச நாடுகளில் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் இவர்கள். நாம் யுத்தம் செய்ததை ஏளனம் செய்தவர்கள் இவர்கள்.

நாம் எல்லைக் கிராமங்கள் என்ற பெயரை வரலாற்றிலிருந்து அழித்துள்ளோம். அதேபோன்று கஷ்டப் பிரதேசங்கள் என்ற பெயருக்கும் முடிவு கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதற்கு இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடித்தளமாக அமையும். அதற்காகவே இத்தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்கின்றோம்.

கடந்த கால அரசாங்கங்கள் கிராமப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஒரு இலட்சம் ரூபாவையாவது ஒதுக்கியதில்லை. நாம் பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியை செலவிட்டு வீதி, கிராமம் என அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். எனினும் இத்தகைய அபிவிருத்தியைக் கண்டு எரிச்சல் படும் சக்திகளும் உள்ளன.

நாம் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள் என்பதை மக்கள் அறிவர். தேர்தலுக்காக பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்கள் உள்ளனர். எனினும் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றியுள்ளோம்.

எதிர்க்கட்சிக்கு அரசியல் நடத்த உரிமையுண்டு. காரியாலயங்களை அமைக்க உரிமையுண்டு. நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்தே தேர்தல் நடத்துகிறோம்.

அரசாங்கம் வெற்றி பெறும் என்ற பயத்தில் எதிர்க்கட்சியினர் பல பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டார நாயக்கா சிலையையும் அப்பிரதேசத்தையும் விற்கப் போவதாக பிரசாரம் செய்கின்றனர். நாம் நாட்டின் வளங்களைப் பாதுகாப்பவர்கள் விற்பவர் களல்ல. இத்தகைய வீண் புரளிகளுக்கு நாம் சளைக்கமாட்டோம்.

மக்கள் ஆதரவு எமக்கு உள்ளது. கடந்த தேர்தல்களைப் போலவே இம்முறை தேர்தலிலும் வெற்றி பெறுவோம். ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

தாய்நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோமென உறுதி பண்ணுவோம் !

தாய்நாட்டை ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்ற தீவிர மனவுறுதியுடன் சகலரும் செயலாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணி க்கப்பட்டிருக்கும் நீச்சல் தடாகத் தையும் உயர் பாதுகாப்பு செயன் முறையைப் பயிற்றுவிக்கும் பயிற்சி நிலையத்தையும் நேற்று திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சுனாமி அனர்த்தத்தைக் காரண மாகக் கொண்டு மாணவ மாணவிகளுக்கும் பிரதேச வாசிகளுக்கும் நீச்சலையும் உயிர்ப் பாதுகாப்பு செயல்முறைகளையும் கற்பிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நீச்சல் தடாக தொகுதியின் முதற்கட்ட பணிக்காக 28 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அதில் 14 மில்லியன் ரூபா பணம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கண்காணிப்பின் கீழும் நெறிப்படுத்தலின் கீழும் தாய்வான் செஞ்சிலுவை சங்கம் வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை, தேசத்தை நேசிக்கின்றவர்களை நாடே பாதுகாக்கின்றது. எமது சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்கின்ற தேசத்தின் பிள்ளைகளாக எமது எதிர்கால சந்ததியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நாடும் தேசமும் இன்றி வீரர்கள் தோன்றுவதில்லை.

ஒருபோதும் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்ற தீவிர மனவுறுதியுடன் அனைவரும் செயலாற்ற வேண்டும். தேசிய கொடிக்கு தேசிய கீதத்திற்கு தலை வணங்கும் எதிர்கால சந்ததியொன்றை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டை நேசிக்கின்ற எவரும் ஒருநாளும் துயரப்பட மாட்டார்கள்.

அதேநேரம் விளையாட்டு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அம்சம். விளையாட்டில் ஈடுபடுவது பொழுது போக்கு மாத்திரமல்ல. எதிர்கால வாழ்வுக்குத் தேவைப்படுகின்ற வீரம், பொறுமை, தைரியம் என்பவை மாத்திரமல்ல எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுக்கும் ஆற்றலும் கிட்டும்.

வீரம் என்பது இலங்கைத் தேசத்துக்கு புதியவொன்றல்ல. சவால்கள் வெற்றி கொள்ளும்போது அவற்றின் அளவையும் எண்ணிக்கையையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்ட முறையில் அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டும். சரியான முறையில் திட்டமிடுவதன் மூலம் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும் என்றார்.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, காமினி லொக்குகே, விமல் வீரவங்ச ஆகியோரும் துமிந்த சில்வா பா.உ உள்ளிட்ட அதிதிகளும் பாடசாலை அதிபர் கே. டீ. விமலசேன உள்ளிட்ட ஆசிரியர் குழாமும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய மீனவ செயற்குழு அமைக்கத் திட்டம் பொதுவான இணக்கப்பாட்டிற்கு நடவடிக்கை

மீனவர் விவகாரத்திற்குத் தீர்வொன்றை எட்டும்நோக்கில் இரு நாட்டு மீனவர் களையும் உள்ளடக்கிய இணைந்த செயற்குழுவொன்று அமைக்கப்படவிருப்ப தாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்று தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் விவகாரம் குறித்து இரு நாடு களும் இணைந்து பொதுவான இணக்கப் பாடொன்றுக்கு வரும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பு மீனவர்கள் சார்பிலும் பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவார்க ள் எனப் பிரதியமைச்சர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மீனவர் விவகாரத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இந்த இணைந்த செயற்குழு பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் குழு வொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ், தமிழகத்தின் பிரதம செய லாளர், இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் தமிழகப் பணிப்பாளர், இந்திய பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மற்றும் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டமொன்று நேற்றுமுன்தினம் நடை பெற்றது.

இக்கூட்டத்திலேயே மீனவர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பு வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீனவர் விவகாரத்தில் பொது இணக் கப்பாட்டை எட்டுவதற்கு இணைந்த செயற் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானமும் இக்கூட்டத்தில் வரவேற்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறி வித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

லிபியாவிலிருந்து அழைத்து வந்த 15 இலங்கையர் கிறிஸ்சில் மாயம்


லிபியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக கிரிஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 15 இலங்கையர்கள் கிறிஸ்சில் தலைமறைவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது. இவர்களில் 5 பேர் கிஹஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீன நாட்டு ஊழியர்கள் சிலருடன் 36 இலங்கையர்கள் கிஹஸணுக்கு அழைத்து வரப்பட்டனர். பணியகத்தினூடாக இவர்களை திருப்பி அழைத்துவர டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 15 பேர் தாம் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதோடு இலங்கையரை நாட்டுக்கு திருப்பி அழைத்து வருவதற்கு வேறுநாடுகளின் உதவியை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையர் கிஹஸணுக்கு நுழைவதற்கு அனுமதி வழங்காதிருக்க அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 10 இலங்கையர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

எல்லைக் கோட்டை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகர வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள், லொறிகள், பஸ்கள் மற்றும் கொள்கலன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இடதுபுறத்திலுள்ள பாதைக் கோடு எல்லைக்குள் மாத்திரமே பயணிக்க வேண்டுமென பொலிஸ் வாகனப் போக்கு வரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிர திப் பொலிஸ்மா அதிபர் அசோக விஜய திலக தெரிவித்தார்.

இந்தக் கோட்டு எல்லைகளை மீறி நடு வீதியில் செல்லும் வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதற்கும், ஏனைய வாக னங்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்த விதிமுறைய மீறி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து முதற் தடவை குற்றமிழைப் பவர்களுக்கு 1500 ரூபாவும், தொடர்ந்தும் அவர்கள் அதே குற்றத்தை இழைக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

பஸ்கள் நடுவீதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் வீதிகளில் வாகன நெரிசலும், வீதி விபத்துக்களும் அதிகரித் திருப்பதால் அவற்றைத் தடுப்பதற்கும் நட வடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...