25 டிசம்பர், 2010

கிழக்கு மாகாணத்தில் கடும் மழை – பெருமளவானோர் பாதிப்பு


கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 500 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே கூடுதலான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக பாடசாலைகளிலும் ஏனைய பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

அரச தீர்மானத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்ற மாடியிலிருந்து குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி(காணொளி இணைப்பு)
வலது குறைந்த குழந்தைகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்தல் தொடர்பில் ருமேனியாவின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுப் பிரஜை ஒருவர் நாடாளுமன்றத்தின் மேல் மாடியிலிருந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் ருமேனிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் எமில் பொக் உரையாற்ற ஆரம்பித்துள்ளார். அதன்போது "பொக்இ நீங்கள் எங்களுடைய குழந்தைகளின் உரிமைகளைப் பரித்துவிட்டீர்கள்" எனக் கூறியவாறு மேலிருந்து கீழே பாய்ந்துள்ளார். அவருடைய மேற்சட்டையில் ' நீங்கள் எங்களது எதிர்காலத்தைக் கொன்றுவிட்டீர்கள்" என எழுதப்பட்டிருந்தது.

இதனை நேரடியாகப் பார்த்தோரும் தொலைக்காட்சிகளினூடாகப் பார்வையிட்டோரும் கண்ணீர் வடித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கண்ணிவெடிகள் அகற்றம் : இலங்கைக்கு பாராட்டு
கொழும்பு : இலங்கை அரசு போரினால் பாதிக்கப்பட்ட, தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் முயற்சிகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கு உதவுவதற்காக, அமெரிக்கா சார்பில் ஐந்து ஆம்புலன்ஸ்களை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று, இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பாட்ரிசியா புட்டெனிஸ் கூறியதாவது: போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியேற்றம் செய்து வரும் இலங்கை அரசின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். மறு குடியேற்றத்துக்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணி மிகவும் அவசியம். இலங்கை ராணுவம் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் அமைப்புகள் இரண்டும் இணைந்து இன்று, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையான கண்ணிவெடிகளை அகற்றியுள்ளன. இருப்பினும் மேலும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. கண்ணிவெடி அகற்றும் பணி விரைவில் முடிவடைவதற்காக, அமெரிக்கா தொடர்ந்து உதவியளிக்கும். இவ்வாறு புட்டெனிஸ் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக, இலங்கை ராணுவம் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் அமைப்புகளுக்கு அமெரிக்க அரசு, 48 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இலங்கையில் ஆடை கட்டுப்பாடு: "இலங்கையில் உள்ள கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், அந்தந்த கலாசாரங்களை மதிக்கும் வண்ணம் ஆடை அணிய வேண்டும்' என்ற விதிமுறையை விரைவில் இலங்கை அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை வகுப்பதற்காக, இலங்கை கலாசார மற்றும் கலை அமைச்சகம், ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த விதிமுறைகள் அடுத்தாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.
மேலும் இங்கே தொடர்க...

அணு ஆயுத தாக்குதல் நடக்கும் : வடகொரியா ஆவேச எச்சரிக்கை


சியோல் : "தென்கொரியா எல்லை மீறும் பட்சத்தில், அதன்மீது புனிதப் போர் தொடுப்போம். தேவைப்பட்டால், அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம்' என, வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக, போச்சியான் என்ற இடத்தில் தென்கொரியா போர் ஒத்திகைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், சிறுரக ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்கள், குண்டுவீசி தாக்கும் போர் விமானங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மலைகள் சூழ்ந்த போச்சியான் பகுதியில், தென்கொரிய ராணுவம் மேற்கொண்டுள்ள போர் ஒத்திகையால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. முதலில் இதுகுறித்து மவுனம் சாதித்த வடகொரியா, நேற்று இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் சுன் இதுபற்றி விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனிதப் போர் தொடுப்பதற்கு, வடகொரியா முழுமையாக தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். தென்கொரியாவின் போர் ஒத்திகை ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கை. தென்கொரியாவும், அமெரிக்காவும் வடகொரியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளன. மிகவும் சிறிதளவு கூட எல்லையை தாண்டும் பட்சத்தில், எதிரி பயங்கரப் பேரழிவை சந்திக்க நேரிடும். தென்கொரியாவும், அமெரிக்காவும் போரை துவக்கினால் அவை முற்றிலுமாக அழிக்கப்படும். இவ்வாறு சுன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிடம் ஆறு அணுகுண்டுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத பிரயோகம் குறித்த வடகொரியாவின் மிரட்டல், பல நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சீனா சமாதானம்: இந்நிலையில், வடகொரியாவின் நட்பு நாடான சீனா, இருதரப்பும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது. சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜியாங் யு நேற்று விடுத்த அறிக்கையில், "இப்போதைய சூழல் மிகவும் சிக்கலாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறது. அமைதியாக இருக்கும்படியும், போர் ஒத்திகையை கைவிடும்படியும் இருதரப்பையும் கேட்டு கொண்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா கண்டனம்: இதற்கிடையில் வடகொரியாவின் "புனிதப் போர்' அறிவிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகொரியாவின் மிரட்டலுக்கு அடிப்படையில் எவ்வித காரணமும் இல்லை. அணு ஆயுதத்தைப் பிரயோகம் செய்வதாக வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்களை இதற்கு முன்பும் கேட்டிருக்கிறோம். ஆனால் இம்முறை, ஏவுகணை பரிசோதனை, அணுகுண்டு பரிசோதனை, தென்கொரியாவின் இயான்பியாங் தீவின் மீது குண்டு வீசுதல் போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்த, வடகொரியா தான் இந்த வார்த்தைகளை கூறியுள்ளது. தனது செயல்களுக்கு வடகொரியா பெருமை கொள்ள முடியாது. இவ்வாறு க்ரவுலி தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்


திரு பெருமையினார் கணேசலிங்கம்

அன்னை மடியில் : 25 ஏப்ரல் 1953 ஆண்டவன் அடியில் : 16 டிசெம்பர் 2010

நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் தற்போது லண்டனில் வசித்துவந்தவருமான பெருமையினார் கணேசலிங்கம் அவர்கள் 16-12-2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் பெருமையினார்(சந்தைக்கடை உரிமையாளர்) சுந்தரம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை உடையாரின் மகன் இரத்தினராஜா(அதிபர்-நெடுந்தீவு), காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை(சந்திரா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), மகாலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், நவமலர்(லண்டன்), நிர்மலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற புஸ்பராணி, அப்பன்(ஙஹஙுசீசிகீடு இஹஙூகீ & இஹஙுஙுஞி ணசீடீடீடூஙூஸசீஙுஞி-லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கயிலாயபிள்ளை(ஆசிரியர்-யாழ்ப்பாணம்), நெடுஞ்செழியன்(லண்டன்), சந்திராதேவி(இந்தியா), சிவஞானம்(இந்தியா), வாணி(லண்டன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஜெயகௌரி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பாஸ்கரன், கமலாசினி(லண்டன்), கோசலாதேவி(கனடா), பாலராஜ்(கனடா), காலஞ்சென்ற சுந்தரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவாமிநாதன், தவமணி, ரஞ்சி, ரஞ்சன், சாரதா ஆகியோரின் அன்பு சகலனும்,

சிவாஜினி, கோபிராஜ், ஆனுஷியா, மணாளினி, மயூரன், நிரோஷன், அர்ச்சுனா, அஞ்சனா, அர்ச்சிகா ஆகியோரின் அன்பு அண்ணாமாமாவும்,

அபர்ணிஜா, ரஜிதா, துஷிகா, மதுரா, அஜந்தினி, அபிக்குமார், ஐஸ்வர்யா, ஷோபிகா, ஆதவன், ஆர்த்தி ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும்,

நவீனன், சிவக்குமார், முரளிதரன், சுவர்ணா, சசிதரன், சஞ்யுதா ஆகியோரின் அருமை சித்தப்பாவும்,

வினோ, பிரசாத், பிரசன்னா, பிரபாகரன், பார்த்தீபன், மிருணாளினி, விசாலி, மாதங்கி, விதுஷி ஆகியோரின் அன்பு அத்தைமாமாவும்,

பாரதி, துஷ்யந்தன் ஆகியோரின் மாமாவும்,

வேனுஷன் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
திருமதி கணேசலிங்கம்
மேலும் இங்கே தொடர்க...

வாகன போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த அரசு முடிவு


சீ.சீ. இலக்க வாகனங்கள் வீதியில் செல்ல உடன் தடை.வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது அவசியம்.கைபேசிகளில் உரையாடியவாறு வாகனம் செலுத்தத் தடை.

வாகன போக்குவரத்து விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியுள்ளார்.

இறக்குமதி வரியை செலுத்தாமல் பல்வேறு முறைகளில் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி முழுமையான வாகனங்களாக மாற்றி விற்பனை செய்வது தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக கராஜ் இலக்கங்களுடன் (சீ. சீ. இலக்கம்) வாகனங்கள் வீதியில் செல்வது உடனடியாக தடைசெய்யப்படுகின்றது. பல்வேறு மோசடி வழிகளில் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி முழு வாகனங்களாக்கி விற்பனை செய்துள்ள வாகனங்களை உடனடியாக கண்டறிந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், நிதி அமைச்சு, சுங்க திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடை முறைப்படுத்தவுள்ளன.

போக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் பணிப்பிற்கமைய வாகனங்களில் ‘ஆசனப்பட்டி’ கட்டாயமாகப் பயன்படுத்தல் வேண்டும். இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடி வாகனம் செலுத்துவது தடை என்ற சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி தீர்வை மூலம் நாட்டுக்குள் வரவேண்டிய பெருந்தொகையான பணம் உதிரிப்பாகங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதன் ஊடாக அரசுக்கு கிடைக்காமல் போயுள்ளது. இதனை தடுக்கும் நோக்குடனேயே ஜனாதிபதி அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய பாதுகாப்பு தினம் நாளை யாழ்ப்பாணத்தில் முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரு நிமிட மெளன அஞ்சலி


தேசிய பாதுகாப்பு தினம் இவ்வருடம் பிரதமர் தலைமையில் நாளை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை 9.25 முதல் 9.27 மணி வரை அனைவரையும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த நிவாரண அமைச்ச மஹிந்த அமரவீர பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மக்கள் தமது சொத்துக்கள், வீடு, இருப்பிடங்களை இழந்தனர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வருடம் நாம் யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு தினத்தை ஏற்பாடு செய்துள்ளோம். 30 வருடகால பயங்கர யுத்தம் நிறைவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் நாட்டை பயங்கரவாத யுத்தத்தில் இருந்து காப்பாற்றிய இராணுவ வீரர்களையும், சுனாமியால் இறந்தவர்களையும் நினைவு கூரும் நோக்கிலேயே இவ்வருடம் வடக்கில் நடைபெறுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7 பெளத்தாலோக மாவத்தை யில் வளி மண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டும் உரையாற்றுப் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. எமது அமைச்சின் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். உலர் உணவுப் பொருட் களையும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகளை பெற்றுக்கொடுத்தோம்.

அனர்த்த நிவாரண முகாமைத்துவத்தின் மூலம் எதிர்காலத்தில் அனர்த்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான வழிவகைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 மில்லியன் வரை நாம் செலவு செய்துள்ளோம்.

சகல மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் பிரதேச செயலகங்களினூடாக செயற்படு கின்றது. இதன் மூலம் அனர்த்தம் ஏற்படு வதற்கான அறிகுறிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் முகமாக சகல அனர்த்த எச்சரிக்கை மத்திய நிலையங்களை நிறுவுவ தற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அவ்வாறே எமது அமைச்சிற்கு யு.என்.டி.பி. உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற சுமார் எட்டரை கோடி ரூபாவை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்முறைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளேன் பாதுகாப்பு செயலர்

“நான் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் நாட்டில் நிலவி வந்த வன்முறைகளை பெருமளவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறேன்" என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல் நடைபெற்ற உடன் குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்று தான் விடுத்த உத்தரவு இன்று கையில் வெற்றி கண்டு வருகிறது என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இனிமேல், வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உலகின் பலம் வாய்ந்த இயக்கமான எல்.ரி.ரி யினர் மிகவும் சாதுரியமான முறையில் எவருக்கும் பிடிபடாமல் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தவறுதலாக விட்டுச் செல்லும் சிறு தடயங்களை வைத்து நாம் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

எனவே, இலட்சக்கணக்கான ரூபாவை கப்பப் பணமாக மிரட்டி பெற்று ஆட்களை கடத்தும் கோஷ்டியினர் இராணுவம் அல்லது பொலிஸ்

உத்தியோகத்தரின் சீருடைகளுடன் ஆயுதங்களை தாங்கிக் கொண்டுவந்து வர்த்தகர்களை பயமுறுத்தி பணத்தை அபகரித்து செல்வதுண்டு. இதற்கு எனது பணிப்புரையின் கீழ் பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்துள்ளார்கள். எனவே, இனிமேல் இத்தகைய குற்றச் செயல்களில் பொலிஸார் மற்றும் இராணுவ சீருடையில் வந்து எவராவது கப்பம் கேட்பார்களேயானால், அது பற்றிய தகவல்களை உடனடியாக எனக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விடயத்தில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால், நாட்டில் கொள்ளை, ஆட்கடத்தல், பணம் அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மேலும், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, பாரா ளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் வர்த்தக பிரமுகர் அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோரின் ஆலோசனைக்கமைய அகில இலங்கை நகை வியாபார சங்கத்தினர் இதுபோன்ற முறைப் பாடுகளை பாதுகாப்பு செயலா ளரிடம் முன்வைத்தனர். பல கொள் ளைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து பல வர்த்தகர்களுக்கு இன்று நிம்மதியான வாழ்க்கையை பெற் றுக்கொடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரின் இந்த பொதுச் சேவையைப் பாராட்டும் முகமாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவம் செலுத்தினர். ரவி ஜூவலர்ஸ், தேவி ஜூவலர்ஸ் ஆகிய நகைக்கடை உரிமையாளர்கள் தலா 10 இலட்சம் ரூபாவை ‘நமக்காக நாம்’ என்ற நாட்டுக்காக கடுமையாக போர் முனையில் சேவையாற்றிய ஆயுதப் படை வீரரின் நிதிக்கு அன்பளிப் பாக வழங்கினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவை: இந்திய கப்பல் சேவை நிறுவனம் கேள்வி மனு கோரல்


இந்திய மத்திய அரசு நிறுவனமான இந்திய கப்பல் சேவை கூட்டுத்தாபனம் (எஸ்.சி.ஐ) நிறுவனம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட் டுள்ளது. இதற்கான கேள்வி மனுக்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் இரு நாடுகளிடையே கப்பல் போக்கு வரத்து தொடங்க உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளிடையே சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இந்த சேவை தொடங்கப்படுகிறது.

இதன்படி, தூத்துக்குடி துறை முகத்திலிருந்து தலைநகர் கொழும்புக்கு கப்பல் சேவையை நடத்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து கேள்வி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இரு நாடுகளிடையே கப்பல் போக்குவரத்து நடந்த பல நிறுவனங்கள் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் கப்பல் சேவைக்கு இம்மாத தொடக்கத்தில் இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இரு நாடு களிடையிலான பயணிகள் போக்குவரத்து குறித்து இந்தியா, இலங்கை இடையே வெகு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜீவ்

குப்தா, இலங்கை கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலர் ஆகியோர் இணைந்து ஒப்பந்த வழிமுறைகளை ஆராய்வர்.

இது தொடர்பாக அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இதேவேளை தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சேவை தொடங்கப்பட்டு ஆறு மாத இடைவெளியில் இராமேஸ் வரம்- தலைமன்னார் கப்பல் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

புதியபதையின் நத்தார் வாழ்த்துக்கள்தேவகுமாரன் ஜேசு கிறிஸ்து இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைபெறச் செய்வார்சமாதானத் தூதுவர் ஜேசு கிறிஸ்து, இவ்வுலகில் மனிதனாக புனித மரியாள் என்ற மானிடகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து, மக்களின் பாவத்தை தானே ஏற்றுக்கொண்டு, அதற்காக தனது புனித இரத்தத்தை சிந்திய வரலாற்றின் ஆரம்ப தினமான புனித நத்தார் பண்டிகை இலங்கை உட்பட உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிர்றது.

சுமார் 100 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மேற்கு நாடுகளின் என்றுமே இல்லாதவாறு படுபயங்கரமான பனிமழை பொழிந்து, அந்நாடுகளை பனிமேடுகளாக இந்தத் தடவை மாற்றியிருக்கின்ற காரணத்தினால் இந்த நத்தார் மேற்கு நாடுகளில் அந்தளவுக்கு மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு அங்குள்ள மக்களுக்கு இயற்கை அன்னை அனுக்கிரகம் புரியவில்லை என்ற உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுவாக மேற்கு உலகிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் மாரி காலத்திலேயே பனிமழையின் தூறல்களுடன் நத்தார் பண்டிகை மகிழ்ச்சியாகக் கொண் டாப்படுவதுண்டு. இப்போது, மனி தர்களாகிய நாம் சுற்றாடலுக்கு ஏற்படுத்திய

பாதகமான விளைவுகளின் காரணமாகவே, காலநிலை எங்களுக்கு இப்போது பாதகமாக அமைந்துள்ளது.

இந்தப் புனித நத்தார் தினத்திலாவது உலகின் மாந்தர்கள் நாம் மரங்களை வெட்டியோ, ஓசோன் படலத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய வாயுக்களை வெளியேற்றியோ, சுற்றாடலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த மாட்டோம் என்ற பிரதிக்ஞையை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இவ்விதம் சுற்றாடலின் பாதுகாப்பிற்கு மனித குறுத்தைச்சேர்ந்த நாம் முக்கியத்துவம் அளித்தால் நிச்சயம் அடுத்தடுத்த ஆண்டில் வரும் நத்தார் பண்டிகை இந்த நத்தார் பண்டிகையை விட எல்லா கிறிஸ்தவர்களின் மனங்களிலும் மகிழ்ச்சி பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் நாம் திடமாக நம்பிக்கை கொண்டிருக்கலாம்.

இந்த நத்தார் பண்டிகை, இலங்கைக்கு இந்தத்தடவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் அதி மேற்றாணியராக விளங்கிய ஆண்டகை அதி உயர் மல்க்கம் ரஞ்சித், அவர்களை, புனித பாப்பரசர் கடந்து நவம்பர் மாதத்தில், பாப்பரசர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள அதி உயர் திருபீடமான கருதினால் பதவிக்கு திருநிலைப்படுத்தி இருப்பது இலங்கைக்கு மட்டுமல்ல, ஆசிய நாடுகளுக்கே கிடைத்த ஒரு பெரும்பாக்கியமாகும்.

நாங்கள் முன்பு குறிப்பிட்டதற்கு அமைய இருளில் வாழ்வோருக்கு ஒளி தரும் நத்தார் பண்டிகை இலங்கையிலும் இந்த தடவை காலநிலையின் சீற்றம் காரணமாக, ஓரளவுக்கு தனது சிறப்பை இழந்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

வடகீழ் பருவபெயர்ச்சி மழைவீழ்ச்சி பருவகாலம் ஆரம்பித்திருப்பதனால், நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இப்போது பெருமழையும் பெருவெள்ளமும் மக்களின் சகஜ வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும் சமாதானத்தின் தேவன் ஜேசு கிறிஸ்துவின் கடைக்கண் பார்வை எங்கள் நாட்டு மக்கள் மீது இப்போது விழுந்து இருப்பதனால், காலநிலையிலும் சாதகமான மாற்றம் ஏற்பட்டு மக்கள் இந்த தடவையும் மகிழ்ச்சியாக தங்கள் நந்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

சில எதிர்க்கட்சிகளும், சமூக விரோதிகள் சிலரும் நாட்டில் செயற்கை யான பொருட்களின் விலையேற்றத்தையும் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களைக் கொண்டுவருவற்கு எத்தணித்த முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது வெற்றிகரமான முறையில் முறியடித்து மக்களுக்கு பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு உதவும் வகையில் பொருட்களைத் தட்டுப்பாடின்றி நியாயவிலைக்கு பெற்றுக்கொடுப்பதில் சாதனை ஏற்படுத்தி இருக்கிறார்.

பண்டிகைக் காலத்தில் ஆடைகள், விளையாட்டு பொருட்கள் உட்பட சகல வித பொருட்களையும் நியாய விலைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் இப்போது புறக்கோட்டை மெயின் வீதியை முற்றாக மூடிவிட்டு, அங்கு அங்காடி வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு பூரண சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது. அதேபோன்று நாட்டின் சகல பிரதான நகரங்களிலும் இத்தகைய வசதிகள் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணுலகின் வேந்தன் மண்ணில் மனிதனாக பிறந்து மக்களின் பாவங்களை போக்கிய இந்த நத்தார் நன்நாளில் இலங்கையில் இன்று தோன்றியிருக்கும் சமாதானமும் அமைதியும் மக்களிடையில் இருந்து வரும் நல்லிணக்கப்பாடும், ஒற்றுமையையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுவடையச் செய்வதற்கு தேவகுமாரன் ஜேசுகிறிஸ்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் தினகரன் வாசகர்களுக்கு நத்தார் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்தளிக்கும் உண்மை நத்தாரை கொண்டாடுவோம்


“வெறுமனே அலங்காரம் மட்டும் கொண்ட நத்தாருக்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவின் அன்பைச் சகலருக்கும் பகிர்ந்தளிக்கும் உண்மையான நத்தாரைக் கொண்டாடி மகிழ்வோம்" இவ்வாறு பிரதமர் தி.மு. ஜயரட்ன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்து 2010 வருடங்களின் பின்னர் உதயமாகும் இந்த அழகான நத்தார் இலங்கைவாழ் கிறிஸ்தவ பக்தர்களுக்கு மிக விசேடமான நத்தாராக அமையும் என்பது எனது பூரண நம்பிக்கையாகும்.

தெற்காசிய பிராந்தியத்திற்கான அதி உத்தம கர்தினல் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது இலங்கை வாழ் கிறிஸ்தவ பக்தர்களுக்கும் பொதுவாக இலங்கைத் தாய் நாட்டிற்கும் கெளரவம் அளிக்கும் வகையில் வணக்கத்துக்குரிய அருட்தந்தை மல்கம் ரஞ்சித் அவர்களை கர்தினல் பதவிக்கு உயர்த்தியமையானது எமக்குக் கிடைத்த மிக விசேட நத்தார் பரிசாக நான் கருதுகின்றேன். கடவுளை வழிபடும் புனித தேவாலயத்தில்கூட எக்கணப்பொழுதிலும் பிரபாகரனின் மரண அழைப்பாணை எழுதப்படுமோ என்ற அச்சத்தில் திறந்த மனதுடன் நத்தாரைக் கொண்டாட முடியாத நிலையில் நாம் கழித்த நத்தார் தினங்கள் தான் எத்தனை? நத்தார் மாபெரும் தேவ பூஜையில் கலந்துகொள்ள வோ, தேவாலயத்திற்கு வரவோ முடியாமல் மரண பயத்தில் இந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கழித்த நத்தார் தினங்கள் தான் எத்தனை? 30 வருட அர்த்தமற்ற யுத்தமானது எங்களிடமிருந்து பறித்துக்கொண்ட அந்த அன்பு நிறைந்த நத்தாரை இன, மத, குல பேதமின்றி அர்த்தமுள்ள வகையில் கொண்டாடக்கூடிய சூழல் தற்போது நிலவுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான முப்படைகளின் யுத்த வீரர்கள் தமது இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி இந்நாட்டை ஒன்றிணைக்காவிட்டால் இன்னும் நாம் அரைவாசி உயிர்போன மனிதர்களாகத்தான் வாழ நேர்ந்திருக்கும்.

அதனால் இம்முறை நத்தார் தின தேவ பூஜையின்போது அவர்களுக்காக சிறிது நேரம் பிரார்த்தனை புரியுங்கள்!

“ஏழைகளின் உள்ளத்திலேயே கடவுள் வாழ்கின்றார்" என்ற தேவ வாக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக வசதிகளற்ற மாட்டுத்தொழுவம் ஒன்றைத் தேர்ந்தெடுத்த தன் மூலம் கிறிஸ்தவ சமயம் எங்களுக்குக் கற்றுத்தந்த ஆழமான படிப்பினையைத் தமது வாழ்வில் பிணைத்துக் கொள்ள தகுந்த தினம் இன்று உதயமாகியுள்ளது.

வெறுமனே அலங்காரம் மட்டும் கொண்ட நத்தாருக்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவின் அன்பினைச் சகலருக்கிடை யிலும் பகிர்ந்தளிக்கும் உண்மையான நத்தாரைக் கொண்டாடி மகிழ்வோம். சாந்தி, சமாதானம் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
மேலும் இங்கே தொடர்க...

நத்தாரை கொண்டாடுவதன் மூலம் அமைதியும் கருணையும் ஏற்படுகிறது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி


இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த நத்தார் தினத்தில் இலங்கையருக்கும், உலகிலுள்ள சகலருக்கும் மகிழ்ச்சிகரமான நத்தாராகட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார்.

நத்தாரை கொண்டாடுவதன் மூலம் மனதில் அமைதியும் கருணையும் நிலை கொள்ளுகின்றது. விஷேடமாக ஏழைகளுக்கு உதவுவதும் அவர்களுக்கு அன்பு காட்டுவதும் எல்லா இனத்தவரோடும் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வதும் நத்தார் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தவென நாம் பாரிய அர்ப்பணிப்புடன் செயற் பட்டோம். அயலானை நேசிப்பது என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை இதனூடாக அர்த்தம் பெறுகிறது. இலங்கை மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக நாம் முன்னெடுக்கின்ற முயற்சிகள் கிறிஸ்தவ மக்களினதும், ஏனைய மதத்தவர்களினதும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

“என்னுடைய நாமத்தினால் சிறு பிள்ளையொன்றை ஏற்றுக் கொள்பவன் என்னால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றான்" என்று இயேசு கிறிஸ்து நாதர் தனது போதனையில் தெரிவித்துள்ளார். இயேசு நாதர் இம் மண்ணில் அவதரித்த போது விண் மீன்கள் ஒளியூட்டின. அந்த விண்ணொளியின் திசையில் மூன்று ராஜாக்கள் இயேசுவை வணங்குவதற்கு வருகை தந்ததாக கிறிஸ்தவ வரலாறு கூறுகின்றது. அதேபோன்று இந்த நத்தார்

பண்டிகையிலும் சிறுவர்களை நாம் மகிழ்ச்சிப்படுத்துவது அவசியம். நத்தார் பண்டிகையைக் கொண் டாடும் நாம் அவ்வாறு செய்தால் இயேசு கிறிஸ்துவின் சமாதானத் தையும், கிருபையையும் நாம் அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் அனைவருக்கும் அமைதியும், சமாதானமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான நத்தார் வாழ்த்து உரித்தாகட்டும் என்றும் நத்தார் செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடெங்கும் பரவலாக மழை: மலையகப் பகுதிகளில் மண்சரிவு: நிரம்பி வழியும் நிலையில் 21 குளங்கள்


மன்னம்பிட்டியில் வாழ்வோருக்கு அறிவுறுத்தல்
நாட்டில் பரவலாகப் பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பிரதான குளங்களும் நிரம்பி வழியும் கட்டத்தையும் அடைந்துள்ளன.

நாட்டிலுள்ள 21 பிரதான குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதாகவும், மூன்று குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வாகன போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதேநேரம் ரன்டம்பே நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை

அடைந்துள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றன. இது குறித்து பொலன்னறுவை மாவட்டத்தில் சோமாவதி சயித்திய மற்றும் மன்னம்பிட்டி பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அறிவூட்டப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

தற்போது வட கீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி மழைக் காலம் ஆரம்பமாகி இருப்பதால் மலையகத்தின் கிழக்கு பிரதேசங்களில் வாழ்பவர்கள் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்து மிகவும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் சமந்த போகாபிட்டிய கேட்டுக்கொண்டார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன மேலும் கூறுகையில், நாட்டில் 59 பிரதான குளங்கள் உள்ளன. அவற்றில் 21 குளங்கள் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்துள்ளன.

பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகளும், குருநாகல், இம்புல்வான குளத்தின் மூன்று வான் கதவுகளும், ஹம்பாந்தோட்டை மெளஆர குளத்தின் இரு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகள் யாவும் ஒரு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் எச். ஆர். கே.பி. ஹேரத் கூறுகையில், தொடர் மழை காரணமாக கண்டி மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக பெல்வத்தை கிராமசேவகர் பிரிவில் ஐந்து குடும்பங்களும் பைரவகந்த, சைமன்வத்தையில் நான்கு குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அருப்பொல கிராமசேவகர் பிரிவிலுள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினமிரவு மண்மேடு விழுந்ததால் வீடு சேதமடைந்துள்ளது. அங்கு வாழ்ந்து வந்த குடும்பமும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகிய்யாவ கிராமசேவகர் பிரிவிலுள்ள வீடொன்றின் மீது பலாமரமும், வாகை மரமும் சரிந்து விழுந்ததால் அவ்வீடும் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வாழ்ந்த குடும்பமும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதேநேரம் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறுகையில், வலப்பனை நில்தண்டகின்ன வீதியிலும், நுவரெலியா- உடப்புசலாவ வீதியிலும் நேற்று முன்தினமிரவு மண்சரிவு ஏற்பட்டன. இதனால் இப்பாதைகள் ஊடான வாகனப் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன. இப்பாதைகளில் விழுந்திருந்த மண்மேடுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டன என்றார்.

மலையகத்தில்

மலையகத்தில் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு பொது இடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதன் இரவு தொடக்கம் வியாழன் நேற்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் மகாவலி நதி நிரம்பியுள்ளது. தோட்ட பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, தக்காளி மரக்கறி பயிர் செய்கை நீர் நிறைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு கிறிஸ்மஸ் பண்டிகை வியாபாரமும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விக்டோரியா, ரந்தெனிகல நீர்த்தேக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மயிலப்பிட்டி, ஹங்குராங்கெத்த, ஆரகம, தெல்தெனிய, வேரஹெர, மெதமகநுவர, முறுகாமல, போப்பிட்டிய, தலாத்துஓய, மொரகொல்ல, குருதெனிய பகுதிகளில் மரக்கறி தோட் டங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி, கம்பளை

கடந்த சில நாட்களாக நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கடும் மழையின் காரணமாக இப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதோடு பல வீடுகளும் சேதத்திற்குள்ளாகின. இதிலிருந்து பழைய நிலைக்கு வருவதற்கு முன் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து மழை பெய்தால் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகளும் பாதிப்படையலாமென பலர் கூறுகின்றனர்.

இம்மழை காரணமாக அன்றாடம் நாட் கூலியை நம்பி வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். நாட் கூலிக்கு வேலை செய்து வாழும் நடுத்தரத்தினரே அதிகமாக இப்பகுதிகளில் இருக்கின்றனர். மழையினால் வயல்களும், காய்கறி தோட்டங்களும் நீரில் மூழ்கியுள்ளதினால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதோடு, மரக்கறிகளின் விலைகளும், உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...