16 மார்ச், 2011

வான் புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு அமெரிக்காவிடம் உதவி கோரிய இலங்கை: விக்கி லீக்ஸ் தகவல்தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது வான் பாதுகாப்பு முறைமையை பலப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கி லீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை புலிகளின் விமானங்கள் தாக்கியதை இந்தியா வழங்கிய ராடர்கள் மூலம் தடுக்க முடியாமல் போனதையடுத்து அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 மார்ச் 30ஆம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கை அழைத்த பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ எதிர்காலத்தில் எல். ரி. ரி. ஈ. யின் வான் தாக்குதல்களுக்கு எதிராக எவ்வாறு வான் பாதுகாப்பை பலப்படுத்தலாம் என ஆராய்வதற்காக அமெரிக்க இராணுவ குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம்.

கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்திய சில நாட்களில் இச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இத்தாக்குதலால் இந்தியாவினால் கடனாக வழங்கப்பட்ட இரு எம்.ஐ. 17 ஹெலிகள் உட்பட பல ஹெலிகள் சேதமடைந்திருந்தன. அவ்வேளையில் புலிகளின் விமானங்களை இந்திய ராடர்கள் கண்டறிய தவறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இலங்கை அரசாங்க அதிகாரிகள் அதை மறுத்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கையின் ராடர்கள் புலிகளின் வான் அச்சுறுத்தலை தடுக்க போதுமானவை அல்ல என அமெரிக்கத் தூதுவரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்ததாக 2007 ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அனுப்பப்பட்ட இரகசிய கேபிள் குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

செங்கலடி- பதுளை வீதிக்கு இடையிலான கறுத்தப்பாலம் கீழிறங்கியுள்ளது


செங்கலடி பதுளை வீதிக்கிடையிலான கறுத்தப்பாலம் 2அடிக்கு கீழிறங்கியுள்ளது. இதனால் இப்பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அண்மையில் இப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாலத்தின் நடுப்பகுதியில் உள்ள தூண் ஒன்று கீழ் இறங்கியதால் இப் பாலமும் கீழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் போது ஆழ் நில செய்மதிகள் , டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட்

பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.அட்லாண்டிஸ்கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.

அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.

அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகக் கூறப்படும் அட்லாண்டிஸ் தீவின் வரைபடம்.ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

234 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை


234 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை (17) நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க 2009 ஜூன் மாத வாக்காளர் பட்டிய லின் பிரகாரம் 94 இலட்சத்து 44 ஆயிரத்து 455 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

23 மாவட்டங்க ளில் 324 உள்ளூ ராட்சி மன்றங்களுக்காக 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 7 ஆயிரத்து 402 நிலையங்களில் இவர்கள் நாளை வாக்களிக்க வுள்ளனர். சுதந்திரமும் நியாயமுமான தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, நாளை (17) நடைபெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வித பயமும் சந்தேகமும் இன்றி வாக்காளர்கள் தமக்கு உரிய வாக்க ளிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கு மாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடி யும்.

எனினும் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு அவர் கேட்டுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பாதுகாப்புக்கென பொலிஸ், முப்படையினர் மற்றும் விசேட பொலிஸ் படையணி ஆகியோர் உள்ளடக்கிய 75 ஆயிரம் பேர்கொண்ட படையணி ஈடுபடுத்தப் படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக கலகமடக்கும் வீதித்தடை படையினர் ஆகியோரும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தல் பணிகளுக்கென 80 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

உதவி தெரிவத்தாட்சி அதிகாரி பிரதம வாக்கெண்ணும் அதிகாரி ஆகியோர் நேற்று (15) மாலையே தமக்கு உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் உள்ளூராட்சி மன்றத்துக்கான வாக்களிப்பை பின் போடுவதற்கு கட்சி செயலாளர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாகவும் அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு மாத்திரமே தேர்தல் நடைபெறும். இங்கு 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிட் டுள்ளார். 67 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் இணக்கப்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவை இலங்கைக்கு அதிகம் சார்பானதாகவே உள்ளதாக கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலாவது கூட்டம் 27 ஆம் திகதி புதுடில்லியில் நடக்க உள்ளதோடு இரண்டாவது கூட்டம் கொழும்பில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு மட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளி த்துள்ளன.

எமது பிரச்சினையை இந்திய அரசு உணர்வு பூர்வ மாகவே கவனிக்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் செய்மதி படங்களை இந்திய அரசுக்கு வழங்கியுள்ளோம்.

இலங்கைக் கடலில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். இதனை வரவேற்கிறோம். இந்திய தூதுவரை நான் நேரில் சந்தித்து பேசினேன். 27 ஆம் திகதி உயர் மட்ட குழுவொன்று இந்தியா செல்கிறது.

இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான எமது தரப்பு நகல் வரைவு தயாரிக்கப்பட்டு விட்டது இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வாழை மடலில் இருந்து உபயோக பொருட்கள் 10 இலட்சம் மனை பொருளாதாரத் திட்டத்துடன் இணைந்ததாக அமுல்படுத்த திட்டம்


வாழை மடலில் இருந்து பல்வேறு அலங்காரப் பொருட்கள், பைபர், துணி போன்ற பல்வேறு பொருட்களை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் மற்றும் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் அறிமுகப்படுத்த உள்ளதாக பாரம்பரிய மற்றும் கிராமியக் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

10 இலட்சம் மனைப் பொருளாதார திட்டத்துடன் இணைந்ததாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப் பட உள்ளதோடு முதலில் யாழ்ப்பாணம், எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வாழை மடலில் இருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவி யலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக் களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் வாழை மடலிலிருந்து பொருட்களை தயாரிப்பதன் மூலம் மேலதிக வருவாய்பெறவும் இயற்கை அழிவுகளால் ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்யவும் சூழலை சுத்தமாக வைத்திருக்கவும் சுயதொழிலாக மேற்கொள்ளவும் முடியும். இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும் யு. என். டி.பி. யின் உதவியுடனும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

கித்துல், பனை என்பன கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்தது போன்று வாழை மடல் மூலமும் பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.

அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி கூறியதாவது, இலங்கையில் சுமார் 52 ஹெக்டயாரில் வாழைமரம் பயிரிடப்படுகிறது. வெட்டி ஒதுக்கப்படும் வாழை மடலில் இருந்து பொருட்களை தயாரிப்பதன் மூலம் வேலையின்மை, வறுமை என்பவற்றுக்கு தீர்வு காண முடியும்.

மனைப் பொருளாதார திட்டத்துடன் இணைந்ததாக இதனை முன்னெடுக்க உள்ளோம். இந்த தொழில் நுட்பத்தை இங்கு அறிமுகப்படுத்த இந்தியா முன்வந்துள்ளது.

இரு விஞ்ஞானிகளை இந்தியா இங்கு அனுப்பியுள்ளது. இவர்கள் இந்த தொழில்நுட்ப அறிவை இலங்கை மக்களுக்கு வழங்க உள்ளனர் என்றார்.

இங்கு உரையாற்றிய யு. என். டி. பி. வதிவிட பிரதிநிதி டக்ளஸ் கே. கூறியதாவது; இந்த திட்டத்திற்கு உதவ முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த திட்டம் உதவும். இதற்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

அமைச்சர், அதிகாரிகள் பலரும் இங்கு உரையாற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான் அணு உலையில் வெடிப்பு: கதிர்வீச்சுத் தாக்கம் இலங்கைக்கு இல்லை


ஜப்பானின் புகுஷிமா டைய்ச்சி அணுமின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புக்களால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையென அணு சக்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேயவிக்ரம தெரிவித்துள்ளார். எனினும், முற்கூட்டிய பாதுகாப்புத் தொடர்பில் இன்று முதல் அணுக் கதிர்வீச்சுத் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் வளிமண்டல
பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பம்; அமிலமழை பெய்யும் என்பது வதந்தி

இலங்கைக்கு உடனடியாக எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லையென்பதால் மக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட வெடிப்புக்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புத் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் அணு சக்தி அதிகாரசபை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெற்றது.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர், ஜப்பானின் புகுஷிமா அணு மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புக்களால் அணுக் கசிவுகள் எதுவும் ஏற்படவில்லையென சர்வதேச அணு சக்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

அணு மின்நிலையங்களிலுள்ள குளிரூட்டிகளின் தடுப்புச் சுவர்களே அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளன. அணுக் கதிர்கள் பரவுவதற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லையென்பதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை.

அவ்வாறு அணுக் கசிவு ஏற்பட்டாலும் வளிமண்டலத்தில் கலந்துகொள்ளும் அணுக் கதிர்கள் இலங்கையை வந்தடைவதற்கு 3 வாரங்கள் அல்லது ஒரு மாதம் செல்லும். வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று கடந்த பெப்ரவரி மாதத்தில் முடிவடைந்துள்ளது. தற்பொழுது பருவப்பெயர்ச்சிக் காற்றின் தாக்கம் குறைந்திருப்பதுடன், பருவப்பெயர்ச்சிக்கு இடைப்பட்ட காலமே தற்பொழுது நிலவிவருகிறது.

இதனால் ஜப்பானில் ஏற்பட்ட கதிர்வீச்சு இலங்கையைத் தாக்காது. அதேநேரம், இலங்கையில் அமிலமழை பொழியும், அணுத் தாக்கம் ஏற்படும் என வெளியிடப்படும் தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

எனினும், முன்னேற்பாடாக இலங்கைக்கு மேலுள்ள வளிமண்டலத்தில் அணுக் கதிர்களின் தாக்கம் உண்டா என்பது பற்றிய ஆய்வுகள் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மாவட்டங்களில் வாயு மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

அணுக் கசிவின் போது வெளியேறும் அயடீன் மற்றும் சீ.சீ.எம். போன்ற தூமங்கள் வளிமண்டலத்தில் கலந்துகொள்வதாலேயே மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படும். அயடீன் வளிமண்டலத்தில் கலந்தால் அதனால் 8 நாட்களுக்குப் பாதிப்பு ஏற்படும். ஆனால் சீ.சீ.எம். வளிமண்டலத்தில் கலந்தால் அதனால் 30 வருடங்களுக்கு மேல் பாதிப்பு ஏற்படும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களிலும் அணு உலைகளில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. தற்பொழுது ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் அணு உலை விபத்து அலகு 4 அளவிலேயே ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அலகு 7 அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதுவரை ஜப்பானில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படவில்லை.

ஜப்பானின் அணு மின்உற்பத்தி நிலையங்களின் மூன்று உலைகளின் தடுப்புச் சுவர்களே வெடித்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் உலைகளைக் குளிரூட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே அவை வெடித்ததுள்ளன.

அணு உலைகள் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 100 சதுர கிலோமீற்றருக்கு அப்பால் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அணுக் கதிர் கசிவைத் தடுப்பதற்கு ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, தென்கொரியா, ஜேர்மனி போன்ற நாடுகள் கடும் முயற்சிகளை எடுத்துள்ளன என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

புகுஷிமா அணு மின் உற்பத்தி நிலையத்தில் நான்காவது வெடிப்பொன்றும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அணு சக்தி அதிகாரசபை தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், இறுதியாக ஏற்பட்ட வெடிப்பின் தாக்கம் குறித்து எதிர்வரும் 3 நாட்கள் அவதானிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சுனாமித் தாக்கத்தின் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையால் அணு உலைகளைக் குளிரூட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. பற்றரிகள் மூலம் குளிரூட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடல் நீரைக் கொண்டு குளிரூட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுவும் பலனளிக்காத நிலையிலேயே வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அணுக்கதிர்கள் உணவு மூலம் இலங்கைக்குப் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த ஜயலால் தெரிவித்தார்.

ஜப்பானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு விசேட குழுக்கள் துறைமுகங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவசர உதவி திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஏ.ஜயலத், காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எச்.காரியவசம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் காமினி ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...