28 டிசம்பர், 2009


அமைச்சர் முரளிதரனுடன் இணைந்தே செயற்படுகிறேன்”
மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென்பதே ஒரே இலக்கு– கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகத் தானும் அமைச்சர் விநயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி வெற்றிபெற வேண்டுமென்பதே இருவரதும் ஒரே நோக்கமாகுமெனத் தெரிவித்த முதலமைச்சர், இருவருக்கிடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார். இருவரும் வௌ;வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில், ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்போது இணைந்தே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.


யாழ்தேவி ரயில் சேவை எப்ரல் மாதத்திலிருந்து
ஓமந்தைவரை நீடிக்கும்




யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓமந்தைவரை நீடிக்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார். தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகள் மீளமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதோடு ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தைவரை பயணிக்க உள்ளதாகவும் பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர கூறினார்.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தை ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணிகளை பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார்.

மோதல் காரணமாக கொழும்பில் இருந்து வவுனியாவரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. புலிகளின் பிடியில் இருந்து வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம்வரை ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

30 வருடகாலம் நீடித்த மோதல்களின்போது வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் என்பன புலிகளினால் நாசமாக்கப்பட்டதாகவும் ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்பதற்காக புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம்வரை மீண்டும் ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதோடு இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது.



சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுள் 738 தமிழ்க் கைதிகள் இந்த வாரம் விடுவிப்பு சட்ட மாஅதிபர் தெரிவிப்பு




இறுதி யுத்தத்தின் பின்னர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுள் 738 பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்களென சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் இருந்தபோது விசாரணைக்கென கொண்டுசெல்லப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் 38 பேரும் இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார். சீஐடி யினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளவர்களுள் 55 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்டவர்கள் எவ்விதமான குற்றச்செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும், ஏற்கனவே 100 பேர் இவ்;வாறு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சட்ட மாஅதிபர் கூறினார். தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுபவர்களைத் துரிதமாக விடுவிப்பதோடு, ஒரு மாதத்தில் குறைந்தது 100 பேரையாவது விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்க உறுப்பினர்கன் என அடையாளம் காணப்பட்ட சுமார் 11,500 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிரவும் இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்தவர்களுள், பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுள் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 700 பேர் இவ்வாரம் விடுதலையாகின்றனர். இவர்களை மீளக்குடியமர்த்த அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு
பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க
முதலமைச்சர் சந்திரகாந்தன் பணிப்புரை




கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளைத் துரிதமாகப் பெற்றுக்கொடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழைபெய்து வருவதால் வெள்ளப்பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பல்லாயிக்கணக்கானோருக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், இதுவரை சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 500 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளன. இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலருணவு, நிதியுதவி போன்றவற்றை எதுவிதமான பாரபட்சமுமின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைசச்ர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகரையில் 500 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கப்படுவதுடன் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

மேலும், உலக உணவுத்திட்டத்தின் உதவியுடன் தாழ்ந்த பிரதேசங்களில் வடிகான்களைச் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 10 ஆந் திகதியிலிருந்து வெள்ளப் பாதிப்பு இடைக்கிடை ஏற்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் சுமார் 35 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...


புலிகளின் கப்பலுடன் கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற கரையோர ரோந்து கப்பலும் பொதுமக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

காலியில் நடைபெறும் சீசன் - 2009 கண்காட்சியிலேயே இந்தக் கப்பல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பொதுமக்கள் இந்தக் கப்பலை காண்பதற்காக கொழும்பு காலி முகத்திடலில் கப்பல் நேற்றுக் காலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


புதியபாதை சுந்தரம்
-



’புதியபாதை’ பத்திரிகை தானாக முளைக்கவில்லைபதியம்வைத்து நீரூற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியினில்சுட்டும் செழிப்பான சுழிபுரக் கிராமத்தில்...சதாசிவம் ஆசிரியரின் சாந்தமான மகனாய்...உதாரணம் காட்டும் முன்மாதிரி மாணவனாய்....விக்ரோறியா’ கல்லூரிப் படிப்பின் பின்னர்தக்கதான வழிசொன்ன சிவசண்முக மூர்த்தியிவன்.ஆயிரத்துத் தொழாயிரத்து அறுபத்து ஒன்பதிலேஆயிரக் கணக்கில் அரசாங்க ஊழியர்கள்பாதிக்கப் பட்டார்கள் சிங்கள மொழியறிவுசோதனையில் தேறினால் தான்வேலை நிரந்தரமென்று....அரசாங்கக் கட்டளைக்குக் கட்டுப் பட்டபலர்அரசாங்கக் கடமையில் ஓய்வுபெற்ற டாக்டர்திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்த ஆசான்திருவாளர் தம்பையா இல்லத்திலே நடாத்தும்சிங்களமொழி வகுப்பில் நானும்போய்ச் சேர்ந்திட்டேன்.அங்குவந்த மாணவருள் சண்முகமும் தம்பியானார்.சகலரையும் மதிக்கும் சந்ததியார் தன்னுடனேகுகபூசணிஇ பவானிஇ குருக்கள்பிறை சூடிக்குருஅப்படிப் பலபேர் அவ்விடத்தில் படித்தார்கள்.அக்கா”வென அழைத்து எனக்குற்ற துணையானார்கள்.புத்தரின் போதனைகள் ஏற்கெனவே திருக்குறளில்பத்திரமாக இருப்பதைப் பயன்படுத்தி வாழுங்கள்”என்றெமக்குக் குருவானவர் எடுத்தியம்பிக் கூறியவைநிற்கிறதே மானிட நெஞ்சத்தில் பசுமையாக.அந்தாண்டு


‘மே’தின ஊர்வலத்தைத் தடைசெய்தகுண்டாந் தடியடிகள் கோரமாகத் தாக்கியதால்என்துணைவர் உட்பட எண்ணரிய தோழர்கள்துன்புறுத்தப் பட்டுக்கண் துடைப்பாக வைத்தியசாலையில் சேர்த்துப் பாதுகாப்புக் கொடுத்தனரே!வேலையை வைத்தியர்கள் விசுவாசமாய்ச் செய்தார்கள்.உறவுகளின் துணையற்று உருக்குலைந்த எந்தனுக்குமறவாத தோழர்கள்போல் என்வகுப்புச் சோதரரும்தாமாகமுன் வந்தென் மதலைகட்கு உதவினரே!ஆமாம்! சண்முகனின் அன்பினை என்னென்பேன்!வருடங்கள் பத்துக் கழிந்து ஓடியபின்.....பெருமைபெறு ‘சுந்தரம்’ என்துணைவர் மணியத்தாரமதிக்கின்ற பொதுவுடமைத் தத்துவத்தின் பூரணத்தால்புதியபாதை’ பத்திரிகை-- புத்தாக்கச் சிந்தனையில்அடிமைப் பட்டதமிழ் மக்கள் விழிக்கவேண்டிமுடிவான உறுதியுடன் அச்சகத் தொடர்புகொண்டார்.சித்திரம் வரைவதிலே சிறந்த சுந்தரத்தார்அத்தனை திறமைகளும் ”தாய்மாமன் இராசரத்தினதின் வாரிசு” என்று மகிழ்ந்திட்டார்.தன்னடக்கத் தலைவனாய் இருந்ததெல்லாம்பறைசாற்ற விரும்பவில்லை விளம்பரமும் தேடவில்லை.குறைகூறல் விரும்பாது செயல்வீரனாய் வாழ்ந்திருந்தான்.


எண்பத்து ஈராமாண்டு ஜனவரி இரண்டாம்நாள்கண்மறைவாய் உன்கருத்தை வெல்ல முடியாதோர் சுட்டானராம்”என்றசெய்தி வந்தபின்தான் அறிந்தோமே உன் திறமையெல்லம்....கன்றிழந்த பசுப்போலப் பசுந்தரம் அம்மா புலம்பியதும்தோழொடிந்த தோழர்கள் அவசரத்தில் பழிவாங்கத்துடித்ததுவும்வாலொடிந்த பல்லிக்கு மீண்டும் முளைப்பதுபோல் உன்
எண்ணத்தை நிறைவேற்ற மக்கள்யுத்தம்வேண்டி கழகத்தின் பின்னாலேவண்ணத்துப் பூச்சிகள்போல் வாலிபர்கள் பறந்ததுவும் கண்கூடு.

வள்ளியம்மை சுப்பிரமணியம்



மேலும் இங்கே தொடர்க...



தமிழர் பகுதிகளில் பிரசாரம்: பொன்சேகா திட்டம்


கொழும்புஇ டிச.27: இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகாஇ தமிழர்களுடைய பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் செய்தும் பொதுக்கூட்டங்களில் பேசியும் அவர்களுடைய ஆதரவைப் பெற முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஜனவரி 2 முதல் அவர் தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்குகிறார்.

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கிறது.

வடக்கிலும் கிழக்கிலும் போர் ஓய்ந்த பிறகு முழு அளவில் சகஜ நிலைமை திரும்பவில்லை.

பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தங்களுடைய நலன்களைக்காக்க முன்வரமாட்டார்கள் என்ற அவநம்பிக்கை தமிழர்களிடம் வேரூன்றியிருக்கிறது.

ராணுவத்துடனான போருக்குப் பிறகு தமிழர்கள் தங்க இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள அகதிகள் முகாம்களில் ஏராளமானோர் இன்னமும் தங்கியிருக்கின்றனர்.

இவர்களில் சுமார் 15இ000 பேர் மட்டும் வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை வாங்கி முறைப்படி நிரப்பித்தந்துள்ளனர். மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு பணபலம்இ அதிகார பலம் இருப்பதால் தமிழர்களின் ஆதரவைத் தான் பெறுவதுதான் வெற்றியை உறுதி செய்யும் என்று பொன்சேகா கருதுகிறார்.

தமிழர்களின் நல்லெண்ணத்தைப் பெறும் முயற்சியாக ஜனவரி 2-ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கோவிலில் வழிபாடு நடத்திய பிறகே தேர்தல் பிரசாரப் பணிகளைத் தொடங்குகிறார்.

பிறகு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்இ மாணவர்கள் ஆகியோருடன் விவாதம் நடத்துகிறார்.

தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களிடமே கேட்டறிவார். தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்க்க தான் வைத்திருக்கும் திட்டங்களை அப்போது அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்சேகா பேசும் பொதுக்கூட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழர் கட்சித் தலைவர்களும் பேசுவார்கள் என்று தெரிகிறது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை மன்னார்இ வவுனியா நகரம் ஆகிய இடங்களில் பொன்சேகா பேசுகிறார்.

ஜனவரி 4-ம் தேதி கிளிநொச்சிஇ முல்லைத் தீவு ஆகிய ஊர்களிலும் ஜனவரி 5-ம் தேதி மட்டக்களப்புஇ அம்பாறை ஆகிய ஊர்களிலும்இ ஜனவரி 6-ம் தேதி முத்தூர்இ திரிகோணமலை ஆகிய ஊர்களிலும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

இலங்கைத் தமிழர்களின் நிலைமைதான் பரிதாபமானது. ஒரு புறம் அவர்களைக் கொல்ல படைகளை ஏவிய அதிபர் மகிந்த ராஜபட்ச மீண்டும் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார். எதிர்த்து நிற்பவரோ அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கியவர்.

தமிழர்கள் ஆதரிக்க வலுவானஇ தமிழ் வேட்பாளர் எவரும் இல்லை. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படும்இ அவர்கள் சம உரிமையுள்ள இலங்கைக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை
மேலும் இங்கே தொடர்க...