28 மே, 2010

அச்சமும் பீதியுமின்றி வாழ்கிறோம்’; யாழ். மக்கள் நன்றி தெரிவிப்பு

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் சகல வசதிகளும் தமக்கும் தற்போது கிடைத்து வருவதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவிக் கிறார்கள்.

அதேபோன்று, அச்சமும் பீதியும் இன்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த மக்கள் கூறுகிறார்கள்.

இலங்கை தகவல் தொடர்பாடல் முகவர் நிலையம் (ஐஇபஅ) அண்மையில் யாழ் நூலகத்தில் நடத்திய பயிற்சி நெறியிலும் கண்காட்சியிலும் கலந்துகொண்ட ஆசிரிய, ஆசிரியைகளும் மக்களும் இந்தக் கருத்தைத் தெரிவித்தனர். இதற்கென அரச தகவல் மையம் (1919), இ-குடிசன மதிப்பீடு, விசேடமாக விவ சாய சமூகத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள www.gowiy .lkஇணையத்தளம், மக்களுக்கு சுகாதார தகவல்களை வழங்குவதற்கான இணையத்தளம் உள்ளிட்ட இணையங்கள் பயன்படுத்தப்பட்டன.

மக்களின் வாழ்வாதாரத் தகவல்களைத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள்களையும் தகவல், தொழில்நுட்பங்களையும் மக்கள் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மக்களின் அன்றாட அலுவல்களை இலகுபடுத்திக்கொள்வதற்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப் பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

தடம்புரண்ட பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 75 பேர் பலிமேற்கு வங்கத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலொன்று நேற்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத்தாக்குதலுக்கு நக்ஷலைட்டுகளுக்கு சார்பான அமைப்பொன்று உரிமை கோரியுள்ளது.

நேற்று நள்ளிரவு 1.35 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலினால் பயணிகள் ரயில் தடம்புரண்டது. இந்த வேளையில், இந்த வழியால் வந்த சரக்கு ரயில் வண்டியொன்று மோதியதிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து மும்பை குர்லாவுக்கு நேற்றிரவு ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 1.35 மணிக்கு அந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சரக்பூர் அருகே சர்திகா ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இதனால் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அந்த பெட்டிகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது சரிந்து கிடந்தன சரக்கு ரயில், கவிழ்ந்து கிடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் நொறுங்கின. சரக்கு ரயிலும் கவிழ்ந்தது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த கோர சம்பவம் நடந்தது. ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதிய போது அந்த பகுதியே குலுங்கியது. ஏற்கனவே காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை சரக்கு ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர்.

காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகள் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர்கள் மூலம் சரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் அடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட பயணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே துறை அமைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது.

சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன
மேலும் இங்கே தொடர்க...

வடக்குக்கு விரைவில் மாகாணசபை தேர்தல்
நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் வகையில் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வடக்கு அபிவிருத்திச் செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கிளிநொச்சியில் தெரிவித்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னாரிலும் கிளிநொச்சியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா கிளிநொச்சிக்கான மின்சார இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, கிளிநொச்சி மின் இணைப்புத் திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பயங்கரவாத சூழல் நிலவிய இருபது வருட காலத்திற்குப் பின்னர் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் நேற்று முதல் சத்திர சிகிச்சைப்பிரிவு செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது நோயாளியும் சத்திர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி வைத்திய சாலையில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார அத்தியட்சகர் கெப் வாகனம் வழங்கும் வைபவத் திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ‘ஜய்க்கா’ நிறுவனங்கள் வடக்கின் சகல மாவட்டங்களிலு முள்ள சுகாதார அத்தியட்சகர்களுக்கு ‘கெப்’ வாகனங்களையும் ‘குரூஷர்’ வாகனங்களையும் வழங்கியது டன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கென 20 மோட்டார் சைக்கிள்களையும் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜப்பானிய ‘ஜய்க்கா’ நிறுவனப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சரத் அமுனுகமவும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில், வடக்கு மக்களின் சகல தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்களிப்போடு இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வடக்கில் மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி உட்பட சகல அடிப்படை வசதிகளும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாராக வுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளை அவுஸ்திரேலியா துஸ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு

அரசியல் தஞ்சம்கோரி சரணாகதி அடையும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை அவுஸ்திரேலியா துஸ்பிரயோகம் செய்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தனது ஆண்டறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது. உலகின் 159 நாடுகளில் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா சர்வதேச மனிதஉரிமை சட்டங்களுக்கு அமைவான முறையில் செயற்பட வேண்டுமெனவும் சபை குறிப்பிட்டுள்ளது. சரணாகதி கோரும் மக்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டிய பொறுப்பு அவுஸ்திரேலியாவிற்கு இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜெர்மனியில் புலிகளுக்காக நிதி திரட்டிய பெண் இலங்கையில் கைது
ஜெர்மனியில் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டி வந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவர் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் அதற்கெதிராக ஜெர்மனியில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தவர் இவரென்று கூறப்படுவதுடன், ஜெர்மனியிலுள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர் இவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உறவினராவர். தற்போது இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


மேலும் இங்கே தொடர்க...

ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறிய பீரிஸ்


அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் திடீரென வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் திடீரென காரணம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆப்கானிலிருந்து தன் படைகளை வாபஸ் பெற பிரிட்டனின் புதிய அரசு முடிவு

கடந்த சனிக்கிழமையன்று, பிரிட்டன் மூத்த அதிகாரிகள் மற்றும் புதிய அரசின் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹகுவ்வுடன் ஆப்கான் வந்திறங்கிய ஒரு குழு, ஆப்கானிஸ்தானிலிருந்து மிக விரைவில் பிரிட்டிஷ் படைகளை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ராணுவ செயலாளர் லியம் பாக்ஸ், சர்வேதேச பிரிட்டன் செயலாளர் அன்றேவ் மிட்செல் உட்பட பல மூத்த அதிகாரிகள் தங்களை இம்மாதமே லண்டன் வந்து சந்திக்குமாறு ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயை கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதிய வெளியுறவுச் செயலாளர் ஹகிவ் கூறுகையில், ஆப்கானில் தற்போது 10,000 பிரிட்டிஷ் படைகள் உள்ளதாக தெரிவித்தார். புதிய அரசின் மிக விரைவுத் திட்டத்தில், ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கான் வரும் முன் ராணுவ செயலாளர் லியம் பாக்ஸ் தெரிவிக்கையில், ஆஃப்கானிஸ்தானின் தங்கள் பயணம் வெறும் படைகளை திரும்பப் பெற மட்டுமே நடத்தப்பட உள்ளது என்றார்.

'நாங்கள் எண்ணிக்கையில் மிக குறைவாக உள்ளோம் என்பதனை நான் இங்கு ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் எங்கள் கொள்கைகளை நாங்கள் ஒரு முறை திரும்ப மாற்றியமைக்க வேண்டும். பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.நாங்கள் ஒன்னும் சர்வதேச போலீஸ் கிடையாது! நாங்கள் ஆப்கானை மேம்படுத்துவதற்கு வரவில்லை! மாறாக அவர்களால் பிரிட்டன் மக்களுக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்பதற்காகவே வந்தோம்.

நான் எங்கள் படைகளை சந்தித்து பேச உள்ளேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து மாயமாக வேண்டும்!' என்று பாக்ஸ் சூச்சகமாக தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு அடுத்து பிரிட்டன் தான் அதிக அளவில் தன் படைகளை ஆஃப்கானில் வைத்துள்ளது. முழுவதுமாக மொத்தம் 130 வெளிநாட்டுப் படைகள் ஆப்கானில் முகாமிட்டுள்ளனர். வரும் மாதங்களில் தாக்குதல்களை தீவிரமாக்க அமெரிக்கா ஒருபுறம் பேசிகொண்டிருக்க, பிரிட்டன் புதிய அரசின் இம்முடிவு, ஆப்கான் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு முக்கியமானவை

வட மாகாணத்துக்கான சில அபிவிருத்தித் திட் டங்களின் செயற்பாடு நேற்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள் ளது. மன்னார், பள்ளிமுனையில் வாழும் மக்களுக்கு நீர் விநியோகத் திட்டமும் கிளிநொச்சி மற்றும் சுன்னா கம் மின் நிலையங்கள் தடையின்றி மின்சாரம் விநி யோகிப்பதற்கான திட்டமும் நேற்று முதல் நடைமுறை க்கு வருகின்ற அதே வேளை மன்னாரிலும் கிளிநொ ச்சியிலும் வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டடங்க ளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஏழாயி ரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகியுள்ளது.

வடபகுதி மக்களுக்குப் பிரதேச அபிவிருத்தி அரை நூற் றாண்டுக்கு மேல் எட்டாக்கனியாகவே இருந்து வந்து ள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே இம்மக்கள் அபிவிருத்தியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

வட மாகாணம் அபிவிருத்தியில் பின்தங்கியிருந்ததற்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக அம் மாகாண மக்களின் அரசியல் தலைமையை நியாயமான முறையிலும் நியா யமற்ற முறையிலும் தமதாக்கிக் கொண்டிருந்தவர்களே முழுப் பொறுப்பாளிகள். வடபகுதி மக்களை வெவ் வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கட்சிப் பெயர்களில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் கள் அபிவிருத்தியில் சிறிதளவேனும் அக்கறை செலு த்தவில்லை.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தங்கள் பிரதான பணி என்று இத் தலைவர்கள் கூறிய போதிலும் அந்தப் பணியையும் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை.

துப்பாக்கி முனையில் அரசியல் தலைமையைக் கைப்பற் றிய புலிகள் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு இடமளிக் காதது மாத்திரமன்றி இருந்த ஓரிரு தொழிற்சாலைக ளையும் முடமாக்கினார்கள. முன்னைய தலைவர்களை போல இவர்களும் இன விடுதலைக்குப் பின்னரே அபி விருத்தி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

ஜனநாயக வழித் தலைவர்களும் ஆயுதம் ஏந்தியவர்க ளும் இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் பின்னரே அபி விருத்தி எனக் கூறிய போதிலும் இரண்டையுமே கோட்டை விட்டனர் என்பதே உண்மை. கற்பனாவாதச் சிந்தனை கள் காரணமாக இனப் பிரச்சினையைச் சிக்கலாக்கியது தான் இவர்களின் சாதனை.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினைக் கான தீர்வும் பிரதேச அபிவிருத்தியும் சம அளவில் முக்கியத்துவம் பெற வேண்டியவை. இனத்தின் கெளர வமும் இருப்பும் அரசியல் தீர்வில் தங்கியுள்ள அதே வேளை மக்களின் நாளாந்த பெளதீகத் தேவைகளின் பூர்த்தி அபிவிருத்தியில் தங்கியுள்ளது.

எனவே, இம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் அர சியல் தீர்வை அடைவதற்கு அளிக்கின்ற அதேயளவு முக்கியத்துவத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அளிக்க வேண்டும்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இப்போது உரிமை கோருபவர்கள் அரசியல் தீர்வைப் பெறுவதற் குச் சரியான அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. அபி விருத்தியின் பக்கம் இவர்கள் திரும்பவேயில்லை.

இனி மேல் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதிக்க முடியாது. வட க்கு, கிழக்கு அபிவிருத்திக்கு அரசாங்கம் முக்கியத்து வம் அளிக்கின்றது. சமகால யதார்த்தத்துக்கு அமை வான அரசியல் தீர்வுக்கும் தயாராக இருக்கின்றது. தமிழ் மக்களின் நலன் கருதித் தமிழ்த் தலைவர்கள் இவ்விடயங்களில் அரசாங்கத்துடன் இணக்கமாகச் செய ற்பட முன்வர வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ. எல். பீரிஸ் - ஹிலாரி இன்று சந்திப்பு


அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப் பானது திட்டமிட்டபடி வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தில் (இலங்கை நேரப்படி) இன்று மாலை நடைபெறவிருப்பதாக அமைச்சு வட்டார ங்கள் தெரிவித்தன.

இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனின் விசேட அழைப்பினையேற்றே வெளிவிவகார அமைச்சர்ஜீ. எல். பீரிஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 23ம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமானார்.

அமைச்சரின் அமெரிக்காவுக்கான விஜயத்தையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான பயண எச்சரிக்கை அமெரிக்க அரசாங்க த்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளமை யானது பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்கு விஜயம் செய்ததுடன் அங்கு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான ஆலோசகர் விஜே நம்பியார், பிரதி செயலாளர் நாயகம் ஷின் பாஸ்கோ உள்ளிட்ட ஐ. நாவின் பல சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர் சந்தித்து நாட்டின் சமாதானம், அபிவிருத்தி, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் ஆகியவை குறித்து கலந்துரையாடினார். இச்சந்திப்புக்களில் அமைச்சருடன் ஜ. நா.வின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பாலித கொஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர மற்றும் கவுன்சிலர் மக்ஸ்வெல் கீகல் ஆகியோரும் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸ் நியூயோர்க்கில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கைகளுக்கான கேந்திரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்; இலங்கை மக்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் காணமுடியாத சந்தோஷத்தை தற்போது அனுபவித்து வருவதாக கூறினார்.

சமாதான முன்னெடுப்பு, நிறைவடையும் கட்டத்தில் உள்ள மீள்குடியேற்றம், குறிப்பாக வடக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் புனர்நிர்மாணம், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலை, இலங்கை யாப்பில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்குகூறுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டன் டி.சியை வந்தடைந்திருக்கும் அமைச்சர் பீரிஸ், வெளியுறவு அலுவல்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதி ஹோவோர்ட் பேர்மன், இரா ஜாங்க உப குழுவின் தலைவர் நீட்டா லோகேய், அமெரிக்க காங்கிரஸ் உறுப் பினர்கள் மற்றும் செனற்சபை உறுப் பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத் தியுள்ளார். வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் ஜஸிய விக்கிரமசூரியவும் இதில் கலந்துகொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கை உடனடி ரத்து

இலங்கையில் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதையடுத்து அமெரிக்கா விடுத்திருந்த பயண எச்சரிக்கையை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ரத்துச் செய்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த புதன்கிழமை விடுத்துள்ளது.

‘2009 நவம்பர் 19 ஆம் திகதி இலங்கைக்காக விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை 2010 மே 26 ஆம் திகதி அமுலாகும் வகையில் ரத்துச் செய்யப்பட் டுள்ளது’ என்று ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 மே 18 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் தமிஸழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை பிரகடனம் செய்தது. யுத்தம் முடிவுற்றதாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து புலிகள் இயக்கம் கொழும்பிலோ அல்லது இலங்கையின் வேறு எந்த இடத்திலோ எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்று ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கைகளில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மோதல் முடிவுற்ற சில தினங்களில் இலங்கையில் சுற்றுலாப் பயணத்துறை முன்னேற்றம் காணத் தொடங்கியது. அது முதல் சுற்றுலாத்துறை தொடர்ந்து அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நடந்து முடிந்த சில மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் தலைவனின் நாற்பதாண்டு அரசியல் நினைவுத் தடங்கள் மர்லின் மரிக்கார்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் வாழ்வில் பிரவேசித்து நேற்று (27ம் திகதியுடன்) நாற்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பாராளுமன்ற உறுப்பினரானதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வு ஆரம்பமானது. தனது 24வது வயதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி வேட்பாளராக பெலியத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அரசியல் வாழ்வில் கட்டம் கட்டமாக வளர்ச்சிப் படிகளில் காலடி பதித்தார்.

ஸ்ரீல.சு. கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி 1994ம் ஆண்டில் ஆட்சி பீடமேறிய போது அந்த ஆட்சியில் தொழிலமைச்சராகவும் அதன் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்தார். இக்காலப் பகுதியில் தொழிலாளர்களதும் மீனவ சமூகத்தினதும் மேம்பாட்டுக்காக அளப்பரிய பல வேலைத் திட்டங்களை அவர் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2002-2004ம் ஆண்டு காலப் பகுதியில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் விமோசனத்திற்காகத் தொடராகக் குரல் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் பிரதமராக நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் கமநெகும, மகநெகும திட்டங்களை அவர் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். வீதிகளை கொங்கிஹட் போட்டு செப்பனிடும் முறை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதன் பின்னர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அளித்த சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றியமை, சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றமை, முப்பது வருட பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமை, ஜீ.15 அமைப்பின் தலைமை என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் குறிப்பிடக் கூடிய சிறப்பம்சமாக உள்ளன.மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு மாற்றத்திற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அங்கீகாரம் அலரி மாளிகையில் ஜூன் 7இல் வருடாந்த மாநாடுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரு டாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜூன் மாதம் 7 ஆம் திகதி அலரி மாளி கையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் கூடிய போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சி யின் சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரும், மேல் மாகாண ஆளுநரு மான அலவி மெளலானா நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள வரு டாந்த பொதுக் கூட்டத்திற்கான நிக ழ்ச்சி நிரல் தயாரிப்பது தொடர்பாக ஆராய்வதற்கென கூட்டப்பட்ட இந்த மத்திய குழுக் கூட்டத்தின் போது பல்வேறு அரசியல், முக்கிய விடய ங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அரசாங் கம் அடுத்தடுத்து அமோக வெற்றி யீட்டியதையடுத்து அலரி மாளிகை யில் முதற்தடவையாக இந்த மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளதால் இம்முறை பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் நாட்டினதும், மக்களி னதும் நலனை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு உட்பட பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வுள்ளது.

அரசியலமைப்பு மாற்றங்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள், பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன் வைக்கவுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்ட த்தின் போது விரிவாக ஆராயப்பட் டதுடன் அதற்கான அங்கீகாரத்தை யும் மத்திய குழு வழங்கியதாக ஆளுநர் அலவி மெளலானா குறிப் பிட்டார்.

அரசியலமைப்பு மாற்றங்கள், மறு சீரமைப்புக்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக 7 ஆம் திகதி நடை பெறவுள்ள வருடாந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என் றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அரசாங்க ஊழிய ர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாகப் பேசப்பட்டதாக தெரி வித்த அவர் இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு அடுத்து முன் வைக்கப்படவுள்ள வரவு - செலவு திட்டத்தில் சேர்த்துக் கொள்வத ற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த அதிமுக ஆட்சி, பழைய செயலகத்தில்'

ஜெயலலிதா
அதிமுக ஆட்சி புனித ஜார்ஜ் கோட்டையில்தான் -- ஜெயலலிதா
அதிமுக மீண்டும் அடுத்து வரும் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தால், அரசு, பழைய தலைமைச் செயலகத்தில்தான் இயங்கும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்து அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்போது, புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் அதன் அரசு அமையாது என்றும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையில்தான் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
'பழைய கோட்டையில்தான் ஆட்சி'

இன்று மாலை சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா, இதைத் தெரிவித்தார்.

இதன் மூலம், அதிமுக ஆட்சிக்கு வந்தால், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பயன்படுத்தாது என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தமிழக அரசியலில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்சியிலிருந்து மூத்த பிரமுகர்கள் சிலர் திமுகவில் சேர்வது பற்றி அவர் பேசும்போது, கட்சியை விட்டுப் போன தலைவர்ளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தொண்டர்களை மையமாகக் கொண்ட கட்சி அதிமுக என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சிக்கும், யாழ் மாவட்டம் சுன்னாகத்துக்கும் மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

இந்த இரு நகரங்களுக்கும், தேசிய மின்வழங்கல் வலைப்பின்னல் ஊடாக அதிசக்தி வாய்ந்த 132 கிலோ வோட்ஸ் மின்சாரம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் இன்று கிளிநொச்சி நகரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 132 கிலோ வாட்ஸ் சக்தியுள்ள மின்சாரம் கிளிநொச்சியில் அமையவுள்ள மின் விநியோக நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள மின்விநியோக நிலையத்திற்கும் கிடைக்கும் என்றும், அந்த நிலையங்களில் இருந்து 33 கிலோ வோட்ஸ் மின்சாரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கும், யாழ் குடாநாட்டிற்கும் வழங்கப்படும் என்றும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு வருடங்களில் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது வவுனியாவில் உள்ள மின்வழங்கல் நிலையத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிக்கும் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை, மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவு நகரத்திற்கு மின்விநியோகம் வழங்குவதற்கான இணைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மின்பிறப்பாக்கிகள் ஜெனரேற்றக்கள் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கிளிநொச்சி வைபவத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள், இந்த மின்விநியோகத் திட்டத்திற்கு ஜப்பானிய அரசும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதியுதவி வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றி வருகின்ற அதேவேளை, வடக்கிற்கு முழுமையான மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. இதேபோன்று வீதிகளை அமைத்தல், சுகாதார வசதிகள், பாடசாலைகளை ஆரம்பித்தல், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...