18 அக்டோபர், 2010

தமிழ் மக்கள் பிரச்சினை தேசிய அரங்கிற்கு வர வேண்டும் : மனோ கணேசன்

தமிழ்ப் பேசும் மக்களது தேசிய பிரச்சினைகள் தேசிய அரங்கிற்குக் கொண்டு வரப்படவேண்டியது இன்றைய வரலாற்றுக் கடமையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"போர் முடிவுற்ற இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் தேசிய அரசியல் மற்றும் உடனடி நாளாந்த பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஆனால் இப்பிரச்சினைகளை பின்தள்ளிவிட்டு அரசாங்கமும், பிரதான எதிர்க்கட்சிகளும் செயற்படுகின்றன.

இந்நோக்கத்திற்கான புதியதோர் அரசியல் களத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தென்னிலங்கையின் முற்போக்கு அமைப்புகளுடன் தீவிரமாகக் கலந்து ஆலோசித்து வருகிறது.

அரசாங்கத்தைச் சார்ந்த தமிழ் அமைச்சர்களும் அரசுடன் புதிதாக சங்கமித்துள்ள தமிழ் எம்பிக்களும் அரசாங்கம் வரையறை செய்துள்ள வட்டத்திற்குள்ளேயே செயற்படுகின்றார்கள்.

அரசின் நிகழ்ச்சி நிரலுடன் இவர்களால் ஒருபோதும் முரண்பட முடியாது. அதேவேளை, ஐதேக, ஜேவிபி ஆகிய எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகா கைது, 18ஆவது திருத்தம் ஆகிய விவகாரங்களை விட்டு, வெளியில் வருவதாகத் தெரியவில்லை.

தமிழர் பிரச்சினை

13ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை, மீள் குடியேற்றம், வடக்கு,கிழக்கிலும், கொழும்பிலும் காணாமல்போன ஆயிரக்கணக்கானோர் தொடர்பிலான பிரச்சினை, சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் விவகாரம், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வும்,-

அவர்கள் தொடர்பிலான வெளிப்படையற்ற தன்மையும், தொடர்ச்சியாக வறுமை கோட்டிற்கு கீழேயே திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கும் தமிழ் தோட்டத்தொழிலாளர் விவகாரம், பெருந்தோட்டப் பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் இனவெறி தாக்குதல்கள் ஆகிய பிரச்சினைகள் தேசிய அரங்கிற்கு கொண்டுவரப்படவேண்டும்.

இவற்றை உதாசீனம் செய்துவிட்டு அரசாங்கமும், பிரதான எதிர்கட்சிகளும் பெரும்பான்மை மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் கவனத்தில் கொள்ளும் நிலைமை மாற்றப்படவேண்டும்.

சரத் பொன்சேகா மற்றும் 18ஆம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம், சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஆகிய அமைப்பு ரீதியான போராட்டங்களில் பங்குபற்றும் அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேசிய அரங்கிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

புதியதோர் அமைப்பு ரீதியான அரசியல் களத்தை ஏற்படுத்துவற்காகத் தென்னிலங்கை இடதுசாரி கட்சிகள், மலையக மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் கருத்து பறிமாற்றங்கள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வெற்றுக் காணிகள் உறவினருக்கு விநியோகம் : எள்ளுப்பிட்டி மக்கள்

மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் மீள்குடியேறியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள வெற்றுக்காணிகளை அங்கு மீள் குடியேறியுள்ள அரச அதிகாரி ஒருவர், அவருடைய உறவினர்களுக்கு எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முசலிப் பிரதேசச் செயலகத்தில் கணக்காளராகக் கடமையாற்றும் நபர் அங்கு மீள்குடியெறியுள்ள நிலையில், மக்கள் மீள்குடியேறாத காணிகளை சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கிராம மக்கள் குறித்த நபரிடம் கேட்ட போது, தன்னிடம் இது தொடர்பாக யாரும் கேட்கக் கூடாது எனத் தெரிவித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, மாந்தை எள்ளுப்பிட்டிக் கிராம சேவகரிடம் கேட்ட போது, இது உண்மைதான் என்றும் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கில் சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிக்க கால அவகாசம் நீடிப்புகிழக்கு மாகாணத்தில் சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலக் கெடு இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போர் தமது வணக்கஸ்தலங்களூடாக அவற்றைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க முடியும்.

இதனை இறுதிச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்காவிடின், சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடுகளில் புலிகளின் நடவடிக்கை தொடர்கிறது : ஜீ.எல். பீரிஸ்இலங்கையில் புலிகள் தரப்பினரால் மீண்டும் தமது அமைப்பைக் கட்டியெழுப்பவோ தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாது.

ஆனால் வெளிநாடுகளில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன" என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் பாதசாரிகள் பாதிப்பு

மன்னாரின் பல வீதிகளில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் இதனால் விபத்துக்களும் இடம்பெற்று வருவதாகவும் பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

தனியார் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வீதிகளுக்கும் வீடுகளுக்கும் அருகிலும் முன்பாகவும் நிறுத்தி வைக்கின்றனர்.

இதனால் பிறிதொரு வாகனத்தில் அவ்வழியால் பயணிப்பவர்களும் நடந்து செல்பவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகப் பாதசாரிகள் தெரிவிக்கினறனர்.

குறிப்பாக முர்வீதி, பெரியகடை, வைத்தியசாலை வீதி, எமிழ் நகர் - சாந்திபுரம் பிரதான வீதி ஆகியன, வாகன போக்குவரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் வாகனத் தறிப்பு இடமாக மாறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் வைத்தியசாலை வாகனம் வவுனியாவில் விபத்து

வவுனியா செட்டிக்குளம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் பயணித்த வாகனமே வவுனியா செட்டிகுளம் பொது வைத்தியசாலை நூழைவாயிலுக்கருகில் வைத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இடம்பெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக மன்னாரிலிருந்து பயணித்த வேளை,செட்டிகுளம் பகுதியில் வைத்து குறித்த 'கெப்' ரக வாகனம் விபத்திற்குள்ளானதென அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

வாகனம் அதிவேகமாகப் பயணித்தமையே விபத்து இடம்பெறக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்.டி.எச்.எஸ். எனப்படும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மன்னார் வைத்திய அதிகாரி காயங்கள் ஏதுமின்றி தப்பிக்க, சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகளுடன் வரும் 2ஆவது படகின்மீது கனடா கண்காணிப்பு

இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது படகை அந்நாட்டு அரசாங்கம் கண்காணித்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளுடன் இணைந்து கனேடிய அரசாங்கம் செயலாற்றி வருவதாகவும் அவற்றைத் தடுக்கும் வகையில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாய்லாந்திலிருந்து கனடாவுக்குப் பயணிக்கவிருந்த 155 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடைச் சிறையிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலை பெண்கள் பிரிவிலிருந்து ஏராளமான ஆயுதங்கள், சட்ட விரோத பொருட்கள், சிம் கார்ட் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் சற்று முன்னர் தெரிவித்தன.

இவை தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ.எல். பீரிஸ் இன்று பிரிட்டன் பயணம்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரிட்டன் பயணமாகின்றார். பிரிட்டனில் புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் பேராசிரியர் ஜீ“.எல். பீரிஸ் அங்கு முதல்தடவையாக விஜயம் செய்கின்றார் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விஜயத்தின்போது ஜீ.எல்.பீரிஸ் பிரிட்டனின் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் மற்றும் வில்லியம் ஹோக் உள்ளிட்ட பலரரையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் பிரிட்டனுக்கான விஜயத்தின்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மாவையும் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

புகலிடம் கோருவோர் விடயத்தில் ஆஸி.கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்:பாதுகாப்புச் செயலாளர்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரை கையாளும் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

புகலிடம் கொடுப்பதை நிறுத்தும் பட்சத்தில், இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளிவைப்பது மேலும் இலகுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் “ த அவுஸ்திரேலியன்" பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலர் இவ்வாறு கூறியுள்ளார். அப்பத்திரிகைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடற்படையினரும் பொலிஸாரும் கடற்பரப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியதன் மூலம், புகலிடம் கோருவோரின் படகுகள் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்வதைத் தடுத்துள்ளனர். அண்மைக்காலத்தில் புகலிடம் கோரும் நோக்கில் எவரும் இலங்கையில் இருந்து படகுமூலம் சென்றதான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.

இப்போது, அவ்வாறானவர்கள் மூன்றாவது நாடொன்றுக்கு விமானம் மூலம் பயணம் செய்து, அங்கிருந்தே புறப்பட்டுச் செல்கிறார்கள்.புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதகான காரணம் எதுவுமில்லை. எந்தவொரு அச்சத்தின் காரணமாகவும் எவரும் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கான காரணம் இல்லை. அவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசிப்பதற்கு சுதந்திரம் உள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் சில குழுக்கள் வேறு அடிப்படைகளில் போராட்டத்தை முன்னெடுக்க முற்படுவது எமக்குத் தெரியும். அவர்கள் வெளிநாடுகளில் மீளஅணிதிரளக்கூடும்.எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு, தனது புலனாய்வுத்துறையை பயன்படுத்தும் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கமானது மிகக் கவனமாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பு விசேட அறிக்கை தயாரிப்பு

அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட அறிக்கையொன்றினை தயாரித்துள்ளது. நேற்று முன்தினம் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்த அறிக்கையினை தயாரித்துள்ளன.

அடுத்த வாரம் அளவில் இந்த அறிக்கை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் கொழும்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி ரிட்ரீட் அவனியூவில் நேற்றுக்காலை புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி.க்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம். சரவணபவான், எம்.ஏ. சுமந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிய அலுவலகத்தில் நேற்று கூட்டமைப்பின் செயற்குழு கூட்டமும் இடம் பெற்றது. இதில் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு:ஹீனதியனவில் சம்பவம்

கட்டுநாயக்க ஹீனதியன பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர் சிரில் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் பதற்றநிலை தொடர்வதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொதுநலவாய நாடுகளின் பிரிட்டிஷ் எம்.பிக்கள் தூதுக்குழு இலங்கை விஜயம்


பொதுநலவாய நாடுகளின் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவொன்று நேற்று இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர். இக்காலப் பகுதியினுள் நாட்டின் முக்கிய பல தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவரெனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இத்தூதுக்குழு நாளை (19) செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை

கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார்.

இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஒழுக்கம், சட்டம் பேணப்படுவது அவசியம்


தென் மாகாண அபிவிருத்தி செயற்பாட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதிநாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில்ஒழுக்கம், சட்டம் பேணப்படுவது அவசியம்
தென் மாகாண அபிவிருத்தி செயற்பாட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி


அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது மக்கள் அதிக பலன் பெறும் வகையிலும் வீண் நிதி விரயங்களைத் தவிர்க்கும் வகையிலும் செயற்படுவது சகல அதிகாரிகளினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சட்ட விரோத நிர்மாணப் பணிகளைத் தடுப்பதில் கண்டிப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, கூட்டுச் சட்டத்தை நிலைநாட்ட இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத் தினார். அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் உயர் மட்ட அதிகாரிகள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகளுக்கருகில் சட்ட விரோத நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதாலேயே அதிகமான வீதி விபத்துக்கள் ஏற்பட்டு பெறுமதிவாய்ந்த மனித உயிர்களையும் இழக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெலிகமவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென் மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தென் மாகாண சபை அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, ராஜித சேனாரத்ன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “நாட்டைக் கட்டியெழுப்பும்போது ஒழுக்கமும், சட்டமும் முன்னிலைப்படுத்தப்படும் வகையில் சகலரும் செயற்பட வேண்டியது அவசியம். உயர் கல்வி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து நான் பெருமையடைகிறேன். இதன்போது பொலிஸார் பலர் காயங்களுக்குள்ளாகினர்.

எனினும், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸாரின் அர்ப்பணிப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். பொலிஸ் மா அதிபரினால் மட்டும் இதனை மேற்கொள்ள முடியாது. சகல துறையினரும் அத்துடன் பொது மக்களும் இந்நடவடிக்கைகளில் பூரண பங்களிப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது மக்கள் அதிக பலன் பெறும் வகையிலும் வீண் நிதி விரயங்களைத் தவிர்க்கும் வகையிலும் செயற்படுவது சகல அதிகாரிகளினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சட்ட விரோத நிர்மாணப் பணிகளைத் தடுப்பதில் கண்டிப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, கூட்டுச் சட்டத்தை நிலைநாட்ட இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத் தினார். அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் உயர் மட்ட அதிகாரிகள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகளுக்கருகில் சட்ட விரோத நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதாலேயே அதிகமான வீதி விபத்துக்கள் ஏற்பட்டு பெறுமதிவாய்ந்த மனித உயிர்களையும் இழக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெலிகமவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென் மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தென் மாகாண சபை அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, ராஜித சேனாரத்ன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “நாட்டைக் கட்டியெழுப்பும்போது ஒழுக்கமும், சட்டமும் முன்னிலைப்படுத்தப்படும் வகையில் சகலரும் செயற்பட வேண்டியது அவசியம். உயர் கல்வி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து நான் பெருமையடைகிறேன். இதன்போது பொலிஸார் பலர் காயங்களுக்குள்ளாகினர்.

எனினும், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸாரின் அர்ப்பணிப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். பொலிஸ் மா அதிபரினால் மட்டும் இதனை மேற்கொள்ள முடியாது. சகல துறையினரும் அத்துடன் பொது மக்களும் இந்நடவடிக்கைகளில் பூரண பங்களிப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

போலிமருந்துகள் கடத்தலுக்கு விரைவில் தீர்வு; சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை


சட்டவிரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்றுக்காலை ‘போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க மருந்தக சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை மருந்துகள் உற்பத்தி சங்கத்தின் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகின் பிரதான வியாபார மோசடியை எடுத்துக் கொண்டால் அதில் பிரதானமானது ஆயுதக் கடத்தல். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மருந்துக் கடத்தல் ஆகும். இதனை நாட்டினுள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அதனை ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இக்குழுக்களின் உறுப்பினர்களுள் பலர் நேர்மையான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்த போதிலும் சிலர் சட்டவிரோத மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் எமக்கு கையும் மெய்யுமாக கிடைத்துள்ளன. இச்செயற்பாடுகளுடன் அரச அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்துக்கு பதில் கூறியே ஆகவேண்டும். சுகாதார அமைச்சரென்ற வகையில் தொடர்ந்தும் நாட்டில் போலி மருந்து மாபியா நடப்பதற்கு என்னால் இடம் வழங்க முடியாது. இதற்கெதிராக மிக விரைவில் நடவடிக்கையெடுப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டியில் 9336 மில். ரூபா செலவில் குடிநீர்த் திட்டம் பிரதமரால் நேற்று அங்குரார்ப்பணம்


டென்மார்க் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்டியில் 9336 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் விநியோகத் திட்டத்தை பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கண்டி தெற்கு பிரதேச மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்குத் தீர்வாக மேற்படி நீர்வழங்கல் திட்டம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தின் மூலம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 3,83,500ற்கும் அதிகமான மக்கள் நன்மையடைய வுள்ளனர்.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு மேற்படி நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படு த்தியுள்ளதுடன் இதற்கென டென்மார்க் அரசாங்கம் 6577 மில்லியன் ரூபாவை நிதியுதவி யாக வழங்கியுள்ளது.

கண்டி தெற்கு யட்டிநுவர, உடுநுவர, கோறளே, யக்கரன்கொ ட்டுவ, கம்பளை நாவலப்பிட்டி ரண்மல்கடுவ, கம்பொல வெல உட்பட பத்துக்கு மேற்பட்ட பிரதேச மக்கள் இதன் மூலம் நன்மையடைய வுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

போதைப்பொருளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி நாடெங்கும் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பணிப்பு


போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு விசேட நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரிய நேற்று பணிப்புரை விடுத்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் கள், பிரதேசங்களுக்குப் பொறுப் பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 425 பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டு மேற்படி விசேட வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போதே பொலிஸ் மா அதிபர் மேற்படி பணிப்பை விடுத்தார். கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த உயர் மட்ட மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான என். கே. இளங்ககோன், காமினி நவரட்ண, கே. பி. பி. பத்திரண, கொழும்பு பிராந் தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச். எம். டி. ஹேரத் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நாட்டிலுள்ள 12 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வழிகாட்டலில் 35 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது.

நாட்டிலுள்ள 39 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் மூலம் 425 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக இந்த விசேட திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. நாட்டில் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் வெகு விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினது ஆலோசனையின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களம் விசேட வேலைத்திட்டங்களை தீட்டியுள்ளது.

24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு விசேட பொலிஸ் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை தரும் லேகியம் போன்ற போதைப் பொருளின் பாவனைகளே இலங்கையில் அதிகம் காணப்படுகின்றன.

போதைப் பொருள் பாவிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு எதுவித பாரபட்சமும் இன்றி இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களும் சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் முற்றுகையிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை வெற்றியடைய குறுகிய காலத்தில் சிறந்த பெறுபேறுகளை காண பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

சுமார் ஒருவார காலத்தில் உயர் அதிகாரிகளுடன் இது போன்ற சந்திப்பை ஏற்படுத்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாதாந்தம் இந்த திட்ட நடைமுறை தொடர்பாக மீளாய்வுகள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...