20 டிசம்பர், 2010

மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய்: இங்கிலாந்தில் சம்பவம்

தாய் ஒருவர் மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜெரோம் நெக்னே. அவரது மனைவி ஷாய்னா பரூச்சி (35) சோமாலியாவை சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்.

இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் 4 வயது மகளை திடீரென காணவில்லை.

இதற்கிடையே அவரது வீட்டு சமையலறையில் இருந்து ரத்தத் தோய்ந்த மிக நீள மான கத்தியை அவரது ஏனைய குழந்தைகள் கண்டெடுத்தனர். இது குறித்து தாயார் பரூச்சியிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தனது 4 வயது மகளை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவளது இருதயத்தை வெட்டி எடுத்து சமையலறையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுதவிர அவளது மற்ற உடல் உறுப்புகளையும் துண்டு துண்டாக வெட்டி தனது வீடு முழுவதும் ஆங்காங்கே வைத்து இருந்தாள். வயிற்றைகிழித்து குடலை எடுத்து அவளது உடலை வீட்டின் அருகே வீசியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பரூச்சியின் குடும்பத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் விரைந்து வந்து அவளை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் தனது மகளை பலி கொடுத்து உடலை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததாக அவர் கூறினார்.

முன்னதாக தனது வீட்டில் மத சம்பந்தப்பட்ட படத்தை பார்த்து அதன் பிறகே இந்த கொலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

காத்தான்குடியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது







காத்தான்குடி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்;ளதுடன் அவரிடமிருந்த பெருமளவிலான கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றிரவு காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்தனவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் குழுவொன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவின் காங்கேயனோடை கிராமத்திலுள்ள ஒருவரின் வீட்டில் நடாத்திய சோதணை நடவடிக்கையில் ஒருகிலோ 535 கிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கைது செய்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஓர் ஆண்டு நினைவஞ்சலி….

ஓர் ண்டு நினைவஞ்சலி



அன்னார் திரு . வைத்திலிங்கம் நவரத்தினம்



உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவில் அடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அன்னார் திரு . வைத்திலிங்கம் நவரத்தினம்
அவர்களின்ஓர் ஆண்டு நினைவஞ்சலி . அன்னார், திரு.திருமதி.வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் , திருமதி.தங்கரத்தினத்தின் அன்புக் கணவரும் , அமரர் இராயநாயகம் .செல்வநாயகம் இலங்கை , பாஸ்கரன் ,மனோகரன் , நவசீலன் ,நாகேஸ்வரன் , பிரபாலினி , (ஜேர்மனி )நாகேஸ்வரி ,நந்திர பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் ஓர் ஆண்டு நினைவஞ்சலி எதிர் வரும் 21.12.2010 அன்று அன்னாரி இல்லத்தில் நடைபெறும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கும் வன்னம் கேட்டுகொள்கின்றோம்..
தகவல் : மனைவி மற்றும் பிள்ளைகள்
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு



திருகோணமலை மாவட்டம் கின்னியா பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட கல்லறப்பு பகுதியில் ஒருதொகை ஆயுதங்கள் சீனக்குடா பொலிஸாரினால் நேற்று இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

சீனாக்குடா பொலிஸ் பிரிவின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் உதவி பரிசோதகரின் தகவாளிக்கு கிடைத்த தகவலையடுத்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் கிளைமோர் கண்ணிவெடிகள் 3, மதிவெடிகள் 5, பெச்சினேட்டர் 86, சி.எப் ரக வெடிமருந்து ஒரு கிலோ 800 கிராம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாயுதங்கள் மாவிலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தவை என சந்தேகிக்கப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவினரும் அதன் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி காலி பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகளை ஆராயவுள்ளதுடன் அவர்களின் விடுவிப்பு தொடர்பான சாத்தியங்களை ஆராயவுள்ளதாகவும் அதிகாரி மேலும் கூறினார்.

அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் வெளிமாவட்டங்களில் நடத்தப்பட்டபோது தாம் அனைத்து தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஏழாம் திகதி முதல் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளை புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, குறிப்பிட்ட மாவட்டங்களின் அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் நடைபெறும் அமர்வுகளில் பொது மக்கள் கலந்துகொண்டு சாட்சியங்களை அளிக்கமுடியும். பொது மக்கள் பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகவோ தங்கள் சாட்சியங்களை அளிக்கமுடியும் என ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டார். ஏழாம் திகதி முதல் நான்கு தினங்களுக்கு இப்பகுதிகளில் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது புத்தளம் மாவட்டத்தில் வசிக்கின்ற முஸ்லிம் மக்களும் ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளில் சாட்சியமளிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நடைபெற்றுள்ளன.

மேலும் கொழும்பில் நடைபெற்றுவரும் ஆணைக்குழுவின் அமர்வுகளில் பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சாட்சியமளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை வரும் ஐ.நா. நிபுணர்களின் குழு எமக்கு எதிராக செயற்பட்டால் உடன் வெளியேற்ற வேண்டும்: ஹெல உறுமய


இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிர்ப்பை வெளியிடுவது "கோமாளி'த்தனமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

இங்கு வரும் ஐ.நா நிபுணர் குழு எமக்கு எதிராக செயற்பாடுகளை மேற்கொண்டால் உடனடியாக அவர்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுடன் நட்புறவோடு செயற்பட ஐ.நா.வோ அல்லது உலக நாடுகள் தயாரென்றால் நாமும் நட்புறவுக்கரங்களை நீட்ட வேண்டும். ஐ.நா. குழு நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முன்வருவதை வரவேற்கின்றோம். எனவே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதென்பது கோமாளித்தனமாகும்.

ஆனால் ஐ.நா. குழு எமது குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் எமக்கெதிரான கருத்துக்களையும் வெளியிட முனையுமானால் அதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறானதொரு நிலைமையில் இக் குழுவை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் புதியதொரு பிரச்சினையை உருவாக்க இடமளிக்கலாகாது. எமக்கு எதிராகவே இக்குழு அமைக்கப்பட்டது. எனவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

திடமான நம்பிக்கை இருப்பின் நிபுணர்கள் குழு வருகை குறித்து அரசு அச்சப்படத் தேவையில்லை: த.தே.கூ

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்ற திடமான நம்பிக்கை அரசாங்கத்திடம் இருக்குமானால் ஐ.நா நிபுணர்கள் குழு தொடர்பில் கலவரமடையவோ அல்லது அச்சமடையவோ தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றமை சந்தேகங்களை கிளப்பிவிடுகின்ற அதேவேளை ஐ.நா.வையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுகின்ற நிலைப்பாடாகவுமே இதனை நோக்க வேண்டியுள்ளது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பினையடுத்து நிபுணர்கள் குழு கற்றறிந்த பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ள அதேவேளை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ள அதேவேளை அதன் வருகையைத் தடுப்பதற்கு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேசமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இலங்கையில் மூக்கை நுழைக்கும் அளவுக்கு இங்கு பாரிய மனித உரிமை மீறல்கள் எதுவும் நடந்துவிடவில்லை என்று முன்னர் அறிவித்திருந்த அரசாங்கம் எந்தத் தரப்பினரும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க முடியும் என்றும் அண்மையில் அறிவித்திருந்தது.

அரசாங்கம் அறிவித்து வருகின்றதைப் போல் இங்கு எந்தவிதமான மனித உரிமை மீறல்களுமே இடம்பெற்றிருக்கவில்லையென்றால் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் எவரும் எந்தத் தரப்பும் சாட்சியமளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருந்தால் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் மற்றும் சாட்சியம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஒரு புறத்தில் அரசாங்கம் நிபுணர்கள் குழுவின் வருகைக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் சிவப்புக் கொடியும் காட்டப்படுவதானது சந்தேகங்களை கிளப்புகின்றன. அதாவது இவ்விடயத்தில் அரசாங்கத்திடம் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதே இதற்குக் காரணமாக அமைகின்றது.

இங்கு குற்றங்கள் இழைக்கப்படவில்லை. மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை, சட்டவிரோதங்கள் இடம்பெறவில்லை என்ற திடமான நம்பிக்கை அரசுக்கு இருக்குமானால் திறந்த மனதுடன் வெளிப்படைத் தன்மையுடன் நிபுணர்கள் குழுவின் வருகையை நோக்க முடியும். இதற்கு எழுகின்ற எதிர்ப்புக்கள் நன்மைகளை உருவாக்கப் போவதில்லை என்பது திண்ணமாகும். அத்துடன் இலங்கையில் நல்லிணக்கம் சாந்தி, சமாதானம், நல்லாட்சி என்பதும் இந்த எதிர்ப்புக்களால் கேள்விக்குறியாகவே அமையும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய பாராளுமன்றம் புலி ஆதரவாளரின் களம் : அரசாங்கம்




இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு அப்பாராளுமன்றம் அனுமதியளிக்கிறது என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பர்க் ஆகியற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியவன்ஸ இது தொடர்பாக கூறுகையில் கடந்த வாரம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக பரிமாறப்பட்ட கருத்துக்களுக்கு இலங்கை பதிலளிப்பதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

"அவ்வேளையில் தலைமை தாங்கிய அதிகாரி இந்த நிராகரிப்பை மேற்கொண்டதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான உப குழு இலங்கை விவகாரத்தில் நியாயமான சமத்துவமான கலந்துரையாடலை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை அத்துடன் எல்.ரி.ரி.ஈ. (LTTE)ஆதரவாளர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு இப்பாராளுமன்றம் அனுமதியளிக்கிறது என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது' என அவர் கூறியுள்ளார்.

மேற்படி மனித உரிமைகள் உபகுழுவின் தலைவி ஹெய்டி ஹெதாலாவுக்கு இலங்கைத் தூதுவர் ஆரியவன்ஸ அனுப்பியுள்ள கடிதமொன்றில் 'டிசெம்பர் 6 ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு மணித்தியால கலந்துரையாடல் நடத்தப்பட்டது. உபகுழுவிலுள்ள 32 எம்.பிக்களில் ஒருவர் மாத்திரமே பேசினார். ஐரோப்பிய ஆணைக்குழுவினால் ஒருசில கருத்துகள் தெரிவிக்கப்பட்டதைத் தவிர பெரும்பாலான நேரம் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன' என சுட்டிக்காட்டிள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையிலிருந்து லண்டனுக்கான விமான சேவைகள் யாவும் ரத்து




மோசமான பனிப்பொழிவு காரணமாக லண்டன் ஹீத்துறூ விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஹீத்துறூ விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

பனிப்பொழிவு கட்டுப்பாட்டுக்குள் வந்து ஹீத்துறு விமான நிலையம் திறக்கப்பட்டதும் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து ஹீத்துறூ விமானநிலையம் பயணிக்கும் பயணிகள் தம்முடன் தொடர்பில் இருக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், 0197335555 அல்லது 0197332377 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தம்மைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

ஹீத்துறூ விமான நிலையம் திறக்கப்பட்டதும் பயணிகள் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனி; சுவீடன் - பிரிட்டன் விமான நிலையங்கள் பூட்டு பயணிகள் நிர்க்கதி: கிறிஸ்மஸ் பண்டிகை களையிழப்பு


பிரிட்டிஷ், ஜேர்மன், சுவீடன் போன்ற நாடுகளில் பெய்யும் கடுமையான பனியால் அங்கு இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விசேடமாக விமான சேவைகள் அனைத்தையும் இந்நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

நெடுஞ்சாலைகளிலும் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால் தரைமார்க்கமான போக்குவரத்துகளும் ஸ்தம்பித்தன. பாடசாலைகள் வைத்தியசாலைகள், அரச, தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் மிக விசேடமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பிரிட்டன் தனது உள், வெளிநாட்டு விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியது. பிரிட்டனின் வட பகுதி ஸ்கொட்லாண்ட் என்பன மிகமோசமான பனிப்பொழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இருபது சென்ரிமீற்றர் பனி பொழிந்ததாக அறிவிக்கப்பட்டது. விமான சேவைகள் திடீரென இடைநிறுத்தப்பட்டதால் அதிகளவான பயணிகள் வீதியோரங்களிலும் விமான ஓடுபாதைகளிலும் இரவுகளைக் கழித்தனர்.

பெண்கள் கர்ப்பிணித்தாய்மார்கள் சிறுவர்கள் விபரிக்கமுடியாத அசெளகரியங்களை எதிர்கொண்டனர். இது குறித்து விமான நிலைய உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப் பட்டபோதும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பல விளையாட்டு போட்டிகளும் ரத்துச் செய்யப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

சீரான பாதையில் இலங்கை; பொருளாதாரத்தில் சாதனை மிகு வளர்ச்சி


கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை யின் பொருளாதாரம் தொடர்பாக உறுதி யான நோக்கு அல்லது நிலையான செயற்பாடு இல்லாதிருந்த போதிலும் தற்போது இலங்கையின் பொருளாதாரத்தை சீரான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு தொடர்பான பொருளாதார செயற்பாடுகள் தொடர் பாக கருத்துத் தெரி விக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக் களத் தினால் 2010 ஆம் ஆண்டில் மூன் றாவது காலாண்டு தொடர்பான புள்ளி விபர அறிக்கை வெளியிடப்பட்டது.

அதற்கேற்ப மூன்றாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8 சதவீதத்தினால் வளர்ச்சி யடைந்துள்ளது. இது இலங்கை ஒரு காலாண்டுப் பகுதியில் பெற்ற இரண்டாவது அதிகூடிய வளர்ச்சி வீதமாகும்.

இது தொடர்பாக மேலும் கருத்து கூறிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் குறிப்பிட்டதாவது,

கடந்த வருடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.5 சத வீதத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டி ருந்தது. எனினும் இந்த வருடம் முதல் காலாண்டுப் பகுதி யில் 7.6 சதவீதமும் இரண்டாவது காலா ண்டில் 8.5 சதவீதமும் மூன்றாவது காலாண் டில் 8 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அனைத்து காலா ண்டு பகுதிகளிலும் வளர்ச்சி மட்டம் நாம் வருடத்தின் ஆரம் பத்தில் மதிப்பிட்ட இலக்குக்கு மேலாக இருந்தது. வருட ஆரம்பத்தில் நாம் 6.5 சதவீத வளர்ச்சியை இந்த வருடம் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்தோம். எனி னும் இவ்வருடம் 8 சதவீதத்துக்கு கிட்டிய வளர்ச்சியை பெற முடியும் என தெரிகிறது.

இந்த வளர்ச்சி பொருளாதாரத்தின் ஒரு பிரிவுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. யுத்தத்துக்கு பின்னர் எமது பொருளாதார அபிவிருத்தி நாட்டின் அனைத்து பிரிவு களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விவசாய பிரிவு 6.2 சதவீதத்தாலும் கைத்தொழில் பிரிவு 8.8 சதவீதத்தாலும் சேவைகள் பிரிவு 8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

நாட்டின் வயற் காணிகள் முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிரதேசங்களிலும் புதிய கட்ட டங்கள் நிர்மாணிக்கப்படுவதை காண முடிகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி மட்டம் உயர்ந்துள்ளது.

முதலீடுகள் பாரிய வகையில் அதிகரித்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ் வருடத்தில் சரித்திரத்தில் இல்லாதவாறு அதிகரித்து வருகிறது. மஹிந்த சிந்தனையின் படி இலங்கையை ஆசியாவின் புதுமையாக மாற்றும் நோக்கத்தை எட்டும் அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் கடந்த காலத்தில் ஆரம்பித்த பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது நிறைவேற்றப்படும் நிலையில் உள்ளன. துறைமுகங்கள், விமான நிலையம், நீர்ப் பாசனம், மின்சாரம், பெருந்தெருக்கள் தொடர்பான பல திட்டங்கள் அடுத்த வரு டத்தில் முழுமைபெறும். அதேபோல் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும் அதி கரித்து வருகின்றன. இவ்வாறான நிலை யில் 2011 இல் மிகவும் உயர்ந்த வளர்ச்சி மட்டத்தை எட்டமுடியும். அவ்வாறான நிலையை தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்க்கப் படுகிறது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாட்டிலேயே செயற்பாடு சுமந்திரன் எம்.பி

அரசியல்தீர்வு மற்றும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்திற்குப் பூரண அனுசரணை வழங்குவதென்ற நிலைப்பாட்டின் அடிப்படை யிலேயே செயற்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். இது தொடர்பாகத் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர். இனப்பிரச் சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உடனடிப் பிரச் சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசாங் கத்திற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தீர்மானித்தோம்.

இதற்கமைய நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக நாம் வாக்களிக்காது விட்டோம். இவ் விரண்டு முக்கிய விடயங்களிலும் அரசாங்கம் எம் மையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இவ்விடயத்தில் அரசாங்கம் கொள்கை யளவில் இணங்கிக் கொண்டுள்ளபோதும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையிலேயே நாம் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்து இன்னமும் முகாம்களில் உள்ள மக்களை நாம் சந்தித் துள்ளோம். கடந்த இரண்டு தினங்களாக மூதூர் பிரதேசத்தில் முகாம்களிலுள்ளவர்களை நாம் சந்தித்தோம்.

சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம் பெய ர்ந்துள்ள இம்மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று மீள்குடியேற வேண்டுமென்றே விரும்புகின்றனர். சம்பூரி லேயே நாம் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.

அதனைத் தவிர வேறு எந்த விடயத்திலும் எம்மைக் குடியமர்த்த வேண்டாம் என்று தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் வீடமைப்பு திட்டங்கள் நிறுத்தப்படவில்லை ‘சண்டே டைம்ஸ்’ செய்தி முற்றிலும் பொய்

வடக்கு, கிழக்கில் தொண்டர் நிறுவனங் களின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டிடங்களின் நிர்மாண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்தச் செய்தி முற்றிலும் தவறானதும் திரிபுபடுத்தப்பட்டதுமாகுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் எதிர்காலத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மேலாக சேதமுற்ற கட்டடங்களை புனர் நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

ஆனால், தீர்மானத்தின்படி தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய கட்டடத்திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அமைச்சின் சார்பில் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:

‘வடக்கு மற்றும் கிழக் கில் தொண்டர் நிறு வனங்களின் நிதி உதவியில் மேற் கொள்ளப்படும் புதிய கட்டடங்களின் நிர்மாண வேலை களை பசில் நிறுத்தியுள்ளார்’ என்ற தலைப்பில் நேற்று (19) ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் தவறானதும் திசை திருப்புவதுமாகும்.

அத்துடன் சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜெய்க்கா ஆகியவற்றுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முற்றிலும் தவறான செய்தியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் புதிய வீடமைப்பு திட்டங்களை நிறுத்த அல்லது அவற்றை குறைக்கும் எண்ணம் இருக்கவில்லை. இதன் காரணமாக அவற்றைப் பற்றி அமைச்சு விடுத்திருந்த சுற்று நிருபத்தில் வீடுகளைப் பற்றி எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.

எனவே, உலக வங்கியிடம் கடன் பெற்று இலங்கை அரசாங்கம் உருவாக்கி வரும் வீடுகளை அமைக்கும் திட்டமும் இந்திய அரசாங் கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 50 ஆயிரம் புதிய வீடுகளை அமைக்கும் மற்றும் 45 ஆயிரம் வீடுகளை திருத்தும் திட்டமும் இதில் ஏற்புடையதாகாது.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பெரும்பாலான புனரமைப்பு மற்றும் புனர்நிர்மாண திட்டங்கள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்க்கா ஆகிய நிதி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன்பெற்று அதன் மூலம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுபவையாகும்.

இவை நன்கொடையாக வழங்கப்படுபவை அல்ல. அந்தக் கடன்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியவை, எனவே, அந்த நிதி இலங்கையில் மோதலால் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைக்கேற்ற வகையில் முறையாக பயன்படுத்தப் படுகிறதா என்பதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்தாக வேண்டும்.

இந்த நிதி மிகவும் தேவைப்படும் உட்கட்டமைப்புகளுக்காக, குறிப்பாக இரணைமடு, அகத்திமுறிப்பு, அக்கரா யன்குளம் போன்ற பாரிய நீர்ப்பாசன குளங்கள், மாகாண மற்றும் கிராமப்புற வீதிகள், மின்சார விநியோகம், நீர் வழங் கல் திட்டங்கள், சேதமுற்ற பாடசாலைகளின் புனர்நிர்மாணம், ஆஸ்பத்திரிகள், கூட்டுறவு சங்க கட்டடங்கள், பசளை மற்றும் நெற் களஞ்சியங்கள் ஆகியவற்றுடன் விவசாயம், கால்நடை, மீன்பிடி மற்றும் குடிசைக் கைத்தொழில்களை சமூக மட்டத்தில் வாழ்வாதார திட்டங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.

வடக்கில் தற்போது பல நூற்றுக்கணக் கான கட்டடங்கள் ஓரளவு சேதமுற்ற நிலையில் உள்ளன. வடக்கில் சிவில் நிர்வாகத்தை பலப்படுத்த இந்த கட்ட டங்களை திருத்த வேண்டியது அவசிய மானவையாகும். எனினும், சில சந்தர்ப் பங்களில் சேதமுற்ற கட்டடங்களை புனர் நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்காது புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

எனவே, வடக்கில் மற்றும் கிழக்கில் எதிர்காலத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மேலாக சேதமுற்ற கட்டடங்களை புனர்நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால் மேற்படி தீர்மானத்தின் காரணமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டட திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...