30 டிசம்பர், 2009

பதிவுச்சான்று கோரவேண்டாமென
பொலிசாருக்கு கண்டிப்பான உத்தரவு
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அறிவிப்பு
அவசர அலுவல்களின் நிமித்தம் கொழும்புக்கு வருபவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தல்களை அனுப்புவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான நிமல் மெதிவக தெரிவித்தார்.

பதிவுநீக்கம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதிப் பொலிஸ் மாஅதிபர், ஒருமாதம் வரையிலான குறுகிய காலம் கொழும்பில் தங்கியிருப்பதற்குப் பொலிஸில் பதியவேண்டுமென்ற நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு அமைய, அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

முன்பு, மலையக இளைஞர், யுவதிகள் கொழும்புக்கு வருவதற்குப் பொலிஸ் பதிவு நீக்கப்பட வேண்டுமென மலையகக் கட்சிகள் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. அதன்பின்னர், அவசர அலுவல்கள் காரணமாகவோ, உறவினர், நண்பர்களைப் பார்ப்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கொழும்பில் வந்து தங்குபவர்கள் பொலிஸில் பதியவேண்டிய அவசியம் இல்லையென அரசாங்கம் அறிவித்தது.

ஆனால், சில பொலிஸ் நிலையங்களில் முறையான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி பொலிஸ் பதிவு கோரப்பட்டதாகத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. எனினும், இவை உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எனப் பொலிஸ் மாஅதிபர் மெதிவக தெரிவித்தார்.



2012 முதல் கொழும்பில் இருந்து பளை வரையிலான
ரயில் சேவைகள் மீள ஆரம்பிப்பு
இந்திய

அரசாங்கத்தின்

கத்தின் 140 மில்லியன் ரூபா கடனுதவியுடனும் ஓமந்தையில் இருந்து பளை ரையான 96 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகளை மீளமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார். இந்தியக் கம்பனியொன்றினூடாக ரயில் பாதைகள் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதுதொடர்பான ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் 30 மாதங்களில் ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதைகள் முழுமையாக நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பளையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளை சீன அரசின் உதவியுடன் முன்னெடுப்பது குறித்து பேச்சு நடத்தப்படும் எனவும் பொது முகாமையாளர் கூறினார்.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஓமந்தை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரை 28 ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலைய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணிகளுடன் இணைந்ததாக ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொது முகாமையாளர் கூறினார். ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பொறுப்புகளை அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனியார் துறையினர் பொறுப்பேற்றுள்ளனர். இதுதவிர வடக்கின் தோழன் திட்டத்தினூடாகவும் நிதி திரட்டப்படுகிறது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 4 ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, யாழ்தேவி, உத்தரதேவி ஆகிய பயணிகள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, ஒரு எரிபொருள் ரயிலும் ஒரு சரக்கு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ரயில்களை இந்தியாவில் இருந்து தருவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் கூறினார்.

பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் முழுமையாக நாசமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வட பகுதிக்கான ரயில் சேவைகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


யாழ்குடாவில் பாண் மற்றும் பெற்றோல் விலைகள் குறைப்பு

அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை குறைத்ததையடுத்து யாழ்குடாவில் பாண் மற்றும் பெற்றோல் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

பாண் விலைகள் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (30) முதல் பெற்றோல் விலைகள் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடபகுதிக்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த காலங்களில் யாழ்குடாவில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் தென்பகுதியiவிட அதிக விலைக்கே விற்கப்பட்டன. ஏ-9 பாதை திறக்கப்பட்டதையடுத்து யாழ்குடாவிலுள்ள மக்களுக்கு தென்பகுதி விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாகவும் அரச அதிபர் கூறினார்.

யாழ்குடாவில் ஒரு இறாத்தல் பாண் 43 ரூபாவுக்கு விற்கப்பட்டதோடு தற்பொழுது 36 ரூபாவுக்கு பாண் விற்கப்படுகிறது. இதுதவிர பாண் சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

யாழ்குடாவில் சகல பொருட்களும் தட்டுப்பாடின்றிக் காணப்படுவதாகவும் வடபகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திப் பொருட்கள் தென்பகுதிக்குத் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதப் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டதையடுத்து வடபகுதிக்கான போக்குவரத்துச் சேவைகள் தடையின்றி இடம்பெறுவதோடு யாழ் பகுதி மக்கள் ஏனைய பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் சென்றுவர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ-9 வீதி திறக்கப்பட்டதையடுத்து பெருமளவிலான தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக அரச அதிபர் குறிப்பிட்டார். இதனால் யாழ்ப்பாணத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கம் : உதய நாணயக்கார
Wind Mill

யாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார்..

இதுவரை காலமும் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்காட்சிகள் தேர்தல் பிரசாரம் நடத்த மட்டு. மாநகர முதல்வர் மறுப்பு


Sri Lanka Navy (SLN) vessels

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமர்று கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவூத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கு விண்ணப்பம் செய்திருந்த போதிலும்இ அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்" என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக சேகு தாவூத் பஷீர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
முல்லை. மறுவாழ்வுப் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி

No Image
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு இப்போது தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

அச்செய்தியில்இ

"மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.

அதேவேளைஇ போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட அரச செயலகம் சுமார் பதினைந்து மாதங்களின் பின்னர் அதன் சொந்த இடத்தில் செயற்படத் தொடங்கியிருக்கின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஏனைய அரச திணைக்களங்களும் அங்கு செயற்பட்டு வருவதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி தெரிவித்தார்.

கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணியின் முன்னேற்றத்திலேயே இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் வேகமும் தங்கியிருப்பதாக அவர் கூறுகின்றார்" என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து . பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு


காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்ய
ப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சகல காவல்துறை உயரதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.



காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டமை குறித்த அறிவிப்பு சுற்று நிருபம் மூலம் சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இந்தோனேசியாவில் தங்கியிருந்த 47பேர் ரோமேனியா மற்றும் ஆஸியில் மீள்குடியமர்வு-

இந்தோனேஷியாவின் கரையோரப் பகுதியில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சுமார் 47இலங்கை அகதிகள் சென்றுள்ளதாக இந்தோனேஷியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ருமேனியா 16 அகதிகளுக்கும், அவுஸ்திரேலியா 31 அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கனடாவும் அவுஸ்திரேலியாவும் 15 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

88 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது-கபே-


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 88 வன்முறைச் சம்பவங்கள் தம்மிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கமான கபே தெரிவித்துள்ளது. இவற்றுள் 12 பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவ்வமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும் பதுளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது 06 வன்முறைச் சம்பவங்கள் இறுதியாக இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த தேர்தலின்போதான வன்முறைச் சம்பவங்களை விட இம்முறை வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 105முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட பிக்கு தம்பர அமிலதேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதிவரை விளக்கமறியலில்


தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் தம்பர அமிலதேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்றையதினம் கொழும்பு புறக்கோட்டை அரசமரத்தடி சந்தியில் பிக்குமாரினால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றும் இடம்பெற்றிருந்தது. பிக்கு தம்பர அமிலதேரர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என ஜே.வி..பி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் பஸ்சேவை ஆரம்பம்-

சுமார் 20வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இலங்கைப் போக்குவரத்து பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச.டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பஸ்சேவையை நடத்தி வருகின்றன. ஏற்கனவே திருமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதிமுதல் யாழ்ப்பாணத்திற்கும் கல்முனைக்குமிடையிலான பஸ் சேவையும் கல்முனை இ.போ.ச டிப்போவினால் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு பிராந்திய போக்குவரத்து சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
மேலும் இங்கே தொடர்க...