18 ஜூலை, 2010

ஐபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சரிதான் - ஏ.ஆர்.ரகுமான்

இலங்கையில் நடைபெற்ற ஐபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சரிதான் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில்லை என்று தமிழ்த்திரையுலகம் முடிவு எடுத்தது சரிதான். மிகவும் உணர்வுப்பூர்வமான விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த முடிவு சரியானதாகவே அமைந்திருக்கும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விஷயம் என ஏ.ஆர். ரகுமான். கருத்து தெரிவித்திருக்கிறார்.

எதிர் வரும் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஐரோப்பாவில் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இதற்காக ஐரோப்பா சென்றிருக்கும் அவர் அங்கே ஊடக நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெரும் வரவேற்பை பெற்ற செம்மொழி மாநாட்டு பாடல் சில விமர்சனங்களையும் சந்தித்தது பற்றி கருத்து தெரிவித்த ரகுமான் விமர்சனம் வரும் என்று எனக்கு தெரியும். தமிழ் மொழி மாறிக்கொண்டே இருக்கிறது. 8ஆம் நூற்றாண்டிலேயே இருக்க முடியாது. அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைய தலைமுறை, மூத்த தலைமுறை உட்பட 3 தலைமுறைகள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதை குறை சொல்லக்கூடாது. என்றார்.

டில்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தீம் பாடலை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருப்பதாக சொல்லும் ஏ.ஆர்.ரகுமான் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எந்திரன் திரைப்படத்தின் இசை திருப்திகரமாக வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உலகப் பொதுமறையாக இருக்கும் திருக்குறளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதற்கான இசை வடிவத்தை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாக சொன்ன ஏ.ஆர்.ரகுமான் வேலைப்பளு காரணாமாக அந்தப் பணி தள்ளிப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- கெஹெல்லிய

நிலக்கண்ணி அகற்றும் பணிகளைக் கையாள்வதற்கான தேசிய மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளை துரிதப்படுத்துவதுடன் மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் துரிதப்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல்ல தெரித்தார்.

மேற்படி பிரதேசங்களில் உள்ள 440 கிராமங்களில் சுமார் 15 இலட்சம் நிலக்கண்ணிகள் புதைக்கப் பட்டிருக்கலாம் என்றும் அதை துரிதப் படுத்தாமல் மீள்குடியேற்றத்தில் ஈடுப்பட முடியாது. எனவே மீள்குடியேற்றத்தை விரைவுப் படுத்தவே இத்தீர்மானம் எடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் கைது

ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் குருநாகலைப் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இணையத்தள முகவர் நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவர்கள் ஆபாசப் படக்காட்சிகளைக் பார்த்துக் கொண்டிருந்த போது குருநாகல் பொலிஸார் நிலையத்ததை முற்றுகையிட்ட வேளையில் பாடசாலை மாணவர்கள் 20 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு

ரணில் மற்றும் விமல் வீரவன்ச கோமாளிகளைக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற நாடகம் தான் அரசியல் அமைப்பு என பாராளுமன்ற அங்கத்தவர் அனுரகுமார திசாநாயகா தெரிவித்தார்.

புதிய அரசியல் மாற்ற முன் எடுப்புக்கள் தொடர்பாக கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே அவர் அதனைத் தெரிவித்தார்.

இன்று சுயாதீன ஆணைக் குழுக்கள் செயல் இழந்துள்ளன. இந்நிலையில் வெகு விரைவாக 17 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலையுண்டு. இதை விட்டு விட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையைக் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறி வேறு ஒரு நாடகம் நடத்தப்படப் போகிறது.

எதிர்க்கட்சிகள் நிறைவேற்றுப் பிரதமர் முறைக்கு ஆதரவு என்பது அப்பட்;மான பொய்யாகும். அதற்கு ரனில் விக்கிரம சிங்க இன்னும் இணங்கவில்லை. அப்படியாயின் ரனில் இணங்கியது என்ன தெரியுமா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை கொண்டு வருவது பற்றிப் பேசவே அவர் இணங்கியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜெயசூரியவும், ஜோசப் மைக்கள் பெரேரவும் சேர்ந்து இலங்கைக்கான அரசியல் அமைப்பபை மாற்ற முடியாது. அதற்கு துறைச்சார்ந் நிர்ணர்கள் கூடிள்ளனர். அவர்களைக் கொண்டு வெள்ளை அறிக்கை தயாரிக்கப் பட்டு அது பாகீரளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் நீதிமன்ற அனுமதியுட்பட வெய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. உடனடியாக 17 ஆவது திருத்தம் அமுல்படுத்ப் பட வேண்டும். பொது சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு எனப் பல ஆணைக்குழுக்களும், ஆணையாளர்களும் சுயாதீனமாக இயங்க முடியும். இன்று அவர்கள் ஜனாதிபதியில் தங்கியுள்ளனர். ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் ஒரு முறையும் பாராளுமன்றச் செயலாளர் நியமிக்கப்படுகிறார்.

காரணம் ஜனாதிபதியால் பாரளுமன்ற செயலாளரை இரண்டு வாரத்திற்கே நியமிக்க முடியும். எனவே இரு வாரத்திற்கு ஒரு முறை அவருக்கு புதிய திகதியிட்ட கடிதம் வழங்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழு இருப்பின் இன்னிலை தோன்றாது. இது எமது பாராளுமன்றத்தில் நடக்கின்ற கோமாளிக் கூத்தல்வா.

இவ்வாறான கூத்திற்கு இரண்டு கோமாளிகள் அல்லது ஜோக்கர்கள் இருப்பதாக அவர் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு


ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்தியர்கள் மீது இனவெறி காட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டனின் மேற்கு மாவட்டத்தில் சம்மர்ஹில் பகுதி உள்ளது. அங்குள்ள பல அடுக்குமாடி வீடுகளில் இந்தியர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

அதில், குடியிருக்கும் ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்களின் குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இந்தியர் குடும்பத்தினர் அவமரியாதை செய்யப்படுகின்றனர்.

உடைந்த வீட்டு உபயோக பொருட்கள், பழைய துணிகள் மற்றும் போர்வைகளை அங்கு அப்புறப்படுத்த கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தங்களின் குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடக்கூடிய அனுமதி இல்லை. இதற்கு இனவெறி தான் காரணம் என இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுக்கு மாடி குடியிருப்புகளின் உரிமையாளர்களும், நிர்வாகிகளும் நீங்கள் இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி அவமதிப்பதாகவும் கூறுகின்றனர்.

எனவே, தங்களுக்கு நீதி வழங்கக்கோரி வாஷிங்டனில் உள்ள அமெரிக்க மாவட்டக் கோர்ட்டில் அடுக்கு மாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, இனவெறியை சகித்து கொள்ள முடியாது என அமெரிக்காவில் மனித உரிமைகள் ஆணையத்தின் உதவி அட்டர்னி ஜெனரல் தாமஸ் இ பெர்ஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆகஸ்டு 21-ந்தேதி ஆஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தல்; பிரதமர் அறிவிப்பு


ஆஸ்திரேலியாவில் பிரதமராக இருந்த கெவின்ரூட் கடந்த 3 வாரத்துக்கு முன்பு பதவி விலகினார். அவரை தொடர்ந்து ஜுலியா கிலார்ட் (48) புதிய பிரதமராக பதவி ஏற்றாஆகஸ்டு 21-ந்தேதி    ஆஸ்திரேலியாவில்    பாராளுமன்ற தேர்தல்;    பிரதமர் அறிவிப்புர். இதன்மூலம் ஆஸ் திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை பெற்றார்.

பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த விரும்பினர். அதைத்தொடர்ந்து அவரது தொழிலாளர் கட்சி கவர்னர் ஜெனரல் குவென்டின் பிரிசை சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்கும்படி சிபாரிசு செய்தனர்.

அதன்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. தேர்தலை வருகிற ஆகஸ்டு மாதம் 21 அல்லது 28-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினை, பொருளாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவை இந்த தேர்தலில் பிரசாரம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்


வால் நட்சத்திர தோற்றத்துடன் புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியன் அருகே ஒரு புதிய கிரகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது வால் நட்சத்திரவால் நட்சத்திர தோற்றத்தில்    புதிய கிரகம்ம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. இதை நாசா விஞ்ஞானிகள் “ஹப்பிள் ஸ்பேஸ்” டெலஸ்கோப் மூலம் கண்டுபிடித்தனர். அதற்கு ஒசிரிஸ் என்ற புனைப்பெயர் சூட்டியுள்ளனர்.

இது பூமியில் இருந்து 153 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. “ஜுபிடர்” கிரகத்தைவிட சிறியது. முதன் முதலாக கடந்த 1999-ம் ஆண்டு இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

ஆய்வு மேற்கொண்ட போது விண்வெளியில் வீசிய பலத்த காற்றின் போது இந்த கிரகம் சூரியனை சுற்றி வருவது தெரிய வந்தது. இது கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்த கூடியது.

இந்த கிரகத்துக்கு எச்டி 209458 பி என அதிகார பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் ஆயுதம் வைத்திருந்த இந்தியருக்கு சிறை






வாஷிங்டன்:அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியருக்கு, ஆயுதம் வைத்திருந்த வழக்கில் உள்ளுர் கோர்ட், 15 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. அலபாமா மாநிலத்தில் வசித்து வந்தவர் பட்டேல் என்கிற நரேந்திரகுமார்(45). 2008ம் ஆண்டு மில்லிபாக் பகுதியில் உள்ள அவரது கடையில் அமெரிக்க சுங்கத் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். அவரது கடையில் இருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.பட்டேலிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பட்டேல், 1990ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக வந்து குடியேறி, இதுவரை அமெரிக்க குடியுரிமை பெறாமல் தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, பட்டேல் கைது செய்யப்பட்டு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அமெரிக்க குடியுரிமை ஆவணங்களையும், துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கான ஆவணங்களையும் ஒப்படைக்க, கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அவர் கோர்ட்டில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினார். இதையடுத்து, அவருக்கு மாவட்ட கோர்ட், 15 மாத சிறைத் தண்டனை விதித்தது.குடியுரிமைத் துறை சார்பிலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு





இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய சிறப்புப் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:

இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பது தொடர்பாக எனது

கருத்துகளையும், ஆலோசனைகளையும் கோரி ஜூலை 9-ம் தேதியிட்ட உங்களது கடிதம் கிடைத்தது.

இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நீங்கள் தெரிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டு வந்துள்ளோம். இதுதொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்தபோதும், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதும், போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்குவதும் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளாகும்.

அங்கு போர் முடிந்து ஓராண்டு ஆன பிறகும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அவர்களது வாழ்விடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கிளிநொச்சிக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதையும் உங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இலங்கையில் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதியை பல மாதங்களுக்கு முன்னர் வழங்கியது. ஆனால், அங்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறாதது வருத்தமளிக்கிறது. இதன்காரணமாக, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் உண்மை நிலையை ராஜீய வழிமுறைகள் மூலமாகவோ அல்லது சிறப்புப் பிரதிநிதியை அனுப்பியோ ஆய்வு செய்ய வேண்டும்.

இலங்கை அரசின் மறுவாழ்வுப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், மறுகுடியமர்த்தல் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தும் இந்தப் பிரதிநிதி ஆய்வு செய்ய வேண்டும்.

இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அமைதியான முறையிலும், உரிமைகளோடும் வாழ்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட இது உதவும் என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு எதிராக புதிய நகர்வு ராஜா, அச்சுதனுக்கு எதிராக இன்டர்போல் எச்சரிக்கை அறிவிப்பு



புலிகளின் சர்வதேச வலையமைப்பை முற்றாக முடக்கும் வகையில் இன்டர்போல் ஊடாகவும் சர்வதேச புலனாய்வு முகவர் அமைப்பின் ஊடாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் இரு முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இன்டர் போல் (சர்வதேச பொலிஸ்) நடவடிக்கை எடுத்து வருகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரான காஸ்ட்ரோவின் வன்னி அலுவலகத்தில் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஐயா அல்லது ராஜா எனப்படும் பொன்னையா ஆனந்த ராஜாவை இன்டர்போல் பொலிஸார் தேடி வருகின்றனர். 60 வயதான இவர், யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்தவரா வார்.

இவர் 2003ம் ஆண்டிலிருந்து புலிகள் இயக்கத்திற்கு ஆயுதக் கொள்வனவிலும், கப்பல் வலையமைப்பிலும் செயற்பட்டுள்ளார்.

ன்டர்போலால் தேடப்படும் மற்றவரான அச்சுதன் சிவராஜா அல்லது பிருந்தாவன் அச்சுதன் என்பவர் பிரான்சிலுள்ள விமான பயிற்சிப் பாடசாலையில் விமானியாக பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் பிரான்ஸ் பிரஜா உரிமை பெற்ற இவர், திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகிறார்.

இவர், புலிகளுக்கு விமானங்களைக் கொள்வனவு செய்வதில் பொறுப்பு வகித்திருக்கிறார். அதேநேரம், புலிகள் இயக்கத்தில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். மேற்படி அச்சுதன் என்பவர் வன்னிக்கு முன்பு அனுப்பி வைத்திருந்த ஒளிப்பதிவு நாடாக்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் தற்கொலையாளிகளுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளமையும் வன்னி ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விருவரையும் தவிர ஐரோப்பாவைச் சேர்ந்த நரேந்திரன், தென் கிழக்காசிய நாடுகளில் செயற்படும் ரூபன் மற்றும் பவீந்திரன் ஆகியோரும் புலிகள் இயக்கத்திற்கு கப்பல் மற்றும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கை அதிகாரிகள் கைப்பற்றிய புலிகளின் ஆவணங்களின் அடிப் படையான விசாரணைகளையடுத்து புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்படலாமென நம்பப்படுகிறது.

பிரிட்டன், நோர்வே, அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயற்படும் புலிகளின் மூன்று பிரிவுகளின் தகவல்களையும் பெற்றுத்தருமாறு புலனாய்வுப் பிரிவு ஊடாக அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த அருட் தந்தை இமானுவேல் பிரிட்டனிலும், நெடியவன் பிரிவினர் நோர்வேயிலும், உருத்திரகுமாரன் பிரிவினர் அமெரிக்காவிலும் செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்த வருடத்தில் ஜேர்மனியில் 5 புலிச் சந்தேக நபர்களும், நெதர்லாந்தில் எட்டு பேரும் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகள் அவற்றின் புலனாய்வு வலயமைப்பை விரிவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சந்தேக நபர் கொழும்பில் கைது





எப்பாவலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 21 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலையிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கத்தியால் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

அவ்வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவானதையடுத்து அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி மீண்டும் இலங்கை வருகிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே மீண்டும் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள் ளார்.

கொழும்பு ஐ. நா. அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நியூயோர்க் அழைக்கப்பட்டிருக்கும் புஹ்னே, இந்த வாரம் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு கொழும்புக்குத் திரும்புவார் என ஃபர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ஐ.நா. பணிகள் தொடர வேண்டும் என்பதாலும், விசேடமாக வடக்கில் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைக்க

வேண்டுமென்பதாலும் நீல் பூனே மீண்டும் இலங்கை வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஐ. நா. பணிகள் தடையின்றித் தொடர்வற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட செய்தியொன்றையும் அவர் அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்துவார் என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரமாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தி கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டதோடு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. உண்ணாவிரதம் மேற் கொண்டார்.

இதனிடயே கொழும்பில் பணியாற்றிய ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேயை செயலாளர் நாயகம் பான் கீ மூன் திருப்பி அழைத்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் சபை செயலர் பதவிகளுக்கு மாத இறுதியில் நேர்முகம் 36,000 விண்ணப்பங்கள்


நாடு முழுவதும் மக்கள் சபை செயலாளர்களாக (ஜனசபா) பட்டதாரிகளை சேர்த்துக்கொள்ளும் நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அரச நிர்வாக கட்டமைப்பின் ஒரு அங்கமாக மக்கள் சபை செயலாளர் பதவிக்காக இது வரை 36,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாத இறுதியில் மூன்று கட்டங்களாக நடை பெறும். நியமனங்கள் வழங்குவதற்காக நிதி அமைச்சி லிருந்து தேவையான நிதியும் கிடைத்துள்ளது.

ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நியமனங்கள் வழங்கப்படு வதுடன் பயிற்சிகளும் வழங்கப் படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ் விஜயம்


யாழ். அச்சுவேலி பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள வர்த்தக வலயப் பகுதிக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் நேற்று விஜயம் செய்தனர். முதலீட்டு நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு வருகை தந்த இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்றதுடன் நிலைமைகளை எடுத்துக் கூறினார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜயம்பதி பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார்.

இலங்கையில் முதலீடு செய்துள்ள முன்னணி ஆடை உற்பத்தி தொழிற்சாலை நிறுவனங்களான பிரான் டெக்ஸ், மாஸ் ஹோல் டிஹஸ், டிமெக்ஸ் கார்மண்ட்ஸ், ஒமேகா லைன், ஒரிக் எப்பரல்ஸ் ஆகிய ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களே யாழ். குடாநாட்டில் முதலீடு செய்வதற்காக நேற்று சென்றிருந்தனர்.

கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் முதலீட்டாளர்கள் நேற்று குடாநாட்டுக்குச் சென்றனர். அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததுடன் அச்சுவேலி பகுதிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டனர். அச்சுவேலி வர்த்தக வலய பகுதிக்கு 65 ஏக்கர் நிலம் தேவை என முதலீட்டாளர்கள் தெரிவித்ததுடன் முதற்கட்டமாக 25 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையும் கைத் தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து வடபகுதியில் மேற்கொள்ளவிருக்கும் முதலீட்டு அபிவிருத்தியில் பங்கேற்பதற் காகவே இவர்கள் அனைவரும் நேற்று யாழ். குடாநாட்டுக்குச் சென்றனர்.

அச்சுவேலி மேற்குப் பகுதியில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜயம்பதி பண்டாரநாயக்க தலைமையில் இவர்கள் அனைவரும் யாழ். கச்சேரியில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச் சபையின் அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டமொன்றையும் நடத்தினர்.

அச்சுவேலி வர்த்தக வலயத் திட்டத்தினூடாக யாழ். குடாநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் மோகன்ராஸ், இலங்கை மின்சார சபை வடபிராந்திய அத்தியட்சகர் முத்துரட்ணானந்தசிவம், வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ். பிரதம பொறியியலாளர் சுதாகரன், வீதி அபிவிருத்தி, திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் பாலகிருஷ்ணன், வலி கிழக்கு காணி அதிகாரி என். நமசிவாயம், நீர் வழங்கல் அதிகார சபை மாவட்ட பொறியியலாளர் கே. செல்வகுமார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

அரச உயரதிகாரிகளினால் முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய நீர் வழங்கல், மின்சார விநியோகம், காணி வழங்கீடு உட்பட அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்ட நிலையில் அது குறித்து தமது திருப்தியை வெளியிட்ட முதலீட்டாளர்கள் விரைவிலேயே தாம் முதலீடுகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரியப்படுத்தினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...