24 ஜூலை, 2010

நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம்: ருத்திரகுமாரன்

நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம் என்று நாடு கடந்த ஈழ அரசின் பொறுப்பாளர் வி. ருத்திரகுமாரன் கூறினார்.


இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு இனப்படுகொலையை 1983-ம் ஆண்டு ஜூலையில் நடத்தியது. இது முடிந்து 27 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இலங்கையின் தமிழ் இன அழிப்பு எண்ணம் குறையவில்லை. மாறாக தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பின்னர் ஏராளமான தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் என்ன ஆவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளோம். இலங்கையில் தமிழீழத்தை அமைத்தல், இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்யவேண்டும், அவர்களை செஞ்சிலுவைச் சங்கத்தினர் சென்று பார்வையிட அனுமதிக்கவேண்டும், அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பன்னாட்டுத் தலைவர்களிடம் வைக்கவுள்ளோம்.

இலங்கை அரசின் இன ஒழிப்புக்கு எதிராக நீதி கோரும் வகையில் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளோம் என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதிகளுக்கு நிதி: கண்காணிக்க இந்தியா-அமெரிக்கா உடன்பாடு

undefined
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயலாற்ற வகை செய்யும் இந்திய - அமெரிக்க உடன்பாட்டில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத
புது தில்லி, ஜூலை 23: மனித சமுதாயத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்தெல்லாம் நிதி வருகிறது என்பதை கண்காணித்து, அதைத் தடுக்க இந்தியாவும், அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை

(ஜூலை 23) முக்கியமான உடன்பாட்டை செய்துகொண்டுள்ளன.

2009 நவம்பரில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றிருந்த போது பயங்கரவாதம் குறித்து அதிபர் ஒபாமாவுடன் பேச்சு நடத்தினார். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராட உடன்பாட்டை செய்து கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, தற்போது இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரும், இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையும் கையெழுத்திட்டனர்.

தில்லியில் வெள்ளிக்கிழமை உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்.

""இந்தியா, அமெரிக்கா இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இப்போது செய்து கொண்டுள்ள உடன்பாடு அமெரிக்காவையும், இந்தியாவையும் மேலும் நெருக்கமடையச் செய்யும். பயங்கரவாதத்துக்கு எதிராக அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். பயங்கரவாதச் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை இரு நாடுகளும் இணைந்தே ஒழித்துக்கட்டும் என்ற தகவலை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் செய்து கொண்டுள்ள இந்த உடன்பாடு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அவை வருமாறு:

பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை தீவிரமாகக் கண்காணித்தல், குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால் இணைந்து விசாரித்தல், சைபர் கிரைம் தொடர்பாக தகவலை பகிர்ந்து கொள்ளுதல், எல்லைப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் கையாள வேண்டிய உத்திகள், புலனாய்வு நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளுதல், தடயவியல் துறையில் ஒத்துழைப்பு, ரயில் பாதுகாப்பை மேம்படுத்த இணைந்து செயலாற்றல், எல்லையோரப் பாதுகாப்புப் படை, கடற்படையை வலுப்படுத்துவதில் ஒத்துழைப்பு, துறைமுகப் பாதுகாப்பை திறன்பட கையாளும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு கூட்டாகச் சிறப்புப் பயிற்சி அளித்தல், உளவுத் தகவலை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை அந்த உடன்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

சிறப்புவாய்ந்த இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ள இந்நாள் (ஜூலை 23) இரு நாடுகளுக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இதை நினைத்து இரு நாட்டு மக்களும் பெருமையடைய வேண்டும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் குறிப்பிட்டார்.

இந்த உடன்பாடு குறித்து கூறிய இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, பயங்கரவாதம் என்பது உலக சமுதாயத்தை அச்சுறுத்தும் பொதுவான விஷயம். இதை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்கெனவே இணைந்து பாடுபட்டு வருகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளுக்கு இடையே எந்த அளவுக்கு ஒத்துழைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இந்த உடன்பாடு அமைந்துள்ளது என்றார்.

அமெரிக்கா நெருக்குதல் அளிக்கும்... மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை அந்நாட்டிடம் இந்தியா ஏற்கெனவே அளித்துவிட்டது. எனினும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாடு, மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்குதல் அளிக்க வழி ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே, மும்பை தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

காமன்வெல்த் போட்டியை குலைக்க சதி?

சண்டீகர், ஜூலை 23: காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் வகையில் தில்லியில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பஞ்சாப் போலீஸக்ஷ்ர் எச்சரித்துள்ளனர்.

தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி துவங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.

15 கிலோ ஆர்.டி.எக்ஸ். கடத்தல்: இந் நிலையில், பாகிஸ்தானை புகலிடமாகக் கொண்டு செயல்படும் "காலிஸ்தான் ஜிந்தாபாத் படை' என்ற பயங்கரவாத அமைப்பு காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்க தில்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாக பஞ்சாப் மாநில உளவுத் துறையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐ ஆதரவுடன் ரஞ்சித் சிங் நீதா என்பவன் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தில்லியில் ஊடுருவ தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்காக 15 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகள் பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் வழியாக தில்லி கடத்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் பெருமளவு வெடிமருந்துகளை பஞ்சாப் போலீஸக்ஷ்ர் கைப்பற்றியுள்ளனர். பெரோஸ்பூர் மாவட்டம், லோரா நவாப் கிராமத்தில் சூரத் சிங் என்பவரிடமிருந்து குறிப்பிட்ட அளவு வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து 3 பகுதிகளாக தில்லிக்கு வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகவும், அதில் முதல் பகுதி தனக்கு அனுப்பப்பட்டதாகவும் சூரத் சிங் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இரண்டாம் பகுதி நவான்ஷெர் பகுதியில் உள்ள ஒருவருக்கும், மூன்றாம் பகுதி ஹரியாணா மாநிலம், சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மூன்றாம் பகுதி வெடிமருந்து மூலம், தேரா சச்சா பிரிவுத் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

4 தீவிரவாதிகள்: இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராகி வரும் பயங்கரவாதிகள் பெயர் விவரங்களையும் உளவுத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பல்வீந்தர் சிங், பிரான்ûஸச் சேர்ந்த ஜாஸி, அமெரிக்காவைச் சேர்ந்த ராணா மற்றும் பம்மா ஆகியோர் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் தில்லிக்குள் ஊடுருவ முடியாவிட்டால், காலிஸ்தான் ஜிந்தாபாத் படைத் தலைவர் ரஞ்சித் சிங் நீதாவே இந்தியாவுக்குள் ஊடுருவி, குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் பஞ்சாப் உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம்


பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை 6.08 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மின்டானோ, கொடபாடோ ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உருவானது.

இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டன. அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த மக்கள் பீதி அடைந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் என்ற பீதியால் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடு விக்கப்படவில்லை. எனவே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர்.

7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பொதுவாக நஹிலநடுக்கம் 7 ரிக்டர் அளவில் ஏற்பட்டால் பெரிய அளவில் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்படும். ஆனால் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல மனைவி கருத்து

"ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல'' என அவரது மனைவி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது, நயோ போகான் (63) ஜப்பானின் பிரதமராக பதவி வகித்து வந்தார். ஒட்டோயாமா பதவி விலகியதை தொடர்ந்து கடந்த மாதம் இவர் பிரதமராக பதவி ஏற்றார்.

அதன் பிறகு நடந்த பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது. தகுதியானவர் அல்ல

இந்த நிலையில் பிரதமர் நயோபோகானின் மனைவி நொபுககான் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. இதில், தனது கணவர் குறித்தும் பொது மக்களின் ஆதரவை பெற அவர் எடுத்து வரும் முயற்சிகள் பற்றியும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிர்ஷ்டத்தின் காரணமாக அவருக்கு பிரதமர் பதவி கிடைத்தது. ஆனால் அப்பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என்றும் எழுதியுள்ளார்.
மனம் புண்பட்டது.

இந்த புத்தகத்தை படித்தீர்களா? என பிரதமரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், ''அப்புத்தகத்தை படித்தேன்'' இதனால் என் மனம் புண்பட்டுள்ளது'' என்றார். இச்சம்பவம் ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ருஹணுணு மாணவன் மரணம் மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: பதற்றத்தை தணிக்க இராணுவம், பொலிஸ்

ருஹணுணு பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பதுளை ஆஸ்பத்திரியில் இறந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது. ஆனால் பொலிஸ் தாக்குதலில் இவர் இறந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது. இதனைக் கண்டித்து மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாத்தறை பொலிஸ் நிலையம் வரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர் குழுவினர் மாத்தறை நகர வீதியில் அமர்ந்த நிலையில் தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை, மாத்தறை பொலிஸ் நிலையத்தைச் சுற்றி இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் வீதித் தடைகளையும் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் உட்புகாத வகையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

ருஹணுணு பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே கடந்த ஜூன் 18ஆம் திகதி இடம்பெற்ற மோதலிலே இந்த மாணவன் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். இவர் காய்ச்சலில் பீடிக்கப்பட்டிருந்ததாக அவரின் தாயார் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

மாணவன் சுசந்த பண்டாரவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாத்தறைக்கும் பதுளைக்கும் இரு சி.ஐ.டி. குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இது தவிர மாத்தறை பொலிஸார் தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நீரிழிவு, மாரடைப்பு, இரத்த அழுத்தம்... தொற்றாத நோய்களினால் தினமும் 225 பேர் மரணம்


தொற்றாத நோய்களினால் இலங்கையில் தினமும் 225 பேர் மரணமடைவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய கொள்கையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியது. இலங்கையின் சுகாதார குறிகாட்டி கடந்த சில வருடங்க ளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஆண்களின் ஆயுட் காலம் 70 வருடங்களா கவும் பெண்களின் ஆயுட் காலம் 76 ஆகவும் உள்ளது. ஆனால் இத்த கைய தொற்றா, நோய்களினால் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை எனவும் அமைச்சு கூறியது.

இலங்கையில் தினமும் இடம்பெறும் நோய்களில் 70 வீதமானவை மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாத நோய் என்பவற்றினா லேயே ஏற்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

130 இலங்கை குழந்தைகளுக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழ்



யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த காலத்துள் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு கடந்த 22 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.

130 குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் கீழுள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பும் இணைந்து வவுனியாவில் நடத்திய நடமாடும் சேவையின் போதே பிரஜாவுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
மேலும் இங்கே தொடர்க...

பலஸ்தீன விவகாரம்: தூதுவர் டொனால்ட் பெரேரா விளக்கம்; மறுப்பு


இஸ்ரேலிலுள்ள இலங்கையின் தூதுவர் டொனால்ட் பெரேரா பலஸ்தீனம் தொடர்பாகக் கூறியதாக வெளிவந்த செய்திகளை அவர் முற்றாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்திற்கு அவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை இஸ்ரேலுடன் நட்புடன் செயற்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையில் இரு தரப்பு உறவு தொடர்கிறது. அதேநேரம் பலஸ்தீன விவகாரத்தில் அணிசேரா நாடுகளின் கொள்கையை அரசு தொடர்ந்து முன்னெடுக்கிறது.

இஸ்ரேலும் பலஸ்தீனமும் சேர்ந்து பேசுவதன் மூலமே மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இதுவே இலங்கையின் நிலைப்பாடு.

ஆகவே நான் கூறியதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

லெபனானில் பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு: 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள்



பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க அறிவித்துள்ளார். விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக இலங்கை திரும்ப முடியாமல் சுமார் 3000 பேரளவில் லெபனானில் தங்கியுள்ளனர்.

லெபனானிலுள்ள இலங்கைத் தூதுவர் எம். மஹ்ரூப் மற்றும் தெற்காசிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் லெபனான் உள்துறை அமைச்சுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாகவே மூன்று மாத கால பொதுமன்னிப்பு வழங்க லெபனான் அரசு முடிவு செய்தது. சட்டப் பிரச்சினைகள் தொடர்பாகவும், பல்வேறு காரணங்களுக் காகவும் இன்னல் களுக்குள்ளான நிலை யிலும், லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இலங்கையரும், விசாகாலம் முடிவடைந்த நிலையில் பெருந்தொகையான பணத்தை தண்டப்பணமாக செலுத்த முடியாமலும் உள்ள மற்றும் சிறையிலுள்ளவர்களுமாக சுமார் 3000 பேர் இந்த பொது மன்னிப்புக்காலத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கடவுச் சீட்டின் செல்லுபடியான காலம் முடிவடைந்துள்ள நிலையில் நாடு திரும்ப முடியாமல் உள்ள இலங்கையர் லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குச் சென்று தற்காலிக கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். விமான டிக்கட்டுக்களின் காலம் முடிவடைந்திருப்பின் அவற்றையும் புதுப்பித்து வழங்க இலங்கை தூதரகம் ஆயத்தமாகவுள்ளது என்றும் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

நாடு திரும்பும் இலங்கையரை குழுக்களாக அழைத்து வருவதற்கு ஏதுவாக விசேட விமானங்களை ஏற்பாடு செய்வதற்காகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறு கின்றன
மேலும் இங்கே தொடர்க...

ஆடிவேல்;: அலரிமாளிகை முன் ஜனாதிபதி வழிபாடு


undefined

கொழும்பில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஆடிவேல் விழா நேற்று மிகக் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. ஜுலை 27 ஆந் திகதி வரை நடைபெறும் ஆடிவேல் விழாவின் ஆரம்பமாக கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் காவடி ரதபவனி நேற்றும் காலை எட்டு மணியளவில் ஆரம்பமாகி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம் வரை சென்றது. பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ சென்ற ரதபவனி அலரி மாளிகையில் விசேட பூஜைக்காகத் தரித்து நின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாரியாரும் மாளிகைக்கு முன்பாக மேள தாளத்துடன் அழைத்து வர அவர்கள் காலி வீதியில் வைத்து விசேட பூஜைகளை நடத்தினர். ஆடிவேல் விழாவில் இவ்வாறு ஜனாதிபதி விசேட பூஜை வழிபாடு நடத்தியது இதுவே முதற் தடவையாகும். அங்கு ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் ஆலய அறங்காவலர் சபையினர் பொன்னாடையும் மலர்மாலையும் அணிவித்துக் கெளரவித்தார்கள். மேலும், செட்டியார் தெரு ஸ்ரீபுதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி இன்று (24) காலை 7.30 அளவில் ஆரம்பித்து பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தைச் சென்றடைகிறது. சம்மாங்கோடு ஆலய காவடி ரதம் திங்கட்கிழமை (26) திரும்பி வரவுள்ள நிலையில் வெள்ளி ரதம் 27 திங்கட்கிழமை மீண்டும் செட்டியார் தெரு ஆலயத்தை வந்தடையும்.
மேலும் இங்கே தொடர்க...

. “மூளையை “ஸ்கேன்” செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்” ஆய்வில் தகவல்

“மூளையை “ஸ்கேன்” செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்” ஆய்வில் தகவல்
திரைப்படம் திரைப்படம்
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும்.

இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர்.

அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட குழு: அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை; சவால்களை எதிர்கொள்வோம்







undefined



ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க தயாராக இருப்பதாக அமை ச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலோசனைக் குழுவுக்கு உதவியாக 8 பேர் கொண்ட மற்றொரு குழுவை ஐ.நா. செயலாளர் நியமித்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;

ஐ.நா. செயலாளரின் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளோம். இந்தக் குழு சட்டபூர்வமற்றது என ஐ.நா. வில் உள்ள பல நாடுகள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு சபையினதோ மனித உரிமை ஆணையத்தினதோ அனுமதி இன்றி இத்தகைய குழுவொன்றை அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தோற்கடித்தோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம். எல்லை தாண்டாது எமது எதிர்ப்பை காட்டியுள்ளோம். இதே போன்று வேறு நாடுகளுக்கு எதிராகவும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அடுத்து என்ன நடக்கிறது என நாம் காத்திருக்கிறோம் என்றார்.

ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பாக ஏனைய நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஐ.நா. செயலாளர் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்தால் நாமும் அதற்கேற்ப செயற்படுவோம்.
மேலும் இங்கே தொடர்க...

டெஸ்ட் போட்டியிலிருந்து முரளிதரன் ஓய்வு

undefined






டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த பந்து வீச்சாள ரான இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் நேற்றுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தனது இறுதிப் போட்டி யுடன் 800 டெஸ்ட் விக் கெட்களை வீழ்த்தி சாதனை வீரராக முரளி தரன் டெஸ்ட் கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று காலியில் முடிவு ற்ற இந்தியாவுடனான முத லாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கடந்த 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவி ப்பை விடுத்திருந்தார். அது வரை அவர் 792 டெஸ்ட் விக் கெட்களை கைப்பற்றியிருந்தார்.

800 டெஸ்ட் விக்கெட்களுடன் ஓய்வு பெற விரும்புவதாக அவர் அச் சமயம் குறிப்பிட்டிருந்தார். அது முதல் முரளிதரன் தனது 800 ஆவது டெஸ்ட் விக்கெட்டை இப்போட்டி யில் கைப்பற்றுவாரா என்ற கேள்வி இலங்கை மற்றும் உலகளாவிய கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர் களின் மனதில் தொக்கி நின்ற கேள்வியாக இருந்தது.

நேற்றுடன் முடிவுற்ற இந்தியாவுக் கெதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இல ங்கை அணி 520 ஓட்டங்களை பெற்றதும், போட்டியின் இரண் டாம் நாள் ஆட்டம் மழையினால் தடைப்பட்டதும், இந்திய அணியை 4 நாட்களில் இரண்டு தடவை அவு ட்டாக்க முடியுமா என்ற கேள்வியும் முரளியின் ஆதரவாளர்களையும் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களை யும் கேள்விக்குள்ளாக்கியது.

எனினும் 4 நாட்களில் இந்தி யாவை தோற்கடித்ததுடன், தான் குறிப்பிட்ட இலக்கான 800 விக் கெட்களையும் கைப்பற்றி மிகப் பெரிய சாதனை வீரராக டெஸ்ட் கிரிக்கெட் உலகில் இருந்து முரளி தரன் நேற்றுடன் ஓய்வுபெறுகிறார்.

எனினும் ஒரு நாள் மற்றும் டுவெண்டி டுவெண்டி 20 ஓவர் போட்டிகளில் முரளி தொடர்ந்தும் விளையாடுவார். 2011 இல் நடை பெறும் உலகக் கிண்ண போட்டி யுடனேயே தான் கிரிக்கெட் உலகில் இருந்து முழுமையாக ஓய்வுபெறு வதாக முரளிதரன் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

800 விக்கெட்கள் என்ற இந்த சாதனையை பெறுவதற்காக முரளி தரன் இந்திய வீரர் பி.பி. ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது முரளி விளையாடிய 133 வது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்களை அவர் கைப்பற்றினார். அவரது சாத னையைப் பற்றி ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந் தாலும் அவர் இந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காலியில் நடைபெற்ற இலங்கை - இந்தியா வீரர்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியின் 5வது நாளான நேற்று முரளிதரன் பெற்றுள்ள சாதனை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக் கப்பட வேண்டும்.

அதேவேளை குறித்த டெஸ்ட் போட்டியுடன் விடைபெறும் முரளி தரனுக்கு இப்போட்டியில் வெற்றி பெற்று அந்த வெற்றியை பரிசாக வழங்குவோம் என இலங்கை அணித் தலைவர் சங்கக்கார தெரி வித்திருந்தார். அதன் பிரகாரம் தற்போது நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற்றுள் ளது.

கடந்த 18ம் திகதி தொடங்கிய போட்டியின் 2ம் நாள் மழை காரண மாக விளையாட்டு நடைபெறாத போதிலும், 3ம் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520-8 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த நிலையில், திரும்பவும் இரண் டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடரவேண்டிய நிலைக்குத் தள் ளப்பட்டது. தொடர்ந்து துடுப்பெடு த்தாடிய இந்திய அணி போட்டியின் இறுதி நாளான நேற்று பகல் போசன இடைவேளையின் போது 338 ஓட்டங்களுக்கு சகல விக் கெட்களையும் இழந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கி முரளியின் மகத்தான சாதனையை பாராட்டினார். போட்டி முடிந்த பின்னர் நேற்று மாலை அவருக்கு மாபெரும் விழா காலியில் எடுக்க ப்பட்டது.

முரளிதரன் இது வரை 133 டெஸ்ட் போட்டிகளை ஆடி உள் ளார். அதே போல் 334 ஒருநாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெட்டு க்களையும் வீழ்த்தி உள்ளார்.

முரளிதரன் நேற்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங் கம்பள வரவேற்பு வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

133 டெஸ்டில் விளையாடியுள்ள முரளி 51 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்களை கைப்பற்றியமை அவ ரது சிறந்த பந்து வீச்சு பெறுதி ஆகும். டெஸ்ட்டில் 22 முறை 10 விக்கெட்களுக்கு மேலும், 67 முறை 5 விக்கெட்களுக்கு மேலும் எடுத்து ள்ளார்.

முரளிதரனுக்கு அடுத்தபடியாக வோர்ன் (அவுஸ்திரேலியா), 145 டெஸ்டில் 708 விக்கெட்களை கைப் பற்றி 2 வது இடத்தில் உள்ளார். கும்ளே (இந்தியா) 619 விக்கட் களும், மெக்ராத் (அவுஸ்திரேலியா) 563 விக்கெட்களும், வோல்ஸ் (மே. தீவு) 434 விக்கெட்டும் எடுத்துள்ள னர். 1992 ஆகஸ்ட் 28 ஆம் திகதி தனது 20 ஆவது வயதில் அவுஸ் திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொழும்பு கெத்தாராம விளை யாட்டரங்கில் நடைபெற்றது. முதரளிதரனின் அறிமுக டெஸ்ட் போட்டி இதுவாகும்.

அப்போட்டியில் “கிரெய்க் மெக்டர்மட்” இன் விக்கட்டே முரளிதரன் கைப்பற்றிய முதலாவது டெஸ்ட் விக்கெட் ஆகும். அப் போட்டியில் முரளி 141 ஓட்டங் களைக் கொடுத்து 3 விக்கெட்டு க்களை கைப்பற்றினார்.

அப்போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியின் விக்கெட்டை முரளிதரன் கைப்பற்றினார். மூடியை ஆட்டமிழக்கச் செய்ய முரளி வீசிய பந்து ஓப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து சுமார் 2 அடி தூரம் சுழன்று லெக் ஸ்டம்பை வீழ்த்தியது. அந்த பந்தின் மூலம் கிரிக்கெட் உலகுக்கு திறமையான ஒப் ஸ்பின் பந்து வீச்சாளரின் வருகையை முரளி உணர்த்தினார். பின்னாளில் டொம் மூடி இலங்கை அணியின் பயிற்று விப்பாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் முரளிதரன் பந்து வீச்சு திறமை ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பரிணமி த்தது.

1993 ஆகஸ்ட்டில் மொரட்டுவை யில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளிதரன் 104 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டு க்களை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை முரளி கைப் பற்றியமை அது முதலாவது தடவை யாகும். அந்த டெஸ்ட் போட்டியில் முரளி கைப்பற்றிய 5 விக்கெட்டு க்கள் கெப்லர் வெஸல்ஸ், ஹன்ஸி குரோஞ்ஞே, ஜொன்டிரோட்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளும் உள்ளடங்கியிருந்தது.

முரளிதரன் அவுஸ்திரேலிய அணி யின் கிரேக் மெக்மெட்டை எல்பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்ததால் தனது கன்னி விக் கெட்டைக் கைப்பற்றினார்.

50 வது விக்கெட்டுக்காக சித்து வையும், 100 வது விக்கெட்டுக்காக ஸ்டீபன் பிளமிங்கையும், 150 வது விக்கெட்டுக்காக கை விட்டலையும் 200 வது விக்கெட்டாக பென் ஹொலி ஹொக்கையும், 250 விக் கெட்டுக்காக நவிட் அஷ்ரப்பையும் 300 வது விக்கெட்டுக்காக ஷோன் பொலக்கையும் 350 விக்கெட்டாக முகம்மட் சரீப்பையும், 400 வது விக் கெட்டாக ஹென்ரி ஒலங்காவையும் 450 விக்கெட்டாக டரல் டபியையும் 500 வது விக்கெட்டாக மிச்சல் கஷ்பரொவிச்சையும் 550 விக்கெட் டாக காலிட் மசுட்டையும் 600 வது விக்கெட்டாக காலிட் மசுட்டையும் 650 விக்கெட்டாக மக்காயா நிட்டி னியையும் 700 வது விக்கெட்டாக செய்யட் ரஷலையும், முரளிதரனின் 709 வது விக்கெட்டாக போல் கொலிங்வூட்டை வீழ்த்தியதன் மூலம் ஷேன் வோனின் 708 விக்கெட் சாதனையை முறியடித்தார்.

750 விக்கெட்டாக கங்குலி யையும் 800 விக்கெட்டாக பிராக் கன் ஒஜா வையும் வீழ்த்தியே இச் சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார்.
மேலும் இங்கே தொடர்க...