6 அக்டோபர், 2010

யாழ். போதனா வைத்தியசாலைக் கட்டிடத்தில் 'லிப்ட்' இன்றி நோயாளர் பாதிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 'லிப்ட்' பொருத்தப்படாததால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த மாதம் முதல் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுப் புதிய கட்டிடம் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் பழைய கட்டிடங்களில் இயங்கிய உள்ளக நோயாளர்களின் பல விடுதிகள், அண்மையில் புதிய கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தில் 12 விடுதிகளுக்கு மேல் இயங்குகின்ற போதிலும் மாடிகளுக்குச் செல்வதற்கு 'லிப்ட்' வசதி இல்லை. இதனால் முதியவர்களும் நோயாளர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளர்களை, தொண்டர் சேவை ஆற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் இலங்கை சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையாளர்கள் மேல் மாடி விடுதிகளுக்குத் தூக்கிச் செல்கின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்ட கட்டிடத்திற்கு நோயாளர்கள் மாற்றப்படவுள்ளமை தெரிந்திருந்த போதிலும், அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால் இத்தகைய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வல்வையில் மண் எடுத்துச் செல்லும் தென் பகுதி மக்கள்

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட வரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள்.

உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும்பெருமாள் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இடைநிறுத்தப்பட்ட 'கல்ப் எயார்' விமான சேவை மீண்டும் ஆரம்பம்பயங்கரவாத அச்சம் காரணமாக நீண்டநாள் இடைநிறுத்தப்பட்டிருந்த 'கல்ப் எயார்' விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீண்டநாள் இடைநிறுத்தப்பட்டிருந்த 'கல்ப் எயார்' விமான சேவையின் அ320 விமானம், 150 பயணிகளுடன் நேற்றிரவு 8.20 மணியளவில் பஹ்ரேனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். .

இந்த விமான சேவை வாரத்தில் முன்று நாட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் நாச வேலை; பாக். உதவியது உண்மைதான் : முஷாரப் ஒப்புதல்

தனது ஆட்சியின்போது, இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு பயிற்சி அளித்தது உண்மைதான் என அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஜெர்மன் பத்திரிகை ஒன்றுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில்,

"காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் மீதுதான் சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

அணு ஆயுதங்களை ஏன் தயாரிக்கிறீர்கள்? காஷ்மீரில் அப்பாவி மக்களை ஏன் கொல்கிறீர்கள் என பாகிஸ்தானை அனைவரும் கேட்கின்றனர்.

1971இல் வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து தனி நாடாகப் பிரிந்தது. இதற்கு பின்னால் இந்தியா இயங்கிய போதிலும் எந்த ஒரு நாடும் அதுபற்றிக் கவலைப்படவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூட காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தவில்லை. அப்போது நான் இராணுவத் தளபதியாக இருந்தபோதிலும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

அதிபர் பொறுப்பை ஏற்று கார்கில் போரை தொடங்குவதற்கு உத்தரவிட்டேன். எனது ஆட்சியின்போது, காஷ்மீர் பிரச்சினைக்காகப் போராட தீவிரவாதிகளுக்கு அரசு தரப்பில் பயிற்சி கொடுத்தது உண்மைதான். தாய்நாட்டின் நலனுக்காகத்தான் அதை செய்தேன்" என்றார்.

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து உதவுவதாக இந்திய அரசு தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் புகார் செய்து வந்துள்ளது.

இது முஷாரப்பில் இந்த பேட்டி மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் முக்கிய தலைவர் ஒருவர் இதை ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல்முறை.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் மீதான தடையை நீக்க கோரிக்கை


இந்தியாவில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பது தொடர்பான அரசாணை குறித்து சென்னையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற நடுவர் மன்ற விசாரணையில், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் ஆஜராகி, தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அரசு தடை நீடிப்பு செய்து வருகிறது. அதன்படி, கடந்த மே மாதம் 14 ஆம் தேதி இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த ஆணை, நடுவர் மன்றத்தில் உறுதி செய்யப்பட்ட பிறகே அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வரும்.

அதற்காக, நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒருநபர் நடுவர் மன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த விசாரணையில், தானும் விடுதலைப் புலிகள் சார்பில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று வைகோ வாதிட்டார். ஆனால், அவரது வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

அதையடுத்து, செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற நடுவர் மன்றத்தின் விசாரணையில் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் சார்பில் மனுவும் தாக்கல் செயய்ப்பட்டது.

'அரசியல் பழிவாங்கல்’

இந்தியாவில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடையைத் தொடர்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும், அந்தத் தடையைப் பயன்படுத்தி தங்களுக்கு எதிராக அரசியல் ரீதியாக பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் வாதிட்டார்கள். அதனால், தங்களையும் இந்த விசாரணையில், ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள்.

மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் ஆஜராகலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் உள்ளதாகவும், அதனால், இந்த நடுவர் மன்றத்தில் ஆஜராக தங்களுக்கு உரிமை உண்டு எனவும் வாதிட்டார்.

அரசாணையில் அதுபோன்ற குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் சட்ட விதிகள் தான் செல்லுபடியாகும் என்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனஞ்ஜெயன் வாதிட்டார்.

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் ராபின்சன் என்பவர் சார்பிலும் தான் ஆஜராவதாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறினார். அதற்காக, ஜோசப் ராபின்சன் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழக அரசு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கறிஞரின் கோரிக்கை நிராரிக்கப்பட்டது.

தமிழக காவல் துறையின் சார்பில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, நெடுமாறன் உள்ளிட்ட மற்ற அமைப்பினர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையைத் தொடரக் கூடாது என வாதிட முடியுமா என்ற தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். புதன்கிழமை அதுதொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவர் மன்றத்தின் அடுத்த விசாரணை, இந்த மாதம் 20-ஆம் தேதி ஊட்டியில் நடைபெற உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தண்டனை வழங்கியதாக பொய்ப்பிரசாரம் அரசியலமைப்பு அதிகாரத்தின் பிரகாரமே செயற்பட்டார் - பிரதியமைச்சர் விஜிதமுனி சொய்சா


சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தண்டனை வழங்கியதாக எதிர்க்கட்சிகள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றன. ஜனாதிபதி யாரையும் தண்டிக்கவில்லை. அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரமே செயற்பட்டாரென சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி த சொய்சா கூறினார்.

மாகாண சபை (திருத்த) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-

பொன்சேகாவை கவனிப்பது சிறை அதிகாரிகளின் பொறுப்பாகுமென ஐ. தே. க. தலைவர் ஏற்றுக்கொள்கிறார். பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித் தும் ரணில் சபையில் கருத்துக் கூறி னார்.

சிறைக் கைதிகள் மன்னிப்புக் கோருவதற்கு சில நடைமுறைகள் காணப்படுகின்றன. நன்னடத்தை காரணமாக முன்கூட்டி கைதிகள் விடுவிக்கப்படுவதுண்டு. கைதிகள் அனுமதிப்பத்திர சபைக்கு தமது விண்ணப்பத்தை முன்வைக்க வேண்டும்.

அதன் சிபார்சுகள் எமது அமைச்ச ருக்கு அனுப்பப்பட்டு அதன் பின் பொது மன்னிப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

ஐ. தே. கவும் ஜே. வி. பியும் இன்று அரசியல் எதிர்காலமின்றி தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன. அதனால் பொன்சேகாவின் விவகாரத்தை தூக்கிப் பிடித்து அரசியல் இலாபம் பெற அவை முயல்கின்றன.

பொன்சேகாவை விடுதலை செய்யும் உண்மையான நோக்கம் இருந்தால் அதற்கு வேறு வழிவகைகள் உள்ளன. பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட போதே ஜனாதிபதிக்கு அவரை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் பொன்சேகாவுடன் போட்டியிட்டு அவரை தோற்கடித்த பின்னரே உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியாக இருந்த போது பொன்சேகா 8000 க்கும் அதிகமான இராணுவ வீரர்களை தண்டித்து சிறைக்கு அனுப்பினார் அவற்றில் சுமார் 4000 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது.

பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டிருக்கும். எதிர்க் கட்சி எம்.பி.கள் கூட கைதாகியிருப்பர்.

இன்னும் 5 வருடத்தில் ஆட்சிக்கு வர முடியும் என ஐ. தே. க. கனவு காண்கிறது. ஆனால் 15 – 20 வரு டங்கள் ஆனாலும் அதனால் ஆட்சி க்கு வரமுடியாது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் காலத்தில் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக 5244 இராணுவத்தினருக்கு தண்டனை *156 இராணுவ அதிகாரிகள் * 5088 இராணுவ வீரர்கள்
சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் 156 இராணுவ அதிகாரிகளுக்கும், 5088 இராணுவ வீரர்களுக்கும் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொன்சேகா தளபதியாக இருந்த போது இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்புகளுக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அப்போதும் கையொப்பமிட்டு அனுமதியை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். அப்போது தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் சரத் பொன்சேகாவுக்காக மாத்திரம் எதிர்க்கட்சிகள் குரல்கொடுப்பது ஏன் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப் பெரும மேலும் உரையாற்றுகையில்:

பொன்சேகா தளபதியாக இருந்த காலத்தில் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய உட்பட மேஜர் ஜெனரல் தரங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தின் மூலம் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தண்டனைகள் விதிக்கப்பட்டன.

இக்காலகட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்த இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகித்த மூன்று மேஜர் ஜெனரல்களே பொன்சேகா மீதான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை நடத்தினார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசத்தால் புகழப்பட்ட வீரர் ஒருவர் தேசத்துரோகத்தனமாக நடந்த குற்றச்சாட்டிற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இது மாத்திரமல்ல இதுபோன்று சம்பவங்கள் உலகின் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன.

முதலாவது உலக மகா யுத்தத்தின் போது வழிநடத்திய அந்நாட்டு தளபதி பலராலும் போற்றப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் அவர் ஹிட்லருக்கு இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருந்தாலும் அவரைக் கெளரவப்படுத்தும் வகையில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறையிலேயே உயிரிழந்தார். இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் 2வது பதவிக்காலம்; சத்தியப் பிரமாண நிகழ்வு அ’புரத்தில்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான சத்தியப் பிரமாண நிகழ்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுர நகரில் நடைபெறுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரமளவில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெறவுள்ள சத்தியப் பிரமாண நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள மகா வலி கேந்திரத்தில் இடம்பெற்றது.

அமை ச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிடுகையில், மிகவும் மோசமான ஒரு சூழலில் 2005ம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி யுத்த நெருப்புக்களை தற்பொழுது வெற்றிகரமான முறையில் அணைத்துள்ளார். இதனையடுத்து அமோக வாக்குகளை அடுத்து ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையை வழங்கிய மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று வது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்றார். இந்நிலையில், ஐ.தே.க., ஜே.வி.பி. உட்பட எதிர்கட்சிகள் சில தமது அரசியல் வங்குரோத்து நிலையை மறைக்கும் நோக்குடன் சரத்பொன்சேக்காவின் விடயத்தை ஒரு கருப்பொருளாக கொண்டு பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சரத் பொன்சேக்காவை காண்பித்து தமது கட்சியின் செயற்பாடுகளை பலப்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர்.

சட்டம், நீதி என்பது சகலருக்கும் சமமானது. அவற்றில் எந்த பாகுபாடும் கிடையாது. சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளையே அரசு மேற்கொண் டுள்ளது. அரசாங்க ஊழியர்கள், பாதுகாப்பு படையினர்கள், சாதாரண மக்கள் தொடக்கம் அரசியல் பிரமுகர்கள் வரை சட்டம் சகலருக்கும் சமமானது என்றும் அமைச்சர் மைத்திரிபால சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிக் காலம் முடிவுறும் இறுதிநாள் அம்பாந்தோட்டை துறை முகத்தில் முதலாவது கப்பல் வெள்ளோட் டம் விடப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அதேசமயம், ஜனாதிபதியை கெளரப் படுத்தும் வகையில் பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் அன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

3000 பேருக்கு இன்று ஆசிரிய நியமனம் 3174 அழகியற்கலை ஆசிரியர்களை தெரிவு செய்ய 9ம் திகதி போட்டிப் பரீட்சை

கல்வியியல் கல்லூரிகளில் இருந்து பயிற்சி பெற்று வெளியேறும் 3000 பேருக்கு இன்று (06) ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கூறினார்.

ஏற்றத் தாழ்வு ஏற்படாத வகையில் ஜனவரி மாதம் முதல் ஆசிரியர் இடமாற்றங்களை செயற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக ஐ. தே. க. எம்.பி. சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-பாடசாலைகளில் காணப் படும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 554 ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தவிர அழகியற்கலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் போட்டிப் பரீட்சையூடாக ஆசிரியர்களை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. 3174 அழகியற்கலை ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஒக்டோபர் 9 ஆம் திகதி போட்டிப் பரீட்சை நடத்தப்படும்.

இது தவிர கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் 3000 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கி ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

சில பாடசாலைகளில் ஆசிரி யர்கள் மேலதிகமாக உள்ள தோடு, சில பாடசாலைகளில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, இடமாற்றக் கொள்கையின் பிரகாரம் 8 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணி புரிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...