2 பிப்ரவரி, 2011

ஊழல் வழக்கில் ராஜா கைது






இந்திய முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா அவர்கள் இன்று சிபிஐயினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் கடந்த நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்.

அந்த அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி அரசாங்கத்துக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் பொது வாழ்க்கையில் ஊழல் குறித்து கடுமையான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கைகளுக்கும் அது வழி வகுத்துள்ளது.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ராசா மறுத்துவருகிறார்.

"அரசியல் ரீதியான சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை"- மஹேஷ் ரங்கராஜன்

முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கைதானது முன்பே நடந்திருக்க வேண்டியது என்கிறார் அரசியல் ஆய்வாளர் மஹேஷ் ரங்கராஜன்.


மஹேஷ் ரங்கராஜன்
"முன்பே செய்திருக்கவேண்டிய நடவடிக்கை"- மஹேஷ் ரங்கராஜன்

ஆனால் இந்த கைது நடவடிக்கையால் மட்டும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கோரி வரும், கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையைக் கைவிடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட மஹேஷ் ரங்கராஜன், இந்த விடயத்தில் செவ்வாய்க்கிழமை, தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபலிடம் நீதிபதி சிவராஜ் பாட்டில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது; இந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ராசா உட்பட மூவரின் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருந்தன என்றார்.

இதே சமயத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், ராசா விவகாரம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பிரச்சினையாக இருந்திருக்கும், அதைக் குறைப்பதற்கு இந்தக் கைது உதவக்கூடும் என்றும் இது ஒரு அரசியல் ரீதியான சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை போலத் தெரிகிறது என்றும் மஹேஷ் ரங்கராஜன் கருத்து வெளியிடுகிறார்.

ஆனால் சிபிஐ நடத்திய இது போன்ற அரசியல் வழக்குகளில் பெரிய தீர்வு ஒன்றும் கிடைத்துவிடவில்லை எனவே இதிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் வரும் பிப்ரவரி 10ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகக் காட்டுவதற்கும் இந்தக் கைது நடவடிக்கை உதவும் என்ற கருத்துடனும் மஹேஷ் உடன்பட்டார்.

ஆனால் இது போன்ற ஒரு பெரிய முடிவு எடுக்கும் போது, அது வெறும் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர்களால் மட்டும் எடுக்கப்பட்டிருக்க முடியாது. அரசின் மற்ற மூத்த அமைச்சர்களும் இதில் கலந்து ஆலோசிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, ராசா மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று கூறுவது நம்புவதற்குக் கடினம் என்றும் தமிழோசையிடம் கூறினார் மஹேஷ் ரங்கராஜன்
மேலும் இங்கே தொடர்க...

மீனவர் தாக்குதல் தொடர்ந்தால் பரஸ்பர உறவு பாதிக்கும் -இந்தியா

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது. அவ்வாறான அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றால் அது இரு அயல் நாடுகளுக்கிடையிலான உறவை பாதிப்பதாகவே இருக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிக்காத வகையில் இலங்கை முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைகக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தமது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் முதல்வர் கருணாநிதியை அமைச்சர் கிருஷ்ணா நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது நிருபமா ராவும் உடனிருந்துள்ளார். இச்சந்திப்பின் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எவ்வாறான ஒரு சூழ்நிலையிலும் அப்பாவி மீனவர்கள் மீது படைப்பலத்தை பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கடந்துபோன வரலாராக மட்டுமே இருக்க வேண்டும். அவை இனி ஒரு போதும் இடம்பெறக் கூடாது.

அவ்வாறக்ஷின அசம்பாவிதங்கள் தொடருமாயின் இரு அயல் நாடுகளுக்கான உறவை பாதிப்பதாகவே அது அமையும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே இதனை உணர்ந்து, உறவு பாதிக்கப்படாத வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும்.

இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதில்லை; கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் இலங்கை மட்டும் இவ்வாறான போக்கொன்றை கடைப்பிடிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதியுடன் உள்ளது. மறுபுறத்தில் இலங்கையுடன் இந்தியாவுக்கு உளப்பூர்வமான, தோழமையான பாரம்பரியமிக்க உறவொன்று உள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் மனதிற்கொண்டு பிரச்சினைகளை அணுக வேண்டும். அது தொடர்பான முடிவுகள் பரஸ்பர உறவுகளை பாதித்துவிடக் கூடாது. அத்துடன் படையினருக்கும் அது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது கவலையான விடயமென்பதை இலங்கை ஜனாதிபதிக்கு வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி புலனாய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.

இதேவேளையில், நிருபமாவின் விஜயத்தின் முடிவில் இரு நாடுகளும் விடுத்த கூட்டறிக்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது. எனவே மீன்பிடித்தலை எந்தவித அச்சமுமின்றி தொடர முடியும். மீனவர்களை முழுமையாக பாதுகாக்குமாறு கடலோரக் காவற்படைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

லங்கா ஈ நியூஸ் அலுவலக தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை

கொழும்பிலுள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த தாக்குதலின் பின்னணியில் எவர் இருப்பினும் அந்த வன்முறையானது ஊடக நிறுவனங்களின் குரலை நசுக்கும் வகையிலும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை அச்சுறுத்தும் முகமாகவும் நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளமையை நாம் அறிகின்றோம்.

எனவே, விசாரணையை துரிதமாகவும் நீதியாகவும் மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அவசியமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

132 செ.மீ. அகலம்; 30 செ.மீ. உயரம் மிகப் பெரிய முத்திரை இன்று வெளியீடு



இலங்கையில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் வைஸ்ரோய் ரயிலுக்கு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று மிகப்பெரிய முத்திரையொன்று வெளியிடப்பட உள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு கூறியது. 132 சென்றிமீற்றர் அகலமும் 30 சென்றி மீற்றர் உயரமும் கொண்ட இந்த முத்திரை இலங்கையில் வெளியிடப்படும் மிகப்பெரிய முத்திரையாகும்.

வைஸ்ரோய் ரயிலின் புகைப்படத்தை தாங்கிய முத்திரையுடன் மேலும் 3 முத்திரைகளும் அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளன. இலங்கையில் வைஸ்ரோய் ரயில் சுற்றுலாப் பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முத்திரை வெளியீட்டு விழாவுக்கு வருகை தரும் அமைச்சர்களும் மேற்படி வைஸ்ரோய் ரயில் மூலம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கனை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முத்திரை வெளியிடும் வைபவம் ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நடைபெறும்.
மேலும் இங்கே தொடர்க...

புலி சந்தேக நபர்கள் குறித்த நடவடிக்கை துரிதம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை






கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புலிகள் இயக்க சந்தேக நபர்கள் தொடர்பான நடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்

பூஸா, ஓமந்தை உள்ளிட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்களை நேரில் சந்தித்து அவர்களை விடுதலை செய்வதா அல்லது வழக்குத் தாக்கல் செய்வதா என்பதை அறிந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஆணைக்குழுவினால் ஏற்பட்ட திருப்பமாகுமென்றும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த 2010 செப்ரம்பர் மாதம் ஆணைக்குழு ஜனாதி பதிக்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார்.

அதேபோன்று புலிகள் இயக்க சந்தேக நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவென சட்ட மா அதிபர் குழுவொன்றை நிய மித்தார்.

பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோ தலைமையிலான நால்வர் கொண்ட இந்தக் குழு பூஸா, ஓமந்தை போன்ற முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி விடுதலை செய்யக்கூடியவர்கள் விடுவிக்கப்படுவார்கள். வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பின் அதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொள்வார்கள் என்று விக்கிரமசிங்க தெரிவித்தார். புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுகோளின் பேரில், ஆணைக்குழு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் அவர் குறிப் பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி முன்னாள் புலி உறுப்பினர்களின் கைப்பணி பொருட்கள் காட்சிக்கு


மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தலயில் இம்முறை நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களினால் தயாரிக்கப்பட்ட கைப்பணி பொருட்கள் காட்சி கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைப்பணி பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன் விற்பனை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

கைப்பணி பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் பணத்தின் ஒரு பகுதியை கைப்பணி பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளின் செலவுக்கு எடுக்கப்படவுள் ளதுடன் எஞ்சிய தொகை உற்பத்திகளை செய்த புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களு க்கும் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். புனர்வாழ்வு வழ ங்கப்பட்டவர்களின் கைப்பணி பொருட்கள் இவ்வாறு காட்சிக்கு வைப்பது அவர்களது எதிர்கால நடவடிக்கைகளுக்கு சிறந்த சந் தர்ப்பமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

சகல புனர்வாழ்வு நிலையங்களைச் சேர்ந்தவர்களின் கைப்பணிப் பொருட்களும் இந்த கண்காட்சியின் போது காட்சிக்கு வைக்கவும், விற்பனை செய்யவும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காடசி எதிர்வரும் 4ம் திகதி புத்தலயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இம்மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு: சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் இவ்வாரம் ஆரம்பம் எழுத்து மூலம் 5000, வாய்மூலம் 500 சாட்சியங்கள்






கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவுக்கு இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சுமார் ஐயாயிரம் எழுத்து மூல சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுமார் 500 பேர் வாய்மூலம் சாட்சியம் அளித்துள்ள தாகவும் தெரிவித்த விக்கிரமசிங்க, சாட்சியங்களை ஆய்வு செய்த பின் தேவை ஏற்படின் பொது மக்களிடம் இரண்டாம் கட்ட சாட்சியம் பெற்றுக் கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற அமர்வுகளில் சுமார் 200 பேர் சாட்சியமளித்துள்ளதுடன், புலம்பெயர் தமிழர்கள் ஐந்து பேர் வரை சாட்சியமளித்துள்ளனர். கொழும்பில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகள் நேற்று முன்தினம் 31 ம் திகதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன. என்றாலும், சாட்சியங்கள் தொடர்பில் மேலதிகத் தகவல்கள் தேவைப்படின் இரண்டாம் கட்டமாக, பொது மக்கள் சிலரிடம் சாட்சியம் பெற்றுக் கொள்ளப்படுமென்று விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழு அதன் பணிகளை எதிர்வரும் மே மாதம் 15ம் திகதியுடன் முடித்திக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக அறிக்கையொன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று கூறிய அவர், அவ்வறிக்கையில் பரிந்துரைகள் பல முன்வைக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அம்பாறையில் வெள்ளத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டி ருந்த பகிரங்க அமர்வு இம்மாத நடுப்பகு தியில் நடைபெறுமென ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பெரும்பாலும் எதிர்வரும் 13ம் திகதி அமர்வு நடைபெறதன்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இறுதியாக நடைபெற்ற அமர்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் அமைச்சர் ஃபீலிக்ஸ் பெரேரா ஆகியோர் சாட்சியமளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வட பகுதி தமிழ் மக்களின் வாழ்வை சீர்குலைக்கும் ஆயுததாரிகளை முழுமையாக ஒழித்து கட்டுவது அவசியம்

வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க் கையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆயுத தாரிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது மிகவும் அவசியம் என்று இளை ஞர்களுக்கான நாளைய அமை ப்பின் தலைவரும், அம்பாந் தோட்டை மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.

யாழ். குடா நாட்டின் தற் போதைய நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிய பயங்கரவாத யுத்தத்தின் கசப்பானதும், கொடியதுமான விளைவுகள் குறித்து இலங்கை வாழ் மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றாலும் அது குறித்து நேரடியானதும், ஆழமானதுமான அனுபவங்களை வடக்கு, கிழக்கு மக்களே நன்றாக அறிந்திருக்கின்றனர்.

ஆயுதங்கள் மீதும், பலாத்காரம் மீதும் நம்பிக்கை வைத்த செயற்பாட்டாளர்களின் மடமையையும், அனர்த்தத்தையும் அம்மக் கள் நன்கு உணர்ந்துள்ளனர். அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளை மிகவும் வெட்கத்துடனும், வெறுப்புடனும் நிராகரிப்பது திண்ணம்.

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கு ஆயுதம் தாங்கிய சிலர் கொலை, கொள்ளை மற்றும் பல பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக ஜனநாயகத்தில் பங்கு கொள்ளச் செய்யும் வண்ணம் அரசாங்கம் ஜனநாயக நிறுவனங்களை தாபித்து அவற்றை வலுப்படுத்தி தடையின்றி செயற்படுத்தும் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில், முன்யோசனைகள் அற்ற வேட்டைக்காரர்களைப் போன்று சிலர் ஆங்காங்கு ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தமை மிகவும் மோசமான அச்சுறுத்தலை தோற்று வித்துள்ளது. முப்பது ஆண்டு காலமாக நிலவிய கொடிய பயங்கரவாத யுத்தத்தின் நினைவுகளை தட்டியெழுப்பி மீண்டும் தமிழ் மக்களை அதளபாதாள குழிக்குள் தள்ளும் ஓர் அபாயகரமான சமிக்ஞையாகவே இது தோன்றுகின்றது.

வடக்கில் சமாதானத்தையும், நல்லாட்சி யையும் தாபித்து, வடக்கின் வசந்தம் போன்ற அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஊடாக வடக்கில் ஏற்படுத்தி வரும் துரித பொரு ளாதார அபிவிருத்தி மூலம் வடக்கே வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு அயராது உழைத்து வருகிறது. இச்சூழ்நிலையில் ஆயுதம் தரித்த சிலர் யாழ்ப்பாணத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவது மனம் வருந்தத்தக்க விடயமாகும்.

அபிவிருத்திக்காகப் பயன்படுத்த இருந்த பெருவாரியான நிதியையும், மனித வளங்களையும், பயன்படுத்தி முப்பது ஆண்டு கால கொடிய பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கே வாழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த சமாதானமும், சகவாழ்வும் இச்செயற்பாடுகள் மூலம் அர்த்தமற்றதாக்கி விடக் கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள் ளது.

வடக்கே வாழ் மக்களுக்காக மேற் கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்திப் பணிகளையும் இவ்வாயுததாரிகளின் செயற்பாடுகள் பாதிக்கலாம். இது வடக்கே வாழ் மக்களின் துரித முன்னேற்ற த்தைப் பாதிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

ஒரு கணம் பரஸ்பர அவநம்பிக்கையும், சமூக நிலைப்பாடின்மையும் படிப்படியாக அற்றுப் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில், வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பி பரஸ்பர நம்பிக்கையும், சகவாழ்வும் படிப்படியாக விருத்தி பெற்று வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஆயுத தாரிகளின் இச்சட்ட விரோத செயற்பாடுகள் வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சந்தேகம் பரஸ்பரம் நம்பிக்கையற்ற தன்மை, சமூகப் பாதுகாப்பு அற்ற தன்மை போன்றவற்றை தோற்றுவித்து மீண்டும் அராஜகத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.

இதனால் சமூக உறுதிப்பாடும் நிரந்தர சமாதானமும் பற்றிய அவர்களின் அபார நம்பிக்கையும் கேள்விக்குள்ளாகலாம். இச்சூழ்நிலையில் சமாதானமும், சக வாழ்வும் அர்த்தமற்றதாகி விடும்.

மறுகணம், வடக்கே வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வொன்றுக் குத் தேவையான சாதக சூழ்நிலையும் சிறந்த அணுகுமுறையும் தற்போது உரு வாகி இருக்கின்றது.

நீண்ட காலத்திற்குப் பின்பு உருவாகி இருக்கும் இச்சுமுக சூழ் நிலை இவ்வாயுத தாரிகளின் செயற்பாடு களால் பாதிப்படைய இடமளிக்க முடி யாது. எனவே வடக்கில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர் யாராக இருந் தாலும் சரி அவர்களுடைய அந்தஸ்து, அதிகாரம் பாராது அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் உடனுக் குடன் தாமதமின்றி முன்னெ டுக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க உதவியுடன் 10,000 பேருக்கு ஆங்கில கல்வி




இலங்கையர்கள் 10,000 பேருக்கு ஆங்கில தொலைக்கல்வியை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.

உயர்கல்வித் துறையில் 30,000 பேருக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை வழங்குவதே தமது இலக்கு என குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த வருடத்திற்குள் 20,000 பேருக்கு இம் மொழிப் பயிற்சியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவற்றில் 10,000 பேருக்குத் தொலைக்கல்வியாக ஆங்கில மொழிப் பயிற்சியை அமெரிக்கா வழங்குமெனத் தெரிவித்த அமைச்சர், ஒருவருட காலத்திற்கு இதற்கான நிதியினையும் அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய பிரதேச ஊடகவியலா ளர்கள் பங்கேற்கும் இலத்திரனியல் ஊடக செயலமர்வு நேற்று கொழும்பு நாரஹேன் பிட்டியிலுள்ள தேசிய தொலைக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடை பெற்ற மேற்படி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தகவல் ஊடக அமைச்சு, உயர் கல்வியமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: பிரதேச ஊடகவியலாளர்க ளின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையிலேயே இச் செய லமர்வு நடத்தப்படுகிறது. இச்செயலமர்வில் நாடளாவிய ரீதியில் 20 மத்திய நிலையங்களிலிருந்து 500ற்கும் மேற்பட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.

எதிர்காலத்தில் 300 கிராமப்புற பாடசா லைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அதேவேளை உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் க. பொ. த. உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தமது அறிவையும் அனுபவத்தையும் மேம்படுத்திக்கொண்டு உலகளவில் முன்னேறுவதற்கு முன்னிற்க வேண்டும். உலகின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலமுள்ளவர்களாக பல்துறை சார்ந்தவர்கள் திகழ்ந்துள்ளனர். இப்போது கற்றவர்களே அதற்குப் பொருத்தமானவர்கள். உலகின் மொழிகளைக் கற்று தகவல் தொழில்நுட்பத்தினூடாக முன்னேற்றமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் அமைச்சர் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் அமோக வெற்றியீட்டும் வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டமை எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தாது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போதும் அதனால் ஐ.ம.சு.முவுக்கு எதுவித பின்னடைவும் ஏற்படவில்லை. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி பெருவெற்றியீட்டும் என ஐ.ம.சு. முன்னணி தலைவர்கள் நேற்று கொழும்பில் தெரிவித்தனர்.
ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரமுள்ள கட்சிக்கே கிராமத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் மக்கள் வழங்குவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், நிமல்சிறிபால டி சில்வா, டளஸ் அழகப் பெரும, விமல் வீரவங்ச, ஐ.ம.சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, மாகாண அமைச்சர் உதய கம்மம்பில ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சர் மைத்திரிபால

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாவது, ஆளும் கட்சிக்கே உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தையும் மக்கள் வழங்குவர், இதில் ஐயமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைப் பெருவெற்றி பெறச் செய்தனர். அடுத்து நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ.ம.சு. முன்னணி பாரிய வெற்றியீட்டியது. ஐ.ம.சு. முன்னணி போட்டியிடும் சகல உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் எமக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி.

அரசாங்கத்தினதோ மாகாண சபைகளினதோ உதவி இன்றி உள்ளூராட்சி சபைகளினால் இயங்க முடியாது. இந்த நிலையில் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க மக்கள் தயாராக இல்லை. மக்கள் புத்திசாலித் தனமாகவே முடிவெடுப்பர் என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது,

சில உள்ளூராட்சி சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதன் மூலம் ஐ.ம.சு. முன்னணிக்கு எதுவித பின்னடைவும் ஏற்படவில்லை. ஐ.ம.சு. முன்னணியின் கூடுதலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போதும் ஏனைய கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பாடம் கற்று எதிர்காலத்தில் ஒழுங்காக செயற்பட உறுதி பூண்டுள்ளோம்.

எமது கட்சிக்கு அடி மட்ட முதல் பாரிய அடித்தளமுள்ளது.

சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதன் மூலம் எமது அரசியல் பலம் குறையவில்லை.

மக்கள் எம்முடனே உள்ளனர். கிராம மட்டத்தில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதால் எமது வேட்பாளர்களும் தைரியமாக கிராமத்திற்கு சென்று வாக்குக் கேட்க முடியும்.

ஆனால் ஐ.தே.க.வுக்கோ ஜே.வி. பி.யிற்கோ கிராமங்களுக்குச் சென்று மக்களைக் கவர எதுவித தலைப்பும் கிடையாது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிகாரத்துக்கு வரும் சாத்தியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.

தேர்தல் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவுள்ளோம். எமது வாக்குப் பலத்தில் சிறு பின்னடைவும் ஏற்படவில்லை என்றார்.

அமைச்சர் விமல் வீரவங்ச

இந்தத் தேர்தல் அரசாங்கத்திற்கே முக்கியமானதாகும். எதிர்க்கட்சிகளுக்கு இது மற்றொரு தோல்வி மட்டுமே. ஐ.தே.க. வின் தோல்வியை சஜித் பிரேமதாஸ முன்கூட்டியே ஏற்றுக் கொண்டு விட்டார். உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் மக்கள் சபைகள் அமைக்கப்பட்டு கிராம அபிவிருத்தி துரிதப்படவுள்ளது. கிராமத்தின் அதிகாரத்தை மக்கள் ஐ.ம.சு. முன்னணிக்கே வழங்குவர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன்

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியதாவது, இந்தத் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி பெருவெற்றியீட்டும். ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு. முன்னணி அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. மன்னார் பாலம், சங்குப்பிட்டி பாலம், திருகோணமலை வீதி, ஏ-9 வீதி, ஏ- 32 வீதி என பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன.

ஐ.ம.சு. முன்னணியை வெல்ல வைப்பதன் மூலம் நாட்டில் அபிவி ருத்திப் பணிகள் சிறப்பாக இடம் பெறும்.

இந்தத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் நடக்காது. 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் ஐ.ம.சு. முன்னணியை வெற்றிபெற வைப்பதற்கு அணிதிரள வேண்டும். மக்களின் எதிர்காலமும் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு என்பவற்றிக்காக ஐ.ம.சு. முன்னணியை மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம் மக்கள் புத்தி சாதுர்யமாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...