30 ஏப்ரல், 2010

வீடியோ காட்சி போலி: நித்யானந்தாவுடன் இருப்பது நான் அல்ல; ரஞ்சிதா பரபரப்பு தகவல்






பெங்களூரை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுக்க தியான பீடங்கள் நடத்தி வந்த நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகளை கடந்த மாதம் 2-ந்தேதி ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

நித்யானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்பவர் அந்த காட்சியை எடுத்ததாக கூறினார். அதன் அடிப்படையில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 21-ந்தேதி நித்யானந்தாவை கைது செய்தனர்.

நித்யானந்தாவை தற்போது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் இதுவரை முக்கிய தகவல்கள் எதையும் நித்யானந்தா வெளியிடவில்லை. நான் தவறு எதுவும் செய்யவில்லை என்று திரும்ப, திரும்ப கூறி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகை ரஞ்சிதாவையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கர்நாடக போலீசார், நடிகை ரஞ்சிதாவை தேடிவருவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் ரஞ்சிதா கேரளாவில் இருப்பதாகவும், ஓரிரு நாளில் பெங்களூர் வந்து போலீசாரிடம் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கப்போவதாகவும் நேற்று ஒரு பரபரப்பு தகவல் வெளியானது.

தன்னைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று முதன் முதலாக ரஞ்சிதா தெரிவித்துள்ளார். படுக்கை அறை காட்சிகள் வெளியாகி கடந்த 2 மாதமாக பல்வேறு பரபரப்பு தகவல்கள் பரவிய போதும் ரஞ்சிதா மவுனமாக இருந்து வந்தார். தற்போது அவர் டெல்லி வக்கீல்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நித்யானந்தாவுடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல. எனவே இனியும் அந்த காட்சிகளை வெளியிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று ரஞ்சிதா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ரஞ்சிதாவின் வக்கீல் பிரசாந்த் மென்டிரட்டா கூறியதாவது:-

எனது கட்சிக்காரர் நடிகை ரஞ்சிதா எல்லாரும் நினைப்பது போல நித்யானந்தா சாமியாரின் தீவிர பக்தை அல்ல. பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்து பணிவிடைகள் செய்யவும் இல்லை. ஆனால் மன அமைதிக்காக நித்யானந்தா சாமியாரை சந்தித்துள்ளார்.

நித்யானந்தா பீடத்தில் போடப்படும் ரகசிய ஒப்பந்தம் ஒன்றில் ரஞ்சிதா கையெழுத்துப் போட்டுக்கொடுத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் எந்த உண்மையும் இல்லை. அது தவறான தகவல்.

அதுபோல நித்யானந்தாவுடன், அந்த டேப் பில் இருப்பது ரஞ்சிதாவே அல்ல. அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் முழுவதும் எடிட் செய்து காட்சிகளை ஒன்று சேர்த்துள்ளனர். கோர்ட்டில் இந்த வழக்கு நிற்காது.

ரஞ்சிதாவுக்கு எதிராக திட்டமிட்டு மிகப்பெரிய சதியை அரங்கேற்றி உள்ளனர். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும்வரை போராட அவர் முடிவு செய்துள்ளார்.கடந்த 2 மாதமாக நிலவும் இந்த சர்ச்சையால் ரஞ்சிதாவின் வாழ்க்கையே பாழாகிவிட்டது. அவரது நற்பெயர் தேவை இல்லாமல் கெட்டுள்ளது. மன உளைச்சல் ஏற்பட்டு, வருவாய் இழப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு காரணமான நித்யானந்தாவின் சீடர் லெனின் மீது ரஞ்சிதா மான நஷ்ட வழக்கு தொடர உள்ளார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நித்யானந்தா படுக்கை அறைக்காட்சிகளை இரண்டு இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. உள்நோக்கத்துடன் அவை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வீடியோ காட்சிகளை வரும் 2-ந்தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்குள் அகற்றி விட வேண்டும். கூகுள் மற்றும் யூடியூப் இணையத் தளங்களுக்கு ரஞ்சிதா நோட்டீசு அனுப்பி உள்ளார். 2-ந்தேதிக்கு பிறகும் அந்த காட்சிகள் இருந்தால் இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் அந்த 2 இணையத் தளங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.

இந்த எச்சரிக்கையை 2 இணையத்தளங்களுக்கும் பேக்ஸ் மற்றும் கூரியர் மூலம் ரஞ்சிதா அனுப்பி உள்ளார்.

இவ்வாறு ரஞ்சிதா வக்கீல் பிரசாந்த் கூறினார்.

நடிகை ரஞ்சிதா தற்போது எங்கு இருக்கிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு வக்கீல் பிரசாந்த் கூறுகையில், ரஞ்சிதா, அவர் குடும்பத்தினருடன் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்கிறார் என்றார். எந்த மாநிலத்தில் இருக்கிறார் என்று கேட்டபோது வேறு எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வக்கீல்கள் தகவல்





சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவில் இருந்து வந்த பிரபாகரனின் தாயார் திரும்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை கோர்ட்டில் நீதிபதி தர்மாராவ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் வந்தது. அப்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா கூறியதாவது:-

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக்கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் மனு கொடுக்கப்படும். அந்த மனுவை மத்திய-மாநில அரசுகள் பரிசீலித்து 4 வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

போலீஸ் காவல் முடிந்தது நித்யானந்தா, இன்று சிறையில் அடைக்கப்படுகிறார்; நான் ஆண் அல்ல என்று வாக்குமூலம்




பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகார்கள் தொடர்பாக நித்யானந்தா சாமியார் கடந்த 21-ந் தேதி இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். பெங்களூர் அழைத்து வரப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) நித்யானந்தா சாமியாரின் போலீஸ் காவல் முடிகிறது. எனவே இன்று 8-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இன்று மாலை நித்யானந்தாவை ராம்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு கொடுப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் மீண்டும் போலீஸ் காவல் கிடைப்பது அரிது.

நித்யானந்தாவை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார். இதையடுத்து ராம்நகர் சிறையில் நித்யானந்தா அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. நித்யானந்தாவிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணை இன்னும் முடியவில்லை.

நேற்றும், இன்றும் போலீசார் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நித்யானந்தா சமர்த்தாக, ஒழுங்காக பதில் சொன்னதாக தெரிய வந்துள்ளது. முதல் 5 நாட்கள் நித்யானந்தா எந்த பதிலையும் ஒழுங்காக சொல்ல வில்லை.

எந்த கேள்வி கேட்டாலும், ஏதாவது மந்திரம் சொல்லி சமாளித்தப்படி இருந்தார். ஆனாலும் போலீசார் மனம் தளராமல் விசாரித்து சில தகவல்களை பெற்றுள்ளனர். அந்த தகவல்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே நேற்று போலீஸ் விசாரணையின் போது யாரும் யோசிக்காத புது குண்டு ஒன்றை நித்யானந்தா தூக்கிப் போட்டது தெரிய வந்துள்ளது. நேற்று விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஒரு போலீஸ் அதிகாரி, இதுவரை எத்தனை பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு நித்யானந்தா, நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த விஷயம் தவறு. ஏனெனில் நான் ஆண் கிடையாது. ஆணே இல்லாத ஒரு நபர் எப்படி ஆசைக்கு அடி பணிந்து பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டிருக்க முடியும். அதற்கு வழியே இல்லை. நான் கடவுள் மாதிரி. வேண்டுமானால் நீங்கள் எனது ஆண்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நித்யானந்தாவின் இந்த பதிலால் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் ஒரு நிமிடம் அரண்டு போய்விட்டனர். நித்யானந்தா ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத திருநங்கையாக இருக்குமோ என்று குழப்பம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்தே விசாரணையை திசை திருப்ப நித்யானந்தா செய்யும் நாடகம் என்று தெளிவான நிலைக்கு வந்தனர்.

முன்னதாக ஒரு கட்டத்தில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று பெங்களூர் போலீசார் தீர்மானத்துக்கு வந்தனர். இதற்காக பெங்களூரில் உள்ள 4 அரசு ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.

இந்த நிலையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டில் அவர் ஆண் என்று குறிப்பிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் நித்யானந்தா தான் ஆண் இல்லை என்று சொன்னதை போலீசார் கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையே தடயவியல் சோதனையிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டு விட்டனர்.

நித்யானந்தா தினமும் பூஜைக்கு பயன்படுத்தும் கமண்டலம் தங்கத்தால் தயாரிக்கப்பட்டது. அது போல அவர் அணியும் செருப்பும் தங்கத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு செல்லும் போது அவர் தங்க செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி வருமான வரித்துறையினரும், சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே நித்யானந்தாவின் உதவியாளர் கோபிகா எங்கே போனார் என்பது மர்மமாக உள்ளது? அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதும் புரியாத புதிராக உள்ளது.

நித்யானந்தாவின் நிழல் போல அவர் உலா வந்தார். நித்யானந்தா எந்த நாட்டுக்கு சென்றாலும் கூடவே கோபிகாவும் செல்லும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார்.

ரஞ்சிதா பிடதி ஆசிரமத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கியதும், அவருடன் நித்யானந்தா தீவிரமாக பழகத் தொடங்கியதும் கோபிகா கோபம் அடைந்து, சீடர் லெனினை தூண்டி விட்டு நித்யானந்தா செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு இந்திய பெண், தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு நித்யானந்தாவுக்கு பணிவிடைகள் செய்து வந்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அந்த பெண் தான் கோபிகாவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் எழுந்துள்ளது.

கோபிகா அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிறிஸ்மஸ் தீவுகளில் அகதிகள் ஆர்ப்பாட்டம்



அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்ட 25 பேர் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளே இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தமது அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டதால் புகலிடம் இன்றி ஆத்திரமுற்ற குறித்த அகதிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கப்படலாம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அடைக்கலம் மறுக்கப்பட்ட மக்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது.

ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரா என்ற சிறுபான்மை இனத்தவர்களே பெரும்பாலும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கே அடைக்கலம் மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதனால், அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். மேலும் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது " என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லூரில் நட்சத்திர விடுதி : 10ஆம் திகதி இறுதி முடிவு




யாழ். நல்லூரில் ஐந்து நட்சத்திர விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும். யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் ஆலோசனையின் கீழ் விடுதி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

பி.எல்.சி வங்கியின் அனுசரணையுடன் 400 மில்லியன் ரூபா செலவில் 80 அறைகள் கொண்ட உல்லாசப் பயணிகளுக்கான நட்சத்திர விடுதி அமைக்கும் பணியில் பல பாகங்களில் இருந்தும் வந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் குறிப்பிட்டார்.

குறிப்பாக 4 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று, நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சமீபமாக நட்சத்திர விடுதியை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பது. யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான இந்து தமிழர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இரண்டு, நட்சத்திர விடுதி அமைக்கப்படவுள்ள காணி. இது பண்டைய கால தமிழ் மன்னரான சங்கிலியனின் கோட்டை அமைந்திருந்த இடம்.

மூன்று, யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அடிப்படை வசதிகள்,பொருளாதாரத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் நிலையில், 400 கோடி ரூபா செலவில் நட்சத்திர விடுதி அமைப்பது முக்கியமான ஒன்றல்ல என்ற கருத்து.

நாங்உ, பாரிய செலவினத்தில் இந்த நட்சத்திர விடுதி அமைக்கப்படுவதால் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அது உதவியாக அமையாது என்ற அபிப்பிராயம்.
மேலும் இங்கே தொடர்க...

சிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்

ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களுக்கு “கேக் ஊட்டி” மகிழ்வித்தார்.

தகவல் ஊடகத்துறை பதிலமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுக்காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாகக் கையேற்றார்.

அந் நிகழ்வில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த “கேக்”கை அவர் ஊடகவியலாளர்களை அழைத்து வெட்ட வைத்ததுடன் அவர்களுக்கு “கேக்” ஊட்டியும் மகிழ்வித்தார்.

கடந்த காலங்களில் சில ஊடக நிறுவனங்களுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அத்தகைய கசப்பான சம்பவங்களை மறந்து சகோதரத்துவத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர் “சிரச” ஊடகவியலாளரைக் குறிப்பிட்டு “கேக்” வெட்ட அழைத்தார். அவ்வாறு வெட்டப்பட்ட “கேக்”கை சிரச ஊடகவியலாளர் அமைச்சருக்கு ஊட்ட அமைச்சரும் அவ்வூடகவியலாளருக்கு திருப்பி ஊட்டினார். அத்துடன் “திவயின” ஊடகவியலாளருக்கும் அமைச்சர் ஊட்டினார்.

இதன் போது ஊடகவியலாளர்கள் கரங்களைத் தட்டி ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை




சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ



புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவ தில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

பொரளையிலுள்ள அமைச்சில் நேற்று (29) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் குணசேகர இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் குணசேகர நேற்றுக் காலை 10. 45 இற்கு சுபவேளையில் கடமைகளைப் பொறுப்பேற்று ஆவணங்களில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வுக்குப் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா மற்றும் நிதிப் பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ரணசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ. ஆர். சில்வா, பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க, கட்சி முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டியூ மேலும் கூறியதாவது,

“நாட்டின் பதில் அரச தலைவராக பிரதமர் விளங்குகின்ற சமயத்தில், அவர் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வது பெருமையளிக்கிறது. அவருக்கும் எனக்கும் நான்கு தசாப்தகால உறவு உண்டு. அவர் கண்டியில் கல்வி கற்றபோது வகுப்புகளுக்குச் செல்வதை விடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

1956 இல் 1970 இல், 1994 இல், 2004 இல், 2010 இல் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பெரும்பங்காற்றி இருக்கிறார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவர். அவர் பிரதமராக இருப்பதைவிட பதில் அரச தலைவர் என்பது இப்போதுதான் தெரியும். இது ஒரு புதிய அமைச்சு, இதனைப் பொறுப்பேற்றபோது அதன் பொறுப்புகள் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்.

இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர் வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கவேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன், சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.

இதற்குப் பொலிஸ், நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர், முதியோர், பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும். நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எமக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விஜேகுமாரதுங்கவும், சந்திரிகாவும் காலை ஆறு மணிக்கே வந்துவிடுவார்கள். எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எமக்கு உணவு வந்தது.

ஆகவே, சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். சமூகத் தேவைகளின் அடிப்படையில்தான் சிறை வைக்கின்றோம். அவர்களை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பவேண்டும். குற்றச் செயல்கள் உருவாக வறுமையும் காரணம்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருவேன். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான் பாதாள உலகத்திற்கும் சிறைக்குமான உறவைத் தடுக்க முடியும். இதுவிடயத்தை உளவியல் நோக்கில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார் அமைச்சர்
மேலும் இங்கே தொடர்க...

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள் உரியவரிடம் கையளிப்பு : ஆளுநர்


புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லட்சம் சைக்கிள்கள் என்பன உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது பொதுமக்கள், புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் சைக்கிள்களே உரியவர்களிடம் படிப்படியாக கையளிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

எனவே மேற்படி போர் அனர்த்தங்களின்போது சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுச் சென்றவர்கள், பொலிஸ் அறிக்கையின் போட்டோ பிரதி இரண்டு, அடையாள அட்டை 2 பிரதி, வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் இரு பிரதி மற்றும் ஆவணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 5000 மோட்டார் சைக்கிள்களும் 7 ஆயிரம் சைக்கிள்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை : யாழில் துண்டுப்பிரசுரம்


வர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

அதில்,

‘இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும்.

அதியுச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்.

எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள இதேவேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் எமது தாய்மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. (அறிவித்தல்)

சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப் -பத்மநாபா) அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9.00மணிக்கு சூரிச் கெல்வெதியா பிளாத்ஸ் எனுமிடத்தில் ஆரம்பமாக உள்ள மேதின ஊர்வலத்தில் கழக தோழர்கள் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகட்கு.. 076.3681546 079.6249004
மேலும் இங்கே தொடர்க...

29 ஏப்ரல், 2010

மேலவையில் தமிழர் பிரதிநிதித்துவம்” இலங்கை அதிபர் மஹிந்தவும் இந்திய பிரதமர் மன்மோகனும்




இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேலவையை உருவாக்கி அதில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி அங்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவதில் தனது அரசு தீவிரமாக இருப்பதாகவும், தமிழர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் மேலும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்றும் மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ஷ அவர்கள் எடுத்துரைத்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமும் தமிழர்களின் தலைமையிடமும் தனது அரசு நேசக்கரம் நீட்டும் என்று ராஜபக்ஷ அவர்கள் கூறியதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியா வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை

இதற்கிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையில் மீண்டும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க முடிவு செய்துள்ளன.

பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ராஸா கிலானியும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தைக்கான வழிகளைத் திறந்து வைப்பது அவசியம் என்று இரு நாட்டுத் தலைவர்களும் முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷர்மல் ஷெக்கில் நடந்த சந்தி்ப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் மீண்டும் இன்று சந்தித்துள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும், தங்களது வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலில் சந்தித்தனர். பின்னர் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

அந்தச் சந்திப்பு வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருந்ததாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

24 விண் கற்களில் தண்ணீர்: நாசா கண்டுபிடித்தது





நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன் ஓடம் கண்டுபிடித்தது. இதே போல சூரியனை சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

சூரியனை சுற்றி வரும் கோள்களை தவிர ஏராளமான விண்கற்களும் விண்ணில் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கற்கள் ராட்சத அளவில் இருக்கின்றன. அதாவது 200 கிலோ மீட்டருக்கு மேல் அகலமாக இருக்கின்றன.

அந்த கற்களை அமெரிக்காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹவாய் தீவில் ராட்சத டெலஸ்கோப்பை அமைத்து உள்ளனர். அதன் மூலம் இந்த கற்களை ஆய்வு செய்தனர்.

அதில் தண்ணீர் இருப்பது தெரிய வந்தது. உறைந்த நிலையில் மேல் பகுதிகளில் தண்ணீர் இருந்தன. தண்ணீர் இருப்பதால் அவற்றில் உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபற்றியும் ஆய்வு நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டிச் சம்பவம் : எம்பிக்கள் மூவரிடமும் ஸ்ரீலசுக விசாரணை

நாவலப்பிட்டிச் சம்பவம் தொடர்பாக கண்டி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீ.ல.சு.க.விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி பூட்டானில் இருந்து நாடு திரும்பியதும் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது நாவலப்பிட்டிய பகுதியில் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றியே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி குழப்ப நிலை காரணமாக மீள் வாக்குப் பதிவு நடந்தது. எனினும் கண்டி மாவட்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அலுத்கமகே, கெஹெலியா றம்புக்வெல்ல, எஸ்.பி. திசாநாயக ஆகியோரிடம் வாக்குமூலம் பதியப்பட்டதாகக் கூறப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

சரத்துக்கு வழங்கப்பட்ட காணிக்குச் செல்ல அனோமாவுக்கு அனுமதி மறுப்பு : விஜித ஹேரத்

நகர அபிவிருத்தி அதிகார சபை, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த காணிக்குச் செல்வதற்கு அவரது மனைவி அனோமாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யுத்த வெற்றியின் பின்னர், நாட்டுக்காக ஆற்றிய சேவையினைப் பாராட்டி, முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு கொழும்பு நாரஹென்பிட்டியில் காணி வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பான சகல ஆவணங்கள் இருந்தும், அங்கு செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்தது.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இத்தகவலைத் தெரிவித்தார்.

"இது போன்ற காணிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மட்டுமல்லாது ஏனைய முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன. திருமதி பொன்சேகா அங்கு சென்ற வேளை, அவ்விடத்தில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் எனத் தமது உயர்பீடம் அறிவுறுத்தியுள்ளதாக அங்கிருந்த பொலிஸார் கூறியுள்ளனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் வந்துவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பது புலனாகிறது" என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

ரணில் - சஜித் இன்று மாலை சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வருமான சஜித் பிரேமதாசவை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கியத் தேசியக் கட்சியின் உயர் பதவிகளில் எதிர்வரும் வாரங்களில் பாரிய மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

அதன் ஓர் அங்கமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பு இன்று மாலை இடம்பெறலாம் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன
மேலும் இங்கே தொடர்க...

புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக லாரா தகவல்!

புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மனைவி லாரா வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தகவல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி லாரா ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். 'இதயத்தில் இருந்து சொல்கிறேன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை இவர் தொகுத்து எழுதி உள்ளார்.

அதில் பல்வேறு ரகசியத் தகவல்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. 2007ஆம் ஆண்டு ஜெர்மனியில் தனக்கும், புஷ்ஷுக்கும் விஷம் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவலையும் அவர் அந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

அவர் எழுதிய அந்தப் புத்தகதில்,

"2007ஆம் ஆண்டு ஜி-8 நாடுகள் மாநாடு ஜெர்மனியில் நடந்தது. இதில் என் கணவருடன் நானும் கலந்து கொண்டேன். அங்குள்ள ரிசார்ட் ஓட்டலில் நாங்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தோம்.

அப்போது புஷ்ஷுக்கு உடல் நலம் பாதித்தது. நானும் பாதிக்கப்பட்டேன். காலையில் இருவராலும் எழுந்திருக்க முடியவில்லை. வைரஸ் காய்ச்சல் தாக்கி இருக்கலாம் எனக் கருதினோம். இதனால் அன்று காலை நடந்த கூட்டத்தில் புஷ் பங்கேற்கவில்லை.

நாங்கள் மட்டுமல்ல, எங்களோடு வந்திருந்த வெள்ளை மாளிகை குழுவினரும் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடக்கவே சிரமப்பட்டார். எல்லோருக்குமே காது சரியாகக் கேட்கவில்லை.

முதல் நாள் இரவு எங்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் கலந்திருக்கலாம். அதனால்தான் எல்லோருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அமெரிக்க ரகசிய புலனாய்வு குழு இது பற்றி விசாரணை நடத்தியது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று எழுதப்பட்டிருக்கின்றது.

புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அப்போது எந்த தகவலும் வரவில்லை. லாரா எழுதிய புத்தகம் மூலம் முதல் முதலாக இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போலீஸ் வலையில் நடிகை ரஞ்சிதா : 2 நாளில் நேரில் ஆஜராவதாக உறுதி





பெங்களூரு : நித்யானந்தாவிடம் நடத்திய விசாரணையில், நடிகை ரஞ்சிதா இருக்குமிடத்தை, கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் கண்டுபிடித்தனர். 'இரண்டு நாட்களில் நடிகை ரஞ்சிதா விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்று அவருக்கு கர்நாடகா போலீசார், 'கெடு' விதித்துள்ளனர்.

சாமியார் நித்யானந்தாவுடன் வீடியோ காட்சிகளில் நெருக்கமாக இருந்த நடிகை ரஞ்சிதா, தலைமறைவானார். ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அடிக்கடி தங்கும் இடத்தை மாற்றிக் கொண்டிருந்தார். கேரளாவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. போலீசில் நித்யானந்தா சிக்கியவுடன், நடிகை ரஞ்சிதா குறித்து பலமுறை அவரிடம் விசாரித்தனர். முதலில் பதில் கூற மறுத்த நித்யானந்தா, பின்னர், ரஞ்சிதா இருக்கும் இடத்தைக் கூறினார். ரஞ்சிதாவின் மொபைல் நம்பரில், முதலில் நித்யானந்தாவை போலீசார் பேச வைத்தனர். அதன் பின்னர், கர்நாடகா சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் நடிகை ரஞ்சிதாவிடம் பேசப்பட்டது. அப்போது ரஞ்சிதா, 'இன்னும் இரண்டு நாளில், நானே நேரடியாக விசாரணைக்கு வருகிறேன்' என்று கூறியதாகத் தெரிகிறது.

இது குறித்து கர்நாடக சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா கூறுகையில், ''நடிகை ரஞ்சிதா இருக்கும் இடம் தெரிந்துள்ளது. நித்யானந்தா மூலம், அவர் இருக்கும் இடத்தை அறிந்தோம். ரஞ்சிதாவிடம் பேசும் போது, இரண்டு நாட்களில் அவர் விசாரணைக்கு வராவிட்டால், அவர் இருக்கும் இடத்திற்கு போலீசார் நேரில் சென்று, அவரை கைது செய்து, திறந்த ஜீப்பில் அழைத்துவருவோம். இந்த வழக்கில் அவர், ஒரு சாட்சி மட்டுமே,'' என்றார். இந்த தகவல்களை வெளியிட்ட எஸ்.பி., யோகப்பா, நடிகை ரஞ்சிதா இருக்கும் இடத்தை தெரிவிக்கவில்லை. நித்யானந்தா சம்பந்தமான விசாரணைக்கு ஒத்துழைப் பதாக நடிகை ரஞ்சிதா கூறியதாகத் தெரிகிறது. நித்யானந்தாவிடம் சி.ஐ.டி., போலீசார் கேட்ட கேள்விகளுக்குரிய பதிலை வைத்து, நடிகை ரஞ்சிதாவிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சாமியார் கூறிய பதிலுக்கும், ரஞ்சிதா தெரிவிக்கும் பதிலுக்கும் தொடர்பு உள்ளதா என்று அறிய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல்: நித்யானந்தாவிடம் நடத்திய விசாரணை முடிவடையாததால், அவரை மேலும் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, ராம்நகர் நீதிமன்றம் அனுமதியளித்தது. நித்யானந்தாவிடம் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன. நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த இரண்டு நாள் அனுமதி கிடைத்ததில், ஒரு நாள் மருத்துவமனையிலேயே கழிந்து விட்டதால், நேற்று சில மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதில் தான் போலீசார் ஆர்வம் காட்டினர். நேற்று மதியம் 3 மணியளவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நித்யானந்தா, ராம்நகர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப் பட்டார்.

சி.ஐ.டி., போலீஸ் தரப்பில், 'சாமியார் நித்யானந்தாவிடம் விசாரணை முடியவில்லை. மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆறு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயண பிரசாத், நித்யானந்தாவை மேலும் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். வரும் 30ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். நித்யானந்தா குறித்த தகவல்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய அவருடைய சீடர் லெனினிடம், கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் சில நாட்களாக விசாரணை மேற் கொண்டனர். நித்யானந்தாவின் ரகசிய ஒப்பந்தங்கள், அந்தரங்க நடவடிக்கைகள், வெளிநாட்டு பணம் சம்பாதிப்பு, நித்யானந்தா மடத்தின் கிளைகள், அவற்றின் நடவடிக்கைகள் உட்பட முக்கிய தஸ்தா வேஜுகள், சில 'சிடி'க்களை யும் லெனின் அளித்துள்ளதாக தெரிகிறது. நித்யானந்தா எப்போதும் தனது கையில் ருத்ராட்ச மாலை வைத்திருப்பார். இந்த மாலையை தற்போது கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் வாங்கி வைத்து உள்ளதாக நித்யானந்தாவின் வக்கீல் தெரிவித்து உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியமை : உடன் பதிலளிக்க ம. அரசுக்கு உத்தரவு



சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைசிகீ திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

மனுவில், "மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடுகையில்,

"இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது" என்று கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை(இன்று)பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

துப்பாக்கிச் சவால் இன்றித் திறந்த கலந்துரையாடல் : திம்பு மாநாட்டில் ஜனாதிபதி



இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15 ஆவது சார்க் மாநாட்டுக்காக கொழும்பில் நாங்கள் சந்தித்த போது, முப்பது வருடங்களாக நிலவிய மிகக் கொடூரமான பயங்கரவாத சவாலுக்கு இலங்கை முகம் கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதத்தை அழித்தொழித்த எமக்கு, துப்பாக்கியின் சவால் இல்லாமல் வெளிப்படையாகக் கலந்துரையாடி ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சார்க் உடன்பாட்டின் உறுப்புரையினை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நாம் இனங்கண்ட கண்காணிப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பூட்டான் தலைநகரான திம்புவில் நேற்று ஆரம்பமான சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது :

"அழகான திம்பு நகரத்தில் உங்களுடன் கைகோர்த்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பிரதமர் நின்லே அவர்களே! சார்க் அமைப்பின் வெள்ளிவிழாக் காணும் வருடத்தில் நீங்கள் அதன் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் அமைப்பின் தலைவராக இருக்கின்ற காலத்தில் முழுமையான ஆதரவை வழங்குவேன் என நான் சத்தியம் செய்துகொள்கின்றேன்.

சகலரினதும் ஆதரவு தேவை

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில், கூடுதலான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொடுத்த எனது நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு அருகில் இருக்கின்ற உங்கள் சகலரினதும் ஆதரவைக் கோரி நிற்கின்றேன். அந்த ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கின்றேன்.

1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்தப் பயணத்தில் வெள்ளிவிழா கண்டுகொண்டிருப்பதை முன்னிட்டு நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். எதிர்காலச் சந்ததியினருக்காக நாம் கைகோர்த்துக்கொண்டு, எமது பயணத்தைத் தொடரவேண்டும். அது பயனளிப்பதாக அமையும்.

சார்க் மாநாடு இம்முறை 'சுற்றாடலும் தெற்காசியாவும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது. குளிர்மை மற்றும் தட்பவெப்ப நிலைமை தொடர்பில் ஆராயவேண்டியது தெற்காசிய வலய நாடுகளுக்குப் பொருத்தமானதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் வலயத்தின் குரல் சர்வதேச மேடைகளில் பலமாக ஒலிப்பதற்கு எங்கள் அனைவருக்கும் பொதுவான பொறுப்பு இருக்கின்றது.

தனி நபர் வருமானம் அதிகரிப்பு

ஜனநாயக நிர்வாகத்திற்காக முழுமையான அர்ப்பணிப்பு எமது முழு வலயத்திற்கும் பொதுவானதாகும். இந்தியாவின் முழுமையான அபிவிருத்தியுடன் இணைந்த எமது பொருளாதாரம் உலகப் பொருளாதார வீழ்ச்சியின் போது சரியான முறையில் முகம்கொடுக்க முடிந்துள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அழுத்தம் இருந்த போதிலும், இலங்கையில் எங்களுக்கு 6 வீத வளர்ச்சி வேகத்தில் கொண்டுசெல்வதற்கு முடிந்துள்ளது. அதனால், ஐந்து வருடங்களுக்கு முன்னர் 1,060 டொலராக இருக்கந் தனிநபர் வருமானம் இன்று 2,050 டொலர் வரை சென்றுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக முழுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட காலத்தில் கூட அபிவிருத்தி தொடர்பில் எம்மிடமிருந்த கவனத்தை நாம் குறைத்துக் கொள்ளவில்லை.

அரசியல் மறுசீரமைப்பிற்காக எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம், பொருளாதாரம் மற்றும் அரசியலுக்கு இடையில் தொடர்பு இருப்பதாக நாம் நம்புகின்றோம்.

சார்க் தலைமை வகித்த கடந்த 18 மாதங்களில் மிக முக்கியமான பிரிவுகளில் வலயத்தில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்தோம். மின்சக்தி, உயர்கல்வி, மாணவர்களின் போக்குவரத்து, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், அது மட்டுமன்றி பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான அமைச்சர்களின் ஆறு கூட்டங்கள் எமது நாட்டில் நடைபெற்றுள்ளன.

இலங்கையின் நடவடிக்கை

உலகப் பொருளாதாரம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து வலய மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இலங்கை எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். அதனை நடைமுறைப்படுத்த அரச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சார்க் நாடுகளின் ஆகக் கூடுதலான பெறுபேற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக இன்னும் உழைக்கவேண்டியிருக்கின்றது. கிராமிய அபிவிருத்தி, மின்சக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0 சர்வதேச ரீதியில் எமது வலயத்தில் பொது மேம்பாட்டிற்காக ஒருமித்த குரல் கொடுப்பதற்கும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் பொருத்தமான வலயம் என்ற நிலைமையினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக மற்றும் சேவை, சுற்றாடல் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இலங்கையில் உடனடியாகவே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சார்க் நாடுகளின் இனங்களுக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்தல் மட்டுமன்றி, மக்களின் போக்குவரத்திற்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான சார்க் உடன்பாட்டின் உறுப்புரயினை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நாம் இனங்கண்ட கண்காணிப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்."

இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிகளவு கைத்தொழில் பேட்டைகளை நிறுவ திட்டம்




றிஷாட் தகவல்; ஹோமாகம பேட்டைக்கு நேற்று விஜயம்
வடக்கு, கிழக்கில் அதிகளவு கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதற்காக வெளிநாட்டு முதலீ ட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு விரைவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

கைத்தொழில் துறையை மேம்படுத்துவதன் மூலம் அதிகளவிலான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும், வேலையற்ற பட்டதாரிகளை இதற்குள் ஈடுபடுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து முதலீடுகளைச் செய்து, அதன் மூலம் உற்பத்தியாகும் கைத்தொழில் பொருட்களை அம்முதலீட்டாளர்களின் நாடுகளிலேயே சந்தைப்படுத்துவதே எனது இலக்கு.

இதன் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள முடிவதுடன், உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் றிஷாத் பதியுதீன் முதற் தடவையாக அமைச்சின் கீழுள்ள ஹோமாகம பனாகொடை கைத்தொழில் பேட்டைக்கு நேற்று விஜயம் செய்து அதன் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

கைத்தொழில் பேட்டை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் கடமையாற்றும் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான பணிப்புரைகளையும் விடுத்தார்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், கைத்தொழிற் துறையை பொருளாதாரத்தை இலங்கைக்கு ஈட்டித் தரும் துறையாக மாற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணத்தை நனவாக்குவதற்கு அதிகாரிகளும் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உலகின் முன்னணி நாடுகளுடன் இலங்கையும் போட்டியிட்டு வெற்றி கொள்ளும் அளவுக்கு இந்நாட்டை மாற்றியமைப்பதற்கும் எதிர்காலத்தில் சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மனோகணேசன் - ரணில் முரண்பாடு தொடர்கின்றது






ஐ.தே.க தலைவருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித மான முடிவும் எட்டப்படவில்லை யென பிரபாகணேசன் எம்.பி ‘தினகர னு’க்குத் தெரிவித்தார்.

இதனால் இன்று (29) மாலை 5 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து முடிவெடுக்கவுள்ளதாக பிரபா கணேசன் எம்.பீ. தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்னமும் கட்சியின் தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க. தலைவரைச் சந்திக்கவில்லையெனக் கூறிய அவர், இன்றைய தினமே நேரடிச் சந்திப்பு இடம் பெறுவதாகக் கூறினார்.

நேற்று முடிவு எட்டப்படாததால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர எம்.பி. ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு




மீன்பிடி, கடல் போக்குவரத்து தொடர்பில் முக்கிய பேச்சு

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பூட்டானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சார்க் நாடுகளுக்கிடையில் முக்கியமான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன் மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையில் மீன்பிடித்துறை, கடல்வழிப் போக்குவரத்து தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அபிவிருத்தியில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தால் மட்டுமே முடியுமென தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில் நாட்டு மக்கள் அதனை நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இரு நாடுகளினதும் மீன்பிடித் தொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய ப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்திரமான வேலைத் திட்டமொன்றை முன்னெ டுப்பது சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்குமிடையில் கடல் வழி போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத்தலை வர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் தற்போதைய அர சாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு நாட்டு மக்கள் பூரண ஆதரவு வழங்கிவருவதைக் காண முடிகிறது என தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி, நாட்டிற்கு நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளது போன்று நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பலமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

நேபாளப் பிரதமர் மாதங்கு மாரைக் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பூட்டான் பிரதமர், அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ஆகி யோரைச் சந்தித்துள்ள ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார் த்தை நடத்தவுள்ளார்.

மேற்படி சந்திப்புகள் பூட்டான் திம்பு நகரில் உள்ள சார்க் கிராமத் தின் இலங்கை இல்லத்தில் இடம் பெற்றுள்ளதுடன் இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

எனது சொந்த தேவைக்கு பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன்

கடமைகளை பொறுப்பேற்று பிரதமர் தி. மு. உரை


நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன், பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் உலகின் சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தமது பொறுப்புகளை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையேற்றார். இந்நிகழ்வு நேற்றுக் காலை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சர்வ மதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்றுக் காலை 7.30 மணி சுபவேளையில் பிரதமர் தமது பொறுப்புக்களைக் கையேற்றதுடன், அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரிதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டி. எம். ஜயரத்ன இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசியலில் 60 வருட கால மக்கள் சேவையின் பின்னர் நாட்டின் பிரதமர் என்ற உன்னதமான பதவி எனக்குக் கிடைத்துள்ளது. இது எனது மக்களுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமென நான் கருதுகிறேன். இப்பதவியினூடாக நான் எனது மக்களுக்கு சேவை செய்வதில் பின்நிற்க மாட்டேன். ஒருபோதும் எனது சொந்தத் தேவைகளுக்கு இப்பதவியைப் பயன்படுத்த மாட்டேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டு மக்களுக்கான சேவையின் போது நான் பல தடைகளையும் அசெளகரியங்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் எனது மக்கள் என்னுடனிருந்தனர். அதனால் எனது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர்கள் அவர்கள்.

பயம் சந்தேகமின்றி சகல இன, மத மக்களும் சமத்துவமாக வாழும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவருடன் இணைந்து செயற்படுவேன்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச மேடைகளில் சார்க் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் 16வது சார்க் உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரை





வெளியில் இருந்து கிடைக்கும் தீர்வுகளை தவிர்க்கும் தைரியம் வேண்டும்


எமது அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு வருகிறோம்

சர்வதேச மற்றும் பல் தரப்பு அமைப்புகளுடன் செயற்படும் போது எமது வலயத்தின் பொதுவான நன்மை கருதி ஒரே குரலில் பேச வேண்டும். வெளியில் பெறப்படும் தீர்வுகள் எமக்கு ஏற்றவைதானா என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எமது வலயத்துக்குள் நாமே மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றி கண்டறிய வேண்டும்.

சர்வதேச மேடைகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன் எமது வலயத்தின் பொதுப் பிரச்சினைகள் பற்றி ஒருமித்த குரலில் பேசும் செயற்பாட்டை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பூட்டானில் நேற்று ஆரம்பமான 16வது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சார்க் நாடுகளுக்கிடையே வலய தொடர்களின் தசாப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பத்தாண்டு காலத்தில் எமது நாடுகள் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிராக சார்க் கோவையின் விதிமுறைகள் முழுமையாக செயற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கண்டறியப்பட வேண்டும்.

வலய அமைப்பு என்ற ரீதியில் சார்க் அமைப்பு தனித்து முன்னேற்றம் காண முடியாது. எனவே நாம் இனங்கண்டுள்ள சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக ளுடன் செயற்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெற்காசிய உலகின் பழைமையான மற்றும் சீரிய உரிமைகளின் இருப்பிடமாகும் உலகின் சிறந்த சாஸ்திரவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் ஆகியோர் இந்த வலயத்தில் இருந்து உருவாகியுள்ளனர்.

சார்க் வலயம் அபிவிருத்தியடைந்துள்ள போதிலும் தெற்காசியாவின் ஒன்றிணைந்த பலத்தை சில சமயங்களில் நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். எமது தொழில்நுட்ப திறனையும் எமது வளங்களின் மூலம் அபிவிருத்தி சவால்களுக்கு முகங்கொடுக்கவும், சமூக மற்றும் பாதுகாப்பு நிலையை ஸ்திரப்படுத்தவும் எமக்கு திறமை இருப்பதை சில சமயங்களில் நாம் நினைப்பதில்லை. அதற்கு பதில், வலயத்துக்கு புறம்பாக உள்ள சக்திகளுக்கு முன்னுரிமை வழங்குகிறோம். நாம் செய்ய வேண்டியது அதுவல்ல. எமது வலயத்துக்குள் இருக்கும் அபிவிருத்தி மற்றும் தொடர்புகளை நாம் முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சார்க் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்த 18 மாத காலத்தில் முக்கியமான பல துறைகளில் வலய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மின்சாரம், உயர் கல்வி, சிறுவர், போக்குவரத்து, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஆறு அமைச்சு மட்ட கூட்டங்கள் எமது நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 2009 பெப்ரவரியில் இடம்பெற்ற சார்க் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார சீர்கேடு தொடர்பாக வலயத்தின் ஒன்றிணைந்த கூட்டத் தொடர் பற்றி இணை அறிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை வலய அபிவிருத்திக்கான முதல் நடவடிக்கையாகும்.

காலநிலை மாற்றம் இந்த மாநாட்டின் தொனிப் பொருளாக இருப்பது காலேசிதமானதாகும்.

தெற்காசிய பிராந்தியத்தின் பனி யால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூட்டானியிலிருந்து மாலை தீவு வரையிலான பிராந்தியம் சகல ருக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாகும்.

இது தொடர்பான எமது பிராந்தியத்தின் நிலை சர்வதேச மேடைகளில் வலுவாக எழுப்ப வேண்டியது நம் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும்.

ஜனநாயக நிர்வாகத்திற்கான எமது முழுமையான அர்ப்பணிப்பு இப்போது எமது முழுப் பிராந்தியத்திற்கும் பொதுவான நடைமுறையாகும்.

இந்தியாவின் பரந்த அபிவிருத்தியுடன் வளர்ச்சி கண்ட எமது பொருளாதாரம், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தது.

உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு இருந்த போதிலும் இலங்கையில் எமக்கு 6% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 1060 டொலராகவிருந்த தனிநபர் வருமானம் இன்று 2050 டொலர் வரை உயர்வடைந்துள்ளது.

பொருளாதார மேம்பாட்டுக்காக நகரத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லையென்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் முன்னெடுத்த கொள்கை வெற்றியளித்தது. எனது அரசாங்கம் குடியிருப்பு, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நகரத்தில் மாத்திரமன்றிக் கிராமத்தில் மேற்கொண்டது. அதனால்தான் எமது அரசாங்கத்திற்குக் கிராம மக்கள் கூடுதலாக வாக்களித்தனர்.

அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்ள எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக நெருக்கடி நிலவிய பகுதிகளில் மக்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களுக்கு ஜீவனோபாயத்தைப் பெற்றுக் கொடுத்து அந்தப் பிரதேசங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக் கொடுக்க எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

சார்க் அமைப்பு அதன் வெள்ளி விழா வருடத்தில் கால் பதிக்கின்றது. பூட்டான் பிரதமர் தின்வே இம்முறை இவ்வமைப்பின் தலைவராகியுள்ளார். அவர் தலைமைப்பதவியை வகிக்கும் காலத்தில் அவருக்கு எனது பூரண ஆதரவை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15வது சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் எமது நாடு பயங்கரவாதத்துக்கெதிரான சவாலை எதிர்கொண்டிருந்தது.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள நாம் தற்போது துப்பாக்கிகளின் சவால்களில்லாத வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் இணக்கப்பாட்டை காணவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக மக்கள் ஆணை எமக்குக் கிடைத்துள்ளது. இதனூடாக எமது நாடு, மக்கள் மற்றும் இளைய சந்ததிக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்ப எமது அயல் நாடுகள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுண்டு.

சார்க் அமைப்பானது எமது பிராந்திய நாடுகளின் மக்களினது நலன், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான அமைப்பாக விளங்குகிறது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாம் கட்டியெழுப்பியுள்ள இணக்கப்பாடுகளே பெரும்

இதன் மூலம் எமது நாடுகள், மக்களுக்கிடையில் நெருங்கிய நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

1985ம் ஆண்டிலிருந்து படிப்படி யான செயற்பாடுகளுடன் ‘சார்க்’ 25 ஆண்டுகளை எட்டியிருப்பது நாம் பெருமைப்படக் கூடிய தொன் றாகும்.

தற்போது எமது எதிர்கால சந்ததி க்காக எமக்கிடையிலான ஒத்துழைப் புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது அவசியம்.

மேலும் இங்கே தொடர்க...

28 ஏப்ரல், 2010

13 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்; ஸ்பெயின் நாட்டுக்காரரின் சாதனையை முறியடித்தார்






உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பலர் சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தென் கொரியாவை சேர்ந்த ஓ யுன்-சன் (44) என்ற பெண் 13 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவர் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் 14 மலை முகடுகளில் கடைசியில் உள்ள அன்னபூர்னாவில் இருந்து 13 மணி நேரத்தில் 26,247 அடி (8 ஆயிரம் மீட்டர்) உயர சிகரத்தில் ஏறினார்.

இதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எடுர்ன் பசயின் (26) என்பவர் 26,330 அடி உயரம் ஏறி இருந்தார். அவரது சாதனையை நேற்று இவர் முறியடித்தார். எவரெஸ்ட் உச்சியில் ஏறிய அவர் அங்கு தென்கொரிய நாட்டின் கொடியை அசைத்தார்.

இந்த சாதனை நிகழ்ச்சியை தென் கொரியாவின் கேபிஎஸ் என்ற டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பியது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஒயுன்-சன்னு தென் கொரிய அதிபர் லீ மியுங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அவரது மிகப் பெரிய சாதனையை பாராட்டுவதாகவும் அவரைப்பற்றி பெருமைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தனது சாதனை பற்றி கூறும் போது, எவரெஸ்டில் ஏறியவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதை தென்கொரிய மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று ஓயுன்-சன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

'நித்யானந்தா உடலில் எந்த குறைபாடும் இல்லை'





பெங்களூரு : நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவிற்கு, எந்த குறைபாடும் இல்லை என கூறி, மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

கடந்த 23ம் தேதியிலிருந்து சாமியார் நித்யானந்தாவிடம், நான்கு நாள் தொடர்ச்சியாக பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், நேற்று முன்தினம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரிலுள்ள சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக ஜெயதேவா அரசு இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையிலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

சிகிச்சை குறித்து மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் கூறுகையில், ''மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நித்யானந்தாவுக்கு நேற்று முன்தினம் இரவு சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின், இன்று (நேற்று) காலை மீண்டும் நித்யானந்தாவிற்கு இ.சி.ஜி., எக்கோகார்டியோகிராப் உட்பட இதய சம்பந்தமான அனைத்து சோதனைகளும் நடத்தப் பட்டன. அவரது உடல் நிலையில் எந்தவித மாறுபாடுகளும் இல்லாததால், உடனடியாக அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,'' என்றார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நித்யானந்தா, சி.ஐ.டி., மத்திய அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். மீண்டும் அவர், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நாளை மாலை 5:30 மணிக்குள் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர்படுத்தப்படவுள்ளார்.நித்யானந்தா சீடர் லெனினிடம், சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து பல நம்பகமான தகவல்களை சேகரித்துள்ளனர். நித்யானந்தாவின் நிதி விவகாரங்கள், இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டிலுள்ள ஆசிரமத்தின் கிளைகள், அந்த இடங்களில் நடத்திய விவகாரங்கள் ஆசிரமத்திற்கு விஜயம் செய்து வந்த நடிகைகள் தவிர, ஆசிரமத்தில் நடந்து வந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்த தகவல்களை லெனின், சி.ஐ.டி., போலீசாரிடம் கூறியுள்ளார்.

ரகசிய ஒப்பந்தங்களின் தஸ்தாவேஜுகளை, 'சிடி'க்களை லெனின், சி.ஐ.டி., போலீசாரிடம் அளித்துள்ளதாக தெரிகிறது.இதற்கிடையில், சாமியார் நித்யானந்தாவிடம் நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்கவும், அவரது நடத்தையை கண்காணிக்கவும், பெங்களூரிலுள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில், 'சிசிடிவி' அவசர, அவசரமாக பொருத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி நடந்த முதல் நாள் விசாரணையை அதிகாரி, திருப்பிப் போட்டு பார்க்கும் போது, வீடியோ மட்டும் தான் தெரிந்தது. சாமியாரின் குரல் எதுவும் கேட்க வில்லை. இதனால், போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அதேகேள்விகளை வைத்து, சாமியாரிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் புன்முறுவலுடன் தகவல் தெரிவித்தார்.முக்கியமான கேள்விகளை கேட்கும் போது, தூங்குவது போன்று கண்ணை மூடிக் கொள்கிறார் அல்லது மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால், பெரிய சிரமம் ஏற்படுகிறது, என்று சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: பெங்களூர் ஆசிரம தலைவர் ஐகோர்ட்டில் மனு

நித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: பெங்களூர் ஆசிரம தலைவர் ஐகோர்ட்டில் மனு
பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் பொறுப்பு தலைவர் நித்ய சதானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நித்யானந்தா ஆசிரமத்தின் வங்கி கணக்கை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஆசிரம பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நித்யானந்தா சார்பில் அவரது வக்கீல்கள் பாலா டெய்சி, வீரகதிரவன் ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தற்போது நித்யானந்தாவிடம் பெங் களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணைக்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே சென்னை மற்றும் கோவையில் அவர் மீது போடப்பட்டுள்ள மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த 2 மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா சாமியார் பதில் சொல்ல மறுப்பு; உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு





போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா சாமியார் பதில் சொல்ல மறுப்பு; உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு
திரைப்படம் திரைப்படம்
பெங்களூர், ஏப். 28-

நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருக்கும் காட்சி வெளியானதை அடுத்து அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து அவர் மீது சென்னை போலீசிலும், கர்நாடக போலீசிலும் பலர் புகார் கொடுத்தனர். நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் கர்நாடக மாநிலம் பிடதியில் இருந்ததால் சென்னையில் கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன.

இதையடுத்து நித்யானந்தா மீது கர்நாடக போலீசார் கற்பழிப்பு, மோசடி, மத உணர்வை புண்படுத்துதல், சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். மாநில சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

தன் மீது புகார் வந்ததை அடுத்து நித்யானந்தா தலைமறைவாக இருந்தார். அவர் இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் நகரில் பதுங்கி இருப்பதை கர்நாடக போலீசார் கண்டுபிடித்து கடந்த 21-ந் தேதி கைது செய்தனர்.

பின்னர் 22-ந் தேதி அவரை கர்நாடகாவுக்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரிடம் முழுமையான விசாரணை நடத்துவதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர். கோர்ட்டு முதலில் 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தது. ஆனால் நித்யானந்தாவிடம் முழுமையாக விசாரணை முடியாததால் நேற்று முன்தினம் மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

ஆனால் நித்யானந்தா திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். எனவே நேற்று முன்தினம் மாலை அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

அவருக்கு இ.சி.ஜி. எக்கோ கார்டியோ கிராம், டிரட்மில் டெஸ்ட் ஆகிய இதய தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவருக்கு இதயத்தில் எந்த கோளாறும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு பயந்து நாடக மாடி இருக்கிறார் என்று தெரிய வந்தது.

எனவே நேற்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் மீண்டும் அவரை காவலுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

ஆனால் நித்யானந்தா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார். ஆசிரமத்தில் நடந்த செக்ஸ் விவகாரம், பெண்களுடன் ஏற்படுத்திய செக்ஸ் ஒப்பந்தம் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. போலீசார் நெருக்கடி கொடுத்து கேட்ட போது எதுவும் பேசாமல் மவுனம் சாதித்தார்.

இந்த நிலையில் இன்று மாலையுடன் அவரது போலீஸ் காவல் முடிகிறது. எனவே அவரை மாலைக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும், அதன் பிறகு அவர் ஜெயில் காவலில் வைக்கப்படுவார்.

அவரிடம் விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் மேலும் 1 வாரம் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே போலீஸ் காவல் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக் காததால் அவரிடம் மயக்க மருந்து கொடுத்து நடத்தப் படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கும் கோர்ட்டில் அனுமதி பெற உள்ளனர்.

உண்மை அறியும் சோதனை நடத்தினால் எதையும் மறைக்க முடியாது, மனதில் புதைந்து இருக்கும் அனைத்து தகவலும் வெளியே வந்துவிடும். அப்போது ஆசிரமத்தில் நடந்த அத்தனை விவகாரங்களும் வெளியே வரும் வாய்ப்பு உள்ளது.

போலீசார் நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் பெண் செயலாளர் கோபிகா ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது தலை மறைவாக உள்ளனர். அவர்கள் இருப்பிடத்தையும் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். எனவே அவர்களை எந்த நேரத்திலும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தலாம்.

நித்யானந்தா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.

எனவே அதுவரை ஜெயிலுக்கு செல்லாமல் தப்பிக்கவே அவர் நெஞ்சு வலி நாடகம் நடத்தி ஆஸ்பத்திரிக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அவருடைய திட்டம் ஈடேறவில்லை.

ஒரு வேளை இன்று போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதிக்கவில்லை என்றாலும் இன்று மாலையே அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த மாதம் இந்தியா விஜயம்



கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்தார்.

சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழு ஒன்று, இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அடுத்த மாதம் இக்குழுவினர் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உயர் மட்ட பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கட்சியின், கொள்கைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை வந்திருந்த வேளை, சந்திரகாந்தனை சந்தித்த போது விடுத்த அழைப்பின் அடிப்படையில் அமையவுள்ளதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் புத்தாண்டு விளையாட்டு விழா

மட்டக்களப்பு சிறைச்சாலை நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு இடையில் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் இன்று விமர்சையாக இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மாவட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் கீத ஸ்ரீ பண்டார பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் நலன் புரி உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீநிவாசன் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

இங்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் கலந்து கொண்ட பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் பல் ஏற்பாடு செய்யப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் அனுஸ்டிப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையில் சர்வோதய அமைப்பினால் சர்வதேச கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் மட்டக்களப்பு நகரில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அபாயக்கல்வித் திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு தேவநாயகம் கலையரங்கில் கண்ணி வெடி விழிப்புணர்வு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது. கண்ணிவெடி அபாயம் பற்றிய கண்காட்சியும் இராணுவத்தின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட இணைப்பாளர் சர்வோதய இ.மதன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ கரீம் யுனிசெப் நிறுவன கிழக்கு மாகாண இணைப்பாளர் அஸதுர் ரகுமான் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவு சிறார்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் அதிகரித்துவரும் சமூக சீர்கேடுகள்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் 2ஆம் கட்டை பகுதியில் இளைஞர் படையணிக்காக கட்டப்பட்ட கட்டட வளாகத்தினுள் சமூக சீர்கேடுகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கடற்படையினர் இந்தக் கட்டடத்தில் காவலரண்களை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அமைத்திருந்ததுடன் சுமார் கடந்த வருட இறுதிப் பகுதியில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அதன்பின்னரே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

தலவாக்கலை நகரில் இ.தொ.கா.வின் மேதினம்

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம் தலவாக்கையில் இடம் பெறவுள்ளது.

இ.தொ.கா. பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கூட்டத்தில் இ.தொ.கா. தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வி. ராதாகிருஷ்ணன், ராஜதுரை மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ரமேஸ், ராம், சிங் பொன்னையா உட்பட இ.தொ.கா. உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நகர மத்தியில் இடம்பெறவுள்ள இந்த மேதினக் கூட்டத்தின் பேரணி தலவாக்கலை நகரசபைக்கு அருகிலிருந்து காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

நீண்ட நாள் மருத்துவ விசா: ஜப்பான் திட்டம்


ஜப்பானில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் விரும்பும் வெளிநாட்டவருக்கு, நீண்ட நாள் விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போதுள்ள விசா நடைமுறைகளின் படி, ஜப்பானில் மருத்துவசிகிச்சை மேற்கொள்ள விரும்புவோர் குறுகிய கால சுற்றுலா விசா மூலம் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இத்தகைய விசாவுக்கான கால வரம்பு 90 நாட்கள் மட்டுமே.

இதற்கு மேல் இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், அவர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும். இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு மருத்துவசிகிச்சை பெறுபவர்களுக்கான நீண்ட நாள் விசா நடைமுறையை அறிமுகப்படுத்த ஜப்பான் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இப் புதிய விசா நடைமுறையின் மூலம் விசா நீட்டிப்புக்கு அவர்கள் விண்ணப்பிக்க தேவையிருக்காது.

சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து தரமான சிகிச்சை விரும்பி வருபவர்களை அதிக அளவில் ஈர்க்கவும், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் இத்தகைய விசா நடைமுறை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாத இறுதியில் ஜப்பானில் அறிவிக்கப்படவுள்ள பொருளாதார வளர்ச்சி திட்டங்களில், இந்த நீண்ட நாள் மருத்துவ விசா நடைமுறையும் அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பீரிஸ் - பூட்டான் வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்திப்பு

வெளிவிவகார அமைச்சா பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பூட்டான் வெளிவிவகார அமைச்சர் லியோன் போசரினுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிய அரசின் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவு செய்யப்பட்டமை குறித்து பூட்டான் வெளிவிவகார அமைச்சர் முதலில் தமது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறித்தும் தமது மகிழ்ச்சியை பூட்டான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பூட்டான் மாணவர்கள் இலங்கையில் கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை குறித்தும் பூட்டான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா துணைச் செயலர் அடுத்த மாதம் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் லின் பஸ்கோ இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் இங்கு வருவதற்கு ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலேசிப்பது பஸ்கோவின் விஜயத்திற்கான முன்னைய நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போதும் அத்தகைய ஆலோசனைகள் நிகழ்ச்சிநிரலில் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.

ஐக்கியநாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழு நியமனம் குறித்து அண்மைக் காலத்தில் பேச்சு எதுவும் அடிபடவில்லை என்றும் தொடர்ந்தும் நிபுணர்கள் குழு அமைப்பது பற்றிய யோசனை இருப்பதாக தெரியவில்லை என்றும் நியூயோர்க்கில் ஐக்கியநாடுகள் உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் அடுத்த மாதம் பஸ்கோ இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளதை இவ்வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மே மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய பஸ்கோ அனுமதி கோரியுள்ளார். ஆனால் அனுமதி அளிப்பது பற்றி எதுவும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில் செயலாளர் நாயகம் பான் கீ மூனைஙூ சந்தித்து நீண்டநேரம் பேசியுள்ளார். இந்த பேச்சவார்த்தையின் போது இருவரும் நிபுணர்கள் குழு நியமனம் பற்றியும் பேசியுள்ளார்கள் என்று தெரியவருகிறது.

செயலாளர் நாயகமும் சட்டமா அதிபரும் சந்தித்துஸ பேசியதை பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி உறுதிப்படுத்திய போதிலும் பேச்சின் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில்,இம்மாதம் 20ஆம் திகதி இஸ்ரேல் அளித்த ஐக்கியநாடுகள் விருந்து வைபவம் ஒன்றில் இலங்கையின் ஐக்கியநாடுகள் தூதுவர் கலாநிதி பாலித கொஹணவிடம் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், "நான் உங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவன் அல்லன்" என்று தெரிவித்ததாக அவர்கள் இருவருக்கும் அருகிலிருந்த ஒருரை மேற்கோள் காட்டி 'இன்னர் சிற்றி பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் குழு எதுவும் நியமிக்கப்பட மாட்டாது என்று எதிர்வு கூறிய கலாநிதி கொஹண, பதிலாக சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வத்திக்கான் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பட்டதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்தது.

இதற்கிடையில், இலங்கை மீது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக குழு ஒன்றை நியமிப்பது என்று 6 வாரங்களுக்கு முன்னர் செயலாளர் நாயகம் உறுதியளித்தது சம்பந்தமாக எதையும் எதிர்பர்க்க வேண்டாமென சிரேஷ்ட ஐக்கியநாடுகள் அதிகாரி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸுக்கு தெரிவத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கருணாவின் அலுவலகம்


இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனைத்தும் வழங்கப்படுமென மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 60,000 பேர் வரையிலேயே உள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலையை உருவாக்குவதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் விடயம் தொடர்பாக இலங்கைக்கு இருந்த சர்வதேச அழுத்தங்களை முற்றாக இல்லாதொழிப்பதும் எமது நோக்கம் என்றும் பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படும். இவ்வாறான அமைச்சுப் பொறுப்பை வழங்கியுள்ளமை குறித்து ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். மீளக்குடியேற்ற பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கருணா அம்மான் நேற்று கொள்ளுப் பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கட்டடத்தில் நாளை வியாழக்கிழமை முதல் பிரதியமைச்சர் கருணா அம்மானின் அலுவலகம் இயங்கவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவின் அமைச்சு அலுவலகம் கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னாலுள்ள மீள்குடி யேற்ற அமைச்சு கட்டடத்திலேயே இயங்கும்
மேலும் இங்கே தொடர்க...

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் கரு ஜயசூரிய எம்.பி

அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம்.

பாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் கட்சிக்குள் குழப்பம் கண்டி மாவட்ட தலைவர் காதரா? கிரியெல்லவா?

மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்க் கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்வதில் பிரச்சினைகளும் கருத்து முரண்பாடுகளும் தலைதூக்கியுள்ளன.

மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த வசந்த அலுவிகார பொதுத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனால் மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றி டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினரான கே. கே. பியதாஸவை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

இச்செயல் ஏனைய ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ள தோடு, மத்திய மாகாண சபையில் நீண்டகால உறுப்பினர்களாக விளங்கும் ஒருவரை கட்சி நியமிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எதிர்வரும் மே மாதம் 4 ம் திகதி மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை ஐ.தே.க. தீர்மானிக்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஐ.தே.க.வின் கண்டி மாவ ட்ட தலைமை யார்? என்பதில் தற்போது கட்சி எம்.பி.க்களான அப்துல் காதர் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையில் கருத்துமோதல் வெடித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் சார்பில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்ற தனக்கே கட்சியின் கண்டி மாவட்ட தலைமை வழங்கப்பட வேண்டுமென்பது காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

அவர் உடனடியாக மாவட்ட தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றும் காதர் எம்.பி. வாதிடுகின்றார்.

அத்தோடு, மு.கா. தலைவர் கூட விருப்பு வாக்கினடிப்படையில் என்னிடம் தோல்வி கண்டுள்ளார். அவரும், ஐ.தே.க. மற்றும் இதர விடயங்களில் தன்னிச்சையாக செயற்பட முடியாதென்றும், மக்கள் என்னையே அங்கீகரித்துள்ளனர் என்பதும் காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.

ஐ.தே.க.வின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள காதர் எம்.பி. தொடர்ச்சியாக கட்சியுடனும், கட்சித் தலைமையுடனும் முறுகல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளுடன் ஊடகக் கிராமம் ‘எனது நீண்ட காலக் கனவு இது’


ஊடகவியலாளர்களுக்காக சகல வசதிகளையும் கொண்ட ஊடகக் கிராமம் ஒன்றை அமைப்பதே தனது நீண்டகால கனவுயென பதில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்றுக் காலை வருகை தந்த அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த அமைச்சருக்கு பெரு வரவேற்பு வழங்கப்பட்டது.

நிறுவனத்தின் தலைவரும் பிரபல ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் இணைந்து அமைச்சரை வரவேற்றனர்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா, குறை நிறைகளைக் கேட்டறிந்துக்கொண்டார். இதேவேளை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அச்சகப் பகுதியை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்களுடனும் அமைச்சர் பேசினார். அவர் மேலும் உரையாற்றுகையில்:-

பேனாவை கையில் எடுத்த அனைவ ரையும் ஊடகவியலாளர்கள் என கூறிவிட முடியாது. ஊடகவிய லாளர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பலர் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தை முழு நாடும் அறியும். வெளிநாட்டுக்குச் சென்று குடியிருப்பதற்காக சிலர் தம்மைத் தாமே தாக்கிக்கொண்டனர்.

சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பழிவாங்குதல், கோபம் என்பவற்றை புறந்தள்ளி, தமது பேனாவை பயன்படுத்த வேண்டியது சகல ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். இதன் மூலமே உண்மையான ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும். ஊடகவியலாளரின் குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே சிறந்த ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும்.

குடும்ப பிரச்சினை, மனதில் இருக்கையில் தனது கருத்தை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சமூகத்துக்கு முன்வைக்க முடியாது. அதனால் அனைத்துக்கும் முன்பாக ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ் த்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த மதத்தால் போசிக்கப்பட்ட தலைசிறந்த தலைவர். அத்தகைய தலைவரின் கீழ் பணியாற்ற கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார, ஆசிரியர் பீட பணிப்பாளர் நிஹால் ரத்னாயக்க, பணிப்பாளர் உபுல் திஸாநாயக்க, பொது முகாமையாளர் அபய அமரதாஸ, பிரதி பொது முகாமையாளர் நாரத சுமனரத்ன, உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பூட்டான் சென்றதையடுத்து பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சார்க் மாநாட்டையொட்டி திம்பு நகர் விழாக்கோலம்: உச்சி மாநாடு இன்று ஆரம்பம்;; ; ஜனாதிபதி மஹிந்த ஆரம்ப உரை


பூட்டான் தலைநகர் திம்புவில் இன்று (28) ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலை மைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார்.

சார்க் மாநாடு இன்று ஆரம்பமாவதை யிட்டுத் திம்பு நகர் கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவ டைவதையொட்டி 16வது உச்சி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சார்க் கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் பூட்டான் பிரதமர் தின்லேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பூட்டானுக்கு முதன் முதலாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூட்டான் மன்னரின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பிரதமர் தின்லே உற்சாகமான வரவேற்பை தெரிவித்துக்கொண்டார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்த பிரதமர் தின்லே, இது பிராந்தியத்தில் அமைதியைப் பலப்படுத்து வதற்கு வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அடைந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுதல்களையும் பூட்டான் பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பூட்டான் பிரதமர் மக்களின் பேராதரவுடன் நாமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியத்திலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

‘சார்க்’ ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டில் உச்சி மாநாட்டை நடத்துவதை யிட்டு பூட்டான் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை, 16 ஆவது உச்சி மாநாட்டில் அவதானிப்பா ளராக ஓர் இடம் கிடைத்துள்ள அமெரிக்கா வின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான உதவிச் செயலாளர் ஹாபர் ஒ பிளக்கை, நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

‘சார்க்’ கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

27 ஏப்ரல், 2010

விரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை-ராஜித்த சேனாரத்ன.



அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது செனட் சபையையும் அமைக்கப்படவுள்ளது. அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் இதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என மீன்பிடி மற்றும் நீர் வள துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்கள் குறித்து ஏதேனும் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அதற்கு செனட் சபையின் அனுமதி தேவையென்றும்,
செனட் சபையின் பெரும்பான்மை அதிகாரம் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசியக் கட்சிப் பதவிகளில் விரைவில் மாற்றம்

ஐக்கியத் தேசியக் கட்சியை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன்போது பிரதான பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றங்கள் இடம்பெறும் போது, ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள் குறித்து அடுத்த மத்திய குழுக் கூட்டத்தின் போது ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களின் போது, ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரு,சஜீத்,ரவி : சிரேஷ்ட, பிரதி, உப தலைவர்கள்?

தற்போது பிரதித் தலைவராக பணியாற்றி வரும் கரு ஜயசூரிய, சிரேஷ்ட பிரதித் தலைவராக பதவி உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சஜித் பிரேமதாச இதற்கு இதுவரை தமது இணக்கப்பாட்டை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ரவி கருணாநாயக்காவின் பெயரும் கட்சியின் உப தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத் தவிர்க்கும் வகையில், முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும் அதில் எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

மேர்வினின் அமைச்சுப் பதவியை நீக்குமாறு ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள்

பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டமைக்கு எல்லைகளற்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்துடன்மேர்வின் சில்வாவை அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம், சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்களை தாக்கியும், அவமானப்படுத்தியும் உள்ள ஒருவரை எந்த நாடு அமைச்சராக நியமிக்கும் எனவும் அந்த அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

ஊடக சுதந்திரத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவரை முக்கியமான பதவியில் நியமித்ததன் மூலம் அரசாங்கம் தனது பொறுப்பற்ற நிலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ். கிளை இன்று திறப்பு

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ்.மாவட்டக் கிளை இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.கொழும்புப் பங்குச் சந்தையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஹால் பொன்சேகா யாழ்ப்பாணக் கிளையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைப் பிணைகள் பிரிவர்த்தனை நிலைய தலைவர் உதயசிறி காரிய வாசம், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி எஸ்.தேவராஜா, முகாமைத்துவ விரிவுரையாளர் பேராசிரியர் என்.நடராஜசுந்தரம், மற்றும் பங்குத்தரகு நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் 5 ஆவது கிளையாக திறக்கப்பட்டுள்ள இக்கிளையானது ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு சிறிது காலம் யாழ்ப்பாணர்த்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகாரணமாக மூடப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் மீண்டும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் கிளை காரியாலயம் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக 398/1 ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையைச் சேர்ந்த 75 பேர் தத்தளித்த படகில் இருந்து தரையிறக்கப்பட்டனர்

மலேசிய அரசு தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இரண்டு நாள்கள் படகில் இருந்து இறங்க மறுத்த இலங்கையைச் சேர்ந்த 75 பேர் மலேசிய போலீஸக்ஷ்ரால் தரையிறக்கப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த மீன் பிடிப் படகு ஒன்று 75 பேரை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது. அப்போது படகில் ஓட்டை ஏற்பட்டதால் மலேசிய கடல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வழக்கமான ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த மலேசிய காவல் துறையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தினர்.

முதலில் அவர்கள் அனைவரும் படகில் இருந்து இறங்க மறுத்தனர். தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க மலேசிய அரசு ஒப்புக் கொண்டால்தான் படகை விட்டு இறங்குவோம் என கோரிக்கை வைத்தனர்.

இரண்டு நாள்கள் படகிலேயே இருந்தனர். பின்னர் போலீஸக்ஷ்ர் படகுக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து அவர்களைக் கரைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து வடக்கு பினாங்கு மாகாண கடற்படை காவல் அதிகாரி ரோஸ்லி சுஃபியான் கூறுகையில், "அந்தப் படகு மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. படகு மூழ்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களை மூழ்க விடாமல் தடுப்பது எங்கள் நோக்கம். படகை ஓட்டி வந்தவர் எங்களைப் பார்த்ததும் தப்பித்துச் சென்றிருக்கலாம் எனக் கருதுகிறோம். அவர்கள் அகதிகளா அல்லது ஆள் கடத்தலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களா என்பது பற்றி விசாரணை செய்ய சட்ட விரோத குடியேற்றத் தடுப்பு மையத்தில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

அவர்களிடம் ஏதேனும் உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். மற்றொரு குழுவாக மலேசியா வந்த இலங்கையைச் சேர்ந்த 36 பேரை பெராக் மாகாணப் பகுதியில் போலீஸக்ஷ்ர் வெள்ளிக்கிழமை கைது செய்ததாகவும், இவர்களுடன் வந்த இரண்டு மலேசியர்களும் கைது செய்ப்பட்டுள்ளனர் எனவும் ரோஸ்லி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் தாயார் சிகிச்சைக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்: கரு​ணா​நி​தி​யி​டம் வலி​யு​றுத்​தல்





சென்னை, ஏப். 26: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை இரவு அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.

இது குறித்து சுப. வீரபாண்டியன் கூறியதாவது:

மலேசியாவிலிருந்து சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16-ம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை வந்த பார்வதி அம்மாள், மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அவர் சென்னையில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினால், அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தினோம்.

அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பார்வதி அம்மாள் கடிதம் எழுதினால், மத்திய அரசிடம் நிச்சயம் அனுமதி பெற்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார் என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் கணக்கு வாக்கெடுப்புக்கு ஐதேக கடும் எதிர்ப்பு

வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்குத் திராணியற்ற அரசாங்கம், நாட்டின் ஒட்டுமொத்த மக்களை ஏமாற்றி, மீண்டும் ஒரு கணக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயற்சித்து வருகின்றது. நம்பிக்கைத் துரோகமான இத்தகைய முயற்சியைக் கண்டிக்கின்ற அதே வேளை நாடாளுமன்றத்தில் எதிரணிகளை இணைத்துக் கொண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை, இதுவரை காலமும் ஏமாற்றப்பட்டு வந்த மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவதானது பயங்கரமானதும் கவலைக்குரியதுமானது என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி. மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்களது கனவுகளையும் சிதறடிக்கும் வேலைத் திட்டமே இந்த கணக்கு வாக்கெடுப்பாகும் என்று கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கணக்கு வாக்கெடுப்பு ஒன்றையே நடத்தியது.

புதிய அரசாங்கம் அமைத்ததன் பின்னர் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும் மீண்டும் கணக்கு வாக்கெடுப்பையே நடத்தப் போவதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்னர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அரசாங்கத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

"அரசாங்கம் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கு கவலை அளிக்கின்றது. யுத்தம் உக்கிரமடைந்திருந்த கால கட்டத்தில் மக்கள் வயிற்றை இறுக்கிக் கொண்டு நாட்களைக் கடத்தி வந்தனர். யுத்தம் நிறைவடைந்ததும் நிம்மதியடைய முடியும் என்றும் நிவாரணங்களுடனான சக வாழ்வைக் கொண்டு நடத்த முடியும் என்ற அபிலாஷையிலும் திளைத்திருந்தனர்.

ஆனாலும் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களை ஏமாற்றமடையச் செய்கின்ற அதேவேளை, ஒருவித விரக்திக்குள்ளும் தள்ளிவிட்டுள்ளது. உண்மையில், மக்கள் படும் துன்பங்களை வேதனைகளை அரசாங்கம் கண்டு கொள்ளாதிருப்பதே வேதனையளிக்கின்ற விடயமாகும்.

உறுதி உடைக்கப்பட்டு விட்டது

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை நடத்திய அரசாங்கம் புதிய அரசு அமையப் பெற்றதும் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என்று உயரிய சபையான நாடாளுமன்றத்தில் வைத்து உறுதியளித்திருந்தது.

அந்த உறுதிப்பாட்டை அரசாங்கமே இன்று உடைத்து எறிந்துள்ளதைக் காண முடிகின்றது. 2010ஆம் ஆண்டில் 5 மாதங்களைக் கடந்தாவது நிவாரணம் கிடைக்கும் என்றும் சம்பள அதிகரிப்புகள், விலைவாசி குறைத்தல், ஊக்குவிப்பு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கப் பெறும் என்றும் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

மீண்டும் ஒரு கணக்கு வாக்கெடுப்பை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தையும் அதனால் கிடைக்கப் பெறுகின்ற நன்மைகளையும் இல்லாது செய்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது நிராகரிக்கப்பட வேண்டியதும் அதே போல் சகல தரப்பினராலும் கண்டிக்கப்பட வேண்டியதுமான செயற்பாடாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்த்துப் போராடுவோம்

வரவு செலவுத் திட்டத்தைக் கூட தயார் செய்து கொள்வதற்கான தகுதியும் திராணியும் இன்றைய அரசாங்கத்திற்கு இல்லை என்பது இன்று தெளிவாகியுள்ளது. அது மட்டுமல்லாது அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கான நிதி வருமானம் இல்லை என்பதும் புலனாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 144 ஆசனங்கள் என்ற பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் அதனிடம் கொண்டு நடத்துவதற்கான நிதி இல்லை. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அவர்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான உபாயத்தை கண்டறிவதற்கும் வழி தெரியாது தடுமாறும் அரசாங்கமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திகழ்கின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தை பொறுப்பேற்றதன் பின்னரே புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கூறப்படுகின்றது. அப்படியானால் அந்த வரவு செலவுத் திட்டம் 2011ஆம் ஆண்டுக்கானதேயன்றி 2010ஆம் ஆண்டுக்கானதல்ல.

இதுவே உண்மை.

எனவே சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான இத்தகைய செயற்பாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன் தமது எதிர்ப்பையும் வெளிக்காட்டுகின்றது.

கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் எதிரணிகள் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைத் தெரிவிப்போம்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...