16 நவம்பர், 2010

மக்களின் இயல்பு வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு : டக்ளஸ் தேவானந்தா



எமது மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஏ9 பாதை அகலமாக்கல் மற்றும் புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்கான தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

புனரமைப்புப் பணிகளின் போது உள்ளுர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதுடன் அடுத்த நேரம் என்ன நடக்கும் என்ற நிலைமாறி இன்று நம்பிக்கையான வாழ்வைக் கிடைக்கச் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும், எமது சமூகம் எதிர்காலத்தில் வளமான தேசத்தில் நம்பிக்கையுடன் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படுமென்றும் அதற்காக தமது கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகாலச் சட்டத்தால் தமிழர்களின் வாழ்வியல் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன: சிறிதரன்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தால் தமிழர்கள் தமது வாழ்வியல் உரிமைகளை இழந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

இன்று நடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர காலச் சட்டம் நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் இதனைத் தெரிவித்தார்

. இங்கு தொடரந்து கருத்து தெரிவித்த அவர், அவசர காலச் சட்டத்தினுடைய பலம், பலவீனம் என்பவற்றுக்கு அப்பால் இச்சட்டத்தினூடாக தமிழர்கள் தொடர்ச்சியாக கண்டிக்கப்படுகின்றனர். இதனால் வாழ்வியல் உரிமையை தமிழர்கள் இழந்துள்ளனர்.

இதனால் தமிழ் மக்கள் தொடர்ந்து அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அதன் பிரதிபலனாகதான் இவற்றை நாங்கள் இன்று அனுபவிக்கின்றோம். அவசர காலச் சட்டம் நீடிக்கப் பட்டு அது தமிழர்களுக்கு எதிராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுவே உண்மை.

எனவே நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்கி சாதாரண சிவில் சட்டங்களின் பிரகாரம் வழிநடத்த வேண்டும். என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரெஞ்சு நாட்டு கப்பல் திருகோணமலையை வந்தடைந்துள்ளது

பிரெஞ்சு நாட்டின் லீ. டயமன்ட் உல்லாசப் பயணிகள் கப்பல் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலை அஸ்ரப் துறை முகத்தை வந்தடைந்துள்ளது.

பிரெஞ்சு (சி.எம்.ஏ, சி.ஜி.எம்) நிறுவனம் உலகத்தில் 3ஆவது கண்டெய்னர் சிப்பிங் நிறுவனமாக திகழ்கின்றது.

77 பயணிகளுடன் வருகை தந்துள்ள இக் கப்பல் இம் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு துறை முகத்தை வந்தடைந்தது.

15ஆம் திகதி காலி துறை முகத்தையும் இன்று திருகோணமலை துறை முகத்தையும் வந்தடைந்துள்ளது.

ஆடம்பர உல்லாச பயணிகள் கப்பலான இது 113 அறைகளையும் நீர்தடாகம் வர்த்தக நிலையம் நூலகம் உட்பட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.

குறித்த கப்பலின் கெப்டன் ஹேர்வன் லீ ரூசி கூறும் போது, எமது இப் பயணம் மனதுக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

இலங்கையில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து 30 வருடங்களின் பின்னர் இங்கு நாம் வந்துள்ளோம்.

இன்று ஒரு நாள் சுற்றுலாப் பயணமாக அமைய உள்ள இப் பயணத்தில் எமது உல்லாசப் பயணிகள் தம்புள்ள, பொலநறுவை, நிலாவெளி, மாபிள்வீச் முதலான இடங்களைப் பார்வையிட உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டொப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நிறைவு

கூட்டொப்பந்தம் தொடர்பில் தோட்டத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று கொழும்பில் பேச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்; சம்மேளனத்திற்கும் தோட்டத் தொழிற்சங்கங்கள் சிலவற்றுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் நடைமறை சம்பளப் பிரச்சினைகள் தொடர்பாக இன்று 16 ஆம் திகதி தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்று கொழும்பில் இடம் பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஹரிசந்திரசேகரன், இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக இதன் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் மற்றும் மொஹிதின் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஓ.ஏ. இராமையா ஆகியோரும் முதலாளிமார் சம்மேளனம் சார்பாக லலித் ஒபேசேகர உட்பட பெருந்தோட்டக் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் கருத்துத்தெரிவிக்கையில் :

வேலைப்பளுவுக்கு அமைவான ஊக்குவிப்புக் கொடுப்பனவு விடயத்தில் தோட்ட நிர்வாகத்தினர் ஒப்பந்தத்தை மீறி தன்னிச்சையாகச் செயற்படுவது, ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினம் போன்ற விடுமுறை தினங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அன்றைய தினம் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்படவேண்டுமென ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்காக வேலைப்பளுவை அதிகரிப்பது, வேலைக்கு சமுகமளிக்கும் தொழிலாளி ஒருவர் வேலைப்பளுவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் ஒருநாள் சம்பளம் வழங்கப்படவேண்டுமென்ற கூட்டு ஒப்பந்த நிர்ணயத்தை மீறுவது தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கேற்ப ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினம் போன்ற விடுமுறை தினங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அன்றைய தினம் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்படவேண்டும். இந்தச் சம்பளம் தொடர்பாக சம்பளச்சீட்டில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினம் போன்ற விடுமுறை தினங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒன்றரை நாள் சம்பளம் வருகைக் கொடுப்பனவில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஒரு நாட் சம்பளத்திற்காக தொழிலாளர்கள் எடுக்க வேண்டிய கொளுந்தின் நிறை தொடர்பில் தோட்ட நிருவாகங்கள் தன்னிச்சையாக தீர்மானிக்காமல் தோட்டத்தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும். இவ்விடயங்கள் தொடர்பில் தோட்டக்கம்பனிகள் உடன்பாட்டுக்கு வராவிட்டால் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்க நேரிடுமென்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தெளிவுபடுத்தாவிடினும் நகரப்பதிப்பில் அந்த செய்தியை நான் பிரசுரித்திருப்பேன்: பிரட்ரிகா

சண்டே லீடர் பத்திரிகையில் நகரப் பதிப்பு, பிந்திய நகரப்பதிப்பு என இரண்டு பதிப்புகள் இருக்கின்றன. செய்தியை தெளிவுபடுத்தினாலும் தெளிவுபடுத்தாவிடினும் நகரப்பதிப்பில் அந்த செய்தியை நான் பிரசுரித்திருப்பேன் என "சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸிடம் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நேற்று திங்கட்கிழமையும் மீள் விசாரணை செய்தார்.

இதன்போது நேற்று சாட்சியமளிப்பதற்கு மன்றுக்கு வருகைதந்திருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் லால் விக்ரமதுங்க ஆகியோர் மன்றுக்கு வெளியே அனுப்பப்பட்டனர்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கின் மீள் விசாரணையின் போது பிரட்ரிகா ஜான்ஸ் செய்தியை தெளிவுபடுத்தினாலும் தெளிவுபடுத்தாவிடினும் நகரப்பதிப்பில் அந்த செய்தியை நான் பிரசுரித்திருப்பேன் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காணாமல் போனோரைக் கண்டறியவும் முகாம்களில் உள்ளோரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணாமல் போன தமது உறவுகளையும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளையும் மீட்டுத் தருமாறும் தமது அடிப்படை வசதிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி, கண்டாவளை, முரசுமோட்டை பகுதிகளில் மீள் குடியேறியுள்ள மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வட்டக்கச்சி, கண்டாவளை, முரசுமோட்டை கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அப்பகுதி கிராம சேவகர்கள் தலைமையில் பொதுமக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்புக்களின் போதே அப்பகுதி மக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டக்கச்சி கிராம சேவகர் அலுவலகத்தில் பெருமளவான மக்கள் எம்.பி.யை சந்தித்து அவரிடம் மகஜர்களை கையளித்தனர். தனது மூன்று பிள்ளைகள் யுத்தகாலத்தின் போது காணாமல் போயுள்ளதாக அவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டக்கச்சி உடைகத்தகண்டியைச் சேர்ந்த க. மகேஸ்வரி என்ற தாயார் கோரிக்கை விடுத்தார்.

இதேபோல் அழகரட்ணம் வீதியைச் சேர்ந்த வே. கனகசபை என்பவர் தனது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை மீட்டுத் தரக் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஹட்சன் வீதியைச் சேர்ந்த கு. இரத்தினேஸ்வரி என்பவர் வழங்கிய மகஜரில் தனது இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிந்து தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தம்மையா லிங்கேஸ்வர சூரியம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்; யுத்தத்தின் போது தனது இரண்டு பிள்ளைகள் பலியானதாகவும், ஒரு மகனை காணவில்லையென்றும் காணாமல் போன மகனையாவது மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதேபோல் கிளாறா ஜெஸ்மின் என்ற பெண் சமர்ப்பித்த மகஜரில் தனது கணவன் கொக்கனையில் வைத்து காணாமல் போனதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை ஆறுமுகம் கருப்பையா, மு. நமசிவாயம், ரா. நந்தினி, கோ. பிரதீபா, அ. மயில்வாகனம் , ம. இருதயராசன் ஆகியோர் தமது பிள்ளைகள், மற்றும் கணவன் மார் தடுப்பு முகாமில் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தனபாலசிங்கம் டேனியல், மா. நகுலேஸ்வரன், சவரியப்பன் ஆகியோர் தமது உறவினர்கள், காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் கண்டாவளை, முரசுமோட்டை பகுதி மக்களும் தமக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் காணாமல் போன மற்றும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்விடயங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜே.வி.பியின் ஆர்ப்பாட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் நேற்று ஜே. வி. பியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பொது மக்களால் குழப்பப்பட்டது.

ஜே. வி. பி.யின் ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் பொதுமக்கள் தக்காலி மற்றும் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தைக் குழப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, செயலாளர் ரில்வின் சில்வா, கட்சி முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மனிதாபிமான இராணுவ நடவடிக் கையின் போது கைது செய்யப்பட்டு சிறை யில் வைக்கப்பட்டிருப்பவர்கள் எனக் கூறப்படுபவர்களை விடுவிக்கும்படி அரசைக்கோரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஜே. வி. பி யினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

குறுந்தகவல் மூலம் நீர் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்


தொலைபேசியினூடாக குறுந் தகவல் அனுப்புவதன் மூலமாக நீர் கட்டணம் செலுத்தும் முறையொன்றை நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பு நிகழ்வை முன்னிட்டு நேற்று முதல் இந்த புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கூறியது. நீர் கட்டணம் செலுத்துவதை இலகுபடுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வைபவம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
மேலும் இங்கே தொடர்க...

உலகில் சூழல் பாதுகாப்பில் நாம் முன்னணியில் இருக்கிறோம் ஜனாதிபதி




உலகில் இன்று பாரிய சவாலாக உள்ளது புவி வெப்பமயமாகும் பிரச்சினை. இந்த சவாலை உலகத்துக்கு ஏற்படுத்தியவர்கள் மனிதர்களேயாவர். அபிவிருத்தியடைந்த நாடுகள் பெருமளவு காபன் வாயுவை சூழலுக்கு வெளியிடுகின்றன.

எமது நாட்டில் மிகவும் சிறிய அளவு காபன் வாயுவே வெளியேற்றப்படுகிறது. இதன்படி, உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளை விட நாம் சூழல் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கிறோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டுக்கு சுதந்திரமும் கெளரவமும் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாண நிகழ்வின் முதற் கட்டமாக நேற்று (15) காலை 10.07 க்கு நாடளாவிய ரீதியில் 11 இலட்சம் மரங்களை நடும் தேசத்துக்கு நிழல் நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10.07 க்கு இடம் பெற்ற சுபவேளையில் ஜனாதிபதி இல்லத்தில் மரமொன்றை நாட்டி வைத்து “தேசத்துக்கு நிழல்” வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அங்கு உரையாற் றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது, எமது எதிர்கால பரம்பரைக்கு மிகவும் சிறப்பான சேவையொன்றை ஆற்றிய இனம் என்பதை நான் மகிழ்ச்சி யுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இன்று இந்த நாட்டில் 11 இலட்சம் பேர் 11 லட்சம் மரங்களை நாட்டினர். இலங் கையில் மட்டுமன்றி உலகில் உள்ள எமது தூதரகங்களிலும் உயர்ஸ்தானிகராலயங் களிலும் உள்ள ஊழியர்களும் இவ்வாறு ஒரே நேரத்தில் மர நடுகையில் ஈடுபட் டுள்ளனர். எமது எதிர்கால பரம்பரைக்கு உதவும் வகையிலேயே இவ்வாறானவொரு சிறப்பான சேவையை செய்ததாக நாம் மகிழ்ச்சியடைய முடியும்.

நாம் இப்போது வசிப்பது ஒரு சுதந்திர நாட்டிலேயாகும். நாட்டை கட்டியெழுப் பியவாறே நாம் பாரிய பொருளாதார தூண்டுதலை மேற்கொள்ளும் போது எமக்கு சுதந்திரத்தின் சீரான காற்றை மூச்செடுக்கவும் முடிகிறது.

சரித்திரப்பூர்வமாகவே எமது நாடு சூழல் நட்புறவுடன் கூடியது. இந்த நாட்டை நிர்வகித்த அனைவரும் சூழலை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டி யவர்கள். அவ்வாறான ஒரு யுகத்தை மீண்டும் கட்டியெழுப்ப “தேசத்துக்கு நிழல்” வேலைத் திட்டம் பெரிதும் உதவும்.

எமது கிராமங்களில் அன்று வீடொன்றை கட்டுவதற்கு மரமொன்றை தறிக்க நேரிட்டால் அந்த மரத்தை வணங்கி விட் டுத்தான் அதனை தறிக்க ஆரம்பிப்பார்கள். பழமொன்றை பறிக்கும் போதும் முதலில் மரத்துக்கு வணக்கம் சொல்வார்கள். மரமொன்றை தறிப்பதனால் செடியொன்றை நட்ட பிறகே மரத்தை தறிப்பார்கள். அவ்வாறு தான் எமது கிராம மக்கள் வளர்ந்து வந்தார்கள். அந்த விதம் இப்போது இல்லை.

அனைத்து பாடசாலைகளிலும் உள்ள சிறுவர்கள் இன்று மரமொன்றை நாட்டியுள்ளனர். வெறுமனே மரத்தை நாட்டி விட்டால் மட்டும் போதாது. அதனை பேணி வளர்க்கவும் வேண்டும்.

புதிதாக மரமொன்றை நாட்ட ஆரம்பிக் கும்போது இன்று நட்ட மரம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்று நீங்கள் சந்தோசமடைய முடிந்தால் உங்களுக்கு மிகுந்த திருப்தி ஏற்படும். அவ்வாறான திருப்தியை பெற நீங்கள் இப்போது தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள், அரச அதிகாரிகள், மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மத பூசகர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் இன்றைய “தேசத்துக்கு நிழல்” நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சரணடைய வந்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை பாது. செயலரின் பணிப்புரைக்கமைய செயற்பட்டோம் - மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா


வன்னியில் நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது சரணடைந்த புலிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது எனப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இராணுவத்துக்குத் தெளிவான அறிவுறுத்தலை வழங்கியிருந்ததாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர, பி. பி. வரவேவ மற்றும் எம். இஸட். ரசீன் ஆகியோர் முன்னிலையில் மேலும் சாட்சியமளித்த அவர்;

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில் தப்பி வந்த பொதுமக்கள் மற்றும் புலி உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல் வழங்கியே வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இறுதி நேரத்தில் அப்பாவிப் பொது மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களில் காயமடைந்த வர்களும் இருந்தனர். கடும்பாதிப்புக் குள்ளானவர்கள் மேலதிக சிகிச்சைக் காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யுத்தத்தில் புலிகள் தோல்வியுறுகின்றமை உறுதியானதால் மக்கள் வெளியேறினர்.

அவ்வாறு சரணடையத் தீர்மானித்த மக்கள் வெள்ளைக்கொடிகள் மாத்திரமன்றி, வெள்ளைநிற ஆடைகள் மற்றும் தமது கைகளை உயர்த்தியவாறு வந்தனர். அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகள் என்பதால் எவருக்கும் பாதிப்பின்றி வரவேற்றோம்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை எந்தவிதமான மனித உரிமை மீறல்களுமின்றி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. புலிகளின் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றிய போது எந்தவிதமான மனித உரிமை மீறல் முறைப் பாடுகளும் செய்யப்படவில்லை.

இறுதிக் கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும் 2009 ஆம் ஆண்டு 18ம் திகதி வெளிநாட்டி லிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நள்ளிரவு தனது வாழ்த்துக்களைப் பாதுகாப்புப் படையினருக்கு தெரிவித்திருந்தார் என்றும் ஷவேந்திர சில்வா கூறினார். 1984ம் ஆண்டு கடேட் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்து கொண்ட ஷவேந்திர சில்வா, புலிகளுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். இவர் தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றி வருகிறார்.

நேற்றைய விசாரணையின் போது சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன, சிரேஷ்ட அரச சட்டத்தரணி திலான் ரத்னாயக்க, சட்டத்தரணி ஜொகான் லியனகம ஆகியோர் ஆஜராகினர். பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி நலின் லதுவஹெட்டி ஆஜரானார். வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான அடுத்த நீதிமன்ற விசாரணைகள் இன்று நடைபெறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...