16 செப்டம்பர், 2009

தாயகக்குரல் 19

அண்மைக் காலங்களில் ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி கூறும் கருத்து, "இலங்கைஒரே நாடு. இலங்கையர் அனைவரும் ஒரே இனம்" என்பதாகும். இதை ஜனாதிபதிஎன்ன அர்த்தத்தில் கூறுகிறாரோ தெரியாது. முஸ்லிம் தேசிய காங்கிரஸ்மகாநாட்டில் பேசிய ஜனாதிபதி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இனவாதஅரசியல் நமது நாட்டுக்கு உகந்ததல்ல.
இந்த நாட்டில் இனிமேல் இனப்பிரச்சினை இல்லை. அனைத்து இன மக்களும்இந்த நாட்டு பிரஜைகள் என்ற ரீதியல் சமமானவர்கள் என்று பேசியுள்ளார். இதுதான் அண்மைக் காலங்களில் ஜனாதிபதியின் சிந்தனையாகவெளிவருகின்றது. இது ஒரு பேரினவாதக் கருத்து என்ற எண்ணம் புத்திஜீவிகள்மட்டத்திலே தோன்ற ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதியினது கருத்து குறித்து விமர்சனங்கள் எழுவதில் ஆச்சரியப்படஒன்றும் இல்லை. இனங்களிடையே ஒருவரை ஒருவர் சந்தேகிக்காமல்சமாதானமாக வாழும் சூழ்நிலை தோன்றிய பின்னர் ஜனாதிபதி இந்தக் கருத்தைகூறியிருந்தால் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்திருக்கும். அப்படிப்பட்டசூழ்நிலை உருவாக வேண்டுமானால் பெரும்பான்மை இனம் அனுபவிக்கும்அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினத்துக்கும் கிடைக்கும் விதத்தில்அரசியல் அமைப்புமூலம் உறுதிசெய்யப்படவேண்டும்.

இந்த அரசியல் உரிமைகள் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தவேண்டுமேஅன்றி பெரும்பான்மையினர் தமது உரிமைகளை விட்டுக்கொடுக்கத்தேவையில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் இனி இனப்பிரச்சினைகிடையாது என ஜே.வி.பி., ஹெலஉருமய போன்ற கட்சிகள் கூறலாம். அவர்கள்கூறுவதை யாரும் கணக்கில் எடுக்கத் தேவையில்லை. ஆனால் இனப்பிரச்சினைகிடையாது என்று தேசியக் கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணியோஅல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ கூறமுடியாது.

கடந்த காலங்களில் இவர்கள் மாறி மாறி ஆட்சியில் இருந்தபோதுஇனப்பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு புலிகளுடன்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரவு தலைவர் மங்கள சமரவீரா, எம்.பி. தெரிவித்திருப்பது போன்று புலிகள் அமைப்பானது பிரச்சினைகளின் ஒருபிரதிபலிப்பே தவிர பிரச்சினை அதுவல்ல.

இலங்கைத் தமிழ் மக்கள் தனியான ஒரு இனம் என்பது புலிகளால்ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அதற்கு நீண்டகால வரலாறு உண்டு. இலங்கைத்தமிழ் மக்களும் சிங்கள மக்களைப் போன்றே நீண்ட வரலாற்றையும், தனியானகலாச்சாரத்தையும், பாரம்பரிய பிரதேசங்களையும் கொண்ட தனி இனம் என்றகோட்பாட்டின் அடிப்படையிலேயே 1949ல் தமிழ் அரசுக்கட்சி தோற்றம் பெற்றது.

இலங்கை ஒரே நாடு, இலங்கையர் அனைவரும் ஒரு இனம் என்ற நிலையில்வாழ சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் அரசியல் ரீதியாகபாதுகாக்கப்படவேண்டும்.

அரசின் பங்காளிக் கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக பலவித கருத்துக்களைகொண்டிருக்கின்ற இன்றைய நிலையில் அரசாங்கத்தால் சிறுபான்மை இனமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்; விதத்தில் ஒரு தீர்வைக் கொண்டுவரமுடியுமா என்பதே மக்கள் மனதில் எழுகின்ற கேள்வியாகும்.

ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து அரசை ஆதரிக்கும் விமல் வீரவம்சாதலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, 13வது திருத்தம் பற்றிஅமைச்சர்கள் வாய் திறக்கக்கூடாது என்று கட்டளை இடுகிறது.
கிறீஸ்தவ, இஸ்லாமிய மதக்குழுக்களை உடனடியாக தடைசெய்யவேண்டும்என ஹெல உருமைய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர்அரசிடம் வலியுறுத்துகிறார்.

சமஷ்டி முறைக்கு இந்த நாட்டில் இடம் இல்லை என்கிற கோஷமும்இடையிடையே அரசு தரப்பிலிருந்து கேட்கிறது.

இனவாதக் கட்சிகளாக தம்மை இனம் காட்டிய கட்சிகள் என்ன கருத்தைவெளியிட்டபோதிலும் சிங்கள மக்களிடையே பலமான ஆதரவை பெற்றிருக்கும்தேசிய கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒருமைப்பட்டால் இனப்பிரச்சினையைசுலபமாக தீர்க்கமுடியும்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியோ அரசாங்கத்தை வீழ்த்தியே தீருவது என்றுகங்கணம் கட்டி எதிர்கட்சிகளை இணைத்து ஒரு கூட்டணி அமைப்பதில்தீவிரமாக உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் உட்பட 19 அமைப்புகள் உள்ளடங்கலாக எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு இன்னும் ஒருமாதத்துள் நிறுவப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்துக்கட்சிபிரதிநிதிகள் குழுவுடன் இதுவரை காலமும் ஒத்துழைக்காது விமர்சனம் செய்துவந்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது இனப்பிரச்சினை தீர்வுக்கான தமதுஆலோசனைகளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம்கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அரசாங்கமும் தமதுஆலோசனைகளை தெரிவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை விடாப்பிடியாக கொண்டிருந்த ஐக்கியதேசியக்கட்சி புலிகளுடனான ஒஸ்லோ பேச்சுவார்த்தையின்போதுதான் முதல்முறையாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புக்கொண்டது. ஆனால் பின்னர் சமஷ்டி அடிப்படையிலானதீர்வை எந்தக்காலத்திலும் தாம் ஏற்றுக்கொண்டதில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்திருந்ததுடன் 13வது திருத்தமே இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு எனத் தெரிவித்தது.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கையளித்தஆலோசனைகளில் என்ன தீர்வை முன்வைத்துள்ளார்கள்; என்பது தெரியும்வரைரணிலின் தீர்வுத்திட்டம் பற்றி எந்தக் கருத்தும் கூறமுடியாது. அதேபோலஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் என்ன நோக்கம் கொண்டவைஎன்பதையும் வரும் காலம்தான் உணர்த்தமுடியும்.
மேலும் இங்கே தொடர்க...
வவுனியா நகரசபை தலைவர் ரி.என்.ஏ சம்பந்தர் தலைமையில் பதவியேற்பு

வவுனியா நகரசபை தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் தலைமையில் பதவியேற்பு. வவுனியா நகரசபை கலாச்சாரமண்டபத்தில் இடம்பெற்ற பதவியேற்பில் வவுனியா நகரசபைக்க தெரிவானகூட்டமைப்பு உறுப்பினர்களும், முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும்பதவியேற்றுக்கொண்டனர்.
ஜக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் தெரிவான இருவரும் மற்றும் புளொட்சார்பாக தெரிவான உறுப்பினர்களும் மேற்படி பதவியேற்பில்பதவியேற்கவில்லை. நகரசபையின் எதிர்க்கட்சி ஸ்தானத்தை பெற்றுள்ளபுளொட் உறுப்பினர்கள் எவரும் இங்கு பதவியேற்கவில்லை.
கடந்த 10ம் திகதி வவுனியா வைரவபுளியங்குளம் புளொட் அலுவலகத்தில்தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமூக சேவையாளருமான வை. தேவராஜா முன்னிலையில் நகரசபைக்கு தெரிவாகியுள்ள புளொட்உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, .பார்த்தீபன் ஆகியோர்பதவியேற்றுக்கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...
யாழ் விளையாட்டு கழகங்களுக்கு வவுனியா நங்கூரம் விளையாட்டு கழகம் கௌரவிப்பு


வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின்ஏற்பாட்டில் 12.09.09 - 13.09.09 இருதினங்கள் நடைபெற்ற சிநேகப+ர்வஉதைபந்தாட்ட போட்டிகளிள் யாழ்பாஸையூர் சென்ற் அந்தேநிஸ்விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.



வவுனியா நகரசபை மைதானத்தில்நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் முதல் நாள் 12.09.09 யாழ் பாஸையூர்சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகமும் வவுனியா "அல்அசிரா" விளையாட்டுக்கழகமும் ஆகிய இரு அனிகழூக்குமிடையில் போட்டியில் யாழ்பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகம் 2 கோல்களால் வெற்றிபெற்றது.



தொடர்ந்து 13.09.09 அன்று யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ்விளையாட்டுக்கமூம் "வவுனியா யூனி பைற்" விளையாட்டுக்கழகமும் ஆகியஇரு அனிகழூக்குமிடையிலன போட்டியில் யூனி பைற் விளையாட்டுக்கழகம் 01 கோல்களும் யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகம் 08 கோல்களும் பெற்று வெற்றி பெற்றதுடன் ஆட்டம் நிறைவுபெற்றது.


புளொட் அமைப்பின் நங்கூரம் விளையாட்டுக்கழகம் இவ் சிநேகப+ர்வபோட்டியில் பங்கு பற்றிய யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் உதைபந்தாட்டகுழுவினருக்கு காலையும் மதியமும் இரவும் போசனம் வழங்கி கௌரவித்தனர். வைரவபுளியங்குளம் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்வவுனியா உதைபந்தாட்; சங்க பிரதி நிதிகள் உட்பட லிங்கநாதன் மாவட்டஅரசியள் பொறுப்பாளார் சு.சிவம் நங்கூரம் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள்ஆகியோர் கலந்து கோண்டனர்.

மேலும் இங்கே தொடர்க...