6 பிப்ரவரி, 2011

சார்க்' மாநாடு பூடானில் இன்று தொடக்கம்

திம்பு (பூடான்), பிப்.5: சார்க் மாநாடு ஞாயிற்றுக்கிழமை பூடான் தலைநகர் திம்புவில் தொடங்குகிறது.

சார்க், எட்டு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த நாடுகளிடையே பிரதேச அளவில் பொருளாதாரம், பாதுகாப்பு, உள்பட பல விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு காண பேச்சுவார்த்தை நடத்த 4 நாள்கள் மாநாடு நடக்கவுள்ளது.

ஞாயிறும், திங்களும் வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த முதல்கட்ட பேச்சின் முடிவில் செயலர்கள் குழு ஒரு அறிக்கையைத் தயாரிக்கும்.

இந்த அறிக்கையின்மேல், அடுத்த கட்டமாக சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள்.

இந்தியா-பாகிஸ்தானைப் பொருத்தவரை, இந்த மாநாட்டின்போது, இரு நாட்டு பொருளாதார, பாதுகாப்புக் கொள்கை அளவில் மட்டுமல்லாமல், சாதாரண மக்களையும் பாதிக்கக் கூடிய, பயண விசா, மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றை முக்கியமாக விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு, வெளியுறவுத் துறைச் செயலர்கள் திம்புவில் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தில் ஒரு மில்லியன் பேர் பாதிப்பு





இலங்கையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்துவரும் கன மழை காரணமாக சுமார் ஒரு மில்லியன் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்தி ஆகிய மாகாணங்களில் உள்ள 11 மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள பெருமளவிலான மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இடம்பெயர்ந்தவர்கள் பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்
இடம்பெயர்ந்தவர்கள் பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்
கிழக்கே பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை மழை சற்று ஓய்ந்து, வெள்ளம் வடிந்து வருகின்ற போதிலும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய குடும்பங்கள் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் 59 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து 179 நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளதாக மாவட்ட செயலகம் கூறுகின்றது.

யாழ்ப்பானம் ,கண்டி மற்றும் கொழும்பு உட்பட தூர இடங்களிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ரயிலிலும் பஸ்களிலும் பயணித்த 700 இற்கும் மேற்பட்ட பயணிகள் தமது பயணத்தை தொடர முடியாமல் பொலனறுவை ரயில் நிலையத்தில் கடந்த 4 நாட்களாக தங்கியுள்ளனர்

இந்தப் பயணிகளை வெள்ளம் வடிந்த பின்பு பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறினார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தில்; 17ஆயிரத்து 441 குடும்பங்களைச் சேர்ந்த 65ஆயிரத்து 688 பேர் 161 நலன்புரி முகாம்களில தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் படகு மூலம் மீட்பு





பணிகளில் புளொட் உறுப்பினர்கள்- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டு செல்;வதற்கும், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்துக்கும், மருத்துவப் பணிகளுக்கும் புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த நான்கு நாட்களாக நான்கு இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவர்களை அழைத்துச் செல்லுதல், நோயாளர்களை மட்டக்களப்பு மற்றும் நாவற்காடு வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மண்டபத்தடி, புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, கரையாக்கன்தீவு, காயன்மடு, பருத்திச்சேனை, கன்னங்குடா ஆகிய இடங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு 1000ற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் இன்றையதினம் புளொட் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...