23 ஆகஸ்ட், 2010

இலங்கை அகதிகளுடனான அடுத்த கப்பல் தமது நாட்டுக்கு வரலாம்- நியூசிலாந்து.

இலங்கை அகதிகளுடனான அடுத்த கப்பல் தமது நாட்டை நோக்கி வரலாம் என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. அகதிகள் தற்போது தமது நாட்டை இலக்கு வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 490 இலங்கை அகதிகளுடன் எம்.வீ. சன் சீ என்ற கப்பல் கனடாவை அடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன். அகதிகளுடனான பொருட்களை ஏற்றிவரும் அடுத்த கப்பல் சர்வதேச கடற்பரப்பினூடாக தமது நாட்டை அடையலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை காலமும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவை நோக்கியே அதிகளவான அகதிகள் சென்றுள்ளதாக தெரிவித்த நியூசிலாந்து பிரதமர், அடுத்த அகதிகள் கப்பல் தமது நாட்டை இலக்கு வைப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மேர்வின் சில்வா யாழ். குடா நாட்டிற்கு சென்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ். குடா நாட்டிற்கு சென்றுள்ளார். இவர் யாழ். குடா நாட்டிற்கு இன்றைய தினம் சென்றுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, நலன்புரி நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளதாகவும், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நலன்புரி நிலையங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளதாகவும் அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, நாளைய தினம் களனி விகாரைக்கு வர்ணம் பூசுவதற்கான அனுசரணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க- இலங்கை விமானப் படைகளிடையே கூட்டு ரோந்து


இலங்கை வான் பரப்பில் அமெரிக்க வான்படையுடன் இணைந்து கூட்டு ரோந்துப் பணிகளில் ஈடுபட இலங்கை வான் படை தீர்மானித்துள்ளது.

விசேடமாக இலங்கை கடற்பரப்பின் மேலான கண்காணிப்புப் பணிகளிலேயே அமெரிக்க வான்படையினரின் சேவை பெறப்பட இருக்கிறது.

இத் தகவல்களை இலங்கையின் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ரத்மலானையில் இடம்பெற்ற விமானப்படை வீரர்களுக்கான விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்? : அமைச்சர் சுசில் கேள்வி

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் அல்லது இல்லாதொழியுங்கள் என எதிர்க்கட்சியினர் கோருகின்றனர். டபஅ எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்?

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோன்றுவதற்கு முன்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. 1980 களின் ஆரம்பத்தில் இதனை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி அதன் மூலமே மக்கள் விடுதலை முன்னணியைக் கட்டுப்படுத்தியது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்கள் அதனை நீக்குமாறு இன்று வெளிநாடுகளுக்கு சென்று கோருகின்றனர். என்ன நிலையிலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

புதைத்துவைத்துள்ள இடங்களிலிருந்து ஆயுதங்கள் இன்று வரை மீட்கப்படுகின்றன. எனவே அவசரகால சட்டம் நடைமுறையிலிருக்க வேண்டியதவசியம்.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான சட்டங்களை மாற்றுமாறு கோருவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு என்ன அதிகாரம் உள்ளது?

இவ்வாறு கோரிக்கை விடுப்பதானது இலங்கையின் இறைமைக்கு ஏற்படுத்தும் அழுத்தம். விடுதலைப்புலிகளுக்கோ உலகில் எந்தவொரு நாட்டுக்கோ அரசாங்கம் அடிபணியப் போவதில்லை.

ஜி.எஸ்.பி வரிச்சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் அல்லது இல்லாதொழியுங்கள் என எதிர்க்கட்சியினர் கோருகின்றனர். டபஅ எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்?

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோன்றுவதற்கு முன்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980 களின் ஆரம்பத்தில் இதனை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி அதன் மூலமே மக்கள் விடுதலை முன்னணியைக் கட்டுப்படுத்தியது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தளத்தில் திடீர் மழை : உப்பளங்கள் சேதம்

திடீரென புத்தளம் நகரில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்போக அறுவடைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு உப்பு சேதமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலுள்ள சுமார் 350க்கு மேற்பட்ட தனியார் உப்பளங்களில் பெரும்போக அறுவடை இடம்பெற்று வருகின்றது. முதலாவது அறுவடை இடம்பெற்று முடிந்தது. இரண்டாவது அறுவடைக்காக நீர் நிரப்பட்டு உப்பும் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

எனினும் கடந்த சனிக்கிழமை பெய்த திடீர் மழையினால் அவை யாவும் நீரில் கரையுண்டு போனதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல லட்சம் ரூபா பெறுமதியான உப்பு, இவ்வாறு சேதமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துக் கொள்வனவு:அமைச்சு ஏற்பாடு

பன்றிக் காய்ச்சலுக்கான ஒரு மில்லியன் தொகுதி தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் ஏ.எச்1.என்1. வைரஸ் மூலம் பரவும் பன்றிக் காய்ச்சல் வேகமாகத் தொற்றுவதால், இலங்கையிலும் அதன் பாதிப்பு ஏற்படலாம் என சுகாதார அமைச்சு கருதுகிறது. இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளது.

உலக சுகாதர ஸ்தாபனத்திடம், சுகாதார அமைச்சு இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு வைத்திய அதிகாரி சுதத் பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி சிகிரியா விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிகிரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான சிகிரியா ஓவியங்கள் நிறமாற்றமடைந்து வரும் நிலை காணப்படுவதால் அவற்றைப் பார்வையிட்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்தியா இடையில் படகு சேவை

இலங்கை இந்தியாவுக்கிடையில் படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக உடன்படிக்கைகளை இரண்டு நாடுகளும் தயார் செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவை கடந்த கால யுத்த சூழ்நிலைகளினால் பாதிப்படைந்தது.தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும், கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்குமாக இந்த படகு சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

படைத்தரப்பின் முன்னாள் உயரதிகாரிகள் தூதுவராக நியமனம்?

படைத்தரப்புக்களின் முன்னாள் உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் சிலரை இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தூதுவர்களாக, படைத்தரப்பின் முன்னாள் உயரதிகாரிகள் மற்றும் முன்னாள் அரசியல் வாதிகளை நியமிப்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதே தவிர இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதிபாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த மற்றும் முன்னாள் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட ஆகியோர் மலேசியா மற்றும் பிரிதானிய நாடுகளுக்கான தூதுவர்களா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் பிரதியமைச்சர் மனோ விஜேரத்ன ஆகிய இருவரும் தூதுவர்களாக நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்டர்.

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கருணாகொட நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக பணியாற்றிவருகின்றார். இதேவேளை முன்னாள் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தவிற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப்பட்டியல் வழங்குவதற்கு பெயர்குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் வெளிவிவகக்ஷிர அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவையும் தூதுவராக நியமிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சீனா,ரஷ்யா,பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளில் தூதுவர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் இரண்டொரு வாரங்களுக்குள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் விமானப்படை தளபதி டொனால் பெரேரா ரஷ்யா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் படைகளின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை தூதுவராக நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள்' - நல்லிணக்க ஆணைக்குழு தனது இரண்டாம் கட்ட விசாரணைகளை இன்று ஆரம்பித்துள்ளது.

சர்வதேச தொடர்புகளுக்கான கதிர்காமர் கற்கை நிலைய கட்டிடத்தில் இந்த அமர்வு நடைபெறுகிறது. இவ்வமர்வில் பொது மக்களின் சாட்சியங்கள் பெறப்படவுள்ளன.

அமர்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்-பூநகரிக்கிடையில் விஷேட படகுச் சேவை


உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி யாழ்ப்பாணத்திற்கும், பூநகரிக்கும் இடையிலான விஷேட படகுச் சேவையை ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதியும் வட மாகாணத்தின் சுற்றுலாத்து றையை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த படகுச் சேவையின் மூலம் ஒல்லாந்தர் கோட்டை, பூநகரிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள், மற்றும் தொல்பொருள் பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் பூநகரியி லுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள்,

தொல்பொருள் இடங்கள் அபி விருத்தி செய்யப்பட்டு, குடாநாட் டின் உற்பத்தி பொருட்களை விற் பனை செய்யும் கூடமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

பூநகரியை சுற்றுலா பயணத்தல மாக அபிவிருத்தி செய்வதே இதன் மற்றுமொரு நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையென பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் 765 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி அரியநேந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில் அனைவரையும் விடுவிக்க முடியாத பட்சத்திலும் சிறைகளிலுள்ள 50 பெண்களையும் 05 குழந்தைகளையுமாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென தான் கேட்டிருந்ததாகவும் அரியநேந்திரன் எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.

மகஜர் கிடைத்ததும் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி அறிவித்திருந்ததுடன், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தமை தொடர்பாக தனக்கு கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை: விடை சொல்லிக் கொடுத்த 3 ஆசிரியர் மீது நடவடிக்கைஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நேற்று நடைபெற்றதுடன், பரீட்சை மண்டபத்தில் விடைகளை மாணவர்களுக்கு வழங்கிய குற்றத்திற்காக மூன்று ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்புக்கு வெளியே இவ்வாறு நடைபெற்றுள்ளதுடன் சம்பந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2744 பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் நேற்று நடைபெற்றதுடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் செம்டம்பர் 4ம் திகதி ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர் அதற்கான சகல ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ள தாகவும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

கண்டி எசல பெரஹர யானைகளுக்கு இன்று மருத்துவ பரிசோதனைகண்டி எசல பெரஹர உற்சவத்தில் கலந்து கொள்ளும் அனைத்து யானைகளுக்கும் இன்று (23) மருத்துவ பரிசோதனை இடம் பெறும். பேராதனை பல்கலைக் கழகத்தின் மிருக வைத்திய பீட சிரேஷ்ட விரிவுரையாளர் அசோக்க தங்கொல்ல உள்ளிட்ட குழுவினர் இந்த வைத்திய பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான சிகிச் சைகளும் அளிக்கப்படும்.

மேற்படி பரிசோதனையின் போது கண், காது, மூக்கு, கால் போன்ற உறுப்புக ளுக்கு உடனடி சிகிச்சையளிக்கப்படும் எனவும் குறித்த உற்சவத்தில் கலந்து கொள் ளும் யானைகள் பல வருடமாக வைத்திய பரிசோதனைக் குட்படு த்தப்பட்டு வருவதாக ஸ்ரீதலதாமாளிகையின் தியவதன நிலமே தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

50 இளைஞர், யுவதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி


இந்தியாவிலுள்ள விதவைகளுக் கான சுயதொழில் அமைப்பின் ஊடாக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இலங்கையைச் சேர்ந்த 50 இளைஞர், யுவதிகள் அடுத்த மாதம் இந்தியா பயணமாகவுள்ளனர்.

200 விதவைகள் சுயதொழிலுக்காக அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், இவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கே 50 பேர் இந்தியா செல்லவுள்ளனர் என்றார்.

பயிற்சிகளை பெற்று வரும் 50 பேர் தெரிவு செய்யப்பட்ட 700 விதவைகளுக்கு உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையங் களில் பயிற்சிகளை வழங்கவுள்ளனர் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக் காட்டினார்
மேலும் இங்கே தொடர்க...

89,000 விதவைகளுக்கு மீள் எழுச்சித் திட்டம் இந்தியா 250 மில்லியன் ரூபா நன்கொடை
வடக்கு, கிழக்கிலுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்காக விசேட மீள் எழுச்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் முதற் கட்டத்திற்கென 250 மில்லியன் ரூபாய் நிதியை நன் கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக சிறுவர் மேம்பாட்டு, மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை க்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப் பட்டதுடன், இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்பட இருக்கின்ற இந்த மீள் எழுச்சி திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள் ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் மொத்தமாக 89 ஆயிரம் விதவைகள் அடையாளங் காணப்பட்டுள்ள னர். இவர்களில் 49 ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். 40 ஆயிரம் விதவைகள் வட மாகாணத்திலும் உள்ளனர். இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 25 ஆயிரம் விதவைகள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இதனை மையமாகக் கொண்டே முதற்கட்ட செயற்பாடுகளை மட்டக்களப்பி லிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப் படவுள்ள விதவைகளுக்கு தையல், விவ சாய, கணனி போன்ற துறைகளில் பயிற்சி கள் வழங்கப்படவுள்ளதுடன் சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சித் திட்டத்தின் கீழ் ஆடு, மாடு, விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என்றார். இந்த மீள் எழுச்சித் திட்டத்தை மேலும் விஸ்தரித்து, சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் ஆராயும் பொருட்டு அடுத்த மாதம் தான் புதுடில்லி பயணமாகவு ள்ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...