8 மார்ச், 2010

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும்

அமைச்சர் பாடலி
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். 2/3 ற்கும் அதிகமான நாடுகள் எம்முடனே உள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தவும் படை வீரர்களின் கெளரவத் துக்கு களங்கம் ஏற்படுத்தவும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக ஆராய ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க ஐ. நா. செயலாளர் தயாராகி வருகிறார். இதனை ஜனாதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகளினால் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. சகல நாடுகளையும் ஐ.நா. சமமாக நடத்த வேண்டும். ஆனால் இந்தக் கொள்கைளை ஐ.நா. மீறியுள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என ஜனாதிபதி தெளிவாக ஐ.நா. செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அச்சமற்ற தைரியமான செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக வார இறுதி நாட்களில் 50 ஆயிரம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றனர். யாழ்ப் பாணத்தில் இருந்து ஒரு இலட்சம் தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றனர். இந்த சுமூகமான சூழ்நிலையை குழப்ப புலிக ளுக்கு ஆதரவான சக்திகள் முயற்சி செய் கின்றன.

சில வேட்பாளர்களுக்கு புலி ஆதரவாளர்களே வாக்குப் பெற்றுத்தர உள்ளனர். ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும். கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் வாக்கெடுப்பில் இலங்கை 2/3 பெரும்பான்மையுடன் வென்றது. சகல ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. ஒரு சில நாடுகளே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன.

ஐ.நாவின் எந்த மனித உரிமை விசார ணைக்கும் எமது அரசாங்கம் இடமளிக்காது. ஐ.நா. முன்வைக்கும் விடயங்களுக்கு நாம் பதிலளிக்கத் தயார். ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இடமளிக்கமாட் டோம் என்றார்.

மேலும் இங்கே தொடர்க...

பொதுத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களிப்பர்


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க உள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறான பிரசாரம் காரணமாக முஸ்லிம்கள் எதிர்தரப்பிற்கு வாக்களித்த போதும் இம்முறை மக்கள் உண்மை நிலையை உணர்ந்து ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார். ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலா ளர் மாநாடு நேற்று (08) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி 2/3 பெரும் பான்மை பலத்தை பெறுவது உறுதி. இந்த வெற்றிக்கு முஸ்லி ம்கள் அதிக பங்களிப்புச் செய்ய உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உரு வாகியுள்ளது. எனவே இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களிக்க முஸ்லிம் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். (ர-ஜ)

மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி






நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பைச் செய்யும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு செயற்திட்டங்களை அரசாங்கம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெண்களுக்குச் சமத்துவம் வழங்குவது என்பதை விட பெண்களுக்கான மதிப்பையும் கெளரவத்தையும் பலப்படுத்துவதே முக்கியமானது. அத்தகைய கெளரவத்தைப் பாதுகாப்பதிலும் பெண்கள் முன்னிற்பது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அம்பாந்தோட் டையில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையில் பெண்கள் சகல துறையிலும் முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மகளிர் விவகார சிறுவர் நலன் அபிவிருத்தி அமைச்சு ஒழுங்கு செய்திருந்த தேசிய மகளிர் தின நிகழ்வுகள் நேற்று அம்பாந்தோட்டை சிஹபோபுர சிங்கப்பூர் நட்புறவு நிலைய மண்டபத்தில் நடை பெற்றது. நாடளாவிய ரீதியிலிருந்து மகளிர் அமைப்புக்கள் பல பங்கேற்ற இந்நிகழ்வில் சகல மத, பிரதேசங்களை அடையாளப்படுத்தும் கலை கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

அமைச்சர்கள் சுமேதா ஜீ ஜயசேன, சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, இளை ஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-

சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய இந்நிகழ்வில் நாம் குறிப்பாக நம் நாட்டுப் பெண்கள் சம்பந்தமாக பார்ப்போமானால் உலகில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இது எனலாம்.

பெண்கள் முன்னிலை அதிகாரத்தில் இருந்தமை பற்றி குறிப்பிடும் போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோரை நினைவிற் கொள்ள முடியும். இவர்கள் இருவரது ஆட்சிக் காலத்திலும் நான் பணியாற்றியுள்ளேன்.

எவ்வாறாயினும் எமது ஆட்சிக் காலத்தில் சிறுவர் மற்றும் மகளிர் நலன்களுக்காக தனி அமைச்சொன்றை உருவாக்கி அவர்களுக்குரிய முக்கியத்துவத்தையும் மதிப்பையும் நாம் வழங்கியுள்ளோம்.

இம்முறை மகளிர் தின தொனிப்பொருள் மிகவும் முக்கியமானது. எதிர்கால சுபீட்சமாக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி அது வலியுறுத்துகிறது.

எம்மால் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு விடயமுண்டு. அது 30 ஆண்டு காலத்திற்கு மேலாக நம் நாட்டுத் தாய்மார் மனதில் இருந்த பாதிப்புகளை நீக்கியதுதான். கடந்த கால யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்களே.

நம் நாட்டுத் தாய்மார் யுத்தத்தினால் பட்ட துயரங்களை இந்த பூமியில் வேறு எவரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லாமல் நாட்டின் சகல தாய்மாரும் துயரங்களை அனுபவித்தனர். பாடசாலைகளுக்கு முன்பாக தம் பிள்ளைகள் வெளியில் வரும்வரை காவல் நின்ற யுகத்துக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தாய்மாரே ஜனாதிபதிக்கு பெருமளவில் வாக்களிப்பார்கள் என்று உறுதியாகக் கூறிய பிள்ளைகளைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் பாடசாலை வாசலில் காவல் நின்றவர்கள் தமது தாய்மாரே என்பதை பிள்ளைகள் உணர்ந்துள்ளனர்.

இந்நாட்டின் பெண்களுக்காக நாம் என்ன செய்துள்ளோம் என எவரும் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களின் மனதில் நிம்மதியை உருவாக்கியமையே என எம்மால் கூறமுடியும்.

இந்நாட்டில் 53 வீதம் பெண்களே உள்ளனர். யுத்தத்தை இல்லாதொழித்தமை, போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை கசிப்பு போன்ற மதுபாவனைக்குத் தடைவிதித்தமை போன்றவை பெண்களுக்கு நிம்மதியைப் பெற்றுக் கொடுத்துள்ள விடயங்கள். இன்று பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது எனவும் தடைகள் போடப்பட்டுள்ளன.

இத்தகைய கட்டுப்பாடுகளினால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் சமூக நலனைக் கருத்திற்கொண்டே அரசாங்கம் செயற்படுகின்றது. மதுபாவனை போன்றவற்றால் ஏற்படும் மோசமான பிரதிபலனைக் குறைக்கவும் சமூக மேம்பாட்டை வலுப்படுத்தவும் இது உதவியுள்ளது.

இந்நாட்டைப் பொறுத்தவரை பொருளாதாரத்திற்கு பெண்களே பாரிய பங்களிப்புச் செய்கின்றனர். தேயிலை, ஆடைத் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளென பல துறைகளை இவற்றில் குறிப்பிட முடியும். சில துறைகளில் ஆண்களை விட பெண்களே பெருமளவில் பணிபுரிவதைக் காணமுடிகிறது.

பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்குவதை விட பெண்களுக்கான மதிப்பையும் கெளரவத்தையும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆணைக் குழுவொன்றை மகளிர் அமைச்சின் கீழ் ஏற்படுத்துவதுடன் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலுள்ள பெண்கள் அமைப்புகள் பங்கேற்ற கலாசார, நடன நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டதுடன் 2010 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தேசிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு எதிராக இன்னும் சில தினங்களில் இராணுவ நீதிமன்ற விசாரணை




சிவிலியன் உட்பட 35 பேரிடம் சாட்சியம் பதிவு

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு இராணுவத் தளபதியிடம் கடந்தவாரம் கையளிக்கப்ப ட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:- குறிப்பிட்ட சாட்சியங்களின் தொகுப்பில் 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 இராணுவத்தினரிதும் 7 பொலிஸ் உத்தியோகத்தரினதும் ஏனையவை பொது மக்களிடமிருந்தும் கிடைத்துள்ளன.

சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய மேற்படி அறிக்கை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவு அதிகாரிகளால் பரிசீலிக்க ப்பட்டு வருகிறது. இந்த பரிசீலனை முடிவு ற்றதும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின் படி முன்னாள் இராணுவத் தளபதி மீது ஐந்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும்.

அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும். இராணுவ சட்டத்தின் விதி முறைகளின்படி இராணுவ நீதிமன்றத்தில் வைத்தே அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

சரத் பொன்சேகா மீது இந்த குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டதும் உடனடியாக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகும். 3 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தும். அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இராணுவ தளபதி மேற்படி 3 அல்லது 5 நீதிபதிகளை நியமிப்பார்.

இந்த நீதிபதிகள் குழுமம் மேற்படி இராணுவ நீதிமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி மீது விசாரணை நடத்தும்.

குறிப்பிட்ட இந்த இராணுவ நீதிமன்றம் எந்த இராணுவ முகாமில் இடம் பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப் படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

மேலும் இங்கே தொடர்க...

துருக்கியில் பாரிய பூகம்பம் : 57 பேர் பலி; 50க்கு மேற்பட்டோர் படுகாயம்!

துருக்கியின் மேற்குப் பகுதியின் இலாசிக் மாகாணத்தில் கோவன்சிலர் மாவட்டத்தில் அட்குலர் மற்றும் யுகாரி கனாட்லி ஆகிய கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாரிய பூகம்பத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பத்தால் வீடுகள் குலுங்கின. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களுக்கு ஓடி வந்தனர். பீதி அடங்காமல், நீண்ட நேரம் வீதிகளில் அமர்ந்திருந்தனர்.

பூகம்பம் ரிச்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக துருக்கியின் காந்திலி பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாஸ்யுர்த்- கரகோகனை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூகம்பத்தினால் வீடுகள் இடிந்ததில் 57 பேர் பலியானதாகவும், 50க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பூகம்பம் கடுமையாக இருந்ததால் இறப்பு எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

துருக்கியில் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7.4 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 18 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பிரான்ஸ் கடற்படை அதிரடி நடவடிக்கை : 35 கடற்கொள்ளையர் கைது


பிரான்ஸ் கப்பற்படை, கடற்கொள்ளையர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தியதில், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களைக் கடத்தி வருகின்றனர். அவற்றைச் சிறை பிடித்துச் செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அக்கப்பலை விடுவிக்கின்றனர்.

இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஐரோப்பிய யூனியன் கடந்த 2008ஆம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது.

அவர்கள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். இவர்களுடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படை அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் கப்பற்படை, கொள்ளையர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள். அப்போது கப்பலைக் கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூடவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸியில் அகதிகளுடன் இரு படகுகள் பறிமுதல்

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு அடேல் தீவுக்கு அருகில் 28 அகதிகளுடன் சென்ற படகினை அந்நாட்டுக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், நேற்றைய தினம் 80 பேரை ஏற்றிய படகு ஒன்றும் அந்தப் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஜுலியா கில்லர்ட், அவர்கள் அனைவரும் மோதலின் பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறிய அகதிகள் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற கடுமையான யுத்தம், மற்றும் அங்கு காணப்படுகின்ற ஏற்பில்லாத சூழ்நிலைகளே அகதிகளின் வருகைக்கான முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் கட்டுமான வசதிகள் அதிகரிக்கும் பட்சத்தில், அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை அகதிகளின் வருகை குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தப் படகுகள் இரண்டும் தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தற்போது அகதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கிறிஸ்மஸ் தீவை விஸ்தரிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் _
மேலும் இங்கே தொடர்க...

கடற்கொள்ளையர்களுடன் பேச்சு நடத்த லண்டன் அதிகாரி ஜித்தா பயணம்


சரக்குக் கப்பல் ஒன்றை இலங்கை மாலுமிகளுடன் கடத்திய கடற்கொள்ளையர்கள் மற்றும் சவூதி அரேபிய நிறுவனத்துக்கு மிடையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முயலும் நோக்கத்துடன் லண்டனில் நிலைபெற்றுள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று ஜித்தா சென்றுள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த திங்கட்கிழமை ஏடன் வளைகுடாவில் வைத்து கடத்தப்பட்ட சவூதி அரேபிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலில் இருந்த 14 சிப்பந்திகளில் 13 பேர் இலங்கையராவர்.

கப்பலில் சிப்பந்திகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று கடல் கொள்ளையர்கள் கூறியுள்ள போதிலும் அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

எனினும் காப்புறுதி நிறுவன அதிகாரியின் வருகையை அடுத்து சாதகமான நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் கவுன்ஸிலர் நாயகமான சபாருல்லாகான் கூறியுள்ளார்.

கடற்கொள்ளையருடன் செய்மதி தொலைபேசி மூலம் கப்பலுக்கு சொந்தமான சவுதி அரேபியன் நிறுவனம் தொடர்புகொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சோமாலிய கடற் பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலை விடுவிக்கக் கடற்கொள்ளையர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கப்பமாக கோரி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வட.- கிழ. புது முகங்களுடன் சேவையாற்றக் காத்திருக்கின்றேன் :


வட.- கிழ. புது முகங்களுடன் சேவையாற்றக் காத்திருக்கின்றேன் : நிருபமாவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
"நாட்டில் சமாதானம் நிலை நாட்டப்பட்டதன் பின்னர் மக்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதற்கு நாடளாவிய ரீதியில் முதல் தடவையாக தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அந்த தேர்தலில் பங்கு பற்றுவதற்கென அவர்கள் மிகுந்த உற்சாகத்தைக் காண்பித்து வருகிறார்கள்.

குறிப்பாக வடக்கு, கிழக்கிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவிருக்கும் பல புதிய முகங்களுடனும் தலைவர்களுடனும் சேவையாற்ற நான் காத்திருக்கின்றேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேராதனையில் நிறுவப்பட்டுள்ள இலங்கை-இந்திய ஆங்கில மொழிப் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியமை குறித்த தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்ட நிருபமா ராவ், "ஜனாதிபதியின் வெற்றி இந்திய-இலங்கை உறவை மேலும் விருத்தி செய்ய உதவும். நான் இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராகக் கடமையாற்றிவிட்டுச் சென்ற பின்னர் இலங்கையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதியின் வெற்றி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பரஸ்பர உறவுகளை எதிர்காலத்தில் மேலும் விருத்திசெய்ய உதவும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது என்பதுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய வேண்டுமென பிரதம மந்திரி மன்மோகன் சிங் விரும்புகின்றார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 1,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் முன்வந்துள்ளமை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக நடைமுறையில் மக்கள் காட்டுகின்ற ஆர்வம் மற்றும் உற்சாகம், சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னரான மாற்றங்களை எடுத்துக்காட்டுகின்றது. நான் சென்றவிடமெல்லாம் மக்கள் மனங்களில் நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியன நிலவுவதை அவதானிக்க முடிந்தது.

இலங்கை சிறார்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நோக்கம் பாராட்டுக்குரியது. இந்த முயற்சியில் இந்தியா தனக்கு முடிந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தின் போது இந்தியாவிலிருந்து 3.000க்கும் அதிகமான யாத்திரிகர்கள் கலந்து கொண்டமை இரு நாட்டு மக்களினதும் பரஸ்பர புரிந்து கொள்ளும் தன்மைக்கும் ஒற்றுமைக்கும் மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடைந்துள்ளது. இன்னமும் சுமார் 70,000 பேர் வரையிலானோரே மீளக் குடியமர்த்தப்பட இருக்கும் நிலையில், சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் திருப்தியடைந்திருக்கும். இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் பணிகளில் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ காத்திருக்கின்றது" என்று கூறினார்.

ஜனாதிபதி கருத்து

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

"நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நாடளாவிய ரீதியில் முதல் தடவையாகப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது அதில் பங்குபற்ற மக்கள் மிகுந்த உற்சாகத்தை காண்பித்து வருகிறார்கள்.

குறிப்பாக நாடாளுமன்றத்திற்கு வடக்கு, கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்படவிருக்கும் பல புதிய முகங்களுடனும் தலைவர்களுடனும் சேவையாற்ற நான் காத்திருக்கின்றேன்.

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஆங்கிலத்தை ஒரு வாழ்க்கைத் திறன் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற தமது கொள்கையை முன்னெடுப்பதற்கு இந்தியா அளித்துவரும் உதவிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்" என்றார்.

வடக்கில் ரயில் பாதைகளை முற்றாக புனரமைப்பதிலும் இந்தியா அக்கறை காண்பித்து வருகிறது. இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், திருகோணமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் அனல் மின் நிலையம், சுற்றாடலையும் உயிரியல் வாழ்க்கை முறைமையையும் பாதுகாப்பது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய புரிந்துணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றியும் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார செயலாளரும் கலந்துரையாடினார்கள்.

சந்திப்புக்குப் பின்னர், ஜனாதிபதி ராஜபக்ஷ நிருபமா ராவுக்கு பகல் போசன விருந்து அளித்துக் கௌரவித்தார்.

இந்தச் சந்திப்பிலும் பகல் போசன விருந்திலும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் காந்தா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஷ் ஜயசிங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் இந்த ஆண்டு 26 வங்கிகள் திவால்






நியூயார்க்,மார்ச்7: அமெரிக்காவில் பொருளாதாரம் மீட்சி பெற ஆரம்பித்திருந்தாலும் வங்கிகள் திவாலாவது தொடர்கிறது. இந்த ஆண்டு இதுவரையில் 26 வங்கிகள் திவாலாகிவிட்டன.

ஜனவரி மாதம் 15 வங்கிகளும் பிப்ரவரி மாதம் 7 வங்கிகளும் இந்த மாதம் 5-ம் தேதி ஒரே நாளில் 4 வங்கிகளும் திவாலாகிவிட்டதாக அறிவித்துவிட்டன.

2008 செப்டம்பர் மாதம் லெமான் பிரதர்ஸ் என்ற நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவித்தபோது உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறும் வால் ஸ்ட்ரீட்டிலேயே தலைமையகத்தைக் கொண்டிருந்த லெமான் பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வங்கியாக உலகின் நிதி வட்டாரங்களில் கருதப்படுவது. அந்த நிறுவனமே திவால் என்று அறிவித்தபிறகு ஏராளமான நிதி நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் கொடுத்து வருகின்றன.

வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதில் அடக்கம்.

சென்டினியல் பேங்க், வாட்டர் ஃபீல்ட் பேங்க், பேங்க் ஆஃப் இல்லினாய்ஸ், சன் அமெரிக்கன் பேங்க் ஆகியவை மார்ச் மாதம் 5-ம் தேதி திவால் நோட்டீஸ் கொடுத்தன.

இந்த நாலு வங்கிகள் திவாலானதால் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 30.48 கோடி டாலர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கை 9.7% என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திலும் இதே எண்ணிக்கையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர்க்கப்பட்ட ஒளிபரப்பு



இலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர்க்கப்பட்ட ஒளிபரப்பு கோபுரம் சீரமைக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து விரைவில் அப்பகுதி மக்களுக்கு தொலைக்காட்சி வசதி மீண்டும் கிடைக்கும் என இலங்கை அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இறுதி கட்ட போரின் போது விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இந்த கோபுரம் சீரமைக்கப்பட்டால் வட பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிக்கு ராணுவமும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது' என அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார ஊர்தி தாக்குதல்- நாவலப்பிட்டியில் சம்பவம்.




ஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார ஊர்தி தாக்குதல்- நாவலப்பிட்டியில் சம்பவம்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிதேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசனின் தேர்தல் பிரசார ஊர்தி இன்று நாவலப்பிட்டி நகரில் வைத்து தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் தேர்தல் பிரசார ஊர்தியில் பயணித்த நால்வருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தச்சம்பவம் தொடர்பாக நாவலப்பட்டி பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரபாகணேசன் தெரிவித்தார்.

ஆளுங்கட்சி ஆதரவாளர்களே இந்தச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பு




தமிழ் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்தித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மீள்குடியேற்றத்தில் அரசாங்கம் காட்டும் அசிரத்தை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. _
மேலும் இங்கே தொடர்க...

நிரூபாமா ராவ்-புளொட் சித்தார்த்தன் சந்திப்பு!




இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலர் நிரூபாமா ராவ் அவர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் தூது குழுவினருக்கும் நிருபாராவ் இடையிலான சந்திப்பு இன்றையதினம் இந்திய தூதுரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ் சந்திப்பில் கலந்து கொண்ட புளொட் தூதுக்குழுவினர் வன்னியில் மிகவும் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யக்கூட முடியாத நிலையில், பல்வேறு உதவிகளை கடந்த காலங்களில் இந்தியா வழங்கியுள்ளது அதற்கு நன்றி தெரிவித்துள்ள புளொட் தூதுக்குழு, தமது தேவைகளை தாமே ப+ர்த்தி செய்யக்கூடிய விதத்தில் அவ் மக்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், நீர் இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் என்று அவை தேவையாகவுள்ளதாகவும் அவற்றை இந்தியா உதவி செய்ய முன்வர வேண்டும் என்று புளொட் தூதுக்குழு கோரியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிரூபாமா ராவ் அவை கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து தமிழ்கட்சிகளிடையே ஒர் ஒற்றுமையில்லை என்பதை தெரிவித்து கொண்ட நிரூபாமா ராவ் தமிழ் கூட்டமைப்பு திம்பு கோட்பாடு என்றும், இந்திய மாதிரியான அரசியல் தீர்வு என்று ஆனந்தசங்கரி தலைமையிலான த.வி.கூ.யும், 13வது திருத்தம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், சமஷ்டி என்று நீங்களும் தெரிவித்து வருகின்றீர்கள் இது விடயத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு நிலைக்கு வரவேண்டும் என்று நிரூபாமா ராவ் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த புளொட் தூதுக்குழு நாங்கள் தமிழ்மக்களின் தீர்வு விடயத்தில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட தயாராகவே உள்ளோம். அந்த நிலை உருவாகுவதற்கு இது உகந்த தரணமல்ல, தற்போது தேர்தல் காலம் தேர்தலில் கட்சிகள் தீவிரமாக செயற்பட்டு கொண்டுள்ளன. தேர்தலினை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு நாம் என்றுமே ஒருங்கிணைந்து செயற்படுவோம் என்பதை நிரூபாமா ராவ் அவர்களிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதையும் புளொட் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...