25 ஜூன், 2010

இடம்பெயர்ந்த மக்கள் நலன்கருதி ஆட்சியுரிமைச் சட்டத்தில் திருத்தம்








இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு பிரதேச மக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை வேறுநபர்கள் அபகரிப்பதைத் தடுப்பதற்காக ஆட்சியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். 30வருடகால யுத்தம் முடிவடைந்து வடக்குகிழக்கில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களின் காணிகளை வேறுநபர்கள் சட்டவிரோதமாக அபகரிக்க வாய்ப்புள்ளதாக இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 வருடங்கள் எவரும் காணியில் தொடர்ச்சியாக குடியிருந்தால் குறித்த நபருக்கு அக்காணியை பெறுவதில் அதிக அவகாசம் காணப்படுகிறது. இச்சட்டத்தின்படி இடம்பெயர்ந்த மக்களுக்கு அநீதி ஏற்பட வாய்ப்புள்ளதால் குறித்த ஆட்சியுரிமைச் சட்டத்தை திருத்த நீதி ஆணைக்குழு சில யோசனைகளை முன்வைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா நிபுணர்கள் குழுவுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டுமென அமெரிக்கா வேண்டுகோள்

-
ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியுள்ள குழுவை ஏற்குமாறு இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க மூன்று பேரடங்கிய குழுவை ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் ஏற்படுத்தியிருந்தார்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இக்குழுவுக்கு இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மர்சுகி டருஸ்மான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் யாஸ்மின் சூகா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் இலங்கைக்கு நேரில் சென்று அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து ஐ.நா. பொதுச் செயலரிடம் அறிக்கை அளிப்பர் என கூறப்பட்டது.

ஆனால் இக்குழுவினரை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ், வியாழக்கிழமை அறிவித்தார். இக்குழுவினருக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதனால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்கும் வகையில் ஐ.நா. குழுவை அனுமதிக்குமாறும், இதனால் ஏற்படும் சாதக அம்சங்களை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராயவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் ஏற்கெனவே அதிபர் மகிந்தா ராஜபட்ச தனிக் குழுவை ஏற்படுத்தியுள்ளார்.

இக்குழுவினர் இலங்கை சட்ட விதிகளுக்குள்பட்டு விசாரணை நடத்தி அதற்குரிய தீர்வுகளையும் கண்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியுள்ள குழு தேவையற்றது, இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

எனவே இதை அனுமதிக்க முடியாது என்று பெரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சுவிஸில் தமிழ் பொது மக்களினால் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு 27.06.2010..14.00h


மேலும் இங்கே தொடர்க...

சீது விஞாயகர் குளம் பகுதியில் உள்ள இந்து ஆலயம் இராணுவத்தினரால் மக்களிடம் இன்று கையளிப்பு

இராணுவத்தினரால் புணர்நிர்மானம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட சீது விஞாயகர் குளம் பகுதியில் உள்ள இந்து ஆலயம் பொஷன் தினமான இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இடம் பெற்ற மோதல் சம்பவங்களினால் மேற்படி ஆலயம் சிதைந்து காணப்பட்டது. அப் பகுதியில் உள்ள இராணுவத்தின் 19ஆவது விஜயபாகு படையினர் கோவிலை புணர் நிர்மானம் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கோவில் இன்று மக்களிடம் கையளிக்கட்டது. இராணுவத்தின் 212 ஆவது படைப்பிரிவு அதிகாரி கேணல் எம்.ஏ.எஸ்.கே முகந்திரம், இராணுவத்தின் 19 ஆவது படைப்பிரிவின் அதிகாரி மேஜர் கயனந்த் உட்பட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து விஷேட பூஜை இடம் பெற்றது. சீது விஞாயகர் குளம் கிராமம், கூராய் ஆகிய கிராமங்களின் 50 குடும்பங்களுக்கு இரணுவத்தினரால் கோயில் வளாகத்தில் வைத்து உளர் உணவுப் பொதிகளும், விவசாயக் கருவிகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது 50 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் கலந்துக் கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸியின் புதிய பிரதமர் ஈழ அகதிகள் குறித்த கடும்போக்கை மாற்றலாம்

ஈழத் தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிரதமராக நேற்று பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் தற்போதைய கடும்போக்கைத் தளர்த்துவார் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழ் அகதிகள் ஏராளமானோர் வருடாவருடம் கடல்வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அகதி அந்தஸ்து பெற அருகதையுடையவர்களாவர்.

இதற்கு முன் பிரதமராக இருந்த கெவின் ரூட் தலைமையிலான அரசாங்கம் ஈழ அகதிகள் விவகாரத்தில் கடும்போக்கைக் கடைப்பிடித்து வந்தது.

இதனால் கெவின் ரூட்டுக்கு அவுஸ்திரேலிய மக்களிடையேயான செல்வாக்குக் குறைய ஆரம்பித்திருந்தது. அத்துடன் எதிர்க்கட்சிகள் ரூட்டின் இக்கடும்போக்கைக் கடுமையாக விமர்சித்து வந்தன.

சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களும் அவரைக் கடுமையாக சாடியிருந்தன. இதன் காரணமாகவே தொழிற்கட்சி புதிய பிரதமரை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

கெவின் ரூட்டின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஈழ அகதிகளுக்கு விசா வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் இக்கடும்போக்கை தளர்த்துவார் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் செய்திகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் புதிய பிரதமரிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் பிரதமராகப் பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில், அகதிகள் விவகாரத்தில் அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் 25 வருடங்களுக்குப் பின் வாக்காளர் இடாப்பு பதிவு : அடுத்த மாதம் ஆரம்பம்


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இருபத்தைந்து வருட இடைவெளியின் பின்னர் வீடுவீடாகத் தேர்தல் இடாப்பு பதியும் பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான பயிற்சி வகுப்புகளை யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.குகநாதன் பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் உள்ள கிராம அலுவலர்களுக்கு வழங்கி வருகின்றார்.

இருபத்தைந்து வருட இடைவெளியின் பின்னர் நடைபெறும் தேர்தல் இடாப்பு திருத்தும் பணிகள் யாழ். குடாநாட்டில் உள்ள மக்களிடையே பல்வேறு உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. எதிர்காலத்தில் தமக்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுமோ என்ற பரிதவிப்பில் அவர்கள் வேதனையுடன் காணப்படுகின்றனர்.

அதேவேளை, இம்முறை கடந்த காலங்களைப் போலல்லாது வீடுவீடாகக் கிராம அலுவலர்கள் சென்று உரிய படிவங்களைக் கொடுத்து நிரப்பவுள்ளதுடன் குடும்பமாக வெளிநாடுகளில் வதிபவர்களின் பதிவுகளை ரத்துச் செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்பவர்கள், தாம் வதியும் இடங்களிலேயெ தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படாமல், புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டனர். மரணமடைந்தவாகளின் பெயர்களும் நீககப்பட்டே வந்துள்ளன
மேலும் இங்கே தொடர்க...

டொட் இலங்கை விரைவில் அறிமுகம்






'எல்கே"-க்குப் பதிலாக 'இலங்கை"-யை ஆள்ளகளப் பெயராக பாவிக்க 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

'அய்கன்" என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற அமெரிக்காவின் கலிபோர்ணியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனம் இணையத்தில் இணையதள முகவரியில் 'லங்கா" என்ற சொல்லை சிங்களத்திலும், 'இலங்கை" என்ற சொல்லை தமிழிலும் குறிப்பிட அனுமதி வழங்கியுள்ளது.

இந் நடைமுறையை ஏற்படுத்த 'அய்கன்" நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்து. இந்நிலையில் இந் நிறுவனம் 2010 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை வழங்கியதை அடுத்து இத்திட்டம் இம் மாதம் 28 ஆம் திகதி இலங்கையில் அறிமுகமாக உள்ளது.

உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சிடலாம்.

எனவே இந் நடைமுறையால் இணையதளத்தை பாவிப்பவர்கள் தனது சொந்த மொழியில் இலகுவாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...

உணவு விஷமானதால் 19 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா செட்டிகுளம், மாங்குளம் அல்ஹாமியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நேற்று மதிய உணவை உட்கொண்ட மாணவர்கள் 19 பேர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் பாடசாலையில் போசாக்குணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு சமைத்து வழங்கப்படுவது வழமை. அந்த வகையில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட மாணவர்கள் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் உடனடியாகச் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையின்போது மாணவர்கள் உட்கொண்ட உணவு விஷமாகியதே மயக்கத்துக்கான காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த உணவை பரிசோதித்தபோது அதனுள் பல்லியொன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. உணவு சமைக்கும்போது பல்லி அதற்குள் விழுந்தமையினாலேயே உணவு விஷமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்குக் கல்முனையில் வீடுகள் கையளிப்பு

சுனாமி தாக்கத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வந்த 100 பேருக்கு கல்முனை இறையடிக்கண்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு, நீண்ட நாட்களாய் திறக்கப்படாதிருந்த் 100 வீடுகள் கையளிக்கப்பட்டன.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 456 வீடுகளையும் திறக்குமாறு கோரி கடந்த வாரம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிக்கட்ட போர் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமைக் குழுவை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்' இலங்கை வெளியுறவு மந்திரி எச்சரிக்கை







இறுதிக்கட்ட யுத்தம் நடந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்து இருக்கும் மனித உரிமைக் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என அந்த நாட்டு வெளியுறவு மந்திரி காமினி லட்சுமண் பெய்ரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நியமித்த குழு

இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமையை இலங்கை ராணுவம் அப்பட்டமாக மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது. மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகள் முழு ஆதரவு அளிக்கின்றன. இந்த சூழ்நிலையில், இலங்கை இறுதிகட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி மூன் நியமித்து இருக்கிறார்.

இலங்கை எதிர்ப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு இந்தோனேசியா முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி துருஸ்மான் தலைவராக உள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வக்கீல் ஸ்டீவன் ரத்னர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவை நியமித்த உடனேயே, இலங்கையில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `சுதந்திரமான நீதித்துறை நடைமுறையை கொண்ட இறையாண்மை மிக்க நாடாக இலங்கை உள்ளது. நீதித்துறை நிர்வாகத்தை செம்மையாக செயல்படுத்தி வருகிறது. இலங்கையில் பூசலை தவிர்த்து மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு கமிஷனை அதிபர் ராஜபக்சே நியமித்து இருக்கிறார். 30 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் நாசமான இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், ஐ.நா.வின் இந்த செயலானது தேவையற்ற தலையீடாக இருக்கிறது' என தெரிவித்தது.

மந்திரி எச்சரிக்கை

இந்த சூழ்நிலையில், ஐ.நா. நியமித்துள்ள மனித உரிமைக் குழுவினர் இலங்கைக்கு வந்தால் அவர்களை அனுமதிக்க முடியாது என இலங்கை வெளியுறவு மந்திரி காமினி லட்சுமண் பெய்ரிஸ் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து, நேற்று பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

இலங்கை தொடர்பாக ஐ.நா. நியமித்துள்ள குழுவை எங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். அந்த குழுவில் உள்ளவர்களுக்கு `விசா' வழங்க மாட்டோம். இலங்கை விசாரணை கமிஷன் சட்டப்படி, ஏற்கனவே ஒரு கமிஷனை அதிபர் ராஜபக்சே நியமித்து இருக்கிறார். எனவே, இலங்கை போரின்போது, சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்டனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக ஒரு குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி மூன் நியமித்து இருப்பது தேவையற்றது.

ஐ.நா. மனித உரிமைக் குழுவால் எதையும் சாதிக்க முடியாது. தேவையற்ற தலையீடாகவே, இந்த குழுவை நாங்கள் கருதுகிறோம். சொந்தமாகவே உண்மைகளை கண்டறிந்து கொள்ள இலங்கை அரசை சுதந்திரமாக விட வேண்டும்.

இவ்வாறு காமினி லட்சுமண் பெய்ரிஸ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேறிய மட்டு. வாசிகளுக்கு வாழ்வாதார உதவிகள்





வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த பின்னர் மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மட்டு. வாசிகளுக்கு 30 லட்சம் ருபா பெறுமதியான வாழ்வாதார நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு எகெட் நிறுவனம் இந்நிவாரண உதவிகளை வழங்கியது. .கத்கோலிக்க மண்டபத்தில் எகெட் பணிப்பாளர் அருட்தந்தை எஸ்.சில்வெஸ்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்ற வைபவத்தின் போது இவை கையளிக்கப்பட்டன. நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் திருமதி கே.பத்மராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர்கள் குழு : ரஷ்யா கண்டனம்



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை தொடர்பில் நியமித்துள்ள நிபுணர்கள் குழு குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் யோசனை ஒன்றைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் சமர்ப்பிக்கவில்லை என ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றில் இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யுத்த குற்றச் சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தாமல், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பான் கீ மூனுக்கு இந்த குழு ஆலோசனையை மாத்திரமே வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த குழு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் அல்லது இலங்கை அதிகாரிகளின் அனுமதி இன்றி நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரி என்ற வகையில் பான் கீ மூன் தமது அதிகாரத்தையும் பொறுப்பையும் மீறியிருப்பதாக ரஷ்ய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த குழுவுக்கு இலங்கையிலும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்காக மாண்பு மிக்கோர் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான குழு ஒன்று பான் கீ மூனுக்கு தேவையற்றது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை உள்ளிட்ட விடயங்களை அது மேற்கொள்ளும் சாத்தியமில்லை என ரஷ்யா நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜூலை 14ல் கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டம் நடத்த அரசு தீர்மானம்






அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை எதிர்வரும் ஜூலை 14 ம் திகதி கிளிநொச்சி நகரில் நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்நாள் சகல அமைச்சுக்களின் பங்களிப்புடன் நடமாடும் சேவையொன்றை நடத்தி அப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

அமைச்சரவை மாநாடுகள் தொடர்ந்து கொழும்பிலேயே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இனிமேல் ஒவ்வொரு பிரதேசங்களில் அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்தார். இதன்படி, முதலாவது அமைச்சரவை கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்படும். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டையும் அங்கேயே நடத்த முடியும்.
மேலும் இங்கே தொடர்க...

23 வகையான இரசாயன பொருட்களுக்கு கட்டுப்பாடு அதிகார சபை அமைக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் இரசாயன திரவியங்களுள் 23 வகையான இரசாயனப் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கென அதிகார சபை ஒன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 23 வகையான இரசாயன பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே. கமகே தெரிவித்தார்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள், போதை உண்டாவதற்காக சில மருந்து வகை களை, இரசாயனப் பொருட்களை எடுப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே தெரிவு செய்யப்பட்ட மேற்படி 23 இரசாயனத் திரவியங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

போதைவஸ்து பாவனை மற்றும் போதை வஸ்து கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நாளை 26ம் திகதியாகும். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவி லேஷா டி சில்வா, முன்னாள் பொலிஸ் மா அதிபரும், போதைவஸ்து பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளருமான விக்டர் பெரேரா, கொழும்பு திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பெட்ரீசியா யூன் மோய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிடுகையில்,

இரசாயனங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் இரசாயன திரவியங்களை கட்டுப்படுத்துவதற்கென ‘அடிப்படை இரசாயன கட்டுப்பாட்டு அதிகார சபை’ ஒன்று உருவாக்கப்படவுள்ளது என்றார்.

சுமார் மூன்று மாத காலத்திற்குள் இந்த அதிகார சபை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதடதித” என்ற வேலைத்திட்டத்திற்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சில மருந்து வகைகள் தற்போது கட்டாயக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. போதைப் பொருளுக்கு அடிமையாவதையும், போதை பொருளுக்கு அடிமையாவர்களை மீட்டெடுப்பதுமே இந்த திட்டத்தின் பிரதானமான நோக்கமாகும்.

விண்ணப்பங்கள் கோரப்பட்டு அனுமதிப் பத்திரங்கள் அடிப்படையிலேயே இரசாயனத் திரவியங்கள் இறக்குமதி செய்யப்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மருந்துச் சிட்டை இல்லாது பாமசிகளில் மருந்துகள் வழங்க முடியாது. அவ்வாறு மருந்துகள் வழங்கிய பல பாமசிகள் சுற்றி வளைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலங்களிலும் எந்த ஒரு பாமசியி லாவது மருந்து சிட்டை இல்லாமல் மருந் துகள் ழங்குவது தொடர்பாக தகவல் தெரிய வ்ந்தால் 0112 868794-6 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ, பணிப்பாளர் நாயகம், தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, இலக்கம் 383, கோட்டே வீதி என்ற முகவரிக்கோ அறியத்தருமாறும் வேண்டு கோள் விடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. ஆலோசனைக்குழு இலங்கை வர அனுமதியில்லை


இலங்கையின் இறைமையை சர்வதேசத்திற்கு தாரைவார்க்க முடியாது


ஐ.நா. செயலாளர் நாயகம் பாங் கீ மூனின் ஆலோசனைக் குழு இலங்கை வருவதற்கான அனுமதியை வழங்கப் போவதில் லையென அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாடொ ன்றில் இது பற்றித் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அதற்கான தேவை இருப்பதாக அரசாங்கம் கருத வில்லை எனவும் குறிப்பிட்டார். ஐ.நா. ஆலோசனைக் குழு விவகாரம், ஜீ.எஸ். பி. சலுகைகளுக்கான நிபந்தனை ஆகியவை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்;

இலங்கை ஒரு இறைமையுள்ள சுயாதிபத்திய நாடு. தேர்தல் மூலம் அமையப் பெற்றுள்ள பலமான அரசாங்கம் காத்திரமான நீதித்துறை எமக்குள்ளது. இதனடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரங்களை சர்வதேச சக்திகளுக்குத் தாரைவார்க்க முடியாது.

நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிடுவது முறையல்ல. எமது நாட்டின் பிரச்சினைகளுக்கு நாட்டுக்குப் பொருத்தமான வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு. அதற்கு வேறெந்த தலையீடுகளும் அவசியமில்லை.

இலங்கையின் உள்விவகாரங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்மட்ட நல்லிணக்கக் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தக்குழு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கீ மூன் இதற்கு முன்னரும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். நவநீதம்பிள்ளை, சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். தற்போது இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது. இக்குழு நியமனம் காலத்துக்குப் பொருந்தாதவை.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. பிரதிநிதி வின் பெஸ் கோவிடம் இது பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் இத்தகைய தீர்மானத்தை ஏற்கமாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தினோம். இத்தகைய நிபுணத்துவக் குழுவொன்றிற்கான அவசியம் இல்லை. இது ஐ.நா.வுடன் இலங்கை கொண்டுள்ள உறவிற்குப் பங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது. இதனால் அவசியமற்ற இந்த நிபுணத்துவ குழுவை நாம் முழுமையாக நிராகரிக் கின்றோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னேறும் சமூகமாக மாற்றம் காண்போம்


எம்மைப் பீடித்துள்ள யுத்தத்துக்கு பின்னரான மன உளைச்சலை ஒழித்து விட்டு கலாசார மற்றும் மதரீதியில் முன்னேறும் சமூகமாக எம்மை மாற்றிக்கொள்ள அனைத்து சமூகத்தின ரும் இந்த பொஸன் போயா தினத்தை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொள்வோம், என்று பிரதமர் தி.மு.ஜயரட்ன விடுத்துள்ள பொஸன் செய்தியில் கூறியுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,

அரஹத் மஹிந்த தேரரின் வருகையை அடுத்து நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மத, கலாசார மற்றும் இன ரீதியிலான மறுமலர்ச்சியை போன்று இன்று நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையிலான மஹிந்த யுகமொன்றைக்காண முடிகிறது.

ஜனாதிபதியின் ஆளுமையின் கீழ் தீரமிக்க படையினரின் கடப்பாட்டுடன் விடுவிக்கப்பட்ட இந்த சுதந்திர நாட்டினை மேம்படுத்தும் நோக்கில் நாம் 2318 ஆண்டுகளுக்கு முன்அரஹத் மஹிந்தவினால் இல்கை மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத் தப்பட்ட பெளத்த தர்மத்தை சரிவர புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் அவரது பொஸன் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிபந்தனைகளுக்கு அரசு அடிபணியாது ஆடைத் தொழிற்துறையினருக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு




ஜீ. எஸ்.பி. சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு ஜீ. எஸ். பி. சலுகை வழங்க ஐரோப்பிய யூனியன் 15 நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

15 நிபந்தனைகளை உள்ளடக்கிய கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுச் செயலர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிபந்தனைகள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதவையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 17வது திருத்தத்தை நிறைவேற்றுதல், அவசர கால சட்டத்தை முழுமையாக நீக்குதல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்தல் உட்பட 15 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவைகள் நாட்டின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவையென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடந்த அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை அமைச்சரவை நிராகரித்துள்ளது. இதேவேளை, எந்தவொரு சவாலையும் ஏற்கத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம், ஆடைத் தொழிலாளருக்கு ஏற்படும் பாதிப்பை சமாளிக்கும் வகையில் அரசாங்கம் மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதென அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

“எதிர்க் கட்சிகளும் அரச சார்பற்ற இயக்கங்களும் புலம்பெயர் அமைப்புகளும் முன்வைத்து வந்த கோரிக்கைகளையே ஜீ.எஸ். பி. பிளஸ் சலுகை நீடிப்பதற்கான நிபந்தனைகளாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது. ஜீ. எஸ்.பி. பிளஸ் தொடர்பான சவாலுக்கு எமது அரசாங்கம் முகம்கொடுக்க தயாராக உள்ளது. இதனால் ஆடைத் தொழிற்றுறையினருக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் அரசாங்கம் மாற்று ஒழுங்குகளை முன்னெடுக்க உள்ளது” எனக் கூறினார். கடந்த காலங்களில் ஜீ. எஸ். பி. சலுகை வழங்கும்போது தொழிலாளர்களின் நலன்களுடன் தொடர்புடைய நிபந்தனைகளே முன்வைக்கப்படும். ஆனால் இம்முறை சம்பந்தமில்லாத நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் யாப்பை திருத்துமாறும் அவசரகால சட்டத்தை நீக்குமாறும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சரத்துகளை நீக்குமாறு, 17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் மூலம் முழு இலங்கை மக்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகள் குறித்து வெட்கப்படுகிறேன். இந்த நிபந்தனைகள் நாட்டின் இறைமைக்கு குந்தகமானவை.

ஒரு போதுமில்லாதவாறு இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 6 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கக் கூடிய சக்தி எமக்கு இருக்கிறது. 15-20 வருடங்கள் ஆடைத் தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளவர்க ளுக்கு திறந்த சந்தையில் போட்டியிடக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நிபந்தனையையும் நாம் ஏற்கமாட்டோம். இவற்றில் பாதி நிபந்தனைகள் புலம்பெயர் அமைப்புகள் கோருபவை. ஏனையவை ரணில் விக்கிரமசிங்கவும், கருஜயசூரியவும், மனோ கணேசனும், ரவூம் ஹக்கீமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கோருபவை என்றார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கூறியதாவது;

ஜீ. எஸ். பி. சலுகை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் 15 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளதென தெரிவித்த அமைச்சர், வர்த்தக நடவடிக்கைக்கும் 17வது திருத்தத்திற்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் குறிப்பிட்டார்.

ஜீ. எஸ்.பி. சலுகைகள் மீதான நிபந்தனைகள் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணத்துவ குழு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஜீ. எஸ்.பி. சலுகைகளைப் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக அரசாங்கம் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அம்சமாக நிதியமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவொன்றை அரசாங்கம் அமைத்துள்ளதுடன் கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அக்குழு பிரஸல்சுக்குச் சென்று தீர்க்கமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ஐரோப்பிய ஒன்றியம் ஜீ. எஸ்.பி. சலுகையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதாகவும் அதேவேளை ஒன்றியம் விதித்துள்ள 15 நிபந்தனைகளை 6 மாதகாலங்களுக்குள் நிறைவேற்ற வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுச் செயலாளர் கந்தரின் ஈஸ்டன் கடந்த 17ம் திகதி அனுப்பி இருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த தேரரின் தம்மபோதனை புதிய பாதைக்கு இட்டுச் செல்கிறது’ பொசன் செய்தியில் ஜனாதிபதி


அரஹத் மஹிந்த தேரரினால் போதிக்கப்பட்ட தம்ம போதனை எமது சமூகத்தையும், கலாசாரத்தையும் புதியதொரு பாதையை நோக்கி இட்டுச் செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொசன் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொசன் பெளர்ணமி தினம் புத்தபெருமானின் தம்ம போத னையை அரஹத் மஹிந்த தேரர் கொண்டு வந்ததை எமக்கு ஞாபகமூட்டுகின்றது என்றவகையில், இலங்கை எங்கும் வாழும் பெளத்த சமூகத் திற்கு மிகவும் புனிதமான பண்டிகையாகும். இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பண்டிகையின் இரண்டாயிரத்து முன்னூற்றிப் பதினெட்டாவது பண்டிகையை முழு தேசமும் ஐக்கியத்தோடு கொண்டாடக் கிடைத்தமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

அரஹத் மஹிந்த தேரரினால் போதிக்கப்ப ட்ட தம்ம போதனை இன, மத வேறுபா டுகளை மறந்து ஒரே நாட்டின் குடிமக்களாக இன நல்லுறவுடன் வாழ்வதற்கான பாதையை எமக்குக் காட்டியது. அன்பையும் கருணையையும் விரும்புகின்ற உணர்வினால் உந்தப்பட்டு ஒழுக்க விழுமியங்களின் அடி ப்படையில் வன்முறைகள் இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு தேசமாக நாம் உறுதிகொண்டோம். அர ஹத் மஹிந்த தேரரினால் முன்வைக்கப்பட்ட சமாதானமும் அமைதியும் நிறைந்த பாதையைப் பின்பற்றியதன் மூலம் நாம் உலக நாடுகளுக்கு மத்தியில் ஒரு பெருமைமிகு வரலாற்றுக்கு சொந்தக்காரர்களானோம்.

அரஹத் மஹிந்த தேரர் அவர்களின் போதனைகளின் அடிப்படையில் ஒரு சிறந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கு நாடு இன்று ஒன்றுபட்டுள்ளது. ஒன்றுபட்டு உழைப்பதன் மூலம் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும். அன்பு மற்றும் கருணையின் அடிப்படையில் நாம் நல்லிணக்கத்தினைக் கொண்டுவர வேண்டும். பிரிவினைகள் எம்மை தோல்வியின்பால் இட்டுச் செல்லும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எமது அரச கொள்கை எப்போதும் தம்ம போதனைகளின் அடிப்படையில் வழிகாட்டப்பட்டுள்ளது.

‘தம்ம போதனைகளுக்கேற்ப வாழுகின்ற ஒருவன் அதன் மூலமே பாதுகாக்கப்படு வான்’ என்ற அரஹத் மஹிந்த தேரரின் போதனைகளை எமது வாழ்வில் ஏற்று நடப்பதன் மூலம் இந்த பொசன் காலப் பகுதியை அர்த்தமிக்கதாய் மாற்றி புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப் புவதற்கு எம்மை அர்ப்பணிப்போம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தமிழ்கட்சிகள் சந்திப்பு!





தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான அணுகுமுறை குறித்து பொது உடன்பாடு காணவும் மற்றும் அன்றாட அவலங்களுக்கு உடனடித் தீர்வு காண்பதில் ஒருமித்து செயற்படும் நோக்கிலும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் தலைவர் திரு சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம் திரு.சிறிகாந்தா சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன் சேவியர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டனர். மிகவும் அற்புதமான ஏற்பாடு டக்ளஸ் தேவானந்தாவிற்கு எமது நன்றிகள் அத்துடன் எமது பாராட்டுக்களும்

மற்றும் அன்பான கட்சி தலைவர்களே நீங்கள் தனித்து நின்று போட்டியிட்டு
எதை சாதித்தீர்கள் வாக்குகளை சிதறடித்தது தான் மிச்சம் ஆகவே நீங்கள் இதில் கூடியுள்ள அனைவரும்25 .30 .வருடங்களாக மக்களுக்காக கஸ்ரப்பட்டிர்கள் இனி யாவது உங்களுக்குள் பேசி ஒரு முடிவு எடுங்கள் நீங்கள் தனித்தனியாக போட்டியிட்டாலும் ஒருவர் தான் முதல்வர் ஆக முடியும் ஆகவே நீங்கள் அனைவரும் பேசிஒரு முடிவுக்கு வந்தால் ஒரு நல்ல கூட்டணியை உருவாக்கமுடியும் மக்களுக்கும் நல்லதை செய்யவும் முடியும்
உங்களுக்குள் சிறு சிறு வேறுபாடுகள் இருந்தால் அவைகளை மறவுங்கள் மக்கள் நலனை சிந்தியுங்கள்
மேலும் இங்கே தொடர்க...