10 ஆகஸ்ட், 2010

பான் கீ மூன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்:ஐநா சங்கம் ஆலோசனை

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற ஐநா அலுவலக அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் ஆலோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஐநா அதிகாரிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் பான் கீ மூன் காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதையடுத்தே இந்த ஆலோசனை எடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கான் படையினரால் லுயிஸ் மெக்வல் என்ற ஐநாஅதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பில் பான் கீ மூன் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேற்படிச் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பான் கீ மூனைக் குற்றவாளியாகக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யோசனையொன்றை நிறைவேற்றியமை இதுவே முதன்முறை என்றும் குறிப்பிடப்படுகிறது.

தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக பான் கீ மூன், தனது இரண்டு அதிகாரிகளைப் பயன்படுத்தி, அடுத்த மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐநா பொதுக் கூட்டத்துக்கு முன்பதாக , விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆப்கனில் கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்டு தலிபான்கள் தண்டனை

ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி விதவையை தலிபான்கள் கொடூரமாக சுட்டு கொன்ற தண்டனை நிறைவேற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பட்ஹிஸ் மாகாணத்தைச் சேர்ந்த் பிவீ சானுபா (35) என்றபெண் இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டார். விதவையாக இருந்தபோது தவறான வழியில் சென்றதால் கர்ப்பம் அடைந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு தலிபான் கோர்ட் மரண தண்டனை விதித்தது. அதன்படி பிவீ சானுபாவை பொதுமக்கள் முன்பு, பின்புறமாக கைகளை கட்டி தலையில் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பன்னாட்டு படைகள் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தலிபான் கோர்ட் ஆயிஷா பிவீ என்ற 18 வயது பெண், கணவனின் வீட்டைவிட்டு வெளியேறிதற்காக மூக்கினையும், காதுகளையும் வெட்டியெறிந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

காணாமல்போன விடுதலைப்புலிகளின் குடும்பத்தினர் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள்



இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் குடும்பத்தினர் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோர் காணாமல் போய்விட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாயின.

எனினும் அவர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இதுபோன்று முரண்பாடாக செய்திகள் வெளியாவதால், ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடும்பத்தினர் தற்போது ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இந்த மனுக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

பொப்பிசை பாடகி மாதங்கியின் குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு

பிரபல பொப்பிசை பாடகி மாதங்கி அருள் பிரகாசம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றக் கொள்ள முடியாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

'யூ டியூப்' இணையத்தில் தமது பாடல்களை, இலங்கை இணைய பாவனையாளர்கள் பார்வையிட முடியாதவாறு, தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமது பாடல் காட்சிகளை அகற்றுமாறு இலங்கை ரசிகர்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து, இவரது குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ' யூ டியூப்' இணையத்திலிருந்து பாடல் காட்சிகள் எதுவும் அகற்றப்படவில்லை எனவும், அவ்வாறு பாடல் கட்சிகளை அகற்றக் கூடிய தொழில்நுட்பம் இலங்கையில் கிடையாது எனவும் அனுஷ பெல்பிட்ட மறுப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா பிரதிநிதித்துவ பதவியிலிருந்து பாலித்த ஓய்வு?



ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹண, எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் இடம்பெறும் ஐநா பொதுக் கூட்டத்தையடுத்து, ஓய்வுபெறலாம் என நியூயோர்க் செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, பாலித்த கோஹணவுக்கு பதவி நீடிப்பு வழங்காமல் அவரை எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் ஓய்வுபெற அனுமதிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு விடயத்தில், போதிய அழுத்தங்களை மேற்கொண்டு அதனை இடைநிறுத்த தவறினார் என்ற குற்றச்சாட்டும் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே கோஹணவுக்கு ஓய்வினை அளிக்க அரசு தீர்மனித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் நாடு திரும்பவுள்ள கோஹணவுக்கு வேறு அரச பதவி வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் பயணிக்கும் 'சன் சீ கப்பல்' : கனடா தீவிர கவனம்



இலங்கையர்கள் 231 பேருடன் கனடாவை நோக்கி 'எம்.வி.சன் சீ' எனும் கப்பல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இது குறித்துத் தாம் தீவிர கவனம் செலுத்துவதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று டொரண்டோவில் பொருளாதாரக் கழக வைபவம் ஒன்று இடம்பெற்றது. வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இக்கப்பலை பல வாரங்களாகக் கனேடிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இக்கப்பல் ஆட்களைக் கடத்தப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான நடவடிக்கை விபரங்கள் குறித்துத் தாம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கப்பலில் யார் இருக்கிறார்கள், ஏன் அவர்கள் கனடாவுக்கு வருகிறார்கள் என்பது குறித்து மட்டுமே தாம் கவனம் செலுத்துவதாகவும் விக் டோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்த்தரப்பிலிருந்து 15 எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் எதிர்த்தரப்பிலிருந்து மேலும் 15 எம்.பி. க்கள் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான விருப்பத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது என்று ஜனாதிபதி கருதுவதால் என்ன நடக்கும் என்று தெளிவாக கூற முடியாது என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

மேலும் சில எம்.பி. க்கள் ஆளும் தரப்புக்கு செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் கூறுகையில் :

எதிர்த்தரப்பிலிருந்து மேலும் 15 எம்.பி. க்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளனர். ஆனால் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்று தற்போது ஒன்றும் கூற முடியாது நிலைமை காணப்படுகின்றது. காரணம் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். எனவே இது தொடர்பில் தெளிவான தீர்மானம் இல்லை.

பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் உள்ள முன்வரிசை பின்வரிசை மற்றும் தமிழ் முஸ்லிம் எம்.பி. க்களும் இந்த 15 பேரில் அடங்குகின்றனர். ஆனால் அவர்களின் பெயர்களை என்னால் கூற முடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்க காணிகளை கையகப்படுத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை -ஜனாதிபதி

தேசத்தின் மகுடம் கண்காட்சி எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் அதேவேளை அரசாங்க காணிகளை பலவந்தமாகக் கையகப்படுத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வீடு இல்லாத மற்றும் குறைந்த வசதிகள் கொண்ட வீடுகளை கொண்ட மக்களுக்காக ஜன செவன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆறு வருடங்களுக்குள் 10 இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

நிர்மாணம், பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகளின் அமைச்சின் செயற்றிட்ட அறிக்கை தொடர்பிலான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பத்து இலட்சம் வீடுகளை இலக்காக கொண்டே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது அதற்காக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற 8 வீதமான நிர்மாண வேலைகளை 12 வீதமாக அதிகரிப்பதற்கும் . வீடுகளை நிர்மாணிப்பதற்காக வங்கி கடன்களுக்கு அறவிடப்படுகின்ற வட்டியை 8 வீதத்திற்கும் 10 வீதத்திற்குள் இடையில் வைத்துக்கொள்வதற்குள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேபோல நிர்மாண துறையில் பணியாற்றுகின்றோர் புதிய அனுபவத்துடன் இலத்திரனியல் பணியாளராக செயலாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் அவர்களின் தொழிற்சார் தன்மையை அதிகரித்து கொள்வதற்கு விசேட வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.

வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போது மஹிந்த சிந்தனை கொள்கையின் பிரகாரம் கொழும்பு நகரத்தில் இருக்கின்ற 51 வீதமான குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிய மாடிக்கட்டிடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் பெருந்தோட்டங்களில் 30 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்குள் தனியார் துறையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவிருக்கின்றது. அத்துடன் சகல அமைச்சுகளும் தேசிய வீடமைப்பு அதிகார சபையும் இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்வாங்கப்படவேண்டும்.

அதேபோல தேசத்தின் மகுடம் கண்காட்சி இனி ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுப்பதனால் குறைந்த செலவில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன் அரசாங்க காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியுள்ள நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து சட்டரீதியாக வீடுகளை கோருவோருக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் நாற்பது பாரிய தொழிற்சாலைகள்


யாழ்ப்பாணம் அச்சவேலியில் 40 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கைத்தொழிற் பேட்டைக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக் கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.

இந்நிதிக்கான அங்கீகாரத்தை தேசிய திட்டமிடல் திணைக்களம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இக் கைத்தொழில் பேட்டைக் கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளதுடன், இதில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இணக்கத்தினையும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்.

அச்சுவேலி பகுதியில் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 65 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதுடன் இதில் 25 ஏக்கர் காணியில் ஆடைத் தொழிற்சாலைகளும் 40 ஏக்கர் கணியில் கைத்தொழில் பேட்டையும் அமைக்கப்படவுள்ளன.

வற்றுக்கான செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வடபகுதி அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கும் கையளிக்கப்பட்டு அதன் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கைத்தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளையும் ஏற்படுத்தவென 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதுடன் கைத்தொழில் பேட்டையில் அமையவுள்ள 40 தொழிற்சாலைகளை நிர்மாணித்து வழங்குவதற்கு வெளிநாடுகளின் நிதியுதவி யைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு நடவடிக் கைகள் நிறைவடைந்ததும் உடனடியாகவே கைத்தொழில் பேட்டைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர், இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பணம் கேட்டதால் நாட்டை விட்டு ஓடினேன்

சக்வித்தி இரகசிய பொலிஸாரிடம் தெரிவிப்பு

பணத்தை வைப்புச் செய்தவர்கள் ஒரே நேரத்தில் பணத்தை திருப்பிக் கேட்டதன் காரணமாக அதனை திருப்பிச் செலுத்த முடியாதிருந்ததாலேயே நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சக்வித்தி ரணசிங்க இரகசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

வைப்புச் செய்யப்பட்ட பணத்துக்கு முறையாக வட்டியை கொடுத்து வந்ததாகவும் அவர்களில் ஒரு சில ருக்கு அவர்கள் கேட்டுக் கொண்ட தையடுத்து முழுத் தொகையையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் வைப்புச் செய்தவர்கள் அனைவருக்கும் கொடுப் பதற்கு தனது நிதி நிறுவனத்தில் போதிய பணம் இல்லாதிருந்ததாகவும் அவர் கூறினார்.

ஒரு சில தொழில்களில் தான் வைப்புப் பணத்தை முதலீடு செய்திருந்ததாகவும் அதில் இருந்து வைப்பாளர்களின் வட்டியை கொடுத்து வரமுடிந்ததென்றும் ஆனால் ஒரு சிலருக்கு மொத்த வைப்புத் தொகையையும் கொடுத்ததால்தான் வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்று போலிப் பெயரில் மீண்டும் திரும்பி வந்த சக்வித்தி அவரது மனைவியின் வீட்டில் வைத்து கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சக்வித்தி மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு வருவதற்கு தமிழ்ப் பெயர்களில் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியிருந்தனர். இந்த போலி கடவுச் சீட்டுகள் வத்தளை ஹேகித்தயில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை போட்ட போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

சக்வித்தியிடம் இரகசிய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனினும் அவரது சொத்து தொடர்பாக எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறுகிறது
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கில் குளங்களை புனரமைக்க ஜப்பான் 4000 மில்லியன் ரூபா உதவி



கிழக்கு மாகாணத்தில் தூர்ந்துபோயுள்ள சிறிய, நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களையும் கால்வாய்களையும் புனரமைப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் 4000 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு முன் வந்துள்ள தாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தெரி வித்தார்.

பொதுநிர்வாக அமைச்சின் 40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பண’ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாணவர்களுக்கு 120,000 அப்பியாசக் கொப்பிகள் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் எம்.பி. தலைமையில் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 82 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக் கென ஒரு இலட்சத்து இருப தினாயிரம் (1,20,000) அப்பியாசக் கொப்பிகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் இவ்வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியரின் கல்விக்கு உதவும் வகையில் அப்பியாசக் கொப்பிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்தை இளைஞர்க ளுக்கான நாளை அமைப்பு செயற்படுத் தியுள்ளது.

இவ்வேலைத் திட்டத்தின் நிமித்தம் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரான நாமல் ராஜபக்ஷ எம்.பி, ஒவ்வொரு பாடசாலை க்கும் நேரில் சென்று அப்பியாசக் கொப்பிகளை பகிர்ந்தளித்து வருகின்றார்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு மாணவ/ மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் மகத்தான பெருவரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.

இவ்வேலைத் திட்டம் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடராக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நேற்றைய தினம் பாரதி மகா வித்தியாலயம், ராமநாதபுரம் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மகா வித்தியாலயம், பன்னங்கண்டி வித்தியாலயம் உட்பட 13 பாடசாலைகளுக்கு எம்.பி நாமல் ராஜபக்ஷ நேரில் விஜயம் செய்தார்.

இந்நிகழ்வுகளில் உதித்த லொக்கு பண்டார எம்.பி. வட மாகாண கல்வி அமைச்சு செயலாளர் இளங்கோபன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா, ஜெனரல் ராஜகுரு, பிரிகேடியர் விக்கிரமசூரிய உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்ப டுமென பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

மேற்படி மாகாணங்களிலுள்ள தொல்பொருட்கள் கொள்ளையி டப்படுவதுடன் சம்பந்தப்பட்ட விகாரைகள், மத வழிபாட்டுத் தலங்களின் தேரர்கள் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி வருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைத் துள்ளன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே பிரதமர் டி.எம்.ஜயரத்ன 2600 வது “சம்புத்தத்வ” ஏற்பாட்டுக்குழுவினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள விஹாரைகள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அபிவிருத்திக்குள்ளாக்கும் தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதுடன் அதணோடிணைந்ததாக தொல் பொருட்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர், இதன் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 289 பெளத்த விஹாரைகள் உள்ளதுடன் இதில் தொல் பொருட்கள் உள்ள இடங்களென 88 முக்கிய இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மக்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளின் போது தொல்பொருள் பிரதேசங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

ஜன செவன'வின் கீழ் 10 இலட்சம் வீடுகள் நாடளாவிய ரீதியில் 6 வருடங்களில் நிர்மாணம்


வீடுகளற்ற மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட மக்களுக்கு “ஜன செவன” வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 10 இலட்சம் வீடுகளை நிர்மாணித்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வீடுகளை எதிர்வரும் 6 வருடங்க ளுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் 65,000 வீடுகளையும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் 30,000 வீடுகளையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சின் செயற்பாட்டு மீளாய்வு நிகழ்வின் போது இது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வீடமைப்பு சம்பந்தமான வங்கிக் கடன்களின் வட்டி விகிதத்தையும் குறைப்பதுபற்றி உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை கருத்திட்டத்தின் கீழ் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள செயற்திட்டங்கள் மற்றும் அமைச்சின் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து இந்நிகழ்வின் போது ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, அமைச்சின் செயலாளர் நிஸ்ஸங்க என். விஜயரத்ன உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் அமைச்சின் பல்வேறு துறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

பத்து இலட்சம் வீடுகளை அமைத்தல் என்ற அரசாங்கத்தின் இலக்கை நிறைவேற்றுவதற்காக தற்போது தேசிய உற்பத்தியில் 8 வீதமாகவுள்ள நிர்மாணக் கைத்தொழிலை 12 வீதமாக அதிகரிப்பது அவசியம். அத்துடன் வீடுகளை நிர்மாணிப்பதற்கான வங்கிக் கடன்களின் வட்டி வீதத்தை 8 வீதம் முதல் 10 வீதம் வரை வைத்திருப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்பவியலா ளர்களுக்கு நவீன பயிற்சிகளை வழங்கி அவர்களை நிர்மாணத்துறையில் பங்களிப்புச் செய்பவர்களாக மாற்றுவது சம்பந்தமாகவும் அவர்களின் தொழில் தன்மையை மேம்படுத்தும் விசேட செயற்திட்டமொன்று உருவாக்கப்படுவது சம்பந்தமாகவும் ஜனாதிபதி உயரதிகாரிகளுக்குப் பணிப்புரைகளை வழங்கினார்.

எதிர்கால வீடமைப்புத் திட்டங்களின் போது மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப கொழும்பு நகர வீடுகளின் 51 வீத சேரி வீடுகளுக்குப் பதிலாக 65,000 புதிய மாடி வீடுகளை நிர்மாணிக்கவும் 30,000 தோட்டப் பகுதி வீடுகளை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

அத்துடன் அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கான வீட்டுத்திட்டமும் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, சகல அமைச்சுக்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் வீடுகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் தொடர்புபட்டதாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இதன்போது அரச காணிகளில் பலாத்காரமாக குடியிருப்போருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் வீடமைப்புத் திட்டத்தின் போது முறைப்படி விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமையளிக்கவும் வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்
மேலும் இங்கே தொடர்க...