11 ஜனவரி, 2010

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு; மாகாண சபை உறுப்பினர் அங்கம் வகிக்கும் மேல்சபை

தமிழ் மக்களுக்கு கௌரவமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும். மேல்சபை ஒன்று உருவாக்கப்படும். அதில் மாகாணசபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். தற்போது அவர்களை நாம் மீளக்குடியமர்த்த ஆரம்பித்து அந்தப்பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இலங்கையில் அகதிகள் யுகம் இனிமேல் இல்லை. தமிழ் மக்கள் எந்த நேரத்திலும் எங்கும் போய் வரலாம். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இனி அவர்களுக்கு இருக்காது. விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை இப்போது யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம்தான் இங்குள்ள பெற் றோருக்கு முக்கியம். அவர் களின் எதிர் காலத்தைப் பாது காப்பது எங்கள் பொறுப்பு. அதற்காக வடபகுதி மாணவர்களின் கல்வித்துறையில் நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம். விவசாயிகளுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக்கொடுக் கப்படவுள்ளது. அதற்காக ஆறு ஒன்றை இங்கே திருப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது
பாடசாலைகள் முன்னேற்றப்படவுள்ளன. யாழ்.பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்யப்படும். தமிழ் மக்களாகிய நீங்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றுக்குத் தடையின்றிச் செல்ல முடிகிறது. கடலில் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபடமுடிகின்றது. வயலில் விவசாயம் செய்ய முடிகின்றது.
வவுனியா நகரசபை, யாழ்.மாநகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல்களை நான் நடத்தினேன். அடுத்து வடமாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சித் தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் இப்போது தமது சொந்த இடங்களில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள். இனி அகதிகள் யுகம் இலங்கையில் இல்லை. அன்று சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் ஒன்றாகி ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அந்தநிலை இப்போது மீண்டும் ஏற்பட்டு வருகிறது. யாழ்.தேவி ரயிலில் நான் பலமுறை பயணம் செய்துள்ளேன்.
யாழ்.தேவி ரயிலை யாழ்ப்பாண மக்கள் பார்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ஏ9 வீதியூடாக இப்போது சுதந்திரமான போக்குவரத்து இடம்பெறுகின்றது. அது வடபகுதி மக்களின் சொர்க்கவாசல். ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக யாழ்.பொதுநூலகம் திகழ்ந்தது. அதனை ஐக்கியதேசியக் கட்சியினர்தான் எரித்தார்கள். தமிழ்சந்ததிக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய அநியாயம் இது.
நியாயமான, கௌரவமான அரசியல் தீர்வு
தமிழ் மக்களுக்கு கௌரவமானநியாயமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும். மேல்சபை ஒன்று உருவாக்கப்படும். அதில் மாகாண சபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். தென்பகுதி மக்களுக்குத் தங்கம் என்றால் வடபகுதி மக்களுக்கு அது தகரமாக இருக்கமுடியாது. கல்வி, விவசாய, மீன்பிடித் துறைகளில் துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படும். ஆங்கில மொழி மூலம் கட்டாயமாக்கப்படும்.

விளையாட்டுத் துறை அபிவிருத்தி ஏற்படுத்தப்படும். தமிழ்வீரர்களும் சர்வதேச ரீதியில் புகழ்பெற வசதிகள் ஏற்படுத்தப்படும். எதிர்வீரசிங்கம் போன்று பல திறமையான வீரர்கள் எதிர்காலத்தில் இங்கு உருவாகுவார்கள். இலங்கை வலைப்பந்தாட்டத் தேசிய அணியில் இடம்பெற்றுள்ள மிக உயரமான தமிழ் வீராங்கனை தர்சினி சிவலிங்கம். சர்வதேச விளையாட்டரங்கு ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும். சேர்.பொன்.இராமநாதன். சேர்.பொன் அருணாச்சலம் போன்ற ஜனநாயக அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். வெற்றியின் சின்னம் வெற்றிலைச் சின்னம் என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...