இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்படுவதும், இவர்களின் மீள் குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பையும், நல் வாழ்க்கையும் ஏற்படுத்த உறுதியளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் சற்றுமுன் தெரிவித்தார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ஆம் திகதி காலை கோலாகலமாகத் ஆரம்பமாகி 4 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று நிறைவு பெறுவதையடுத்து செம்மொழி மாநாட்டின் தீர்மாணங்களை கூறும் போதே முதலமைச்சர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், இலங்கை தமிழர் தமது இன, மதம், மொழி முதலானவற்றை நிலைநாட்டிக் கொள்ள அவர்களால் நீண்ட காலம் உறுதி மொழிகள் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கு எவ்வித தீர்வுகளும் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல இலட்சம் கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட போதும் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையானது எமக்கும் இங்குள்ள அனைவருக்கும் வேதனை தருகின்றது.
எனவே இலங்கை தமழிர் பிரச்சினைத் தொடர்பில் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என இத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கேட்டு கொள்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக