26 டிசம்பர், 2010

மஹாரகம நகைக்கடையில் கொள்ளை முயற்சி:பொலிஸார் சுட்டதில் ஒருவர் பலி

மஹாரகம பகுதியில் வைத்து நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட முயற்சித்த சந்தேக நபர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை குறித்த ஆபணர விற்பனை நிலையத்தை கொள்ளையிட வந்த இனந்தெரியாத மூவர் தொடர்பில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரை நோக்கி குறித்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பதிலுக்கு பொலிசார் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. தலைவர் பதவிக்கு சஜித் போட்டியிடுவது ஊர்ஜிதம்




ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி இரவு போதி ரணசிங்கவின் வீட்டில் நடந்த கூட்டமொன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இதுபற்றி மேலும் கூறப்படுவதாவது, கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்சென்ற சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் அன்றைய தினம் கூடி அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்ஜித் மத்தும பண்டார, தயாசிரி ஜயசேகர, சுஜீவ சேரசிங்க, அசோக அபேசிங்க, கயந்த கருணா திலக்க உட்பட மேலும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், இம்முடிவை கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, ஜயவிக்கிரம பெரேரா ஆகியோருக்கு முதலில் அறியத்தரவும், பின்னர் அவர்களுடனே இணைந்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவிக்கவும். இன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் குழுவினரின் பேச்சாளராகச் செயற்படும் போதி ரணசிங்க, இத்தீர்மானம் 24ஆம் திகதி காலை ரணிலின் பேச்சாளராகச் செயற்படும் மலிக் சமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ரணில் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு தலைவராக இருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அக்காலப்பகுதியில் சஜித் பிரதித் தலைவராகப் பணியாற்ற இடமளிக்க வேண்டுமெனவும் முன்னர் தெரிவித்திருந்த மலிக் சமரவீரவின் கருத்தை இக்குழுவினர் முற்றாகப் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.தே.க.வின் இடைக்கால நிறைவேற்றுக் குழு எதிர்வரும் பத்தாம் திகதி கூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. கட்சியின் சட்ட திட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்தல், தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கு அபேட்சகர்களைத் தெரிவு செய்தல் பற்றிய கலந்துரையாடல்கள் ஆகியன கட்சியின் குழுக்களிடையே இத்தினங்களில் நடந்து வருவதாகத் தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற முடியாத நிலையில் வடக்கில் இன்னமும் 18 ஆயிரத்து 4 குடும்பங்கள்




கடந்த கால யுத்தங் காரணமாக இடம்பெயர்ந்த 18 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் முகாம்களிலும் மிகுதியானோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். யாழ். செயலகம் இறுதியாக வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 18 ஆயிரத்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 95 பேர் மீளக்குடியமர முடியாது அகதி வாழ்க்கையைத் தொடர்வதாகத் தெரியவருகின்றது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமுலில் உள்ள வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த 15 ஆயிரத்து 406 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 9 பேர் தொடர்ந்தும் அகதிகளாகவே உள்ளனர். இவர்களுள் உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்கிராமங்களான வித்தகபுரம், இளவாலை வடக்கு, வடமேற்கு பகுதிகளில் 989 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 518 பேர் கடந்த மாதம் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயங்காரணமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்பவர்களில் வெறும் 7 சதவீதம் மட்டுமே ஆகும். இதேவேளை மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள இம்மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கூட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்போதும் மீளக்குடியமரவில்லை.

இதேபோன்றே, வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தவிர்ந்த வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும், மூவாயிரத்து 89 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 736 பேர் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்கள் கொடிகாமம் இராமாவில் முகாமிலும் வடமராட்சியிலுள்ள உறவினர்கள், நண்பர்களுடனும் வசித்துவருகின்றனர்.

இதனிடையே குடாநாட்டினில் பரவலாக அமைந்துள்ள படைமுகாம்களிற்காக பொதுமக்களது வீடுகளே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவ்வகையிலும் 498 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 678 பேர் அகதிகளாக்கப்பட்டு இற்றைவரை வீடு திரும்ப முடியாதுள்ளனர். எனினும் அண்மைக்காலங்களில் ஆயிரத்து 497 குடும்பங்களைச் சேர்ந்த நாலாயிரத்து 733 பேர் படையினரது முகாம்களாக இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டதையடுத்து மீளக்குடியமர்ந்து விட்டதாகவும் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் குடாநாடு முழுவதிலுமாக இவ்வாண்டின் இறுதிவரையிலான காலப்பகுதியினுள் இடம்பெயர்ந்திருந்த ஐயாயிரத்து 498 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 744 பேர் மீளக்குடியமர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையண்டிய சூனியப்பிரதேசம் மற்றும் படைமுகாம்ளாக இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளென இம் மீள்குடியமர்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழரை நம்பவைத்து ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி


சிறுபான்மையின தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளினாலேயே இன்றுவரை எதிர்க்கட்சியில் ஒருசில ஆசனங்களையாவது தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தமையை அவரது மகன் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே தனது தந்தையான பிரேமதாச புலிகளின் மூத்த தலைவர்களான யோகி, மாத்தையா ஆகியோரைப் பயன்படுத்தி அந்த இயக்கத்தைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் மோதவிட்டார். இது எனது அப்பாவின் தந்திரம்.

அத்துடன் புலிகளை மேலும் பலவீனப்படுத்தவே எனது அப்பா ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் அவர்களுக்கு வழங்கினார் எனத் தான் திடமாக நம்புவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களையும் அரவணைக்கும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவு தமக்கே உள்ளது எனவும் இன, மத, மொழி பேதமற்ற கட்சி எனவும் மார்பு தட்டிவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்து வருகிறது.

ஐ. தே. க வின் அடுத்த தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சஜித் பிரேமதாச நாளை அப்பதவி கிடைத்தால் தமிழ் மக்களையும் இவ்வாறுதான் மோதவிடும் அரசியல் நடத்துவார் எனத் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

1983 ஆம் ஆண்டு கலவரத்திற்குக் காரணமாகவிருந்த ஜே. ஆர்.ஜெயவர்தனவை விட மோசனமானதோர் ஆட்சியையே சஜித் பிரேமதாச நடத்துவார். புலிகளை அழிக்க நினைத்ததில் தப்பில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு புலிகள் மூலமாகத் தீர்வை முன்வைப்பது போன்று

கபடமானதோர் நாடகமாடி ஒரே இனத்திற்குள் மோதலை ஏற்படுத்தி தனது கட்சியை நம்பிய மக்களை ஏமாற்றியமை மன்னிக்க முடியாத குற்றம் எனவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளை பல தடவைகள் பேச்சுக்கு அழைத்தபோதிலும் அவர்கள் வராது அடம்பிடித்தனர். மாவிலாறு போன்ற சம்பவங்களால் புலிகள் தமது பயங்கரவாதத்தைக் கக்கியபோதும்தான் வேறுவழியின்றி, முழு நாட்டு மக்கள் நலன் கருதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளை இல்லாதொழித்தார். அதன் மூலம், இன்று தமிழ் மக்கள், தம்மை நிம்மதியாக வாழவைத்த ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்

தேசிய பாதுகாப்பு தினம் இன்று பிரதமர் தி. மு. ஜயரத்ன தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுகிறது.

கடற்படை, விமானப்படை, இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை, 24 பாடசாலை மாணவர்களின் அணி வகுப்பு, 9 கலாசாரம் குழுக்களின் அணிவகுப்பு மற்றும் 19 ஊர்திகளின் அணிவகுப்பு என்பன உள்ளடங்கிய ஊர்வலம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து, வீரசிங்கம் மண்டபம்வரை சென்று நிறைவடையும்.

பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் அணிவகுப்பில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அலங்கார ஊர்திகளுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, நெடுந்தீவு பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகளும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் வைரமுத்து தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி ஞாபகார்த்த நூலொன்றும் பிரதமரால் வெளியிட்டு வைக்கப்படவிருப்பதுடன், இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள் முப்படைகளின் அதிகாரிகள், உட்படப் பலர் கலந்துகொள்ளவிருப்பதாக அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் வைரமுத்து தினகரனுக்குக் கூறினார்.

அதேநேரம், இன்று காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை நாட்டிலுள்ள அனைவரும் இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மக்கள் தமது சொத்துக்கள், இருப்பிடங்களை இழந்தனர். அம்மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும், வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய இவ்வருடம் தேசிய பாதுகாப்பு தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொம்பனித்தெரு குடியிருப்பாளருக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய உறுதி


கொழும்பு கொம்பனித் தெரு வாழ் குடியிருப் பாளர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்ப டமாட்டாது. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு என்றே அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியுள்ளது. ஆகவே கொம்பனித் தெருவில் பள்ளிகள், மத்ராஸாக்கள் அகற்றப்படும், மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற விஷமத்தனமான பிரசுரங்களை சிலர் தமது சொந்த அரசியல் நோக்கத்துக்காக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை நம்பி கொம்பனித் தெரு வாழ் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை.

கொம்பனித்தெரு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த குழுவினருக்கு மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.

விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகள் பிரதி அமைச்சர் எம். பயிஸார் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரை அவருடைய செயலகத்தில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொம்பனிதெரு பகுதியில் மதுபான விற்பனை நிலையம் உட்பட்ட ஒரு சிறிய பகுதி மட்டும் கொழும்பு எதிர்கால மாதிரித் திட்டத்தை உருவாக்கு வதற்கென நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு வாழ்வோரின் சம்மதத்தை பெற்ற பின்னர் தான் இத்திட்டத்தை அமுல் செய்வோம். தனியார் துறையினர் முதலீட்டாளர்களின் உதவியுடனேயே இந்த அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இதனை ஊக்குவிக்கும் ஊக்குவிப்பாளர்களாக மட்டுமே அரசாங்கம் செயற்படும். இக் குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்களும், தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்கின்றனர்.

அரசாங்க ஊழியர்கள் வதியும் மிகவும் பழமை வாய்ந்த மாடி வீட்டுத் திட்டமும் இங்கு அமைந்துள்ளது. இது குறித்த விடயங்களை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியபோது அங்கு வாழ் மக்களும் இணக்கம் தெரிவித்து ள்ளனர் என்று அவர் விளக்க மளித்தார்.

இந்த மாதிரித் திட்டம் வெற்றி யளித்தால் ஏனைய இடங்களிலும் மக்கள் வாழ்வதற்கு உரிய நவீன வீடு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ப்படும்.

சேரி வாழ் மக்களுக்கும் சேரி வாழ்க்கை முறையை ஒழித்து அவர் களுக்குத் தகுந்த இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.

இந்த மாதிரியான அபிவிருத்தித் திட்டங்களை யாராவது எப்போ தாவது அமைத்துத்தான் ஆக வேண் டும்.

கொழும்பை எழில் மிக்க நகரமாக உருவாக்குவதற்கு நாம் பாரிய திட்டம் தீட்டியுள்ளோம். இப்படியான திட்டங்களை சென் னையில் ஆரம்பித்தபோது அதற்கும் விஷயம் புரியாமல் பல கோணங் களில் பலர் எதிர்த்தனர்.

ஆனால் இன்று அந்த மக்களே தமிழ்நாடு அரசு செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது என்று பாராட் டுகின்றனர் என்று கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

50,000 வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுப்பு இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக சில ஊடகங்களில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரா லயம், வடக்கின் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் பேர்ஃவெப் லிட்டட்’ நிறுவனம் ஆரம்பித்திருப்பதாகவும், இதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் ஆரம்ப மாகும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட் டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடமைப்பு நிர்மாணத்துக்கான ஆளணி வளத்தை உள்ளூரில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதோடு, வடமாகாண மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உடனடி வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இவ்வீட்டுத் திட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெயர்ந்த மக்க ளின் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்கும் திட்ட மும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் கிடைக் கும் தொழிலாளிகள், கட்டடப் பொருட்கள் போன்ற வற்றையும் கூடுதலாக இத்திட்ட த்தில் பயன்படுத்தி இம்மாவட்ட ங்களில் வேலைவாய்ப்புக்கள் மற் றும் பொருளாதார அபிவிருத்தியை யும் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகி றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வருட ஆரம்பத்தில் இந்தி யாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் இவ்வீட்டுத் திட்டம் தொடர்பாக அறிவித்திருந்தார். 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கான முழு நிதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாகவும் உயர் ஸ்தானி கராலயத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவியுடன் முன்னெ டுக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் உட்பட வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவிருக்கும் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியி ட்டிருந்தது. எனினும், அடிப்படை யற்ற இக்குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்த நிலையி லேயே, 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் எவ்விதமான தடையுமின்றி முன்னெ டுக்கப்படும் என கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயம் அறிவித்து ள்ளது.

50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் காணப்படும் முரண்பாடான செய்திகள் தொடர்பில் இந்தியாவுடன் பேச இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...