15 பிப்ரவரி, 2010

யாழ்.கொழும்புத்துறையில் வெடிப்புச் சம்பவம்;இரு மாணவர்கள் பலி

முக்கிய செய்திகள்


யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் சற்று நேரத்திற்கு முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காயமடைந்தோர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படுவதாக எமது பிராந்திய செய்டதியாளர் தெரிவித்தார்.

கொழும்புத்துறை இந்துக் கல்லூரியில் இந்தச் சமப்வம் இடம்பெற்றுள்ளது.அவ்வளாகத்தில் காணப்பட்ட பந்து போன்ற ஒன்றை எடுத்து பாடசாலை மாணவர்கள் விளையாடியபோது அது வெடித்துள்ளது. இதில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மேலதிக விபரங்கள் விரைவில்ளையடுத்து 27 முதல் தேர்தல் பிரசாரம் : ஸ்ரீ.சு.க. அறிவிப்புஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இம்மாதம் 27ஆம் திகதி அனுராதபுரத்தில் மதவழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தமது பிரசார நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளனர்.

அன்றைய தினம் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி விகாரையில் மதவழிபாடுகள் நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து ஏனைய மதவழிபாடுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் உறுதிப்பத்திரங்களை கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கதுதேர்தல் சின்னம் குறித்து ம.வி.முன்னணி - ஜ.ம.முன்னணி பேச்சு
சின்னம் குறித்து ஐ.தே.கவும் மக்கள் விடுதலை முன்னணியும் மாற்றுக் கருத்தினை கொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பான முக்கியமான சந்திப்பொன்று ம.வி.முன்னணிக்கும் ஜ.ம.முன்னணிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடப்போவதாக ஜே.வி.பியும் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஐ.தே.கவும் அறிவித்தன. ஜே.வி.பியின் நிலைப்பாடு தொடர்பில் தாம் ஆராய்ந்து முடிவினை அறிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினர்களை ஜனநாயக மக்கள் முன்னணியினர் இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தமது யானைச் சின்னத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என அக்கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்:டக்ளஸ் தேவானந்தாபொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளும் கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர் இவ்வார இறுதிக்குள் தமது முடிவுகளை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும் எமக்குத் தெரிவித்தார்
ஐதேக பதுளை மாவட்ட அமைப்பாளராக சச்சிதானந்தன் : தேர்தலில் போட்டியிடவும் முடிவுஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக எம்.சச்சிதானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளமை குறிப்பித்தக்கது.புத்தளம் தலைமை கிராம அதிகாரி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் கிராம அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிவந்த கொத்தான்தீவை சேர்ந்த எம். றாசிக் என்பவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவைக்கு சென்ற றாசிக்,அங்கிருந்து வாகனமொன்றில் அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்று வரை அவர் வீடு வந்து சேரவில்லையென்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இறுதியாக தொலைபேசியில் உரையாடிய போது தான் தற்போது மட்டக்களப்புக்கு பிரஸ்தாப வாகனத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் குறித்த தகவல் தெரிந்தோர் புத்தளம் பிரதேச செயலகத்தின் இலக்கமான 0322265358 அல்லது புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0322265422 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை அறிவிப்பு : துரைரட்ணசிங்கம்ஏப்ரல் மாதம் இடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கட்சி சார்பில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், போட்டியிடுவது மற்றும் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளர்கள் தொடர்பில் தாம் ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பதாகவும், அது உறுதிபடுத்தப்பட்டதும் நாளை முடிவினை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் எமது இணையத்தளத்திற்கு இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை பிரதமர் தேர்தல் பொன்சேகா மனைவி போட்டி; எதிர்க்கட்சிகளின் சார்பில் நிற்கிறார்

இலங்கை பிரதமர் தேர்தல்    பொன்சேகா மனைவி போட்டி;    எதிர்க்கட்சிகளின் சார்பில் நிற்கிறார்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத்பொன்சேகா தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் வருகிற ஏப்ரல் மாதம் பராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன.

இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவின் மீது ராஜபக்சே அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடத்தில் எடுத்து கூறி வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளனர். அதற்கு சரியான வேட்பாளர் பொன் சேகாவின் மனைவி அனோமா தான் என முடிவு செய்துள்ளனர்.

எனவே, பிரதமர் தேர்தலில் பொதுவேட்பாளராக இவரையே நிறுத்த உள்ளனர். பொன்சேகாவின் மனைவி அனோமாவுக்கு ஜனதா விமுக்தி வரமுனா (ஜெ.வி.பி.) கட்சி தலைவர் சோமவான்சா அமர்சிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவின் முடிவு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற் கிடையே பாராளுமன்ற தேர்தலில் தமது கட்சி தலைமையிலான கூட்டணி பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ரனில் விக்ரமசிங்கே விரும்புகிறார்.

இது குறித்து அவர் தனது ஐக்கிய தேசிய கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது இலங்கையில் நீடித்து வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை ஏற்படுத்தவும் முயற்சி நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்புஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பங்கள் நாளை 16ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாள் 22 ஆம் திகதியாகும்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தமது விபரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக 2008ஆம் ஆண்டுக்கான அத்தாட்சிப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் அரச அலுவலகங்களில் தற்போது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தும், அலுவலர்களை நியமிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரியில் ஆர்ப்பாட்டம்
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரி நகரில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் சுமார் 150இற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதியொருவர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் அங்கு உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை பலத்த பொலிஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி பொரளையில் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவினர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானம்
கிழக்கு மாகாண அமைச்சரான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட உத்தேசித்துள்ள அவர் தனது கிழக்கு மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக கூறினார்.

கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிக்கான ராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தினமான எதிர்வரும் 25ஆம் திகதி கையளிக்க உத்தேசித்துள்ளார்ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல் : திஸ்ஸ

சரத் பொன்சேகா சார்பில் வழக்குத் தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு வருவதாக ஐக்கியத் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார் என பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க அங்கு மேலும் பேசுகையில்,

ஐனாதிபதி தேர்தல் முடிவுகளைக் கேள்விக்குட்படுத்தியது அரசாங்கம். இன்று ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்குத் தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கவில்லை


சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஈடுபட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பில் கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராணுவ சட்டத்தின் 129ஆவது உறுப்புரையை மீறிச் செயற்பட்டமை தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் முன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன.

இராணுவத்தினர் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புரிந்துள்ளனர் என ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருந்த கருத்தே அவருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள முக்கியமான குற்றச்சாட்டாக கருதப்படுகிறது என்று நேற்று வெளியான வாரப் பத்திரிகைகள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜெனரல் பொன்சேகா அங்கிருந்தவாறு இலங்கையிலுள்ள அரசியல் பிரமுகர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் என்றும் அதற்கான சட்சியங்களை இராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் அந்த செய்திகளில் வெளியாகியிருந்தன.

இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் கீழ் இரண்டு வழக்குகள் தொடரப்படவுள்ளன என்றும் இது தொடர்பில் சட்டத் துறையினர் கலந்தாலோசித்து வருகின்றனர் என்றும் வேறு சில செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இராணுவ சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக இராணுவ நிதிமன்றத்தில் ஒரு வழக்கும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக சாதாரண நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்குமாக இரண்டு வழக்குகளே இவ்வாறு தாக்கல் செய்யப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் ஸ்டேட் ரைம்ஸ் எனும் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காணாமல் போதல் தொடர்பான 6 சம்பவங்களுடன் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்புபட்டுள்ளார் எனும் தகவலையும் பாதுகாப்பு செயலாளர் இதன் போது வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர், ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.

உரிய சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டதன் பின்னரே அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறிய இராணுவ பேச்சாளர், இராணுவ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படும் போது தான் விரும்பும் சட்டத்தரணிகளூடாக தன்னை நியாயப்படுத்துவதற்கான காரணங்களை முன்வைக்கவோ, மேன்முறையீடு செய்யவோ அல்லது இராணுவ நீதிமன்றத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு செல்லவோ முடியும். அதற்கான சட்ட அனுமதி ஜெனரல் பொன்சேகாவுக்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.
நவநீதம் பிள்ளையின் கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்க முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

"இது உள்நாட்டு விவகாரம் என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் தனிப்பட்டவர்களின் பல்வேறு நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதனை தெரிவிக்கவேண்டும்.

அடுத்த விடயம் யாதெனில் யாரும் கோரிக்கைகளை விடுக்கலாம். பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் கோரிக்கைகள் விடுக்கப்படலாம். ஆனால் எமது கைகளிலேயே விடயங்கள் உள்ளன. இது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்பதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்தம் முடிந்தவுடன் இலங்கையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அவற்றுக்கு பதிலளித்தோம். அவை அந்த சந்தர்ப்பங்களில் முடிவுக்கு வந்தன.

மேலும் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற இலங்கை விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அமோக வெற்றியீட்டியதையும் நினைவூட்டுகின்றோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது தற்போது மீண்டும் போர் குற்றங்கள் மற்றும் சுயாதீன விசாரணைகள் என்று கோரிக்கை விடுக்கப்படும்போது அவற்றுக்கு பதிலளிக்க முடியாது என்பதனையே கூறவேண்டியுள்ளது. " எனத் தெரிவித்தார்
அன்னத்தில் போட்டியிட இணங்காவிடின் மாற்றுக் கூட்டணியில்
களமிறங்குவோம்:ஜே.வி.பி
ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறையில் தனிமைப்படுத்தி விட்டு அரசியல் இலாபத்திற்காக செயற்பட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தார்மீக உரிமை கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் "அன்னம் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம்' இல்லையென்றால் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்திய விரிவான மாற்றுக் கூட்டணியுடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவோம் என்று ஜே. வி. பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பாஸிஸவாத போக்கும் சர்வாதிகார அடக்கு முறைகளும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மேலோங்கியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே. வி. பியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் கூறியதாவது,

"நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை விட எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் பாரியளவிலான அடக்கு முறைகளையும் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் சந்திக்க நேரிடும். ஏனென்றால் அரசாங்கம் தனது பாஸிஸவாத போக்கை விஸ்தரித்து வருகின்றது.

இதன் வெளிபாடுகளாகவே ஜனாதிபதி தேர்தலின் பின் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை சட்டத்தின் தேவையெனக் கூறி அரசியல் தேவைக்காக சிறை வைத்திருத்தல், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அரசாங்கத்தின் குண்டர்கள் தாக்கும் போது பொலிஸார் மௌனமாக இருந்தமை, அதன் பின்னர் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது கண்ணீர்ப் புகை, தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை என்பவற்றைக் கொள்ளலாம். லங்கா பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறை வைக்கப்பட்டமை, லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் காணாமல் போனமை உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களும் அடக்கு முறைகளும் மேலோங்கியுள்ளன.

41 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற முன்னால் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கே இந்த நிலையென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை எவ்வாறு இருக்கும். எனவே அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கு வலுவான ஒரு கூட்டணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளினால் அமைக்கப்பட வேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்ந்தும் அன்னம் சின்னத்தினைக் கொண்ட கூட்டணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதையே விரும்பினார். ஆனால் ஐ. தே. க. யானை சின்னத்தில் போட்டியிடுவதாக செய்திகள் பரவின. இது உண்மையென்றால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அன்னச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட முடியாது.

எவ்வாறாயினும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் அன்னச் சின்னத்தில் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. தற்போதைய தேவை சின்னம் என்பதை விட நாட்டுக்கு தேவையான ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியே என்பதை சகலரும் கருத்தில் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்

ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு : இரா.சம்பந்தன்என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறான விடயமாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பிமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் மூலம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவுடன் யுத்த சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம், எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 வீதம் வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருமலையிலுள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். மாவட்டக் கிளைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம், தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மேலும் பேசிய ஐ. சம்பந்தன் கூறியதாவது.

மாவட்ட ரீதியாக வேட்பாளர் தெரிவு

நாங்கள் மாவட்ட ரீதியாக வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம், மாவட்ட ரீதியாக மக்களால் முன்மொழியப்படும் பிரதிநிதிகள் தொடர்பாக எமது கட்சியின் உயர்பீடம் கொழும்பிலே வரும், செவ்வாய், புதன்கிழமை கூடி பிரதிநிதிகளை உறுதி செய்யவுள்ளது.

ஊடகங்கள் வாயிலாக எமது கட்சியை விட்டு மக்களைப் பிரிக்க அரசு பல்வேறு சதிகளை செய்துவருகிறது. அதனையிட்டு நாம் கவலையடையவில்லை. நாம் எமது மக்களின் கோரிக்கையில் உறுதியாகவுள்ளோம்.

நாங்கள் எமது போராட்ட வரலாற்றில் முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம். நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம்.

அந்தக் காலத்தில் 94 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இரு சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை தவறவிடப்பட்டு விட்டன. ஒஸ்லோப் பேச்சுவார்த்தையில் இரு பகுதியினரும் உள்ளக சுய நிர்ணய உரிமைக்கு இணங்க வேண்டும் என்பது முடிவாகியிருந்தது. அவை துரதிஷ்டவசமாக அது கைகூடவில்லை.

ஆனாலும் நாம் மக்களின் கோரிக்கையை அரசியல் உரிமைகளைத் தாரை வார்த்து, ஒருக்காலும் செல்ல மாட்டோம். நாங்கள் ஒரு போதும் நாட்டை பிளவுபடுத்திச் செல்லவில்லை. இந்தியாவில், பிரான்சில், சுவிசர்லாந்தில் இருப்பது போன்று அந்தந்த மாநில மக்கள் அவர்களது தேவைகளை பரிபாலனங்களைச் செய்கிறார்கள்.

சுய நிர்ணய உரிமைகளே தேவை

அதேபோன்று எமது தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீகமாக வாழும் பகுதியில் உள்ள சுய நிர்ணய உரிமைகளையே நாம் கேட்கிறோம். நாம் இதனை பலமுறை பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தியுள்ளோம்.

அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து சாத்வீகமாக போராடவும் தயங்கமாட்டோம்.

சிங்கள மக்கள் நிச்சயமாக இதனை, எமது நிலைப்பாட்டை உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள். தந்தை செல்வா ஒரு காலத்தில் தெரிவித்தார், தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளும் சிங்களத் தலைமைகள் இந்த நாட்டில் தோன்றவில்லை. ஆனால் அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

நான் இங்கு வர முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேசிவிட்டுத்தான் வந்தேன். இத்தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் இணைந்து ஒற்றுமையாகவுள்ளோம். அண்மையில் கல்முனையில் என்னை முஸ்லிம் மக்கள் கௌரவித்தார்கள். இது தந்தை செல்வாவினால் வளர்த்து வரப்பட்ட இக்கட்சியின் கொள்கைக்குக் கிடைத்த பாராட்டாகும்.

இன்று ஜனாதிபதி சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியுள்ளார். அதனால் ஜனாதிபதி ஆட்சி, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் போன்று எமது தமிழ் பேசும் மக்களும் முழுமையான வாக்களிப்பைச் செய்து மக்களின் அந்த அதிகாரத்தைத் தர வேண்டும். அதன் மூலம் எமது உரிமைகளை கோரிக்கைகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்திடம் உரத்துக் கேட்க முடியும்.

நீங்கள் அளிக்கும் அதிகப்படியான வாக்குகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை நீங்கள் தேர்தலில் காட்ட வேண்டும்.

இந்த அரசு இரகசியமான சூழ்ச்சிகரமான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அதாவது எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அவர்களை சிறுமைப்படுத்தி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பெரும்பான்மையாக இருந்தால் தானே உரிமை பற்றி பேச முடியும்?

அரசின் முயற்சி ஒரு நாளும் பலிக்காது. அதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை கடந்த தேர்தலில் காட்டியுள்ளனர். இறுதியாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். விவேகமாக ஆளும் கட்சியுடன் சேர்ந்துதான் அடிமைகளாகி என்றாலும் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என எவராவது சிந்தித்தால் அது தவறான வழியாகும். நாம் கடும் போக்கைச் சிந்திக்காமல் தொடர்ந்து செயற்பட்டு எமது தீர்வைப் பெறுவோம், அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்
பயன்படுத்த வேண்டும்ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற தோரணையில் ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து மக்களின் செயற்பாடுகளை முடக்கி விட்டு அதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று அரசாங்கம் எண்ணுகின்றது. அது ஒருபோதும் நடக்காது. ஜனநாயகத்தை பாதுகாத்து சாதாரண சூழ்நிலையை உருவாக்க மக்கள் பொதுத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா சிறைவாசம் அனுபவிக்கும் அதேவேளை கே. பி. அரச பாதுகாப்பு இல்லத்தில் சுகபோகத்துடன் இருக்கின்றார். எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி நாடு பூராவும் 20 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளோம். தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

"ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தமையை எதிர்த்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் எதிர்க்கட்சிகள் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை குழப்ப அரசாங்க தரப்பினர் தாக்குதல்களை நடத்திய போதிலும் கலைந்து செல்லாமல் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.

அது மாத்திரமல்லாமல் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அடக்கு முறையினை மேற்கொள்வதன் மூலம் ஊடக சுதந்திரத்தையும் இந்த அரசாங்கம் பறித்துள்ளது. இதன் மூலம் ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஊடகங்களில் வெளிவரவிடாமல் அரசாங்கம் தடுத்து நிறுத்துகிறது.

அது மாத்திரமல்லாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவோம் என அரசாங்கம் கூறி வருகின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதை விட இவர்களால் வெற்றி பெறக் கூட முடியாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கு வாக்களித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் ஏற்பட்ட மோசடிகள் தொடர்பாக நாம் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம். அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும்.

அதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு அதற்கு மாற்று வழிகளை ஏற்படுத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் நாம் கலந்தாலோசிக்கவுள்ளோம். அதன் மூலம் எதிர்வரும் தேர்தலை சுயாதீனமானதும் சுதந்திரமானதுமாக நடத்தி முடிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதையே ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் விரும்புகின்றனர். எனவே நாம் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். இருந்த போதும் எமது கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நாம் நடத்தி வருகின்றோம். அவ்வாறு மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுமானால் அதனை எமது செயற்குழுவை கூட்டி ஆராய்ந்தே கூற முடியும்.

இன்று நாட்டில் ஜனநாயகத்திற்கெதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அதற்கெதிராக செயற்படுவோர்கள் தாக்கப்படுகின்றார்கள். அவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயற்பட விடாமல் அரசாங்கம் அடக்கு முறைக்குட்படுத்துகின்றது.

அதேபோன்று சுகத் ஹேலியகொட என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காது உள்ளது. எனவே ஜனநாயகத்தை பாதுகாத்து சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
வன்னிப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.வன்னிப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. மருதோடை, வவுனிக்குளம், முள்ளியவளை, குமிழமுனை, ஆத்தான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலேயே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளைமோர் குண்டுகள் 05, ரி56 ரக துப்பாக்கி மற்றும் எம்.16 ரக துப்பாக்கி என்பவற்றுக்கான ரவைகள் மற்றும் ரி.என்.ரி வெடிபொருட்கள் உள்ளிட்ட மேலும் சில இராணுவ உபகரணங்களே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர அடையாளம் தெரியாத நவீனரக பாரிய ஆயுதமொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது


இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் 

இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தும்படி இந்திய மத்திய அரசாங்கத்தைக் கோரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அதிகாரம் குறித்து ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் தமிழக முதல்வர் கருத்துரைக்கையில், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்படும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி  

குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மதியம் கிளிநொச்சியிலுள்ள உதயநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினை காரணமாக ஆத்திரமடைந்த கணவன் மனைவியின்மீது சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும், முதுகுப்புறமாக பலத்த கத்திக்குத்துக் இலக்கான எல்.அமிர்தகௌரி (65) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மட்டக்களப்பு நாவலடியில் இளம் யுவதியின் சடலமொன்றினை பொதுமக்களின் தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.


மட்டக்களப்பு நாவலடியில் இளம் யுவதியின் சடலமொன்றினை பொதுமக்களின் தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பெண் திருமலை தோப்பூர் பட்டித்திடலை சேர்ந்த செல்வராசா திலகவதி (29) என இனங்காணப்பட்டுள்ளார். இது கொலையா?, தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் தரம் ஒன்றில் கல்விகற்ற மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு 3வருட கடுழீய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பொ.சுவர்ணராஜா விதித்துள்ளார். குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,பாதிக்கப்பட்டமாணவிக்கு ஒரு இலட்சத்து 50ஆயிரம் பணமும் வழங்கவேண்டுமென நீதிபதி பணித்துள்ளார். அத்துடன் இத்தீர்ப்பு குறித்து நீதிபதி தெரிவிக்கையில் குற்றம் புரிந்தவர்கள் சமூகத்தில் எந்நிலையில் இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்கப்படுமென்பதற்கு ஒரு சான்றாகும் என்றார். இதேவேளை காத்தான்குடியில் தனது மனைவியை தீயிட்டுகொளுத்தி கொலை செய்த நபருக்கு 10 வருட கடுழிய சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார்.பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளின் ஒன்றான பிரிஸ்டல் வீதி இன்றுமுதல் மக்களின் பாவனைக்காக
 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளின் ஒன்றான பிரிஸ்டல் வீதி இன்றுமுதல் மக்களின் பாவனைக்காக முற்றாக திறந்து விடப்படவுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தவீதி கடந்த 24வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே பாவனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இரவுநேரத்தில் அது முற்றாக மூடப்பட்டிருந்தது. கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தவீதி, கடந்த 1986ம் ஆண்டு சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

அம்பாந்தோட்டையின் தங்காலை நகரில் ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து ஜே.வி.பி இன்று எதிர்ப்பு நடவடிக்கை


அம்பாந்தோட்டையின் தங்காலை நகரில் ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து ஜே.வி.பி இன்று எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது. இதன்போது எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலீசாருக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் பொலீஸ் அதிகாரிகள் மூவர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஆறுபேரைக் கைதுசெய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் நகரில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால் வீதியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்காத நிலையில் முறுகல்நிலை ஏற்பட்டதாகவும், இந்த நிலைமையில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பொலீசாரின் உத்தரவை மீறி செயற்பட்டதால் அவர்கள்மீது தடியடிப் பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு

 

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாத்தறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவே வெற்றிபெற்றார் என்றால் ஏன் பொதுத் தேர்தலில் மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது தர்க்கத்திற்குரிய விடயமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்குள்ளிருந்து மூன்று கைக்குண்டுக

அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்குள்ளிருந்து மூன்று கைக்குண்டுகள் பொலீசாரினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட புலிச் சந்தேகநபர்கள் இருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த வீரக்கொடி தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்தே இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...