5 நவம்பர், 2010

வீதியோர விளக்குகளில் சி.எப்.எல் மின்குமிழ்கள் பொருத்தும் திட்டம்

வீதியோர விளக்குகளில் உள்ள மின்குமிழ்களை மாற்றி சி.எப்.எல் மின்குமிழ் பொருத்தப்படும் என இலங்கை மின்சாரசபை தலைவர் வித்யா அமரபால தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பொதுமக்களுக்கு பயன்தரத்தக்க வகையில் புதிய வகை மின்குமிழ்கள் பொருத்தப்படும். முன்னர் பாவனையில் இருந்த விளக்குகளால் மின்சாரசபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை நிவர்த்தி செய்யும்முகமாக புதிய வகை மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் அதிகளவு மக்கள் செறிந்து வாழக்கூடிய கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களில் வீதியோர விளக்குகளில் மின்குமிழ்கள் மாற்றப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆசிரியர்களை இடமாற்றும் அதிகாரம் கல்விப் பணிப்பாளர்களுக்கு இல்லை

தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை மற்றும் மாகாணப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று இதுதொடர்பாக வெளியாகியுள்ள சுற்றறிக்கைக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சின் செயலாளர் மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை மாகாணப் பாடசாலைகளுக்கும், மாகாண பாடசாலை ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம் செய்துள்ளனர். இந்தவிடயம் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறான இடமாற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அவற்றை இரத்துச் செய்ய வேண்டும். டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஆசிரியர் இடமாற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

அதேவேளை நாட்டின் 326 தேசிய பாடசாலைகளின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய கல்வி அமைச்சின் 20 கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

‘கருணா, பிள்ளையான், கே.பி. மூலம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு அரசாங்கம் குறி'

கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி. ஆகியோரை முறையாக நிர்வகித்து அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு குறிவைத்துள்ளது. குறிப்பாக, கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் குறித்தும் சொத்து விபரங்கள் தொடர்பிலும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு அரசாங்கம் கூடுதலாக சுதந்திரம் கொடுத்துள்ளது. அல்லது விசாரணைகளை நடத்த வில்லை என எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில் :

கடந்த யுத்த காலப்பகுதியில் பங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு அழிவுகளை ஏற்படுத்திய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கும் தற்போது பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள குமரன் பத்மநாதனுக்கும் எல்லாவிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் பதவிகளை கொடுத்து கௌரவித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக உண்மை நிலையை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். கருணாவும் பிள்ளையானும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து பிரபாகரனையும் அவரது ஆயுதப்போராட்டத்தையும் அழிக்க உதவி செய்தார்கள். அதேபோன்று இலங்கை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட புலிகளால் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் தற்போது சர்வதேசத்தில் மறைந்துக் கொண்டுள்ள புலிகளை வேட்டையாடும் நடவடிக்கைக்கு அரசாங்கத்திற்கு உதவுகின்றார்.

இவ்வாறு அரசாங்கம் நாட்டை எதிர்கால அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து திட்டமிட்டமுறையில் முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை பயன்படுத்தி வருகின்றது. இன்று 11 ஆயிரம் புலி சந்தேக நபர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வு அளித்து வருகின்றது.

1987, 88 களில் ஜே.வி.பியின் போராட்டங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதைப்போல் இவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தனிய தமிழர்களின் 'ஹாட் டு ஹாட்' பயணம்

பிரித்தானிய போர் வீரர்களை நினைவுகூர்ந்தும், தமிழீழ விடுதலைக்காகப் போராடிய வீரர்களை நினைவுகூர்ந்தும் பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஹாட் டு ஹாட் வோக்'(ஏஉஅதப 2 ஏஉஅதப ரஅகஓ) நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

கடந்த செவ்வாயன்று பேர்மிங்காம் விக்ரோறியா ஸ்குயாரில் ஆரம்பமான இந்த நடைபயணம் நேற்று 53 மைல்களைத் (85 கிலோ மீற்றர்கள்) தாண்டி மில்ரன் கெயின்ஸ் எனும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 10:30 க்கு பேர்மிங்காமில் இருந்து ஆரம்பமான நடைபயணம் மாலை 6:30 மணிக்கு கவன்றியில் வோர் மெமோறியல் பார்க்கை சென்றடைந்திருந்தது. அங்கிருந்து நேற்றுக் காலை 9:00 மணிக்கு போர்வீரர்களை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தி அங்கிருந்தவர்கள் மத்தியில் இந்த நடைபயணம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது.

இரண்டாம் நாள் ஆரம்ப நிகழ்வில் இச்சுடீடூசிஙுஞி ஈடீஙீசீசிஞி ஙஹஞிச்ஙு ஓடுடீஙுஹடூ ஙசீங்கீஹங்ங் கலந்துகொண்டு நடைபயணம் மேற்கொள்பவர்களை வாழ்த்தினார்.

கவன்றியில் இருந்து சரியாக காலை 9:30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் நாள் நடைபயணம் 19.6 மைல்களை (32 கிலோ மீற்றர்) கடந்து மாலை 6:10 க்கு டவன்றி எனும் இடத்தை சென்றடைந்தது.

அங்கு இவர்களை வரவேற்க அப்பகுதியைச் சேர்ந்த தடீசு. ஒஹஞி டகீடீங்ஙீஙூ மற்றும் தமிழ் மக்கள் பலரும் காத்திருந்து வரவேற்றனர். தடீசு. ஒஹஞி டகீடீங்ஙீஙூ தனது வீட்டிலேயே நடைபயணம் மேற்கொண்ட ஐவருக்கும் தங்குமிட வசதியும் இராபோசனமும் வழங்கிக் கெளரவித்தார்.

நேற்றுக் காலை அங்கிருந்து டவன்றி வோர் மெமோறியல் வரை சென்று அங்கு போர்வீரர்களை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தி தமது மூன்றாம் நாள் நடைபயணத்தை ஆரம்பித்தனர். 9:00 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபயணம் பி.ப 1:00 மணிக்கு 12 மைல்களை (19 கிலோ மீற்றர்) தாண்டி மில்ரங்கெயின்ஸ் எனும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கடந்த மூன்று நாட்களாக தொடரும் இந்த நடைபயணத்தில் ஜோகணேஸ், நிமலன், மொறிஸ், ஸ்ரீரஞ்சன் ஆகியோர் தொடர்ந்து நடந்து வருகின்றனர். இவர்களுடன் நேற்று சுதா, நிக்சன், வசி ஆகியோர் இணைந்த் கொண்டனர்.

நேற்றைய நடைபயணத்தில் மில்ரங்கெயின்ஸ் எனும் இடத்தை சென்றடைந்த நடைபயணமானது இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு லூட்டனை சென்றடையவுள்ளது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் 117 மைகள் (188 கிலோ மீற்றர்) கடந்து லண்டன் வெஸ்மினிஸ்டர் பகுதியைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்கும் புதியதோர் யுகம் ஆரம்பம் ஜனாதிபதியின் தீபாவளிச் செய்தி





மக்கள் எதிர்நோக்கி வந்த எல்லா கஷ்டங்களும் மறைந்து அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான புதியதோர் யுகத்தின் ஆரம்பத்தில் எமது நாடு தற்போது இருக்கிறது. நாட்டில் சமாதானம் மீளக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் தீபாவளியை சுதந்திரமாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதற்கும் அந்த மகிழ்ச்சியை ஏனைய சமூகங்களுடன் பகிர்ந்து கொண்டு நாட்டில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள தாவது, தீபத்திருநாளாம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இலங்கை வாழ் அனைத்து இந்து மக்களுக்கும் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தீபாவளிப் பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடமையையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றி கொள்வதை குறித்து நிற்கின்றது.

உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து சமயத்தின் உயர்ந்த ஆண்மீகப் பெருமானங்களுக்கேற்ப ஒரு சிறந்த வாழ்க்கைக்காக மனிதர்கள் மேற்கொண்ட ஒரு உறுதியான போராட்டத்தின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது என்ற வகையில் மக்களின் ஆன்மீக சுபீட்சத்திற்கான ஒரு கொண்டாட்டமே தீபாவளிப் பண்டிகையாகும்.

நாட்டில் சமாதானம் மீளக்கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இச் சூழ்நிலையில், இந்து மக்கள் இத்திருநாளை சுதந்திரமாகவும் இனம், மதம் மற்றும் ஏனைய எல்லா வேறுபாடுகளையும் மறந்து சமூகங்கள் மத்தியில் அன்பையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வளர்க்கும் ஐக்கிய உணர்வுடனும் கொண்டாடுவதற்கான சூழல் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

எமது மக்கள் பயங்கரவாதத்தின் காரணமாக எதிர்நோக்கிவந்த எல்லா கஷ்டங்களும் மறைந்து அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற் குமான புதியதோர் யுகத்தின் ஆரம்பத்தில் எமது நாடு தற்போது இருக்கின்றது. இந்து மக்கள் தற்போது உலகெங்கிலுமுள்ள தங்களது சகோதர இந்து மக்களுடன் சேர்ந்து இத்தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கும் அந்த மகிழ்ச்சி யுணர்வை ஏனைய சமூகங்களுடனும் பகிர்ந்துகொண்டு நாட்டில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கேற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இத் தீபாவளித் திருநாள் கொண்வரும் சமாதான மற்றும் நல்லெண்ண ஒளி எமது மக்கள் வாழ்வில் அறியாமை இருளகற்றி மகிழ்ச்சிக்கும் சந்தோசத்திற்கும் வழிவகுக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சிகரமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 6 மாதத்தினுள் மீள்குடியேற்றம் மன்னார் செயலகம்

வட பகுதியில் இருந்த புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை 6 மாதகாலத்தி னுள் மீள் குடியேற்றும் வகையில் முஸ்லிம்களுக்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள தாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய;

நவம்பர் முதலாம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு இந்த செயலகம் மன்னார் முசலி பிரதேசத்தில் இயங்கும். இதனூடாக 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட புத்தளம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாழும் வடபகுதி முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் பேர் 48 மணி நேரத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அமைதி நிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்தனர் நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார்





பொதுமக்களுக்காக அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்திய போதிலும், அதில் மக்களோடு மக்களாக புலிகள் இயக்கத்தினரும் இரண்டறக் கலந்திருந்தார்களென்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரச அதிபருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

புலிகள் மக்களை வெளியேற இடமளிக்கவில்லை என்றும் மீறித் தப்பிச் செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்களென்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (04) சாட்சியம் அளித்த போது திருமதி சுகுமார் குறிப்பிட்டார்.

புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்திருந்தார்களென்று கூறிய யாழ். அரச அதிபர் அதனையும் மீறி மக்கள் வெள்ளைக் கொடி ஏந்தியவாறு இராணுவத்தினரின் பகுதிக்குத் தப்பி வந்தார்களென்றும் குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடியுடன் தப்பி வந்த மக்கள் எவரையும் இராணுவம் சுடவில்லையென்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ‘வெள்ளைக் கொடியுடன் இராணுவத் தினரிடம் தப்பி வந்த அனைவரும் இன்னமும் உயிருடன் வாழ்கிறார்கள்.

வேண்டுமானால் அவர்களுள் சிலரை ஆணைக்குழு முன்னிலையில் கொண்டு வந்து சாட்சியமளிக்கவும் இயலும். நான் எப்போதும் மக்களுடன் வாழ்கிறேன். அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்கிறேன். மக்கள் எவராவது அவ்வாறு வெள்ளைக் கொடியுடன் வந்து இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு – 7 ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் நேற்று நடந்த ஆணைக்குழு விசாரணையில் சாட்சியம் அளித்த அரச அதிபர் இமெல்டா சுகுமார்,

ஜனவரி 19 ஆம் திகதி (2009) இராணுவக் கட்டளையிடும் அதிகாரியிடமிருந்து எனக்கோர் அறிவிப்பு தொலைநகல் மூலம் வந்தது. அதில், வள்ளிபுனம் பகுதியில் மக்களுக்குப் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்துமாறு வரைபடத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் அறிவிப்புச் செய்தேன். ஆனால், மக்கள் எங்கு செல்கிறார்களோ அங்கே புலிகளும் செல்வார்கள்.

நாம் புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்த பொழுது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா (நெடுங்கேணி), கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,50,000 பொதுமக்கள் அங்கு இருந்தார்கள். இறுதிவரை மக்கள் நம்பிக்கையுடன் தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்தார்கள். புதுக்குடியிருப்பில் தற்காலிக அலுவலகத்தில் நான் இயங்கிய பொழுது எம்மை வெளியேறுமாறு இராணுவம் கேட்டுக்கொண்டது.

ஜனவரி 22ஆம் திகதி காலை 10 மணி முதல் பிற்பகல் இரண்டு மணிவரை போர் நிறுத்தம் செய்து நாம் வெளியேற அவகாசம் வழங்கினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் நான் அங்கிருந்து ஒட்டுசுட்டானுக்கு இடம்பெயர்ந்தேன். ஆனால் எனது உத்தியோகத்தர்கள் பலர் மக்களுடன் அங்கேயே தங்கிவிட்டார்கள். அவர்களைப் புலிகள் அனுமதிக்கவில்லை.

அவரின் சாட்சியம் நிறைவடைந்ததும் ஆணைக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் அரச அதிபரிடம் கேள்விகளைத் தொடுத்தனர். அதற்குப் பதில் அளித்த அவர், இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அரச நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்ததாகவும் ஆனால், அதில் 80% மட்டுமே மக்களைச் சென்றடைந்ததாகவும் 20% உணவைப் புலிகள் எடுத்திருக்கலாமென்றும் கூறினார்.

புலிகளின் துப்பாக்கிச் சூட்டினால் 5, 6 கிராம சேவை உத்தியோகத்தர்களும் தமது உத்தியோகத்தர்கள் சிலரும் கொல்லப்பட்டதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். இறுதி நம்பிக்கையுடன் மக்கள் கொண்டு சென்ற இலட்சக்கணக்கான வாகனங்கள் பல கிலோமீற்றர் தூரத்திற்கு எரியுண்டு கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல ஒளி பிறக்கட்டும் பிரதமர் டி. எம். ஜயரட்ன

உலக வாழ் இந்துக்கள் அனை வரும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் எமது நாட்டிலுள்ள அனைத்து இந்து மக்களும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் தீபத் திருநாளை கொண்டாட கிடைத்துள்ளமை யையிட்டும் அவர்களோடு அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவும் கிடைத்துள்ளமையை யிட்டும் நான் பெருமைப்படுகிறேன் என பிரதமர் டி. எம். ஜயரட்ன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட் டுள்ளார்.

அதர்மத்தை வென்று தருமம் நிலைநாட்டப்பட்டதை குறிப்பதே தீபாவளியின் பிரதான கருத்தாகும். மக்களை துன்புறுத்தி வந்த நரகா சுரனை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வதம்செய்து மக்களுக்கு விமோச னத்தை பெற்றுக் கொடுத்தார்.

இதனை உலக இந்து மக்கள் அனைவரும் மிகவும் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் நினைவு கூருவதுடன் கொண்டாடியும் வருகின்றனர். இலங்கையில் இன்று சுதந்திரமாகவும் நிம்மதியாகவும், இத் தீபத் திருநாளை கொண்டாடுகின்ற மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

மலையக மக்களின் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்

இருள் சூழ்ந்த மக்களை ஒளிக்கு கொண்டு வந்து அவர்களின் உள்ளங்களில் இருள் நீங்கி ஒளியை பிரகாசிக்கச் செய்த இந்த தீபாவளி திருநாளை நாம் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.

பெருந்தோட்ட மக்களுக்கு எதிர்பார்க்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களும், அவர்களது அபிலாசைகளும் நிறைவேற்றப்படும் என்ற பெரிதான நம்பிக்கை எமக்குண்டு என இ. தொ. கா. பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்ச ருமான ஆறுமுகன் தொண்டமான் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- மலையக மக்களின் வாழ்வுக்கும், வாழ்க்கைத்தர உயர்வுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும், ஆக்கபூர்வமான திட்டங்களை இ. தொ. கா. வகுத்துள்ளது.

தூரநோக்கோடு மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், இந்த ஆண்டு இறுதியில் நல்ல பலன் களை அளித்துவிடும் என்று நாம் நம்புகின்றோம் என தனது செய்தியில் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சரணடைந்த முன்னாள் புலிகள்: 14 மில்லியன் டொலர் செலவில் புனர்வாழ்வு வழங்கும் திட்டம்






சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் 14 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 2011 முதல் 2013 வரை செயற்படுத்தப்படும்

ஐ. நா. அபிவிருத்தித் திட்டம் இதற்கு உதவவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர். டி. யு. குணசேகர சமர்ப்பித்திருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 5ஆயிரம் பேர் வரை புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களை புனர்வாழ்வளித்து சமூக மயப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் புதிதாக புனர்வாழ்வு நிலையங்களை அமைக்கவும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகமயப் படுத்தப்பட முன் கல்வி, தொழிற் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்திற்கு நிதிஉதவி வழங்க ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் முன்வந் துள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட திட்டங்களை முன்னெடுக்கும் அதிகாரம் புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சிற்கு வழங்கப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...