4 செப்டம்பர், 2010

கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தமிழறிஞர் சிவதம்பி எதிர்ப்பு; சென்னையில் நடத்த கோரிக்கை

சர்வதேகொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு    தமிழறிஞர் சிவதம்பி எதிர்ப்பு;    சென்னையில் நடத்த கோரிக்கைச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கை தமிழர் முருகபூபதி என்பவர் இந்த எழுத்தாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அவருக்கு சிவதம்பி விடுத்துள்ள வேண்டுகோளில் உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. அது மாநாட்டை பிரச்சினைக்குரியதாக்கிவிடும் என்று சிவதம்பி கூறியுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்து வதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும். எல்லோரும் ஒன்று கூட வசதியாக இருக்கும். பிரச்சினைகளை சுதந்திரமாக விவாதிக்கலாம் என்று சிவதம்பி மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது போர் குற்றங்களை மூடி மறைக்க நடக்கும் முயற்சியாக அமைந்து விடும் என்று கூறியிருந்தனர். எனவே மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் நாங்கள் மாநாட்டை புறக்கணிப்போம் என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

ஏற்கனவே தமிழ் நாட்டு கலைஞர்கள் இலங்கையில் அரசு ஆதரவுடன் நடைபெறும் எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிப்போம் என்று அறிவித்து இருந்தனர். தனிப்பட்ட முறையில் நடத்தும் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பினால் இலங்கை சென்று கலந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் இலங்கை தமிழ் பத்திரிகையான வீரகேசரியின் 80-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்றுள்ளார். அவர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, பகுதியில் உள்ள திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு:ஐதேக உறுப்பினர் சாகும் வரை உண்ணாவிரதம்?

அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 8ஆம் திகதி அரசாங்கத்தினால் 18ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த நாளில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற முன்றலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது.

திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நீண்ட காலம் வாழ்ந்த சீனர் 80 பேருக்கு இலங்கைக் குடியுரிமை

இலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்த சீனப் பிரஜைகள் 80 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் யூ.வி.நிஸ்ஸங்க தெரிவித்தார்.



2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் அடிப்படையில் மேற்படி 80 பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரியைக் குறைக்க அரசு தீர்மானம்

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் முகமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டில் நுவரெலியா, வெலிமடை மற்றும் வடபகுதியிலிருந்து உருளைக்கிழங்குகள் சந்தைக்கு வருகின்றன.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளுக்கு ஏற்கனவே அறவிடப்பட்ட 30 ரூபா வரி அதிகரிப்பு, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மட்டுமே அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

மேற்படி வரி அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்பானது, உள்நாட்டு உருளைக்கிழங்குகளின் அறுவடைகள் சந்தைக்கு வரும் வரை மட்டுமே காணப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : டக்ளஸ்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டமூலம் சகல அதிகாரங்களுடனும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக முன்னணி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற 'கற்றுக் கொண்ட பாடங்களும் அனுபவங்களும்' தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்,

"இலங்கை - இந்திய ஒப்பந்தமானது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சிறந்த வாய்ப்பைத் தமிழ் சமூகத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம், உருவானபோது புலிகளின் தலைமை அதனைத் தட்டிக்கழித்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றிருந்தால் இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டு இருக்க மாட்டா. அதேவேளை பிரபாகரன் மீது மட்டும் பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தமிழ் தலைமைகள் தப்பிவிடமுடியாது.

இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த விடயத்தில் எமது கட்சி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனினும் உடன்படிக்கை கையில் எடுத்துக் கொண்டு துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கவலையடைகின்றோம்.

ஆரம்ப காலத்தில் ஆயுதமேந்திய தலைவர்களில் நானும் ஒருவன். அப்போதைய தவிர்க்க முடியாத காரணத்தினால் அது நடந்தது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அனைத்துப் பல்கலை. ஊழியர்களும் ராஜினாமா செய்யத் தீர்மானம் : பேரா. சம்பத்

பல்கலைக்கழகங்களில் தொண்டர் அடிப்படையில் சம்பளமின்றி சேவையாற்றும் ஊழியர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும், தமது சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களது பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடைநிறுத்தப்பட்டது.

இது குறித்துப் பேராசிரியர் சம்பத் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பளமின்றி தொண்டர் அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களான பல்கலைக்கழக நிர்வாக குழுவினர், சுகாதார நிர்வாகத்தினர், பாதுகாவலர் மற்றும் ஆலோசனைக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து ராஜினாமா கடிதங்களை எதிர்வரும் 6 ஆம் திகதி சேகரிக்கவுள்ளோம்.

ஆகவே அரசிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம்.

கடந்த புதன்கிழமை அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆர்ப்பாட்டம் இடைநிறுத்தப்பட்டது. நாம் சாதாரண தொழிற்சங்க உறுப்பினர்கள் போன்றவர்களல்லர்.

கல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அதனாலேயே எமது கோரிக்கைகளுக்குத் தீர்வைப் பெற்று தர நீண்டகால அவகாசத்தை அரசுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை வளர்ச்சிப் பணியில் இந்திய மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு


இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்த மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.

÷இத்தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடு கட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இந்தியா மேற்கொள்கிறது.

÷முன்னதாக நான்கு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் வியாழக்கிழமை தில்லி திரும்பினார். நாடு திரும்பும் முன்னர் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணிக்கவும், முறையாக நடைமுறைப்படுத்தவும் மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இந்தக் குழு விரைவில் அமைக்கப்படுமென இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

÷இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், ரயில் பாதைகள், அனல் மின்நிலையம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை இந்தியா மேற்கொள்ள இருக்கிறது. இப்பணிகள் அனைத்தையும் மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு கண்காணிக்கும்.

÷நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலும் இதுபோன்ற ஒரு குழுவை இந்தியா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வங்கிக் கடன்களை மீளச் செலுத்துவதில் வட பகுதி மக்கள் எப்போதும் மிகுந்த ஆர்வம் அமைச்சர் டியூ கூறுகிறார்


வங்கிக் கடன்களை பெறும் வட பகுதி மக்கள் அதனை திருப்பிச் செலுத்துவதிலும் 100 வீதம் அக்கறை காட்டுபவர்கள் என அமைச்சர் டியூ.

குணசேக்கர தெரிவித்தார். கடந்த காலங்களில் பல்வேறு தேவைகளுக்காக வங்கிக் கடன்களை பெற்றுள்ள வட பகுதி மக்கள் அதனை 100 வீதம் திருப்பிச் செலுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.

மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளில் நடத்தப்பட்ட நடமாடும் சேவைகளின் போது சுமார் 9000 பேரளவில் கலந்து கொண்டனர். இவர்களுள் 34 பேர் மட்டுமே ஆண்கள் இருந்தனர் என்றும் மிகவும் வேதனையுடன் அமைச்சர் டியூ. தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவையினூடாக பெறப் பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே தாரமிழந்த, குடும்பத் தலைவனை இழந்த, கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு சுயதொழில் முயற்சிகளினூடாக வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே நிவாரணக் கடன் திட்டம் உருவானது என்றும் கூறினார்.

இலங்கை வங்கியினூடாக புனர்வாழ்வு அதிகார சபையின் உதவியுடன் நிவாரணக் கடன் வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது.

இலங்கை வங்கியின் தலைமை அலு வலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. இச் சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் டியூ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை வங்கியின் சார்பில் தலைமை அலுவலகத்தின் பிரதி பொது முகாமையாளர் களான சீ. சமரசிங்க, ஐ. டி. வீரசேன ஆகியோரும் புனர்வாழ்வு அதிகார சபையின் சார்பில் அதிகார சபையின் தலை வர் ஈ. ஏ. சமரசிங்க, பிரதி பணிப்பாளர்களான கே. எம். ஏ. விஜேபால, எஸ். எம். பதூர்தீன் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.

இதனையடுத்து இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்கவும், அமைச்சர் டியூ. குணசேக்கரவும் ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பிரதி நிதி அமைச்சர் சந்திரசிறி கஜதீரவும் கலந்து கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தம், வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு வீடமைப்பு, சுயதொழிலில் நிவாரணக் கடன்




15ம் திகதி முதல் அமுல்; இலங்கை வங்கியில் 4 வீத வட்டி
10 வருடங்களில் திரும்பிச் செலுத்த வேண்டும்
வருட கடன் நிவாரணம்
வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 கடன்



வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த நிலைமை காரணமாகவும் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாகவும் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதை பிரதான நோக்காகக் கொண்டு நான்கு வீத வட்டிக்கு வீடமைப்பு, சுயதொழில் கடன் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளனது.

இலங்கை புனர்வாழ்வு அதிகார சபையும், இலங்கை வங்கியும் இணைந்து இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.

10 வருடங்களில் திரும்பிச் செலுத்தும் விதத்தில் 4 வீத ஆகக் குறைந்த வட்டியில் ஒரு வருட கடன் நிவாரண திட்டத்தின் கீழ் வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது. சுயதொழில் முயற்சிகளுக்கென இதே வட்டி வீதத்தில் ஒரு வருட கடன் நிவாரணத்தில் மூன்று வருடத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கடன் வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி தமது கிளை அலுவலகங்கள் ஊடாக ஆரம்பிக்கிறது.

குறிப்பாக யுத்தத்தினால் அழிவுற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் வவுனியாவில் இலங்கை வங்கி தனியான அலுவலக மொன்றை திறக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த அலுவலகம் திறக்கப்பட வுள்ளதுடன் புனர்வாழ்வு அதிகார சபையின் அலுவலர்களும் இங்கு கடமையாற்றவுள்ளனர்.

கடன் பெற தகுதியுடையவர் பிரதேச செயலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று தேவையான தகவல்களை நிரப் பிய பின்னர் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும். கிராம சேவகர் பிரதேச செயலாளரின் சான்றுடன் புனர்வாழ்வு அதிகார சபையிடமும் அதன் பின்னர் இலங்கை வங்கியிடமும் படிவம் இறுதி முடிவுக்காக அனுப்பப்படும்.

யுத்த நிலைமைகள் காரணமாக பாதிப் படைந்த பெற்ற கடனை மீளச் செலுத்த முடியுமான குடும்பங்களுக்காக வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த குடும்பங்கள் மற்றும் யுத்த நிலைமைகள் காரணமாக குடும்பத்தின் வருமானம் உழைப்பவர் இறந்து, காணாமல் போன வரின், ஊனமுற்ற நிலைமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட குடும்பங்கள் அல்லது விதவையாக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் ஆரம்பிப்பதற்கும் கடன் வழங்கப்படவுள்ளது.

விவசாய கைத்தொழில், மின்பிடி தொழில், கால்நடை வளர்த்தல், வீட்டுடன் தொடர்புடைய பொருட்கள் சம்பந்தமான சுயதொழில், சிறிய அளவிலான வியாபார நடவடிக்கை மற்றும் வேறு சுயதொழில் முயற்சிகளுக்கும் இந்த நிவாரணக் கடன் வழங்கப்படும்.

தகுதி பெற்ற கடன் விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் முறை பிரதேச செய லாளர்களின் நடுநிலைமையுடன் புனர்வாழ்வு அதிகார சபை முலம் நடைமுறைப்படுத் தப்படும்.

எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதோடு அது தொடர்பாக சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர் மற்றும் இலங்கை வங்கி கிளை முகாமையாளர்களை அறி வுறுத்துவதற்கான உரிய சுற்றறிக்கை அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

புனர்வாழ்வு அதிகார சபை மற்றும் இலங்கை வங்கியின் அதிகாரிகள் அடுத்த வாரம் வட பகுதியில் கிராமப்புறங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கிராமப்புற மக்களுக்கு இக்கடன் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களும் வழங்கப் படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

உலகம் எதிர்கொள்ளும் உணவு நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கத் தயார் ஊவா மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி





விரைவில் உலகம் எதிர்கொள் ளும் உணவு நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கத் தயாராக வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இது தொடர்பில் உள்நாட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்த ஜனாதிபதி உணவு உற்பத்தித்துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார்.

ஊவா மாகாண அபிவிருத்திச் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பதுளையிலு ள்ள மாகாண சபைக் கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட மாகாண சபை அமைச் சர்கள், அரசாங்க அதிகாரிகள் பெருமளவில் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் விவசாயிகளுக்கு பல்வேறு ஊக்குவிப்புகளை வழங்கி வருவதுடன் விவசாயத்துறையை மேம்படுத்தும் பல் வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. விவசாயத்திற்கு நீர்ப்பாசனத் திட்டங்களின் அவசியத்தைக் கருத்திற் கொண்டு குளங்கள், வாவிகள் உள்ளிட்ட நீர்ப்பாசனத்துறையை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஊவா மாகாணத்தில் பல்வேறு நீர்ப் பாசனக் குளங்கள் புனரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் பல வருடங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப் படைந்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டம் பாரிய அபிவிருத்திக்குட்பட்டு வருவதால் அதன் பயன்களை அனுபவிக்கும் வகையில் பதுளை, மொனராகலை மாவட்டங்களும் தயாராக வேண்டும். சேவைகளையும் பொருட்களையும் வழங்கும் கேந்திரமாக இம்மாவட்டங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

ஊவா மாகாணத்தில் மாலிகாவில உட்பட பல நீர்ப்பாசனத் திட்டங்கள் பல வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை இதுவரை நிறைவுறா மலேயே தடைப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகளின் தேவைக்குப் பெற்றுக் கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தள ஹுனாவடுவ நீர்ப்பாசனத் திட்டம் ஒக்கம்பிட்டிய திட்டம் ஆகியன புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் 35,000 ஏக்கர் வயல் நிலங்கள் பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலையில் உள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இம்மாகாணத்தில் நெல் களஞ்சிய சாலைகளின் தேவைகள் உள்ளபோதும் பல களஞ்சியசாலைகள் வருடக்கணக்கில் மூடப்பட்டுக் கிடக்கின்றன. வெஹரகொட, உலந்தாவ, கடுகாகந்த நெல்களஞ்சிய சாலைகளும் இதில் அடங்குகின்றன. இவற்றைப் புனரமைத்து இயங்கச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக நாடுகளில் விரைவில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படவுள்ளது. அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் தமது கோதுமை ஏற்றுமதியை நிறுத்தி யுள்ளன. ஏனைய சர்வதேச நாடுகள் உணவு நெருக்கடியை சமாளிக்க பல்வேறு செயற்றிட்டங்களை இப்போதே ஆரம்பித் துள்ளன. இது விடயத்தில் எமது விவ சாயிகளுக்குத் தெளிவுபடுத்துவது அவசிய மாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் நிலவும் சட்டப்பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர். இதுபற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி மக்கள் நலனுக்காகவே சட்டங்கள் உள்ளன என குறிப்பிட்டதுடன் மக்கள் சேவைக்காக அரச அதிகாரிகள் நம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஐ.தே.க எம்.பிக்கள் ஆதரவு


உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐ.தே.க. எம்.பி.களான லக்ஷ்மன் செனவிரத்ன, ஏர்ல் குணசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்று அறிவித்தனர்.

ஐ.தே.க.வின் பதுளை மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ன, பொலனறுவ மாவட்ட எம்.பி. ஏர்ல் குணசேகர, காலி மாவட்ட எம்.பி. மனுஷ நாணயக்கார ஆகியோரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் நிலையில் கட்சி உறுப்பினர்கள் எடுத்திருக்கின்ற இந்த முடிவு கட்சித் தலைமையின் மீதுள்ள அதிருப்தியை வெளிக்காட்டுவதாகத் தெரிகிறது.

இதேவேளை மேலும் பல ஐ.தே.க. எம்.பிகள் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார்.

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பின் போது பல ஐ.தே.க. எம்.பிகள் ஆதரவாக வாக்களிப்பர் எனவும் அவர் கூறினார்.

மூன்று ஐ.தே.க. எம்.பிகள் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முன் வந்திருப்பது குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மூன்று ஐ.தே.க. எம்.பிகள் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதன் மூலம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் 157ஆக அதிகரித்துள்ளது.

சபாநாயகர் தவிர்த்து ஆளும் தரப்பிற்கு 143 ஆசனங்கள் உள்ளன. ஐ.தே.க. எம்.பிகளான பி.திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்துள்ளதோடு ஏ.ஆர்.எம்.ஏ. காதர் எம்.பி. அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறார். அதேநேரம் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க 8 முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிகள் முன்வந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கருத்துக் கூறிய அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளுக்கு நாள் அரசிற்கான ஐ.தே.க. எம்.பிகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை விட கூடுதலாக ஆதரவு கிடைத்துள்ளது என்றார்.

யாப்புத் திருத்தத்திற்கு எதிராக ஜே.வி.பி. துண்டுப் பிரசுரம் விநியோகித்து எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இதனை எதிர்க்க அவர்களுக்கு ஜனநாயக ரீதியான உரிமை உள்ளது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. அதற்குத்தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது என்றார். ஏர்ல் குணசேகர எம்.பி.யின் வீட்டில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.க. பிரதிச் செயலாளர் லக்ஷ்மன் செனவிரத்ன கூறியதாவது, யாப்புத் திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஐ.தே.க. எம்.பிகளுடன் பேசி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முயற்சி செய்வோம். இதற்கு எதிராக வாக்களிக்க ஐ.தே.க. முடிவு செய்தால் எமது முடிவை 8ம் திகதி வெளியிடுவோம். யாப்புத் திருத் தத்திற்கு ஆதரவு வழங்குவதால் ஐ.தே.க.வுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது.

சிரேஷ்ட ஐ.தே.க. எம்.பி ஏர்ல் குணசேகர கூறியதாவது, அரசாங்கத்துடன் இணைய உள்ளோமா இல்லையா என்பது தற்பொழுது பிரச்சினையல்ல. மனச்சாட்சிக்கு விரோதமாக எமக்கு முடிவு எடுக்க முடியாது. அதனால், நாம் இந்த யாப்புத் திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளோம்.

இது குறித்து பேசுவதற்கு ஐ.தே.க. தலைவரிடம் நேரம் ஒதுக்கித்தரக் கேட்டேன். ஆனால், தான் இந்தியாவுக்கு செல்ல உள்ளதாகவும் திங்கட்கிழமை நாடு திரும்பியதும் நேரம் ஒதுக்குவதாக கூறினார்.

தனித்தனியாக இதற்கு ஆதரவு வழங்காது கட்சி என்ற ரீதியில் ஆதரவு அளிக்கவே முயற்சி செய்கிறோம்.

அண்மையில் நடந்த ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தின் போது யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என லக்ஷ்மன் செனவிரத்னவும் வஜிர அபேவர்தனவும் பிரேரித்தனர். ஆனால் நாம் ஐ.தே.க. வை பின்பற்றத் தேவையில்லை.

கடந்த காலத்தில் ஐ.தே.க. தலைவர் பல தவறான முடிவுகளை எடுத்தார். யுத்தத்தின் போது அரசுக்கு ஆதரவளிக்காமை போன்ற காரணங்களினாலே கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தென்மாகாண அதிவேக வீதி (பட இணைப்பு)

இலங்கையின் தென்மாகாண அதிவேக வீதி நிர்மாண திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தென்மாகாண அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

தென்மாகாண அதிவேக வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 130.9 கிலோமீற்றர் வீதி அமைக்கும் திட்டத்தில் ஒரு கட்டமாக 126 கிலோ மீற்றர் நீளமுடைய இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் வீதி அமைக்கப்படுகின்றது. இவ் வீதியானது கொழும்பிலிருந்து மாத்தறை வரை நீண்டு செல்கின்றது.

இவ் வீதியானது இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டு அமைக்கப்படுகிறது. வீதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் போது கொழும்பிலிருந்து மாத்தறைக்கான பயணத்தை மிக விரைவில் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதோடு எதிர்காலத்தில் இப்பிரதேசமானது மக்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்த இடமாக காணப்படும் என நம்பப்படுகின்றது.

பல பாதுகாப்புகளை கொண்டு அமைக்கப்படும் இவ் வீதியின் நிர்மாணப்பணிகள் 2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இவ் ஆண்டில் அனைத்துப் பணிகளும் பூர்த்தியடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வீதியின் நிர்மாணத்திற்காக சர்வதேச ஜப்பேன் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதற்கான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.

நான்கு கட்டமாக அமைந்து காணப்படும் இவ் வீதியில் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருப்பதோடு, ஒன்றரை மணிதியாலங்களில் பயணத்தை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

22 பாலங்கள் அமைந்து காணப்படும் இவ் வீதியில் தற்போதைக்கு 3 பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மேலும் இங்கே தொடர்க...

தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும்: நிருபமா ராவ்

இடம்பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியது அவசியம் என இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தின் போது அரசாங்கத்தரப்பினதும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களினதும் பல்வேறு பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது இந்த கருத்தை வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அப்பால் சென்று, நாட்டை தசாப்த காலங்களாக சிவில் முரண்பாடுகளுக்குள் தள்ளி இழுபட்டுச் செல்கின்ற இனவிவகாரங்களுக்கு தீர்வுகாண்பதற்கான அரசியல் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என இன்று மாலை செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது குறிப்பிட்ட நிருபமா ராவ், தனது விஜயத்தின் போது சந்தித்துக் கலந்துரையாடிய அரசாங்கத்தினதும் மக்களதும் பல்வேறு பிரதிநிதிகளிடமும் இது தொடர்பில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட ராவ், அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் அவதானம் செலுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் நீண்ட கால நோக்கில் சிறுபான்மையினரின் சில தேவைகளை மனதில் நிறுத்தி அரசியல் தீர்;வு தொடர்பான விடயங்களையும் உள்வாங்கிச் செயற்படுவது அவசியமானது. எனக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகாரச்செயலாளார் இலங்கை ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அரசியல் தீர்வு தேவை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தொடர்ச்சியாக தெரிவித்தார். இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அவரது பார்வை இவ்விடயத்தில் உள்ளது இவ்விடயத்தில் அவர் மிகுந்த அக்கறையுடனிருக்கின்றார்.

பொருளாதார விடயங்களுக்கு அதிகமானதாகவும் அபிவிருத்தி விடயங்களுக்கு மேலானதாகவும் அப்பால் சென்று அதிகமாக செயற்படவேண்டிய அவசியமுள்ளது. அரசாங்கத்திலுள்ள அனைவரும் நாம் இவ்விடயத்தை எப்படிப்பார்க்கின்றோம் என்பதை உணர்ந்துகொண்டுள்ளனர் இந்தியா இவ்விடயத்தை எவ்வாறு அணுகுகின்றது எங்கனம் நோக்குகின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என நான் கருதுகின்றேன், எனக் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வீ.கே. சிங் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளை இந்திய இராணுவத் தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளின் போது இந்திய இராணுவத் தளபதி பல்வேறு வழிகளில் ஒத்துழைப்புக்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஐந்து உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐந்து இந்திய உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...