20 ஏப்ரல், 2010

நளினி அறையில் திடீர் சோதனை : செல்போன் பறிமுதல்மு‌ன்னா‌ள் இந்தியப் பிரதம‌ர் ராஜீ‌வ் க‌ா‌ந்‌தி படுகொலை வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு வேலூ‌ர் சிறை‌யி‌ல் வைக்கப்பட்டு‌ள்ள ந‌ளி‌னியின் அறை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று ‌திடீ‌ர் சோதனை மே‌ற்கொ‌ண்டன‌ர்.

இ‌ந்தச் சோதனை‌யி‌ன்போது, ந‌ளி‌‌னி வைத்திருந்த கையடக்கத் தொலைபேசி ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக இந்திய செய்திகள் தெ‌ரி‌வி‌‌க்‌‌கி‌ன்றன.

இது கு‌றி‌த்துச் ‌சிறை‌ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணைகள் மே மாதம் 4 ஆம் திகதி ஒத்திவைப்பு

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி புவனக அளுவிகார தமது வாதத்தினை முன் வைத்தார்.

அதேவேளை இரு தரப்பினரதும் வாதங்களை எதிர்வரும் 30ஆந் திகதி எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு, விசாரணைக் குழுவுக்கு தலைமை வகிக்கும் மேஜர் ஜெனரல் எம்.பி.பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்பொன்சேகா சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் : இராணுவத்
இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் ஜெனரல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பொன்சேகா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் விடுக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கச் செய்த பின்னர், மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அவருக்குத் தடையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு வழி சமைக்குமாறு ஜனநாயக தேசியக் கூட்டணி, நாடாளுமன்றப் பதில் செயலாளர் நாயகத்திற்கு அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் இங்கே தொடர்க...

நாடு திரும்ப முடியாது தவிக்கும் நம்மவருக்கு உரிய நிவாரணம்: மவிமு அரசிடம்

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து இலங்கை வருவதற்காக காத்திருக்கும் நம் நாட்டவருக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு இன்று செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டுக்குத் திரும்ப முடியாமல் இலங்கையர்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் தங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் போதியளவு பணவசதி இல்லாதுள்ளமை தொடர்பில் எமக்கு அறியக் கிடைத்தது.

ஏனைய நாடுகளைப் பொருத்தவரை தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கு பல்வேறு வகையிலும் நிவாரணங்களை வழங்கியுள்ளன.எமது நாட்டவருக்கு நிவாரணம் வழங்கப்படாதது ஏன்? இனியும் காலம் தாமதிக்காது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே வலியுறுத்தல்இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது உருவாகியுள்ள சுமுகமான அரசியல் சூழ்நிலை வரவேற்கத்தக்கதென நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜோன்ஸ் கார்டோர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் கடந்தசில மாதங்களாக சிறந்த நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முயற்சிகளுக்கு நோர்வே உதவத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இத்தாலியில் மேலுமிரு இலங்கையர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியின் ஸ்ரெய்பா மற்றும் வெனிஸியா ஆகிய நகரங்களிலேயே இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரெய்பா நகரிலுள்ள ஓய்வுபெற்ற மேயர் ஒருவரது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஒருவரும், வெனிஸியாவில் பணியாற்றிய ஆணொருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் இலங்கையர்கள் இருவரே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளதாகவும், கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலிய செய்திகள் கூறுகின்றன. இதேவேளை இத்தாலியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கையர்கள் கொல்லப்பட்டதும் இதுவிடயமாக சந்தேகத்தின்பேரில் இரு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டதும் தெரிந்ததே.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி கிழக்கிலும் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

மோதல்களின்போது இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை கிளிநொச்சி மேற்கிலேயே குடியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதற்தடவையாக எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியினுள் கிளிநொச்சி கிழக்கிலும் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக அவர் கூறினார். கிளிநொச்சி கிழக்கில் ஒரு மாத காலப்பகுதிக்குள் ஆகக்குறைந்தது 2,900 குடும்பங்களை மீளக் குடியேற்றும் வகையில் அதற்கான ஒழுங்குகளை அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது.

தற்போது அப்பகுதியில் திருவையாறு, கனகாம்பிகை குளம், ரத்தினபுரம் மற்றும் மருத நகர் ஆகிய இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் கிளிநொச்சி கிழக்கைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஒரு வார காலப்பகுயினுள் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவரெனக் கூறிய அரச அதிபர் ஏனைய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் மீள்வாக்குப்பதிவை குழப்ப முயற்சி தேர்தல் ஆணையாளரிடம் ஐ. ம. சு. மு. முறைப்பாடு

தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சியொன்று மீள் வாக்களிப்பின் போது குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டி ருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் ஆணையாளரிடம் 19.4 .2010 முறைப்பாடு செய்துள்ளது.

மீள் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஐ. ம. சு. முன்னணி முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதிநிதிகள் தேர்தல் ஆணையா ளரிடம் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி பிரதிநிதிகள் .19 .04 .2010 காலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவை தேர்தல் திணைக்களத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன, ஐ. ம. சு. மு. செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த், சு. க. சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சு. க. பொருளாளர் டளஸ் அலஹப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர். நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய பகுதிகளிலுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் நடத்தப்பட வுள்ள மீள் வாக்களிப்பு குறித்து இச்சந்திப் பின் போது முக்கியமாக ஆராயப்பட்டது.

அமைதியை நிலை நாட்டுவதற்காக ஜனாதிபதி இராணுவத்தினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்தியுள்ளதோடு தேவையாக உத்தரவுகளையும் வழங்கியுள்ளதாக ஐ. ம. சு. மு. பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்ட ஐ. ம. சு. முன்னணி பிரதி நிதிகள், தேர்தல் சட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றுமாறு கண்டி மாவட்ட ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர் களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஒரு அரசியல் கட்சி, வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வன்முறையை தூண்டிவிட திட்டமிட்டுள்ளதாக ஐ. ம. சு. பிரதிநிதிகள் ஆணையாளருக்கு அறிவித்தனர். தேர்தல் செயலக பிரதிநிதிகளுக்கு இது குறித்து அறிவூட்டி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரினர்.

38 வாக்களிப்பு நிலையங்களில் மீள் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவு தொடர்பில் அந்தப் பிரதேச ஐ. ம. சு. முன்னணி பிரதிநிதிகள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் ஐ. ம. சு. முன்னணி ஆணை யாளரின் முடிவை ஏற்றுக் கொள்கிறது. ஐ. ம. சு. முன்னணிக்குக் கிடைத்த பெரு வெற்றியை இந்த நடவடிக்கை மூலம் பாதுகாக்க முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் புதிய புகலிடக் கோரிக்கைகளை உடன் நிறுத்த அவுஸ்திரேலியா முடிவு

இலங்கையர் மற்றும் ஆப்கானியரிடமி ருந்து வரும் எந்தவிதமான புதிய புகலிடக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைப்பதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் விளைவாக, இந்நாடுகளைச் சேர்ந்த புகலிடம் வேண்டுவோரின் புகலிடக் கோரிக்கைகள் மூன்றுமாத காலத்திற்கோ (இலங்கை) அல்லது ஆறுமாத காலத்திற்கோ (ஆப்கானிஸ்தான்) மதிப்பீடு செய்யப்படப் போவதில்லை. இக்காலகட்டத்துக்குப் பின், நிறுத்திவைப்பானது மறுபரிசீலனை செய்யப்படும்.

ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களுக்கு பணஉதவி செய்பவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலிய அரசு கூடுதல் முயற்சிகள் எடுத்து வருகின்றது.

இந்த நிறுத்திவைப்பானது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் உருவாக்கி வரும் சூழ்நிலைகளின் விழைவாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிறுத்திவைப்பு மற்றும் இவ்விரு நாடுகளில் மாறிடும் சூழ்நிலைகள் ஆகியவைகளின் இணைந்த தாக்கத்தால், எதிர்காலத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானி லிருந்து அதிகமான புகலிடக் கோரிக்கைகள் மறுக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்குமென அவுஸ்திரேலிய அரசு எதிர்பார்க்கின்றது.

ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடிமக்களை மீள்குடியமர்த்தல் மற்றும் அந்தச் சமுதாயத்தினருக்கு மறுவாழ்வு தருதல் போன்ற பெரும்பணியைக் கையாண்டு இலங்கை அடைந்து வரும் முன்னேற்றத்தை அவுஸ்தி ரேலியா அங்கீகரிக்கிறது. மேலும் ஸ்திரமான நிலை ஏற்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்பம். இதன் மூலம் இலங்கையர்கள் அனைவரும் தமது நாட்டில் சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதனை உணர்வர்.

ஆள் கடத்தலை அடியோடி ஒழிக்க இலங்கை அதிகாரிகள் செய்துவரும் பணியோடு இணைந்து, இந்தக் கொள்கை மாற்றமும் ஒரு தெளிவான செய்தியைத் தெரிவிக்கின்றது.

இந்த ஆள் கடத்தல்காரர்களைப் பயன்படுத்துவோர் தங்களின் உயிரையும், பணத்தையும் பணயம் வைக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் வேண்டுகின்ற ஆப்கான் குடிமக்களுக்கும் இந்த மாற்றங்கள் செல்லுபடியாகும். அவர்களில் பலர் இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் வழியாக அவுஸ்திரேலிய நாட்டிற்குள் நுழைகிறார்கள்.

அத்துடன் ஒத்த நடவடிக்கையாக, அவுஸ்திரேலியா அதன் ஆள் கடத்தல் தடுப்புச் சட்டங்களைப் பலப்படுத்தி அவுஸ்திரேலியாவுக்குள் ஆள் கடத்தும் குற்றத்துக்குப் பண உதவி வழங்கு வதோ அல்லது வேறுவித ஆதரவு தெரிவிப்பதோடு சட்டவிரோதச் செயல் என அறிவிக்கும்.

இந்த வட்டாரத்தில் கூட்டு நாடுகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதன் மூலம், ஆள் கடத்தல்காரர்கள் பிடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்படுவார்கள் என்று உறுதியான செய்தியை அனுப்புவதில் அவுஸ்திரேலியா உறுதியாக உள்ளது.

ஆள் கடத்தலைத் தடுப்பதற்கு இருபது வருடங்கள் வரை தண்டனை கொடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...