26 அக்டோபர், 2010

குவாம் தீவுகளில் பிரமாண்ட இராணுவத்தளம் : அமெரிக்கா நிர்மாணம்

ஐக்கிய அமெரிக்கா, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவுகளில் சுமார் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மிகப் பிரமாண்ட இராணுவ தளமொன்றினை அமைத்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி தளமானது ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பு , அணுச்சக்தி விமான தாங்கிகளுக்கான கப்பற்துறை உட்பட அதிநவீன கட்டமைப்புக்களை உள்ளடக்கவுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் இராணுவத் தளமொன்றுக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய முதலீடு இதுவாகும்.

அது மட்டுமல்ல, கடந்த காலங்களில் கடற்படை கட்டுமானங்களுக்கென செலவிடப்படவுள்ள மிகப்பெரிய தொகையும் இதுவாகும்.

எனினும் இந்நடவடிக்கை தமது சாதாரண வாழ்வினை பாதிக்கும் என குவாம் தீவு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் இராணுவ வளர்ச்சிக்குச் சவால்விடும் வகையில் இது அமையவுள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்நடவடிக்கை பசுபிக் பெருங்கடல் பகுதியில் பதற்ற நிலையை மேலும் அதிகரிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஸானாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி மன்னரிடம் ஜனாதிபதி வேண்டுகோள்


சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணான ரிஸானாவுக்கான தண்டனை தொடர்பில் கருணை காட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடித மூலம் கோரியுள்ளார்.

இக்கடிதத்தை இன்று காலை சவூதி அரேபிய மன்னருக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

பணிப்பெண்ணாக சவூதி சென்றார் மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக். இவர் தனது எஜமானரின் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்கும் போது, குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

குழந்தையை ரிஸானா கொலை செய்துவிட்டதாக சம்பந்தப்பட்ட எஜமானர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரணை செய்த, சவூதியிலுள்ள தவாமி மேல் நீதிமன்றம் இவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதனை ரியாத் உயர்நீதிமன்றமும் அங்கீகரித்திருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவுக்கு ஜனாதிபதி ஆட்சேபம்

ஜனாதிபதி தேர்தல் முறைகேடு தொடர்பான ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக் காலத்தை ரத்து செய்யுமாறு தெரிவித்து சரத் பொன்சேகா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், இந்த மனுவை நிராகரிக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றில் ஆட்சேப மனுவொன்றை தமது சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றில் இந்த ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலில் மோசடிகளோ அல்லது முறைகேடுகளோ நடைபெற்றமைக்காக எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது என ஜனாதிபதி தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் சட்ட மூலத்தின் அடிப்படைத் தேவைகளை சரத் பொன்சேகா பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகவும் இதனால் தேர்தலை சூன்யமாக்கி தம்மை ஜனாதிபதியாக அறிவிக்குமாறு சரத் பொன்சேகா கோரியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகிசய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டதாக போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்காஹே உள்ளிட்ட பலர் தேர்தல் தினமன்று அரச ஊடகங்களில் தமக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும் சரத் பொன்சேகா தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததை இந்திய அரசு முதற்தடவையாக ஏற்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதை முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இலங்கை அரசு இதுவரை இறப்புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத்தாட்சியுடன் அனுப்பி வைத்தது. இதனை ஏற்றதாகவோ, மறுப்பதாகவோ இந்திய அரசு தெரிவிக்காமலிருந்தது.

சிபிஐயின் இணையத் தளங்களில், ராஜீவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் பெயர்கள் நீக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், இப்போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில்,

"முதன்மைக் குற்றவாளி வேலுப்பிள்ளை பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அரசுக்கு நஷ்டமில்லை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கை மின்சார சபைக்கோ அரசாங்கத்திற்கோ எந்தவித நஷ்டமுமில்லை. அதன் முழு பொறுப்பையும் சீன ஒப்பந்த நிறுவனமே ஏற்றுள்ளது. அதன் அடிப்படையில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் சகல பணிகளும் அடுத்த வருடம் ஜனவரிக்குள் நிறைவடையும் என்று மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மின்சார சபை இலாபநோக்கத்தை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனமல்ல. அது சேவையினை பிரதானமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனமாகும். ஆகையினால் அதனை நஷ்டத்திற்குள்ளாக்காது முன் கொண்டு செல்வதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மின் சக்தியமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பேக்ஷிதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுரைச்சோலை அனல் மின் நிøலயத்தில் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இதுவரையிலும் சேகரிக்கப்படவில்லை. அது தொடர்பான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எப்படியோ அந்த அனர்த்தத்தினக்ஷில் அரசாங்கத்திற்கோ மின்சார சபைக்கோ எந்த நஷ்டமும் இல்லை. அதாவது அந்த வேலைத் திட்டத்தை பொறுப்பேற்றிருக்கும் சீனக் கம்பனியானது இவ்வாறான அனர்த்தங்களுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுள்ளது. அதாவது அவ்வேலைத் திட்டம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தீ விபத்தை நாம் நியாயப்படுத்தவில்லை. அதனால் எமக்கு சுமையில்லை என்றே கூறுகின்றோம்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் சகல பணிகளும் அடுத்த வருடம் நிறைவு செய்யப்பட்டு தேசிய மின்சார கட்டமைப்பிற்குள் இøண்ககப்படும். அதற்கான பேச்சுவக்ஷிர்த்தைகளை சீன கம்பனியுடன் மேற்கொண்டுள்ளோம்.

சகலருக்கும் மின்சாரம் என்ற வேலைத் திட்டத்தினூடாக மின்சக்தி அமைச்சு நாடளாவிய ரீதியில் 4500 மின்சார வேலைத் திட்டங்களை ஆம்பித்துள்ளது. அதன் மூலம் 2012 ஆம் வருடத்தில் சகலரும் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மின்சார இணைப்பினை வழங்க முடியாத மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக மாற்று வழி முறைகளையும் கையாண்டு வருகின்றோம். அதாவது சூரியசக்தி, காற்றழுத்தம் போன்ற வழி முறைகளே அவையாகும். இவ்வாறான வேலைத் திட்டங்களை அண்மையில் பல கிராமங்களில் ஆரம்பித்து வைத்தோம்.

நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப மின்சக்தி துறையிலும் பல நவீன மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரவுள்ளோம். அதாவது மின்சார கட்டணங்களை எதிர்காலத்தில் பிரிபேட் காட் முறையினையும் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு வேலைத் திட்டத்தையும் சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற் கொண்டே முன்னெடுத்து வருகின்றோம். அதாவது அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரி தொடர்பிலும் கட்டுப்பாடு விதித்துள்ளோம். அங்கு தரமான நிலக்கரியே பயன்படுத்தப்படுகிறது. குறைந்த விலையிலக்ஷின தரம் குறைந்த நிலக்கரிகளை பயன்படுத்தும் போது சுற்றக்ஷிடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அநேகமான நாடுகள் இவ்வாறக்ஷின தரம் குறைந்த நிலக்கரிகளையே பயன்படுத்துகின்றன. ஆனால் நாம் சுற்றாடலை கருத்திற் கொண்டு உயர்ந்த விலையிலக்ஷின தரமான நிலைக்கரியினை பயன்படுத்தி வருகின்றோம்
மேலும் இங்கே தொடர்க...

வடபகுதியில் அரசாங்கத்தின் ஆதரவில் இடம்பெரும் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு:சித்தார்த்தன்
தனிப்பட்ட ரீதியில் யாரும் வடக்கில் வசிக்கலாம். வர்த்தகங்களை நடத்தலாம். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால் அரச ஆதரவில் குடியேற்றங்கள் இடம்பெறுவதையே எதிர்க்கின்றோம். தற்போது இராணுவத்தினர் காட்டுப்பகுதியில் முகாம்களை அமைக்கின்றனர். அது பிரச்சினையில்லை. ஆனால் பண்டிவிரிச்சானில் எதற்கு பௌத்த விகாரை? இவ்வாறு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இடம்பெறுகின்றன. அதாவது வடக்கின் மக்கள் தொகையியலை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது என்று புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இலங்கையில் தனிநாடு அமைவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது.

இலங்கை அரசாங்கம் விரும்பினாலும் இந்தியா அதற்கு ஒருபோதும் இணங்காது. எனவே அதிகார பரவலாக்கம் தொடர்பில் சிங்கள மக்கள் ஒருபோதும் அச்சப்படவேண்டியதில்லை. சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களை நீக்கவேண்டியது பெறும்பான்மை மக்களின் பொறுப்பாகும். அதனை அவர்களே செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஆறு உறுப்பினர்கள் ஆணைக்குழு சார்பில் கலந்துகொண்டிருந்தனர். தருமலிங்கம் சித்தார்த்தன் அங்கு தொடர்ந்து கூறியதாவது

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு முக்கியமான விடயமாகும். விசேடமாக இந்த ஆணைக்குழு கிராம்ஙகளுக்கு சென்று விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்றமை முக்கியமாகும். தற்போதைய நிலைமையில் தமிழ் மக்கள் கவலையுடனேயே இருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் மக்கள் மத்தியில் இன்னும் ஒருவித சந்தேகம் நிலவுகின்றது. முக்கியமாக காணிப்பிரச்சினையை குறிப்பிடலாம்.

அதாவது தெற்கு மக்கள் வடக்குக்கு வருவதையோ வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் வன்னியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அனைத்தும் முதலில் முடிவுறவேண்டும். தற்போதைய நிலைமையில் வன்னியில் மீள்குடியமரும் மக்களுக்கு அங்கு ஒன்றும் இல்லை. உணவுப் பிரச்சினை மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் உள்ளன. நான் கொழும்பில் குடியேறலாம். வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம். அதில் பிரச்சினையில்லை. யாரும் யாழ்ப்பாணத்தில் வர்த்தகம் செய்யலாம். வசிக்கலாம். ஆனால் வன்னியில் இன்னும் மீள்குடியேற்றம் முடியவில்லை என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.

சுமார் மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோது உள்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் சர்வதேச சமூகமும் ஒரு விடயத்தை கூறியிருந்தன. அதாவது இந்த மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படமாட்டார்கள் என்றும் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு மீள்குடியேற்றப்படமாட்டார்கள் என்றும் கூறினர். ஆனால் நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினேன். ஆறுமாத காலத்தில் மீள்குடியேற்றங்களை ஆரம்பிப்பதக்ஷிக அவர் என்னிடம் கூறியிருந்தார்.

தனியார் காணியில் பௌத்த விஹாரை

இந்நிலையில் அகதி மக்கள் மீள்குடியேற்றப்படும் பிரதேசங்களுக்கு நான் சென்றுள்ளேன். அங்கு பல குறைபாடுகள் உள்ளன. உணவுப் பிரச்சினை வீட்டுப் பிரச்சினை மற்றும் விவசாயத்தை மேற்கொள்வதில் சிக்கல் என பல விடயங்களை கூறலாம். எந்தவொரு அரசாஙகத்தினாலும் விரைவில் வீடுகளை அமைத்துக்கொடுக்க முடியாது. எனவே சர்வதேச சமூகம் அங்கு உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படவேண்டும். இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். அதாவது முல்லைத்தீவில் வட்டுவாகல் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணியானது கூட்டுறவுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படவேண்டிய தேவை என்னவென்று எங்களுக்கு விளங்கவில்லை. இதனால் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. அப்பகுதியில் பௌத்த மக்கள் இல்லை. மேலும் இந்து மதத்துக்கும் பௌத்த மதத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

அத்துடன் பண்டிவிரிச்சானில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. ஆனால் அந்தக் காணியின் உரிமையாளரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.“ தற்போது இராணுவத்தினர் காட்டுப்பகுதியில் முகாம்களை அமைக்கின்றனர். அது பிரச்சினையில்லை. ஆனால் பண்டிவிரிச்சானில் எதற்கு பௌத்த விகாரை? இவ்வாறு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இடம்பெறுகின்றன. அதாவது வடக்கின் மக்கள் தொகையியலை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.

இராணுவ முகாமுக்கு செல்லும் நிலை

மேலும் வடக்கில் அனைத்து இடங்களிலும் சிவில் நிர்வாகம் ஏற்படவேண்டியது அவசியமாகும். இராணுவத்தினர் மிகவும் ஒழுக்கமாக நடந்துகொள்கின்றனர். 1980 களில் இருந்த இராணுவம் தற்போது இல்லை.“ ஆனால் எந்த விடயத்துக்கும் மக்கள் இராணுவ முகாம்களுக்கு செல்லவேண்டியுள்ளது. அரசாங்க அதிபர் கூட இராணுவ அதிகாரியின் அலுவலகத்துக்கு செல்கிறார். பொலிஸார் இல்லை. ஒரு திருமண வீட்டை நடத்துவதற்கும் இராணுவ முகாமின் அனுமதியை கோரவேண்டியுள்ளது. ஏன் இந்த நிலைமை? இவ்வாறான விடயங்கள் மாறவேண்டும்.

ஆரம்பகாலத்தில் வன்முறையற்ற போராட்டங்கள் நசுக்கப்பட்டன. அவை வருத்தம் தரும் விடயங்களாகும். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான காரணங்களே ஆயுதப் போராட்டத்துக்கு காரணமாகும். தற்போது ஆயுதப் போராட்டம் முடிந்துவிட்டது. இதற்கு பின்னர் ஆயுதம் போராட்டம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள். எனவே ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்றும் நாம் நம்புகின்றோம்.

13 ஆவது திருத்தம் ஆரம்பபுள்ளி

1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் இறுதி தீர்வல்ல. மாறாக அதனை ஆரம்ப புள்ளியாக கொள்ளலாம். இரண்டு பிரதான கட்சிகளுமே 13 ஆவது திருத்தச் சட்டம் இறுதி தீர்வல்ல என்பதனை அவைகளின் செயற்பாட்டின் ஊடாக ஏற்றுக்கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச இது தொடர்பி“ல் ஆராய குழுவை நியமித்திருந்தார். சர்வகட்சி மாநாட்டையும் நடத்தினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜீ.எல். பீரிஸ் தலைமையில் இது தொடர்பி“ல் ஆராய குழுவை நியமித்திருந்தார். புதிய யோசனையையும் முன்வைத்திருந்தார். அதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமும் சமஷ்டி தீர்வுக்கு தயார் என்று கூறியிருந்தது. தற்போதைய ஜனாதிபதியும் புலிகளுடன் பேச்சு நடத்தினார். சர்வகட்சியை கூட்டினார். அதாவது 13 ஆவது திருத்தம் இறுதி தீர்வு அல்ல என கருதினார். எனவே இறுதி தீர்வு குறித்து ஆராயவேண்டும் என்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம். ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் மக்கள் மத்தியில் சந்தேகமே நிலவுகின்றது. நாட்டில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. முக்கியமாக 1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்த விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை காலமும் அரசாங்கங்கள் அரசியல் தீர்வு விடயத்தில் புலிகளை குறை கூறி வந்தன. புலிகள் எந்த தீர்வையும் ஏற்கமாட்டார்கள் என்று கூறிவந்மனர். ஆனால் இனி பிரபாகரன் இல்லை. பிரபாகரன் எந்த தீர்வையும் ஏற்றிருக்கமாட்டார் என்பதனை நானும் ஏற்கின்றேன். இது அரசியல் பிரச்சினையாகும்.

அபிவிருத்தி மட்டும் தீர்வல்ல

வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறுகின்றன. அதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால் அபிவிருத்தி மட்டுமே தீர்வு என்று தெற்கு நம்பிவிடக்கூடாது. 80 களில் 70 களில் இந்த போராட்டம் ஆரம்பமாகவில்லை. பண்டாரநாயக்க இந்த பிரச்சினை பற்றி உணர்ந்தமையினால்தான் பண்டா செல்வா உடன்படிக்கை வந்தது. டட்லி சேனாநாயக்க பிரச்சினை தொடர்பில் உணர்ந்தமையினால் தான் டட்லி செல்வா உடன்படிக்கை வந்தது.

எனவே இந்தப் பிரச்சினை எமது அடுத்த பரம்பரைக்கு செல்லக்கூடாது. நடந்தது அனைத்தும் போதுமாகும். இரு கால்களை இழந்த கைகளை இழந்த மக்களை நாம் காண்கின்றோம். அவ்வாறானவர்களுக்கு பிள்ளைகளும் உள்ளனர். யாருக்கும் ஆயுதம் போராட்டம் தேவையில்லை. எனவே பிரச்சினையை சுலபமாக தீர்க்க முடியும். சமஷ்டி ஐக்கியம் ஒற்றை என்பது பற்றி நாங்கள் பேசவில்லை. மாறாக நியாயமான அதிகரப் பரவலாக்கத்தையே நாங்கள் கோருகின்றோம். எமது அபிலாஷைகள் தீர்க்கப்படவேண்டும். நாங்கள் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். சமஷ்டி ஐக்கியம் ஒற்றை என்று பெயர் குறிப்பிட்டு எதனையும் கேட்கவில்லை.

இந்தியா இடமளிக்காது

இதேவேளை இலங்கையில் தனிநாடு அமைவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது. இலங்கை அரசாங்கம் தனிநாட்டை விரும்பினாலும் இந்தியா அதற்கு இணங்காது. எனவே அதிகார பரவலாக்கம் தொடர்பில் சிங்கள மக்கள் ஒருபோதும் அச்சப்படவேண்டியதில்லை. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களை நீக்கவேண்டியது பெறும்பான்மை மக்களின் பொறுப்பாகும். அதனை அவர்களே செய்யவேண்டும். யுத்தம் முடிந்துவிட்டது. இதற்கு பின்னர் ஆயுதப் போராட்டத்துக்கு சாத்தியமேயில்லை.

தனிப்பட்ட ரீதியில் யாரும் வடக்கில் வசிக்கலாம். வர்த்தகங்களை நடத்தலாம். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால் அரச ஆதரவில் குடியேற்றங்கள் செய்யப்படுவதையே எதிர்க்கின்றோம். அதன்மூலம் எமது மக்கள் தொகையியல் மாற்றப்படுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது. எமது பகுதி விடயங்கள் தெரிவு செய்யப்பட்ட மக்களாலேயே தீர்க்கப்படவேண்டும். அம்பாந்தோட்டை பகுதி விடயங்கள் அங்குள்ள மக்களால் கையாளப்படவேண்டும்.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஏன் தனிச் சிங்கள சட்டம் என ஒன்கொண்டுவந்தார் என்று தெரியவில்லை.“ ஆனால் அதன் பிரச்சினையை அவர் உணர்ந்தார். அதனால்தான் பண்டா செல்வா உடன்படிக்கை வந்தது. பின்னர் 1976 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி கொண்டு வந்த தீர்மானம் காரணமாக அவர்களுக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் அவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை ஏற்றனர். பின்னர் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை வந்தது. எனினும் அந்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. 13 ஆவது திருத்தத்தை நாங்கள் ஆரம்ப புள்ளியாக கருதலாம். எனவே சிங்களம் மற்றும் தமிழ் தலைமைகள் என இரண்டு தரப்பும் தோல்விகண்டுள்ளன என்றும் கூறலாம். இந்த விடயங்களை அரசியலுக்காக அனைவரும் பயன்படுத்தினர். எனவே எமது அரசியல் இலக்கை மறந்து பிரச்சினையை முடிப்போம்.

சந்திரிகாவும் மறந்தார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மேல் மாகாண சபை முதலமைச்சராக இருந்தபோது தனக்கு அதிகாரங்கள் போதாது என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் ஜனாதிபதியாக வந்ததும் அதனை மறந்துவிட்டார். மாவட்ட அபிவிருத்தி சபைகள் சிறிய குழுக்களாகவுள்ளன. எனவே தற்போதைக்கு அந்த முறைமை பொருந்ததாது. சிறிய அலகுகளினால் பெரிதாக சாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.

இதேவேளை யுத்தம் நடைபெற்ற காலத்தில் அதிகமான தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினர். முக்கியமாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கூறலாம். ஆனால் எமது அமைப்புக்கள் போன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களை புலிகள் பாரிய அளவில் கொலை செய்தனர். எனவே அதிகளவில் விதவைகள் உருவாகினர். அவ்வாறான விதவைகள் தற்போது வறுமையினால் வாடுகின்றனர். ஆனால் தற்போதைய நிலைமையில் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்புபட்ட விதவைகளுக்கே அரசாங்கம் உதவிகளை வழங்கிவருகின்றது. சர்வதேசமும் உதவுகின்றது. நாங்கள் அதனை வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக நாம் கூறும் வகைப்படுத்தலுக்கு உள்வரும் விதவைகளுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என்று கோருகின்றோம். ஒரு விதவை பெண்ணுக்கு ஒன்பது பிள்ளைகள் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலை அனல் மின் நிலைய தீ விபத்து; முழுமையான விசாரணை ஆரம்பம் அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு


நுரைச்சோலை அனல் மின் நிலையத் தீ விபத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை நேற்று ஆரம்பித்தனர்.

இவ்விசாரணையின் நிமித்தம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நேற்று நேரில் சென்றதாக மின்சக்தி அமைச்சு வட்டாரங்கள் நேற்று கூறின.

கொழும்பிலிருந்து சென்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இதேவேளை, மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரில் சென்று தீ அனர்த்தம் தொடர்பாக பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடன் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்துமுள்ளார்.

இதேநேரம் இத் தீ விபத்து தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை யும் நடத்தினார். இச் செய்தியாளர் மாநாட்டில் இத் தீ விபத்து காரணமாக அரசாங்கத்திற்கோ, இலங்கை மின்சார சபைக்கோ எதுவிதமான நஷ்டமும் ஏற்படவில்லை. அத்தோடு பிரதான மின்னுற்பத்தி நிலையத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சர் நேற்றுக் கூறினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்,

திட்டமிட்டபடி ஜனவரி மாதம் முதல் இம்மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 300 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இத்தீவிபத்து சம்பவம் குறித்து பொலிஸ் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணையின் அடிப்படையில் இது விபத்து நாசகார செயலா என்பது தெளிவாகும்.

இதுவரை வெளியான தகவல்களின் பிரகாரம் வெல்டிங் (இரும்பு ஒட்டு) பணிகளில் ஈடுபட்டிருந்த போது தெறித்த தீ சுவாலையே இவ்விபத்துக்கு காரணம் என்பது தெரிய வருகின்றது. என்றாலும் இந்தத் தீ ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் துரிதமாக அணைக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தினால் அனல் மின் நிலையப் பணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. மின் நிலைய பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகிறன. தீ விபத்தினால் நிர்மாணப் பணிகளுக்கு மாத்திரம் சிறு தாமதம் ஏற்பட்டது. குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸாரினதும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளதும் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

நுரைச்சோலை அனல் மின் நிலைய பணிகள் 2012ம் ஆண்டே நிறைவு செய்யப்பட இருந்த போதும் 2 வருடங்கள் முன்னதாகப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி நவம்பர் மாதத்தில் மின்னுற்பத்தி நிலைய கொதிகலன்களை சூடேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை நவம்பர் மாதத்தில் நிலக்கரி ஏற்றிய கப்பல் இங்கு வந்தடைய உள்ளது. ஒரு டொன் நிலக்கரி 115 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. இதனுடாக மின் உற்பதி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு 9.00 ரூபா முதல் 10.00 ரூபா வரை செலவாகும். ஆனால் டீசல் மூலம் மின் உற்பத்தி செய்ய 19 ரூபா செலவாகிறது.

சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் தீ விபத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை அந்தக் கம்பனியே ஏற்கும். நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி 450 பேர் இன்று மீள் குடியேற்றம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 வீதமான மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு திட்டமிட்டபடி டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் மீள்குடி யேற்றங்களை நிறைவு செய்ய உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் என். வேதநாயகம் நேற்றுக் கூறினார்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் இன்று (26) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

30 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள் ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு துரிதமாக மக்களை மீள்குடியேற்றி வருவதாகவும் அரச அதிபர் கூறினார்.

ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது.

வவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர்.

இதே வேளை, அண்மையில் முல் லைத்தீவு மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்துமாறும் முழுமையான மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித் துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 18,799 பேரே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ள தாகவும் இவர்களில் 17,641 பேர் வவுனி யாவிலும் 1,158 பேர் யாழ்ப்பாணத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளை ஒழித்ததில் படையினரின் தந்திரோபாயம்; உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்த அடுத்த வருடம் கொழும்பில் மாநாடு


புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட் டுவதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட தந்திரோபாயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக உலக நாடுகளுக்குத் தெளிவு படுத்துவதற்கான சர்வதேச மாநாடொன்று அடுத்த வருட முற் பகுதியில் இலங்கையில் நடாத்தப் படவிருக்கின்றது.

இவ்வாறு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று முன்தினம் தியத்தலாவயில் தெரிவித்தார்.

இராணுவ உயரதிகாரிகள் 46 பேருக்கு இராணுவ பீட டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தியத்தலாவ பாதுகாப்பு அகடமியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொழும்பில் நடாத்தப்படும் இந்த சர்வதேச மாநாட்டின் மூலம் உலக நாடுகளின் பாராட்டுகளை இலங்கை மேலும் பெற்றுக் கொள்ளும்.

உலகில் சுமார் நூறு நாடுகள் பயங்கர வாதப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளன. அந்நாடுகளில் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக உள்ளன. பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இந்த நாடுகள் அழிவுகளையும் சேதங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இவ்வாறான நாடுகளுக்கு இந்த சர்வதேச மாநாடு பெரிதும் நன்மை பயக்கும்.

புலிப் பயங்கரவாதிகள் கடந்த 30 வருடங்களாக முழு இலங்கையருக்கும் பெரும் தலையிடியினராக இருந்து வந்தனர். பெறுமதி மிக்க உயிர்களையும், சொத்துக்களையும் அழித்து வந்தனர். குரூரமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

உலகிலேயே கொடூர பயங்கரவாத அமைப்பாகவே புலிகள் இருந்து வந்தனர். அப் பயங்கரவாதத்தினையே, எமது நாட்டு இராணுவத்தினரால் முற்றாக அழிக்க முடிந்திருக்கின்றது.

எமது இராணுவத்தினர் பொது மக்களின் உயிர்ச்சேதத்தை தவிர்த்து பயங்கர வாதிகளையே இலக்கு வைத்து தாக்கி அழித்துள்ளனர். இராணுவ வெற்றிக்கு இலக்கு பொது மக்கள் அல்ல. பயங் கரவாதிகளே என்ற நிலையில், எமது இராணுவத்தினர் வெற்றிகரமாக செயல்பட்டனர்.

பங்கரவாதிகள் பொது மக்களை கேடயங்களாகப் பாவித்து இராணுவத் தினருடன் மோதிய போதிலும், எமது இராணுவத்தினர் தந்திரோபாயங்களை மேற்கொண்டு, பொது மக்களை மீட்டு, பயங்கரவாதிகளை அழித்துள்ளனர்.

யுத்தத்தில் வெற்றி கண்ட எமது இராணுவத்தினர், சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட புலி உறுப் பினர்களுக்கு புனர்வாழ்வு அழித்து வருகின்றனர். பொது மக்களை மீள் குடியேற்றுதல் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற மனித நேயக் கடமைகளையும் முன்னெடுத்துள்ளனர். இராணுவ ரீதியாகவும் வெற்றி பெற முடியும். அதே வேளை மனித நேயத் துடனும் செயற்பட முடியுமென்று, முழு உலக நாடுகளுக்குமே, எமது இராணுவத்தினர் உணர்த்தியுள்ளனர்.

புலி பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க நாம் பயன்படுத்திய தந்திரோ பாயங்களை உலக இராணுவத்தினர் அறிய விரும்புகின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடுத்த வருட முற்பகுதியில் இது தொடர்பான சர்வதேச மாநாட்டினை கொழும்பில் நடாத்தி, தெளிவுபடுத்தவுள்ளோம்” என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தாதிமாரின் தொழிற்சங்க போராட்டத்தால் ஆஸ்பத்திரி நடவடிக்கைகளில் பாதிப்பில்லை


தாதிமாரின் தொழிற்சங்கப் போராட் டத்தினால் ஆஸ்பத்திரி நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்புமில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் ரவி ருபேரூ தெரிவித்தார்.

மேற்படி போராட்டம் காரணமாக அன் றாட நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட் டதாக எந்தவொரு ஆஸ்பத்திரியிலிருந்தும் தமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என தெரிவித்த அவர், குறிப்பிடத்தக்க தொழிற்சங்கம் எதுவும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, தொழிற்சங்கப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது கோரிக் கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வருவார்க ளானால், சுகாதார அமைச்சு அதற்குத் தயாராகவுள்ளதாகவும் பதில் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்து வதால் அப்பாவி நோயாளிகளே பாதிக் கப்படுவர் என குறிப்பிட்ட அவர், போராட் டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருமாறும் அழைப்பு விடுத்தார்.

ம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க சுகாதாரத்துறை தாதிமார் சங்கம் நேற்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டம் தேவையற்றது என குறிப்பிட்ட பிரதியமைச்சர், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணியைத் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

தாதிமார் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டுள்ளோம். இது தொடர்பில் நிதியமைச்சுடனும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அரச சுகாதார தாதியர் தொழிற்சங்க இணைப்பாளர் சமன் ரத்னப்ரிய கருத்துத் தெரிவிக்கையில், முக்கியமான எட்டு கோரிக்கைகளை முன்வைத்தே நேற்றைய தினம் தாதியர் ஒரு மணி நேர சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார், சர்வதேச பாடசாலைகளுக்கு அரசின் கண்காணிப்பு


தனியார் மற்றும் சர்வதேச பாடசா லைகளை கல்வி அமைச்சின் மேற்பார் வையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்விய மைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன நேற்று தெரிவித்தார்.

நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் இவ்விடயம் இணைத்துக்கொள்ளப் படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் சட்ட திட்டங்களை சர்வதேச பாடசாலைகள் உதாசீனப்படுத்தி வருவதால் அத்தகைய பாடசாலைகள் விடும் தவறுகளுக்கு அமைச்சே வகை சொல்ல நேர்வதாகத் தெரிவித்த அவர்; இந்நிலையைத் தொடரவிடமுடியாது எனவும் தெரிவித்தார்.

அண்மையில் சர்வதேச பாடசா லைகளுக்கூடாக வெளியிடப்பட்ட பாட நூல்கள் சம்பந்தமாக பல சர்ச்சைகளும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமையைச் சுட்டிக்காட்டிய அவர், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும்போது அவர்க ளைக் கல்வியமைச்சில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில்; கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட் டிலுள்ள கல்விமான்களிடம் இதற்கான கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன. இந்த வகையில் கல்வித் துறையில் நிலவும் சகல குறைபாடுகளையும் நீக்கும் வகையில் புதிய கொள்கைத்திட்டம் அமையும்.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் போது அவர்களின் தகைமைகள் விடயத்தில் எதிர்காலத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும். அதற்காகவே தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும்போதும் அவர்களைக் கல்வியமைச்சு பதிவு செய்யவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

20 வருடங்களுக்கு பின்னர் யாழ். தீவகப் பகுதியிலுள்ள20 வருடங்களுக்கு பின்னர் யாழ். தீவகப் பகுதியிலுள்ள இரண்டு வீதிகள் நேற்று முன்தினம் பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன. ஊர்காவற்றுறைக்கு செல்லும் வேலணை மத்திய கல்லூரி வீதியை பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்த போது பிடிக்கப்பட்ட படம். வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, வட மாகாண கடற் படைத் தளபதி ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.


மேலும் இங்கே தொடர்க...

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புளொட்

சாட்சியமளிப்பு- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று சாட்சியமளித்துள்ளார். இங்கு கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாதிருப்பதால் தமிழ் சமூகம் தாங்கள் செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புகள் எல்லாமே வீணாகி விட்டதோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்நடவடிக்கையானது அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை எடுக்காமல் இருக்கும் தன்மையையே வெளிக்காட்டி நிற்கின்றது. அத்துடன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையானது சிங்களக் குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்தான் என மக்கள் மத்தியில் சந்தேகமும் நிலவி வருகின்றது. இந்நடவடிக்கையினை வன்னியில் ஏற்கனவே இருந்த இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் ஒரு கபட நோக்கம் கொண்ட செயலெனவும் மக்கள் கருதுகின்றனர். இதேவேளை 13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து அதிலிருந்து தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலம் செழிப்பாவதற்கும், நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கும் வழிவகுக்கும். கடந்த இரு தலைமுறையினர் அனுபவித்து வந்த துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும், வேதனைகளும், நெருக்கடிகளும் வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாதென்பதே எமது ஆத்மார்த்தமான விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் சாட்சியமளித்ததன் சுருக்கம்(ஆங்கிலத்தில்) இங்கு தரப்படுகின்றது.

* When the war was brought to an end by the SL armed forces> a section of the Tamils in the country breathed a sigh of relief.

Another section was saddened as they were extreme Tamil nationalists and LTTE supporters.

 

However all sections of the Tamil community whether they be LTTE sympathizers or opposed to them> were fearful because the war came to an end without there being a reasonable solution> and all the sacrifices and dedication were in vain.

 

Today nearly one-and-a-half years later> there is still no sign of a political solution to the problems faced by the Tamil people. Similar hardships are being faced by the Muslim community and the Upcountry Tamils.

 

The Muslim community suffered terribly at the hands of the LTTE. The community was ethnically cleansed from the north> resultantly bad blood still exists to an extent between the two communities.

 

Efforts have to be made to take away the pain and suspicion which has arisen.

 

* Many Tamil people> Tamil groups> political parties and militant groups helped successive government in its efforts believing that a political solution would be offered by the government of the day.

 

* Unfortunately today the contributions of all groups have not been recognized nor are the groups consulted in the search for a solution to this vexing problem which has eluded the country since independence.

 

Even Tamils who were in positions of power in the governments> for example the Honourable Lakshman Kadirgamar who was largely responsible for procuring the help of the international community in the government’s war with the LTTE. He played a major role in getting the support of western countries to ban the LTTE.

 

* I have had many discussions with Mr. Kadirgamar and he clearly stated his entry into the political field was based purely on his belief that a political solution should be found within a united Sri Lanka. He also believed the problem had to be solved politically and NOT by military means.

 

Similarly other political parties like my own party the PLOTE> supported the successive SL governments because we believed in seeking a political solution to Tamil grievances within a united framework.

 

* Unfortunately the LTTE saw this as being traitorous to the cause of for the setting up a separate state and commenced killing large numbers of our cadres as well cadres of those organizations which recognized a solution to the Tamil problems could be found within a united Sri Lanka.

Today thousands of widows and orphans belonging to parties which did not contribute to the LTTE beliefs languish below the poverty line.

But government as well as international organisations seem to be hell bent on helping only LTTE cadres and their families with not a penny being spent to help uplift the families of Tamil militants who were killed because they strived towards achieving a political solution.

This situation must be corrected in the here and now.

These families must be helped to overcome the poverty into which they have been thrust by giving them a helping hand to restart their lives economically as well as to help them out of the traumatic times they have been> with trauma counselling.

 

* As I mentioned earlier Tamils today fear they will never see a reasonable solution to the problems they face> as 1 ½ years after the war has ended it appears the majority community seem to believe they have conquered the Tamils and therefore their problems could be brushed aside.

I see clearly there is a conquered mentality among the Tamil people.

 

* There are many reasons for saying this. Today we see state lands in the north and east being grabbed in the name of development in Trincomalee> Batticaloa> Mullaitivu> Murukkandy etc. and being allocated to big-time Sinhalese business people.

I must hasten to add> while we do not oppose the entry of Sinhalese business people into the north> we are saddened that while the Tamil people who lost all but their lives during the war> are offered no help economically and are thereby in no position to compete with the financially affluent business people from the south of the country.

These people (from the south of the country) in addition have political support and the support of the armed forces. Lands are identified and have demarcated for particular Sinhalese business persons.

 

* Tamil people in general and my organization in particular welcomes back into the north and east Sinhalese people who were displaced or perhaps I should say ethnically cleansed by the LTTE.

Unfortunately today we are witnessing hundreds of people who have never lived in these areas> suddenly descending and laying claim to lands in the north.

 

* We are also deeply concerned about the sudden mushrooming of Buddhist temples in areas where no Buddhists live…

A good example of this is the land being allocated to construct a Buddhist temple in Mullaithivu (Vadduvahal Jnc.). This land was originally reserved for the construction of a co-operative society building.

 

I really cannot understand why a Buddhist temple is being constructed in an area where no Buddhist lives… unless there is a plan by the state to settle Buddhists in this area.

 

This suspicion is shared by the people of the area as well.

The plan to construct this temple is proposed by the military in collaboration with a monk from Vavuniya.

 

* At Pandivirichchan in the Madhu DS division a Buddhist temple was built on a piece of private land.

 

Today the owner of this land has returned. But she is at a loss as to what she should do. She does not want to demolish the temple in fear of a backlash…

Her family is presently homeless.

 

* I am happy to mention I have been reliably informed by some military officers that in fact a number of military camps in the north are being vacated from private lands and moved to state lands. But unfortunately another problem has now arisen in that Buddhist temples were constructed within the premises or in the vicinity of the military camps.

 

These temples were built on private lands and the returning owners are now in a quandary as to what they are to do with these temples which are situated within their premises...…மேலும் இங்கே தொடர்க...