1 டிசம்பர், 2009

மீள்குடியேற்றப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா மூன்று ஆட்டோக்கள் வழங்க ஏற்பாடு-

வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா மூன்று ஆட்டோக்கள் வீதம் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்குமுன் பெற்றுக்கொடுக்கவிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். மீள்குடியேறியவர்கள் சிறு வர்த்தக மற்றும் தொழில் முயற்சியில் ஈடுபடும் வகையில் இலகு கடனடிப்படையில் பணம் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீள்குடியேறியோரில் மூன்று குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கே இந்த ஆட்டோக்கள் வழங்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் இவை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. இதேவேளை ஏ9 வீதியில் போக்குவரத்துக்கும், பொருட்களை ஏற்றிச் செல்லவும் பஸ்கள், லொறிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதற்கு மேலதிகமாக அரச வாகனங்கள் செல்வதற்கு விரையில் அனுமதி வழங்கப்படும் என்றும் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் நேற்று விற்பனை


பிரபல தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குப் பரிவர்த்தனையினால் பங்குச் சந்தை மொத்தப் புரள்வு வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரபல வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அமெரிக்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ள ரொக்கப் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ராஜ் ராஜரட்னத்தின் கெலுன் நிறுவன சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு கட்டமாக இலங்கையில் ராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான டி.எப்.சீ.சீ. வங்கிப் பங்குகள் கொழும்புப் பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டி.எப்.சீ.சீ. வங்கியின் ஐந்தாவது முக்கிய பங்குதாரராக கருதப்படும் ராஜ் ராஜரட்னம் தனது சகல பங்குகளையும் நேற்றைய தினம் விற்பனை செய்துள்ளார்.

பங்குத் தரகு நிறுவனங்களின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பங்கு ஒன்று 135 ரூபா என்ற விகிதத்தில் சுமார் 12.2 மில்லியன் பங்குகள் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளன
மேலும் இங்கே தொடர்க...
யாழ்.- வவுனியா மினிபஸ் சேவை விரைவில் ஆரம்பம்


வவுனியாவுக்கும் இடையிலான மினிபஸ் சேவை நடத்துவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாகவும் விரைவில் இச்சேவை ஆரம்பமாகும் எனவும் தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

"ஏ-9 வீதியினூடாக தனியார் சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறு எமது சங்கம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கைக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். இதற்காகத் தரம் வாய்ந்த 50 பஸ்களின் விபரங்களை அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளோம். அவற்றில் 10 பஸ்கள் தெரிவு செய்யப்பட்டு அவை நேற்று பரீட்சித்துப் பார்க்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட 10 பஸ்களும் சேவையில் ஈடுபடும் திகதி அரச அதிபரால் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
கிழக்குக் கடலில் தத்தளித்த 12 மியன்மார் மீனவர்கள் மீட்பு


கிழக்கு கடலில் தத்தளித்த 12 பேரைக் கொண்ட மியன்மார் மீனவர் குழுவொன்று இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திருகோணமலைக்கு அண்மித்த பகுதியில் இவர்களின் மீன்பிடிக்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்தது. அவ்வேளை, குறித்த மீனவர்களினால் அபாயக் குரல் எழுப்பப்பட்டதாகவும்,இதனையடுத்து அங்கு விரைந்த மீனவர்கள் நேற்று மாலை 12 மியன்மார் மீனவர்களையும் காப்பாற்றி மீட்டு வந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்படி மீனவர்களிடம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆவணங்கள் எதுவும் இல்லாத போதிலும் மீன்பிடிக்கலத்திலிருந்த ஆவணங்கள் மூலம் இம்மீனவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா ஆதரவுக்கு எதிரொலி

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ராஜினாமா

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் சோஷலிச மகளிர் அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளருமான பிரியங்கா கொத்தலாவல தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி கூட்டாக செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதுடன் வகித்து வந்துள்ள அனைத்து பதவிகளையும் துறந்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு கடும் தொனியில் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன் சேகாவுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ள தையிட்டு தான் கிலேசமுற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இங்கே தொடர்க...

நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் இன்று முதல் சுதந்திர நடமாட்டம்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் இன்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே இதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், இன்றிலிருந்து இவ்வனுமதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வோர் தாம் தங்கியுள்ள கிராமத்தின் பொறுப்பானவர்களுக்கு அறிவித்துவிட்டு வெளியே சென்றுவர முடியும் என வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது.

இதன் மூலம் இடைத்தங்கல் கிராமங்களில் தங்கியிருந்தோரின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதுடன், அவர்கள் தொழில் வாய்ப்புகளில் ஈடுபடவும் சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ள தென வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசுந்தரம் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தோரு க்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வட்டைகளை அவர்கள் நிவாரணக் கிராமங்களின் பொறுப்பாளர்களிடம் காட்டிவிட்டுத் தாம் திரும்பி வரும் தினத்தையும் குறிப்பிட முடியும்.

அவர்கள் எந்தவிதப் பதிவையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம் இவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கின் பல்வேறு மாவட்டங்களிலுமி ருந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியிருந்தோரில் பெருமளவிலானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுள் யாழ்ப்பாணத்திலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலுமுள்ளவ ர்கள் ஏற்கனவே சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அத்துடன் வயோதிபர்கள். நோய்வாய்ப்பட்டவர்களும் தமது உறவினர்களுடன் போய் இணைந்துகொள்ளும் வகையில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியேறியவர்களைத் தவிர வவுனியா நலன்புரிக் கிராமங்களில் மேலும் 1,20,000 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கே இன்றுமுதல் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி 1,20,000 பேரையும் எதிர்வரும் 2010 ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு ள்ளது.

இதேவேளை, இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளை அமைத்து, அவர்களும் வாக்களிக்க உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் கருத்து தெரிவிக்கை யில்; மேற்படி விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளதுடன், அதனையடுத்து அவரது வழிகாட்டல்களுக் கமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மன்னார், அடம்பன் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 325 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு நேற்று அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவர்களுக்கான சைக்கிள்களை வழங்கினார். மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


மேலும் இங்கே தொடர்க...

மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் தொழில் முயற்சிகளுக்கு இலகுகடன்

15க்கு முன் ஆட்டோக்கள் வழங்க ஏற்பாடு

வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் மூன்று முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ) வீதம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் இவை எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

அத்துடன் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியில் சிறு வர்த்தக மற்றும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கென இலகு கடன் அடிப்படையில் பணம் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மீளக்குடியேறியவர்களுள் மூன்று குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த முச்சக்கர வண்டிகள் வழங்கப்படும்.

குறிப்பாக கிராமங்களில் பஸ் போக்குவரத்துக்கு மேலதிகமாக போக்குவரத்து சேவையை இலகுபடுத்தும் விதத்தில் இவை பெற்றுக் கொடுக்கப்ப டவுள்ளன. இதேவேளை நேற்று 143 அரச ஊழியர்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் கடமையாற்றவென அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் தமது போக்குவரத்துக்கென துவிச்சக்கர வண்டி களையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ஏ-9 வீதியில் பயணிகள் போக்கு வரத்துக்கும், பொருட்களை ஏற்றி இறக்குவதற்கும் பஸ்கள், லொறிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரசாங்க வாகனங்கள் செல்வதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கான வேண்டு கோளை பாதுகாப்பு அமைச்சிடம் நேற்று கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் இங்கே தொடர்க...