21 டிசம்பர், 2010

வீடுகளில் திருடி வந்த 12 வயது சிறுவன் கைது




வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுவந்த 12 வயதுச் சிறுவன் சுன்னாகம் பொலிஸாரினால் கைது கைது செய்யப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினர் வீடுகள் உட்பட அயல் வீடுகளிலும் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து பொலிஸார் சிறுபிள்ளைகள் அணியும் தோடு மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றை கைப்பற்றியுள்ளார்கள். தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சிறுவன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சுன்னாகத்தில் சைக்கிள் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்க்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரிடம் இருந்து ஆறு சைக்கிள்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நபர் புத்தூரைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போர்க்குற்றங்கள் தொடர்பில் தெளிவான விசாரணை அவசியம்: வில்லியம் ஹேக்





இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "ஸ்கை நியூஸ்' ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை முறையான விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திரத் தொடர்புகளில் இடைக்கிடை தடங்கல்கள் ஏற்பட்டாலும் இரண்டு நாடுகளும் தொடர்ச்சியாக கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்கின்றன.

தற்போதைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் விஜயத்தின் போது நான் அவரைச் சந்தித்தேன். அதன்போதும் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்தினேன் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தப்பியோடிய படையினர் 50 ஆயிரம் பேரை கைதுசெய்ய நடவடிக்கை





தப்பியோடிய 50 ஆயிரம் படையினரை கைது செய்ய நாட்டில் பல முனைகளிலும் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் அனைவருக்கும் இராணுவச் சட்டத்தின் கீழ் பதவி, தராதரம் பாராது தண்டனை வழங்கப்படுமே தவிர எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவெல தெரிவித்தார்.

சரணடைய வழங்கப்பட்ட கால எல்லையை தப்பியோடிய படையினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அத்தோடு தலை மறைவாக உள்ள முன்னாள் படையினர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்தி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெகவல கூறுகையில், கடந்த யுத்த காலப்பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் படைகளிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இவர்களை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு சுயமாக சரணடையும் வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி உத்தியோகபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கும் ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான தப்பியோடிய வீரர்கள் சரணடைய வழங்கப்பட்ட கால அவகாசத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இராணுவத்திலிருந்து தப்பியோடி சிவில் சமூகத்துடன் வாழ்வது சட்டத்திற்கு முரணானது மட்டுமல்ல தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலான விடயமாகும். அத்தோடு நாட்டில் அண்மையில் நடைபெற்ற பல குற்றச் செயல்களுடனும் தப்பியோடிய இராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தொடர்ந்தும் இவர்களை சிவில் சமூகத்துடன் சுதந்திரமாக நடமாட அனுமதியளிக்க முடியாது. எனவேதான் தப்பியோடிய இராணுவ வீரர்களை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளோம். இனி கைது செய்யப்படும் அனைவரும் இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு பின்னர் புனர் வாழ்வளிக்கப்படுவார்கள் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும்



செயற்படுவது ஆரோக்கியமான விடயம்: அரசாங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் ஒன்றிணைந்து செயற்படுமாயின் அதனை ஆரோக்கியமான ஒரு விடயமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நோக்குகின்றது. இரு தரப்பினரும் இணைந்து அரசாங்கத்துடன் செயற்பட முன்வருவார்களாயின் அவர்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவர்கள் இணைந்து ஒரு தீர்வு யோசனையினை முன்வைப்பார்களேயானால் அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகளும் அண்மையில் சந்தித்து பேசியதுடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். இதற்கென இரு தரப்பின் சார்பிலும், ஆறு பிரதிநிதிகளைக் கொண்ட உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துக் கேட்டபோதே அமைச்சர் டலஸ் அழகபெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் :

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறந்த நட்புறவான உறவை பேணிவருகின்றது. அதாவது தற்போதைய காலகட்டத்தில் சிறந்த உறவு மலர்ந்துள்ளது என்று கூறலாம். அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலமே சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொண்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதனையும் நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.

மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படவும் ஒத்துழைப்புடன் முன் செல்லவும் எமது அரசாங்கம் எப்போதும் பின்நின்றதில்லை. மாறாக மக்களின் பிரதிநிதிகள் அல்லாத புலிகளுடன் தான் எங்களுக்கு பிரச்சினை காணப்பட்டது. அதனடிப்படையிலேயே தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆகியவை ஒன்றிணைந்து செயற்படுமாயின் அதனை ஆரோக்கியமான ஒரு விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அவ்வாறு அவர்கள் இணைந்து ஒரு யோசனையுடன் வருவார்களாயின் அது தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படலாம்.

ஆனால் அவ்வாறு அவர்கள் இணைந்து அரசாங்கத்துடன் செயற்படுவதா? என்பதனை அவர்களே தீர்மானிக்கவேண்டும். அது அவர்கள் சார்ந்த விடயமாகும். மேலும் தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற தரப்புக்குள் உள்ளவர்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் நின்றவர்கள்.

எனவே தமிழ் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து செயற்படுமாயின் அதனை சிறந்த கண்ணோட்டத்துடனேயே பார்ப்போம். அவ்வாறு ஆரோக்கியமாக பார்க்கின்ற தலைவர் ஒருவரே தற்போது எமக்கு இருக்கின்றார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்


அமைச்சர் குணரத்ன வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தலைமையில் விநியோகம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சு நிவாரண பொதிகளை நேற்று விநியோகித்தது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் இரணைமடு கலைமகள் வித்தியாசாலை, பூநகரி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிளிநொசசி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட் டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் பணிப்பின் பேரில் 45 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக நேற்று முன்தினம் வவுனியா மாவட்டத்தில் 109 குடும்பங்களுக்கும், நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் 998 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப் பட்டுள்ளன. தலா 4500 ரூபா பெறுமதியான நிவா ரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட விருக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா - கொழும்பு கப்பல் சேவையை நடத்த ஐந்து தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன - ஜீ. கே. வாசன்


கொழும்புக்கும் இந்தியாவின் தூத்துக் குடிக்கும் இடையிலான கப்பல் சேவை அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக் கப்படும் என்றும் இக்கப்பல் சேவையை நடத்த தனியார் முகவர் நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் இந்திய மத்திய கப்பற்துறை அமைச் சர் ஜீ. கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியை இந்திய மத் திய அமைச்சரவை ஏற்கனவே வழங்கி யிருக்கும் நிலையில் வெகுவிரைவில் இக் கப்பற்சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பற்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆரா யும் முக்கிய கூட்டமொன்று கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் காணப்படும் பிரச்சினைகள், மேற்கொள் ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆராயப்பட்டதாகத் தெரியவருகிறது. குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், இந்தியக் கடற்படையினர், கரையோரப் பாதுகாப்புப் பொலிஸார், புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கப்பல் சேவையில் பயன்படுத் தப்படவிருக்கும் கப்பல் மூலம் ஒரு தடவையில் 500 பேர் பயணிக்கமுடியும் என தூத்துக்குடி துறைமுகத்தின் தலைவர் ஜீ. ஜே. ராவ் இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார். இக்கப்பல் பயணம் 12 மணித்தியாலங்களாக இருக்குமென்றும் ஐந்து தனியார் முகவர்கள் இக்கப்பல் சேவையை நடத்த முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு-தூத்துக்குடி, தலைமன்னார்-இராமேஸ்வரத்துக்கு இடையிலான கப்பல் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்கனவே இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், கப்பல் சேவைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என இந்திய கப்பற்துறை அமைச்சர் வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கிண்ணியாவில் வெடி பொருட்கள் மீட்பு


கிண்ணியா, தல்லரப்பு காட்டுப் பகுதி யில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடி பொருட்கள் சீனக்குடா பொலி ஸாரினால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி கூறினார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி தல்லரப்பு மகாவலி கங்கை கரையில் சோதனை நடத்தப்பட்டது.

இதன் போது 4 1/2 கிலோ கிராம் எடையுள்ள 3 கிளைமோர் குண்டு கள், மிதி வெடிகள் 5, 80 டெடனேட்டர்கள், சீ–4 ரக வெடிபொருட்கள் 1800 கிராம் என்பன கண்டு பிடிக்கப்பட்டன.

இவை யுத்த காலத்தில் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் கூறினர்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி மன்றத் திருத்தச் சட்டம் மீதான விவாதம் ஜனவரி 4 இல் அமைச்சர் தினேஷ் குணவர்தன


புதிய உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் அடுத்த மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார்.

தொகுதி வாரி முறையையும்,விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதன்படி உத்தேச தேர்தல் முறை திருத்தச் சட்டம் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரினால் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் புதிய முறைப்படி நடத்து வதா, பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதா என இதுவரை அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்த அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தது தெரிந்ததே
மேலும் இங்கே தொடர்க...

கட்டுப்பாட்டு விலையில் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூபா 350



ஒருகிலோ கோழி இறைச்சியை ரூபா 350 என்ற கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வதற்கு கூட்டுறவு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சந்தையில் பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் முகமாக இந்தியாவிலிருந்து 500 மெற்றிக் தொன் கோழி இறைச்சி, 50 மில்லியன் கோழி முட்டைகள் மற்றும் 40 இலட்சம் தேங்காய்கள் என்பவற்றை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது.

இதனையடுத்து ஒரு கிலோ கோழி இறைச்சியை 350 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய வேண்டுமென கூட்டுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதேவேளை முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை இவ் வாரம் நிர்ணயம் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

பண்டிகை காலத்தில் மக்களின் தேவை யைப்பூர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய கோப்சிற்றி, லங்கா சதோச, சதோச நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென கூட்டுறவு வர்த்தகத்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் நிபுன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:- அரிசி, தேங்காய், சீனி, பெரிய வெங்காயம், கோழி இறைச்சி உள்ளிட்ட பொருட்களை ஆசிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்ய அமைச்சு தீர்மானிக்கிறது. இதன் முதற்கட்டமாவே கோழி இறைச்சி, முட்டை, தேங்காய் (40 இலட்சம்) என்பவற்றை இறக்குமதி செய்ய தீர்மானித்தது.

பெரிய வெங்காயத்தின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் முகமாக பாகிஸ்தானில் இருந்து அதனை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த இந்திய பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் விசாரணை


புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்திய பாதாள உலகக் குழுவான தாவூத் இப்ராகிமின் குழு உறுப்பினரிடம் மும்பாய் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு மே 8 ம் திகதி தாவூத் இப்ராகிம், குழு உறுப்பினர் மிர்சா முகைதீன்பெய்க் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஆயுத விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இவர் இந்திய நீதித்துறையினரின் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இவரிடம் மும்பாய் குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இவர் தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், மும்பாய்த் தாக்குதலுடன் தொடர்புடைய லக்ஷ்கர் ஈ தொய்பா இயக்கத்துடன் இவர் தொடர்பு கொண்டிருப்பதாகவும் மும்பாய் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

லண்டனுக்கான விமான சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பம்



மோசமான பனிப்பொழிவு காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த லண்டன் ஹீத்துறூ விமான நிலையத் துக்கான சேவைகள் மீண்டும் நேற்று ஆரம்பமாகின என்று ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் ஹீத்துறூ விமான நிலையம் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து ஹீத்துறூ விமான நிலையத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் ஹீத்துறூ விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து லண்டனுக்கான விமான சேவைகள் மீண்டும் நேற்று முதல் ஆரம்பமாகியதாக ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி மன்றத் திருத்தச் சட்டம் மீதான விவாதம் ஜனவரி 4 இல் அமைச்சர் தினேஷ் குணவர்தன


புதிய உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் அடுத்த மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார்.

தொகுதி வாரி முறையையும்,விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதன்படி உத்தேச தேர்தல் முறை திருத்தச் சட்டம் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரினால் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் புதிய முறைப்படி நடத்து வதா, பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதா என இதுவரை அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்த அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தது தெரிந்ததே.
மேலும் இங்கே தொடர்க...

தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த நிறுவனங்களிடமிருந்து ரூபா 160 மில். மீட்பு


மோசடி செய்யும் விநியோகத்தரை இடைநிறுத்த முடிவு

தரம் குறைந்த மருத்துவ உபக ரணங்கள் மற்றும் மருந்துப் பொரு ட்களை விநியோகித்த விநியோக நிறுவனங்களிடமிருந்து 160 மில்லி யன் ரூபாய்களை சுகாதார அமைச்சு மீட்டுள்ளது. தள்ளுபடி விலையில் விநியோகிக்கப்பட்ட 138 மருத்துவப் பொருட்கள் தொடர்பிலேயே 160 மில்லியன் ரூபாய்களை அமைச்சு மீட்டுள்ளது.

தரம் குறைந்த பொருட்களை விநியோகித்த மருந்துப் பொருள் விநியோக நிறுவனங்கள் குறித்த அறிக்கையொன்றை மருந்து விநி யோகப் பிரிவு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட 138 மருத்துவப் பொருட்கள் குறித்து சோதனை நடத்த நிபுணர்கள் குழுவொன் றையும் அமைச்சு நியமித்துள்ளது. தரம்குறைந்த 12,000 மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் வருடாந்தம் மீட்கப்படுவதாக சுகா தார அமைச்சின் பேச்சாளர் தெரி வித்துள்ளார்.

இந்த நிலையில் சுகாதார அமை ச்சர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய மருந்து கள் மற்றும் மருத்துவ உபகரணங் களின் தரம் உறுதிப்படுத்தப்படுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஒரு மருந்துவில்லை தரம் மற்ற தாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அனைத்து மருந்துகளும் தடை செய்யப்படும் என அமை ச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மருந்து விநியோகஸ்தர் ஒருவர் தரமற்ற மருந்தை விநியோகித்தால் அவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவார் அல்லது நிரந்தரமாக நீக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...