1 ஜூன், 2010

கொள்கலனுக்குள் 70 அகதிகள் : மெக்ஸிக்கோ பொலிஸார் மீட்பு

பாரிய கொள்கலன் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 போ் அடங்கிய அகதிகள் குழுவொன்றை தெற்கு மெக்ஸிகோ பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மத்திய அமெரிக்கா, இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பாரிய கொள்கலன் ஒன்றுக்குள் மறைந்த நிலையில் கௌதமாலா எல்லைப் புறத்தில் வைத்து மீட்கப்பட்டனர்.

ல- கதிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் இந்த கொள்கலனுக்குள் மறைந்திருந்தமையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இவர்களில் 45 ஆண்களும் 15 பெண்களும் அடங்கியிருந்தனர். இவர்களில் 7 இலங்கையர்களும் உள்ளடங்கியிருந்தாக மெக்ஸிகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சட்ட விரோத குடியேறிகளாக வந்த சுமார் 70 ஆயிரம் பேர் மெக்ஸிகோ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அவர்களின் சொந்த நாடுகளுக்கு
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்கா – கொழும்பு ரயில் சேவை இன்று ஆரம்பம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரையிலான ரயில் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதல் பிரயாணத்தின் போது அமைச்சர்கள் உள்ளிட்ட 140 பேர் கொழும்புவரை பயணம் செய்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்தில் “பிரா” வில் மறைத்து ரூ.11 லட்சம் கடத்திய பெண் ராணுவத்திடம் சிக்கினாள்

இங்கிலாந்தில்    “பிரா” வில் மறைத்து    ரூ.11 லட்சம் கடத்திய பெண்    ராணுவத்திடம் சிக்கினாள்

ருமேனியா நாட்டை சேர்ந்த ஒரு பெண், ஹோலிகெட் துறைமுக நகரில் வந்து இறங்கினாள். அவளது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரர்கள் அவளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது டியூபிளின் நகரில் இருந்து வடக்கு வேல்ஸ் நகருக்கு வந்ததாக அவள் கூறினாள். அவளை சோதனை செய்தபோது பிராவுக்குள் ரூ.11 லட்சம் (22 ஆயிரம் டாலர்கள்) மறைத்து வைத்து இருந்தாள். இந்த பணம் எப்படி கிடைத்தது என்று அவளிடம் கேட்டபோது அயர்லாந்தில் சம்பாதித்தது என கூறினாள்.

ஆனால் அதற்கான ஆதாரத்தை அவள் தரவில்லை. எனவே அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

கப்பலை தாக்கி 16 பேர் கொலை: இஸ்ரேல்- துருக்கி போர் மூளுமா?; ஐ.நா.சபை அவசரமாக கூடுகிறது

.பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா பகுதி ஹமாஸ் இயக்கத்தினர் ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிகள் வருவதை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் துருக்கி நாட்டில் இருந்து 6 கப்பல்களில் 10 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு காசாவுக்கு வந்தனர். கப்பல்களில் ஏராளமான பாலஸ்தீன ஆதரவாளர்களும் இருந்தனர்.

இந்த கப்பல்கள் காசாவுக்கு செல்லக்கூடாது என்று இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்தது. இதையும் மீறி 6 கப்பல்களும் சென்றன. நடுக்கடலில் கப்பல்கள் வந்தபோது இஸ்ரேல் கடற்படையினர் அவற்றை வழிமறித்து 5 கப்பல்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஒரு கப்பலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயன்றபோது இஸ்ரேல் ராணுவத்தினர் திடீரென அங்கு இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 16 பேர் உயிர் இழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிவாரண கப்பலை தாக்கி 16 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதால் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி கப்பல் தாக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும் லட்சக்கணக்கானோர் தலைநகரம் இஸ்தான்புல்லில் கூடி இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

துருக்கி இஸ்ரேலுக்கான தனது நாட்டு தூதரை உடனடியாக விலக்கி கொண்டுள்ளது.

துருக்கி பிரதமர் நெசப் எல்டோகான் கூறும்போது இஸ்ரேலில் கொடூர செயல்களை பார்த்து கொண்டு நாங்கள் தொடர்ந்து அமைதியாக இருக்கமாட்டோம் என்றார்.

துருக்கி வெளிவிவகார மந்திரி அகமது தேவுதோக்ளு கூறும்போது இஸ்ரேல் நடவடிக்கை காட்டுமிரண்டிதனமானது. இதற்காக இஸ்ரேல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் கடும் பின் விளைவுகளை இஸ்ரேல் சந்திக்க வேண்டியது வரும் என்று கூறியுள்ளார்.

துருக்கியின் மிரட்டல் இஸ்ரேல்- துருக்கி இடையே போர் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அரபு லீக் நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக குதித்து உள்ளன. இந்த நாடுகளின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. அதில் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பலமுறை போர்கள் நடந்துள்ளன. இப்போது அவசரமாக அரபு லீக் நாடுகள் கூடுவதும் போர் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

இஸ்ரேல் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் குறித்து முழு விசாரணைக்கு ஐ.நா.சபை உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு நாடான அமெரிக்கா வருத்தம் தெரிவித்து உள்ளது. இது பற்றி ஐ.நா.சபைக்கான அமெரிக்க துணை தூதர் அலேஜிண்டோ கூறும்போது அங்கு என்ன நடந்தது? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அங்கு சமீப காலமாக நடக்கும் வன்முறை சம்பவங்களும் உயிரிழப்புகளும் பிரச்சினைகள் உருவாக்குகின்றன என்றார்.

அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பிலிப் குரோலி கூறும்போது இந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை கொடுக்கிறது. இதுபற்றி இஸ்ரேல் முழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான்கி மூனும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

பிரான்சு, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் இஸ்ரேல் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வால்மீகி திருடன் இல்லை: பஞ்சாப் ஐகோர்ட் தீர்ப்பு

சண்டிகர் :"ராமாயணம் எழுதிய மகரிஷி வால்மீகி உண்மையில் திருடன் இல்லை' என்று பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு தனியார் சேனல், தயாரித்து ஒளிபரப்பி வரும் தொடரில், வால்மீகி பற்றி இரு கதாபாத்திரங்கள் பேசுவதாக வரும் காட்சி, மக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக கூறி, வால்மீகி ஜாதியை சேர்ந்த நாவிகாஸ் என்பவர், 2009ல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருந்தார்.தனது எப்.ஐ.ஆர்.,ல் "அந்த சேனல் ஒளிபரப்பி வரும் "பிடாய்' என்ற தொடரில், இரு கதாபாத்திரங்கள் உரையாடுகின்றனர். ஒருவர் மற்றவரை பார்த்து, வால்மீகி, திருடனாக இருந்து பின் மகரிஷியானார் என்பது உண்மையா என்று கேட்க, மற்றவர் அது சரிதான் என்கிறார். கேள்வி கேட்டவர், இப்படி ஒருவன் திருடனாக இருந்து, பின் மகரிஷியாக முடியுமா என்று கேட்கிறார். மற்றவர், ஆம் அப்படி ஆக முடியும் என்கிறார்' என்று குறிப்பிட்டிருந்தார்.அந்த எப்.ஐ.ஆர்.,யை தள்ளுபடி செய்யும்படி, சேனல் நிறுவனம், பஞ்சாப் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சேனல் தனது மனுவில், கதாபாத்திரங்களின் இரண்டாவது பேச்சு, அதாவது திருடனாக இருந்த ஒருவன் மகரிஷியாக முடியுமென்ற பேச்சை, வால்மீகி மீதான புகழுரையாக சுட்டிக் காட்டியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி ராஜிவ் பல்லா, சேனலின் மனுவை நிராகரித்து, தனது தீர்ப்பில் கூறியதாவது:மகரிஷி வால்மீகியின் கதையை பொறுத்தவரை, புராண கதைகளுக்குள், அவரது உண்மையான வரலாறு புதைந்து போய்விட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றை, கி.மு., ஒன்பதாம் நூற்றாண்டு வரை தோன்றிய, வேத இலக்கியங்களின் அடிப்படையில், பாட்டியாலாவிலுள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் "மகரிஷி வால்மீகி இருக்கை' ஆராய்ந்து, அவர் திருடனாக இருந்திருக்க முடியாது என்றே முடிவுக்கு வந்துள்ளது.எலக்ட்ரானிக் ஊடகங்கள், மத சம்பந்தப்பட்ட கருத்துக்களை பரப்ப முற்படும் போது கட்டுப்பாட்டோடும், பொறுப்புணர்வோடும், கவனத்தோடும் ஒளிபரப்ப வேண்டும். அக்கருத்துகள் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் என்ற உணர்வும் வேண்டும். இவ்வாறு நீதிபதி ராஜிவ் பல்லா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜீஎஸ்பி தொடர்பில் சாதகமான முடிவு கிட்டும் : அமைச்சர் பீரிஸ் நம்பிக்கை

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

இது தொடர்பில் நாட்டுக்கு சாதகமான முடிவு கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடு திரும்பினார். அங்கு உயர்மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்ததுடன் இலங்கையின் நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர் பிரச்சினையில் அரசின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக இல்லை:தமிழக முதல்வர்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதிய மன நிறைவை அளிப்பதாக இல்லை. எனவே, இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் போய்ச்சேர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தப்போவதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார்.

தி.மு.கவின் உயர்நிலை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அண்ணா அறிவாலயத்திலுள்ள கூட்ட அரங்கில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் இரண்டு மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இலங்கைத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு:

இலங்கையில் யுத்தம் முடிந்து சுமார் ஓராண்டுக்கு மேலாகியும், இலங்கையில் தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைத்த பின்னரும் கூட போரினால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களது சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பியும், தங்கள் சொந்த வீடுகளில் வாழ முடியாத நிலை தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

ஏதாவது ஒரு காரணத்திற்காக தடுக்கப்பட்டு இன்னமும் முகாம்களில் வாழக்கூடிய சோகமான நிலைமை தொடர்ந்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இன்னமும் தற்காலிக முகாம்களில் உள்ள தமிழர்கள் உடனடியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் தத்தமது சொந்த வீடுகளுக்குச் சென்று வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சொந்தப் பகுதிகளுக்குச் சென்று இன்னமும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு உடனடியாக அவர்களுக்குத் தேவையான வாழ்வாதக்ஷிரங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச பரிமாணம் அடைந்துள்ள இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டிய தேவை பற்றி இலங்கை அரசுக்கு பல்வேறு நிலைகளில் இந்திய அரசு நிர்ப்பந்தம் செலுத்தி வருகிறது. இலங்கைத் தமிழர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மத்திய அரசு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாவை இலங்கைத் தமிழர்களுக்காக முறையாக பயன்படுத்தத்தக்க திட்ட வரைவுகளை இலங்கை அரசு செய்திட இன்னமும் முன்வரவில்லை என்பது வேதனையிலும், வேதனையான செய்தி.

எனவே இந்திய அரசு மனமுவந்து இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாவை உடனடியாக இலங்கைத் தமிழர்களுக்காக பயன்படுத்திட இலங்கை அரசாங்கத்தை இந்திய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்று இந்த உயர் நிலை செயற்றிட்ட குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் 73,572 இலங்கைத் தமிழர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மீள்குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி அவர்கள் அனைவரும் தமிழகத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் தீர்மானித்து மத்திய அரசை ஏற்கனவே கேட்டுக் கொண்டும் இதுவரையில் மத்திய அரசு அது குறித்து தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை வருத்தத்தோடு சுட்டிக் காட்டுவதோடு இனியாவது இந்தப் பிரச்சினையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையை கையாண்டு துயருறும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மலேசியாவில் தமிழ் அகதிகள்

இலங்கையிலிருந்து வெளியேறி மலேசியாவுக்கு அகதிகளாகச் சென்ற பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 75 இலங்கைத் தமிழர்கள் மலேஷிய அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மலேஷியாவில் சிறைப்பட்டுள்ள 75 இலங்கை தமிழர்களை காப்பாற்றிட கருணை உள்ளத்தோடு முன்வரவேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டம் முடிந்த பின் நிருபர்களுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி கேள்வி:இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானத்தில் இனியாவது ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் இதுவரை அவர்கள் செய்ததில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று சொல்லலாமா? பதில்: திருப்தியே இல்லை என்று சொல்ல முடியாது.போதுமான அளவுக்கு மனநிறைவு இல்லை. கேள்வி: இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: அனுப்பப்பட்ட பொருட்கள் இன்னும் சரிவர அவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று புகார் இருக்கிறது. அது உண்மையாக இருந்தால் அதை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டுமென்பது எங்களுடைய வேண்டுகோள்.
மேலும் இங்கே தொடர்க...

மீள் குடியேற்ற அமைச்சர் யாழ். விஜயம்


மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ அடுத்தவாரம் யாழ்ப்பணம் விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்-மாநகரசபை உறுப்பினர் எம். முபீன் விடுத்த அழைப்பை ஏற்றே அவர் அங்கு செல்லவுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பணத்தில் மீள் குடியேறிய மக்கள் தத்தமது அன்றாடப் பணிகளில் படிப்படியாக ஈடுபட ஆர்வம் காட்டி வருவதையடுத்து, இவரது விஜயம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

எம் மீதான குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை அவசியமில்லை : கெஹெலிய


இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்தே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு இறைமையுள்ள நாடு. அதன் உள்விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை அதற்கு இருக்கின்றது.

நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு சாதகமான கருத்துக்களை வேறு நாடுகளும் தெரிவித்துள்ளன.

தவறுகளை நாங்களாகவே திருத்திக் கொள்வதில் தற்போது அதிக அக்கறை காண்பித்து வருகின்றோம்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...