5 பிப்ரவரி, 2010



பொது தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுகிறோம்:அநுர பிரியதர்ஷன யாப்பா



எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரே அணியில் ஒன்றிணைந்து போட்டியிடும் இணக்கப்பாட்டுக்காக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுவருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

"பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இப்போது அகில இலங்கை ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பெரும்பாலும் புது முகங்கள் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடலாமென்றும்" என்றும் கூறினார். அதேவேளை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ரஷ்ய முறையில் அரசுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலின் பின்னர் செயற்பட திட்டமிட்டிருந்ததாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது சரகோதரர்கள் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்தபின்னர் சகல அரச திணைக்களங்களிலும் 'பொல்ஷேவிக் குழு'க்களை நியமித்து பணிகளை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
தமிழர் கைது தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை



பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழர் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில், அந்த நாட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிட்னியில் கணக்காளராக பணியாற்றிய ஆறுமுகம் ரஜீவன் என்ற 43 வயதுடைய தமிழரை, கடந்த 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிபதி கோலன் தலைமையில் நடைபெற்றது.கைது செய்யப்படும் போது, தமது பொறுப்புக்களுக்கு மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட கூடாது எனவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது நிதி வழங்கிய தமிழர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

எனினும் அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல், அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுகின்றமை சட்டத்துக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்க இந்தியா தீர்மானம்



பலாலி விமான நிலையத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேபோன்று நாட்டிலுள்ள துறைமுகங்களை மறு சீரமைத்துத் தரவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

"காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீர்படுத்தவும், பருத்தித் துறை துறைமுகத்தை சீர்படுத்தவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அதுபோன்று, பலாலி விமான தளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தித் தரவும் இந்தியா முன்வந்துள்ளது" என்றார்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இந்திய அரசு வழங்கும் கூடாரம் அமைக்கத் தேவையான ஷீட்களின் முதல் தொகுதியை இலங்கை அதிகாரிகளிடம் காந்தா வழங்கினார்


தப்பிச்சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்:இராணுவப் பேச்சாளர்



இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று குறித்த கால எல்லைக்குள் சரணடையாத இராணுவத்தினரை தேடி கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் சுதந்திரதினத்தன்று சரணடையும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இராணுவம் விசேட அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் விடுத்திருந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட விசேட காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையிலேயே சரணடையாதவர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.



பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? விரைவில் தீர்மானம் : சதாசிவம்



தமிழ் மக்கள் அபிப்பிராயத்தின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி எதிர்நோக்கவுள்ளதாக முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ். சதாசிவம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்தறியும் கூட்டம் நேற்று ஹட்டனில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"மலையகத் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளை கையாளுவதற்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகும்.

இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தற்போது மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய அரசியல், தொழிற்சங்க அமைப்பாக இனங்கானப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மலையக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்தலை சந்திக்கவுள்ளோம்.

நாம் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக மலையகமெங்கும் கட்சி உறுப்பினர்களின் கருத்தை பெற்று வருகின்றோம். இதனை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் வாரத்தில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிர்வாக சபை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கும்" என மத்திய மாகாண சபையின் உறுப்பினர் மேலும் சதாசிவம் தெரிவித்தார்


மன்னார்
மீனவர்கள் தொழிலில் ஈடுபட எவ்வித கட்டுப்பாடுமில்லை : அமைச்சர்
றிசாத்




மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபடும் போது நடை முறையில் இருந்துவந்த பாஸ் முறையினை முழுமையாக நீக்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இந்த பாஸ் நடைமுறையினை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தாம் விடுத்த வேண்டுகோளையடுத்து உடனடியாக அந்த நடைமுறை அகற்றப்பட்டது. மீனவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

மீண்டும் சில தினங்களுக்கு முன்னர் கடற்படையினர் பாஸ் நடைமுறையினை ஆரம்பித்ததாக மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனம்,மற்றும் மீனவர் கூட்டுறவு அமைப்பினர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தன. இதையடுத்து,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இவ்விடயம் குறித்து எடுத்துரைத்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். மீண்டும் இவ்வாறான பாஸ் நடை முறையினை நடைமுறைப்படுத் வேண்டாம் என்ற பணிப்புரையினை கடற்படையின் கட்டளையிடும் அதிகாரிக்கும்,மன்னார் மாவட்ட கடற்படை பொறுப்பாளருக்கும் ஜனாதிபதி வழங்கினார்.

தற்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் முன்னைய காலங்களைப் போன்று எந்த நேரத்திலும் கடற்தொழிலில் ஈடுபட முடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.





வடக்கு, கிழக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்




கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு என்று ஒன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனினும் வடக்கு, கிழக்குக்கு அரசியல் தீர்வு தேவை என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஆனால் நாட்டின் தென்பகுதி அனுபவிக்கின்ற மாகாண சபை முறைமை வடக்கிலும் நிறுவப்படவேண்டும். எனவே வடக்கு மாகாண சபை அமைக்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மாகாண அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது,

வடக்கில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை அமைக்கப்படும் என்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

வடக்கில் மாகாண சபை அமைக்கப்படுவதை ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கவில்லை. அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றது. மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள எமது கட்சி வடக்கில் உடனடியாக மாகாண சபை அமைக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவான மாகாண சபை முறைமையினை நாங்கள் எதிர்க்கின்றோம். ஆனால் தென் பகுதியில் மாகாண சபை முறைமை இருக்கின்ற நிலையில் வடக்கில் மட்டும் இயங்காமல் இருக்கின்றமைமயை அனுமதிக்க முடியாது. அது வடக்கு மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகமாகவே அமையும். எனவே வடக்கில் மாகாண சபை அமைய நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.

எனினும் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் வடக்கு கிழக்கு பகுதிக்கு அரசியல் தீர்வு தேவை என்பதனை நிரூபித்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சம நிலைமையிலான அபிவிருத்திகள் மற்றும் வசதிகள் செய்யப்படவேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.


கூட்டமைப்பு,ஜே.வி.பி. ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சிப்போம்:ஐ.தே.க



பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சிகளை எடுப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

"நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் கோரிநிற்கின்ற மாற்றத்தை பெற்றுக்கொடுக்க ஐக்கிய தேசிய முன்னணி அர்ப்பணிப்புடன் செயற்படும். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி யானைச்சின்னத்தில் போட்டியிடும்.

எமது கட்சியின் செயற்குழு இதனை உறுதி செய்துள்ளது. சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக ஐக்கிய தேசிய முன்னணி உள்ளது.

அனைத்து மக்களினதும் உரிமைகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். அந்த வகையில் இந்த தேர்தலில் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு களமிறங்குவோம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் இந்த தேர்தல் மூலமாவது நாங்கள் மக்களுக்கு மாற்றத்தை பெற்றுக்கொடுக்கவேண்டியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய மக்கள் ஆதரவு காணப்படுகின்றது. அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகின்றோம்.



நாளை அல்லது 10 ஆம் திகதி சபை கலைக்கப்பட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல்?



பாராளுமன்றம் நாளை அல்லது எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை கலைக்கப்படலாம் என அரசதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. அந்தவகையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடுகின்றது. இதன்போது அவசரகால சட்ட நீடிப்பு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவே பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும் எதிர்வரும் 10 ஆம் திகதியே சபை கலைக்கப்படக்கூடியதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தல் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதனடிப்படையில் பார்க்கும்போது இவ்வருடம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியுடன் தற்போதைய பாராளுமன்றம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

மேலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நாட்டின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவேண்டும். காரணம் தற்போது நடைமுøறயில் உள்ள கணக்கு வாக்கெடுப்பு ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.

இதேவேளை நாட்டின் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தற்போதிருந்தே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதற்கான வேட்பாளர் நியமன சபைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நாட்டின் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 57.88 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
ஐ.ம.சு. முன்னணியிலேயே தொடர்ந்து இருப்பேன்

மட்டக்களப்பு மாநகர மேயர்



நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே தொடர்ந்து இருக்கப் போவதாகவும் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு விலகவில்லையெனவும் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரனிடம் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு மாநகர மேயராக தொடர்ந்திருக்கப் போவதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்துடன் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பேசியதாகவும் தெரிவித்தார்.

ஒரு போதும் ஐ. ம. சு. மு. வை விட்டு தான் விலகவில்லையெனவும் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...
மதியாமடு பிரதேசத்தில் கண்ணிவெடி, மிதிவெடி அகற்றும் பணி பூர்த்தி

வவுனியா மதியாமடு பிரதேச த்தில் கண்ணி வெடி, மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடைந் துள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ. எஸ். எம். சாள்ஸ் தெரி வித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எதிர்வரும் நாட்களில் மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
தப்பிச் சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்



இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று குறித்த கால எல்லை க்குள் சரணடையாத இராணு வத்தினரை தேடி கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் சுதந்திரத் தினத்தன்று சரணடையும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இரா ணுவம் விசேட அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் விடுத்தி ருந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட விசேட காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையிலேயே சரணடையாதவர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள் ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
ஐ. ம. சு. மு. வேட்பாளர் பட்டியலில் திறமையுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை

விண்ணப்பம் ஏற்பு இன்றுடன் பூர்த்தி; நாளை நேர்முகம்



பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் செயல்திறன் மிக்க புதிய முகங்களுக்கும், இளைஞர்களு க்கும் அதிக இடமளிக்கப்படும்.

இவ்வாறு மேல் மாகாண ஆளுனரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேல், மத்திய, ஊவா மாகாண மட்டத்தில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான குழுவின் உறுப்பினருமான எஸ். அலவி மெளலானா நேற்று தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியின் அபேட்சகர் பட்டியலில் போட்டியிடவிருக்கும் அபேட்சகர்களைத் தெரிவு செய்யவென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மூன்று குழுக்களை நியமித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத் தேர்தலில் ஸ்ரீல. சு. கட்சி சார்பில் ஐ. ம. சு. முன்னணி பட்டியலில் போட்டியிடவிரும்புபவர் கள் இன்று 5 ஆம் திகதிக்குள் தங்களது விண்ணப்பப்படிவங்களை கட்சியின் தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீல. சு. கட்சி சார்பில் ஐ. ம. சு. மு. பட்டியலில் பொதுத் தேர்தலில் போட்டியிடவிரு க்கும் அபேட்சகர்களைத் தெரிவு செய்யவென ஸ்ரீல. சு. க. மூன்று குழுக்களை நியமித்துள்ளது. வட மேல், வட மத்திய, கிழக்கு, வடக்கு ஆகிய மாகாண மட்ட அபேட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட் டிருக்கின்றது.

அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன தலைமையில் மேல், மத்திய, ஊவா மாகாண மட்ட அபேட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டி ருக்கின்றது.

இவ்விரு குழுக்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (8 ம் திகதி) காலை 10 மணிக்கு மகாவலி நிலையத்தில் கூடி நேர்முகத் தேர்வு நடத்தும்.

தென் மற்றும் சப்ரகமுவ மாகாண மட்ட அபேட்சகர்களை தெரிவு செய்வதற்கான குழு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 9 ம் திகதி மகா நிலையத்தில் கூடி நேர்முகத் தேர்வுகளை நடத்தும்.

வேட்புமனு தொடர்பான மேன்முறைகளை மேற்கொள்ளவென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஒவ்வொரு குழுவும் ஆறு பேர் படி உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
முப்படைகள், பொலிஸ் அணிவகுப்புகளுடன் கண்கவர் கலை, கலாசார நிகழ்ச்சிகள்

கண்டி நகரில் கோலாகலம்


இலங்கையின் 62 வது சுதந்திர தினம் நேற்றுக்காலை கண்டி ஸ்ரீ தலதாமாளிகை வளாக மஹமலுவவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

புஅர்ப்பணிப்போம் தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம்பூ எனும் தொனியில் நடைபெற்ற இச் சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.

ஜே. எம். லொக்குபண்டார உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எம்.பிக்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், கலைஞர்கள், மதத்தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

முப்பது வருடகால பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாடு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள அமைதிச் சூழலில் நடைபெறும் சுதந்திர தின விழாவாக இம்முறை இந்நிகழ்வு வெகு கோலாகல மாகக் கண்டியில் கொண்டாடப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதாமாளிகை வளாகத்தில் கண்டி வாவியையொட்டியதான எழில் மிகு சூழலில் இம்முறை 62 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

நேற்றுக்காலை 6.30 மணிக்கு கண்டி ஸ்ரீ தலதாமாளிகை, கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தானம், மீராமக்காம் பள்ளிவாசல், புனித அந்தோனியார் பேராலயம், புனித சின்னப்பர் ஆலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற சமய வழிபாடுகளுடன் சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.

கொழும்பிலும் கண்டியிலும் உள்ள தேசபிதா டீ. எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி கெளரவம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த முக்கியஸ்தர்களின் வருகை இடம்பெற்றது.

நேற்றுக்காலை 8.47 மணியளவில் ரம்பட் வாத்திய இசை முழக்கத்தின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்பதிகளின் வருகை இடம்பெற்றது. முப்படைத் தளபதிகள் பிரதம பதவி நிலை பாதுகாப்பு உத்தியோகத்தர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரினால் வழங்கப்பட்ட கெளரவ மரியாதைக்குப்பின் மங்கள மேளம் சங்கொலி நாதத்திற்கு மத்தியில் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

இம்முறை தேசிய கீதம் இசைப்பதில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி, கண்டி பதியுதீன் மொகமட் மகளிர் வித்தியாலயம், பேராதனை இந் துக் கல்லூரி மாணவ, மாணவிகள் உட் பட கண்டி, கொழும்பு, தங்காலை, மஹி யங்கனை மாணவ மாணவிகள் நூறுபேர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பாடசாலை மாணவிகளின் ஜயமங்கள கீதத்தைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படைகளின் மரியாதை அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இலங்கையின் 62 வது சுதந்திர தின பிரதான தேசிய நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

சுதந்திர தின நிகழ்வையொட்டி கண்டி நகரம் பூரண பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டி ருந்ததுடன் நகருக்குள் போக்குவரத்து நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட் டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
அர்ப்பணிப்பு, ஊழலற்ற சேவை மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும்

கண்டி சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி உரை

* அரசியல் தலைவர்கள் மக்களை தவறாக பயன்படுத்தக் கூடாது
* தாய்நாட்டையும் மக்களையும் குறுகிய சிந்தனையுடன் நோக்க வேண்டாம்
* தண்டனை, இராணுவ சட்டதிட்டங்கள் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது
* அரசியல் பலத்தைப் பாதுகாக்க எந்தச்சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுத்ததில்லை

(கண்டியிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், எம். ஏ. அமீனுல்லா)

தண்டனை, இம்சை, இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள், ஊழல் மோசடியற்ற சேவை மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமது அரசியல் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எச்சந்தர்ப்பத்திலும் எத்த கைய தீர்மானத்தையும் மேற்கொண்ட தில்லையென தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது காட்டிக்கொடுக்கப்போவ தில்லையெனவும் தெரிவித்தார்.

இலங்கையின் 62வது சுதந்திரதின தேசிய நிகழ்வு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

கடந்த 30 வருடங்களின் பின்னர் பயங்கரவாத அச்சுறுத்தலற்ற நாட்டில் கொண்டாடப்படும் முதலாவது சுதந்திர தினம் இதுவாகும். சுதந்திரமடைந்துள்ள நாட்டின் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி யடைகிறேன்.

1815ம் ஆண்டு எமது சுமங்கல தேரர் பிரித்தானிய கொடியை இறக்கிவிட்டு எமது தேசிய கொடியை ஏற்றியதை நினைவு கூரும் அதேவேளை சுதந்திரத்துக்காக அர்ப்பணித்த மதகுருமார்களுக்கும் எனது கெளரவத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்திரம் என்பது பொறுப்பைக் குறிக்கின்றது. ஜனவரி 26ம் திகதி இந்நாட்டு மக்கள் கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைவிட பெருமளவு வாக்குகளால் என்னை வெற்றிபெறச் செய்தனர். மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னிடம் மாபெரும் பொறுப்பினைக் கையளித்துள்ளனர்.

பிமுதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமான எனது முதன்மையான விருப்பு எமது தாய் நாடேபீ, இதனை நான் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளேன். நன்றிக்கடன் மிகுந்த நாட்டின் மக்களுடன் வாழக்கிடைத்ததிலும் இக்காலகட்டத்தில் இந்நாட்டின் தலைவராக பதவி வகிப்பதையும் நான் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.

தாய்நாட்டை ஒன்றிணைக்க எனக்கு உறுதுணை புரிந்த இந்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. தாய் நாட்டைப் பாதுகாத்து ஒன்றிணைத்த எனக்கு வழங்கப்பட்டுள்ள சகல இன மக்களினதும் மனங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பையும் நான் நிறைவேற்றுவேன்.

சகல இன மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தை ஏற்படுத்துவது உன்னதமான தொரு செயற்பாடாகும். அதனை நான் முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளேன். அன்று தேசபிதா டீ. எஸ். சேனநாயக்க சுதந்திரம் கிடைத்த பின்னர் கூறிய சுதந்திரமென்பது துன்பங்களைக் குறைத்து இன்பங்களைப் பெருக்குவதே என்ற கூற்றே இன்று மக்களினதும் பிரார்த்தனை யாகவுள்ளது.

1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்துக்கு மேலானதொரு சுதந்திரத்தை நாம் நமது தாய் நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்தவகையில் கடந்த நான்கு வருடங்களை நாம் அர்த்தமுள்ளதாக்க முடிந்துள்ளது.

இக்காலமானது தாய்நாட்டை ஒன்றிணைத்து பிரதிபலன்களை பெற்றுக் கொள்ளும் யுகமாகும். யுத்தத்தை முடி வுக்குக் கொண்டு வந்ததில் யுத்தத்திற்கான செலவு மாத்திரம் மீதமானதாகக் கருதக் கூடாது.

இப்போது உலகில் சுற்றுலாவுக்கான சிறந்த நாடாகவும், முதலீடுகளுக்கான சிறந்த நாடாகவும் இலங்கை நிகழ்கிறது. அண்மைக்கால கணிப்பீடுகளின் பெறுபேறு இலை. அத்துடன் ஆசியாவில் சீனாவுக்குச் சமமானதாக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாகவும் இலங்கை பேசப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து எட்டு மாதங்களே கடந்துள்ள நிலையில் இத்தகைய வெற்றிகளை எம்மால் ஈட்ட முடிந்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்திலும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்தமையே இதற்கு வாய்ப்பாகியது.

நாட்டு மக்கள் யுத்தத்தின்போது இழந்த அனைத்தையும் மீளப்பெற்றுக் கொள் வதற்காகவே மீண்டும் என்னிடம் மகத்தான பொறுப்பை வழங்கியுள்ளனர்.

யுத்தத்தினால் பின்னடைவு கண்ட நாட்டை வேகமாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

சமாதானம் மட்டுமன்றி ஊழல், மோசடி களற்ற நாடொன்றைக் கட்டியெழுப்புவதும் எம் முன் உள்ள பொறுப்பாகிறது. ஏனைய நாடுகளின் முன்னேற்றத்தைச் சொல்லிக்கொண்டு எமது மக்களை குறைகூறுவது பிரயோசனமற்றது. அந்நாட்டவர்களை பின்தள்ளி முன்னேறிச் செல்ல முடியுமென்பதை பல வெற்றிகள் மூலம் நாம் நிரூபித்துள்ளோம்.

நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக அரசதுறை மட்டுமல்லாது தனியார் துறையின் பங்க ளிப்பும் அவசியம் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். யுத்தத்தினால் நலி வடைந்த தனியார்துறை தற்போது மீள புத்துயிர் பெற்று வருகிறது.

நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தும், மக்கள் சேவையாக நம்பிக்கை மிகுந்த அரச சேவையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வீரர்களை நான் பாதுகாப்பேன். கடந்த காலங்களில் அவர்கள் மீது நான் காட்டிய கரிசனையை மக்கள் அறிவர்.

பலமான கேந்திர நிலையமாக இலங் கையைக் கட்டியெழுப்புவோமென நாம் மஹிந்த சிந்தனைக் கொள்கையில் தெரி வித்திருந்தோம். எதிர்காலத்தில் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பொருளாதார, சமூக, அரசியல் பிரதிபலன்களை நாம் மக்களுக்குக் கிட்டச் செய்வோம்.

அழுகையும் துயரமுமான யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். மகிழ்ச்சியையும் கலாசாரப் பெறுமதிகளையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் இந்நாட்டுக் கலைஞர்களுக்கும் பொறுப்புகள் உள்ளன.

மரணபயம், வறுமை போன்ற காரணங் களினால் நாட்டைக் கைவிட்டுச் சென்றவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக இந்நாட்டுக்குத் திரும்பிவரும் நிலையில் தாய் நாட்டை நாம் கட்டியெழுப்பவேண்டும். அதற்காக நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

வீதித் தடைகள் மட்டுமல்ல, பொரு ளாதாரத்திற்குத் தடையாக நிலவும் நிர்வாகத் தடைகளையும் நாம் சரிசெய்வது முக்கியமாகும்.

எமது தாய்நாட்டையும் நாட்டு மக்களையும் குறுகிய சிந்தனையுடன் நோக்க வேண்டாமென நான் எப்போதும் தேசிய :ஞுரிபீ>: ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.

வடக்கு, கிழக்கை மீட்டு பாரிய அபிவிருத்தியை அப்பிரதேசங்களில் முன்னெடுத்துள்ளோம். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் திட்டங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலும் தற்போது பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகளை இழந்திருந்த வடக்கு மக்களுக்கு நாம் மீண்டும் ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதுவே எமது அண்மைக்கால பெருவெற்றி எனக் குறிப்பிட முடியும். அப்பிரதேச மக்கள் சுதந்திரமாக நடமாட தமது பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரஜைகளையும் வலிமைப்படுத்தக்கூடிய தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் பட்சத் தில் மக்கள் தாம் சொந்தக் காலில் நிற் கும் நிலை உருவாகும் என்பதே எனது நம்பிக்கை.

மஹிந்த சிந்தனை எதிர்கால தரிசனத் தினூடாக அப்பிரதேசத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

அரசியல் தலைவர்கள் மக்களைத் தவறான வழியில் வழி நடத்தக்கூடாது. இந்நாட்டில் இனி மத, இன, பிரதேச நீதியான குறுகிய நோக்குடைய அரசியல் வேண்டாம். சகோதரத்துவம், சமாதானம், சகவாழ்வு, அபிவிருத்தி, சுபீட்சம் இதுவே எமது நோக்கம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்நாட்டைக் கட்டியெழுப்பு வோம்.

எமது வெளிநாட்டுக் கொள்கை சிறப்பாக உள்ளது. எமது அயல் நாடான இந்தியா, சீனாவுடனான நட்புறவைப் போலவே மேற்கத்தைய மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் எமக்கு நெருங்கிய நட்புறவுள்ளது. முதலில் நாம் எமது நாடு என்ற ரீதியில் சிந்திப்பது அவசியம்.

நான் நாட்டை முன்கொண்டதாகவே சகல தீர்மானங்களையும் எடுத்துள்ளேன். ஒருபோதும் அதிகாரத்தைத் தக்க வைப் பதற்காக நான் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லை.

அதேபோன்று எமது சுயநலத்துக்காக நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது நான் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. அதிகாரத்தைப் பாது காப்பதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் பின்போடப்போவதுமில்லை.

அதே போன்று நாட்டை முன்னேற்றுவதற்காக எத்தகைய கஷ்டமான நிலையிலும் ஆயிரமாயிரம் தடைகளையும் தாண்டிச் செல்ல நாம் தயார்.

நான் நாட்டு மக்களிடம் கிரீடம் சூட்டுமாறு கேட்கவில்லை. எனினும் நாட்டு மக்களுக்கும் அவர்களது பிள்ளை களுக்கும் சுதந்திரம், செளபாக்கியம், வீரத்துவம் போன்ற கிரீடங்களை சூட்டியுள்ளேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...