கிளிநொச்சி செயலகத்தின் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளை உடனடியாக
ஆரம்பிக்க பணிப்பு
செயலகத்தைத் திருத்தியமைத்து உடனடியாக அங்கு சிவில் நிர்வாகச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கிளிநொச்சி பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி கிளிநொச்சி மாவட்டத்திற்குத் தற்போது பொறுப்பாகவுள்ள முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரைக் கேட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பூனகரி பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகத்திற்கான உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே கிளிநொச்சி அரச செயலகத்தைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ இணைப்பதிகாரியின் மேற்பார்வைக்குள் துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேசங்களும் அடங்குவதனால், அந்தப்பிரதேசத்தின் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளுக்கென ஒரு பகுதியை கிளிநொச்சி செயலகத்தில் தொடங்குமாறும் இராணுவ இணைப்பதிகாரி கேட்டுள்ளதாகவும் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதனயைடுத்து, கிளிநொச்சி செயகலத்தைப் புனரமைக்கும் துரித பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்