22 ஏப்ரல், 2010

நெடுங்கேணி, ஒலுமடு மற்றும் மல்லாவி பகுதிகளில் கிணறுகளை துப்புரவு செய்து கொடுக்கும் பணியில் புளொட் உறுப்பினர்கள்-




புளொட் அமைப்பின் வேண்டுகோளுக்கமைய பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட நான்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வடக்கில் மீள்குடியமர்ந்த மக்களின் கிணறுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தவகையில் அவற்றைக் கொண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நெடுங்கேணி, ஒலுமடு, பெரியமடு பிரதேசங்களிலுள்ள கிணறுகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கிணறுகளில் நீர் இறைத்து துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் நெடுங்கேணி, ஒலுமடு பிரதேசம் மாத்திரமன்றி ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் இன்னுமொரு நீர் இறைக்கும் இயந்திரம் மல்லாவிப் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள பாண்டியன்குளம், தேராங்கண்டல், ஐயங்குளம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பொதுமக்களின் கிணறுகளை இறைத்துக் கொடுத்து துப்புரவு செய்யும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மல்லாவி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி நீர் இறைக்கும் இயந்திரங்களில் ஒன்று வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன். அப்பிரதேசத்திலுள்ள கிணறுகளிலும் தண்ணீர் இறைக்கும் பணிகள் இடம்பெற்று கிணறுகள் துப்புரவாக்கப்பட்டு வருகின்றன. புளொட் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இப்பணிகளை புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் தலைமையிலான பிரதிநிதிகள் நேரடியாகப் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்து வருவதுடன், நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கான எரிபொருள் உள்ளிட்ட மேலதிக தேவைகளையும் வழங்கி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து புளொட் உறுப்பினர்கள் வடக்கில் மீள்குடியமர்ந்த மக்களுக்காக கிணறுகளை இறைத்து துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா கைது: நடிகை ரஞ்சிதா அதிர்ச்சி ஐதராபாத்தில் தலைமறைவு






நடிகை ரஞ்சிதாவால் நித்யானந்தா சாமியார் ஜெயிலுக்கு போகிறார். இமாசல பிரதேசத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்து வந்துள்ளனர். கற்பழிப்பு, மோசடி, மிரட்டல், குற்றச்சாட்டு செயல்களுக்கு உடந்தை என பல வழக்குகள் அவரை இறுக்குகின்றன. நித்யானந்தா கைது ரஞ்சிதாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருவரும் படுக்கை அறையில் நெருக்க மாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ, டி.வி.யில் வெளியாகி ஒன்றரை மாதங் கள் ஆகி விட்டன. இதுவரை போலீஸ் அமைதியாக இருந்த தால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றே ரஞ்சிதா கருதினார். சாமியாருக்கு பணி விடை தான் செய்தேன் என்று விளக்கம் அளித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ஆபாச வீடியோவில் ரஞ்சிதாதான் சாமியாரை பல வந்தம் செய்கிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சிலர் அறிக்கை விட்டனர். வக்கீல்கள் சென்னை போலீஸ் கிஷனரிடம் ரஞ்சிதாவை கைது செய்யும்படி மனு அளித்தனர்.

ரஞ்சிதா மீது வழக்குப்பதிவு செய்யப்படா விட்டாலும் அவர் பயந்தார். தியாகராய நகரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு வெளியேறினார்.அமெரிக்காவில் சகோதரி வீடு உள்ளது. அங்கு போய் சில வாரங்கள் தங்கினார். கைது நடவடிக்கை இருக்காது என்று உறுதியாக தெரிந்து கடந்த வாரம் தான் அவர் இந்தியா திரும்பினாராம்.

நித்யானந்தா தொடர் பிலும் பாதுகாப்பிலும் தற்போது ரஞ்சிதா இருக்கிறார் என்று இருவரையும் ஆபாச வீடியோ படம் எடுத்த லெனின் கூறினார்.இந்த நிலையில் தான் போலீசார் அதிரடியாக இறங்கி சாமியாரை கைது செய்துள்ளனர். ஆசிரமத்தில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதில் ரஞ்சிதாவுக்கு எதிராக சில ஆவணங்கள் இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

சாமியார் மேல் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து இருப்பதால் அவருக்கு எதிராக ரஞ்சிதாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முயற்சிக்கின்றனர். தன்னை மயக்கியோ அல்லது பயமுறுத்தியோ படுக்கையில் பயன்படுத்திக் கொண்டார் என்று ரஞ்சிதா கூறினால் அது தங்கள் வழக்குக்கு வலுவாக அமையும் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனவே அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது. ரகசிய போலீசார் ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கண் காணிக்கின்றனர். போலீஸ் தேடுவதால் ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள தோழி வீட்டில் தங்கி இருந்தாராம். இப்போது அந்த இடத்தை மாற்றி விட்டார். புதிதாக வாங்கி இருந்த செல்போனையும் “சுவிட்ச் ஆப்” செய்து விட்டார்.

இந்த வழக்கில் ரஞ்சிதா முக்கியம் என்பதால் அவரை வெளிகொண்டு வந்து அவரது தரப்பு வாக்கு மூலத்தை பெறுவது உறுதி என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம்




நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கருத முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டில் வசிக்கின்ற சகல மக்களுக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கக் கூடிய வகையில் இந்த நாடாளுமன்றம் அளப்பரிய பணியொன்றை ஆற்ற வேண்டியுள்ளது" என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.கூட்டணியிலிருந்து விலகினார் மனோ கணேசன்



ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியுள்ளதாக முன்னணித் தகவல்கள் சற்று முன்னர் தெரிவித்தன.

அதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் செயற்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.தே.முன்னணியிலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா? : விரைவில் மனோ விளக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகிய ஜனநாயக மக்கள் முன்னணி தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சற்றுமுன்னர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை என்பதால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் ஜனநாயக மக்கள் முன்னணியைத் தமது கூட்டமைப்பிலிருந்து நீக்கியதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தமது கட்சி சுயமாக முடிவெடுத்து விலகியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகம் தெரிவிக்கிறது.

கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இருவரை கடந்த பொதுத் தேர்தலில் நிறுத்துவது தொடர்பில் ஏற்கனவே ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மனோ கணேசனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவியது.

அது தொடர்பான கூட்டமொன்றில் கட்சியுடன் முரண்பட்ட மனோ கணேசன், இடைநடுவே எழுந்து வந்து தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், தோல்வியுற்றதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் விரைவில் (இன்று அல்லது நாளை) தனது முடிவினை அறிவிப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சரத் பொன்சேகா பங்கேற்பு


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சரத் பொன்சேகா பங்கேற்பு
ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. இக்கூட்டத் தொடரில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

புதிய சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு




இலங்கையின் 7ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு. ஜயரட்ன முன்மொழிந்தார். எதிர்க்கட்சியின் உப தலைவர் கருஜயசூரிய வழிமொழிந்தார்.

இன்று காலை 8.00 மணிக்கு நாடாளுமன்ற முதலாவது அமர்வின் கூட்டத்தொடர் ஆரம்பமான போதே மேற்படி தெரிவு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மொபைல் போனில் கனடாவுக்கு பேசிய நளினி: மகளிடமும் பேசியது அம்பலம்








வேலூர் : ராஜிவ் கொலையாளி நளினியிடம் பறிமுதல் செய்த மொபைல் போனில் இருந்து அதிகளவு கனடா நாட்டுக்கு பேசியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள், வேலூர் பெண்கள் சிறைக்கு நேற்று வந்து விசாரணை நடத்தினர். நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போன்கள், சிம் கார்டுகளை ஆய்வு செய்தனர். அதில், நளினி வைத்திருந்தது புதிய ரக 'நோக்கியோ' மொபைல் போன் என்பதும், அது இயங்கிய நிலையில் இருந்தது என்றும் சிங்கப்பூர் எண்ணில் அவர் பேசிக் கொண்டிருந்ததும், சென்னையில் பதிவு செய்த எண் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. மொபைல் போனில் இருந்து நளினி யார், யாரிடம் பேசினார் என சிறை அதிகாரிகள் சிம்கார்டை ஆய்வு செய்தனர். சமீபகாலமாக நளினி இங்கிலாந்து, கனடா நாடுகளுக்கு அதிகம் பேசியிருப்பது தெரிய வந்தது.

நளினியின் மகள் ஹரித்திரா, லண்டனில் தன் தந்தைவழி உறவினர்களுடன் தங்கி இருக்கிறார். அவருடன் மட்டும் கடந்த மூன்று மாதத்தில் 50 முறை பேசியதும் தெரிய வந்துள்ளது.மேலும், நளினிக்கு அதிகளவில் இலங்கை, கனடா, சிங்கப்பூரில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. தினம் 50 எஸ்.எம்.எஸ்.,கள் வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நளினியை பிடித்தது எப்படி? சென்னை சிறைத்துறை அதிகாரிகளுக்கு, நளினி மொபைல் போன் வைத்திருக்கும் விவரம் ஐந்து நாட்களுக்கு முன் தான் தெரிந்தது. மூன்று நாட்களாக நளினி அறையை சிறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். நளினி, செல்லில் இருக்கும் போது மெல்லிய குரலில் பேசுவது தெரிந்ததும், அவருக்கு தெரியாமல் ஒட்டுக்கேட்ட போது மொபைலில் பேசியது தெரிந்தது.நேற்று முன்தினம் அவரது அறைக்கு அதிரடியாக நுழைந்து ஆய்வு நடத்திய போது மொபைல் போன் சிக்கியது. நளினி, மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் போது சிறை அதிகாரிகள் வந்து விட்டதால், மொபைலை துணிக்குள் மறைத்துக் கொண்டார்.சிறைக் காவலர்கள் சோதனையிட வந்த போது மொபைலை கழிவறைக்குள் போட்டு தண்ணீர் ஊற்றி விட்டார். பின், கழிவறை குழாயை உடைத்து தான் மொபைல் போனை எடுத்ததாக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைக்குள் மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி இல்லை என்பதால், அவருக்கு நெருக்கமான சிறைக்காவலர்கள் மூலம் இரு நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.சிறையில் உள்ள நளினிக்கு நெருக்கமான சிறைக் காவலர்கள் மூலமாகத்தான் மொபைல் போன் உள்ளே வந்துள்ளது.இதையடுத்து, நளினிக்கு நெருக்கமான சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்களை கண்டுபிடிக்கும் முயற்சி நடப்பதால், பெண்கள் சிறையில் வேலை பார்ப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சிறை விதிகளின்படி 45 குற்றங்கள் சிறை விதிகள் மீறியதாக கருதப்படுகின்றது. அதில், மொபைல் பயன்படுத்துவதும் ஒன்று. இந்த விதிபடி தவறு செய்தவர்கள் மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.'மொபைல் போன் குறித்து விசாரணை முடிந்த பின், பாகாயம் போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், நளினியிடம் மொபைல் கைப்பற்றியது தொடர்பாக பத்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்' என, சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

அதிரடி சோதனை: வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீதர், பர்மா சீனு, சிலோன் சேகர், கோல்டு காயின் சூரியா, கட்டபஞ்சாயத்து ராஜா ஆகியோரிடத்திலும் மொபைல் போன் இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.வேலூர் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 போலீசார் வேலூர் பெண்கள் சிறையில் நேற்று காலை 6 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர். காட்பாடி டி.எஸ்.பி., பட்டாபி தலைமையில் 100 போலீசார் வேலூர் ஆண்கள் சிறையில் சோதனை நடத்தினர்.ஐந்து மணி நேரம் நடந்த சோதனையில் கஞ்சா, பீடி, சிகரெட், மது பாட்டில்கள் சிக்கியதாக தெரிந்தது.

வக்கீல் மறுப்பு : நளினியின் வக்கீல் புகழேந்தி நேற்று காலை 11. 30 மணிக்கு பெண்கள் சிறைக்கு வந்தார்.

ஒன்றரை மணி நேரம் நளினியிடம் பேசி விட்டு வெளியே வந்த வக்கீல் புகழேந்தி கூறியதாவது:நளினியிடம் மொபைல் போன் பறிமுதல் செய்ததாக வந்த தகவல்களையடுத்து, சிறையில் என்ன நடந்தது என்பதை அவரிடம் கேட்க வந்தேன். மொபைல் போன், சிம் கார்டுகள் எதுவும் கைப்பற்றவில்லை' என, நளினி தெரிவித்தார். வேலூர் பெண்கள் சிறை நிர்வாகம் திட்டமிட்டு நளினி மீது பொய்யான குற்றம் சுமத்தியுள்ளது.நளினி மீது சுமத்தப்பட்ட இந்த பொய்யான குற்றத்தை சட்டரீதியாக எதிர் கொள்வோம். வேலூர் பெண்கள் சிறை நிர்வாகம், இங்குள்ள கைதிகளுக்கு செய்யும் கொடுமைகள் குறித்து சிறைத்துறை தலைவருக்கு நளினி கடந்த 12ம் தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.இதனால், பயந்து போன சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சில வார்டன்கள், நளினியை பழி வாங்க இப்படி பொய்யான குற்றச்சாட்டை நளினி மீது சுமத்தியுள்ளனர். பிரபாகரன் தாயாருக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. இது மக்கள் மத்தியில் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த பிரச்னையை திசை திருப்பி விட தமிழக அரசு நளினி மீது குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிகிறது.இவ்வாறு புகழேந்தி கூறினார்.

நளினி மீது வழக்கு பதிவு : ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 19 ஆண்டாக தண்டனை அனுபவித்து வரும் நளினியிடம் இருந்து மொபைல்ஃபோன் மற்றும் இரு சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று இரவு வேலூர் பாகாயம் போலீஸார் நளினி மீது வழக்கு பதிவு செய்தனர். எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் போலீஸார் கூற மறுத்துவிட்டனர்.

மதுரை சிறையில் மொபைல் போன்: மதுரை மத்திய சிறையில் சிறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த தண்டனைக் கைதி கருப்புசாமி(33), சிறை கழிவறையில் மொபைலில் பேசிய போது, சிக்கினார். அவரிடம் இருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அலுவலக பொறுப்பாளர் மாரியப்பன், கரிமேடு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.மதுரை மத்திய சிறையில் மொபைல் போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்படுவது புதிதல்ல. இதற்கு முன் நடந்த பல சோதனைகளில் மொபைல் போன்கள் சிக்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

சந்திரன், செவ்வாயில் தண்ணீர் அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்



வாஷிங்டன்: சந்திரனிலும், செவ்வாயிலும் தண்ணீர் இருப்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது சம்பந்தமான ஆய்வு ஒன்றை அவர்கள், சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்தியாவின் 'சந்திரயான்,' சந்திரனில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்தது. இதையடுத்து, அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள, 'லூனார் அண்டு பிளானட்டரி இன்ஸ்டிடியூட்' விஞ்ஞானிகள், அதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். அத்தோடு, செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் இரண்டு ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். முதல் ஆய்வறிக்கை, சந்திரன் மற்றும் செவ்வாயில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இரண்டாவது அறிக்கை, தண்ணீர் எவ்விதத்தில் இரு கிரகங்களிலும் இருக்கிறது என்பதை விவரிக்கிறது.அதன்படி, செவ்வாயில், சமீபத்தில் பனி உருகி, பின் இறுகி பனிக்கட்டியாக இருக்கிறது. அதற்கான ஆதாரமாக, நீர் ஓடிய தடம் அங்கு காணப்படுகிறது. அதன் அகலம் ஆறு அடி; நீளம் 400 அடி.

மேலும் இந்த தடத்திலிருந்து, பல இடங்களில் கிளை கால்வாய்கள் ஓடியிருக்கின்றன. சந்திரனிலும் இதே போன்று பனிக்கட்டிகள், ஆங்காங்கே உறைந்து கிடக்கின்றன. இது குறித்து லூனார் இன்ஸ்டிடியூட்டின் பால் ஸ்படிஸ் என்பவர் கூறுகையில், 'தண்ணீரின் மூலக்கூறுகள் கொண்ட வால் நட்சத்திரம் அல்லது எரி நட்சத்திரம் சந்திரனில் மோதியதால் தண்ணீர் சந்திரனில் உருவாகியிருக்கக் கூடும்.

சந்திரனில் காணப்படும் பள்ளம் வழக்கத்துக்கு மாறானதாக இருந்தாலும் அதில், ஆறடி முதல் 10 அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் காணப்படுகின்றன' என்று தெரிவித்தார்.மேலும் இந்த இரண்டு ஆய்வறிக்கைகளும், சூரியக் குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும் ஆராய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புது சீடருடன் செக்ஸ் சாமியார் நித்யானந்தா சிக்கினார்





பெங்களூரு : ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். குடிசை வீட்டிலிருந்த அவரும், அவரது சீடர் ஒருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம், 7,000 அமெரிக்க டாலர், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த தகவல் வெளியானது. இந்த தகவலால் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடம் உட்பட இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரமத்தின் ஒரு பகுதியில் இருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. நித்யானந்தா, ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்றிருப்பதாக, ஆசிரமவாசிகள் தெரிவித்தனர். பிடதி தியான பீடத்திலிருந்து அவரது சீடர்கள் பலர் வெளியேறினர். சீடர்களில் ஒருவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நித்ய தர்மானந்தா என்கிற லெனின், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் கூறினார். நித்யானந்தா சம்பந்தப்பட்ட 'சிடி'யையும் அவரிடம் ஒப்படைத்தார். சாமியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு விரோதமாக செக்ஸ் உறவு வைத்தல், கொலை மிரட்டல், சதி செய்தல் என ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்குகள் தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகாவில் நடந்துள்ளதால் வழக்குகள், கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா, மூன்று முறை வீடியோவில் தோன்றி, தன் நிலையை விளக்கினார். நித்யானந்தா மீதான இரு வழக்குகளை தவிர, மற்ற வழக்குகள் அனைத்தையும் கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சி.ஐ.டி., போலீசார், பிடதி ஆசிரமத்தில் மூன்று முறை சோதனையிட்டனர். அங்கு முக்கிய தஸ்தாவேஜுகளை கைப்பற்றினர். இந்த சூழ்நிலையில் சாமியார் நித்யானந்தா, ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். கடந்த 20ம் தேதி நித்யானந்தா ஆசிரமத்தில், சி.ஐ.டி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர். முக்கியமான டாக்குமென்டுகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சி.ஐ.டி., போலீசார் நடத்திய சோதனையில், நித்யானந்தா இருக்குமிடம் தெரியவந்தது.

இதே வேளையில், நித்யானந்தாவை , சி.ஐ.டி., போலீசார், இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியாக தேடி வந்தனர். இமாச்சல பிரதேச போலீசாருடன் இணைந்து, கர்நாடகா மாநில சி.ஐ.டி., போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, அங்குள்ள சோலன் மாவட்ட அர்கி என்ற இடத்தில் நித்யானந்தா இருப்பதாக தகவல் கிடைத்தது. இரு மாநில போலீசாரும் அங்கு விரைந்தனர். நித்யானந்தாவும், அவருடன் இருந்த நித்ய பக்தானந்தா என்ற கோபால் சீலம் ரெட்டியும் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முன்ஜாமீன் கோரிய மனுவில், நித்யானந்தாவின் கையெழுத்து வாங்குவதற்காக நித்ய பக்தானந்தா இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது தான் அவரும் பிடிபட்டார். இமாச்சல பிரதேசத்தில் நித்யானந்தாவும், நித்ய பக்தானந்தாவும் குடிசை போன்ற வீட்டில் இருந்தனர். போலீசார் அவ்வீட்டை சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். அந்த வீட்டிலிருந்த லேப்-டாப், மூன்று லட்சம் ரூபாய் பணமும், ஏழு ஆயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அர்கி கோர்ட்டில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட பின், முறைப்படி அனுமதி பெற்று, பெங்களூருக்கு அவர்களை போலீசார் அழைத்து வருகின்றனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு, நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹூன்குந்த் உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

21.04.2010 தாயகக்குரல்

225 உறுப்பினர்களைக் கொண்ட ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை நடைபெறும். பொதுத் தேர்தலின்போது முறைகேடுகள் நடந்ததாக கண்டி நாவலப்பிட்டி, மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் இறுதி தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. மேற்படி இடங்களுக்கான மறுதேர்தல் நேற்று நடைபெற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப் பட்டியல் உட்பட 144 பிரதிநிதி;களைப் பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 150 பிரதிநிதிகளைப் பெற அரசுக்கு இன்னும் ஆறு பிரதிநிதிகள் தேவை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு பலகட்சிகளுடன் பேச்சு நடத்தப் போவதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் இலாபத்தைக் கருத்தில் கொள்ளாது தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்கும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேட்ட அரசுக்கு அந்த பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. வடக்கு கிழக்கு மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமே தமது ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் ஒத்துழைக்க இரண்டு நிபந்தனைகளை அறிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை வைக்கவேண்டும். மீள்குடியேறிய மக்களின் உடனடிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பது அந்த நிபந்தனைகளாகும்.

தமிழ் மக்களிடம் இருந்து தமக்கு மக்கள் ஆணை கிடைத்திருப்பதாகவும் அரசு அதை மதித்து செயல்படவேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அர்த்தம்தான் என்ன?. தமிழ் தரப்பில் தங்களுடன் மட்டும்தான் அரசு பேசவேண்டும் என கூறுகிறார்களா?.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தங்களை அனுப்பும்படி ஆணை கேட்டுத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 பிரதிநிதிகளைப் பெற்றுள்ளது. எனவே இவர்களும் மக்கள் ஆணையை மதித்து எதிர்ப்பு அரசியலை விட்டு தந்திரோபாயமான செயல்பாடுகளால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும். இல்லையேல் 5 வருடத்தின் பின்னர் மீண்டும் மக்களாணை கேட்டு மக்களிடம் செல்லமுடியாத நிலை ஏற்படலாம்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை வைக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கேட்கிறது. மக்கள் பிரதிநிதிகளான இவர்களல்லவா மக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய அரசியல் தீர்வு என்ன என்பதும் அதை எவ்வாறு வென்றெடுக்கலாம் என்பதில் தெளிவான நிலைப்பாடும் இருக்கவேண்டும்.

தமிழ் கூட்டமைப்புக்கு மக்களாணை கிடைத்துவிட்டது. ஆகவே மக்கள் ஆணையை அரசு மதிக்கவேண்டும் என்று கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரா.சம்பந்தன் யாழ்ப்பாண வாக்களிப்பு வீதம் குறைந்ததையிட்டு கவலை தெரிவிக்கிறார். அதற்கு காரணம் மக்களுக்கு அரசு மேல் கொண்ட நம்பிக்கையின்மையே என்றும் காரணம் கூறுகிறார். யாழ் மக்கள் அரசின்மேல் நம்பிக்கையின்மை கொண்டிருந்தால் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்று பிரதிநிதிகளை தேர்ந்திருக்க தேவையில்லை. தமிழ் தேசியக் கூட்மைப்பின் மேல் உள்ள நம்பிக்கையின்மைதான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வெற்றியாகும்.

2004ம் ஆண்டு பொது தேர்தலில் 2 லட்சத்து 69 ஆயிரம் வாக்குகளுடன் எட்டு பிரதிநிதிகளை யாழ் குடாநாட்டில் பெற்ற கூட்டமைப்பு இந்த தேர்தலில் 65119 வாக்குகளுடன் ஐந்து பிரதிநிதிகளையே பெற்றுள்ளமை கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளமையையே காட்டுகிறது.

வடக்கு கிழக்கில் 22 பிரதிநிதிகளை கொண்டிருந்த கூட்டமைப்பு இம்முறை 14 ஆசனங்களையே பெற்றநிலையில் அவர்கள் இழந்த எட்டு ஆசனங்களையும் அரசு பெற்றிருப்பது அரசின்மேல் மக்களுக்கு நம்பிக்கையின்மை இருப்பதாக இரா சம்பந்தன் கூறியதை ஆதாரமற்றதாக்கியுள்ளன. யாழ்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள்ஙீல் பல்லின மக்கள் வாழ்வதால் அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசிலுக்கு அப்பால் தமிழ் பிரதிநித்துவத்தின் எண்ணிக்கையே முதலிடம் வகிக்கும். தமிழ் தினசரிகளும் தமிழ் தேசியத்தையே வலியுறுத்தியிருந்தன.

யாழ் மாவட்டம் வித்தியாசமானது. அங்கு தமிழ் பிரதிநித்துவம் என்ற பேச்சு அவசியமற்றது. இந்த நிலையில்தான் யாழ் மக்கள் தங்கள் தீர்ப்பை சுதந்திரமாக தீர்மானித்து வாக்களித்துள்ளனர். யாழ் குடாநாட்டில் வாக்களித்த மக்களில் 83ஆயிரம்பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்கை விட 18ஆயிரத்துக்கு மேற்பட்டோர் எதிராக வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் மொத்தமாக பெற்ற வாக்கு 2 ,33,168 வாக்குகளாகும். கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கை இழக்க காரணம் என்ன ?

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்கள் ஆணை பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. கடைசியில் தமிழ் மக்கள் மக்கள் இருந்த உரிமைகளை; இழந்து, உயிர் உடமைகளை இழந்து அகதி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டதுதான் மிச்சம். எனவே மக்கள் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர். இந்த நிலை நீடித்தால் மக்கள் சாட்சிக்காரன் வேண்டாம் என்று சண்டைக்காரன் காலில் முழுமையாக சரணடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும் இங்கே தொடர்க...