24 டிசம்பர், 2010

விடுதலைப் புலி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுக்கு விளக்கமறியல்இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வவுனியாவல் வைத்துக் கைது செய்யப் பட்ட கமலினி அல்லது சுப்ரமணியம் சிவகாமினி என்ற பெண்ணை எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் முக்கிய உறுப்பினர் எனச் சந்தேகிக்கும் இவர் அவ்வமைப்புக்கு ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டதாச் சந்தேகிக்கப்படுகிறது.

இவர் பற்றிய அறிக்கை சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்தே நீதவான் இவ்வுத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புகையிரத வீதி அமைப்பதற்கு கண்டியில் 116 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
கண்டி - பேராதெனிய நகரங்களுக்கிடையே இரட்டைப் புகையிரத வீதி அமைப்பதற்குத் தடையாக இருந்த 116 வீடுகளை நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.


கண்டி புகையிரத நிலையத்திலிருந்து கெட்டம்பே வரையிலான பகுதியில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக புகையிரத தினைக்களத்தின் கண்டி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.

இவ் வீடுகளில் இருந்த பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் வெளியேறாததன் காரணத்தால் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழக மாணவர் மோதலில் எண்மர் காயம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்ட கனிஷ்ட 8 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மிகிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் ஏற்பட்ட வாய்த் தகராறு மோதலாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கணவனுடன் முரண்பட்டு காதலன் வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்

சிகிரியாவில் மூன்று தினங்களுக்கு முன் காணாமற் போய் தேடப்பட்ட பெண்ணும் குழந்தையும் கல்கிஸையில் காதலன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பெண் கடந்த 20ம் திகதி சிகிரியா சிங்க பாதத்தின் அருகில் நின்றபோது காணாமற் போனதாக உறவினர்கள் முறைப்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸாரும் பொதுமக்களும் கடந்த 3 நாட்களாக அவர்களைத் தேடினர். எனினும் பலன் கிடைக்கவில்லை.

அதன்பின்னர் பெண்ணும் குழந்தையும் கல்கிஸையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தனது கணவருடன் முரண்பட்டுக்கொண்ட அப்பெண் காதலன் வீட்டுக்குச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் துறை வேலை நாட்களை 5ஆக குறைப்பதற்கு அரசு திட்டம்

தனியார் துறையின் வேலை நாட்களை 5ஆக வரையறுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே, இது குறித்து தனியார் துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் அரசாங்கத்தின் திட்டத்தின்படி 2011ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி (சர்வதேச தொழிலாளர் தினத்தில்) முதல் கிழமையில் 5 நாள் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அமைச்சர் லொக்குகே மேலும் கூறுகையில், தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களின் வேலை நாட்களை திங்கள் முதல் வெள்ளி வரையான 5 நாட்களுக்குள் வரையறுப்பது தொடர்பில் எமது அமைச்சு முன்வைத்த ஆலோசனை தொடர்பிலேயே தற்போது தனியார் துறையுடன் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் அமைச்சுக்கிடையிலான இந்த பேச்சுக்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடு முழுவதிலுமுள்ள 80 இலட்சம் தனியார் ஊழியர்கள் வாரத்தில் இரண்டு விடுமுறை தினங்களைப் பெற்றுக் கொள்வர்.

இது தனியார்துறை ஊழியர்களுக்கு நன்மை பயப்பதாக அமையுமே தவிர பாதகங்கள் எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் சொன்னார்.
மேலும் இங்கே தொடர்க...

கப்பம் கோரி அச்சுறுத்தினால் கடும் தண்டனை

மிரட்டுவோர் பற்றி உடன் கவனத்திற்கு கொண்டுவரக் கோருகிறார் பாதுகாப்புச் செயலர்

நகைக்கடை உரிமையாளருடன் சந்திப்பு

நகைக் கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி கப்பம் கோருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டால் உடனடியாகத் தமது கவனத்திற்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நகைக் கடை உரிமை யாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கடத்தி கப்பம் கோரும் முயற்சியில் எவராவது ஈடுபட்டால் தமது கவனத்திற்குக் கொண்டு வந்தவுடன் அவரைக் கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

கொள்ளையர்கள் தமது நலனுக்காக பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகளைப் பயன்படுத்தி கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ள தாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் நேற்று (23) தம்மைச் சந்தித்த போது பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

தம்மை அச்சுறுத்தி கப்பம் கோரி கடத்திச் செல்லும் கொள்ளையர்களைக் கைது செய்து தண்டித்தமைக்காக நகைக்கடை உரிமையாளர்கள், பாதுகாப்புச் செயலாளருக்குப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ஆய்வுத்துறை பிரதியமைச்சர் பைர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றப் பேரவை உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் தலைமையில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உயர்மட்டத் தூதுக் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரை நேற்று (23) சந்தித்து அவரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ‘அபிவெனுவென் அபி’ நிவாரண நிதிக்கு இரண்டு மில்லியன் ரூபாவை அன்பளிப்புச் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ‘சில கொள்ளையர் சுயலாபம் பெறும் நோக்கத்துடன் பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகளில் சென்று கோடீஸ்வர வர்த்தகர்களை அச்சுறுத்தி பணயப் பணத்தை அபக ரித்துச் செல்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், தான் உடனடியாக பொலிஸாருக்கு இந்தக் கொள் ளையர்களைப் பிடிக்குமாறு உத்தர விட்டு இவர்களில் பெரும்பாலா னோரைக் கையுமெய்யுமாகப் பிடித் துத் தண்டித்திருப்பதாகக் கூறினார்.

எனவே, எதிர்காலத்தில் இவ் விதம் கடத்தல் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டவுடன் உடனடியாகத் தனக்கு அறிவிக்க வேண்டும். அவ் விதம் செய்தால் நான் உடனடியாகக் கொள்ளையர்களைக் கைது செய்து தண்டிப்பேன் என்றும் உறுதியளி த்தார்.

பாதிக்கப்படுபவர்கள் எனக்கு இத் தகைய புகார்களைச் செய்வதில்லை. புகார்கள் கிடைத்தால் சம்பந்தப் பட்டவர்களைக் கைது செய்வோம் என்று தெரிவித்த திரு கோத்தாபய ராஜபக்ஷ, இன்று நாடெங்கிலும் வன்முறைகள், ஆட் கடத்தல், கொள்ளையடித்தல் போன்ற குற்றச் செயல்கள் கணிசமான அளவு குறை ந்துள்ளதென்றும் குற்றமிழைத் தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கூறினார்.

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் ஹக்கம் உவைஸ் ஆகியோர் இந்த நகை வியாபாரிகளை என்னிடம் கொண்டு வந்ததால் தான் அவர்க ளுக்குப் பாதுகாப்பு அளிக்க முடிந் தது என்று நன்றி தெரிவித்தார். அகில இலங்கை நகை வியாபாரி கள் சங்கத்தின் தூதுக் குழுவினர், தங்களுக்கு 30 ஆண்டு காலத்திற்குப் பின்னர் பாதுகாப்பைப் பெற்றுத் தந்த பாதுகாப்புச் செயலாளருக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்தார் கள்.

அகில இலங்கை நகை வியா பாரிகள் சங்கத் தூதுக் குழுவில் பின்வருவோர் இடம்பெற்றனர். கே. இராதாகிருஷ்ணன், ஏ. உவைஸ், என். சீனிவாசகம், எஸ். ரமேஷ் காந்த், ஆர். ராபினாத், எம். ராம ஜெயம், கே. இராதாகிருஷ்ணன், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்


சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட இலங்கை சிப்பந்திகள் நேற்று காலை நாடு திரும்பினர். 13 இலங்கைச் சிப்பந்திகளில் 11 பேரே நாடு திரும்பியதாகவும், ஏனைய இருவரும் தொடர்ந்து கப்பலில் பணியாற்றுவதற்காக தங்கிவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

சவுதி அரேபிய கப்பல் 9 மாதங்களுக்கு முன் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டது. இதில் இலங்கையரான கப்பல் கப்டனும் 13 சிப்பந்திகளும் பணியாற்றினர். இவர்கள் கோரிய கப்பப் பணமான 224 கோடி ரூபா வழங்கப் பட்டதையடுத்து 13 பேரும் கடந்த 7 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள், நேற்று அங்கிருந்து விமா னம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கப்ப லின் இரண்டாவது அதிகாரியும் சமையல்காரருமே நாடு திரும்பாது ஜித்தாவில் தொடர்ந்து தங்கியு ள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இன்புளுவென்ஸா தீவிரம்: இரு வாரத்தில் 18 பேர் பலி


நாடெங்கிலும் புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1. என்1) வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதால் கடந்த இரு வார காலப் பகுதியில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சின் நோய் பரவல் தடுப்பு பிரிவின் பிரதம மருத்துவ நிபுணர் சுதத் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருப்பவர்களில் பெரும் பகுதியினர் இளம் வயதினர். அதனால் எவருக்காவது தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதுடன், மூச்செடுப்பதிலும் சிரமம் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) வைரஸ் காய்ச்சல் நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ளது. இக் காய்ச்சலுக்கு குறுகிய காலத்தில் 308 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சலுக்குக் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் உள்ளாகியுள்ளனர்.

தடிமன், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவாறான குணாம்சங்களை கொண்டிருப்பவர்கள் அலுவலகங்களுக்கும், பாடசாலைகளுக்கும் செல்லுவதையும், பயணிகள் போக்குவரத்தைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுவதுடன் வீடுகளிலேயே ஓய்வாக இருக்க வேண்டும்.

புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது. அதனால் இருமும்போது இவ்வைரஸ்கள் சளித் துகள்கள் ஊடாக வெளிப்படும். அதன் காரணத்தினால் இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டைகளைப் பாவிப்பதும் கைகளைச் சவர்க்கார மிட்டுக் கழுவுவதும் மிக மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம் நீரிழிவு நோயாளர்கள், சிறுநீரக நோயாளர்கள், நாட்பட்ட சுவாசத் தொகுதி நோயாளர்கள், இருதய நோயாளர்கள் உட்பட நோய்த் தொற்றுக்குரிய அச்சுறுத்தல் மிக்கவர்கள் தாமதியாது இந்நோய்க்குரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். நகரில் பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தினம்


தேசிய பாதுகாப்பு தினம் நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பிரதமர் தி.மு. ஜயரட்ன தலைமையில் நடைபெற உள்ளது.

தேசிய இராணுவ வீரர்களையும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை கெளரவப்படுத்தும் நோக்கிலேயே இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் மலர்ந்துள்ள இவ்வேளையில் வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் அம்மக்களுக்கான சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.

எதிர்வரும் 26ம் திகதி காலை 9.25 முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறும் நாட்டு மக்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணம் முற்ற வெளிப்பகுதியில் மினி பஸ்கள், கொழும்பு யாழ்ப்பாண பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்களும் 25, 26ம் திகதிகளில் அங்கிருந்து செயல்படமாட்டாதென யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்விருதினங்களும், மினி பஸ் சேவைகளும், கொழும்பு யாழ்ப்பாணம் உட்பட பிற மாவட்டங்களுக்கான தனியார் பஸ்களும் முன்னர் போல் யாழ்ப்பாண பஸ் நிலையம் முன்பாகவிருந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிவித்துள்ளார்.

இருபத்தேழாம் திகதி வழமைபோல் யாழ். முற்ற வெளியில் இருந்து சேவைகள் நடைபெறுமென யாழ். மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சபரிமலை தரிசன நேரம் அதிகரிப்பு

சபரிமலையில் மண்டல பூஜை வரை பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து கொண்டே போவதால் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் எதிர் வரும் 27 ஆம் திகதி மண்டல பூஜை வரை தரிசனம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயில் நடை காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 2 மணிக்கு அடைக்கப்படும்.

இதேபோன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 க்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக ஒன்றரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் 18 ஆம் படி ஏறி வருவதற்காக 24 மணி நேரமும் 18 ஆம் படி திறந்து இருக்கும். அப்போது சுவாமி நடை அடைக்கப்பட்டு இருந்தாலும் பின்னர் வடக்கு வாசல் வழியாக வந்து நடை திறந்திருக்கும் போது பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து கொள்ளலாம்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. எத்தகைய சூழ்ச்சிகளை செய்தாலும் மக்களுக்கான தீர்மானங்களை அரசு துணிவுடன் மேற்கொள்ளும்


ஐ. தே. கட்சி எத்தகைய விமர்ச னங்கள், சூழ்ச்சிகளை மேற்கொண்ட போதிலும் மக்களுக்கான தீர்மானங் களை துணிவுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை தரும் எத்தகைய தீர்மானங்களை அரசாங்கம் எடுத்தாலும் அதனை எதிர்ப்பதும் விமர்சிப்பதுமே எதிர்க்கட்சியினரின் போக்காகும் எனத் தெரிவித்த அமைச்சர், மக்களின் நன்மை கருதி வெளிநாடு களிலிருந்து அத்தியாவ சியப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்திலும் எதிர்க்கட்சியினர் இத்தகைய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய லொத்தர் சபை கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்; எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் பயப்படாது எனவும் தெரிவித்தார். இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் வரைக்கும் போதுமான பெரியவெங்காய விளைச்சல் எம்மிடமிருந்தது. எனினும் தொடர்ச்சியான மழை காரணமாக 40 வீத வெங்காயம் பழுதடைந்துவிட்டது. அதுவே வெங்காய விலையேற்றத்திற்குக் காரணம்.

இதனைக் கூட புரிந்துகொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜே. வி. பி.யினர் வெங்காய இறக்குமதி குறித்து விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...