19 மார்ச், 2010

புதிய பாதை புதிய சிந்தனை


நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங் களில் வாழும் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய வர்களாக உள்ளனர். தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும், கட்சியின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் பார்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒப்புவிக்கும் பழைய பல்லவியினால் வழிநடத்தப்படுவதா அல்லது புதிய சிந்தனைக்கு இடமளிப்பதா என்பதையிட்டு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைமையின் வழிவந்த வர்களே இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். முதலாவது பாராளுமன்ற காலத்திலேயே பேசுபொருளாக இருந்த இனப் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாதிருப்ப தற்கான பொறுப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சார்பிலும் முன்னைய தலைவர்களின் சார்பிலும் ஏற்றாக வேண்டும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி சமஷ்டிக் கோரிக்கை யுடன் ஆரம்பமாகியது. சமஷ்டிக் கோரிக்கையை வென் றெடுப்பது சாத்தியமில்லை என்ற நிலை இப்போது உரு வாகியிருக்கின்றது. அது மாத்திரமன்றி, இனத்துவ மற்றும் அடிப்படை உரிமைகளைப் பொறுத்த வரையில் பல பின் னடைவுகளைத் தமிழ் மக்கள் இப்போது சந்தித்திருக்கின் றார்கள். இம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் கள் காலத்துக்குக் காலம் விட்ட தவறுகளே இந்த நிலை மைக்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இட மில்லை. முழுமையான அரசியல் தீர்வுக்காக, கிடைத்த தீர்வுகள் எல்லாவற்றையும் இவர்கள் நிராகரித்ததன் துர்ப் பலனையே தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள். இவர்களின் இராஜதந்திரமற்ற அணுகுமுறை கையில் கிடைத்த தோண்டியைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு டைத்தவனின் கதை போல் ஆகிவிட்டது. இத்தலைவர்கள் இதுவரை பின்பற்றிய அரசியல் பாதை தோற்றுவிட்டதைக் கண்கூடாகக் காண்கிறோம். இப்போது தேவையானது புதிய பாதை. புதிய சிந்தனை.

இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வை உடனடி யாக அடைவது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. படிப்படி யாகத் தீர்வை அணுகிச் செல்லும் நடைமுறையே இப் போது பலனளிக்கக் கூடியது. இந்த நடைமுறையைப் பின் பற்றுவதன் மூலம் தமிழ் மக்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைப்பதோடு காலப்போக்கில் முழுமையான அரசியல் தீர்வை அடையக் கூடியதாகவுள்ள அதே வேளை இறுதித் தீர்வுக்குத் தடை யாகவுள்ள பேரினவாத சக்திகளை பலவீனப்படுத்தவும் முடியும். இதுவே நடைமுறைச் சாத்தியமான தீர்வுமார்க்கம்.

சமகால யதார்த்தத்துக்கு ஒவ்வாத கோரிக்கைகளை மாத்திரம் வலியுறுத்திக் கொண்டிருப்பது விமோசனத்தைப் பெற்றுத் தராதது மாத்திரமன்றி, மக்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் தொடர்வதற்கும் வழிவகுக்கும். எனவே நடை முறைச் சாத்தியமான வழியில் தீர்வை அணுகிச் செல்வதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ள தலை மையே தமிழ் மக்களின் இன்றைய நிலையில் அவசிய மானது.

பிரச்சினையின் தீர்வுக்குப் பொருத்தமானதும் சாத்தியமானது மான கொள்கையைக் கொண்டிருப்பது மாத்திரம் போதாது. அக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடிய செயல்பாடும் தேவை. பதவியிலுள்ள அரசாங்கத்துடனான இணக்க அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலமே தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுக்க முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே மீண்டும் ஆட்சி அமைக் கும் என்பது கள நிலைமைகளிலிருந்து தெரிகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய முடிவுக்கு வருவதற்கு முன் மேலே குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்தில் எடுத்து நிதானமாகச் சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் 600 ஏக்கரில் தென்னை பயிர்ச் செய்கை வருட இறுதிக்குள் 3 இலட்சம் கன்றுகள் விநியோகம்:


22ம் திகதி ஆரம்ப வைபவம்; அமைச்சர் தி. மு. அதிதி
யாழ். குடாநாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 600 ஏக்கரில் தென்னை பயிரிடப்படவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் பளையில் ஆரம்பமாகுமென அமைச்சர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று இலட்சம் தென்னங் கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த வருட இறுதிக்குள் இந்த 3 இலட்சம் தென்னங்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டுவிடும்.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது.

அமைச்சர் தி. மு. ஜயரட்ன இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

இதேவேளை யாழ் குடாநாட்டிலுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அதிகார சபைக்குக் கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.

தென்னங்கன்றுகள் விநியோகத்தின் போது இடம்பெயர்ந்த 850 குடும்பங்களுக்கு மூவாயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தி. மு. ஜயரட்ன மேலும் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அமைச்சர் வெற்றிலைக்கேணிப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட வுள்ளார்.

தென்னந்தோட்ட உரிமையாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ள அமைச்சர், தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆராய்வார்.

இதற்கிடையில், யாழ்ப்பாணத்திலும் அச்சுவேலியிலும் தென்னை நாற்று மேடைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

435 கிலோ எடை கொண்ட பரல் குண்டுகள் கண்டுபிடிப்பு புளியங்குளத்தில் அதிரடிப் படையினரால் மீட்பு


புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 435 கிலோ எடை கொண்ட பெரல் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

45 கலன் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரல்களில் தயாரிக்கப்பட்ட இவ்வெடி குண்டுகள் இரண்டும் புளியங்குளம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டன.

முதலாவது குண்டு ரி. என். ரி. வெடிபொருட்கள், இரும்பு துண்டுகள், இரும்பு குண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 261 கிலோ எடை கொண்டது என்றும் இரண்டாவது குண்டும் இதே போன்று ரி. என். ரி. வெடிமருந்து மற்றும் இரும்புத் துண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 174 கிலோ எடை கொண்டவையாகவும் இருந்தன என விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின் றனர்.

இக்குண்டுகள் வெடிக்கும் பட்சத்தில் 360 பாகைக்கு வெடித்துச் சிதறுவதுடன் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இவ்விரு குண்டுகளுடன் ஜொனி பட்டா என்றழைக்கப்படும் 10 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பணியகத்தில் பதிவு செய்தால் ரூ. ஒரு இலட்சம் என்பது வதந்தி எச்சரிக்கையுடன் இருக்க கோருகிறார் கிங்ஸ்லி

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று நாடு திரும்பியவர்கள் பணியகத்தில் தங்களை பதிவு செய்துகொண்டால் ஒரு இலட்சம் ரூபா தருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ளவர்களின் பங்களிப்பையும் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பணியகம் அவர்களது தரவுகளை சேகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் அவர்கள் சென்ற நாடு தொழில், பெற்ற சம்பளம், அனுபவம் உட்பட அனைத்து தரவுகளையும் பணியகத்துக்கு வழங்குவதன் ஊடாக அவர்களது தொழில் அனுபவம் குறித்து இலங்கையில் தனியார் துறையில் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்க முடியுமா? என்பது பற்றியும் பணியகம் ஆராயவுள்ளது.

நாட்டிலுள்ள பணியகத்தின் கிளை அலுவலகங்களில் தேவையான விண்ணப்பப் படிவங்களை பெற்று தரவுகளை வழங்குமாறும் பிரதேச செயலகங்களினூடாகவும் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் 38 ஆயிரம் கிராமங்களில் முழுமையான அபிவிருத்திப் பணிகள் வறுமை நிலை 24 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைப்பு


50 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகள் புனரமைப்பு
திரியபியச வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 14,000 வீடுகள்நாடு முழுவதிலுமுள்ள பதினான்காயிரம் கிராம சேவையாளர் பிரிவுகளும் 38 ஆயிரம் கிராமங்களும் உள்ளடங்கும் வகையில் முழுமையான பாரிய அபிவிருத்திப் பபணிகள் முன்னெடுக்கப்பட் டுள்ளதாக தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறி தெரிவித்தார்.

மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தி சமூக, பொருளாதார, கலை, கலாசாரத் துறைகள் என அனைத்துக் கட்டமைப்பு களையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குமாரசிறி தெரிவித்தார்.

இதன் மூலம் 2004ம் ஆண்டு 23.4% ஆகக் காணப்பட்ட வறுமை நிலை தற்போது 15.2% ஆகக் குறைந்துள்ளதாக தேச நிர்மாண அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் குமாரசிறி, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க மற்றும் நாட்டின் ஏழு அபிவிருத்தி வலயங்களினதும் மேலதிகச் செயலாளர்கள், சமுர்த்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கடந்த நான்காண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விளக்கமளி த்தனர்.

அந்த வகையில் 2006ம் ஆண்டு 119 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்ட கமநெகும திட்டம் 2007ல் 14 ஆயிரம் கிராம சேவையாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன்பு கொழும்பில் வைத்துத் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தற்போது மாவட்டங்களில், கிராமங்களிலிருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு திட்டம் வகுத்துச் செயற்படுத்தப்படுகிறது.

பிகமநெகுமபீ திட்டத்தின் கீழ் ஒன்பதாயிரம் கிலோ மீற்றர் பாதைகள் செப்பனிடப்பட்டுள்ளன. 43 ஆயிரம் கிலோ மீற்றர் பாதைகள் கொங்கிஹட் போடப்பட்டுள்ளன. அதேபோன்று வடக்கின் வசந்தம், கிழக்கில் உதயம் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. கிழக்கு மக்களின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது. கிழக்குக்குச் செல்லும் சகல பாதைகளும் பிகாபட்பீ போட்டு செப்பனிடப்பட்டுள்ளன. சகல படகுப் பாதைகளுக்குப் பதிலாக பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பயிர்ச் செய்கை பண்ணப்படாமல் இருந்த 150,000 ஏக்கர் காணியில் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது.

மீள் குடியேற்றம்

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மார்ச் மாத இறுதிக்குள் மீளக்குடியமர எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் காரணமாக சிலவேளை தாமதமாகலாம். எவ்வாறெனினும் மே மாதமளவில் நிறைவு செய்துவிட முடியும். கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு 1800 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. 29 இயந்திரங்கள் அவசரமாக விமானத்தில் தருவிக்கப்பட்டன. கண்ணி வெடிகளை அகற்றுவதில் குடியிருப்புப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அடுத்ததாக விவசாய நிலங்கள் எனத் துரிதமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடமைப்புத் திட்டம்

பிதிரிய பியசபீ வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 14 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட் டுள்ளன. படைவீரர்களின் குடும்பங்களுக்கென கடந்த ஆண்டில் 1040 வீடுகள் அமைக் கப்பட்டுள்ளன. விவசாயப் பிரதேசங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களைப் படிப்படியாக இணையத்தளத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மலையக அபிவிருத்தி

பெருந்தோட்ட அபிவிருத்தி வலயத்தில் 14 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களின் பிலயத்துபீ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய அபிவிருத்தியில் மலையகத்தை உள்வாங்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வெற்றியைவிட வன்னி மக்களுக்கு சேவை செய்வதே எனது முதல் இலக்கு-எ.சி.கைலேஸ்வர்ராஜா!





தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை வேட்பாளரான கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எ.சி.கைலேஸ்வர்ராஜா அவர்கள் வன்னி மாவட்ட மக்களோடு உறவாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமது கட்சியினது வெற்றியைப் பற்றியோ அல்லது தனது வெற்றியை இலக்காக வைத்தோ இத்தேர்தலில் களம் இறங்கவில்லை என்றும்இ கடந்த போராட்ட காலத்தில் உயிர்களையும் உடமைகளையும் இழந்து துயருறும் எம் உறவுகளுக்கு தேர்தலில் ஏற்படுகின்ற வெற்றி தோல்விக்கு அப்பால் சிறந்த சேவையாற்ற வேண்டும் என்பதேயன்றி கட்சியின் வெற்றியை இலக்கு வைத்தோ அல்லது தனது நாடாளுமன்றக் கதிரையை இலக்கு வைத்தோ இத்தேர்தலில் களமிறங்கவில்லை என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி.கைலேஸ்வர்ராஜா அவர்கள் வன்னி மாவட்ட மக்களோடு உறவாடியபோது தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் வேட்பாளர்கள் மன்னாருக்கு விஜயம்




எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜ் (சிவசம்பு), மாதர் சங்கத் தலைவி இந்திரா என்கிற வரோனிகா மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளடங்கலாக நேற்றையதினம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது பெரியமடுப் பகுதியிலுள்ள ஈச்சலவக்க தமிழ் கிராமத்திற்கும் இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களுக்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது வாமதேவபுரம், கண்ணாட்டி(அடம்பன்) ஆகிய மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருந்த புளொட் பிரதிநிதிகள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கேட்டறிந்து கொண்டனர். இதன்போது கருத்துரைத்த மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், தாம் அண்மையில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் தமக்கு நிவாரண உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லையென்றும், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பிள்ளைகளை விடுவித்துத் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதுடன், தாம் தமது தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போக்குவரத்துக்கான ஒழுங்குகளை செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டனர். அது தவிர தாம் மிகவும் குறுகிய பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும், தம்மை அண்மித்துள்ள பிரதேசங்களின் கண்ணிவெடியகற்றும் பணிகள் நிறைவுறாத நிலையில் தாம் வெளியிடங்களுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றமையையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனைக் கேட்டறிந்துகொண்ட புளொட் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய வழிவகை செய்வதாக தெரிவித்துள்ளனர். அத்துட்ன புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஈச்சலவக்க தமிழ்க் கிராமத்திற்கு சென்றிருந்த சமயம் அம்மக்கள் தமது நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், முஸ்லிம் மக்கள் சிலர் அப்பகுதிக்கு வந்து இது தமக்குச் சொந்தமான இடமென்றும், நீங்கள் இங்கிருக்க முடியாதென்றும் தம்மை அச்சுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவிடயமாக கூடுதல் கனவம் செலுத்தி உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக புளொட் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலியாவை மிரட்டும் புயல்: கப்பல்கள் நிறுத்தம்






ஆஸ்திரேலியாவில் டார்லிம்பிள் வளைகுடா பகுதியில் கடுமையான புயல் கிளம்பியுள்ளது. இது மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது கரையை கடக்கும்போது பலத்த மழையுடன் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஆஸ்திரேலியாவின் டார்லிம்பிள் துறைமுகம் மூடப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் கப்பல்கள் மூலம் அதிக அளவில் நிலக்கரி ஏற்றுமதி செய்யப் படுகிறது. கடலில் கடுமையான காற்று வீசுவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கரும்பு தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத னால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சரத்தின் ஆட்கொணர்வு மனு : விசாரணையிலிருந்து விலகினார் நீதியரசர் ஒருவர்





ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையிலிருந்து ஒரு நீதியரசர் இன்று விலகிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தல் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியசர் சத்யா ஹெட்டிகே, நீதியரசர்களான ரஞ்சித் சில்வா, என்.லேகம்வசம் ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அத்தருணத்தில் தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணயிலிருந்து தாம் ஒதுங்குவதாக நீதியரசர் என்.லேகம்வசம் தெரிவித்தார்.

இதன்படி இம்மனு தொடர்பான விசாரணை இம்மாம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட பலருக்கு எதிராக இம்மனுவை ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா தாக்கல் செய்திருந்தார்.

தனது கணவர் பெப்ரவரி 8 ஆம் திகதி இராணுவத்தினரால் பலவந்தாகக் கடத்தப்பட்டு, நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படாமல் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனுவில் அவர் குற்றஞ் சாட்டியிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல்





யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை.

நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது.

குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்...

'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....!.

ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.

தமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....!

தமிழ்மொழி இருட்டடிப்பு

தமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது.

உண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு...

ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி.

இத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

ஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது.

இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது.

அது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா...? அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...? ஒருவேளை கண்டும் காணாமல்.
மேலும் இங்கே தொடர்க...

பழ வியாபாரி படுகொலை; கரங்களும் துண்டிப்பு : கண்டியில் சம்பவம்

முச்சக்கரவண்டியொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் பழ வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவரது இரு கரங்களையும் துண்டித்து எடுத்துச் சென்ற சம்பவமொன்று கண்டியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக, பட்டப்பகலில் பெருந்தொகையான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜீ.டீ. பிரேமசந்திர (வயது 38) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் வருகை தந்த கண்டி நீதிமன்ற நீதிவான் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர்களுக்கும் படுகொலை செய்யப்பட்ட பழ வியாபாரிக்கும் இடையில் இருந்த முற்பகையே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர்கள் இலங்கை வந்தால் அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் : எல்லாவல தேரர்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைத்து இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை நாகரிகமின்றி தலையிடுமாயின் உள்நாட்டிலிருந்து . நா. அலுவலகத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜி. எஸ். பி. வரிச் சலுகை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் உட்பட சர்வதேசத்தின் எந்தவொரு கடனுதவியும் இலங்கைக்குத் தேவையில்லை. சொந்த முயற்சியால் அபிவிருத்தியடையக் கூடிய சகல வளங்களும் இலங்கைக்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான . நா. சபையின் தீர்மானங்கள் குறித்து நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடுகையிலேயே எல்லாவல மேதானந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

"கடந்த காலங்களில் இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட புலி இயக்கத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் உதவி செய்து வந்தன. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் போதும் பல்வேறு வகையில் தடைகளை சர்வதேசம் இலங்கைக்கு எதிராகச் செய்து வந்தது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக ஆராய . நாவுக்கு உள்ள தேவையென்ன?

பான் கீ மூனினால் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. இலங்கை தற்போது தடைகளின்றி சுயாதீனமாக செயற்பட்டு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. இதனை குழப்பியடிக்கும் வகையில் எவரும் செயற்படக் கூடாது. ஆசிய நாடுகளை சுயாதீனமாக செயற்பட மேற்கத்தேய நாடுகள் இடமளிக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பி. வரிச் சலுகையும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகளும் இன்றிக் கடந்த காலங்களில் இலங்கை மிக சிறப்பாக செயற்பட்டுள்ளது.

எனவே மேற்படி உதவிகள் கிடைக்காமல் போவது தொடர்பாக யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் பிரிட்டனில் புகலிடம் கோருவதைத் தடுக்க முடியாது : பிரிட்டிஷ் நீதிமன்றம்




பிரிட்டனில் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருப்பதால் ஒருவர் புகலிடம் கோருவதைத் தடுத்துவிட முடியாது என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

1992ஆம் ஆண்டில் 19 வயதாக இருக்கும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த 'ஆர்' என்பவரின் வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கையில் 30 வருடகாலம் நீண்டதொரு இரத்தக்களரி போராட்டத்தை நடத்தி வந்துள்ளது. 'ஆர்' 18 வயதில் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களைகீ காடுகளுடாக கொழும்புக்கு அழைத்துச் செல்லும் ஒரு நடமாடும் பிரிவுக்குத் தலைமை தாங்க அமர்த்தப்படும் வரை அவர் இயக்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவுக்குஸ பிரதம பாதுகாப்பு காவலராகவும் புலனாய்வுப் பிரிவின் போரிடும் அலகுக்கு இரண்டாவது தளபதியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இவர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் மேல் உத்தரவுக்காக காத்திருக்குமாறு பணிக்கப்பட்டார். ஆனால் இரண்டு மாதங்களில் தாம் தலைநகரில் இருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என்பதை இவர் அறிந்துகொண்டார்.

இவர் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்று, தாம் இலங்கை திரும்பினால் தமது இனம் காரணமாகவும் விடுதலைப்புலி உறுப்பினர் என்பதாலும் தாம் கொடுமையாக நடத்தப்படுவார் என்று கூறி அங்கேயே தமக்கு புகலிடம் தருமாறு கோரினார்.

இவர் யுத்தக் குற்றச்செயல்களை புரிந்தார் என்று கருத இடமுண்டு எனக் கூறி இவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பரவலாகவும் கிரமமாகவும் யுத்தக் குற்றச் செயல்களையும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும் புரிந்தமைக்கு விடுதலைப்புலி இயக்கத்தினர் பொறுப்பாளிகளாவர் என்றும் இவர் ஒரு தீவிரவாத குழுவில் உறுப்புரிமை வகித்தமை தெரிந்து கொண்டே பங்களிப்புச் செய்த ஒரு குற்றச்செயல் என்றும், ஆகக்குறைந்தது பிரச்சினைக்குள்ளான குற்றச்செயலில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்ற குற்றத்தையேனும் புரிந்துள்ளார் என்றும் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்தது.

மேற்படி தீர்ப்பை எதிர்த்து 'ஆர்' தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் விசாரணையின்போது, விடுதலைப்புலி உறுப்பினர் என்ற வகையில் ஒரு நபர் குற்றச்செயல்களில் தெரிந்து கொண்டே ஈடுபட்டார் என்ற முடிவு தவறானது என்றும் அத்தகைய குற்றத்தை புரிவதற்கு இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார் என்பதற்கு ஆதாரம் உண்டா என்று அரசாங்கம் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் முந்திய தீர்ப்பை தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்ட நபருக்கு புகலிடம் வழங்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து உள்நாட்டமைச்சர் மேன்முறையீடு செய்த போதிலும் அதுவும் நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

செனல்-4க்கு அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் ஜேவிபி இருக்கின்றதா? : டலஸ் சந்தேகம்



ஜெனரல் சரத் பொன்சேகா முடிந்தால் தன்னைக் கைது செய்யுமாறு பெப்ரவரி முதல் வாரத்தில் சவால் விடுத்தார். மார்ச் மாதம் மூன்றாம் வராத்தில் சனல்4 தொலைக்காட்சிக்கு இரகசியமாக கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் தான் தங்கியிருக்கின்ற இடத்தின் வரைபடத்தையும் அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி இருக்கின்றதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான டலஸ் அழக பெரும தெரிவித்தார்.

கடிதத்தின் பின்னால் இருக்கின்ற அரசியலின் காரணம் என்ன? செனல் 4 தொலைக்காட்சியே புலிகளின் குரலை ஆங்கிலத்தில் கொண்டுசென்றது. அந்த நிறுவனத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என்பதுடன் எதிரியுடன் கள்ளக் காதல் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"இராணுவத்திற்கு எதிராக தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சி தவறாது என்று நிரூபித்து விட்டோம். எனினும் அது இன்னும் மறுக்கப்படவில்லை. காட்சி உண்மையானது என நிரூபிக்கப்படவும் இல்லை. செஞ்சோலை விவகாரத்தை ஈழக் கோரிக்கையாளர்களுக்கு அப்பால் செனல்4 தொலைக்காட்சி நிறுவனமே முதன்மைப்படுத்தியது.

செனல்4 தமிழீழ யுத்த வீரனின் ஊடகமாகும். அந்த ஊடகமும் ஜே.வி.பியினால் சித்திரிக்கப்படும் சிங்கள யுத்த வீரனின் ஊடகமும் எவ்வாறு ஒன்றாக இருக்கமுடியும்?

சிவில் பிரஜை ஒருவர் அல்லது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இது முதல் தடவையல்லை. அமெரிக்கரின் கியூபா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் தருமாறு கோரினார்கள். ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகா குளிரூட்டி வசதிகள் மற்றும் சுடுநீர் இல்லை என்று தெரிவித்திருகின்றார்.

ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான வரப்பிரசாதத்தை அவர் கௌரவமாக பயன்படுத்தவில்லை. தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் தங்களுடைய மனைவி, பிள்ளைகளுக்குக் கடிதங்களை அனுப்பியிருந்தனர். அவையெல்லாம் வரலாற்றில் இடம்பிடித்தன. எனினும் இவர் செனல் 4 தொலைக்காட்சிக்கு எவ்வாறு களவாக கடிதம் அனுப்பினார்? ஏன் அனுப்பினார் போன்ற கேள்விகள் எழுகின்றன.

இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் இராணுவ சட்டத்தை மதித்தல் தொடர்பில் அவரிடத்தில் சந்தேகம் எழுகின்றது. தாய்நாட்டின் எதிரியான செனல்4 தொலைக்காட்சியுடன் கள்ளக் காதல் எதற்கு?

செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோவின் பணிப்பாளர் சரத் பொன்சேகாவாக ஏன் இருக்க கூடாது?" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தனுனவுக்கு எதிராகப் பிடியாணை : நீதிமன்றம் இன்று தெரிவிப்பு




சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவுக்கு எதிராக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது.

'ஹைகோப்' விசாரணை இன்று நீதிமன்றத்தில் ஆரம்பமான போது தனுன திலகரத்ன இன்னமும் இலங்கையில்தான் தலைமறைவாக உள்ளார் என்று இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர். .

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொள்வதற்காக, தான் வெளிநாட்டில் உள்ளதாகப் பொய் வதந்திகளை தனுன பரப்பிவருகிறார் என்றும் இரகசியப் பொலிஸார் நீதின்றில் குற்றஞ்சாட்டினர். இதனையடுத்தே தனுனவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

அணு ஆயுத கட்டுப்பாடு குறித்து ஹில்லாரி கிளிண்டன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை





ஹில்லாரி கிளிண்டன்
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அணு ஆயுத கட்டுப்பாடு குறித்தும், மற்ற பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டன் மாஸ்கோவில் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்.

அணுஆயுத குறைப்பு ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஹில்லாரி கிளிண்டன் அவர்களின் குழுவில் இருக்கும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அவரது மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி, ரஷ்ய பிரதமர் விளாடிமர் புடின் அவர்களை ஹில்லாரி கிளிண்டன் வெள்ளிக்கிழமை சந்திக்க இருக்கிறார்.

ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜரி லாவ்ரவ் அவர்களுடன் ஹில்லாரி கிளிண்டன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளில் மத்திய கிழக்கு விவகாரமும் முக்கியமாக இடம்பெறுவதாக நம்பப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டது முட்டாள்தனமானது: ராஜபக்ஷே






இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட முடிவுசெய்தது முட்டாள்தனமானது என அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

பணியில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டது, ராணுவ விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக பொன்சேகா மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ராஜபக்ஷே சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

பொன்சேகா ஒரு முட்டாள். 2009 நவம்பர் 16-ம் தேதி கொழும்புவில் அதிபர் அலுவலகத்தில் பொன்சேகா அமர்ந்திருந்தபோது அவரிடம் அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கு விருப்பமா எனக் கேட்டேன். எனினும் அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என பொன்சேகா தெரிவித்தார். கடைசியாக அவர் என்னைச் சந்தித்தபோதுகூட இதுபற்றி என்னிடம் கூறவில்லை.

அரசியல் என்பது ராணுவம் அல்ல. ராணுவத்தில் நீங்கள் உத்தரவிட்டால் அதை மற்ற வீரர்கள் பின்பற்றுவார்கள். ஆனால் அரசியலில் நீங்கள் உத்தரவிட்டால் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும் என அவரிடம் எடுத்துக் கூறினேன்.

இந்த அரசியல் விளையாட்டு எனக்குத் தெரியும். என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் நான்தான் வெற்றிபெறப் போகிறேன் என்பதையும் அவரிடம் தெரிவித்தேன்.

அவரைத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்திருக்கலாம். நான் அனுமதிக்காதவரை அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற முடியாது. வேட்புமனுத் தாக்கல் முடியும்வரை அவரது ஓய்வுபெறும் கோரிக்கையை நான் தள்ளி வைத்திருக்கலாம். நான் பயந்துவிட்டேன் என மக்களால் சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே அவரை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்தேன்.

விடுதலைப்புலிகளுடான போரின் இறுதி நாள்களில் பொன்சேகா சீனாவில் விடுமுறையில் இருந்தார்.

அவரை முன்கூட்டியே மன்னிக்கும் திட்டம் எதுவும் இல்லை. நான் அவரை மன்னித்தால் ராணுவக் கட்டுப்பாடு என்னாவது?. இது பிரிட்டிஷ் சட்ட விதிமுறை. நான் என்ன செய்ய முடியும். இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிஷ் சட்டவிதிமுறைதான் உள்ளது.

ராணுவ நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான இலங்கை வீரர்களை பொன்சேகா அவராகவே கொண்டுபோய் நிறுத்தினார். ஒருகட்டத்தில் அதன் எண்ணிக்கை 8500 ஆனது. இதற்காக அவரைக் கடிந்துகொண்டு அந்த வீரர்களை விடுதலை செய்தேன்.

இந்தியாவின் அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 200000-ல் இருந்து 450000 ஆக உயர்த்த வேண்டும் என பொன்சேகா விரும்பினார். இந்தியாவிடம் 1.5 மில்லியன் தரைப்படை வீரர்கள் உள்ளனர். இதுதவிர 1 மில்லியன் துணை ராணுவப் படையினர் உள்ளனர். எனவே 2.5 மில்லியன் வீரர்களுக்கு முன் 450 000 வீரர்கள் என்ன செய்ய முடியும். எனவே வெளிநாடு குறித்த கவலையை என்னிடம் விட்டுவிடுங்கள் என அவரிடம் கூறினேன்.

ராணுவப் புரட்சி குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து விவரங்களையும் விரிவாகக் கூற முடியாது. குற்றச்சாட்டுகளை பதிவுசெய்வது போலீசார், பாதுகாப்புப் படையினரின் பணி. அவர்களை அதைச் செய்து வருகின்றனர். பொன்சேகா குற்றவாளியா, இல்லையா என்பது எனது கவலை அல்ல. எனினும் சட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும்.

இவ்வாறு ராஜபக்ஷே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சனல்-4 க்கு பொன்சேகா ரகசிய கடிதம்; பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது அமைச்சர் டலஸ்






இலங்கைக்கு எதிராகப் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்ட சனல் 4 தொலைக் காட்சியுடன் சரத்பொன்சேகா கொண்டுள்ள தொடர்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமக்கு சுடுதண்ணீர் கூட இல்லையென்றும் சனல் - 4 இற்கு ரகசிய கடிதம் எழுதும் அளவுக்கு சரத் பொன்சேகா தொடர்பு வைத்தி ருந்தால், இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோவைத் தயாரிக்கும் பின்னணியிலும் அவர் செயற்பட்டிருப்பார் என்ற சந்தேகமும் எழுவதாக அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சனல் 4என்பது புலிகளின் குரலின் ஆங்கில வடிவம் என்றே கருத வேண்டியுள்ளது. அவ்வாறான ஒரு தொலைக்காட்சிக்கு ரகசிய கடிதம் எழுதுகிறாரென்றால், இராணுவச் சட்டத்தையும் ஒழுங்கையும் அவர் எவ்வாறு பேணி இருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது. அந்தக் கடிதம் சோவியத் இலக்கியத்தின் வார்த்தைப் பிரயோகத்தில் காணப்படுகிறது.

உலகில் சிவில், யுத்த கைதியொருவர் சுடுதண்ணீரும், ஏ. சீ. அறையும் இல்லையென்று கூறி வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்கா வைத்துள்ள குவான்டனாமோ சிறைக் கைதிகள் கூட சித்திரவதை செய்யாது, விடுவியுங்கள் என்று தான் கேட்கிறார்கள். சில கைதிகள் தம் மனைவி, பிள்ளைகளுக்கு, நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியங்களான சந்தர்ப்பங்களும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. சரத் பொன்சேகாவுக்கு அரசு வழங்கிய சலுகைகளை அவர் நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2 வது இராணுவ நீதிமன்றுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க முடிவு இராணுவத் தளபதி தகவல்






முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய புதிய நீதிபதிகளின் பெயர்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று பரிந்துரைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகள் இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதியால் நியமிக்க ப்படவுள்ளனரென்றும் குறிப்பிட்டார். இராணுவ சட்டத்திற்கு அமைய இரு இராணுவ நீதிமன்றங்களுக்கு ஒரே நீதிபதியை நியமிக்க அனுமதி இருக்கின்ற போதிலும் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் அதி உயர் வெளிப்படை தன்மையையும், நியா யமும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் பாலம், தாம்போதி ஜனாதிபதியால் நேற்று திறந்து வைப்பு * ரூ. 2460 மில். செலவு * 157 மீற்றர் நீளம், 10.4 மீற்றர் அகலம்




புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் தாம்போதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18 ம் திகதி) வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப் பரப்பையும் இணைக்கும் இப்பாலமும் தாம்போதியும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன் கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலத்திற்கு இலங்கை ஜப்பான் நட்புறவு பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப் பாலம் 157 மீட்டர் நீளமாகவும் 10.4 மீட்டர் அகலமாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இரு வழிப் பாதை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலம் முதல் 3.14 கிலோ மீட்டர் வரை (தள்ளாடி சந்தி), தாம்போதியும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், இலங்கையில் கடமையாற்றும் ஜப்பான் தூதுவர் குனியோ தகஹசி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு இப் பாலத்தைத் திறந்து வைத்தனர்.

இவ் வைபவத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, முன்னாள் எம். பிக்களான சிவநாதன் கிஷோர், பி. சுமதிபால, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச். எம். அஸ்வர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண் டார்கள்.

மதவாச்சி, மன்னார், தலைமன்னார் வரையிலான ஏ-14 வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இப் பாலமும், தாம்போதியும் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இரு தசாப்தங்களுக்கு மேலாக அழிவுற்றிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மேற் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக இப்பாலம் இரு வருட காலப் பகுதியில் நிர்மா ணிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தையும் தாம்போதியையும் நிர்மாணிப்பதற்கும் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக இருந்தது. இதனால் நிர்மாணப் பணிகளை சுமார் நான்கு மாதங்கள் இடை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட் டிருந்தது.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக் கப்பட்டதன் பயனாக இதன் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதன் பயனாக மன்னார் தீவுப் பகுதியில் வாழுகின்ற மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்த போக்கு வரத்துப் பிரச்சினை தீர்த்து வைக்கப் பட்டள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பான் கீ மூனின் கூற்று ஐ.நா சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயல் இலங்கைக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது - ஜீ.எல்






உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ஐ.நா. சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயலாகுமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சகல நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டுமென்பது ஐ.நா. சாசனத்தின் ஜீவநாடியாக உள்ளது. சிறிய நாடுகளின் பாதுகாப்புக்காகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக செயற்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாதென்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு அவசியமில்லையென வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபொறுப்புகள்பீ தொடர்பாக ஆராய்வதெனின், 118 நாடுகளின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாமல், நிராகரிக்க முடியாது. சில நாடுகளின் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான சாட்சியங்கள் இருந்தும், அந்த நாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லைபீ என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றி இன்று சர்வதேச சவாலை எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கும் இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக பிநெருக்கடிகள் தொடர்பான சர்வதேச குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் குழுவில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இன்னமும் தமிஸழக் கோட்பாட்டைக் கைவிடவில்லை.

ஆனால், இலங்கையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடு முற்றிலும் மாறுபாடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் இவர்கள் இங்கு அரசியல் கட்சிகள் மூலம் மாத்திரமன்றி சிறு அமைப்புகள் ஊடாகவும் முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...