17 அக்டோபர், 2009

படையினருக்கு இடர்காலக்கடன் கொடுப்பனவாக ரூ. 700 மில்லியன்

படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வன்னி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்குள்ள படைவீரர்கள், தாம் கோரியிருந்த இடர்கால கடன் (10 மாத கொடுப்பனவு) இதுவரை கிடைக்க வில்லை என இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சுமார் 900 க்கும் அதிகமான விண்ண ப்பங்கள் இராணுவ தலைமையகத்துக்கு கிடைத்திருந்தபோதும் நிதி பற்றாக்குறை காரணமாக உடனடியாக இக் கடனை வழங்க முடியாமல் போனது. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜனாதி பதியுடனும், பாதுகாப்பு செயலாளருடனும் பேச்சு நடத்தியதன் பயனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 700 மில்லியன் ரூபா வை உடனடியாக வழங்குமாறு திறைசேரிக்கு பணிப்புரை வழங்கினார். தற்போது திறைசேரி 700 மில்லியன் ரூபாவை இராணுவத்துக்கு வழங்கியுள்ளதுடன் இடர்காலக் கடன்கள் தற்போது வழங்கப்பட்டும் வருகிறது என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல் பற்றிய ஒரு பார்வைகடந்த சில நாட்களில் நடந்த மாவட்டசபை தேர்தல் போல் அல்ல வரப்போகும் பொது ..
தேர்தல் ....இதில் ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி பெரும் சவாலை எதிர் .கொள்ளவேண்டிவரும்சிங்களமக்கள்மத்தியில்ஸ்ரீலங்கா சுதந்திரகட்சிக்கு என்று 46வீதமான வாக்குகள்உள்ளது அதேபோல் க்கிய தேசியகட்சிக்கு என்று 46வீதமான வாக்குகள் உள்ளது


ஜெ வி பி ஜாதிககெல உருமய மிகுதி 08 வீதமானவாக்குகள்எடுப்பார்கள் யார்? ஆட்சியமைப்பது இங்குதான் பிரச்சனைஜெவிபிஜாதிககெல இவர்களுடன்கூட்டுசேர்ந்துயார்ஆட்சிஅமைத்தாலும்ஒன்றுஇரண்டு
வருடத்தில்
மீண்டும்ஒருபொதுதேர்தலைஎதிர்பார்க்கலாம்இதுதான்
உன்மைநிலைநான்இதுவரைகூறியதுசிங்களமக்கள்வாக்குபற்றிஆனால்
தமிழ்
மக்கள்வாக்குஉள்ளதுஇதுயாருக்குகிடைக்கிறதோஅவர்கள்தான்


ஆட்சிஅமைக்கமுடியும்ஆனால்ஸ்ரீலங்காசுதந்திரகட்சிஆட்சி
யில்உள்ளதுமதிப்புக்குரிய.திரு .
மஹிந்த
ராஜபாட்ஷாமனிதாபிமானத்துடன்நடந்து எப்படி புலியிடம் இருந்துமக்களை விடுவித்தாரோ அதே போல் இந்த மக்களை கம்மி கூட்டுக்குள் இருந்தும் விடுதலை கொடுத்து அவர்களை சொந்த இடத்தில் குடி அமர்த்தி நிம்மதியாகவாழ வைத்தால் நிச்சயம் தமிழ் மக்கள் வாக்கை பெறமுடியும்.

ஒரு பெண்கெற்பமாக...இருந்தால் எவ்வளவுதான் கத்தினாலும் அவள்தான் அந்த பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் அதே போல் யார் கத்தினாலும் சரிஎந்த நாடுவந்தாலும் சரி தமிழ் மக்கள் பிரச்சனை ஜனாதிபதியால்தான் தீர்க்கமுடியும் திர்க்கவும் வேண்டும் இதை வெளி நாடோ அல்லாது எதிர்கட்சிகளோதலை இட்டு பிரச்சனை தீர்க்கப்பட்டால் எதிர்கட்சி யூ என் பி ஆட்சி அமைக்கவாய்ப்பு உள்ளது

இவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் யுத்தத்தின்போது ஜனாதிபதி கூறியது போல் யுத்தம் முடிந்ததும் தமிழ் மக்கள் பிரச்சனைதீர்க்கப்படும் என்றார் அதே போல் செய்தால் நிச்சயம் மக்கள் மத்தியில்நம்பிக்கை பிறக்கும் வாக்கும் கிடைக்கும் அதை விடுத்து தேர்தலுக்குபின் தமிழ் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படும் என்றால் தமிழ் மக்கள் மத்தியில்நம்பிக்கை போய்விடும் இப்போது செய்யமுடியாதவர் இனி எப்போது செய்யபோகிறார் என்று எதிர் கட்சிக்கும் ஒரு பிரச்சாரத்துக்கு வாய்ப்பு உள்ளதுதாம் தமிழ் மக்கள் பிரச்சனை திர்ப்போம் என்று கூறுவதற்கு அதை நம்பிமக்களும் ஒரு தடவை அவர்களுக்கு வாக்கை போடுவோம் என்று சிந்திக்கலாம் ஆகவே திரு .மஹிந்தராஜபட்ஷா அவர்கள் எல்லோரும் எமதுநாட்டுமக்கள் என்று எண்ணி

இன்னுமொரு நாட்டவர் அறிவுரை கூறும்அளவிற்க்கு வைக்காமல் இது எமது குடும்ப பிரச்சனை போல் எண்ணிஅடுத்தவரை மூக்குநுளைக்கவிடாமல் எல்லோரும் எமது நாட்டு மக்கள்ஒரு குடும்பத்தார் ஒரு குடும்பத்தில் தகப்பன் சொத்தில் ஒரு பிள்ளை நன்றாகவாழ இன்னொரு பிள்ளை உண்ணஉணவில்லாமல் இருப்பதாநீங்கள் நன்றாக தமிழ் பேசுகிறீர்கள் தமிழர்கள் சகோதரர்கள் என்று தமிழில்கூறு கிறீர்கள் அப்படியான தமிழ் சகோதரர்கள் கஸ்ரபடுவது நியாயமா


இன்று உலகம் முழுவதும் எல்லா நாட்டிலும் நிறத்தால் வேறுபட்டு மொழியால் வேறுபட்டு கலை கலாச்சாரத்தால் வேறுபட்டவர்கள் நின்மதியாகஅந்தநாட்டு மக்களுடன் வாழ்கிறார்கள் அந்த நாட்டு மக்களுக்கு என்ன சட்டமோ அதே சட்டம்தான் மற்ற நாட்டவருக்கும் ஆனால் எமது நாட்டில்எமது நாட்டவர் நசுக்கப்படுவது நியாயமா உங்கள் சகோதரர் வெளிநாட்டுகுடியுரிமை பெற்றவர் அவருக்கு புரியும் அந்த நாட்டு மக்களுக்கு என்னசட்டமோ அதே தான் அவருக்கும் அப்படி இருக்க நாம் பிறந்தமண்ணில் எமதுமண்ணில் எமக்கு சுதந்திரமாகவாழ வழியில்லாமல் இருப்பது நியாயமாதயவு செய்து சிந்தித்து செயல் படுங்கள் வெற்றி உங்களிற்கே நன்றி
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையின் மனித உரிமை நிலை திருப்தியாக இல்லை : ஐரோப்பிய ஒன்றியம்இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்குவதற்கான சாத்தியங்கள் வெகு குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் செய்தியில்,

"சர்வதேச மனித உரிமை சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையில் இலங்கை செயற்படவில்லை என்பது விசாரணைகளின் மூலம் புலனாகியுள்ளதென ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை இலங்கை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 25 ஆண்டு காலமாக நீடித்து வந்த யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் வாரத்தில் வெளியிடவுள்ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான அடிப்படை நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்யவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் அதனை பொருளாதாரத் தடையாக கருத முடியாது எனவும், உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் சகல நாடுகளும் இந்த சந்தர்ப்பத்தை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அடக்குமுறைகள், சித்திரவதைகள், தொழில் சட்டங்கள் மீறப்பட்டமை போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிட்டால் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவு ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும் என குறிப்பிடப்படுகிறது" என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...


தீபாவளி நல் வாழ்த்து


புதியபாதை வாசகர்களுக்கு உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்

மேலும் இங்கே தொடர்க...