18 செப்டம்பர், 2009

சனல் 4 வீடியோ காட்சியின் மூலப்பிரதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவிப்பு-


பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டஇலங்கை இராணுவம் தொடர்பிலான சர்ச்சைக்குரிய காட்சிகளின் மூலப்பிரதிகண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையம்அறிவித்துள்ளது. இந்த மூலப்பிரதியில் தமிழ்மொழியில் சம்பாஷணைகள்இடம்பெறுவதாகவும் மத்தியநிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குறித்தகாட்சிகள் திறந்தவெளிப் பிரதேசமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையம் மேலும் தெரிவித்துள்ளது .வவுனியா, தாண்டிக்குளத்தில் ரயில்கள்மீது தாக்குதல், ரயில் சாரதி காயம்-

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த இரண்டுரயில்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இனந்தெரியாத நபர்களினால்கற்கள் வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வேதிணைக்கள வர்த்தகப் பிரிவு அதிகாரி விஜய சமரசிங்க தெரிவி;த்துள்ளார். இந்த தாக்குதல்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்வதாகவும், இதனால்குறித்த ரயில்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், ரயில் சாரதியொருவர்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதல் தொடர்பில் பொலீசாரிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த விஜய சமரசிங்க, இச்சம்பவத்துடன்தொடர்புடையவர்கள்மீது விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும்கூறியுள்ளார்.

விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய இந்திய விவசாய நிபுணர்கள் வருகை-

ஆறுபேர் கொண்ட இந்திய விவசாய நிபுணர்கள் குழு 04நாள் விஜயத்தினைமேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இந்திய விவசாய ஆராய்ச்சிசபையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.பி.திவாரி இந்தக் குழுவுக்கு தலைமைதாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியஅரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 500கோடி இந்திய ரூபாய் நிவாரணவேலைத்திட்டங்களின் கீழ் வடக்குப் பிரதேசங்களில் விவசாயமுன்னெடுப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் நிபுணர்கள்குழுஆராயுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வருகை தந்திருந்த இந்தநிபுணர்கள்குழு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச எம்.பிமற்றும் விவசாய மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத்துறைசார்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது. அத்துடன்இக்குழுவானது நாளை வவுனியாவுக்கான விஜயத்தினைமேற்கொள்ளவுள்ளதென்று கூறப்படுகின்றது.அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல், இரத்துச் செய்தல் தொடர்பிலான சட்டவரைவு சீர்திருத்தத்தை மீண்டும் சமர்;ப்பிக்க நடவடிக்கை-

அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல் மற்றும் அவற்றை இரத்துச் செய்தல் தொடர்பிலான சட்டவரைவு சீர்திருத்தத்தை மீண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவிருப்பதாக கலாச்சார அபிவிருத்தி மற்றும் புனிதபூமி அபிவிருத்தியமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதன் சில சரத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்திருந்தன. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்ததை அடுத்து அதற்கமைய சர்ச்சைகளுக்குள்ளான சரத்துகள் நீக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...
இடைத் தங்கல் முகாம்கள்

முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் ஜனவரிக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவர்: இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் அண்மையில் முடிந்த போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திடமான காலஅட்டவணை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பது ஜனவரி மாதத்தின் இறுதிக் குள் நிறைவடையும் என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மன்றத்தின் உயர்ஸ்தானிகரிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது குறைந்தது 70 சதவீதம் பேர் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள் முகாம்களை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்கிற தமது முந்தைய நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி நடக்கவேண்டுமானால் ஏராளமான வேலைகள் செய்யப்படவேண்டியிருக்கிறது.

சுமார் இரண்டுலட்சத்து அறுபத்தைந்தாயிரம் பேர் இன்னமும் முகாம்களில் இருப்பதாக ஐ.நா.மன்றத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

முதல்முறையாக, இந்த முகாமில் இருப்பவர்கள் முகாம்களுக்கு வெளியில் சென்று வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் பகல்நேர அனுமதிச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, வவுனியாவில் இருக்கும் மிகப்பெரும் முகாமில் இருந்து கடந்த வாரம் வெளியேற அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சிலர், இலங்கையின் கிழக்குப் பகுதியில் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அருகில் தற்காலிக முகாம்களில் இன்னமும் தங்கவைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தை சேர்ந்தவர்கள் பிபிசியிடம் உறுதி செய்துள்ளனர்.

அவர்கள் இன்னமும் எத்தனை நாட்கள் அங்கே தங்கியிருக்க வேண்டிவரும் என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையே நீடிக்கிறது. அவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களின் விடுவிப்பு எப்போது என்பது குறித்த இறுதி உத்தரவு கொழும்பிலிருந்து வரவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்த மக்களை இயன்றளவு விரைவில் சொந்த இடங்களுக்கு திரும்ப வழி செய்ய வேண்டும்- ஐ.நா. விசேட பிரதிநிதி

நலன்புரி முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை இயன்றவரைவிரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல வழிசெய்ய வேண்டும். முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதொரு உணர்வை தரமாட்டாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிபொதுச்செயலாளர் லின் பஸ்கோ தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அவரது அமைச்சில் நேற்றிரவு சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நேற்று முன்தினம் புதனன்று இலங்கை வந்த லின் பஸ்கோ நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகியபகுதிகளுக்கு விஜயம்செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து நேரடியாக கலந்துரையாடியிருந்தார். முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பில் உங்களது அவதானிப்பு எத்தகையது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதல்ல என்பதை உலகின் பல்வேறு முகாம்களுக்கும் சென்றவன் என்றவகையில் நான் அறிந்துள்ளளேன். முகாம்களில் வாழ்வது நல்ல உணர்வை என்றுமே தந்ததில்லை. சொந்த இடங்களை விட்டு முடக்கப்பட்ட நிலையில் முகாம்களில் வாழ்வது என்றுமே நல்ல உணர்வை தரமாட்டாது. எனவே, இயன்றவரையில் முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அரசாங்கத்திற்கு பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் உள்ளதென்பதை நான் அறிவேன். இருப்பினும் பருவமழைக்காலம் அண்மித்துள்ள நிலையில் முகாம்களிலுள்ள மக்களை அங்கிருந்து விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவற்கு அரசாங்கம் வெளியிட்ட 180 நாள் வரைவுத்திட்டத்தில் பாதிநாட்கள் கடந்து விட்ட நிலையில் மீள்குடியேற்றம் தொடர்பான உங்கள் மதிப்பீடு என்ன என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லின் பஸ்கோ, என்னுடைய மதிப்பீடு முடிவடையும் வரையில் நான் இதுதொடர்பில் கருத்து கூறுவதற்கு காத்திருக்க வேண்டும்.

முன்னதாக ஐக்கியநாடுகள் பிரதிச்செயலாளருடனான சந்திப்பையடுத்து ஊடகவிலாளர்கள் மத்தியில் பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, எவ்வளவு விரைவாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற முடியும். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என இதன்போதுஆராயப்பட்டதாக குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் 180 நாட்கள் திட்டத்தில் தற்போது 90 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய நாட்கள் முடிவதற்குள்ள இடம்பெயர்ந்த மக்களில் கணிசமான தொகையானோர் மீளக்குடியமர்த்தப்படுவர் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார். இடம்பெர்யர்ந்த மக்களின் சுகாதரம், கல்வி போன்றவிடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறினார்
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்தோர் பற்றி இந்தியா கரிசனை -
பிரதமர் மன்மோகன் சிங்இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து இந்திய மத்திய அரசு மிகவும் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்களின் மீள்குடியேற்றம் குறித்து தொடர்ந்து இலங்கை அரசை வற்புறுத்தி வருவதாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி இப்பிரச்சினை குறித்து தனக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கு பதிலளித்து எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அந்நாட்டுத் தமிழர்கள், அவர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டு என்று உறுதிபட இந்தியா இலங்கைக்கு கூறியுள்ளது.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வில் தீவிர கவனம் செலுத்திவரும் மத்திய அரசு ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கென தனியொரு மருத்துவமனை நடத்தி வந்தது. அதில் இதுவரை ஏறத்தாழ 38,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் இந்தியக்குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் பல்வேறு மறுவாழ்வுப் பணிகளை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்தோரால் திரட்டப்பட்டு தமிழ் நாட்டிலிருந்து கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அது அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை சென்றடைய இலங்கை அரசு ஆவன செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு : மத்திய அரசு தலையிடக் கோரி திமுக வலியுறுத்து


இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று திமுக சார்பில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமரை இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உடன் இருந்தார்.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கப்பட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தயாநிதி மாறன் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

அப்போது இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மாறனிடம் பிரதமர் உறுதியளித்ததாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...
மட்டு. காத்தான்குடி கொள்ளைச் சம்பவங்கள் : முன்னாள் அதிரடிப் படை வீரர் சந்தேகத்தில் கைது


மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் விசேட அதிரடிப் படை சார்ஜன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைகள் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது அந்நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

மேற்படி சந்தேக நபர்கள் கைதான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட விசேட அதிரடிப் படை சார்ஜன் விடுமுறையில் சென்றிருந்தார் என்றும் மீள கடமைக்குத் திரும்பாத நிலையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

விசாரணைக்காக அழைக்கப்பட்டுத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர், கொள்ளையர்களுக்கு கைக்குண்டுகளை வாடகைக்கு வழங்கி உதவியுள்ளார் என்றும் இதற்காக ஒரு தடவைக்கு மட்டும் ரூபா 20 ஆயிரம் பெற்றிருந்தார் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவு மாவட்டத்தில்3 பிரதேச செயலக பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கை


* மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், துணுக்காய் செல்ல அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அனுமதி
* 25 ஆம் திகதி முதல் கிளிநொச்சி மாவட்டத்திலும் சிவில்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் நேற்றுத் தெரிவித்தார்.

இப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அங்குள்ள திணைக்களங்களிலும் கடமை புரியும் 119 உத்தியோகத்தர்களும் அங்கு சென்று கடமையாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட செய லகத்திலும், கரைச்சி பிரதேச செயலகப் பிரி விலும் இம் மாதம் 25 ஆம் திகதி முதல் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப் பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவு கட்டடங் களையும், பிரதேச செயலாளர்களதும், உத்தி யோகத்தர்களதும் தங்குமிடக் கட்டிடங்க ளையும் புனரமைக்கவென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 21.8 மில்லி யன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட செய லகக் கட்டிடம், மாவட்ட செயலாளரின் தங்கும் விடுதிக் கட்டிடம், பூநகரி பிரதேச செயலாளர் தங்கும் விடுதி கட்டிடம், அரசாங்க அதிகாரிகள் தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றைப் புனரமைக்கவென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு 42.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இந் நிதியூடான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக் கட்டட வேலைகள் பூர்த்தியானதும் சிவில் நிர்வாகப் பணிகளை அங்கேயே மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

தற்போது கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சியில் தங்கி இருந்தபடியே தங்களது பணிகளை மேற் கொள்ளுகின்றனர் என்றார்.மேலும் இங்கே தொடர்க...