25 அக்டோபர், 2010

சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 30 பேர் விடுதலை

எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தவர்களில் 30 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எம். வி. சன் சீ கப்பலின் மூலம் கடந்த ஒகஸ்ட் மாதம் 13ஆம் திகதி 492 இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று கனடாவை அண்மித்திருந்தது.

அரசியல் புகலிடம் கோரி கனடாவை சென்றடைந்துள்ள இவர்களில் விடுதலை செய்யப்பட்டுள்ள 30 பேருக்கு அகதிகளுக்கான அந்தஸ்து கோருவதற்கான முழு உரிமை உள்ளதாக கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டு;ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, கனடாவுக்குள் அரசியல் புகலிடம் கோரி சன் சீ கப்பலின் மூலம் வருகை தந்தவர்கள் சிலரின் கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பலின் மூலம் கனடாவை சென்றடைந்தவர்களில் 30 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய 462 பேரும் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோரில் சிலருக்கு கனேடிய நாட்டு சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டில் குடியுரிமை வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சன் சீ கப்பலின் மூலம் கனடாவை அண்மித்த சிலரை அந்நாட்டு அரசு மீண்டும் நாடு கடத்தலாம் என எதிர்பார்ப்பதாக கனேடிய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், கனேடிய அரசாங்கத்தினால் இதுவரை அவ்வாறான எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக் கடல் எல்லையில் தமிழக அரசியல்வாதிகளின் படகுகள் : ராஜித சேனாரத்

தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான படகுகளே இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாகக் கடற்றொழில் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இரவுப் பொழுதில் பெரும் எண்ணிக்கையிலான இந்தியப் படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் செய்மதியினூடாக அதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

செய்மதியினூடாகப் பெறப்பட்ட படங்கள் ஊடகவியலாளர்களுக்கு அதன்போது வழங்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவிலிருந்து மீண்டும் வர புதிய கடவுச் சீட்டு கோரும் இலங்கையர்



கனடாவிலுள்ள இலங்கை அகதிகள் தமது நாட்டுக்கு வருவதற்காகப் புதிய கடவுச் சீட்டு மற்றும் ஆவணங்களைக் கோரி வருவதாக, ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

கனடாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது, தமது அகதி ஆவணங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இவ்வாறு அகதி அந்தஸ்து கோரியவர்களில் 70 சதவீதமான இலங்கையருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்கள் மீண்டும் இலங்கை பயணிப்பதற்காகத் தமது ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி கனடாவில் அகதி அந்தஸ்து கோரியோர், மீண்டும் இலங்கை வருவதற்காக முயற்சி எடுக்கின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் கோரும் ஆவணங்களை தாம் வழங்கி வருவதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கணி வாகிஸ்வர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்குக் கடத்த முயன்ற 550 கிலோ கடலட்டைப் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 550 கிலோ கடல் அட்டைகளை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஜப்பான், தைவான், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், கடல் அட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் கடல் அட்டைகளைப் பிடிக்கவும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கடல் அட்டைகளை இலங்கை வழியாகக் கடத்துகின்றனர். வனத்துறையினர் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தினாலும், கடல் அட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மண்டபம் வனத்துறையினர் நேற்று வடக்கு கடல் பகுதியில் வந்த வாகனத்தை சோதனையிட்டதில், 250 கிலோ கடல் அட்டைகள் சாக்குகளில் கட்டப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், பனைக்குளத்தைச் சேர்ந்த டிரைவர் காஜா மைதீனை (21) கைது செய்தனர். அதேபோன்று வேதாளை பகுதியில் வேனில் கடத்தப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளைப் பொலிஸார் பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கொலன்னாவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

கொலன்னாவ ஊறுகொடவத்த பகுதியில் இரண்டு பாரிய குழுக்களுக்கிடையில் இன்று காலை 5.00 மணி முதல் மோதல் இடம்பெற்று வருகிறது.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் இப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலிகள் 1000 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை: அமைச்சர்


முன்னாள் விடுதலைப் புலிகள் சுமார் ஆயிரம் பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை அமைச்சர் குணசேகர கூறினார்.

இது குறித்து அந் நாட்டின் மறுவாழ்வு மற்றும் சிறைத் துறை சீர்திருத்த அமைச்சர் டி.ஈ.டபிள்யூ.குணசேகர ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் சுமார் ஆயிரம் பேர் சிறைகளில் உள்ளனர். அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடாத 304 பெண்கள் உள்பட 4,460 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 பெண்கள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட உள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் மூலம் ரூ.42,500 கோடி சாதனைமிகு வருமானம்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நாற்பத்தி இரண்டு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபா சாதனைமிக்க வருமானம் நாட்டிற்குக் கிடைக்கவுள்ளது.

ஒருவருட காலத்தினுள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்நாட்டிற்கு அனுப்பிவைத்த ஆகக் கூடிய தொகை என்ற சாதனையாக இது அமைகின்றது.

கடந்த ஆண்டிலே இந்நாட்டிற்குக் கிடைத்த வருமானம் 3.3 பில்லியன் டொலராகும். இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அமுல்படுத்திய குடியகல்வு ஊழியர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டமே இதற்கான காரணமாக அமைந்துள்ளது. உயர் வருமானம் பெறும் தொழில்களுக்கு இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், இந்த உழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கப்பெறும் வகையில் கூட்டு உடன்படிக்கைகளை மத்திய கிழக்கு நாடுகளுடனும் சேவை வழங்குநர்களிடமும் செய்துகொண்டமையே இதற்கான காரணமாகுமென இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா வீரசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.

அதிக வருமானம் பெறும் தொழிற்று றைகளுக்கு அதிகமாக பயிற்றப்பட்ட ஊழியர்களை அனுப்புதல், தொழில்சார் நிபுணர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப் பும் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் இதுவரையில் எடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கைவிடப்பட்ட மோட். சைக்கிள்களில் 2050 பாவனைக்கு தகுதி ஆவணங்களை சமர்ப்பித்துப் பெற்றுக்கொள்ள கோருகிறார் கிளிநொச்சி அரச அதிபர்


யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களில் 2050 மோட்டார் சைக்கிள்கள் பாவனைக்கு தகுதியானதென வாகன பரிசோதகர்களினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. வாகனங்களின் உரிமை யாளர்கள் தமது வாகனம் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது வேண்டுகோளுக்கிணங்க மோட் டார் போக்குவரத்து ஆணையாளர் நாய கம் டி. பி. எல். தர்மபிரியவின் ஆலோ சனைக்கு அமைய தொழில்நுட்ப உதவி ஆணையாளர் எஸ். ஏ. பிரேமரட்னா தலைமையிலான வாகன பரிசோதகர்கள் 12 பேர் அடங்கிய குழுவினர் பரிசோத னையை மேற்கொண்டதாக அவர் தெரி வித்தார்.

விஷேட பரிசோதனையின் போதே 2050 மோட்டார் சைக்கிள்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன. பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி, வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட் டை பிரதி, கிராம அலுவலகரின் உறுதிப் பத்திரம் என்பன சமர்ப்பித்து வாகன உரிமையாளர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நேற்று ‘தீ’

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லையெனவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை ஏற்பட்ட இந்திடீர் தீ விபத்தினையடுத்து விமானப் படை மற்றும் கடற்படையினரின் உதவியுடன் சில மணித்தியாலங்களுக்குள் தீயை முற்றாகக் கட்டுப்படுத்த முடிந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சேத விபரங்கள் தொடர்பில் உடனடியாக எதனையும் குறிப்பிட முடியாதெனவும் தெரிவித்தனர்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டவர் களும் உள்நாட்டவர்களும் இணைந்து நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை; நிர்மாணப் பணிகள் இடம்பெறும் நுரைச்சோலை பகுதியில் அதிக வெப்பம் காரணமாகவே மேற்படி தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக மின்சார சபையின் தலைவர் வித்யா அமரபால தெரிவித்தார்.

எவ்வித உயிர்ச் சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்பட வில்லையென அவர் குறிப்பிட்டார்.

கற்பிட்டி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேற்றைய தினம் விசேட பொலிஸ் குழுவொன்றை அனுப்பியதாகவும் தெரிவித் தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலாவது கப்பல் நவ. 18 வந்தடையும் துறைமுகப்பகுதியில் 27 நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருகை



ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக முதலாம் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு சிறுசிறு பணிகள் மாத்திரமே தற்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. நவம்பர் 18 ஆம் திகதி முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடைய உள்ளதோடு இரண்டாம் கட்டப் பணிகள் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படும் என துறைமுக அதிகார சபைத் தலைவர் பிரியத் பந்து விக்ரம கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக இறுதிக் கட்ட பணிகள் குறித்து ஆராய்வதற்காக துறைமுக விமான சேவைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையிலான குழு நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகார சபைத் தலைவர்,

ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பை முன்னிட்டு சர்வதேச துறைமுகம் திறந்து வைக்கப்பட உள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்படுகிறது. 18ஆம் திகதி முதல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தொடர்ச்சியாக கப்பல்கள் வர உள்ளன. இதனூடாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய அடித்தளமிடப்படுகிறது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றுவதற்கான பிரதான மைல்கல்லாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமையும்.

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் முதலீடு செய்வதற்கு சீமெந்து, பசளை, சீனி, உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, களஞ்சியப்படுத்தல், டின் மீன் சார்ந்த 27 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இங்கு முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். துறைமுக கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணமும் அறவிடப் படமாட்டாது. தென் ஆசியாவிலே சேவை வழங்கும் பிரதான இடமாக ஹம்பாந் தோட்டை துறைமுகம் அபிவிருத்தி செய் யப்படும். சர்வதேச தரத்திலான வசதிகள் இங்கு வருபவர்களுக்கு வழங்கப்படும்.

இரண்டாம் கட்டம்

இரண்டாம் கட்டப் பணிகள் நவம்பர் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதோடு இதற்கு 800 அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும். சீனா அரசே இதற்கும் கடனுதவி வழங்குகிறது. 3 1/2 வருடங்களில் 2ம் கட்டப் பணிகள் நிறைவு செய்யப்படும். முதலாம் கட்டத்தின்போது 4 கப்பல்களே நிறுத்த முடியும். இரண்டாம் கட்ட முடிவில் 10 கப்பல்கள் நிறுத்தக் கூடியதாக வசதி செய்யப்படும். துறைமுக நிர்வாகக் கட்டிடம் 14 மாடிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கு முன் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும்.

18 முதல் பார்வையிட அனுமதி

இறுதிக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப் படுவதால் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நவம்பர் 18 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு துறைமுகத்திற்கு வர அனுமதி வழங்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு நிலையங்களின் பராமரிப்புக்கு ரூ. 100 மில். செலவு



புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உணவுக்காக மட்டும் நாளொன்றுக்கு நூறு மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மார்ச் மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வுள்ளனர். இந்தத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும்.

அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்டுள் ளனர்.

வளர்முகநாடுகளின் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரண் அடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும், 106 ஆண்களும் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் எஸ். சதீஸ்குமார், செயலாளர் எம். திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சுகாதார அமைச்சின் செயலருக்கு ஜனாதிபதி மஹிந்த அறிவுறுத்தல் ஆஸ்பத்திரிகளில் 24 மணிநேரமும் ஓ.பி.டி திறப்பு







நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிக ளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளு க்குத் தேவையான சிகிச்சைகள், பரிசோத னைகள் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தொற்றுநோய் உட்பட சகல நோய்களுக்கும் உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு ள்ளார். இது தொடர்பில் சகல ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் பணித்துள்ளார்.

நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற் கான முக்கிய நடவடிக்கையாக இத்திட்டம் அமைவதுடன் பல்வேறு நோய்களினால் அவஸ்தைப்படும் நோயாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாகவும் அமையும்.

அத்துடன் நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை இதன் மூலம் உறுதிப்படுத்தவும் முடியும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார, அமைச்சின் செயலாளர் 24 மணித்தியாலமும் வெளி நோயாளர் பிரிவை திறந்து வைத்து சேவைகளை வழங்கும் யோசனை ஏற்கனவே இருந்ததாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டத்தை செயற்படுத்துவதுடன் ஆரம்பத்தில் முக்கிய பெரியாஸ்பத்திரிகளில் இதனை நடைமுறைப்படுத்தவும் அடுத்த கட்டமாக அதனை சகல ஆஸ்பத்திரிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் டொக்டர்கள், மருந்தக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இந்நடவடிக்கைகள் முனைப்புப் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...