17 ஜூலை, 2010

இடம்பெயர்ந்த மக்களுக்கான.50.000 வீடுகளை அமைக்க இந்தியா ஒப்பந்தம்



இலங்கையில் மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கம் மகாராஸ்டிரா வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையிடம் வழங்கியுள்ளது. அண்மையில் இந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் இந்திய விஜயம் மேற்கொண்டிருந்தபோது இந்தியப் பிரதமரால் வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன. உத்தேச வீடமைப்பு திட்டத்திற்கமைய ஒருவீட்டினை நிர்மாணிப்பதற்கு இந்தியா 2லட்சம் ரூபாவினை செலவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க ஆயிரம் கோடிரூபாவை இந்திய அரசாங்கம் செலவிடவுள்ளது. இந்த வீடமைப்பு நிர்மாணப் பணிகள் தொடர்பாக ஆராய மகாராஸ்டிரா வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை பிரதிநிதிகள் எதிர்வரும் வாரம் இலங்கை வரவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் வீரமக்கள் தின நிகழ்வுகள்- புளொட் அமைப்பினர்

அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு நேற்றுமாலை உமாமகேஸ்வரன் சமாதியில் மௌனஅஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. செயலதிபர் உமாமகேஸ்வரன் சமாதி வளாகத்தில் மங்கல விளக்கேற்றல் நிகழ்வினைத் தொடர்ந்து, செயலதிபர் சமாதி மற்றும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மறைந்த புளொட் உறுப்பினர்களின் உருவப்படங்களுக்கு மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அஞ்சலிக்கூட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினர் பவன், புளொட் மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜீ.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட புளொட் முக்கியஸ்தர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம், வவுனியா நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன், ரெலோ செயலாளர் உதயராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் உதயன், புளொட் உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர். அஞ்சலிக் கூட்டத்தில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில், மே 19ற்குப் பின்னர் 30வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசியல் தீர்வு தொடர்பாக ஒரே கருத்தினை எட்டுவதற்கும், தமிழ் மக்களின் அவலங்களை போக்குவதற்கும் கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. தமிழ்க் கட்சிகள் ஒரே அமைப்பாக சேர்ந்து இயங்க முடியாவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளிலாவது அனைத்து கட்சிகளும் கருத்தொருமைப்பாட்டுடன் ஒற்றுமையாக செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் அவசியமும் அவசரமுமாகிறது. எனவே ஒரு சரியான தீர்விற்கான முயற்சிகளை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுத்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காய் தமது இன்னுயிரை ஈந்த போராளிகள், பொதுமக்கள் அனைவரின் தியாகங்களையும் அர்த்தமுடையவையாக்க வேண்டும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வீரமக்கள் தின நிகழ்வுகள்- புளொட் அமைப்பினரால் அனுஷ்டிக்கப்படும் வீரமக்கள் தின இறுதிநாளான நேற்றுக்காலை மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் புளொட் அமைப்பினரால் தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டு பிற்பகல் வரையில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மட்டக்களப்பு புளொட் அலுவலகத்தில் மங்கள விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சூட்டி தலைமையில் இடம்பெற்றன. இதில் புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். அத்துடன் கரையாக்கன்தீவு காந்தி விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் உதைபந்தாட்ட போட்டியின் முதற்பரிசுக்காக உமாமகேஸ்வரன் ஞாபகக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் நொச்சிமுனை பிரதேசத்திலும், நாவற்குடா விளையாட்டு மைதானத்திலும் சிரமதானப் பணிகளும் நேற்று இடம்பெற்றுள்ளன.


கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், முருங்கன் புளொட் அலுவலகங்களில் வீரமக்கள் தின நிகழ்வுகள்- கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளிலுள்ள புளொட் தலைமை அலுவலகங்களிலும், கிளை அலுவலகங்களிலும் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. மங்கல விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகளும், அஞ்சலிக் கூட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் குறித்த மாவட்ட புளொட் அலுவலகங்களில் மறைந்த புளொட் உறுப்பினர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அப்பகுதி ஆலயங்களில் விசேட பூஜைகளும் நேற்று இடம்பெற்றுள்ளன.






மேலும் இங்கே தொடர்க...

மெக்சிகோவில் போலீசார் மீது காரை ஏற்றிய போதை மருந்து கும்பல்



மெக்சிகோ அதிபராக கடந்த 2006-ம் ஆண்டு பிலிப் கெல்டரோன் பதவியேற்றதும் போதை மருந்து கடத்தல் கும்பலை ராணுவம் மூலமாக வேட்டையாடி வருகிறார். இதனால், போதை மருந்து கும்பல் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவர்களுடைய வன்முறைக்கு 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழ்நிலையில், அந்த கும்பலின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜீஸஸ் அர்மண்டோ அகோஸ்தா என்பவரை போலீசார் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

இதையடுத்து, அமெரிக்க எல்லை அருகே உள்ள சியுடர் ஜவுராஜ் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீது போதை மருந்து கும்பல் தாக்குதல் நடத்தியது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், ஒரு காரில் வேகமாக வந்து போலீசாரின் வாகனங்கள் மீது வேகமாக மோதினர். அதில் இரண்டு போலீசார் மற்றும் மருத்துவ உதவியாளர் ஒருவர் பலியாகினர். இந்த தகவலை மெக்சிகோ ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

கால்பந்து போட்டியில் ஆரூடம் சொன்ன ஆக்டோபசை ஸ்பெயினுக்கு விற்க ஜெர்மனி மறுப்பு


கால்பந்து போட்டியில் ஆரூடம் சொன்ன    ஆக்டோபசை ஸ்பெயினுக்கு    விற்க ஜெர்மனி மறுப்பு
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என உலகம் முழுவதும் பலவித ஆரூடங்கள் மூலம் கணிக்கப்பட்டது. ஜெர்மனியில் உள்ள ஓபர் கோஷன்ஸ் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தில் உள்ள பால் ரோஸ் என்ற ஆக்டோபஸ் ஆரூடம் சொன்னது. அதன்படி தொடர்ந்து 7 போட்டிகளில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.

ஆனால், அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதும் ஸ்பெயின் வெற்றி பெறும் என கணித்தது. அதன்படி ஸ்பெயின் அணி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

தங்களது சொந்த நாட்டு அணிக்கு எதிராக ஆரூடம் சொன்ன ஆக்டோபசை வறுத்து சாப்பிட விரும்புவதாக ஜெர்மனி மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர். ஆனால் தங்களுக்கு சாதகமாக ஆரூடம் தெரிவித்த பால்ரோஸ் ஆக்டோபசுக்கு பாதுகாப்பு அளிக்க ஒரு குழுவை ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயிஸ் அனுப்பி வைத்தார்.

இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை ஸ்பெயின் வெற்றி கொள்ளும் என்று இந்த ஆக்டோ பஸ் கூறியது. அதன்படியே ஸ்பெயின் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதனால் ஸ்பெயின் மக்களிடம் பால்ரோஸ் ஆக்டோபஸ் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது.

எனவே அந்த ஆக்டோபசை ரூ.20 லட்சத்துக்கு வாங்க ஸ்பெயின் நாட்டு வியாபாரி விரும்பினார். ஆனால் அதை விற்க ஜெர்மனியின் ஒயர்ஹீசேன் கடல் வாழ் உயிரின அருங்காட்சியகம் மறுத்து விட்டது. இதை தொடர்ந்து பால்ரோஸ் ஆக்டோபசை தங்கள் கவுரவமிக்க நண்பன் என ஸ்பெயின் மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் பணிப்பெண் கொழும்பில் கொலை: கண்காணிப்பில் பி-கணேசன்

பதுளை மாவட்டம், எல்ல, நமுனுகலை, கலுகல தோட்டம், கீழ்பிரிவை சார்ந்த வெள்ளசாமி சீதாராணி என்ற 44 வயதுடைய பெண் கொழும்பு புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீடொன்றில் பணிப்பெண்னாக பணிபுரியும் வேளையில் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலே கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரும், அவரது மாமியாரும் கைதுசெய்யப்பட்டு, புதுகடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதனும் கண்காணித்துவருகின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீட்டில் கடந்த ஆறுமாத காலமாக இப்பெண் பணிபுரிந்த வேளையிலே இக்கொடூரச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் ஒரு திருட்டுச்சம்பவம் தொடர்பிலே எஜமானர்களால் இந்த பெண் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட இரத்த பெருக்கினால் மரணம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் சந்தேக நபர்களான ஷாகுல் ஹமீத் என்ற வீட்டு உரிமையாளரையும், அவரது மாமியாரான நோனா நஜீமா என்பவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேல் விசாரணைகள் தொடர்பிலே கொட்டாஞ்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா ககேணசன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் ஆகியோர் விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நேரடியாக கண்காணித்து வருகின்றார்கள். கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்சமயம் கொழும்பு மயானச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்புத் திருத்தம் : ஸ்ரீ.மு.காங். நாளை ஆராய்வு

அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் நிலைப்பாடு குறித்து நாளைய தினம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளது.

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தல்களின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு முதல் தடவையாக நாளைய தினம் நகர மண்டபத்தில் கூடவுள்ளது.

கட்சியின் அதி உயர் பீடம், அரசியல் சபை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் புதிய புத்தர் சிலை

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தற்போது புதிய புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மடு தேவாலயத்திலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவிலேயே இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை- மன்மோகன்

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடனும், மதிப்புடனும் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உறுதி அளித்திருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து கடந்த ஜூலையில் தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கை அதிபருடன் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன் அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் தூது குழுவும் என்னை சந்தித்து பேசியது இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் விரைவில் குடியமர்த்தப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்தும். இதற்காக இந்திய அரசு ஏற்கனவே 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உறுதி அளித்துள்ளது. மேலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தருவதற்கு உதவி அளிக்கவும் இந்தியா உறுதி அளித்திருக்கிறது.

மேலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அவர்களிடம் பொருளதார ரீதியாக இயல்புநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து கொள்கிறேன். மேலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தென்பகுதிகளில் கடும் மழை. களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!



இலங்கையின் தென்பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுகங்கை ஆற்றின் நீர்ப்பெருக்கு அதிகரித்து வருவதால் இரத்தினபுரி. களுத்துறை பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக இலங்கையின் தென்பகுதிகளிலும். மலையகத்திலும் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. ஆனால், யாழப்பாணம் உட்பட்ட வடபகுதியில் தற்போது கடும் வெயிலும், வெப்பமும் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வியில்

ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர்கள் இஸ்லாமாபாத்தில் வியாழன்று நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கவில்லை என பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா மறுத்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது அவர் தொடர்ச்சியாக இந்திய அரசிடமிருந்து தொலைபேசி அறிவுறுத்தல்களைப் பெற்று சந்திப்பில் தடங்கல் ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டையும் எஸ்.எம்.கிருஷ்ணா நிராகரித்துள்ளார்.

இந்திய தூதுக்குழுவினரின் செயற்பாடுகள் பற்றி பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மெஹ்முத் குரேஷி ஊடகவியலாளர்கள் மத்தியில் கடுமையாக சாடியிருந்தார்.

இரண்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தை, இருதரப்பு நாடுகளுக்கு இடையிலும் உள்ள முரண்பாடான விடயங்கள் தொடர்பில் எவ்வித வெளிப்படையான முன்னேற்றமும் எட்டப்படாது முடிவடைந்துள்ளது.

2008ம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் முதற்தடவையாக நடைபெற்றுள்ள இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையிலான இந்தப் பேச்சுவார்த்தை, கடந்த ஆறுமாத காலத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது உயர்மட்ட சந்திப்பாக அமைந்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் ரயில் பாதை இந்தியா ஒப்பந்தம்




கொழும்பு:இலங்கையில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது.இலங்கையில் நடந்த போரால், வடக்கு மாகாணத்துக்கான ரயில் பாதை கடுமையாக சேதமடைந்தது. இதனால், அங்கு ரயில் போக்குவரத்து நடக்கவில்லை. தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதையடுத்து, வடக்கு மாகாணத்துக்கு மீண்டும் ரயில் பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தை, இந்திய ரயில்வே சர்வதேச கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது. அத்துடன், வடக்கு மாகாணத்துக்கான தொலைத்தொடர்பு திட்டமும் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைப் பணிப் பெண் குவைத் தூதரகத்தில் தஞ்சம் 13 வருடங்கள் பூட்டி வைத்து வதை

குவைத்தில் சுமார் 13 வருடங்களாக எவ்வித கொடுப்பனவும் இன்றி வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவர் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அவிசாவளையைச் சேர்ந்த 57 வயதான கமலாவதி கெடவல என்ற பெண்ணே இவ் வாறு தஞ்சமடைந்து ள்ளார்.

பணிப்பெண்ணாக குவைத் சென்ற இவர் குறிப்பிட்ட வீட்டில் வேலைக்க மர்த்தப்பட்டுள்ளார். வேலைக்கமர்த்தப்பட்ட நாள் முதல் வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கடுமையாக உழைக்கவும் வற்புறுத்தப்பட் டுள்ளார். குறிப்பிட்ட வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது அவரை இழுத்து வந்து தண்டித்துள்ளதுடன் வெளியேறவிடாது எந்நேரமும் கண்காணித்து வந்துள்ளனர்.

இதே வீட்டுக்கு இந்தோனேஷிய நாட்டு பிரஜையொருவரும் அண்மையில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளார். அவரது உதவியுடனேயே இலங்கைப் பெண்மணி தப்பி வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் எல். கே. ருஹுணகே தெரிவித்தார்.

13 வருட கொடுப்ப னவு மற்றும் நஷ்டஈடு என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கென குறிப்பிட்ட பெண் நேற்று இலங்கை தூதரக அதிகாரிகளின் ஊடாக குவைத் உள்துறை அமைச்சுக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

குறிப்பிட்ட வீட்டையும் அடையாளம் கண்டுள்ளதாக பணியகத்தின் முகாமையாளர் எல். கே. ருஹுணகே தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்க்கட்சி தலைவர் ரணில் மஹிந்த சிந்தனையின் பங்காளி



சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை உலகம் நிராகரித்துள்ளதாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். 40 வருடங்களுக்கு முன்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நிலைப்பாட் டிற்கு வந்திருந்தார். ஐ.தே.க தலைவர் தற்பொழுதே இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். இதன் மூலம் அவர் மஹிந்த சிந்தனையின் பங்காளியாகியு ள்ளரென அமைச்சர் டளஸ் அலஹப் பெரும கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், வரவு செலவுத் திட்டத்தினூ டாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை

முன்னெடுத்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை உலகம் நிராகரித்திருப்பதாகவும் ரணில் கூறியுள்ளார். தாமதித்தாவது ரணிலும் இந்த நிலைப்பாட்டிற்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.

யாப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டபோதும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்களில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்து ஏற்கக் கூடியதே ஆனால் அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டில் விரிசல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளதை நாம் நிராகரிக்கிறோம்.

அனுபவமுள்ள அரசியல்வாதி இவ்வாறு கருத்துக் கூறியிருப்பது குறித்து கவலை அடைகிறோம். இப்பொழுது தான் பேச் சுக்கள் ஆரம்பமாகி ஆரம்ப கட்ட பேச் சுக்கள் இடம்பெறுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளதை ஏற்க முடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பெருந்தோட்டங்களில் அரச நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டு ஆலோசனை

23 இல் கொழும்பில் கூட்டம்: மீள் நிர்ணய குழுவுக்கு அறிக்கை



மலையகப் பெருந்தோட்டங்களில் அரச நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக, தொழிற்சங்க மற்றும் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்குக் கூட்டு ஆலோசனையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளன.

பெருந்தோட்டங்களை அரச நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கும் வகையில் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் முன்மொழியப் பட்டுள்ளதோடு இது தொடர்பான பொதுவான கூட்டறிக்கை இம்மாத

இறுதிக்குள் எல்லை மீள் நிர்ணய குழுவுக்குக் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை கொழும்பிலுள்ள “இலங்கை மன்றக் கல்லூரி”யில் நடைபெறுகிறது. இதில் மலையகத்தில் இயங்கும் சகல அமைப்புகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக மலையக அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரான பீ. பீ. தேவராஜ் தினகரனுக்குத் தெரி வித்தார்.

அரசியல் கருத்தியலுக்கு அப்பால் சமூக நலச் சிந்தனையை நோக்காகக் கொண்டு பொதுவான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துச் செயற்படுத்தி வருவதாகக் கூறிய அவர், மலையகத்தின் முன்னணி அரசியல், தொழிற்சங்க அமைப்புகளும் இது விடயத்தில் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறினார்.

‘காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து ‘கிராம சபை’ கட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்ட மலையக சமூகம் இதுவரை காலமும் அரச நிர்வாகத்திலிருந்தும் புறந்தள்ளப்பட்டிருக்கின்றது. தோட்ட அதிகாரியே இந்த மக்களின் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

எனவே, சமத்துவத்தையும் ஐக்கிய த்தையும் ஏற்படுத்தும் வகையில், யதா ர்த்த நிலையினின்று புதிய ஆலோ சனைகளை வரைந்துள்ளோம். இதில் இன ரீதியான சிந்தனைப் போக்கு கிடையாது. நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவ தற்கான அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலேயே இந்த ஆலோசனைகள் முன்மொழியப் பட்டுள்ளது’ என்று தெரிவித்த தேவராஜ், நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன் தற்காலிக ஏற்பாடாக கிராம சேவையாளர் பிரிவுகள் பலவற்றைப் புதிதாகப் பிரேரித்துள்ளதாகவும் குறிப் பிட்டார்.

தற்போதைய ஏற்பாட்டின்படி 350 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவொன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தோட்டங்கள் தற்போது சிறு நகர பிரதேசத்திற்குள் (ஷிலீசீடு ஸிஙுஸஹடூ திஙுலீஹ) வகைப்படுத்தப்பட்டுள்ளதால், தோட்டத்திற்கொரு கிராம சேவையாளர் பிரிவை ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைக்கு நுவரெலியாவிலும் கொழும்பு வடக்கிலும், மேலதிக பிரதேச செயலகப் பிரிவுகளைக் கோருவதற்கும் விரிவான ஆய்வுக்குப் பின்னர் சனத்தொகை, நிலத்தொடர்பு முதலான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆலோசனைகள் முன்வைக்க உத்தேசிக் கப்பட்டுள்ளதாகவும் தேவராஜ் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் முறையில் விரைவில் மாற்றம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சஜ.வி.பியுடன் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிப் பேச்சு


அரசியலமைப்பு திருத்தத்தை இந்த வருடத்தினுள் துரிதமாக மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறையில் கீழே நடத்தப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட தலைவர்கள் நேற்று தெரிவித்தனர்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஐ.தே.க.வுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் பேச உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (16) கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, நிமல் சிரிபால டி சில்வா மற்றும் டளஸ் அலஹப்பெரும ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையை மாற்றவே முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் மறுசீரமைப்பு குழு தேர்தல் முறையை மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எதிர்க் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்று தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படும். தொகுதி முறையை அடிப்படையாகக் கொண்டதாக புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறை மாற்றப்படும். இதனூடாக கிராத்துக்கு ஒரு உறுப்பினர் தெரிவாவார்.

17 ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் ஐ.தே.க.வுடன் பேசுவோம். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படுமென அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கூறினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில் எமக்கு தேவையானவாறு யாப்பை மாற்ற முடியும். ஆனால் ஏனைய கட்சிகளுடன் பேசி யாப்பை திருத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். முழு அரசியல் கட்டமைப்பையும்

பாதிக்கக்கூடிய விடயமான யாப்புத் திருத்தத்தின் போது பரந்தளவில் செயற்பட அவர் முன்வந்துள்ளார். இதன்படியே எதிர்க் கட்சிகளின் கருத்தறியப்பட்டுள்ளது.

ஐ.தே.க.வுடனான பேச்சுக்களில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்திற்குப் பொறுப்பு கூறக்கூடிய நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் முறையை ஏற்படுத்த பொது இணக்கம் காணப்பட்டுள்ளது. பிரதமரின் அதிகாரம் அதனுடன் தொடர்புடைய யாப்பு திருத்தங்கள் என்பன குறித்து எதிர்காலத்தில் ஆராயப்படும்.

காலம் கடத்தாது துரிதமாக அரசியல் யாப்பை திருத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்க்கட்சிகளின் பூரண ஒத்துழைப்பு கிடைத்தால் மிக விரைவில் யாப்பை மாற்ற முடியும். இந்த வருட இறுதிவரை காத்திருக்காது துரிதமாக அரசியல் யாப்பை மாற்ற நடவடிக்கை எடுப்போம். எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் ஜனாதிபதி பேச்சு நடத்துவார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக ஒருவர் எத்தனை தடவையும் தெரிவாகலாம். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. முன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்களுக்கு பிரதமராக வர முடியும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் இதில் தடைகிடையாது.

பல வருடங்களின் பின்னர் யாப்பு திருத்தம் தொடர்பில் இரு பிரதான கட்சிகளுக்கிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜீ.எஸ்.பி. பிளஸ், ஐ.நா. குழு ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி குழப்பிக்கொள்ளத் தேவையில்லை என்றார்.

அமைச்சர் டளஸ் அலஹப் பெரும கூறிதாவது,

ஐ.தே.க.வுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் ஏற்பட்டுள்ள பொது இணக்கப்பாடு சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாகும். ஜே.வி.பி. அடங்களான ஏனைய கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சு நடத்தும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...