17 பிப்ரவரி, 2011

டான்தமிழ்ஒளி தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை(11938)27500.h










தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ஐரோப்பிய நாடுகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி நேற்று முதல் டான் யாழ் ஒளி என்ற பெயரில்(10.02.2011) புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாகின்றது
யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன் டான் யாழ். ஓளி என்ற புதிய பெயரில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
டான்யாழ் ஒளி தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள்

Eurobird-9 (9˚ East)
FREQUENCY : 11938 H
S/R : 27500, FEC : ¾
Name: Yaarl Oli

மேலும் இங்கே தொடர்க...

முகத்தில் காயமடைந்த நிலையில் உபேக்ஷா எம்.பி. வைத்தியசாலையில்




ஆளுந் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தென்னிலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருவருமான உபேக்ஷா சுவர்ணமாலி காயமடைந்த நிலையில் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராற்றை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அபேக்ஷா சுவர்ணமாலி மீது அவரது கணவன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அதிகாலை ஒருமணியளவில் பொலிஸாரின் 119 எனும் அவசர தொலைபேசிக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டதாகவும், இதனையடுத்து வீட்டுக்கு விரைந்த பொலிஸார் ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரியவருகின்றது.

முகத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர் மீது கணவன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்ற போதிலும் கணவருக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் பொலிஸில் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லையென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பபா என அழைக்கப்படும் உபேக்ஷா சுவர்ணமாலி பிரபல தொலைக்காட்சி நடிகையாவார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கம்பஹா மாவட்டத்தில் வெற்றிபெற்றிருந்தார். எனினும் பின்னர் அவர் அரசாங்கத் தரப்பிற்கு மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்குதல் சம்பவத்தையடுத்து நேற்றுக்காலை உபேக்ஷா சுவர்ணமாலியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தான் கங்காரம பகுதியில் படப்பிடிப்பொன்றில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இவ்விடயம் குறித்து வினவிய போது பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலிக்கு சிறுகாயம் காணப்படுவதாகவும், காயத்திற்கான காரணம் எதுவும் தமக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது.

சுவர்ணமாலி ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் 18 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழக மீனவர்கள் விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


வடமராட்சி, ஒரே தாய்மொழியினை பேசுவது மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற ரீதியில் வடமராட்சி சமாசத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டுவதுடன் சட்டம் தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பும் வரையில் அவர்களை கௌரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது எமது கடமை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டின் வட பகுதி கடற்பரப்பினுள் நுழைந்து தொழில் செய்தார்கள் என்ற காரணத்தினால் 112 தமிழக கடற்றொழிலாளர்கள் வடராட்சி மீனவர்களால் பருத்தித்துறை கரைக்கு கொண்டு வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் வசமிருந்த 18 இழுவைப் படகுகளும் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அவைகள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் அடிப்படைச் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன; "கபே' அமைப்பு கூறுகிறது


அடிப்படைச் சட்டங்கள் மற்றும் தேர்தல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. வடக்கில் அச்சம் சூழ்ந்து கொண்டுள்ளது. பக்கச் சார்பான நடவடிக்கைகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. இதுவரையில் 92 தேர்தல் முறைகேடுகள் பதிவாகியுள்ளன.

இவையனைத்தும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு பாரிய நெருக்கடியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளதாக "கபே' சுட்டிக்காட்டியுள்ளது. வாக்காளர்கள் சுதந்திரமாக செயற்பட்டு தமது வாக்கினை அளிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்குமே இருக்கின்றது என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எனப்படுகின்ற கபேயின் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கீர்த்தி தென்னகோன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தேர்தல் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று புதன்கிழமை நண்பகல் வரையில் நாடளாவிய ரீதியில் 92 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தாக்குதல், அச்சுறுத்தல் மற்றும் தேர்தல் காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் சுதந்திரமாக பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதிருக்கின்றது.

வடக்கில் எதிர்த் தரப்பினருக்கான சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. அங்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மக்களிடத்தில் செல்ல முடியாதுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தேர்தல் தொடர்பில் பெரிதாக ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை. இதற்குக் காரணமே அங்கு இடம்பெறுகின்ற தேர்தல் முறைகேடுகளேயாகும்.

குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மாத்திரமே வடக்கின் முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில முக்கிய பிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது. மாற்றுத் தரப்பினருக்கு இந்த அனுமதி மறுக்கப்படுகின்றது. இது அடிப்படை மற்றும் தேர்தல் சட்டம் ஆகியவற்றினை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும். தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பொலிஸார் இவ்விடயத்தில் தமது பொறுப்பினை தவற விட்டுள்ளனர். பாதுகாப்புத் தேவைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தமது கடமையைச் சரிவரச் செய்வார்களேயானால் வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்க முடியாது.

இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லாது விட்டால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நீதியான சுதந்திரமான தேர்தல் நடைபெறாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மீனவர் கைதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் கனிமொழி உட்பட 1000 பேர் கைது




பருத்தித்துறை, முனை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிரு ந்த இந்திய மீனவர்கள் 112 பேர் கைது செய்யப் பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னையி லுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி. மு. க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் எம். எல். ஏ. க்கள் உட்பட ஆயிரம் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 112 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது பருத்தித்துறைமுனை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் கையளிக் கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தைக் கண் டித்தும், இலங்கைக் கடற்படையினர்தான் இச்செயலைச் செய்திருப்பதாகவும் கூறி சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்காவில் இருந்து மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி தலைமையில் ஆயிரக் கணக்கான திமுகவினர் ஊர்வலமாக சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தைச் சென்றடைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை உடனடியாக நிறு த்திக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த கனிமொழி, தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் கூறினார். ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.

அதேநேரம், தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் கண்டித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு ள்ளன. டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங் இக்கண்டனத்தை வெளியிட்டிருப்பதாக இந்திய ஊடகச் செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது என்றும், தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் மன்மோகன் சிங் கூறியிருப்பதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல்வாதிகள் தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீவிரப ப்டுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழக மீனவர் கைதுக்கும் கடற்படைக்கும் தொடர்பில்லை இலங்கை கடற்படை முற்றாக மறுப்பு

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பினுள் தமிழக மீனவர்கள் 112 பேர் கைது செய்யப்பட்ட விடயத்துக்கும் கடற்படைக்கும் எவ்வித தொடர்புமில்லை என இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக் கப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் அவர்களது 18 வள்ளங்களும் கைப்பற்றப்பட்டதாக தமிழக த்திலுள்ள அரசியல்வாதிகளும் பொது அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுப்பதாகவும் கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். தமிழ் நாட்டில் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இலங்கையின் வட பகுதி கடலோரப் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டி வருகின்றனர்.

யாழ். மீனவர்களின் வலைகள், உட்பட மீன் வளத்தையும் அள்ளிச் செல்கின்றனர். இது தொடர்பாக மீனவர்கள் தொடர்ந்தும் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர். இலங்கை கரையோரம் வரை வந்து மீன்பிடிப்பில் ஈடுபடும் இவர்களை கடற்படையினர் இதுவரை தடுத்து நிறுத்தவில்லை தாக்கவுமில்லை.

பருத்தித்துறைமுனை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட தமிழக மீனவர்களை யாழ். மீனவர்களே சுற்றிவளைத்து கரைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களே பொலிஸாரிடம் ஒப்படைத்தும் உள்ளனர். கடற்படையினர் இதில் தலையிடவுமில்லை தொடர்புமில்லை என்றும் கொமாண்டர் கோசல தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுபிள்ளைகளை காண்பித்து பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை


சிறு பிள்ளைகளைக் காண்பித்து அதன் மூலம் பொதுக்களின் அனுதாபத்தைப் பெற்று பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதன் தலைவி திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.

பிள்ளைகள் தங்கள் சிறுபராயத்தை சுதந்திரமாக கழிப்பதற்கான பிறப்புரிமையைப் பெற்றுள்ளார்கள். அந்த உரிமையை அப்பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்க்கு கூட பறித்து விட முடி யாது என்று சிறுவர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத் துகின்றது.

வீதியில் கைக்குழந்தைகளையும் சிறு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கும் பெண்களை அந்தந்த பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருக்கும் சிறுவர் பராமரிப்பு மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்ற உத்தரவின் பெயரில் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைத்து பிள்ளைகளை சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்து அவர்களை நல்ல முறையில் பராமரிப்பார்கள்.

இரண்டு வார காலத்தில் அப்பெண் போதைவஸ்து உபயோகித்தல், அவற்றை விற்பனை செய்தல், சிறு திருட்டுகள், விலைமாதர் தொழில் புரிகின்றமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் இப்படியான தொழிலில் ஈடுபடலாகாது என்று எச்சரித்து பிள்ளைகளையும் தாயமாரிடம் மீண்டும் ஒப்படைத்து விடும்.

அதேவேளையில், மேலே குறிப்பிட்ட குற்றச்செயல்களில் இப்பெண்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தண்டிக்கும், தாய் சிறையில் இருக்கும் காலத்தில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மிகவும் கவனமாக வளர்ப்பார்கள் என்று திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காலி - மாத்தறை அதி வேக ரயில் சேவை நேற்று ஆரம்பம்








காலி - மாத்தறை இடையி லான அதிவேக ரயில் சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டது.

இது தொடர்பான பிரதான வைபவம் மாத்தறை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. காலி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த விழாவின் பிரதம அதிதிகளான போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா அடங்கலான அதிதிகள் விசேட ரயில் மூலம் மாத்தறையை வந்தடைந்தனர்.

இந்திய கடனுதவியுடன் கொழும்பு - மாத்தறை இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்படுகிறது. முதற் கட்டமாக காலி - மாத்தறை இடையிலான ரயில் பாதை நவீன முறையில் மீளமைக்கப் பட்டுள்ளது. காலி – மாத்தறை இடையில் பயணம் செய்வதற்கு முன்னர் சுமார் 1 1/4 மணி நேரம் பிடிக்கும். ஆனால் ரயில் பாதை மீளமைக்கப்பட்டதையடுத்து காலியில் இருந்து மாத்தறையை வந்தடைய 38 நிமிடங்களே பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ரயில் பாதை திறக்கப்படுவதை முன்னி ட்டு காலி ரயில் நிலையத்தில் மத அனுஷ்டானங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பெய ர்ப்பலகையை திறந்து வைத்தனர்.

காலி – மாத்தறை இடையிலான ரயில் பாதை இந்தியாவின் இர்கொன் கம்பனியூடாக நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் பணிகள் 6 மாத காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டன. இதனையொட்டி காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. இன்று முதல் காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவை வழமை போல இடம்பெறும்.
மேலும் இங்கே தொடர்க...

பதுளை பகுதியில் மீண்டும் மழை: தேயிலைச் செடி மலை 5 அடிக்கு தாழிறங்கியது



பதுளைப் பகுதியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதி னால் மண் சரிவு அபாயம் ஏற் பட்டுள்ளது.

பதுளை - இங்குருகமூலை தோட்டப் பிரிவில் சுமார் ஐந்து ஹெக்டயர் தேயிலைச் செடிகளு ள்ள மலைப் பிரதேசம் தாழிறங்கி வருகின்றது. நேற்று முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததுடன் நேற்று இரவு மேற்குறிப்பிட்ட மலைப் பிரதேசம் ஐந்து அடிக்கு தாழிறங்கியுள்ளது.

இதனையடுத்து தோட்ட வைத்தியசாலை கீழிறங்கி யதினால் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு, வைத்தியசாலை இடிந்து விழுந்துள்ளதுடன் தோட்ட முன் பள்ளியின் சுவர்களும் இடிந்து ள்ளன.

இம் முன் பள்ளியிலிருந்த 18 சிறுபிள்ளைகளும், தேயிலைக் கொழு ந்து நிறுக்கும் இடமொன்றில் தங்க தற்காலிகமாக வைத்துள்ளனர். தோட்ட வைத்தியசாலை டொக்ட ரின் வாசஸ்தலமும் பாரிய வெடிப்பு க்களுக்குள்ளாகியுள்ளது.

பூமிப் பிரதேசம் தற்போதும் தாழிறங்கிக் கொண்டிருப்பதினால், அப் பகுதிக்கு மக்கள் செல்வதை தடை செய்யும் வகையில் தோட்ட நிருவாகத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் போடப்பட்டுள்ளது. பதுளை அரச அதிபரினாலும் இப் பூமிப் பிரதேசம் ஆபத்து மிகு தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கி ன்றது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாதகலில் மேலும் 26 இந்திய மீனவர்கள் கைது


யாழ்ப்பாணம் மாதகல் கடற் பரப்பில் வைத்து கோட்டை பட்டி னத்தைச் சேர்ந்த 7 வள்ளங்களை யும் 26 மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் நேற்று இரவு 7 மணிய ளவில் பிடித்து உள்ளனர்.

இவர்களை மாதகல் கடற்கரை யிலிருந்து 4 மைல் தொலைவில் (கடலில்) வைத்து பிடித்து உள் ளனர்.

இம் மீனவர்களை இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது. வலி தென் மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் - கோரிக்கை

இலங்கை,அதன் மீது விமர்சனங்களை முன்வைப்போரை தூற்றுவதை விட்டுவிட்டு, அங்கு கடந்த 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின் போது நிகழ்ந்த சம்பவங்களுக்கான பொறுப்பேற்கும் தன்மை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டுமென அங்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கடந்த கால யுத்தம் தொடர்பான ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அந்நாட்டின் மூத்த இராஜிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்துக்கான காரணங்கள் பற்றியும் இறுதிக்கட்ட போரின் போதான சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்து, எதிர்வரும் மே மாதம் அரசாங்கத்துக்கு அதன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னர் ஐநாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட எச்.எம்.ஜீ.எஸ், பலிஹக்கார அங்கம் வகிக்கின்றார்.

இலங்கை அரசும் அரசியல் கட்சிகளும் தோல்வியடைந்த தலைமைத்துவத்தையே வெளிக்காட்டியுள்ளதாகவும் நாடு கடுமையான சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், வெளிநாட்டு யோசனைகள் தவிர்க்கமுடியாதவை எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரதி தலைவருக்குரிய பணிகளை ஆற்றியுள்ள பலிஹக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

போருக்குப் பின்னரான நாடு வெளிநாட்டு கொள்கைகளில் எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றி விரிவுரையொன்றை ஆற்றும் போதே, இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவுச் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளார்..

விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியமை அந்த மக்களை பெரும் மனிதநேய அபாயத்தில் தள்ளியமையால் உலகின் முக்கிய சக்திகள் நல்லெண்ண அடிப்படையில் தலையிட்டு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமான முடிவொன்றையே காணும் நிலமை ஏற்பட்டதாகவும் முன்னாள் ஐநா தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை அரசு அதன் இராணுவ நடவடிக்கையை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடுத்து நிறுத்தாமல் அதனை தவிர்த்து போரில் வெற்றி பெற முடிந்தது, இருந்தபோதிலும் தற்போது நாடு இன்னும் பல இராஜதந்திர பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளது.

இந்த நிலைமைகளிலிருந்து நாடு விடுபடுவதற்கு இலங்கை மீது விமர்சனங்களை முன்வைப்போர் அடங்கலாக அனைத்து நாடுகளுடனுமே இணைந்து செயற்படவேண்டியது அவசியம் எனவும், போர்க்கால சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பேற்கப்படவேண்டியுள்ள நிலைமைகள் குறித்து தமது கவலைகளை வெளிப்படுத்துவோருக்கு, அரசாங்கம் அது குறித்து மிகுந்த அக்கறையுடன் செயற்படுகின்றது என்பதை வெளிக்காட்ட வேண்டுமென எச்.எம்.ஜீ.எஸ், பலிஹக்கார தெரிவித்தார்.

மிக முக்கியமாக, விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தினாலோ அல்லது இராணுவத்தினரின் படைநடவடிக்கையினாலோ எதனால் பாதிக்கப்பட்டிருந்தாலும் போருடன் தொடர்புடைய துயரங்களுக்கும் அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்பதை குறிப்பாக போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்த்த வேண்டும்..

இலங்கை மீதான விமர்சனங்களை முன்வைப்போரால் ஏற்படுகின்ற தற்போதைய சவால்களை இவ்வாறு தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அந்த விமர்சகர்களை தூற்றிக்கொண்டிருக்கக் கூடாது எனவும் ஐநாவுக்கான முன்னாள் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான போக்கு ஒருபோதும் தேசத்துரோகமாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் விசாரணைகள் எந்த வித நீதியையும் இதுவரை வழங்க வில்லையென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டு வருகின்றன.

அரசாங்கம், போரில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உண்மையான கவலைகளை மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளுடன் அணுகும் அளவுக்கு நாட்டில் மனித உரிமைகள் மேலோங்க வேண்டுமென பலிஹக்கார மேலும் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்




இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சுற்றிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 112 இந்திய மீனவர்களையும் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

இது தொடர்பாக வடபிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்திய மீனவர்கள் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த மீனவர்களின் 18 இழுவைப் படகுகளையும் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த விடயம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவித்து மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவரது ஆலோசனையைப் பெறுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றது.

பொலிசாரின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணை தூதரகத்தின் முதன்மை அதிகாரி மகாலிங்கம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியதுடன், உள்ளுர் மீனவர்களையும் சந்தித்துள்ளார். நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுவதற்கு முன்னர் இந்திய மீனவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...