15 ஜனவரி, 2010

தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நிபந்தனை அடிப்படையில் விடுதலை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நிபந்தனை அடிப்படையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இரகசிய பொலீசாரினால் வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மேமாதம் வவுனியாவில் வைத்து இரகசியப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்ட அவர், தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் இரகசியப் பொலீசாரினால் இதுவரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரகசியப் பொலீசார் முன்னிலையில் அவர் ஆஜராக வேண்டுமென்றும், வதிவிட முகவரி மாறுபட்டால் உடனடியாக நீதிமன்றுக்கோ இரகசியப் பொலீசாருக்கோ அறிவிக்க வேண்டுமென்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த சிந்தனை : வடக்கு கிழக்கில் 1,50,000 வீடுகள் அமைக்கத் திட்டம்

மஹிந்த சிந்தனை திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் 1 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை அமைக்க இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கின் கீழ் நாட்டில் வீடில்லாதவர்களின் வசிப்பிட வசதிக்காக 6 லட்சம் வீடுகளை எதிர்வரும் 6 வருடங்களில் அமைக்கும் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் 1,50,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இவற்றுக்குப் புறம்பாக அரச ஊழியர்களுக்கான 25 வீடமைப்புத் திட்டங்கள் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கான 5000 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கான 3 வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் கொழும்பு குடிசை வாசிகளுக்கான வீடமைப்புத் திட்டம் போன்றவையும் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிராமப்புரங்களில் வீடு இல்லாதவர்களுக்கும் மீனவ சமூகத்தவர்களுக்கும் வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...