28 மார்ச், 2010

அரசியல் யாப்பை அரசு முழுமையாக திருத்தாது மஹிந்தயில் சிந்தனை உள்ளவை மட்டுமே திருத்தப்படும் - சம்பிக்க






அரசியல் யாப்பை அரசாங்கம் முழுமையாக திருத்தம் செய்யாது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மட்டுமே திருத்தப்படும். வெளிநாட்டு அழுத்தம் காரணமாக அரசாங்கம் யாப்பை முழுமையாக திருத்தப்போவதாக வும் இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை முழுயாக நிராகரிப்பதாக அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப் பெற்று இந்த அரசியல் யாப்பை திருத்த அரசாங்கம் தீர்மானத்துள்ளது. அரசியல் யாப்பில் எந்தெந்த பகுதிகள் திருத்தப்படும் என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. யாப்பில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அந்தப் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும்.

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய பதவியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்துள்ளோம். அமைச்சுக்களின் ஆலோசனை சபை முறையை மாற்றவும் பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களை பலப்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவை எவ்வாறு மாற்றப்படும் என விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரதேச சபைகளின் எல்லைகளை மாற்றி கூடுதல் அதிகாரம் வழங்கவும் சகல கிராம சேவகர் பிரிவிலும் ஜனசபாக்களை அமைக்கவும் தொகுதிவாரி முறையையும் விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையொன்றை அறிமுகப்படுத்தவும் உள்ளோம்.

17 வது திருத்தத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அதனை திருத்தி ஒழுங்கான முறையாக மாற்றப்படும்.

யாப்பிலுள்ள சில பகுதிகளை சிறிய பெரும்பான்மை பலத்துடன் மாற்றலாம். சில பகுதிகளை 2/3 பலத்துடனும் சர்வஜன வாக்குடனும் மாற்ற வேண்டும். யாப்பை முழுமையாக திருத்தும் தேவை அரசுக்கு இல்லை. 1978 ஆம் ஆண்டில் போன்று யாராலும் முழுமையாக யாப்பை திருத்த முடியாது.

பிரதான கட்சிகள் யாவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. அவை வெறும் தேவதைக் கதைகளாகவே உள்ளன.

உலக நாடுகளில் லிபரல் பொருளாதார கொள்கைகள் அழிந்து விட்டன. ஜப்பான் முதல் அமெரிக்காவரை இன்று மஹிந்த சிந்தனையில் உள்ளவாறு உள்நாட்டு பொருளாதார முறைகளை பின்பற்றுகின்றன. உலக நாடுகள் கைவிட்ட லிபலர் பொருளாதார முறையை ரணில் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

மின்சாரத்துறையை அழித்த ரணில் சகலருக்கும் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இன்று 88 வீதமான மக்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட் டுள்ளது. 3 வருடத்திற்குள் சகலருக்கும் மின்சாரம் வழங்கப்படும். கையடக்கத் தொலைபேசி பாவனை செய்வோர் தொகை 3 மில்லியனில் இருந்து 14 மில்லியனாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அறிவு 30 ஆக அதிகரித்துள்ளதோடு 6 வருடத்தில் 60 வீதமாக உயர்த்தப்படும்.

1983 கலவரத்தை தூண்டி நாட்டை சீரழித்தது ஐ.தே.க. அரசாங்கமே. ஆனால் இன்று அந்தப் பொறுப்பை சகல சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் ஏற்க வேண்டும் என்று ரணில் கூறியுள்ளார். ஐ.தே.க. வின் தவறினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நாட்டு மக்கள் பொறுப்பல்ல.

யுத்தக் குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்க ளுக்கு எதிராக அரசாங்கம் அமுலில் உள்ள சட்டங்களின் படியே நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.தே.க. ஆட்சிகளைப் போன்று வதை முகாம்களை அமைத்து எமது அரசு தண்டனை வழங்காது. புதிய பாராளுமன்றத்தில் தெரிவாகும் ஐ.தே.க. எம்.பிகளில் படித்தவர்கள் அரசியல் யாப்பை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

குவைத்தில் நிர்க்கதியான 70 இலங்கையர் இன்று நாடு திரும்புகின்றனர் நோய்வாய்ப்பட்டோருக்கு விசேட சிகிச்சை






குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த 70 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்புவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகா மையாளர் எல். கே. றுகுணுகே நேற்று தினக ரனுக்குத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடையும் இவர் கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் நோய்வாய்பட்டிருப்போருக்கு விசேட சிகிச்சையளிப்பதற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 66 பணிப்பெண்களும் 04 ஆண்களுமே இன்று நாடு திரும்புகின்றனர்.

இவர்களுள் ஒருவர் புற்றுநோயினால் பாதி க்கப்பட்டவ ரெனவும் இவரை வைத்தியசாலை யில் அனுமதித்து சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பணியகம் செய்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார் - ஜனாதிபதி






நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது செயற்பட்டேனேயன்றி தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் பண்டாரகம பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனக்கு எதிராக பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நாட்டு மக்கள் நிரகரித்து விட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நான் முகம் கொடுத்த அச்சுறுத்தல்களிலிருந்து என்னை மீட்டெடுத்தது இந்நாட்டு மக்கள்தான். எனக்கு இந்த நாட்டை விடவும் பெறுமதி யானது எதுவுமே இல்லை. அதனால் விடுவிக்கப்பட்டி ருக்கும் நாட்டைப் பாதுகாப் பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாட்டு மக்கள் தான் வலு சேர்க்க வேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வலுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டிய வேலைகள்தான்.

நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பாராளுமன்ற ஆட்சி அதிகாரமே ஐ.ம.சு. முன்னணிக்கு இருந்தது. என்றாலும் அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது 47 மேலதிக ஆசனங்களைக் கொண்டதாக அரசாங்கம் இருந்தது. அதனால் சகலரும் ஒற்றுமையாக செயற்படுங்கள்.

2005 ஆம் ஆண்டில் நான் மஹிந்த சிந்தனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அச்சமயம் நாடு பிளவுபட்டிருந்தது. கடல் பரப்பில் மூன்றிலிரண்டு பகுதியும், சிங்கப்பூரைப் போன்ற 23 பங்கு நிலப்பரப்பும் பயங்கரவாதிகளிடம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.

அவர்கள் தனியான பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களை அச்சமயம் ஏதாவது ஒரு நாடு ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கும்.

அதனால் பதவிக்கு வந்ததும் தாயகத்தின் மீது அன்பு கொண்ட சக்திகளை இணைத்துக் கொண்டு நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையை மக்களின் வேண்டுகோள்படி மேற்கொண்டேன். அந்தவேளையில் சபாநாயகர் ஒருவரை எம்மால் தெரிவு செய்ய முடியாத பாராளுமன்றம் இருந்த போதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்து நான் தேர்தல் நடத்தவில்லை. மாறாக நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டேன்.

மக்களின் வேண்டுகோள்படி நாட்டைக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஐக்கியப்படுத்தி யுள்ளேன்.

அத்தோடு நின்றுவிடாமல் அரச துறையை வலுப்படுத்தவும், நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நடவடிக்கை எடுத்தேன். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாயகத்தைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதனடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீதிகள், துறைமுகங்கள், நீர்ப்பாசனத்துறை மின்னுற்பத்தி, மின்வழங்கல் உட்பட சகல துறைகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.

நாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகத்தான் கடன் பெறுகின்றோம். மாறாக கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று உண்பதற்காக அல்ல. அந்த ஆட்சிக் காலங்களில் கோதுமை மாவுக்கென மில்லியன் கணக்கில் கடன் பெறப்பட்டிருக்கின்றது. அந்தக் கடன்களை இன்றும் நாம் வட்டியுடன் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நாம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பை எமது விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாம் உரமானியம் வழங்குகின்றோம். மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றோம்.

இதுதான் எமது கொள்கை. நாட்டில் பிரச்சினை இருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை. அதனால் எமக்கு துரித அபிவிருத்தி மிகவும் அவசியம். இதற்கு வலுவான பாராளுமன்றம் இன்றியமையாதது. கிராமத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பு என்றார்.

இக்கூட்டத்தில் ஐ.ம.சு.மு.யின் களுத்துறை மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்கள் குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, டாக்டர் ராஜித சேனாரட்ன, ரோஹித அபேகுண வர்தன, நிர்மல கொத்தளாவல மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் டியூடர் தயாரட்ன, ஜயந்த ஜயவீர, அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...



சிகாகோ: ஒசாமா பின்லேடன் ஆரோக்கியமாக இருப்பதாக அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்த வன் கூறி இருக்கிறான். அமெரிக்காவின் எப்.பி.ஐ. போலீசார் சிகாகோ நகரில் அல்&கய்தா இயக்கத்துடன் தொடர்புள்ள ராஜா லக்ரா சிப் கான் என்ற டாக்சி டிரைவரை கைது செய்தனர். அவர், அல்&கய்தா இயக்கத்துக்காக செயல்படும் காஷ்மீரி என்பவருடன் தொடர்பு வைத்து இருந்தார். அவர்கள 2 பேரும் பேசிய பேச்சை அமெரிக்க போலீசார் ரகசியமாக டேப் செய்துள்ளனர்.
அதில், “பின்லேடன் உயிரோடு இருக்கிறாரா? என்று கான் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த காஷ்மீரி, “பின்லேடன் ஆரோக்கியமாக இருக்கிறார். தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கிறார்’’ என்று கூறி உள் ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தூதரகம்மீதான தாக்குதல் சந்தேநபர்களுக்கு எதிராக நோர்வே வழக்குத்தாக்கல்





நோர்வே ஓஸ்லோ நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தாக்குதல் நடத்திய எட்டுப் பேருக்கு எதிராக நோர்வே அரசாங்கத்தினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களுள் ஏழுபேர் இலங்கையிலிருந்து நோர்வே சென்று குடியுரிமை பெற்றவர்கள் என்றும், எட்டாமவர் இலங்கையிலிருந்து சென்ற சட்டவிரோத குடியேறியெனவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் 18வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் ஏனையோர் 25வயதுக்கு உட்பட்டவர்களாவர். தூதுவராலய உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தி நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிறிஸ்துமஸ் தீவில் இருந்த 90பேர் அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்குள் அனுமதி


அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 90 சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்படவிருந்த இவர்களுக்கு தொடர்ந்து அகதி அந்தஸ்து கோரும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் தீவில் நிலவுகின்ற இடநெருக்கடி காரணமாகவே இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகள் இந்நடவடிக்கைக்கு தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கம் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்தவர்களில் 1லட்சத்து 93ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு





வடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 1லட்சத்து 93ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும்இ இன்னமும் 76ஆயிரத்து 205பேரே எஞ்சியுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றப்படாமல் எஞ்சியுள்ளவர்கள் ஆறு நிவாரணக் கிராமங்களில் மாத்திரமே தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.எம்.ஹால்தீன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிஇ முல்லைத்தீவு மற்றும் மடுப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் நிவாரணக் கிராமங்களிலிருந்து நாளாந்தம் 23ஆயிரம்பேர் வௌ;வேறு இடங்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் சென்றுவருகின்றனர். இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செல்பவர்கள் தினமும் மாலை நிவாரண முகாம்களுங்களுக்கு திரும்பிவிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர் புனர்வாழ்வு கழக தலைவரை கைதுசெய்ய பிடியாணைஇ கிழக்கில் மூன்று வானொலிகள்மீது முறைப்பாடு





தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் காந்தலிங்கம் பிரேமரெஜியைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு சர்வதேச பொலிசாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் புலிகளுக்கு நிதியுதவி அளித்ததாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கொழும்பில் இயங்கியபோது வர்த்தகர்கள் பலரிடமிருந்து இவர் நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நிதியுதவியளித்த வர்த்தகர்களின் பெயர்ப்பட்டியல் மட்டக்களப்பிலிருந்து பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்க வட்டாரங்களின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை கிழக்கில் தேர்தல் பிரச்சாரத்துக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்று வானொலி சேவைகள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிடம் கண்காணிப்புக் குழுக்கள் முறையிட்டுள்ளன. காத்தான்குடி வானொலிச் சேவை மற்றும் ஹிஸ்புல்லா வனொலிச்சேவை ஆகியன 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபட்டுவருவதாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க.ஆதரவாளர்களை பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஓரம் கடும் முயற்சியில்



தேசாபிமானம் என்ற பதத்தை பயன்படுத்தி அதற்கு தவறான விளக்கத்தைக் கொடுத்து ஐ.தே.க.ஆதரிப்பவர்களை பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஓரம் கட்டும் ஒரு கைங்கரியத்தை அரசு மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி ஜானகி ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஜாதிக சேவக சங்கத்தின் (தேசிய சேவைகள் சங்கம்) மற்றும் கண்டி மாவட்ட அமைப்புக்களின் தொழிற் சங்கத் தலைவர்களுடனான கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் சார்பில் நான்கு பிரமுகர்கள் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டனர்.இது நாடறிந்த உண்மை.இதில் அமைச்சர் மிலிந்த மொரகொட, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் இடம்பெற்றனர்.

இன்று அவர்களில் நான் மட்டும் எதிரணியில் இருகிறேன். அதில் என்னை மட்டும் தேசத்துரோகி என அரச ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன.

ஒரே பேச்சு வார்த்தைக்குச் சென்ற நால்வரில் மூவர் அரசுடன் இருப்பதனால் அவர்கள் தேசாபிமானிகள் எனப் போற்றும் அதேநேரம் எதிரணியில் இருப்பதன் காரணமாக என்னை தேசத்துரோகி என்கின்றனர்.

இதுதான் அரசு இன்று கையாளும் தேசாபிமான சித்தாந்தம். ஆனால் இது சிறுபான்மை மக்களிடத்தில் எடுபடுவதில்லை."எனத்தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலுக்கு பின்னரான ஐ.தே.மு அரசாங்கத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள்:ரணில்



ஏப்ரல் 8ஆம் திகதிக்கு பின்னர் அமையும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் மக்களுக்கான பல நிவாரணங்கள்,விவசாய,கடற்றொழில்,தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு செயற்பாடுகள்,முதலீட்டு வலயங்கள் உட்பட இன்னும் பல்வேறு திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புத்தளத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி புத்தளம் மாவட்ட 7 ஆம் இலக்க வேட்பாளர் டி.எம்.இஸ்மாயில் ஹாஜியாரினால் புத்தளம் நகர மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பேசும் போது கூறியதாவது,

"நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.அதிகப்படியான அமைச்சர்களை இந்த அரசாங்கம் கொண்டுள்ளது.எதையும் மக்களுக்கு செய்யவில்லை.மாறாக அமைச்சர்கள் மட்டும் நலமாக வாழ்கின்றனர்.மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரியாது.

அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பள அதிகரிப்பான 250 ரூபாவை வழங்க முடியாதுள்ளது.தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்குவது மஹிந்த ராஜபக்ஷவின் வேலை.அவற்றை மாற்றி மக்கள் ஆட்சியை நாம் ஏற்படுத்த தயாராகிவிட்டோம்.புத்தளம் தொகுதியில் உள்ள மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை நல்கிவருகின்றனர் என்பதை மறக்க முடியாது.

இன்று விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் அறுவடைகளுக்கு நல்ல விலை வழங்கப்படுவதில்லை மாறாக ஆலை உரிமையாளர்கள் சிலருக்கு அரசாங்கம் பணத்தை கொடுத்து குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு இடம் பெறுகின்றது.

இது இம்மக்களுக்கு செய்கின்ற அநியாயமாகும்.ஆனால் எமது ஆட்சியில் அவற்றை மாற்றுவோம்.அதற்கான திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.நெல்லுக்கான உத்தரவாத விலையாக நாடு கிலோ ஒன்றுக்கு 35ரூபாவும்,சம்பா கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவும் கொடுத்து கொள்வனவு செய்யவுள்ளோம்.நெற்செய்கையாளர்களை ஒன்று சேர்த்து அவர்களது பிரதேசத்தில் களஞ்சியங்களை ஏற்படுத்தவுள்ளோம்.

அறுவடைமுடிந்ததும் நெல்லை விற்கும் வரை வங்கியிலிருந்து 70 சதவீதமான நிதியினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுப்பதுடன்,நெல் விற்கப்பட்டதும் அத்தொகையினை மீள வங்கிக்கு செலுத்துவதற்கான வசதிகளை எற்படுத்தவுள்ளோம்.

நெல் கொள்ளவனவு செய்யயும் ஆலை உரிமையாளர்களை பதிவு செய்யவுள்ளோம்.மோசடியாக அல்லது குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்களின் பதிவுகளை இரத்துச் செய்ய நடவடிக்கையெடுப்போம்.

குறிப்பாக பசளைகளை ஒரே இடத்தில் கொள்வனவு செய்யும் நிலை மாற்றப்பட்டு திறந்த சந்தைகளில் அவற்றை பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் எற்படுத்தி கொடுக்கப்படும்.

அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் கல்நடை வளமேம்பாடுகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு கரவை மாடுகள் தலா நான்கு வீதம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். தென்னந்தோட்ட மேம்பாடுகளுக்கு நிவாரணம் வழங்கவுள்ளோம்.இரண்டு வருடத்துக்கு பசளைகள் நிவாரண அடிப்படையில் வழங்கப்படும்.

1 ஏக்கர் நிலப்பரப்புக்கு 75 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.அதேபோல் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எமது நாட்டில் தொழில் பிரச்சினை மற்றுமொன்றாகும்,அவற்றை தீர்க்க அரச,தனியார் துறைகளிலும்,சுயதொழில் துறைகளிலும் அவற்றை பெற்றுக் கொடுக்க முடியும்.அதற்காக வேண்டி எம்மிடமிருந்து சென்றுள்ள ஜீ.எஸ்.பி வரிச்சலுகைகளை மீளபெற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் மூலம் எமது நாட்டு உற்பத்திளுக்கான சந்தை வாய்ப்புக்கள் ஏற்படும்.ஐரோப்பாவில் 50 கோடி ருபாவுக்கான சந்தை வாய்ப்புக்களும்,இந்தியாவில் 100 கோடி ரூபாவுக்கான சந்தை வாய்ப்புக்களும் உண்டு.அவற்றை எம்மால் பெற முடியும்.இதனால் முதலீட்டாளர்களின் வருகை அதிகரிக்கும்.

எமது ஆட்சியில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.மிகவும் சுதந்திரமாக வாழ்வதற்கான உத்தரவாதம் வழங்கப்படும்.அரசியல் ரீதியலான சுதந்திரம் ஏற்படுத்தப்படும்.ஆனால் ஊழலுக்கு இடமிருக்காது.

முதல் இரண்டு வருடத்தில் மக்கள் மேம்பாடு சார்ந்த அனைத்து முதலீடுகளும் செய்யப்படும்,தொடர்ந்துவரும் மூன்று வருடங்களில் அதனது பலாபலன்களை நாம் பெறுவோம்.எமது ஜந்து வருட காலத்தின் பின்னர் மீண்டும் தேர்தலுக்கு செல்வோம்."என்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்க பண்டார,லெரின் பெரேரா உட்பட பலரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

சாவகச்சேரியில் கப்பம் கோரி கடத்தப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு



யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் காணாமல் போனா பாடசாலை மாணவன் நேற்றுப் பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை டச்சு வீதியை சேர்ந்த 17 வயதுடைய திருச்செல்வம் கபில்நாத் என்ற மாணவனே இரு வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நீதிவான் டி.ஜே.பிரபாகர் முன்னிலையில் இவரின் சடலம் வாழைத்தோட்டம் ஒன்றிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. இதனையடுத்து சடலம் நேற்று மாலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இரவு 7 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவருடைய மகனான இம்மாணவன் இரு வாரங்களுக்கும் முன்னர் வீட்டிலிருந்த சமயம் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்த சிலரால அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இதனையடுத்து இம்மாணவரது பெற்றோரிடம் 3 கோடி ரூபாவை அழைத்துச்சென்ற நபர்கள் கப்பமாகக் கோரியு தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கபில்நாத்துடன் பயிலும் மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று டச்சு வீதியில் வீடொன்றில் பின்புறத்தில் வாழைத்தோட்டத்திலிருந்து கபில்நாத்தின் சடலம் வெட்டப்பட்டநிலையில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனாவைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்ட சடலம் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் ஜூன் இறுதிக்குள் குடியேற்றப்படுவர்-வவுனியா அரசாங்க அதிபர்




வவுனியா முகாம்களிலுள்ள சுமார் எண்பதினாயிரம் பேரும் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் குடியேற்றப்பட்டுவிடுவரென நம்பிக்கை தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், அடுத்தமாத இறுதிக்குள் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, வவுனியா வடக்குப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் தொண்ணூறு சதவீதமான கிராமங்களில் மக்கள் குடியேற்றப்பட்டு விடுவரெனவும் கூறினார். வவுனியா அகதிமுகாம் மக்கள் மற்றும் அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, வவுனியாவில் கடந்த காலங்களில் 20 முகாம்களில் 2,89,000 மக்கள் தங்கியிருந்தனர். ஆனால், தற்போது நான்கு முகாம்கள் மட்டுமே இயங்குகின்றன. இவற்றில் சுமார் 80 ஆயிரம் மக்கள் உள்ளனர். இவர்கள் சுதந்திர நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் எதிர்வரும் ஜூன் மாத மாத இறுதிக்குள் குடியேற்றப்பட்டு விடுவர். அகதி முகாம்களில் தற்போது தங்கியுள்ள மக்களில் அங்கவீனமுற்ற அனைவரும் எதிர்வரும் முதலாம்பு திகதி விடுவிக்கப்பட்டு அவர்கள் தங் களது சொந்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓமந்தையில் தொழில்நுட்பக் கல்லூரி ஓமந்தையில் 500 மில்லியன் ரூபா செலவில் தொழில்நுட்பக் கல்லூரியொன்று அமைக்கப் படவுள்ளது. அதேபோன்று நெடுங்கேணியில் 100 மில்லியன் ரூபா செலவில் நீர்விநியோகத் திட்டமொன்றும் புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

வவுனியா பிரதேச மீள்குடியேற்றம்

வவுனியா பிரதேசத்திலுள்ள பாலமோட்டை, ஆறுமுகத்தான் புதுக்குடியிருப்பு, மாளிகை, மருதங்குளம்,இளமருதங்குளம், சேமமடு, ஆகிய இடங்களில் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள் ளன. சுமார் ஏழாயிரம் பேர் எதிர்வரும் புத் தாண்டுக்கு முன்னர் இந்த இடங்களில் குடிய மர்த்தப்பட்டுவிடுவர். இந்தப் பிரதேசங்களில் கண்ணி வெடியகற்றும் பணிகள் நிறைவுபெற் றுள்ளன. பாடசாலைகள், குளங்கள் புனரமைக் கப்பட்டுள்ளன. வவுனியா பிதேசத்திலுள்ள 20 குளங்கள் வடமாகாண புனரமைப்புத் திட்டத் தின் கீழும் ஐந்து குளங்கள் வடக்கின் வசந்தம் 2010 திட்டத்தின் கீழும் புனரமைக்கப்ப டுகின்றன. உள்வீதிகள் திருத்தத்துக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்துக்கான மின் விநியோகத்துக்கு 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தற்போது இவற்றில் 14 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வருட இறுதிக்குள் திட்டம் முழுமை பெற்றதும் வுவுனியா முழுவதற்கும் மின்சாரம் வழங்கக் கூடியதாகவிருக்கும். சமுர்த்தி பயனாளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களும் கோழி மற்றும் கால்நடைக ளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின் றன. அத்துடன் இந்தப் பிரதேசத்திலுள்ள 4000 ஏக்கர் நெற்காணிகளில் நெற்செய்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் போகத்தில் மேலும் நாலாயிரம் ஏக்கர் காணிகளில் நெற் செய்கையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட் டுள்ளது. இதற்காக மத்திய, மாகாண அரசின் கீழுமான நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைக்கப் பட்டு வருகின்றன.

மின்சார இணைப்பும் மின்விநியோகமும் இலவசம்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் வவுனியா பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்குக் கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின் னர் இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படு வதுடன் ஆறுமாத காலத்துக்கு அவர்களிடமி ருந்து மின்சாரக் கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது..

புதிய வீடுகள் அமைக்கத் திட்டம்

ஐரோப்பிய யூனியன், உலக வங்கி, யு.என். எய்ட் ஆகியவற்றின் உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சுமார் ஐயாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஓவ்வொரு வீடும் தலா 3,25, 000 ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளன.

வாழ்வாதாரத்துக்கு உதவத் திட்டம்

புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி யோர், வெளியேறவுள்ளோரின் அடிப்படைத் தேவைகளுக்கும் மற்றும் வாழ்வாதாரத்துக்கும் உதவிகளை வழங்குவற்கு ஐ.நா. உயர்ஸ்தா னிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதற் கென ஒரு திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க இராணுவ அகடமியில் பயில்வதற்கு இலங்கை இராணுவம் சமர்ப்பித்த பட்டியல் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தால் நிராகரிப்பு

மெரிக்க இராணுவ அகடமியில் விசேட பாடநெறியை பயில்வதற்காக இலங்கை இராணுவத்தினர் சமர்ப்பித்த பயிற்சி பெறும் அதிகாரிகளின் மூன்று பட்டியலை அமெரிக்க ராஜாங் கத் திணைக்களம் நிராகரித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என அரசசார்பற்ற நிறுவனங்கள் அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருந்த அறிக்கைகளே இதற்கான காரணமாகும். விண்ணப்பங்களை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நிராகரித்தமை குறித்து அமெரிக்க இராணுவத்தினர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இலங்கை விமானப் படை மற்றும் கடற்படையினர் அமெரிக்காவில் பயிற்சிகளை பெற எந்த தடையும் விதிக்கப்படவில்லை. _
மேலும் இங்கே தொடர்க...

கொள்வதற்காக 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் ஆரம்ப நிதியுதவியாக வழங்கப்பட்டுவந்தது.

இடம்பெயர்ந்தோர் நிதியுதவி இடைநிறுத்தம்





வடக்கில் இடம்பெயர்ந்தோர்


இலங்கையில் யுத்தம் காரணமாக உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறும்போது, அவர்களுக்கு கொடையாக வழங்கப்பட்டு வந்த ஆரம்ப நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.

மோதல்களால் அனைத்தையும் இழந்த நிலையில் சொந்த இடங்களுக்கு திரும்பும் குடும்பங்கள் தமக்குரிய இருப்பிட வசதியை ஏற்படுத்திக்

மோசமான நிதிப்பற்றாக்குறையே காரணம்

“தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிதிப் பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் அதிகாரியாகிய சுலக்ஷனி பெரேரா. கூறியுள்ளார்
“ஏற்கனவே தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பலவற்றிற்கு இந்த நிதியுதவி வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கென மார்ச் மாதம் இறுதிவரையில் வழங்குவதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. இதனை பெறுவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்” என அவர் கூறினார்.

மீளக்குடியமர்பவர்களுக்கு உதவுவதற்காக 2010 ஆம் ஆண்டிற்கென மொத்தத்தில் 13 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

அடுத்தடுத்த மாதங்களில் தங்களுக்கு இந்தப் பணம் வந்து சேராமல்போனால், மீளக்குடியமர்வதற்காக இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் நண்பர்களது வீடுகளிலும் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காமல் போகக்கூடும் என்ற அச்சத்தையும் சுலக்ஷனி பெரேரா வெளியிட்டார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் சமூக பொருளாதார வாழ்க்கை முழுமையாக அழிந்து போயுள்ள நிலையில் அவர்களுக்கு இந்த நிதியுதவி மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

இந்த ஆரம்ப நிதியுதவியில் தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் உடைகள், பாய்கள், நுளம்பு வலைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், காடுகளை அழித்து சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் போன்றவைகள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டைக் கண்காணிக்கும் பணியும் தொடர்ந்து இடம்பெறும் என்றும் சுலக்ஷனி பெரேரா குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் வர்த்தகக் கண்காட்சி





யாழ் வர்த்தகக் கண்காட்சி
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் வர்த்தகக் கண்காட்சியில் பெருமளவிலான உள்ளூர் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தென்னிலங்கை வர்த்தகர்களுக்கும் யாழ்குடாநாட்டு விற்பனையாளர்கள் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்தக் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது.

வேம்படி மகளிர் உயர்பாடசாலையிலும் யாழ் மத்திய கல்லூரியிலும் மூன்று தினங்களாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தென்பகுதி நிறுவனங்கள் மற்றும் யாழ்குடாநாட்டு கைத்தொழிலாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

தென்னிலங்கை மற்றும் யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கிடையில் உறவுப் பாலமொன்றை கட்டியெழுப்புவதே இந்த கண்காட்சியின் நோக்கம் என யாழ் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் இராசையா ஜனக்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இருதரப்பு வர்த்தகர்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களும் தொடர்புகளும் யாழ் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...