விழுப்புரம் அருகே உள்ள சித்தணி கிராமத்தில் குண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இதில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிர்ஷ்டசமாக தப்பியது. 2 ஆயிரம் பயணிகள் உயிர் தப்பினர்.
குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் கிடந்த துண்டு பிரசுரங்களில் ராஜபக்சேவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. பிரபாகரனின் தம்பிகள் என அதில் குறிப்பிடப்பட்டிருந் தது. இதையடுத்து, விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஜோதி நரசிம்மன், தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி தமிழ் வேங்கை உள்பட 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்ததற்கு முந்தையநாள் அந்த பகுதியில் பழைய குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளான மாறன், ரேடியோ வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சுற்றித்திரிந்தது தெரிய வந்துள்ளது.
மாறன் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரையை பகுதியை சேர்ந்தவர். தமிழர் விடுதலைப்படை உள்பட பல தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு உடையவர். வீரப்பனிடம் இருந்து பணம் பெற்று வந்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிகுப்பம் போலீஸ் நிலையத்தை தகர்க்க மாறனின் கூட்டாளியான லெனின் என்பவர் சைக் கிளில் வெடிகுண்டு கொண்டு வந்தார். அப்போது திடீரென குண்டு வெடித்து பலியானார்.
1992-ம் ஆண்டு குள்ளஞ்சாவடி, சிதம்பரம் அண்ணா மலைநகர் போலீஸ் நிலையங்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. ஒரு போலீஸ்காரர் பலியானார். 1991-ம் ஆண்டு சிதம்பரம் புத்தூர் போலீஸ் நிலையம் தகர்க்கப்பட்டது. இந்த 2 சம்பவங்களிலும் மாறனுக்கு தொடர்பு உள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு நெய்வேலி அருகே உள்ள சேப்ளாநத்தம் பகுதியில் தமிழர் விடுதலை படை அமைப்பை சேர்ந்த சின்ன தம்பி என்பவர் வெடிகுண்டு எடுத்து வரும்போது குண்டு வெடித்து பலியானார்.
அதே ஆண்டில் விழுப்புரம் காந்திசிலை குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இதில் மாறனும், ரேடியோ வெங்கடேசனும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இருவரும் தலைமறைவானார்கள்.
சித்தணியில் ரெயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டதற்கு முந்தைய நாள் இவர்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்தும் அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தமிழ் தீவிரவாதிகளான மாறனும், வெங்கடேசனும் பல்வேறு வழக்குகளில் சம்பந் தப்பட்டவர்கள். மாறன் சிறையில் இருந்தபடியே பட்டப்படிப்பை முடித்து பி.எச்.டி. படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.
ரேடியோ வெங்கடேசனுக்கு, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்து தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளன