29 அக்டோபர், 2009

நாட்டைவிட்டு வெளியேறுகிறார் நிஷாந்த முத்துஹெட்டிகம
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாளம் விஜயம்


ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட குழுவினர் நேபாளத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது,நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தென்மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நிஷாந்த முத்துஹெட்டிகம நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ளார் என சற்று முன்னர் கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அங்கிருந்து அவர் கருத்து தெரிவித்த போது,

நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருப்பினும் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்து விட்டேன். சுதந்திரமாக வாழ்வதற்காகவே நான் நாட்டை விட்டு வெளியேறுகின்றேன். இது வரை வாழ்ந்த அரசியல் வாழ்க்கை போதும்" என்று தெரிவித்தார்.

இவர் லண்டன் செல்கிறார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
67 பவுண் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் : இரு இலங்கையர் மீது விசாரணை

கொழும்பிலிருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட 67 பவுண் தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக இலங்கை பெண் உட்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணித்தோரை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 37) என்பவரிடம் சந்கேத்தின் பேரில் சுங்க இலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது சுந்தரம், அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அவரிடம் இருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் எதுவும் இருக்கவில்லை.

சுந்தரத்தை அதிகாரிகள் சோதனையிட்ட போது, கழுத்தில் புத்தம் புதிய தங்கச்சங்கிலி ஒன்றை அணிந்திருந்ததைக் கண்டனர். இது பற்றி கேட்டபோது, சுற்றுலாவாக சென்னைக்கு வந்ததாகவும், இந்தச் சங்கிலியைக் கழுத்தில் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் உள்ள ஒரு நபரிடம் கொடுத்தால் பணம் தருவதாக ஒருவர் கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் அணிந்திருந்த சங்கிலியின் எடை 40 பவுண் என்று தெரிய வந்தது.

மேலும் அதே விமானத்தில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷினி (35) என்ற பெண் கைகளில் அதிகமான வளையல்களை அணிந்து வந்திருந்தார். சுமார் 27 பவுண் தங்க வளையல்களை இவர் கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மொத்தம் 67 பவுண் மதிப்புள்ள சங்கிலி, வளையல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

இது பற்றி தர்ஷினி, சுந்தரம் ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...
மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு


மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு துரிதமாக அனுப்பிவைக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இடம்பெயர்ந்து அகதிகளாயுள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரில் அடுத்த சில வாரங்களுக்குள் சுமார் 40 ஆயிரம் பேரை இலங்கை அரசாங்கம் மீள் குடியேற்றவுள்ளதாக தெரிவித்துள்ளதை நாம் வரவேற்கின்றோம். மேலும், ஆயிரக்கணக்கானோர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

இந்த நிலைமைகளை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அமெரிக்க தூதரகம் நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

"மக்களை விடுவிப்பதும் அவர்கள் தாமாக தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதும் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவுமென அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது. மனிதாபிமான உதவிகள் மற்றும் நிலக்கண்ணிவெடி அகற்றல் ஆகியவற்றுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி வருகின்றது.

யு.என்.எச்.சி. ஆர் மீள்குடியமரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக ஆறுமாதங்களுக்கு உலர் உணவு வகைளை வழங்குகின்றது.

மேலதிக உதவிகளை இலங்கைக்கு வழங்குவது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருகின்றது.

கடந்த இரண்டு வருடங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவது உட்பட, இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் 87 மில்லியன் டொலர்ககளை அமெரிக்கா செலவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
தடுத்துவைக்கப்பட்டிருந்த 66 இலங்கை அகதிகள் விடுதலை- யு.என்.எச்.சி.ஆர். பொறுப்பேற்பு


தடுப்பு முகாம் ஒன்றிலிருந்து 66 இலங்கை அகதிகள் குடிவரவு அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயத்திடம் இவர்கள் கையளிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் உட்பட 66 பேர் இவ்வாறு பஸ்வண்டிகளில் ஏற்றப்பட்டு நேற்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களை நாடொன்று பொறுப்பேற்கும் வரை ஐ.நா. அலுவலகத்தின் பாõதுகாப்பில் இருப்பார்கள் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 105 இலங்கையர்கள் கடந்த செப்டெம்பர் முதல் மலேசியாவின் தென் மாநிலமான ஜோஹோரிலுள்ள தடுப்புமுகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமை காரணமாகவே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இவர்களில் 6 பேர் கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதுடன் தங்களை யு.என்.எச்.சி.ஆர். அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் தங்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரியிருந்தனர். இவர்களுள் 66 பேருக்கான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் ஏனையோர் தொடர்பான விசாரணைகள் விரைவில் நடைபெறுமெனவும் குடிவரவு பிரதி இயக்குநர் அம்ரான் அஹமட் தெரிவித்துள்ளார். இந்த 105 பேரில் 17 பேர் மீது குடிவரவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருமே சிறந்தமுறையில் கண்காணிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த அகதிகள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்தமைக்கு அதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலய வெளியுறவு அதிகாரி, மலேசிய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ளோரை விரைவாக விடுதலை செய்ய சாத்தியமான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
அரசுடன் மென்மை போக்கை கடைப்பிடிக்கின்றன தமிழ்கட்சிகள் என்று குற்றஞ்சாட்டுகிறார் முன்னைநாள் மீன்பிடி அமைச்சு ஆலோசகர் சுரேஸ் பிரேமசந்திரன்!


தமிழ்கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அரசின் நடவடிக்கைகளை கண்டிக்காமல், மென்மை போக்கை கடைப்பிடிப்பதாக முன்னைநாள் மண்டையன் குழுவின் தலைவரும், பின்னர் மீன்பிடி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்தவருமான தற்போதைய தமிழ்கூட்டமைப்பு பா. சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்.

பதவிக்காக மண்டியிட்டு தமிழ் கூட்டமைப்பில் இணைந்தவர்தான் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் என்ற ஒடுகாலி. இவரை தமிழ்கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு அவ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ்கட்சிகள் விரும்பாதபோதும், மற்றுமொரு ஒடுகாலியான செல்வம் அடைக்கலநாதனின் காலில் விழுந்து மண்டியிட்டு; கூட்டமைப்பில் இணைந்து கொண்டவர்தான் இந்த சுரேஷ்.

.பி.ஆர்.எல்.எவ் பொது செயலர் அமரர் பத்மநாபா கொலைக்கு பிரதான காரணியாக இருந்தவரே இந்த பிரேமச்சந்திரன். அதன் நண்றிக்கடனாகவே பின்னர் புலிகளுடன் இணைந்து அவர்களுக்க சேவகம் செய்தவர். இன்று மற்றைய தமிழ்கட்சிகளை பார்த்து அரசுடன் மென்மைபோக்கு கடைப்பிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு சொல்வதற்கு இவருக்கு எந்த தகுதியும் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தமிழ் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் இந்தியாவிலம் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் இருந்துவிட்டு உள்ளாட்சி தேர்தலுக்காக மஹிந்தவின் காலில் மண்டியிட்டு வந்தவர்தான் இந்த குறும் நோக்கம் கொண்டவர்தான் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். வன்னியில் அகோர யுத்தம்; இடம்பெற்ற நிலையில் சொத்துக்களையும்,
சொந்தங்களையும் இழந்த நிலையில் வவுனியா நோக்கிவந்த அந்த மக்களுக்காக ஒரு போத்தல் தண்ணீரோ அல்லது ஒரு நேர உணவு கூட கொடுக்க வக்கில்லாத இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். மக்களின் அவலத்தில் அல்லும் பகலும் பக்கதுணையாய் இருந்து செயற்பட்ட தமிழ்கட்சிகளான புளொட் போன்ற கட்சிகளை விமர்சிப்பதற்கு இந்த சந்தர்ப்பவாத அரசியல் நடாத்தும் கோடரிகாம்புக்கு எந்த முகாந்திரையும்
கிடையாது.

வசதி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். தனது குடும்பத்தை பாதுகாத்து கொள்வதும், சொத்து சேகரித்து கொள்வதுமே இவரது கொள்கை. இந்தியாவில் பத்மநாபா புலிகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது துணைவியார் ஆனந்தி பெயரில் தமிழகத்தில் இருந்த வீட்டினை போலி கையெழுத்து போட்டு வித்தவர் இந்த சுரேஸ் ஆவர்.

இந்திய பெண்மணியாக ஆனந்தி அவர்கள் இருந்தபோதும், பத்மநாபா பெயரில் அறக்கட்டளை அமைப்பை கட்டியமைப்பதற்காகவே மேற்படி வீட்டை ஆனந்தி அவர்கள் வைத்திருந்தார். இந்நிலையில்தான் மேற்படி வீட்டை சுரேஸ் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்டார். கண்ணியமான பெண்மணியாக இருந்தபடியால் ஆனந்தி அவர்கள் சட்டநடவடிக்கை எடுக்க கூடிய நிலையில் இருந்தும் தனது கண்ணியத்தை
வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டுமல்ல கொழும்பு வத்தளை பகுதியில் உள்ள .பி;ஆர்.எல்.எவ் அமைப்பின் பெயரில் வாங்கப்பட்ட வீட்டை கபளீகரம் செய்து கொண்டவர்தான் இந்த சுரேஸ் என்ற சுரெஸ் பிரேமச்சந்திரன்.

இதுமட்டுமா கடந்த உள்ளாட்சி தேர்தல் நிதியாக வெளிநாடுகளில் இருந்து புலிகளால் அனுப்பி வைக்கப்பட்ட 1 கோடி ரூபாயில் சிறு தொகையை தமிழ்கூட்டமைப்புக்கு செலவழித்துவிட்டு மிகுதி நிதியை தனது பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டவர்தான் இந்த ஈனப்பிறவி சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இவருக்கு தமிழ்மக்களின் விடுதலை பற்றியோ புலிகளின் போராட்டத்தை குறைகூறுவதற்கோ அல்லது மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் கட்சிகளை விமர்சிப்பதற்கு எந்தவித அடிப்படை தகுதியுமற்றவர். தமிழ் கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகி இவர் மக்களுக்கு செய்த சேவை என்றால். மனைவி பிள்ளையை கனடாவுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் அங்கே அவர்களுக்கு நிரந்தர
வதிவிடவுரிமையயை பெற்றுகொண்டு பின்னர் இந்தியாவுக்கு அழைத்து முன்னைநாள் இந்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மூலம் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கல்லூரியில் மகளுக்கு அனுமதி பெற்றதுதான் இவர் பாராளுமன்ற உறுப்பினராகியதன் பலன்.


குருபரன்
பிரித்தானியா

மேலும் இங்கே தொடர்க...