29 அக்டோபர், 2010

சொல்ஹெய்ம் புலிகளின் நண்பர்:சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி

போர்நிறுத்த உடன்படிக்கையின் அனைத்துப் பிரிவுகளும் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நோர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசும் நோர்வே இவ்வாறு செயற்படுவதா? போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நேர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. சிங்கள தமிழ் மக்களின் எண்ணங்களை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார். புலிகள் தவறு செய்கின்றனர் என்பதனை பவர் என்பவர் உணர்ந்தார். ஆனால் எரிக் சொல்ஹெய்ம் அவ்வாறு இல்லை. எத்தியோப்பியா இஸ்ரேல் விடயங்களில் நோர்வே புறந்தள்ளப்பட்டது. நேபாளத்துக்கு அனுமதிக்கப்படவுமில்லை. ஆனால் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மட்டத்தில் நோர்வேயுடன் தொடர்புகள் பேணப்படுவதாக தெரிகின்றது.

அரச சேவை சுயாதீனமாதாக இயங்கவேண்டும். அரச ஊழியர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். அந்த வகையில் 18 ஆவது திருத்தச் சட்டம் சிறந்தது. காரணம் அனைத்து விடயங்களும் இறுதியாக ஜனாதிபதியிடம் செல்கின்றது. எனவே மக்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை நோக்கி விரல் நீட்டும் நிலைமை வரலாம். அதாவது அவர் பொறுப்புள்ளவராக இருக்கின்றார். இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படையினர் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டு நட்டஈடுகள் வழங்கப்படுவது அவசியமாகும். அவர்களின் பிள்ளைகள் பற்றியாவது சிந்திக்கவேண்டும். புலிகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் நட்டஈடுகள் அவசியமாகும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இருவேறுபட்ட கொள்கைகளை ஐ.நா. சபை கடைப்பிடிக்கின்றது:கெஹெலிய

ஐக்கிய நாடுகள் சபையானது பிரிட்டன் மற்றும் எமது நாடு தொடர்பில் இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.எமது நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் வழங்க வேண்டிய தேவை இல்லையென்றும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி எமது நாட்டுக்கு எதிராக காட்சிகளை ஒளிபரப்பியது. இது பொய்யானது என்றும் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் சவால் விடுத்தோம். ஆனால் அவர்களால் உண்மைத் தன்மையை நிரூபிக்க முடியாமல் போனது. அக் கட்சிகளுக்கு எதிராக அன்று நாம் சவால் விடுத்ததன் காரணமாகவே எமக்கு எதிராக தொடர்ந்து காண்பிக்கப்படவிருந்த இவ்வாறான காட்சிகளை சனல் 4 கைவிட்டது. இதன் மூலம் எமக்கு எதிரான பொய்ப் பிரசாரம் முறியடிக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிலையான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. நேர்மை, உண்மைத் தன்மை எம்மிடம் உள்ளது. எனவே வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் கொடுத்து நாட்டின் நற்பெயரை பாதுகாக்க அவசியம் இல்லை. அதேவேளை நாட்டின் நற்பெயருக்கு எதிராக வெளிநாடுகளில் செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். ஒரு சிறு குழுவினர் பல்கலைக்கழகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களிடம் மாணவர்களை இரையாக்க இடமளிக்க முடியாது.

மாணவர்கள் தாக்கப்பட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம். அம் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம். அமைச்சரொருவர் இத் தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நிராகரிக்கின்றேன். ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாகாது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அடாவடித்தனங்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை.

ஐ.நா.வின் இரட்டை வேடம்

பிரிட்டிஷ் இராணுவம் ஆப்கானிஸ்தானில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட செய்திகள் தொடர்பில் மௌனம் காக்கும் ஐ.நா. சபை எமது நாடு தொடர்பில் வேறு கொள்கையை கடைபிடிக்கின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான இரட்டை வேடம் ஏன் என்பது புரியவில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்லியில்!



விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்லியில் நடைபெறும் என்று பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த விசாரணையை பயங்கரவாத மேற்படி நீதிமன்றம் நடத்தி வருகிறது. சென்னையில் நேற்று நடந்த இந்த விசாரணையில் வைகோ, பழ.நெடுமாறன், சுப்பிரமணியசாமி ஆகியோர் ஆஜரானார்கள்.

அரசுத் தரப்பில், சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சென்னை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப், திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் ஆஜராயினர்.

அவர்களை வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.

இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம், வைகோ,

"சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10(ஏ) (1)இன் கீழ் யார் மீதாவது வழக்கு பதிவு செய்தீர்களா?"

சந்திரசேகரன்,

"எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை"

நீதிபதி,

“விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கிறதா, அழிக்கப்பட்டு விட்டதா?" என்று கேட்டார்.

அதற்கு வைகோ,

"அவர்களை எக்காலத்திலும் முற்றிலும் அழிக்க முடியாது, அவர்களின் லட்சியத்தை அவர்கள் வெல்வார்கள். இந்தியாவில் அவர்களின் அமைப்பு இல்லை." என்றார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் முதலாந்திகதி புதுடில்லியில் நடைபெறும் என்று தெரிவித்து, விசாரணையை ஒத்தி வைத்தார்.

விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிவநேசன் என்பவர், தமது கருத்தையும் கேட்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

நல்லாட்சிக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனநாயக விரும்பிகளுக்கு ஐ.தே.க. அழைப்பு

ஜனநாயகம் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் என அனைத்தும் இன்றைய அரசாங்கத்தினால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தி அச்சமில்லா சூழலையும் மக்களை வாழ வைக்கின்ற நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கென ஆரம்பித்துள்ள எமது பயணத்தில் ஜனநாயக விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என சகலரும் இன மத கட்சி பேதமின்றி இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டைப் பாதுகாப்பதற்கும் அதேநேரம் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்குமான ஐக்கிய தேசியக் கட்சியின் கிராமத்துக்கான பயணம் நாளை சனிக்கிழமை ஹொரணையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பியுமான கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கான பலமும் தைரியமும் கிராமங்களிலேயே தங்கியுள்ளது. எனவே எமது முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஜே. ஆர். ஜயவர்த்தனவின் போதனைக்கமைய கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி கிராமத்துக்கே செல்ல வேண்டும். அதனையே நாம் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்.

இன்றைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் எமது இந்த செயற்றிட்டம் மிகவும் சவால் மிக்கதாகவே இருக்கின்றது. எமக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு அதிகமான ஏதுக்கள் இருக்கின்றன. இருந்த போதிலும் அதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அரசாங்கத்திடமிருந்து எத்தகைய அச்சுறுத்தல்கள், இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் நாம் பின்னிற்கப் போவதில்லை.

சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் அவர் இந்நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டவர். எனவே இந்நாட்டை மீட்ட இராணுவ வீரர் என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு உரிய கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி வருகின்றது. இன்று அவரது நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அவரை சிறையில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே சரத் பொன்சேகா விடயத்தில் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்கின்ற சகல தரப்பினரும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

இன்று பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் திராணியற்ற அரசாங்கம் குண்டர்களைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. விலைவாசி அதிகரிப்பு, வருமானமின்மை மற்றும் வாழ்க்கைச் சுமை ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் இந்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அச்சமில்லாத சூழலில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்தி மக்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது.

அந்த வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி கிராமத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் மற்றும் நல்லாட்சி மலர வேண்டுமானால் ஜனநாயக விரும்பிகள் சகலரும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 343 ஆக உயர்வு






ஜகார்த்தா, அக். 28: இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை வியாழக்கிழமை 343 ஆக உயர்ந்தது.

மெந்தாவி தீவில் திங்கள்கிழமை கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழுந்து பலர் உயிரிழந்தனர். சாவு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இன்னும் 338 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியை அடுத்து பல கோடி மதிப்புள்ள எச்சரிக்கை கருவிகள் சுமத்ரா தீவுப் பகுதிகளில் நிறுவப்பட்டன. ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்காததால் கருவிகள் செயலிழந்து விட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 5 பேர் காயம்


வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் வியாழக்கிழமை காலை 8.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் காயமடைந்தனர்.

இது ரிக்டர் அளவுகோளில் 5.7 அலகுகளாக பதிவானது. பாகிஸ்தான் நாட்டின் கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரியவந்துளளது.

பெஷாவர், மர்தான், நெüஷெரா, ஹரிப்பூர், ஸ்வாட், திர், பலகோட், மான்ஷெரா, அபோட்டா பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கும், தஜிகிஸ்தானுக்கும் இடையே 280 கிலோமீட்டர் வடமேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றம் 99 வீதம் பூர்த்தி; 52 குடும்பங்களே மிகுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 52 குடும்பங்களே மீள் குடியேற்றப்பட வுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பளை பிரதேச செயலகப் பரிவில் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர்; இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் எஞ்சியுள்ள மேற்படி குடும்பங்களும் மீள் குடியேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை 99 வீத மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 59 குடும்பங்களிலும் 25 குடும்பங்கள் காணி கள் இல்லாதவர்கள். ஆகையால், அவர்க ளுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி பதவியேற்பு; முன்னாள் பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப-குழு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவ ஏற்பாடுகளை முன்னெ டுக்க முன்னாள் பிரதமர் அமைச் சர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள் ளது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, நிமல் சிரிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன, சம்பிய ரணவக்க, பந்துல குணவர்தன, டளஸ் அலஹப் பெரும ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இது தவிர பல உபகுழுக்க ளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமை ச்சர் டளஸ் அலஹப் பெரும கூறி னார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய பாதுகாப்புத் தினத்தை யாழ். நகரில் நடத்த ஏற்பாடு


சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26 ஆம் திகதியை நினைவுகூரும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் ஆலோசனைக் கமைய தேசிய பாதுகாப்பு தின விசேட நிகழ்வுகளை யாழ். நகரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுமே இந்த நிகழ்
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழக அமைதியற்ற சூழல்; கடும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு


பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழல் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தினுள் விரும்பத் தகாத சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எந்த ஆசிரியரும் தனது மாணவனால் தாக்கப்படுவதை அச்சுறுத்தப்படுவதை விரும்புவதில்லை. இதே போன்று எந்தப் பெற்றோரும் தனது பிள்ளைகள் இவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புவதில்லை.

பெற்றோர் இன்று கண்ணீர் விடுகின்றனர். குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களின் செயலினால் முழுமையான பல்கலைக்கழக கட்டமைப்பும் சீரழியும் நிலை உருவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டாது என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டமை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மாணவர் தாக்கப்பட்டாராயின் அது தொடர்பாக முறையிடலாம். அல்லது அதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் பின்பற்றலாம் என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்க ஆலோசனைக்குழு

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்து வதற்கு ஏதுவாக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த ஆலோசனைப்படி இந்த ஆலோச னைக் குழுவுக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியதாக அமைச் சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு (ழிழிஞிவி) அதன் இடைக்கால அறிக்கையை 2010.09.13 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தது. 2010 ஓகஸ்ட் 11 ஆம் திகதி முதல் மேற்படி ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சிபாரிசுகளை அரசு ஏற்கனவே படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் அதன் பரப்பளவை படிப்படியாக அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள காணிகள் அந்தந்த உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. உரிமையாளர்கள் இல்லாத காணிகள் சமூக அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.

2009 மே மாதமளவில் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது 11,696 புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 5120 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட் டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டு வருவனவற்றையும் மக்களின் மொழி உரிமையை உறுதிப் படுத்துதல் உட்பட மற்றைய சிபார்சுகளையும் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இதற்கு ஏதுவாகவே இவ்வாலோசனைக் குழுவை நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...