26 ஜனவரி, 2010

நாடுமுழுவதிலும் 70 வீதம் வாக்குப் பதிவு: பவ்ரல் அமைப்பு
ஸட் யகூசுஹஙிக்சூஹசுகூ ஞஙூஙீகூஙூக்

News Photo


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதமானோர் வாக்களித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் அதிகரியொருவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் குண்டுச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களும் கேட்டதால் மக்கள் அச்சத்தில் வாக்களிக்கவில்லை என யாழ்.தேர்தல் அத்தியட்சகர் அலுவலக அதிகாரியொருவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.


வவுனியா நலன்புரி கிராமங்களில் 50வீதமான வாக்குப் பதிவு
No Image

வவுனியா ந ன்புரி கி ராமங்களில் 50வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று ள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தில் வடக்கு கிழக்குக்கான இணைப்பாளர் எம்.எச்.எம். ஹஜ்மிர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் 43வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3.5வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் சிற்சில காரணங்களுக்காக வாக்களிப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...
யாழ் மாவட்டத்தில் இன்று மாலை 7 .மணி முதல் ஊரடங்கு சட்டம்யாழ் மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!


இன்று காலை சில இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், தேர்தல் வன்முறைகளை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதட்டம் நிலுவதுடன், பொலிஸார் ஊரடங்கு உத்தரவினை இன்று மாலை 7:00 மணி முதல் பிறப்பித்துள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

நாடு முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!">நாடு முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் 65-70 சதவீதமான வாக்குகள் மாலை 4:00 மணிவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 15 சத வீத வாக்குகளும் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் 40-45 சத வீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 65 %, திருமலையில்-43% வீதம், இரத்தினபுரியில்-65 %, அம்பாந்தோட்டை- 71 %, காலி-71%, நுவரேலியா-71 %, குருநாகல-73.5 %, மாத்தளை- 75 %, கொழும்பு-65 வீதம் என வாக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...
மஹிந்த ராஜபக்சா 56 .வீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில்அமர்வார்
இது உறுதி

No Image
மஹிந்த ராஜபக்சா 56 இவீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்இது உறுதி என்று எமது கணிப்பீட்டில் காணப்படுகிறது வடக்கு மாகாண மக்கள் ஆதரவு கிழக்கு மாகாண மக்கள் ஆதரவு முழுமையாக மஹிந்தா அரசையே
விரும்புகிறது இப்பொழுது தமிழ் சிங்கள மக்கள் நின்மதியை தேடி அலைகின்றார்கள் அது மஹிந்தா அரசால் தான் தரமுடியும் என்று எண்ணுகிறார்கள் யுத்தத்திற்கு பின் 6.மாத காலத்தி நாடு எத்தனையோ மாற்றங்களை எட்டியுள்ளது தமிழ் சிங்கள இனம் என்ற பேதமின்றி இலங்கையின் முழு பகுதிகளுக்கும் தமிழ் சிங்களமக்கள் சென்றுவரக்கூடிய சூழல் உள்ளது தபோது இலங்கை ஐரோப்பாக்கு நிகராக வளர்ந்து வருவதை
காண முடிகிறது .

மற்றும் தமிழ் மக்கள் பிரச்சை அறிந்தவர் மஹிந்த அவருடன்
பேசி ஒரு அரசியல் தீர்வை காணலாம் புதிதாக ஒருவர் வந்தால் அவருக்கு இலங்கையின் சாசனத்தை தெரிந்து மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒரு முடிவிற்கு வர ..3 .4 .ஆண்டுகள் தேவைஅதற்குள் அடுத்த ஜனாதி பதி தேர்தல் வந்துவிடும் இப்படி போனால் எமதுஇலங்கை பிரச்சனை . 60 .ஆண்டுகளாக இழுபட்டது போல் இனிமேலும்இழுபடவண்ணம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபஹ்சா அவர்களுக்கு இலங்கை மக்கள் வாக்களிப்பார்கள் என எமதுகணிப்பிட்டில் காணப்படுகிறது
இதுவே எமது நிலைபாடும் கூட மஹிந்த ராஜபக்சா வெற்றி நிச்சியம்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். புத்தளம் மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்பில் ராஜபக்ஷ 4988 வாக்குகளை பெற்று 66.70 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 2,464 வாக்குகளை பெற்று 32.95 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

மொனறாகல மாவட்டம்
மகிந்த ராஜபக்ஷ 8871 வாக்குகளை பெற்று 69.76 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 3,795 வாக்குகளை பெற்று 29.84 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம்
முஹிந்த ராஜபக்ஷ 9,458 வாக்குகளை பெற்று 69.33 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 4143 வாக்குகளை பெற்று 30.37 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி வேட்பாளர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது அவசியமில்லை : தேர்தல்கள் ஆணையாளர்


ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று வாக்களிக்காமை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அதற்கு விளக்கமளிப்பதற்காக தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
எத்தியோப்பிய விமானம் கடலில் வீழ்ந்து விபத்து
85 பயணிகள் பலி
பெய்ரூட் :


85 பயணிகளுடன் சென்ற எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்றுக் காலையில் எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்துக்கும், விமான கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் மத்திய தரைகடல் மேல் பறந்த போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் இருந்தவர்களில் 54 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் 22 பேர் எதியோபியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் ஈராக்கியர், பிரான்ஸ், சிரியா நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இவர்களைத்தவிர விமான பைலட்டு உட்பட சிப்பந்திகள் 7 பேர் மொத்தம் 92 பேர் விமானத்தில் இருந்தனர்.

விமானம் நடுவானில் திடீரென தீ பிடித்து எரிந்து விழுந்ததாக மத்திய தரைக்கடல் பகுதி கடலோர மக்கள் சிலர் தெரி வித்துள்ளனர். விமான விபத்து குறித்து செய்தி அறிந்தவுடன் லெபனான் நாட்டு அதிகாரிகள் ரபீக் ஹரிரி, விமான நிலையம் விரைந்துள்ளார். இங்கு இருந்துதான் அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் லெபனான் நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் ஐ.நா., பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதித் தேர்தல் : வாக்களிப்பு நிலவரங்கள்
News Photo

நாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து எமது செய்தியாளர்களிடம் கேட்ட போது :

மன்னார்

"மன்னார் மாவட்டத்தில் மக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் 85,122 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மன்னாரில் 28 வாக்களிப்பு நிலையங்களும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 103 வாக்களிப்பு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தூர இடங்களில் வாக்களிப்பவர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. எனினும் வாக்களிப்பு நிலையங்களுக்கு இடைநடுவே சில குழுக்கள் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றனர்."

யாழ்ப்பாணம்

"காலையில் சற்று மந்தமாக காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் தற்போது சுறுசுறுப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர். காலையில் சற்று பதட்டமான நிலை காணப்பட்ட போதிலும், தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்."

மலையகம்

"மலையக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இன்று பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 11.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது."

கொழும்பு

கொழும்பு மற்றும் கொழும்பு வடக்குப் பகுதியில் இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். வழமையைவிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜேவிபி எம்.பி.விஜித்த ஹேரத் கிளிநொச்சியில் தடுத்து வைத்து விசாரணை


No Image

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இராணுவத்தினர் தடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் எமக்குத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஜனாதிபதி வேட்பாளர் சன்ன ஜானக சுகத்சிறி கமகே மற்றும் தேர்தல் முகவர்கள் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளைப் பார்வையிடச் சென்ற சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வாக்குச் சாவடிகளுக்கு முகவர்கள் செல்வதைத் தடுக்கும் முற்சியே இது என மக்கள் விடுதலை முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை 13 இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்


No Image

யாழ் ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி தெரிவிக்கையில்,

"30 வருட கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரமான முறையில் வாக்களிக்க முற்பட்ட யாழ். மக்களின் வாக்களிப்பு உரிமைகளைத் தடுக்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு யாழ். மக்கள் துணை போகக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து பஸ் சேவைக்குச் சொந்தமான பஸ்கள் பலவும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மக்கள் குழுவினராகச் சென்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரனின் வீட்டின் மீதுதாக்குதல்

No Image
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீட்டுக்கு நேற்று இரவு இரண்டு வெள்ளை வேன்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஆவரங்காலில் உள்ள அவரது சாரதியின் வீடும் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...