31 ஜூலை, 2010

ஐஸ்கட்டி உருகுவதால் 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்; சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை

.

ஐஸ்கட்டி உருகுவதால்    12 ஆண்டுகளில் பூமி    நீரில் மூழ்கும் அபாயம்;    சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 12 ஆண்டுகளில் பூமியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த தகவலை தாய்லாந்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கார்பன் உற்பத்தியை குறைத்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடு சென்றவர்ளின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கக்கூடாது:த.தே.கூ

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறியவர்களின் விருப்பத்தை அறியாது, அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது. அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டு மே நீக்குவது குறித்த முடிவுக்கு செல்லவேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க தரப்பினரையும் தேர்தல்கள் ஆணையாளரையும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம். பாராளுமன்றத்திலும் இது குறித்து குரல் எழுப்புவோம். இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர் பதிவு மற்றும் திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது :

யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தொடர்பான பதிவுகளை செய்யும்போது கடந்த காலங்களில் போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்களின் பெயர்களை அவர்களின் விருப்பங்களை அறியாது வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம். வேறு மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்த நிலையிலேயே அதிகளவான மக்கள் சென்றுள்ளனர். எனவே உடனடியாக அவர்களின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கக்கூடாது.

அதாவது இவ்வாறு சென்றுள்ள மக்களின் விருப்பங்களை அறிந்துகொண்ட பின்னரே அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கவேண்டும். எனவே இவ்விடயம் குறித்து அடுத்தவாரமளவில் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து விரிவாக பேச்சு நடத்தவுள்ளோம். மேலும் அரசாங்கத்துடனும் இது குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதுடன் பாராளுமன்றத்திலும் இந்த விடயத்தை எழுப்பவுள்ளோம். நாங்கள் எமது தரப்பு நியாயங்களை முன்வைப்போம். இதேவேளை இதுகுறித்து அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவும் தயாராகவே இருக்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உட்பட 81 பேர் அவுஸ்திரேலியாவில் மீட்பு

கடலில் மூழ்கும் அபாயநிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அகதிகளுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களும் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தெரிவானதைத் தொடர்ந்து அங்கு சென்ற 150 ஆவது படகாக புதனன்று சென்ற படகு பதிவாகியுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு ஆட்கடத்தல்காரர்களும் குற்றவாளிகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் நான்கு பேரும் ஏனைய அகதிகளுடன் ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் "காப்பாற்றப்பட்ட கடற்பயணிகள்' என கருதப்படுபவரே தவிர, சட்டவிரோத குடியேறிகள் என கருதப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பல் மூழ்கும் நிலையில் இருந்ததாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அது மூழ்கிய நிலையில் இருக்கவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது ஆட்கடத்தல்காரர்களின் சூழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த படகில் மீட்கப்பட்ட அகதிகளில் அதிக அளவிலானவர்கள் இலங்கையர்கள் எனவும் பெரும்பாலும் அவர்கள் 18 தொடக்கம் 50 வயதுடைய ஆண்கள் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட், தமக்கு அகதிகளின் படகுகளை நிறுத்தும் எண்ணம் இல்லை எனவும், அவர்கள் தமது நாடுகளில் இருந்து வெளியேறாமல் தடுப்பதே தமது எண்ணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே பிராந்திய ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்!

தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொமினிக் கார்டேஸ் என்ற இந்த பெண் வில்லேஸ் ஆவ் டெர்ட்ரே நகர் அருகே உள்ள லில்லே கிராமப்புற வீட்டிலிருந்து 6 சிசுக்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மிக உடல் பருமன் கொண்ட இந்த 40 வயதுப் பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் 20 வயதுக்கு மேலானவர்கள்.

முதல் முறையாக இவருக்கு பிரசவம் நடந்தபோது உடல் பருமன் காரணமாக பெரும் வலியையும் வேதனையையும் இவர் அனுபவித்தாராம். இந்த வேதனையால் மனரீதியில் பாதிக்கப்பட்ட அவர் தனக்கு அடுத்துப் பிறந்த 8 குழந்தைகளையும் கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்துள்ளார்.

இந்த வீட்டை சமீபத்தில் இந்தத் தம்பதி விற்றது. இதையடுத்து புதிதாக வாங்கியவர்கள் வீட்டு வளாகத்தில் செடிகளை நட தோண்டியபோது இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் டொமினிக் கார்டேஸ் அடுத்தடுத்து 8 குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்து புதைத்தமை தெரியவந்தது.

இதில் 6 குழந்தைகளின் உடல்கள் இந்தத் தம்பதி இப்போது வசிக்கும் சென்டியர் டி ப்ரூ வீட்டு வளாகத்தில் மீட்கப்பட்டன. இந்த உடல்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீட்டின் தரைப்பகுதி கிட்டங்கியில் போட்டு வைத்திருந்தார் கார்டேஸ். இந்த உடல்களும் எலும்புக் கூடுகளாகிவிடடன.

இந்தக் கொலைகளுக்கும் தனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொலிஸாரிடம் கார்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமானது கூட அவருக்குத் தெரியாது, குழந்தைகள் பிறந்ததும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து கணவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். கார்டேஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

விசா வழங்க மலேசியா புதிய நடைமுறை


மலேசியா வர விரும்பும் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது மலேசியா.

விசா கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர், மலேசியா சேர்ந்தவரை கணவராகவோஅல்லது மனைவியாகவோ கொண்டவராக இருந்தால் அல்லது தொழில் துறை சார்ந்த நிபுணராகவோ இருந்தால் அல்லது 12 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தவராகவோ இருந்தால், அவர்களுக்கு சிறப்பு விசா அனுமதி வழங்க பரிசீலிக்கப்படும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறையின் படி, வயது, கல்வித் தகுதி, மலேசியாவில் உள்ளவர்களுடன் உள்ள உறவு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு மதிப்புஎண் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

65 புள்ளிகளுக்கு மேல் பெரும் விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்க பரிசீலிக்கப்படும். எனினும் அனைத்து விண்ணப்பங்களையும் போலீஸக்ஷ்ர் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இப்புதிய திட்டம் ஜூலை 15-லிருந்து அமலிலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தான் விமானம் மீது பறவை மோதியது: 421 பயணிகள் உயிர்தப்பினர்


வெள்ளிக்கிழமை பறப்பதற்கு தயாரான விமானம் மீது பறவை மோதியது. இதில் 421 பயணிகள் உயிர்தப்பினர். பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பிகே-320 விமானம் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் 421 பயணிகளுடன் பறக்கத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடும் போது அதன் ஒரு என்ஜினில் பறவை ஒன்று வேகமாக மோதியது.

இதையடுத்து அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு பறவை மோதியதால் விமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது சோதிக்கப்பட்டது. ""விமானத்தில் பறவை மோதிய போது பலத்த சப்தம் வந்தது. ஒரு என்ஜினில் இருந்து தீப் பொறியும் கிளம்பியது. விமானம் நிறுத்தப்பட்டதும் தீ அணைக்கப்பட்டது'' என்று அந்நாட்டு ஜியோ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 28-ம் தேதி தனியார் விமானம் இறங்கவிருந்த நேரத்தில் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 155 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நடந்த 3 தினங்களில் மற்றொரு விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதிய சம்பவம் அந்நாட்டு விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

லண்டனில் வாடகை சைக்கிள் திட்டம்

லண்டனில் வெள்ளிக்கிழமை வாடகை சைக்கிள் திட்டத்தை தொடங்கி வைத்த அந்நகர மேயர் போரிஸ் ஜான்சன் (இடது), பார்க்ளேஸ் சைக்கிள் நிறுவனத் தலைவர் மார்க்கஸ்.
லண்டன், ஜூலை 30: பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

இத்திட்டத்தை லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இப்போது நகரில் எங்கு பார்த்தாலும் மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம்தான் உள்ளது. இதனால் சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. எனவே சூழலைக் காக்கும் வகையில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

÷லண்டனில் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு நகரின் பசுமையைக் காக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன் நகருக்குள் பயணம் செய்யும் மக்கள் இந்த வாடகை சைக்கிள்களைப் பயன்படுத்தி கொள்ள முடியும்.

÷ மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் முதல்கட்டமாக களம் இறக்கப்பட்டுள்ளன. லண்டன் நகரின் முக்கிய இடங்களில் 315 சிறப்பு வாடகை சைக்கிள் மையங்கள் உள்ளன. இந்த சைக்கிள்களைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். இதுவரை 12 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

÷சைக்கிளைப் பயன்படுத்த முதல் அரைமணி நேரம் வாடகை கிடையாது. அனைவரும் எளிதாக ஓட்டும் வகையில் 3 கியர்களுடன் இந்த சைக்கிள்களை பார்க்ளேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...