அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டில் நேற்று மாலை 3.40 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.40 மணிக்கு) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மெக்சிகலி, அல்பிரடோ, எல்கோபெடோ ஆகிய நகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ரோடு களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே இந்த நில நடுக்கம் அமெரிக்காவில் கலிபோர்னியா, அரிசோனா மாகாணங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
அங்கு திஜுனா, லாஸ் ஏஞ்சல்ஸ், பாஜா நகரங்களில் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். அங்கும் மின்இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்புகளும் துண்டானது.
அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள், உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. நில நடுக்கத்தால் மெக்சிகோவில் உள்ள மெக்சிகலி நகரில் உள்ள ஒரு ஓட்டல் சுவர்கள் மற்றும் மேல் தளங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தின்போது இந்த ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வெளியில் ஓடிவிட்டனர். இதனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்நகரம் பாஜா கலிபோர்னியா அருகே உள்ளது.
தொடக்கத்தில் 6.9 ரிக்டர் அளவில் இருந்த நிலநடுக்கம் பின்னர் 7.2 ஆக பதிவானது. மெக்சிகலியின் தென் கிழக்கில் இருந்து கவுதலாப் விக்டோரியா நகரின் அருகே பூமியில் 30 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் சுமார் 10 லட்சம் பேர் வாழ்கின்றனர். இது அமெரிக்க எல்லையில் உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...